ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்

jeyakanthan1மிழர்களை, தமிழை, தமிழறிஞர்களைபார்ப்பனர்களோடும், சமஸ்கிருதத்தோடும் ஒப்பிட்டு, கேவலப்படுத்தி, அவமானப்படுத்திப் பேசிய ஜெயகாந்தனுக்கு பத்ம பூஷன்விருது கொடுத்திருப்பதின் மூலம் அந்த விருது கேவலப்பட்டிருக்கிறது, அதுபோலவே, அந்த விருதை வாங்குவதால் ஜெயகாந்தனும் கேவலப்படுத்தப்படுகிறார். ஏனென்றால், அந்த விருதின் லட்சணமும் ஜெயகாந்தனைப் போன்றதே.

ராஜீவ் ஆட்சியின்போது ஈழத்தில், இந்திய ராணுவம் நடத்திய அட்டூழியத்தை ஆதரித்து, ஈழதமிழர்களின் போராட்டத்தை அவர்களின் உணர்வுகளை கேவலப்படுத்திப் பேசியவர் ஜெயகாந்தன்.

அதையெல்லாம் மறந்து, புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களில் ஒரு சிலர், ‘அவர் தகுதியான எழுத்தாளர்என்கிற போர்வையில் தங்கள் ஜாதிக்காரர்என்கிற அடிப்படையில் அவருடன் நட்பு வைத்துக் கொண்டு அவரை மய்யமாக வைத்து பத்தரிகை நடத்துவது, விழா நடத்துவது என்று இயங்குகிறார்கள். இந்தச் செயல் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரம் மக்களை கேவலப்படுத்துவதாக இருக்கிறது.

இவர்கள் மன்னித்தாலும், இறந்தவர்களின் ஆன்மா ஜெயகாந்தன் பிள்ளையை ஒருபோதும் மன்னிக்காது.

ஜெயகாந்தனுக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதை கண்டிக்கும் வகையில், ஏற்கனவே இடம் பெற்ற இந்தக் கடிதத்தை மீண்டும் பிரசுரிக்கிறேன்.

இந்தக் கடிதத்தைப் பிரசுரிக்கும்படி எனக்கு நினைவூட்டிய, என் இனிய நண்பர் விஜய் கோபல்சாமிக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

b15.jpg

16.5.2005 தேதியிட்ட குமுதம் இதழில் ஜெயகாந்தனுக்கு நெல்லை கண்ணன் எழுதிய கடிதத்தை மறுத்து ஒரு கடிதம்.

23.4.2005 அன்று மாலை மயிலாப்பூர் ஆர்.கே.சபாவல் சமஸ்கிருத ஸேவ ஸமிதி சார்பாக ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டுவிழாவில், ஜெயகாந்தன் பேசிய, அந்த அநாகரிகமானப் பேச்சை நான்தான் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தினேன்.

குமுதத்தில் ஜெயகாந்தன் பேசியதாக நெல்லை கண்ணன் குறிப்பிட்டிருக்கிற அந்த வாக்கியங்கள் அப்படியே, ‘மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்தங்களின் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டு, ஜெயகாந்தனுகுக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து 28.4.2005 அன்று ராணி சீதை அரங்கத்தில் அவருக்கு நடந்த மற்றொரு பாராட்டு விழாவில் அவர்கள் விநியோகத்ததில் இருந்தது.

அடுத்து, ‘ஸம்ஸ் கிருத ஸேவா ஸமிதி யில் ஜெயகாந்தன் பேசிய மக்கள் விரோதப் பேச்சை, அம்பலப்டுத்தியவன் என்கிற முறையிலும், அதே மேடையில் நிகழ்ச்சி முடிந்தபிறகு, ஜெயகாந்தனிடம்,

‘‘உங்களுக்க இங்கு நடந்த பாராட்டு விழா, உங்கள் திறமைக்கு கிடைத்த பாராட்டல்ல. உங்களின் இந்தச் செயலுக்கு கிடைத்ததுதான் ’’ என்று சொன்ன் என்ற முறையிலும், (‘‘ஆமாம், அதற்காகதான் இந்தப் பாராட்டு’’ என்றார் ஜெயகாந்தன் . அருகில் முனைவர் பொற்கோ இருந்தார்.)

நெல்லை கண்ணன் கடிதத்தில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜெயகாந்தனின் தமிழ், தமிழர் விரோதப் போக்கை கண்டிக்கிறார் நெல்லை கண்ணன். சரிதான். ஆனால், ‘உங்களின் ஞானத்தந்தை பாரதியும், ஜீவாவும் போல் நீங்கள் இல்லைஎன்று கண்ணன் சொல்லியிருப்பது, ‘பா.ஜ.க மதவெறி கட்சிஎன்று சொல்லுகிற ஒருவர், ‘ஆர் எஸ்.எஸ், அற்புதமான கட்சிஎன்று சொல்லுவது போல் இருக்கிறது.

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

பாரதியின் ஜிராக்ஸ் காப்பிதான் ஜெயகாந்தன். ஸமஸ் கிருத ஸேவ ஸமிதியில்ஜெயகாந்தன் சொன்னக் கருத்து, கருத்தென்ன ஒவ்வொரு வார்த்தையும் பாரதிக்குச் சொந்தமானது.

‘‘வரண் வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’’

ஜெயகாந்தன்.

