ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`

ஏ.ஆர். ரகுமான் சர்வதேச விருது வாங்கியிருக்கிறார். அதை ஒட்டி 8.1.2008 அன்று எழுதிய இந்தக் கேள்வி-பதில் ஓராண்டு கழித்து, மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.

இன்றைய திரைப்பட இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களையே ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தருகிறார்களே? இது என்ன முறை?

சிவகுமார்.

arrahman.jpg

கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை.

அப்படிதான் தியாகராஜ பாகவதர் பாடிய “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில அமைந்தப் பாடலை, அதற்கு பின் வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்ரராஜனை வைத்துப் பாட வைத்தார்.

msv_and_ilaya.jpg‘புதிய பறவை’ படத்தில் “உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்” என்று ‘ஹரிகாம்போதியில்’ மெல்லிசை மன்னர் இசையமைத்தப் பாடலை, இசைஞானி இளையராஜா ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ என்ற படத்தில், பழைய பாடலின் பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி, “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.
இது முன்னர் இருந்த மேதைகளுக்கு, அதே துறையைச் சார்ந்த மேதைகள் செய்த கவுரம்.

ஆனால் இப்போது நடப்பதோ களவானித்தனம்.

பழைய பாடல்களை மறைமுகமாக திருடி  இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நேரடியாக பகிரங்கமாக வழிப்பறி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த இசையமைப்பாளர்களை விட கல்யாண வீடுகளில் பாடுகிறவர்கள் நிரம்ப நேர்மையோடு இருக்கிறார்கள்.
“இந்தப் பட பாடல், இவர் இசையமைத்தது” என்று சொல்லிவிட்டு பாடுகிறார்கள். ஆனால் இவர்களோ, கொஞ்சமும் வெட்கமில்லாமல் அடுத்தவர் பாடல்களை தன் பாடல்கள், என்றே அறிவித்துக் கொள்கிறார்கள்.

இந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, பார்ப்பனக் கைகூலியான ஏ.ஆர். ரகுமான்.

‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற அருமையான கற்பனைகள் கொண்ட பாடலை, ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான்.

கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’  என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை.  இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.
கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.

அந்த விசுவாசம் ரகுமானுக்கு இருந்ததால்தான், ‘ரோஜா’ ‘பம்பாய்’ போன்ற இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படங்களில் அவருடைய இசையும் இஸ்லாமிய எதிர்ப்புக் குறியீடுகளாகவும், `இஸ்லாமிய இசை` தீவிரவாத  அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

dr_abdul_kalam.jpg இன்று கூட இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்க்கிற பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும், பா.ஜ.க., வை சேர்ந்த பலரும் – ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாமின் ஆதரவாளர்கள்தான்.

இவர்களை ஆதரிப்பதின் மூலமாக, தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது இஸ்லாமிய ஆதரவாளர்களாக சித்தரித்துக் கொள்கிறார்கள்.

-வே. மதிமாறன்

31 thoughts on “ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`

  1. இளையராஜா தலித்துகளை பற்றி ஏன் பேசுவதில்லை? அவர் ஒரு “பார்பனராக” இருக்கிறாரே என்றால் மதிமாறனுக்கு கோபம் வருகிறது.ராஜாவின் இசையை மட்டும் பாருங்கள் அவர் எதற்காக தலித்தை பற்றி பேச வேண்டும்? இது போன்ற கேள்வியை நீங்கள் மற்ற இசையமைபாளர்களிடம் கேட்பீர்களா?என்று கேட்கிறார். உண்மைதான்.ஒருவர் தான் சார்ந்த துறையில் எப்படி செயல்படுகிறாரோ அதை வைத்து அவரை மதிப்பிடுவது தான் சரி.ராஜா ஒரு சகாப்தம் என்பதில் எவருக்கும் ஐயமில்லை.

    இது எல்லோருக்கும் பொருந்தும் தானே? அப்புறம் எதற்கு ரகுமான் மீது இந்த கொலைவெறி? அவர் இஸ்லாத்தை கேவலபடுத்துகிறார். பார்பன கைக்கூலி என்று அவர் மீது குற்றம் சுமத்துவது அயோக்கியத்தனம் இல்லையா?

    சர்வதேச அரங்கில் ஒரு விருதை பெற்று வரும் கலைஞனை பாராட்டாவிட்டாலு கேவலப்படுத்த கூடாது!

