சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை;`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

kosu

நாட்டுமக்களுக்கு எந்தவகையிலும் உதவாத, அல்லது தேவையில்லாத ‘சுந்தரராமசாமி’ என்பவருடைய எழுத்துக்களை நாட்டுடமை ஆக்கியிருக்கிறது, தமிழக அரசு.

(கழக கவர்மெண்டல இருக்கிற யாரோ ஒரு சுந்தரராமசாமியின் ரசிகரின் முயற்சியால் இந்த வௌங்காத வேலை நடந்திருக்கும்போல)

தமிழக அரசின் இந்தச் செயலால் ஆடிபோயிருக்கிறது, காலச்சுவடு நிர்வாகம். தனது கண்டனத்தை கடிதமாக புலம்பியிருக்கிறார், சுந்தரராமசாமியின் சொத்திற்கும், எழுத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கும் வாரிசான கண்ணன்.

‘என்னங்க இது, நாட்டுமையாக்கப்பட்டால் அவருடைய எழுத்து நிறையபேரைபோய் சேரும். மகிழ்ச்சி அடையவேண்டிதை விட்டுவிட்டு, ஏன் இப்படி வருத்தப்படுறாரு?’ என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் காலச்சுவடு வெளியிடும் புத்தகத்தின் விலையைப் பார்த்தால், இப்படி நினைக்க மாட்டீர்கள். கண்ணனின் கவலைக்கான காரணம் புரியும்.

கண்ணனின் கவலையை கருத்தில் கொண்டு நேற்று தமிழக அரசு ‘யாருடைய நூலையும், அவர்களின் குடும்பத்தாரின் விருப்பதிற்கு எதிராக நாட்டுமை ஆக்காது. விருப்பமில்லாவிடின் வேண்டாம் என்று சொல்லிவிடலாம்’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறது.

தேவையா இது?

‘பெரியார் நூலை நாட்டுடமை ஆக்கவேண்டும்’ என்று நம்ம கழக கவர்மெண்ட்டுக்கிட்ட கேட்டால், அது சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒரு ‘பெரியவர்’ நூலை நாட்டுமை ஆக்கி வைச்சிருக்கு. நாம ‘பெரியார்’ என்று சொன்னது, கவர்மெண்ட் காதுல ‘பெரியவர்’ என்று விழுந்து தொலைச்சதோ என்னவோ?

ஈழப்பிரச்சினைதான் சரியா காதுல விழமாட்டுங்கது, நாம “ஈழ மக்களை காப்பாற்றுங்கள்” என்று சொன்னால், கழக கவர்மெண்ட் காதுல “காங்கிரஸ் அரசை காப்பாற்றுங்கள்” என்று விழுந்து தொலைத்தது போல், நாம பெரியார் ஈ.வெ.ராமசாமின்னு சொன்னது, அது காதுல ‘பெரியவாள் சுந்தரராமசாமி’ன்னு விழுந்து தொலைச்சதோ என்னவோ?

பெரியாரை திட்டுறதுக்குன்னே ஒரு பத்திரிகை ஆரம்பித்த ஆளுங்களோட புக்கெல்லாம் நாட்டுமை ஆகுது. ஆனால்……

(ஈழப்பிரச்சினையில் இருந்து பெரியார் நூல்கள் வரை, திமுக காரங்க கூட தன்னுடைய அதிருப்தியை பகிர்ந்துக்கிறாங்க. ஆனால், வெளியிலே இருந்து ஆதரவுக் கொடுக்கிற இந்த அறிவாளிகள் தொல்லைதான் தாங்க முடியல.)

என்ன கர்மமோ? என்ன இலக்கியமோ? என்ன எழவோ? என்ன நவீன எழுத்தோ?

500 புக்குதான் அடிக்கிறாங்க. ஆனால், அகில இந்தியா முழுக்க பேமஸ் ஆயிடுறாங்க. அது என்ன மாயாமோ தெரியலை?

ஆளே இல்லாத கட்சிக்கு தலைவர் சுப்பிரமணியசுவாமி. ஆனா, அவருதான் அகில இந்திய மக்கள் தலைவர்போல், இந்த பத்திரிகைகள் அவரு எதையாவது முக்கி முக்கி பேசுனாக்கூட முக்கியத்துவம் தருவதுபோல், இந்த ‘500 பிரதிகளும்’ அப்படி ஒரு இலக்கிய உலக சுப்பிரமணிய சுவாமியாக திகழுது.

எதுக்கு இந்த அரசு, அந்த ‘புளியமரத்துப் பேயை’ போய் எடுத்து தோள்ள போடுவானேன். தொல்லைப்படுவானேன்?