 

b16.jpgb16.jpgவேதமறிந்தவன் பார்ப்பான் – பல

விந்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் – தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி –

பிறர்பட்டினி தீர்ப்பவன் செட்டி

_________________________________________________

_________________________________________________

நாலு வகுப்பும் இங்கொன்றே – இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்வேலை தவறிச் சிதைந்தே – செத்துவீழ்ந்திடும் மானிடச் சாதி

-பாரதியார்

bharathi.jpg

 

 

‘‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது. சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது’’ –ஜெயகாந்தன்

இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாததுவும் ஸமஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவானம்.

நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பறி நாமுங் கூடப் புண்ணியி பாஷையாக கொண்டாடி வரும் ஸமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதை தெய்வபாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்கு தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வபாஷை யென்கிறோம்.

எந்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்த மாஹான்கள் வழங்கிய பாஷை

தமிழர்தகளாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் அவசியமாகும்

இங்கிலிஷ் பாஷை அன்னியருடையது, நமது நாட்டிற்குச் சொந்தமானதன்று. நமது நாட்டில் எல்லா வகுப்பினர்களுக்கும் ஸ்திரமாகப் பதிந்துவிடும் இயற்கை உடையதன்று. ஹிந்தியோ அங்ஙனமன்று

-பாரதியார் (பாரதியார் கட்டுரைகள் தொகுப்பு)

ஆக என்றும் பேசுகிற வாய் ஜெயகாந்தனுடையதாக இருக்கலாம். அதிலிருந்து வருகிற வார்த்தைகள் பாரதியுடையது.ஜெயகாந்தனை விமர்சிக்கற ஒருவர் பாரதி ஆதரவாளராக இருக்க முடியாது. கூடாது.

அடுத்து ப.ஜீவானந்தம்

தந்தைபெரியரை எவ்வளவோ பேர் அவதூறாக, கேவலமாக எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். ஆனாலும் ப. ஜீவானந்தம் பெரியாரை கேவலப் படுத்தியதுப் போல்,. இதுவரை யாரும் செய்ததில்லை. இதோ பெரியார் மீது ஜீவா அடித்துச் சேற்றில் இருந்து சில துளிகள்.

சுயமரியாதைத் தந்தை’, ‘சிந்தனை சிற்பி’, ‘புரட்சிப் பெரியார்என்ற பெரிய பட்டங்களைச் சூடி, சமதர்ம இயக்கத்தை – பொதுமக்கள் புரட்சி எழுச்சியை காட்டிக் கொடுத்திருக்கிறார்.

அழுகிப் போன ஜமீன்தாரி, நிலச் சுவான்தாரி வர்க்கத்தின் பாதை. பிற்போக்குப் பணமூட்டைகளின் பாதை, ஈரோட்டுப் பாதை.

1935 மார்ச் 10 ஆம் நாள் குடிஅரசுமூலம் மானங்கெட்டத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். பொய்புளுகுகளோடு. கனமான பாஷைப் பிரயோகத்தில் டாட்டன் ஹாமையும் மிஞ்சினார் ஈ வெ.ரா என்பது உறுதி.

-ப.ஜீவானந்தம்

(பா.ஜீவானந்தம் எழுதிய ஈரோட்டுப் பாதை சரியா? என்ற நூலிலிருந்து)

இதுதான் ஜீவாவின் நேர்மை’.

இந்த ஜீவாவிடம் இருந்து ஜெயகாந்தன் கற்றுக்கொண்டது, மார்க்சியத்தை அல்ல. பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சியை, திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்பை.அதனால்தான் ஜெயந்திரன்போன்ற எவ்வளவு மோசமான விஷயத்தையும் ஆதரிக்கிற ஜெயகாந்தன்,

தன்னுடைய சந்தர்ப்பவாதத்திற்காகக் கூட திராவிட இயக்கங்களை ஆதரிப்பதில்லை, என்பது மட்டுமல்ல, அவைகளை தொடர்ச்சியாக எதிர்த்துக் கொண்டே வந்திருக்கிறார். சமீபத்தில் ஞானபீட விருது பெற்றமைக்காக வாழ்த்துச் சொல்ல முயற்சித்த கலைஞரை திட்டமிட்டு அவமானப்படுத்தியது வரை.

ஆக, தமிழைத்தாண்டி சமஸ்கிருத மதிப்பும், வேதம், பகவத்கீதை, இந்து, இந்தி இவைகள்தான் இந்தியா என்கிற பாரதியின் துடிப்பும்- பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சி, திராவிட இயக்க எதிர்ப்பு என்கிற ஜீவாவின் வெறுப்பும் கலந்து செய்த கலவைதான் ஜெயகாந்தன்.

இந்த தத்துவபின்னணியே ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வரை பெரிய அங்கீகாரத்தைப் பெற்று தந்திருக்கிறது. இதற்குப் பெயர்தான் ஜெயகாந்தனிசம்.

இப்படியாக உண்மை இருக்க, நெல்லை கண்ணனோ அசலைப் புகழ்ந்து, நகலை நக்கல் செய்கிறார். இதுவும் ஒருவகையில் ஜெயகாந்தனிசமே.

***

குமுதம் இந்தக் கடிதத்தைப் பிரசுரிக்கவில்லை. பாரதிக் குறித்த விமர்சனம் இடம் பெற்றிருப்பதே அதற்குக் காரணம். எல்லோரையும் கேலி செய்கிற குமுதம், இதுவரை பாரதிப் பற்றிய சின்னக்கீறலைக் கூட வெளியிட்டதில்லை என்பதே என் ஞாபகம்.