    அன்புடன்
    அப்துல்

  2. பழையப் பதிவுன் பின்னுட்டங்கள்

    19 பதில்கள் -க்கு “பார்ப்பனக் கை கூலி ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`”

    Abdul Kuddus (07:13:20) :

    ஏ. ஆர். ரகுமான் என்பதே ‘அர்ரகுமான்’ என்று அல்லாஹ்வின் பெயரைக்குரிப்பதே ஆகும். மேலும் இப்பெயர் அல்லாஹ்விற்கென்றே உரிய பெயராகும். மனிதர்களை இப்பெயர் கொண்டு அழைப்பது இஸ்லாத்தின் படி தவறு ஆகும்.

    முதல் கோணல், முற்றிலும் கோணல் இதுதான் அந்த இசை அமைப்பாளருக்கு பொருத்தமான அடைமொழியாகும்.

    ஜமாலன் (08:17:50) :

    //கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’ என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை. இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.
    கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.//

    சரியாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கள்.
    -ஜமாலன்.

    வெங்கட்ராமன் (08:40:28) :

    ஆகா,
    உங்க புத்தி கூர்மைய நினைச்சா அப்படியே புல்லரிக்குது.

    ரோஜா படத்த போன வாரம் மீண்டும் பார்த்தேன், இசுலாமியர்களுக்கு எதிராக அதில் எதுவும் சொல்லப் படவில்லை. ஏ.ஆர்.ரகுமான் ரோஜா படத்தில் அறிமுகப் படுத்தப் பட்டதற்கு காரணம் அவரது திறமை.

    இதுக்கும் மேல ரீமிக்ஸ் பாட்ட பத்தி சொன்னீங்களே.
    முடியல. . . . .

    thanjavurkaran (09:25:10) :

    ரகுமான் பார்ப்பனர் கைக்கூலியா? அவரே பாதி பார்ப்பனர் தான் ஐயா. அவங்கப்பா திலிப் ஒரு பார்ப்பனர். அம்மாதான் முஸ்லீம்.

    venkat (09:34:21) :

    பன்னாடை பாலசந்தர்,மாமேதை மனிரத்னம் போன்ற கழிசடைகளோடு G.V என்று ஒரு ஜென்மமும் இந்த லிஸ்டில்…

    அந்த காலத்தில் உடன் பணி புரிவோர் கலாமை “கலாம் ஐயர்” என்று தான் அழைப்பர்களாம் …

    பழநி (14:01:26) :

    மிக மிக உண்மையான கருத்து.

    kulanthai (19:18:26) :

    என்னத்தை சொல்றது, மேடை கிடைத்துவிட்டது என்று மீட்டிங்கில் உளறும் மடப்பய அரசியல்வாதிக்கும் உங்களுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஏதேனும் நீங்கள் கேட்டு ரகுமான் மறுத்துவிட்டாரா..>? கஷ்டம்பா..?

    செந்தழல் ரவி (06:10:16) :

    மணிரத்தினம் போன்ற ஒரு கேவலமான வியாபாரியை பார்க்க முடியாது…பிரச்சினைகளை படமாக்கி அதில் துட்டு பார்ப்பது தான் மணிரத்தினத்தின் பாணி…

    காஷ்மீர் பிரச்சினை – ரோஜா
    இந்து முஸ்லிம் பிரச்சினை – பம்பாய்
    ஈழப்பிரச்சினை – கண்ணத்தில் முத்தமிட்டால்
    சாதிப்பிரச்சினை – டும்டும்டும்

    என்று சொல்லிக்கொண்டே போகலாம்…

    இப்போது கூட கண்ணில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக்கொண்டிருப்பார்…எங்கே என்ன பிரச்சினை, அதை வைத்து படம் எடுத்து எப்படி துட்டு சம்பாதிக்கலாம் என்று…

    கட்டாயமாக படங்களில் தன்னுடைய சாதியை நுழைத்துவிடுவது மணிரத்தினம், ஷங்கர், பாலசந்தர் போன்ற இயக்குனர்களுக்கு கை-வந்த கலை…

    இப்போது “எவனோ ஒருவன்” கூட கிளம்பிவிட்டான்…இது போன்ற படங்களுக்கு “துட்டுக்காக” சீமான் போன்றவர்கள் துணை நிற்பது தான் வேதனை தருகிறது…

    நல்ல சாட்டையடியான பதிவு….

    Anonymous (07:22:49) :

    AR Rehman is a mudaliyar.not brahmin

    raja (04:56:22) :

    சரியாக சொல்லி இருக்கிறீர்கள்..