ஒரு படத்துல கவுண்டமணி, “நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா” என்று ஓமக்குச்சி நரசிம்மனைப் பார்த்து, ‘பசி’ நாராயணன் கிட்ட சொல்லுவாரு. அதுபோல,

“நாராயணா, இந்த ‘ இலக்கியவாதிகள்’ தொல்லை தாங்க முடியலடா” என்றுதான் சொல்லதோன்றுகிறது.

கவுண்டமணி இதன் தொடர்ச்சியாக அந்தப் படத்துல சொன்ன அடுத்த வசனம், வன்முறை நிறைந்தது. அதை நாம் உதாரணமாக சொல்லமுடியாது, அதுஇதான்:

“நாராயணா, இந்தக் கொசுவை மறுந்தடிச்சு கொல்லுங்கடா”

12 thoughts on “சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை;`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

  1. கவுண்டமணி, வடிவோல் போன்றோரின் வசங்கள் அதிகம் பயன்படுத்துகிறீர்களே.. அதுசரி இத்தருணங்களில் எளிதாய் அறிந்து கொள்ள, பதிந்து கொள்ள நல்ல பயன் தருகிறது.

    கொசுமருந்து எதாவது சிபாரிசு செய்யலாமே ?!

    வாழ்க தமிழுடன்,
    நிலவன்.

    http://eerththathil.blogspot.com

  2. // “நாராயணா, இந்த ‘ இலக்கியவாதிகள்’ தொல்லை தாங்க முடியலடா” //

    //“நாராயணா, இந்தக் கொசுவை மறுந்தடிச்சு கொல்லுங்கடா“//

    //‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’ //

  3. தோழரே, மீண்டும் மீண்டும் கருணாநிதியிடம் பெரியார் நூல்களை அரசுடமை ஆக்குங்கள் என்று கோரிக்கை வைக்க வேண்டாம். அவருக்கு கோவம் வந்தால் பெரியார் நூல்களை தடை செய்துவிடுவார். அவர் இன உணர்வாளரா, மொழி ஆர்வலரா என்ற நிலையில் இருந்து “மனிதர் தானா” என்ற நிலைக்கு சென்று பல வாரங்கள் ஆகிவிட்டது .

    இந்த சமயத்தில் சுந்தர ராமசாமியும் அவரது படைப்பு பற்றியும் கொஞ்சம் இங்கே

    http://www.keetru.com/literature/essays/sundararamasamy_index.php

  4. இந்த இழவு பிடிச்சவனுங்க நூலை எல்லாம் யாருங்க கேட்டது. அந்த பார்ப்பண சுந்தரசாமி அப்படி என்ன எழுதி கிலிச்சிருக்கான்.

    உங்களின் பதிவு சுந்தரராமசாமியை எளிதில் புரிந்து கொல்ல (;) உதவியது நன்றி.

  5. //கழக கவர்மெண்டல இருக்கிற யாரோ ஒரு சுந்தரராமசாமியின் ரசிகரின் முயற்சியால் இந்த வௌங்காத வேலை நடந்திருக்கும்போல//

    சுந்தர ராமசாமியின் ரசிகர் செய்த வேலையில்லை. காலச்சுவடின் நூலக ஆர்டரை நிறுத்தி வைத்து காலச்சுவடின் கழுத்தில் அடித்த குழுவின் இன்னொரு முயற்சி இது.

    புத்தகத்தின் விலை குறித்துப் பேசும் போது அதன் தரம் குறித்து பேச வேண்டியிருக்கிறது நண்பரே. தமிழில் தரமான தாளில் புத்தகங்களை கொண்டு வரும் பெரும்பாலான பதிப்பகத்தார் ஒரே அளவிலான விலையைத் தான் முன் வைக்கிறார்கள்.

  6. சுந்தரராமசாமினு என் கூட ஒரு பையன் ஒன்னாங்கிளாஸ் வர படித்தான்..

    அப்ப என் புத்தகத்தை திருடிக்கிட்டு போய்டான்…

    அந்த புத்தகத்தையா கவர்மெண்ட்டு நாட்டுடமை ஆக்கியிருக்கு…

    உழைக்கும் பாட்டாளிகளே!

    மூலதனம்;உழைப்பு நம்முடையது…

    லாபமோ சுந்தர பொரிக்கிகளுக்கு …(ஆமாங்க நம்ம வரிப்பணம்)

  7. என்னத்த சொல்ல அவரு வாயி ரொம்ப நாறுது

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading