‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’-டாக்டர் அம்பேத்கர்

03
டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3

டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5

தொடர் – 6

ருணாசிரம தர்மம் என்பது ஒன்றல்ல வருண தர்மமும் ஆசிரம தர்மமும் இணைந்ததுதான் வருணாசிரமதர்மம் என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டதையும் அதில் வருண ‘தர்ம’த்தை பற்றியும் பார்த்தோம்.

ஆசிரமதர்மம் என்றால் என்ன?

ஆசிரமம் என்றால் உலகத்துக்கே தெரிஞ்சது, துறவிகளின் இடம்.

துறவிகள் என்றால் என்ன?

மானம், சூடு, சொரணை, வெட்கம், மனிதாபிமானம் இவைகளை முற்றிலுமாக துறந்தவர்கள்.

அப்படியானல் ஆசிரமம் எப்படி இருக்கும்?

கிளுகிளுப்பாக, கவர்ச்சிகரமாக பாலுமகேந்திரா படத்தில் வருகிற ‘பலான’ வீடு மாதிரி இருக்கும்.

பார்ப்பன பார்ப்பனரல்லாத எல்லா ஆசிரமங்களுக்கும் ஒரே `தீம் பாட்டு` இதுதான், ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?’

கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் பிரேமானந்த கைதானபோதும், ஜெயேந்திரன் கைதானபோதும் ஆசிரமம் பற்றியும், துறவிகள் பற்றியும் இப்படித்தான் புரிந்து கொள்ளப்பட்டது.

பிரேமானந்த என்கிற கொடியவனை அம்பலப்படுத்தி அவனுக்குத் தண்டைனை வாங்கித்தந்ததில், சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முன்னணி தோழர்களால் நடத்தப்படுகிற ஜனநாயக மாதர் சங்கத்துக்கே அந்தப் பெருமை சேரும். ஆனால் அவர்கள் ஜெயேந்திரன், சங்கரராமனை கொலை செய்தபோதும், பல பெண்களோடு பாலியல் விவகாரங்களில் தொடர்புபடுத்தி செய்திகள் வந்தபோதும், பிரேமானந்தாவை எதிர்த்து தீவிரமாக இயங்கியதை போல் ஜெயேந்திரனை எதிர்த்து இயங்கவில்லை. ஒரு சிறிய எதிர்போடே நின்றுபோனது.

இத்தனைக்கும் ஜெயேந்திரன் கொலை செய்வதற்கு முன், ‘முறையான’ துறவியாக இருந்தபோது, வேலைக்குப் போகிற பெண்களை விபச்சாரிகள் என்று சொன்னதாக ஞாபகம். சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்களோ, ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ ஏன் ஜெயேந்திரனுக்கு எதிராக தீவிரமாக இயங்கவில்லை என்று தெரியவில்லை. பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பை அவர்கள் நழுவவிடடார்கள். ஏதாவது ‘முக்கிய’மான காரணங்கள் இருக்கலாம். சரி பரவாயில்லை. நாம் எடுத்துக் கொண்ட விஷயத்தைவிட்டு அதிகம் வெளியில் போகவேண்டாம்.

வருண தர்மம் எப்படி சூத்திரர்களை கேவலப்படுத்தியதோ அதைதான் ஆசிரம தர்மமும் செய்தது. அதை டாக்டர் அம்பேத்கர் மனுவின் மோசடிகளில் இருந்து விளக்குகிறார்:

“ஆசிரம தருமத்தில் மூவகைத் தன்மைகளை மனு கருதியிருப்பது தெளிவாகிறது. முதலாவது இந்த தருமத்தைச் சூத்திரர்களும் பெண்களும் மேற்கொள்ள முடியாது.”

“இந்த ஆசிரம தர்மத்தைப் பற்றி சில புதிர்களும் உள்ளன. முதலாவதான புதிர், பிரம்மசாரிகளிடையே மனு ஏற்படுத்தியுள்ள வேற்றுமைகளாகும்.”