    @வெங்கட்ராமன், ரோஜா படத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லையா? உங்க கண்ணு என்ன நொல்லையா? அதில் காசுமீர் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கவில்லையா? அங்கே நிலை கொண்டு இருக்கும் இந்திய ராணுவத்தினரை புனிதர்களைப் போல் காட்ட வில்லையா? அங்கே ராணுவத்தாரால் கணக்குக் காட்டுவதற்காக தினசரி கொல்லப்பட்டு வரும் அப்பாவிகள் பற்றிய செய்திகள் உங்கள் காதுகளில் விழுந்ததில்லையா?

    அதிலும் இந்திய கொடி எரிக்கப்படுவதாகவும் பின்னனியில் ஒருவர் நமாஸ் செய்வதைப் போலவும் காட்டி இசுலாமியம் இந்திய நாட்டுக்கே எதிரானது போல சித்தரிக்கவில்லையா?

    ரோஜா திரைப்படம் பற்றி நிறைய சொல்லலாம்..

    போங்க சார்.. போய் ஒழுங்கா செய்தித் தாள் வாசிக்கும் பழக்கத்தையாவது வளர்த்துக் கொள்ளுங்கள்

    Hari (09:03:55) : திருத்து

    I wish to know the hidden message in “Alai Payuthey”, Ravi can u de-construct it for me?

    Also, Mr.Mathimaran, I have read ur book on “Bharathiya Janatha party”. It’s mind blowing. Please send it to “Noble jury members”, u may get a Noble prize.

    venkat (09:18:59) :

    ரோஜா படதில் சிறையில் இருக்கும் கைதியை “உங்க ஊருக்கு போகவேண்டியது தானே” என்று சுகாசினி ஸொரி…மதுபாலா சொல்லும்…

    எந்த ஊரு ? கைபர் போலனா?இசுலாமியர்கலும்,கிருத்துவர்கலும் சாதி கொடுமை தீர மதம் மாறியவர்கள்…இந்த சின்ன உண்மை கூட வா மேதைக்கு தெரியாம இருந்துருக்கும் ?

    முதலில் என் பெயரை மாற்றி தொலைக்கவேண்டும்…

    @ வெங்கட்ராமன்… ஒ அவனா நீ ??

    விஜய் (21:17:24) :

    சாட்டையடி……………..அது சரி கொஞ்ச நாள் இல்லாம லண்டன்ல பெரிய பிசின்னு சொல்லிட்டிருந்த இவர் ஏன் மறுபடியும் இங்கேயே வந்துட்டார்…………

    வந்ததும் வந்தார் விஜய காலி பண்ணிட்டார்…….எங்கேயோ குத்தாட்டம் போட்டுட்டு இருந்த அவருக்கு குத்தாட்டம் போட வாய்ப்பு கொடுக்காம படமும் ஓட பண்ணினது இவர் வேலை தான்.

    காபி அடிக்க எந்த பாட்டும் கிடைக்கல போல அவருக்கு……..

    anamikan (11:37:18) :

    சாதிப்பிரச்சினை – டும்டும்டும்
    The film has nothing to do with caste rivarly. What happens is the
    rivalry over two families that are related and of same caste.

    Anonymous (09:14:38) : திருத்து

    A.R.Rehaman is liked by youths like me.not that we dont like ilayaraja but in western beats,i think Ar Rehman is very good.i like his music for beats and humming introduced inbetween

    Surveysan (05:17:03) : திருத்து

    //கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’ என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை. இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.
    //

    செம காமடி இது

    4

    K. Mani (12:13:04) : திருத்து

    //இன்று கூட இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்க்கிற பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும், பா.ஜ.க., வை சேர்ந்த பலரும் – ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாமின் ஆதரவாளர்கள்தான்//

    I don’t belong to BJP or any other party. I don’t beleive in caste system of this country. But i am a strong supporter of Abdul Kalam. I don’t bother whatever you write about AR Rahman. But why did you drag in Abdul Kalam. He deserves highest respect from every Indian.

    Manthan

    this is too much…..

    plz dont magify this things…

    GuruPrasath

    அப்துல் கலாம் பற்றிய தங்கள் விமர்சனம் வேதனையாக உள்ளது

  3. //அப்துல் கலாம் பற்றிய தங்கள் விமர்சனம் வேதனையாக உள்ளது//

    -enakkum..

  4. இளையராஜா, பெரியார் திரைப்படித்திற்கு இசையமைக்க மறுத்ததோடல்லாமல் இழிவாகவும் பேசினார் என்பது நினைவிருக்கட்டும். பெரியார் இல்லை என்றால் இளையராஜா இன்றும் ‘முதிய சூத்திரன்’ தான். இளயராஜா, ரகுமான் மற்றும் கலாம் போன்றோர்கள் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்கின்றனர். அது ‘பார்ப்பனனை சாந்தப்படுத்தினால் தான் தனது வீரீய முன்னேற்றம் சாத்தியம்’. ஆக, இவர்கள் இவர்களது துறைகளில் வல்லவர்கள் தான். அதை நாம் குறை சொல்லக் கூடாது. ஆனால், இவர்களுக்கு சமுதாயப்பணி என்பதும் உண்டு. தங்களது மக்கள் நெருக்கத்தைப் பயன்படுத்தி, சமுதாயப் பணியை இவர்கள் ஆற்றுவது இல்லை. சுய நலக்காரர்கள்.

    கலாம் ஒரு கோமாளி. நமக்கு நல்லரசு வேண்டுமா, வல்லரசு வேண்டுமா? இந்த புரிதல் இல்லாத மனிதன் ஒரு ஞாணியா?

    Strength Respects Strength! அதனால் இந்தியா அணுகுண்டு தயாரிக்கலாம். ஆனால், ஈரான் தயாரிக்கக் கூடாது. அமெரிக்க கைக்கூலியான இந்தியா தனது நண்பனான ஈரானுக்கு எதிராக கண்டித்தபோது நமது ஞாணி தான் குடியரசுத் தலைவர்! வெட்கம் கெட்ட பதவிப்பிறியன். மனிதப் பதர்!

  5. //ஞாணியா?
    பதவிப்பிறியன்//-Dr. V. Pandian

    இவரென்ன துறைசார் முனைவர்?

  6. Mr.mathimaran,

    Do you have any knowledge…. if mr.maniratnam & k.balachandar like to destroy islam why they given a chance to a muslim(a.r.rahman). Rahman is india’s tressure… He is a genious.. and making india’s goodwill in international level.

    Dont speak like a dog…

    jeevan

  7. இளையராஜா தான் இசையமைப்பாளார் ரகுமான் ஒரு நல்ல SOUND ENGINEER அப்புற்ம் உலக விருது எவன் தருவது என்னை கேட்டால் ராஜபக்செ பாடலுக்கு நல்லா தாள்ம் பொடும்
    மன்மோகன் தான் சரியான இசையமைப்பாளார்

  8. //‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற அருமையான கற்பனைகள் கொண்ட பாடலை, ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான்.//

    நல்ல காலம் எஸ்.ஜே. சூர்யா பிராமணர் அல்ல. நீங்கள் எதற்கு எடுத்தாலும் சாதிகள் ஒழியவதை விட சாதியை வைத்தே வாழும் ஒருவராக இருக்கிறீர்கள் மதிமாறன்.

    நான் பிராமணன் அல்ல. இருந்தாலும் உங்கள் எழுத்துகளில் அதிகமான நல்லவை இருக்கின்றறன. அதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இந்த சாதி என்ற ஒரு மோசமான ஒரு கத்தியை வைத்துக் கொண்டு ஏன் அறுக்கிறீர்கள் என்றுதான் என்னால் புரியமுடியவில்லை?

    விசயத்துக்கு வருவோம்…..
    ரகுமானுக்கு விருது கிடைத்ததில் உங்களுக்கு மகிழ்ச்சியில்லை.
    இளையராஜாவுக்கு விருது கிடைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    பரவாயில்லை. இளையராஜா ஒரு இசைமேதை என ரரகுமானே சொல்லியிருக்கிறார்.

    இங்கே ஒரு இசையமைப்பாளர் ஒரு இயக்குனனரது விருப்பத்துக்கும் அவரது கதையின் தேவைக்குமே இசையமைக்கிறார்.
    எந்த இசையமைப்பாளரது பாடல்களுக்காகவும் படம் ஒன்றை உருவாக்க எந்த ஒரு தயாரிப்பாளரும் அல்லது
    எந்த ஒரு இயக்குனரும் முன்வருவதில்லை.

    மேலத்தேசங்களில் படத்துக்கான பின்னணி இசைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதைத்தான் விருது தேர்வுகளில் பார்க்கிறார்கள்.

    இங்கே அனேகர் பாடல்களை மட்டுமே கருத்தில் கொண்டு பேசுவது அவர்களுக்கு சினிமாவே தெரியாது என்பதையே காட்டி நிற்கிறது.