ஜெயேந்திரன் கொலை செய்தார்என்று அரசு ஆதாரங்களைச் சொல்லி கைது செய்த போதிலும்,‘இல்லை அவர் கொலை செய்து இருக்கமாட்டார்என்று நம்ப மறுக்கிற அவரின் பார்ப்பனப் பக்தர்களைப் போல், ‘பாரதி இந்து மத, பார்ப்பனச் சிந்தனையாளர்கள்தான்என்பதை அவரின் எழுத்து உதாரணங்களோடு நான் நிருபித்த போதும், (‘பாரதி ய ஜனதா பார்ட்டி நூலில்) பாரதி பக்தர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள்.இருக்கட்டும்.

மூடநம்பிக்கைகள் முற்போக்காளர்களிடம்’ (அறஞர்கள்) இருக்கமுடியாது என்று நினைப்பதுக் கூட ஒருவகையான மூட நம்பிக்கைதானே. அதற்காக குமுதத்தை முற்போக்குஎன்று சொல்வதாக அர்த்தமில்லை.

குமுதம்-முற்போக்காளர்களும்-மதவாதிகளும் உள்ளார்ந்த உணர்வோடு, சந்தித்துக் கொள்கிற மையப்புள்ளி பாரதி என்பதற்காகச் சொன்னேன்.

——-

இந்த கடிதத்தை பிரசுரித்த சிந்தனையாளன், கவிதாச்சரண், நாளைவிடியும் இதழ்களுக்கு நன்றி .வே.மதிமாறன்

மீண்டும் ஐரோப்பிய ‘தமிழ்ஒலி’ வானொலியில் நான்


kid_at_gym9203744_std

பிரான்சில் இருந்து இயங்குகிற – ஜெர்மன், இத்தாலி, சுவிஸ், டென்மார்க், சுவீடன், நார்வே இன்னும் இதுபோன்ற ஐரோப்பிய நாடுகள் முழுக்க ஒலிக்கிற TRT தமிழ்ஒலி வானொலியில் ‘முற்றம்’ என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில் மீண்டும் நேயர்களின் கேள்விகளுக்கு பெரியாரியல் பார்வையில் தொலைபேசிவழியாக பதில்அளிக்கிறேன்.

இந்நிகழ்ச்சி ஒரு நேரடி ஒலிபரப்பு.

ஒலிபரப்பாகும் நாள்:
27.01.2009 செவ்வாய

நேரம்:
இரவு 10 மணி (அய்ரோப்பிய நேரம்)

இரவு 2.30 மணி (இந்திய நேரம்)

இது 2 மணிநேர நிகழ்ச்சி.

அய்ரோப்பிய நாடுகளில் இருக்கும் தோழர்கள், நேரமிருந்தால் உரையாடலில் கலந்துகொள்ளுங்கள்.

நன்றி.

கீழே உள்ள சுட்டி நிகழ்சிச்சியைக் குறித்து தமிழ்ஒலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒலிச்சுட்டி. அழுத்தினால் நீங்களும் கேட்கலாம

 

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசைக் கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம்

ந்திய குடியரசு நாளை விஷேசமாக அரசு ஒருபுறம் கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் சென்னை சைதாப்பேட்டையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் செயலைக் கண்டித்து இன்று காலை 11.00 மணியளவில், மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் தங்களின் தோழமை அமைப்புகளோடு மிகப்பெருவாரியாக கலந்து கொண்டு ஆர்பாட்டம் செய்து கைதாகியுள்ளனர்.

cimg0901


cimg0876
cimg0875
cimg0879
cimg0874
cimg0873
cimg0871
collage1

பெரியாரின் பூமாலையும் போர்வாளும்

mr-radha-wrapper2

 இன்னொரு புது புத்தகம்

 

1925 ல் பெரியாரால் துவங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்கிற பூதம்-, தமிழகத்தைப் பிடித்து ஆட்டியது. சுயமரியாதை இயக்குத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று தமிழகத்தை இரண்டாக பிளந்தது அது. இப்படி சுயமரியாதை இயக்கம் பல இடங்களை ஊடுருவி சென்றது போல், மக்களை மையமிட்டு இயங்குகிற, நாடக கலைஞர்களிடம் ஊடுருவியது. கலைஞர்கள் சுயமரியாதை இயக்கத்தின் குடியரசு இதழை மறைத்து வைத்துப் படித்தார்கள்.

 

அதன் தாக்கத்திற்கு பல கலைஞர்கள் ஆளானாலும், அறிவாளிகளை அது அதிக அளவில் ஈர்த்தது. அப்படி ஈர்க்கப்பட்ட அறிவாளிகள்தான் என்.எஸ்.கிருஷ்ணணும், எம்.ஆர்.ராதாவும்.

…………………………………………………………….