“இந்தப் பிரமசாரிகள் அனைவரும் ஒரே பிரிவை சார்ந்தவர்களாக அதாவது துவிஜர்களாகவே இருப்பார்கள். அவ்வாறாயின், அவர்கள் அணியும் மேலாடைகளில் ஏன் வேறுபாடு இருக்க வேண்டும்? அவர்கள் அணியும் பூணூல் இழைகளும் வெவ்வேறாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? ஏந்தும் கொம்புகள் வெவ்வேறு மரத்தினதாக இருப்பானேன்? அவர்கள் யாசிக்கும் சொற்களில் வேறுபாடு இருக்க வேண்டியதேன்?

பிராமணப் பிரம்மசாரியொருவன் ‘பகவதி பிஷாம் தேகி’ என்று சொல்வானேன்? சத்திரிய பிரம்மசாரியொருவன் ‘பிஷாம் பவதி தேகி’ என்று சொல்வானேன்? வைசிப் பிரம்மசாரியொருவன் ‘பிஷாம் தேகி பவதி’ என்று சொல்வானேன்?

ஆஸ்ரம தர்மம் என்பது இந்துக்களின் விநோதமானாதொரு அமைப்பு; இதற்காக அவர்கள் பெரிதும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அதற்கு இணையானதொரு அமைப்பு எங்கும் இல்லை என்பது உண்மையே. அதே வேளையில் அதற்கென்று தனியொறு சிறப்பு ஏதும் இல்லை என்பதும் உண்மையே. கட்டாய பிரமச்சரியம் என்பது பிள்ளைக்ளுக்குக் கட்டாயாமாகக் கல்விப்பயிற்சிக்கு வழி வகுக்கின்றது என்ற வகையில் கவர்ச்சியாகத் தோன்றுகின்றது. ஆனால் அது அனைவருக்கும் உரியதன்று என்பதை நோக்க வேண்டும்.

சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் இது விலக்கப்படடிருக்கிறது. இந்து சமூதயாத்தின் பத்தில் ஒன்பது அளவுக்குரிய தொகையினரான சூத்திரர், பெண்கள் ஆகியோரைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது அறிவார்ந்த முறை என்பதைவிட வஞ்சகத் தன்மையுடைது என்பது புலப்படும்.”

என்று ஆசிரம ‘தர்மத்தை’ அம்பலப்படுத்திய டாக்டர் அம்பேத்கர், இதில் வானப்பிரஸ்த நிலை என்ற ஒன்றை விளக்குகிறார்:

“ஒருவன் எப்போது வானப்பிரஸ்தனாக வேண்டும் என்பதில் மனு மிக உறுதியாக இருக்கிறார். வானப்பிரஸ்தனாவதற்குரிய காலம் வயதால் மூத்து முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருக்கக் கூடிய பருவமாகும். சந்நியாசியோ இதைவிட மேலும முதிர்ந்த வயதுடையவனாக இருக்கவேண்டும்.

வாழ்க்கையின் சுகத்தையெல்லாம் ஆண்டு அனுபவித்து முடித்துவிட்டு மேலும் இன்பவாழ்க்கையை மேற்கொள்ள இயலாத நிலையில் தம்மைத் தியாகிகளைப் போல வெளிப்படுத்திக் கொள்வது நகைப்பிற்குரியதாகும். இவ்வாறு குடும்பத்தாரையும் வீட்டையும் துறந்து செல்வது என்பது துயருறும் மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்வதற்காக இல்லை. துறவு வாழ்க்கையை மேற் கொண்டு அமைதியான மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதற்கே இது உதவுகின்றது.

வயது முதிர்ந்தவர்களைக் குடும்பத்திலிருந்து தொடர்பு அறச் செய்து, பொருளற்ற அற்பக் காரியத்திற்காக ஆற்றுவாரும் தேற்றுவாரும் இல்லாமல் காட்டில் சாகவைப்பதானது மூடத்தனத்தின் கொடுமையாகவே தோன்றுகிறது. ஆசிரம முறைமை, பிராமணர்கள் உருவாக்கிய பண்டைய திட்டமிட்ட சிக்கன வாழ்க்கை முறையேயாகும்.”

டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிற இந்த வானப்பிரஸ்த முறைதான், பின்னாட்களில் பார்ப்பனர்களிடம் வயது முதிர்ந்த பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளே, காசிக்கு அனுப்பி வைத்து சாகடிக்கிற முறையாக மாறியது. இது இன்றைய நவீன வடிவமாக முதியோர் இல்லத்தில் விட்டுவிடுவதாக மாறியிருக்கிறது. இன்று முதியோர் இல்லங்கள் பார்ப்பன முதியோர்களால் நிரம்பி வழிவதற்கு இந்த வானப்பிரஸ்த முறைதான் காரணம். அதுபோல் பெரும்பான்மையான முதியோர் இல்லங்கள் பார்ப்பனர்களால்தான் நடத்தப்படுகிறது.

ambedkar-stamp1பார்ப்பன உயர்வை பேசிய மனுவின் மோசடிகளை அம்பலப்படுத்திய டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களையும் பார்ப்பனப் பெண்களையும் இழிவுப் படுத்திய மனுவின் கீழ்தரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறார்.

மனு அளிக்க வந்த விளக்கம் எத்தகைய பயங்கரமானது என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவருடைய விளக்கம் எந்த அளவுக்கு போய் முடிகிறது?

மக்களின் குறிப்பாக பெண்களின் நடத்தையை எவ்வளவுக்குக் கேவலப்படுத்திக் காட்டுகிறது.”

“மனு குறிப்பிடும் சண்டாளர் அல்லது தீண்டாதாரின தோற்றத்தை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்! சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் கூடாவொழுக்கத்தால் பிறந்த சந்ததியார், சண்டாளச் சாதியினர் என்ற கூறியுள்ளார். இது உண்மையாக இருக்கமுடியுமா? அப்படி உண்மையாக இருக்குமானால் பிராணமப் பெண்கள் தமது ஒழுக்கத்தல் உறுதியற்றவர்களாக இருந்தார்கள். சூத்திர ஆடவர்களோடு கூடுவதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள் என்றாகிவிடக்கூடும். இது நம்பமுடியாததாகும்.

சண்டாளர்களின் மக்கள் தொகை பெரிதாக இருப்பதை வைத்துப் பார்த்தால், ஒவ்வொரு பிராமணப் பெண்ணும் ஒரு சூத்திர ஆடவனுக்கு காமக்கிழத்தியாக இருந்திருந்தாலும் கூட நாட்டிலுள்ள சண்டாளர்களின் எண்ணிக்கைக் கணக்கைச் சரிகட்ட முடியாமல் போய்விடும்.”

பார்ப்பனியத்தை இப்படி அம்பலப்படுத்தி எழுதிய டாக்டர் அம்பேத்கரை பார்ப்பனர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதனால்தான் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை சூத்திரர்கள் செய்கிறார்கள், அண்ணலின் சிலையை இடிப்பதும், அவர் பெயரை புறக்கணிப்பதுமாக.

பிற்படுத்தப்பட்டவர்களை ‘சூத்திரர்கள்’ என்று இழிவுப் படுத்திய பார்ப்பனியத்தை அம்பலப்படுத்திய டாக்டர் அம்பேத்கருக்கு சூத்திரர்கள் காட்டும் நன்றி இது.

-தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

8 thoughts on “‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’-டாக்டர் அம்பேத்கர்”

 1. //பார்ப்பனியத்தை இப்படி அம்பலப்படுத்தி எழுதிய டாக்டர் அம்பேத்கரை பார்ப்பனர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதனால்தான் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை சூத்திரர்கள் செய்கிறார்கள், அண்ணலின் சிலையை இடிப்பதும், அவர் பெயரை புறக்கணிப்பதுமாக.

  பிற்படுத்தப்பட்டவர்களை ‘சூத்திரர்கள்’ என்று இழிவுப் படுத்திய பார்ப்பனியத்தை அம்பலப்படுத்திய டாக்டர் அம்பேத்கருக்கு சூத்திரர்கள் காட்டும் நன்றி இது.//

  பார்ப்பனர்கள் நேரடியாகச் செய்யமுடியாததால்தான், பார்ப்பனியக் கருத்தாக்கமான ஜாதி போன்ற சதிச்செயல்கள் மூலமாக பார்ப்பனரல்லாதவர்களைத் தூண்டிவிட்டு செய்ய வைக்கின்றனர்.

  இதுதான் அவர்கள் அதாவது பார்ப்பனர்கள் எப்போதும் கையாளும் தந்திரம். தாழ்த்தப்பட்டவர்களும் பிறப்டுத்தப்பட்டவர்களும் ஒன்று சேரக்கூடாது என்பதில் கண்னும் கருத்துமாக இருப்பார்கள் பார்ப்பனர்கள்.இதற்கு இடஒதுக்கீடு போரட்டங்கள் மூலம் நடந்த சம்பவங்களே சரியான சான்றுகளாகும்.

  தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பொது எதிரி பார்ப்பனர்கள். இதை அம்பேத்கர் கூற்று மூலம் அறியலாம்.

  “தமது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பனியத் தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்துச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஓர் பக்கம் நிறுத்தி மற்றொருபக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர் களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல் நாட்டினரைப் போல்தான் தோன்றுவர். ஒரு ஜெர்மனியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ , ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ, அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.”
  —————காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன? என்ற நூலிலிருந்து -பக்கம்- 215

  இருவரும் ஒன்றுசேர்ந்தால் பார்ப்பானுக்கு பலமான எதிர்ப்பு உண்டாகிவிடும் என்பதால் நம்மில் சிலரைப் பிடித்து நமக்கு எதிராக திருப்பிவிட்டு விடுகின்றனர்.

  நடந்த பிரச்சனைகளுக்கும் பார்ப்பானுக்கும் தொடர்பு இல்லாதது போல் தோன்றும். ஆனால் ஊண்றி கவனித்தால் உண்மை புலப்படும்.

  கீழ் வரும் பெரியாரின் கருத்து இதை தெளிவு படுத்தும் என நம்புகிறேன்.

  பெரியாரின் கருத்தை அப்படியே தருகிறேன். ஊண்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.

  “மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல; பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல.

  இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றி இந்து மதப்புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட, எங்கள் இரண்டு பேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

  அது மட்டுமல்ல, அவற்றைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும், பலமாகவும் என் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றேனோ, அவ்வாறு தான் அவரும் மிகவும் உறுதியாகவும், பலமாகவும், லட்சியங்களைக் கடைப்பிடித்தார்.

  என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லவில்லை. அதற்கு முக்கிய அடிப்படையான மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்…

  நம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் பல சாதிகள் கிடையாது. நாம் இரண்டே சாதிகள்.

  ஒன்று பார்ப்பனர்கள்; இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான். மதப்படியும், சாஸ்திரங்கள்படியும், நாம் இரண்டே பிரிவுகள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்காக, தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும்.

  இவை பிறவி சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே சாதிதான்.

  இப்படிப்பட்ட நாம், இப்படி நமது இழிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து, தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக் கொடுத்து விடுகிறார்கள். ஆகையால் பார்ப்பனர்களின் பதவி, அதிகாரத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

  அப்படிப் போகிறவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துதான் எனது கவலை எல்லாம்.

  உங்களுக்குச் சொல்ல வேண்டியது இன்னொன்றும் உண்டு.

  அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தவறாக நினைக்கிறார்கள்:

  ‘பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்ல’ என்றும்! இது, மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம், பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும், பண விநியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும்.

  நாங்கள் வேறு என்றும், நீங்கள் வேறு என்றும் எண்ணக்கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால், தங்களுக்கு ஆபத்து என்று கருதி, பல இனமாக ஆக்கிவிட்டார்கள். ஆகவே, இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை.

  இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டி விடுகிறார்களே ஒழிய வேறில்லை.

  பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ, அவற்றையெல்லாம் இவன் (பார்ப்பான் அல்லாதவன் சூத்திரன்) அவனைப் பார்த்து அதேபோல் செய்கிறானே தவிர வேறில்லை.

  ஆகவே, அவன் அதைச் செய்யவில்லை என்றால், மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்.

  ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பாரப் பெண் வந்தால், அவள் கையில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்தக் குழாய்க்கு மேல் ஊற்றிக் கழுவிவிட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப் பார்த்து நம்மவன் வீட்டுப் பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு சாய்பு (முஸ்லிம்) பொம்பளையும் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குழாய் மேல் ஊற்றிக் கழுவி விட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.

  முதலாவது பார்ப்பாரப் பொம்பளை தண்ணீர் ஊற்றுவது, மற்றச் சாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே, தீட்டுப்பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள். இதைப் பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பெண்களுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள்.

  அதுபோலத்தான் பார்ப்பனரல்லாதாரில் சாதி வெறியும், பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர் நிலைமை – அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம்.