    ரகுமான் சில காரணங்களால் மேலைத்தேசத்துக்குள் நுழைந்துவிட்டார். அது அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளாகவும் இருக்கும். இந்தி பட வாய்ப்புகள் அதிகமாக அவரை மேலைத் தேசத்தில் அறிமுகப்படுத்ததியது. உண்மையில் தமிழ் ததிரைப்படங்களாலல்ல. தமிழ் மொழி மாற்றுப் படங்கள் வழியே அந்த இந்தி திரைப்பட வாய்ப்புகள் வந்தன என்பது வேறு விடயம்.

    ஆங்கிலப் படத்துக்கு இசையமைக்க அவரால் முடிந்ததற்கு காரணம் அந்த இயக்குனருக்கு வேண்டியதை அவரால் கொடுக்க முடிந்தது. அதை வேறு யாராவது பெற்றிருந்தால் அதை சரியாக செய்திருந்தால் அவருக்கும் கிடைத்திருக்லாம்?

    Slum Dog Millionaire திரைப்படம் மெருகேற பல விடயங்கள் ஒத்துழைத்துள்ளன. அதில் ரகுமமானின் இசையும் ஒன்று. ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்துக்கும் ஒரு சில மனிதர்களின் வெற்றிகளே காரணமாக இருக்கிறது. அதுபோல ரகுமான் அந்த திரைப்படத்துக்கு மட்டுமல்ல. இந்தியாவுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    இஸ்லாம் அவர் பின்பற்றும் மதமே அன்றி அவரது வெற்றிக்காக அவர் தழுவிக் கொள்ளவில்லை. அவரது உழைப்பே அவரது வெற்றிக்கு மார்க்கமாகியுள்ளது. அதை நாம் உணரவேண்டும்?

    உன் கையிலிருக்கும் ரொட்டியை சாப்பிட்டால்
    உன் பசி தீரும்.
    நீயும் உயிர் வாழ்வாய்.
    அதன் சரித்திரதத்தை அல்லது பின்னணியைத் தேடினால்
    நீ பசியோடு செத்துத்தான் போவாய்.

    நன்றி

  9. ஐயா, உங்களின் புனைபெயரை என்னால் குறிப்பிட இயலாது. மன்னிக்க!

    எனக்கு இசைத்துறையைப் பற்றி ஞாணம் இல்லை. ஆனால், வெறும் காப்பியடித்தே ஒருவனால் பெரிய ஆளாக முடியாதென்பது எனது கருத்து. அவர்களிடம் ‘ஒரிஜினாலிட்டியும்’ உண்டு என்பது கருத்து. அவ்வளவே! சுஜாதா ஒருமுறை, அடுத்தவர் கதைகளையும் ஒரு எழுத்தாளன் படிப்பதால் அவற்றின் தாக்கத்தை தனது கதைகளில் தவிற்பது கடினம்’ என்பதுபோல ஒப்புக்கொண்டது போல, இசைத்துறையிலும் அதற்காண வாய்ப்புகள் அதிகம் தானே!

  10. மதிமாறன், ஒரு நல்ல இசை ரசிகன் என்ற வகையில் இந்தப் பதிவிற்கு என்னுடைய பின்னூட்டத்தை இடுகிறேன்.

    மெல்லிசை மன்னர், இளையராஜா, ரகுமான் என்று வரிசை வந்தாலும் இவர்கள் மூவருக்குள்ளும் இருக்கும் மரியாதையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இசைத்தலைமுறை இடைவெளி இருந்தும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மெல்லிசை மன்னர் பாட முடிகிறது என்பது இவர்களுக்குள் இருக்கும் மதிப்புதான் காரணம். இளையராஜாவும் மெல்லிசை மன்னர் இசையில் பாடியிருக்கின்றார். மெல்லிசை மன்னரும் இளையராஜா இசையில் பாடியிருக்கிறார். சிம்பொனி இசையமைத்ததும் இளையராஜா அதை முதலில் மெல்லிசை மன்னருக்குத்தானே போட்டுக் காட்டினார்.

    ரகுமானுக்கு விருது கிடைத்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. ஒரு தமிழன் பெற்ற விருது என்ற வகையில் நான் இதைப் பார்க்கிறேன்.

    ரீமிக்ஸ்சிற்கு வருவோம். தொட்டால் பூ மலரும் பாடலுக்குச் செய்தது ரீமிக்ஸ் அல்ல என்று மெல்லிசை மன்னரே ஒப்புக் கொண்டு விட்டாரே. அந்தப் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு வேறொரு மெட்டு போட்டிருக்கிறார். அழகிய தமிழ் மகனில் பொன்மகள் வந்தாள் என்று போட்டது ரீமிக்ஸ். ஆனால் அது ரகுமான் இசையில்லை. அந்த ரீமிக்சை வேறொருவர் செய்தார் என்று கேள்விப்பட்டேன்.