எம்.ஆர். ராதாஎன்.எஸ். கிருஷ்ணன்கே.பி. சுந்தராம்பாள் நூற்றாண்டு விழாவும்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குழப்பம்

 

 

durai:

மதனை அழைத்தது சினிமா வாய்ப்பு தேடுவதற்காகத்தான் என்று நீங்கள் சொல்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்? அந்த விழாவுக்கு அடுத்தப்படியாக எப்போது, எந்த தமுஎச நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் மதனின் உதவியுடன் சினிமா வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

 

கலைவேந்தன்:

பிரளயன் என்பவரை கமல்ஹாசனிடம் அறிமுகம் செய்துவைத்தது மதன்தான் என்று பிரளயனே நன்றி பொங்க குறிப்பிட்டுள்ளார். இது போக, தமுஎசவின் முன்னணி பேச்சாளரான பாரதி கிருஷ்ணகுமார், தன்னுடைய வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்க நடவடிக்கைகளை பலநாள் முடக்கிவிட்டு என்ன புரட்சியா செஞ்சாரு? பாரதிராஜாகிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை பார்த்துக்கொண்டிருந்தார்

 

…………………………………………………………….

 

கே.பி. சுந்தராம்பாள்தமுஎசவிற்காக -‘சிபிஎம்டி.கே. ரங்கராஜனும்

எம்.ஆர். ராதாவிற்காக கலைவேந்தனும்

 

டி.கே.ரங்கராஜன்:

அதேபோல், கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றி

விவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை.

 கலைவேந்தன்:

நல்லவேளையாகவிடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கெல்லாம் விழா எடுப்போம்என்று வீர சவார்க்கருக்கோ அல்லது நாற்பது பேரைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாயிக்கோ விழா எடுக்காமலிருந்தால் சரி

…………………………………………………………….

 

விரிவாக அறிய,

விற்பனையில்

 

அங்குசம் வெளியீடு

 

ஞா. டார்வின் தாசன்

15, எழுத்துக்காரன் தெரு

காலடிப்பேட்டை

திருவொற்றியூர்

சென்னை600 019

 

பேச: 94443 37384

நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை

ambedkar-wrapper6டாக்டர் அம்பேத்கரை அறிந்துகொள்வோம்

புதிய நூல்

கிடைக்கும் இடம்

அங்குசம் வெளியீடு

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

சிதம்பரம் நடராஜனை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் தீட்சிதர்களை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும்

pict0002

நேற்றுநடந்தஆர்ப்பாட்டம்

pict0001

மிழகத்தை ஆண்ட சிறந்த முதல்வர் என்று ஒருவரை சொல்லவேண்டும் என்றால், சுதந்திரத்திற்கு முன் நீதிக்கட்சியின் சார்பாக சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் என்று அன்போடு அழைக்கப்பட்ட, ராமராயநிங்காரைச் சொல்லலாம்.

இவர் காலத்தில்தான் அதாவது 1925 – ஆம் ஆண்டு கோடிக்கணக்கான சொத்து மதிப்புக் கொண்ட, இந்து கோயில்கள் ‘இந்துமத பரிபாலனச் சட்ட மசோதா’ என்கிற சட்டத்தின் மூலம் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு நிறையப் பாடுபட்டிருக்கிறார் பனகல் அரசர். 1922 – ஆம் ஆண்டு இந்துமத பரிபாலன சட்ட மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்.

இதைச் சமூகத்திலும், சட்டசபையிலும் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். இந்த மசோதா மீது மொத்தம் 800 திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் 475 திருத்தங்களைத் தீவிர பார்ப்பன உணர்வாளரான சத்தியமூர்த்தி அய்யர் மட்டுமே கொண்டு வந்திருக்கிறார்.

கடைசி ஆயுதமாக, இந்தச் சட்டத்தில் இருந்து திருப்பதி கோயிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, கோரி பனகல் அரசருக்கு ரூ. லட்சம் லஞ்சம் தர முயன்று இருக்கிறார்கள்.

இவற்றை புறக்கணித்து, எதிர்ப்பை முறியடித்து மூன்றாண்டுகள் போராடி, இந்தச் சட்டத்தை அமல் படுத்தினார் பனகல் அரசர். ‘சமூக நீதி அரசு, அல்லது பார்பபனரல்லாதார் உரிமைக்கான அரசு’ எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு பனகல் அரசரின் ஆட்சி உதாரணம்.

 

pict0003

மிகச் சிறந்த சீர்திருத்த அரசாக இருந்தால், ஒரு கோயிலை அரசுடமையாக்குவது மிகச் சாதாரணம். ஒரு காலை பொழுதில் ஒரே ஒரு கையெழுத்தில் அதை செய்துவிடலாம். தமிழக முதல்வர் தன்னை நீதிக்கட்சியின் வாரிசாக பலமுறை சொல்லியிருக்கிறார்.சொன்னதைசெயலிலும் காட்ட வேண்டும். சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை தன் வசப்படுத்த வேண்டும். அரசு நினைத்தால் இது மிகச் சாதாரணம்.

பொருளாதார அடியாளாக இருந்து, போராளியாக மாறிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் பெர்கின்ஸ் சொல்வார்:

நிலவில் மனிதனைக் கால்பதிக்கச் செய்வதைவிட, சோவியத்யூனியனைத் துண்டாடுவதைவிட, மாபெரும் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதைவிட, வறுமையை ஒழிப்பது நடமுறையில் எளிதானது” என்று.

அதையே நாம் ‘சமூக நீதி’ அரசான திமுக அரசிற்கு சொல்வோம்:

தங்க நாற்கர சாலைகள் அமைப்பதை விட, சேது பாலம் கட்டுவதை விட, பல பன்னாட்டு கம்பெனிகளை இங்கு வநது தொழில் தொடங்க வைப்பதைவிட, காங்கிரஸ் அரசைப் பாதுகாப்பதைவிட மிக எளிதானது சிதம்பரம் நடராஜன் கோயிலை அரசுடமையாக்குவது‘.