  அறியாமையும், பார்ப்பானைப் பார்த்துக் காப்பி அடிப்பதுமே தவிர, அகம்பாவம் (பார்ப்பனர்களைப் போல்) கிடையாது. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால், மாணவன் தானே சப்பட்டு விடுவான்!

  பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவைதான் நமக்கு எதிரிகளேயொழிய வேறில்லை. ‘பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்’ என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.

  ————–புதுடெல்லியில் 15.2.1959 அன்று அம்பேத்கர் பவனத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.

  அம்பேத்கர் அவர்களும் பெரியார் அவர்களும் நம்முடைய பொது எதிரி யார் என்பதை மிகத் தெளிவாக அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுள்ளார்கள்.பார்ப்பனியக்கருத்தாக்கங்களை ஒழித்தாலே பல உண்மைகளைப் புரிந்து சரியான வழிக்கு வந்து விடுவார்கள்.

  நம்முடைய பயணத்தை அந்தத் திசை வழியில் கொண்டு செல்வோம்.

  நாமும் நமது ஒற்றுமையை பலப்படுத்துவோம்.

  நன்றி தோழர்.

 2. //டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிற இந்த வானப்பிரஸ்த முறைதான், பின்னாட்களில் பார்ப்பனர்களிடம் வயது முதிர்ந்த பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளே, காசிக்கு அனுப்பி வைத்து சாகடிக்கிற முறையாக மாறியது. இது இன்றைய நவீன வடிவமாக முதியோர் இல்லத்தில் விட்டுவிடுவதாக மாறியிருக்கிறது. இன்று முதியோர் இல்லங்கள் பார்ப்பன முதியோர்களால் நிரம்பி வழிவதற்கு இந்த வானப்பிரஸ்த முறைதான் காரணம். அதுபோல் பெரும்பான்மையான முதியோர் இல்லங்கள் பார்ப்பனர்களால்தான் நடத்தப்படுகிறது. //


  மிக மிக மிக உண்மை , இந்த கழிசடைகளை பார்த்து நம்ம ஆளுக கத்துகிடாம இருந்தா சரி

 3. “ஆசிரமம் என்றால் உலகத்துக்கே தெரிஞ்சது, துறவிகளின் இடம்.

  துறவிகள் என்றால் என்ன?

  மானம், சூடு, சொரணை, வெட்கம், மனிதாபிமானம் இவைகளை முற்றிலுமாக துறந்தவர்கள்.

  அப்படியானல் ஆசிரமம் எப்படி இருக்கும்?

  கிளுகிளுப்பாக, கவர்ச்சிகரமாக பாலுமகேந்திரா படத்தில் வருகிற ‘பலான’ வீடு மாதிரி இருக்கும்.

  பார்ப்பன பார்ப்பனரல்லாத எல்லா ஆசிரமங்களுக்கும் ஒரே `தீம் பாட்டு` இதுதான், ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?’”

  அந்த ஊத்தை வாய் மன்மதர்களுக்கு ஆதரவாக மயிலப்பூரில் பார்ப்பனத்திகளும் மறித்தார்கள்.ஒரு பார்ப்பான் சொன்னான்”எங்க துறவிய கேள்வி கேட்க எவனுக்கும் ரைட்ஸ் இல்ல.

  “ஆனால் அவர்கள் ஜெயேந்திரன், சங்கரராமனை கொலை செய்தபோதும், பல பெண்களோடு பாலியல் விவகாரங்களில் தொடர்புபடுத்தி செய்திகள் வந்தபோதும், பிரேமானந்தாவை எதிர்த்து தீவிரமாக இயங்கியதை போல் ஜெயேந்திரனை எதிர்த்து இயங்கவில்லை”

  அவர்கள் மட்டுமல்ல,பல மான மிகுக்களும் அமைதியை தான் காத்தார்கள்.

  கலகம்
  http://kalagam.wordpress.com/

 4. Dr. Pandian,

  Nice try, but my question is not about what brahmins are saying or not saying. My question is about what Mathimaran is willing to say or not willing to say. Let me also ask you – what is your statement about muslims given that Kasab is a terrorist? Clearly you agree with Mathimaran on ashrams – Are you willing to make the corresponding statement about muslims and terrorism?

Leave a Reply