    இரண்டாம் வகையில் சொல்லப்பட்ட இது போன்ற ரீமிக்சுகளை மெல்லிசை மன்னரும் கடுமையாகச் சாடியிருக்கிறார். தான் உயிரோடு இருக்கும் போது தானிட்ட மெட்டுகளுக்கு நடக்கும் வன்கொடுமையைக் கேட்கச் சகிக்காமல் அவர் ஆத்திரப்பட்டது ஒப்புக்கொள்ள வேண்டிய அறச்சீற்றம்.

  11. ஏ ஆர் ரகுமான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் புதிய முகம் என்று தான் அறிகிறேன். ரோஜாவும், பம்பாயும் பார்ப்பன புத்தியின் திரை வடிவம் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக ஏ ஆர் ரகுமான் பார்ப்பன அடிவருடி என்பதை ஏற்பதற்கு கடினமாக உள்ளது.

    ஏ. ஆர். ரகுமான் இஸ்லாமிய வழிமுறையையை தழுவியவர். தழுவியதோடு மேடை தோறும் எல்லா புகழும் இறைவனுக்கே என்று முழங்கியும் வருபவர். இது ஆர் எஸ் எஸ் மைண்டட் மக்களுக்கு எரிச்சலூட்டும் செயல். வீண் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டியது வருகிறதே என்று அவர்கள் வாயை அடைக்க வந்தது தான் வந்தே மாதரம்.

    அவர் இஸ்லாமிய சமூகத்துக்கு குறிப்பாக நாகூரில் ஒரு இஸ்லாமிய பாடசாலை தொடங்கி தொடர்ந்து சிறப்பாக நடத்தியும் வருகிறார். இப்படி எத்தனையோ நல்ல காரியங்களை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.
    தொட்டால் பூ மலரும் என்ற வாலியின் பாடலை ஏ ஆர் ரகுமான்
    ரீமிக்ஸ் செய்யவில்லை ரீடியுன் செய்திருப்பார். பொன்மகள் வந்தால் தான் ரீமிக்ஸ். இது தவறா சரியா என்று சொல்ல தெரியவில்லை.

  12. இளையராஜாவை பற்றி ரகுமான் என்ற இசை கோமாளி சொல்லித்தான் தெரிய வேண்டுமா ? , பலர் வரிசைபடுதுகிறார்கள …. விஸ்வநாதன் , இளையராஜா , ரகுமான் … இளையராஜா இசையின் தரம் தெரிந்தவர்கள் அவரை எந்த இடத்தில் வைத்துள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் , குரு படத்திற்கெல்லாம் தேசிய விருது வழங்கியதன் மூலம் அது எவ்வளவு தரம் தாழ்ந்தது என்பது தெளிவாகிறது , இப்போது கோல்டன் குளோப் விருதும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . நான் கடவுள் சொல்லும் இசை கடவுள் யார் என்று . இளையராவின் இசைக்கு விருது வழங்கி கௌரவிக்கும் அளவிற்கு இந்தியாவில் எந்த விருதும் கிடையாது என்று நினைத்து கொண்டிருந்தேன் அனால் சர்வதேச அளவிலும் அதே நிலை தான் . இளையராஜா இசை அமைக்க வராவிட்டால் எந்த துறைக்கு சென்றிருப்பார் ? இந்த கேள்விக்கு பதில் எழுதும் முன் , அவர் இசை அமைக்க வராவிட்டால் இசைக்கு என்ன நேர்ந்திருக்கும் ? .

  13. Jeevan
    If you read Mr.Mathimaran’s other articles in this blog, you will find that most of his topics touch cinema(even more than socially relevant topics)
    In one post, he had even given a detailed list of heroines who belonged to one particular caste!!! Also, he seems to find the caste of every person associated with cinema – be it music director, film director, hero,heroine , villain, story writer,song writer,dance director and what not!

  14. //புதிய பறவை’ படத்தில் “உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்” என்று ‘ஹரிகாம்போதியில்’ மெல்லிசை மன்னர் இசையமைத்தப் பாடலை, இசைஞானி இளையராஜா ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ என்ற படத்தில், பழைய பாடலின் பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி, “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.
    இது முன்னர் இருந்த மேதைகளுக்கு, அதே துறையைச் சார்ந்த மேதைகள் செய்த கவுரம்.