-வே. மதிமாறன்

 

 

ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`

ஏ.ஆர். ரகுமான் சர்வதேச விருது வாங்கியிருக்கிறார். அதை ஒட்டி 8.1.2008 அன்று எழுதிய இந்தக் கேள்வி-பதில் ஓராண்டு கழித்து, மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.

இன்றைய திரைப்பட இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களையே ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தருகிறார்களே? இது என்ன முறை?

சிவகுமார்.

arrahman.jpg

கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை.

அப்படிதான் தியாகராஜ பாகவதர் பாடிய “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில அமைந்தப் பாடலை, அதற்கு பின் வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்ரராஜனை வைத்துப் பாட வைத்தார்.

msv_and_ilaya.jpg‘புதிய பறவை’ படத்தில் “உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்” என்று ‘ஹரிகாம்போதியில்’ மெல்லிசை மன்னர் இசையமைத்தப் பாடலை, இசைஞானி இளையராஜா ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ என்ற படத்தில், பழைய பாடலின் பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி, “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.
இது முன்னர் இருந்த மேதைகளுக்கு, அதே துறையைச் சார்ந்த மேதைகள் செய்த கவுரம்.

ஆனால் இப்போது நடப்பதோ களவானித்தனம்.

பழைய பாடல்களை மறைமுகமாக திருடி  இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நேரடியாக பகிரங்கமாக வழிப்பறி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த இசையமைப்பாளர்களை விட கல்யாண வீடுகளில் பாடுகிறவர்கள் நிரம்ப நேர்மையோடு இருக்கிறார்கள்.
“இந்தப் பட பாடல், இவர் இசையமைத்தது” என்று சொல்லிவிட்டு பாடுகிறார்கள். ஆனால் இவர்களோ, கொஞ்சமும் வெட்கமில்லாமல் அடுத்தவர் பாடல்களை தன் பாடல்கள், என்றே அறிவித்துக் கொள்கிறார்கள்.

இந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, பார்ப்பனக் கைகூலியான ஏ.ஆர். ரகுமான்.

‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற அருமையான கற்பனைகள் கொண்ட பாடலை, ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான்.

கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’  என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை.  இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.
கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.

அந்த விசுவாசம் ரகுமானுக்கு இருந்ததால்தான், ‘ரோஜா’ ‘பம்பாய்’ போன்ற இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படங்களில் அவருடைய இசையும் இஸ்லாமிய எதிர்ப்புக் குறியீடுகளாகவும், `இஸ்லாமிய இசை` தீவிரவாத  அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

dr_abdul_kalam.jpg இன்று கூட இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்க்கிற பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும், பா.ஜ.க., வை சேர்ந்த பலரும் – ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாமின் ஆதரவாளர்கள்தான்.

இவர்களை ஆதரிப்பதின் மூலமாக, தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது இஸ்லாமிய ஆதரவாளர்களாக சித்தரித்துக் கொள்கிறார்கள்.

-வே. மதிமாறன்

சென்னை புத்தகக் காட்சியில் எனது புத்தகங்கள்

வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா உரைகள்

கவிஞர் தமிழேந்தி

தோழர் விடுதலை ராசேந்திரன்

பேராசிரியர் பெரியார்தாசன்

தோழர் கொளத்தூர் மணி

தோழர் மருதையன்

இவர்கள் நூல் அறிமுக விழாவில் பேசிய உரைகள் இரண்டு மணி நேர குறுந் தகடாக ( M.P.3 ) விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ. 35.


***

பாரதிய ஜனதா பார்ட்டி

வே.மதிமாறன்

book2.jpg

ரூ. 50.

பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக, ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.

காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்என்கிறார்.

இதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,

காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்

கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.

சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?

வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச பெரியவாளெல்லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் – ஜகத்குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னுசொன்னாலும் சொல்வார்கள்-மார்க்சிய பாரதியவாதிகள்.

***

பாரதிய ஜனதா பார்ட்டி நூலுக்கு எதிராக வந்த நூல்கள்

பாரதி கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய ஒரு மதிப்பீடு

கி.பார்த்திபராஜா

தம்பி நான் ஏது செய்வேணடா?

பாரதி பற்றி பாரதிபுத்திரன்

இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்

ந.இரவீந்திரன்

***


பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்

மருதையன்

வே.மதிமாறன்

book3.jpg

பாரதிய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றியான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம்.

பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லைஎன்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக, வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.

வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்என்று நிராகரிக்கவும் செய்தார்.

பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லைஎன்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80 ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.

மருதையன்

மேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.

அப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாததார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.

நம் பேராசரியப் பெருமக்கள் பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்கள்.

வே.மதிமாறன்

ரூ. 25.

***


வே. மதிமாறன் பதில்கள்

…..அதற்கு விழிப்புணர்வு ஆசிரியர், காமராஜ், “கேள்வி பதில் பக்கத்தை ஆரம்பிக்கலாம். அதை நீங்களே எழுதுங்கள்” என்றார்.

“நான் எழுதுவதை விட, மிக பிரபலமான எழுத்தாளர்கள் யாரையாவது எழுத வையுங்கள். அது பத்திரிகைக்கு விளம்பரமாகும்” என்றேன். ஆனால் அவர் என்னையே எழுதும்படிக் கட்டாயப்படுத்தினார்.

‘சோ, சுஜாதா, மதன், சுந்தர ராமசாமி, ஞாநி’ இவர்களாலேயே கேள்விகளுக்குப் பதில்கள் எழுதமுடியும்போது, என்னால் முடியாதா என்ன?’ என்று துணிந்து ஒத்துக் கொண்டேன். ‘விழிப்புணர்’வில் ஆரம்பித்து ‘சமூக விழிப்புணர்வு’ வரை மொத்தம் ஆறு இதழ்களில் பதில்கள் எழுதினேன்.

என் பதில்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

மாரக்ஸ், பெரியார், அம்பேத்கர் பற்றியும் கலை, இலக்கியம் குறித்தும் ஆழ்ந்த ஞானம் உடையவர்களில் இருந்து இவைகள் பற்றி எதுவும் தெரியாத நபர்கள் வரை பதில்கள் பலரின் கவனத்தைக் கவர்ந்தது.

அந்த கவனம் – பாராட்டுதலாக, கோபமாக, எரிச்சலாக, பொறாமையாக பல்வேறு வடிவங்களில் `அவதாரம்` எடுத்தது.

நமது பதில்களின் தாக்கத்தால், ‘பத்தவைச்சிட்டியே பரட்ட’ என்கிற பாணியில் புதிதாக சில பத்திரிகைகளிளும் ‘கேள்வி பதில்’ பகுதியைத் துவங்கின.

சில எழுத்தாளர்களும் ஆர்வ மிகுதியால் நமது பாணியை பின்பற்றி, கேள்விக்கு பதில்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். வாழ்த்துகள். இப்படி ஒரு அலையை உருவாக்கியதற்காகக் தோழர் கு. காமராஜுக்கு நன்றி சொல்லவேண்டும்.

முன்னுரையில் வே. மதிமாறன்…


பக்கங்கள் 88. விலை ரூ. 35.

அங்குசம் வெளியீடு

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண்: 99  – 100

மன்மோகன் சிங்கிற்கு கருப்புக்கொடி – பெரியார் தி.க வினர் கைது – படங்கள்

ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள இராணுவத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்ட மத்திய அரசை கண்டித்து, சென்னை வந்துள்ள மன்மோகன் சிங்கை எதிர்த்து கருப்புக்கொடி காட்ட முயற்சித்த பெரியார் திராவிடர் கழக தோழர்கள் 700 பேர் கைது.

கைதான தோழர்களை சென்னை சைதாபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து இருந்தார்கள். அங்கு எடுத்தபடங்கள்.

1

2a

22

33

மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்

ambedkar22

ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3
டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’- டாக்டர் அம்பேத்கர்- 6


என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7

‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை  -8

மார்க்சியத்திற்கு-முஸ்லீம்களுக்கு எதிரானவரா அம்பேத்கர்? -9

உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்? -10
டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும் – 11
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்? -12

தொடர் – 13

டாக்டர் அம்பேத்கர் பற்றியான தொடர் எழுதுவதற்கு முன்பு எனது வலைப்பதிவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 700, 800, 900 என்று இருந்தது. அம்பேத்கர் தொடரின் முதல் அத்தியாயம் முடியும் முன்பே 400, 300, 200 என்று சரிய ஆரம்பித்தது. பதிவின் இணைப்பை தருகிற ஒரு சில தளங்கள் அம்பேத்கர் பற்றியான நமது கட்டுரையின் இணைப்பை புறக்கணித்தன. தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதேபோல் தொடருக்கு முன்பு என் எழுத்துக்ளையும் என்னையும் சிலாகித்து, என்னோடு பேசுவதே பெருமைக்குரியது என்று புல்லரித்த ‘முற்போக்காளர்கள்’ பலர் தொடருக்கு பின்பு தொலைந்து போயினர். ‘டாக்டர் அம்பேத்கரை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?’ என்று நாம் கேட்டோம். நம்மையும் சேர்த்து புறக்கணித்தனர்.

தந்தை பெரியாரைப் பற்றி எழுதும்போது, பார்ப்பனர்கள், மதவாதிகள் போன்றவர்கள் நம்மீது கடுமையான கோபம் கொள்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரை பற்றி எழுதும்போது பார்ப்பனர்கள், மதவாதிகளோடு கூடுதலாக பிற்படுத்தப்பட்டவர்களும் சேர்ந்து கொண்டு, நம்மீது கடுமையான கோபம் கொள்கிறார்கள். நமது தொடர் சாதிய கண்ணோட்டம் கொண்ட பிற்படுத்தப்பட்டவர்களையும் முற்போக்காளர்களையும் கேள்வி கேட்டது, நம்மீதான கோபத்திற்கான இன்னொரு சிறப்புக் காரணம்.

சரி. இதுவொன்றும் சமூகத்திற்கு புதியதில்லை. ஆனால் பிரச்சினை இதோடு மட்டும் நிற்கவில்லை. தொடரை ஒட்டி பல அவதூறுகளும், புரளிகளும் டாக்டர் அம்பேத்கர் மீதும், என்மீதும், அம்பேத்கர் T.shirt தயாரிப்பில் தீவிரமாக இருக்கிற எனது நண்பர்கள் மீதும் வீசப்பட்டன. அந்த அவதூறுகளில் இரண்டு அவதூறுகளை மிக மோசமானதாக உணர்கிறேன்.