    தனது சொந்த ஊரான பண்ணை புரத்தில் தனக்கு நேர்ந்த சாதிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் பெரியார் தொண்டர்கள் தான் என்பதை மறந்தவர் தான் இளையராஜா. நண்பர் பாண்டியன் கூறியது போல் பெரியார் படத்திற்கு இளையராஜா இசையமைக்க மறுத்ததன் காரணம் என்ன? இளையராஜா திறமைசாலிதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவரை மதிப்பிற்குரியவராக ஏற்க முடியவில்லை.

  15. //‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற அருமையான கற்பனைகள் கொண்ட பாடலை, ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான்.//

    களவாடவில்லை. அனுமதி பெற்றது என்று மெல்லிசை மன்னரே கூறி உள்ளார்.

  16. //Dr. V. Pandian (16:56:02) :

    ஐயா, உங்களின் புனைபெயரை என்னால் குறிப்பிட இயலாது. மன்னிக்க!

    எனக்கு இசைத்துறையைப் பற்றி ஞாணம் இல்லை. ஆனால், வெறும் காப்பியடித்தே ஒருவனால் பெரிய ஆளாக முடியாதென்பது எனது கருத்து. அவர்களிடம் ‘ஒரிஜினாலிட்டியும்’ உண்டு என்பது கருத்து. அவ்வளவே! சுஜாதா ஒருமுறை, அடுத்தவர் கதைகளையும் ஒரு எழுத்தாளன் படிப்பதால் அவற்றின் தாக்கத்தை தனது கதைகளில் தவிற்பது கடினம்’ என்பதுபோல ஒப்புக்கொண்டது போல, இசைத்துறையிலும் அதற்காண வாய்ப்புகள் அதிகம் தானே!//

    வணக்கம் பாண்டியன் ஐயா
    எனது பெயர் அஜீவன்.

    ஏழு சுவரங்களுக்குள்தான் இசை அடக்கம்.
    அதை மீற முடியாது.

    பழைய பல இசையமைப்பாளர்கள் வேற்று மொழி பாடல்களின் பாதிப்பை பெற்று இசையமைத்துள்ளார்கள். விஸ்நாதன் அவர்களது இசையமைப்பில் பட்டத்து ராணி பார்க்கும் பார்வை (படம் : சிவந்த மண்) ஒரு ஸ்பானிய பாடலின் மறு பதிப்பு.

    அதுபோல எத்தனையோ?

    மீண்டும் சொல்கிறேன் மேலத்தேசத்தில் திரைப்படத்தின் பின்னணி இசை அதாவது film background music க்காகத்தான் விருது வழங்கப்படுகிறதே தவிர பாடலுக்கு அல்ல. பாடல்ககளுக்காக Music awards தனியே உண்டு.
    http://www.royaltyfreemusic.com/background-music.htm

    ரகுகுமானின் பின்னணி இசைக்கே விருது கிடைத்தது.

  17. // Jeevan
    If you read Mr.Mathimaran’s other articles in this blog, you will find that most of his topics touch cinema(even more than socially relevant topics)
    In one post, he had even given a detailed list of heroines who belonged to one particular caste!!! Also, he seems to find the caste of every person associated with cinema – be it music director, film director, hero,heroine , villain, story writer,song writer,dance director and what not!//

    ஐயா, நான் இந்தத் தலைப்புக்காக பேசிக்கொண்டிருக்கிறேன். ஏனைய தலைப்புகளுக்காக அல்ல. நன்றி.

  18. “”””பார்ப்பனக் கைகூலியான ஏ.ஆர். ரகுமான்.””””””””

    கலைஞனை ஜாதி மதம் பிரித்து பார்க்காதே

  19. //கலைஞனை ஜாதி மதம் பிரித்து பார்க்காதே//

    சரியாக சொன்னீர்கள் பிரபு.

    கறுப்பு இனத்தவரான ஒபாவை ஏற்றுக் கொண்ட பெரும் பாலான அமெரிக்க மக்களையும் , அவர் சார்ந்த கறுப்பு இன மக்களையும் ( கறுப்பின மக்கள் பேசும் மொழிகளும் கலாச்சாரங்களும் பல நூறு… உதாரணத்துக்கு இந்தியாவில் வாழும் மக்களின் பல்லின கலாச்சாரங்கள் போல்…) ஒபாவுக்கு எதிராக போட்டியிட்டு தோற்று தன் நாட்டின் நலனுக்காக வேற்றுமை பாராது இணைந்துள்ள ஏனைய தலைவர்களையும் பார்த்து நமக்கு பாடம் புகட்டுவோர் பாடம் கற்க வேண்டும்.

    நன்றி.