1. அம்பேத்கர் T.shirt போட்டு நன்றாக சம்பாதிக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வழி.

2. டாக்டர் அம்பேத்கர் பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரை எப்படி பார்ப்பன எதிர்ப்பாளராக சொல்வது?

இந்த இரண்டு புரளிகளும் அற்பமானவை, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் எழுபவை என்று முற்றிலுமாக புறம் தள்ளிவிடலாம். ஆனால் இந்த அற்பமான புரளிகளின் இன்னொருபுரம் ஆபத்தானதாக இருப்பதால், இந்தப் புரளிகளுக்கு நம் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது.

அற்பம் 1. அம்பேத்கர் T.shirt போட்டு நன்றாக சம்பாதிக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வழி.

இது போன்ற அவதூறுகள் பெரியார் T.shirt போடும்போதோ, சே குவோர T.shirt போடும்போதோ சொல்லப் படவில்லை. அம்பேத்கர் T.shirt போட வேண்டும் என்று சொல்லும்போதுதான் இந்த அவதூறு தீவிரமாகப் பரப்பப்படுகிறது. இந்த அவதூறு வழக்கமான மற்ற அவதூறுகளை போன்ற ஒன்று என்று சாதாரணமாக, எளிதாக வரையறுத்துவிட முடியாது. இது அவைகளை விடவும் மிகவும் இழிவானது, கேவலமானது. காரணம் இது அவ்வளவு தலித் விரோதமும் காழ்ப்புணர்ச்சியும் கொண்டது.

அம்பேத்கர் T.shirt வாங்குவதற்கு ஆளில்லை என்பதால்தான் அதை யாரும் விற்பனைக்கே கொண்டுவரவில்லை. லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற வியாபார நோக்கோடு பார்த்தால், அம்பேத்கர் படம் போட்ட T.shirt விற்பனைக் கொண்டு வருவது முட்டாள்தனமானது. பெரும் நஷ்டத்திற்குரியது. இன்றைய நிலையில் வர்த்தக நோக்கத்தோடு T.shirt போட வேண்டும் என்றால், அதற்கு பொருத்தமானது சே குவேரா படம் போட்ட T.shirt போடுவதுதான். அதுதான் பெருத்த லாபம் தரும். யதார்த்தம் இப்படி இருக்கையில், நம்மீது வீசப்படும் அவதூறோ இப்படி இருக்கிறது. ஆத்திரம் அறிவுக்கு ஆகாது என்பர்களே அதற்கு இந்த அவதூறு நல்ல உதாரணம்.

டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T.shirt அணிவது ஸ்டைலுக்காகவோ அல்லது பார்வைக்கு தன்னை ஒரு முற்போக்காளனாக மற்றவர்களுக்கு ‘பந்தா’வாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவோ அல்ல. அப்படி ஒரு பொதுப்பார்வை அம்பேத்கர் மீதும் இருந்திருக்குமாயின் சே குவேரா T.shirt அணிபவர்கள் எல்லாம் அம்பேத்கர் T.shirt டும் அணிந்திருப்பார்கள். ஆனால் அம்பேத்கர் T.shirt அணிவது ஜாதிகளுக்கு எதிரான, ஜாதிவெறியர்களுக்கு எதிரான ஒரு கலகக் குறியீடு என்பதால்தான்.

அண்ணலின் படம் போட்ட T.shirt அணிந்து பாருங்கள் அன்பர்களே, இந்த ஜாதிய சமூகம் உங்களை எப்படி அடையாளப்படுத்துகிறது? அண்ணலின் படத்தை பார்த்தவுடன் எப்படி அலறுகிறது? என்று அனுபவித்து பாருங்கள். அந்த அனுபவம் புதுமையாக இருக்கும். ஆனால் இனிமையாக இருக்காது.

அற்பம் 2. அம்பேத்கர் பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

சமூகத்தில் ஜாதி இருக்கிறது. ஜாதிரீதியான ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறது. அதனால்தான் அதை எதிர்த்து தீவிரமாக இயங்கினார் டாக்டர் அம்பேத்கர். ஆனால் ‘உண்மையில் ஜாதி என்பது பொய். அப்படி ஒன்று மனிதர்களுக்கு அவசியம் இல்லை.’ என்கிற கண்ணோட்டம் டாக்டர் அம்பேத்கரிடம் தீவிரமாக இருந்தது. அதனால்தான் தன்னுடைய தனிவாழ்க்கையில் அவர் ஜாதி உணர்வற்று இருந்தார். அவரிடம் சுயஜாதி உணர்வு என்பது துளியும் இல்லை. ‘இந்திய ஜாதிகளிலேயே மகர் ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் உயர்ந்தவர்கள். இந்த நாட்டை ஆண்டவர்கள்.’ என்பதுபோன்ற சுயஜாதி பெருமைகளில், பிரியங்களில் அம்பேத்கர் ஒருநாளும் கவனம் செலுத்தியதில்லை.

அருந்ததயிர் சமூகம் உட்பட எல்லா தாழ்த்தப்பட்ட மக்களின் துயரங்களையும் புரிந்திருந்தார். ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத்தான் டாக்டர் அம்பேத்கரின் குரல் இருந்தது. அதனால்தான் அவரை இந்தியாவில் இருக்கிற அனைத்து தலித் மக்களும் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்தச் சிறப்பு தலித் தலைவர்களிலேயே டாக்டர் அம்பேத்கரிடம் மட்டுமே இருந்து. காரணம் ஜாதி என்பது பொய். ‘பிறப்பால் ஜாதி பார்ப்பதும், தன்னை ஜாதியாக உணர்வதும் 2000 ஆண்டுகளாக பார்ப்பனியம் இந்த சமூகத்தில் ஏற்படுத்திய பழக்கம்’ என்கிற கண்ணோட்டம் அவரிடம் உறுதியாக இருந்தது. அதனால்தான் ஜாதிகளுக்கு எதிரான புத்தரை தனது முன்னோடியாக கொண்டார்.

ஒருவரை தனிவாழ்க்கையில் நண்பராக ஏற்றுக் கொள்வதற்கும், துணைவராக ஏற்றுக் கொள்வதற்கும், ‘அந்த நபர் தனக்கு பொருத்தமாக இருப்பாரா?’ என்பதை தீர்மானிப்பதில் ஜாதியின் பங்களிப்பு இருப்பது மோசடியானது. அதுதான் இந்து மத ஜாதியக் கண்ணோட்டம் நிறைந்தது. நட்பையும், காதலையும், கல்யாணத்தையும் ஜாதி தீர்மானிக்கக்கூடாது, தனது விருப்பங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் வலியுறுத்திய சமத்துவம்.

ஜாதியை தெரிந்துகொண்டு ஒரு நபரை விரும்ப முடியாது. கூடாது. அப்படி விரும்பியப் பிறகு ஜாதி தெரிந்தால் விலக்கிக் கொள்ள முடியாது. கூடாது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் டாக்டர் அம்பேத்கரை குறைசொல்பவர்கள் இன்னும் ஜாதிய கண்ணோட்டத்தில் இருந்து வெளியே வரவில்லை என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

ambedkar1மேற்சொன்ன இந்த விளக்கம் தந்தை பெரியாருக்கும் பொருந்தும். தன்கொள்கை சார்ந்தவர்களோடு, தன்னுடைய தோழர்களோடு சண்டை வந்து பேச்சு வார்த்தைக்கூட இல்லாமல் இருந்திருக்கிறார் பெரியார். ஆனால் தன் காலம் முழுவதும் ராஜாஜியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தபோதும், அவரோடு தனிப்பட்ட முறையில் நட்பை முறித்துக் கொண்டதில்லை. அவரோடு அவர் பேசாமல் இருந்ததுமில்லை. தனது இரண்டாவது திருமணத்தின் போது உறவினர்கள் உட்பட யாரிடமும் ஆலோசனைக் கேட்காத பெரியார், தனது அரசியல் எதிரியான ராஜாஜிடம்தான் ஆலோசைனக்கேட்டார். ராஜாஜியின் மரணம் வரை அவரோடு நட்பாகத்தான் இருந்தார்.

தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, மருத்துவமனையில் தன்னை பார்க்க வந்த தொண்டர், தனக்கு கொடுத்த பசும் நெய்யை, ராஜாஜி விரும்பி உண்பார் என்பதற்காக, மருத்துமனையில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ராஜாஜியின் வீட்டில் நெய்யை தந்து விட்டுச் சென்றவர்தான் பெரியார்.

தன் சொந்த வாழ்க்கையில் பார்ப்பனர்களோடு நட்பாக இருப்பதற்காக, அல்லது அவர்கள் மூலம் கிடைக்கும் தனிப்பட்ட லாபங்களுக்காக  பார்ப்பன எதிர்ப்பு என்கிற அரசியலையே கைவிட்டுவிட்டு அதற்கு எதிராகவே மாறிவிடுகிற இன்றைய சில அறிவாளிகளைப்போல் அல்ல அவர்கள் இருவரும்.

டாக்டர் அம்பேத்கர்-தந்தை பெரியார் இருவரிடமும் சுயஜாதி அபிப்பராயம் சுத்தமாகக் கிடையாது. அவர்கள் ஜாதியை துளியும் நம்பியதில்லை. அதனால்தான் அவர்களால் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக, தீவிரமாக போராட முடிந்தது. அவர்களால் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு அதில் வெற்றியும் பெறமுடிந்தது.

இதையும் மீறி ஜாதி என்கிற உங்களின் அழுகிய நாற்றத்தை மறைப்பதற்காக, ‘தமிழ்தேசியம்’ என்கிற வாசனை திரவியம் பூசிக் கொண்டு தந்தை பெரியாரை ‘கன்னடன்’ என்றும், தலைவர் அம்பேத்கரை ‘மராட்டியன்’ என்றும் சொல்வீர்களேயானால், நாங்களும் எங்களை ‘கன்னடன்’என்றும் ‘மராட்டியன்’ என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்வோம்.

-முற்றும்

டாக்டர் அம்பேத்கர் T.shirt தயாரிப்பு மற்றும் ஆலோசனைக் குழு

மும்பை

கதிரவன்

மகிழ்ன்

கோவை

பாலா

அய்தாரபாத்

விஜய் கோபாலசாமி

பெங்களூர்

பிரடெரிக்

தமிழன்பன்

வெங்கடேஷ்

சென்னை

ஆறுமுகம்

சசி

வெங்கட்

சுவன்

அருண்

கலாநிதி