  20. only one sun, one planet if another one comes in, its like god(nature), created against those….

    ha ha ha nice joke…..

    come on dont look every thing from a same view….. even coin has 2 different faces.

    They are making movie out of lastest issue and all those movies are blockbuster means, some fact or most of the people likes it rite…..

    As u stated, earlier remix is some thing respect yes of course even now,

    “Thottal Poo Malarum” old song most of the young generation dont knw, now AR’s remix work help the song to reach all the modern generation….

    All the music directors knows, that song was from old movie… and did AR claimed tat its my one song….. ?

    ha ha ha

    even for remixing that songs some amount was paid to those old movie maker (IP, intellectual property owner)…

    If one tamilan is growing dont support,, at least to pull their legs while climbing up…..

    COME OUT AND SEE WHERE THE WHOLE WORLD IS MOVING…
    (If u r not evolve as per darwin’s theory, u will not survive at all…..)

  21. Mr.Mathimaran,
    Nice to have stumbled upon your posts.Keep the work going.Caste plays the major role in everything we do or even think. As long as Caste lives the divisions will exist and India will cease to exist.Celebrate Casteism!
    Bhupathi

  22. I do agree that Kalam is a fool to have played into the hands of BJP.
    He has done injustice to millions of poor indians by his contributions to Defence related works. He is not as good as he portrays to be.
    Bhupathi

  23. எம்.எஸ்.விஸ்வநாதனோ, இளையராஜாவோ, ஏ.ஆர்.இரகுமானோ, யாராக இருந்தாலும் அவர்களின் இசையை மட்டும் இரசியுங்கள். இசையமைப்பாளர்களை வெறித்தனமாக இரசிக்க ஆரம்பித்தால், இப்படித்தான் கன்னா பின்னாவென்று யோசித்து மற்றவர்களின் மனதை புண்படுத்துவீர்கள்.

    இசையை பற்றிய பிளாக் என்று நினைத்து படிக்க வந்தேன். ஏமாற்றிவிட்டீர்கள். ஸாரி!

  24. எம்.எஸ்.விஸ்வநாதனோ, இளையராஜாவோ, ஏ.ஆர்.இரகுமானோ, யாராக இருந்தாலும் அவர்களின் இசையை மட்டும் இரசியுங்கள். இசையமைப்பாளர்களை வெறித்தனமாக இரசிக்க ஆரம்பித்தால், இப்படித்தான் கன்னா பின்னாவென்று யோசித்து மற்றவர்களின் மனதை புண்படுத்துவீர்கள்.

    super………..

  25. சரியான மதிப்பீடு. வாழ்த்துக்கள் மதிமாறன்.
    யோகன்
    23.072011

  26. தொட்டால் பூ மலரும் பாடல் ரீமிக்ஸ் அல்ல. அது அந்த பாடலை இயற்றிய வாலியின் வரிகளை வைத்து ரீ-டியூன் செய்யப்பட்டது.

  27. inge nadandha karuthu uraiyaadalgal enaku aarokyamana onraaga theriyavillai… enaku miga varuthamaaga uladhu… rahman matrum ilayarajavai compare seeidhu pesuvadhu miga abathamanadhu, iruvarin isaiyum thanitharam udayadhu… tamil isaiyamaipaalargalil iruvarume miga mukiyamanavargal… vendumenil ipadi solalam, ilayarajavin munodi m s v bola, rahmanin munodi ilayaraja… oruvar vangum virudhu avargaladhu munodigalai than sendradaiya vendum enpadhu en karuthu…

  28. ILAYARAJA IS ALSO THE PERFECT SERVER OF PAARPAN:

    what about ilayaraja.he is also 100% server and slave of paarpan.as a music director he should have composed for periyar film.but he refused.he is composing for bharathi and ramar rajayam(recent film)but he has refused for periyar.no personnel things intervention should be their on your official.officaily ialayraja is the musician and misic composer.as a music composer he should have composed for PERIYAR FILM.so he is also the perfect server of PAARPAN.

  29. ilayaraja periyar padhai isaiyammaikka maruthu bharathi padhirkku isai amaitharee adhaipathi mathimaran yen solla marukkiraar.ilayaraja pirappal mattume dalit matrapadi avar oru paarpanar.periyaristaana mathimaran oruvarain pirappin adayalathai vaithu vakkalathu vaanguvadhu thavaru avargalin sithanai vaithu seyalpaadugalai vaithu vakkalathu vaanga vendum.pirappin adipadayil oruvarai vakkalathu vangi nayapadithinaaal naamum oru paarpane

Leave a Reply

%d bloggers like this: