பா.ஜ.க. அலுவலகம் மீதான தாக்குதலும் சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலும்

 dmk

‘யாரா இருக்கும் அது?’ என்ற உங்களது,  கட்டுரையில் எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கியதைப் பற்றி குறிப்பிடவில்லையே? அதுதானே எல்லாவற்றிற்கும் காரணம்?

-கே. குமார்

 

சுப்பிரமணய சுவாமி, மீது நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டத் தாக்குதலை மட்டுமல்ல, முதல்வரின் தலையை வெட்ட சொன்ன வேதாந்திக்கு கண்டனம் தெரிவித்து, திமுகவில் இருந்த சில உண்மையான உணர்வாளர்கள், சென்னையில் பா.ஜ.க., அலுவலகத்தைத் தாக்கியதையும் நான் குறிப்பிடவில்லை.

 

தங்கள் தலைவரின் தலையை வெட்ட சொன்னதற்காக, தங்களின் கோபத்தை, திமுககாரர்கள் வெளிப்படுத்தியதற்கு என்ன நியாயம் இருந்ததோ, அதே நியாயம் ஈழத்தமிழர்கள் கொலையை நியாயப்படுத்தி பேசிய சுப்பிரமணிய சுவாமியை அடித்திருந்தால் அதிலும் இருப்பதாக சில நண்பர்கள், சொன்னார்கள்.

 

அவர்கள் மேலும் சொன்னார்கள், `அப்போது எப்படி சட்டம் ஒழுங்கு கெடவில்லையோ,அதுபோல் சு. சுவாமி தாக்கப்பட்டதாக சொல்லப்பட்டபோதும் சட்டம் ஒழுங்கு கெடவில்லை` எனறு.

 

அது மட்டுமல்ல, பெரியவர் ஆறுமுகசாமியின் கையை அடித்து உடைத்த, தீட்சிதர்களின் கையையும் அடித்து உடைத்திருந்தால் அதுவும் நியாயம்தான்,  என்றும் சிலர் சொன்னார்கள்.

 

நியாயமா இருக்கா? நீங்கதான் சொல்லணும்.

 

குறிப்பு:

 

இந்த தீட்சிதர்கள், சுப்பிரமணிய சுவாமியைப் பார்த்தற்குப் பதில், தமிழக முதல்வரை போய் பார்த்து,

‘அய்யா, சிதம்பரம் கோயில் அறநிலையத் துறைக்கு கைமாறியது, நல்ல அறிகுறியல்ல. அது உங்கள் ஆட்சிக்கே ஆபத்து. பாருங்கள் கை மாறியவுடன் எவ்வளவு கெடுதல்கள், உங்கள் ஆட்சிக்கு ஏற்படுகிறது. உங்கள் ஆட்சி கவிழ்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னால் போதும், தடியடி செஞ்சி, தமிழக அரசே, கோயிலை மீட்டு தீட்சிதர்களிடம் ஒப்படைத்துவிடும், என்றும் சிலர் சொன்னார்கள்.

9 thoughts on “பா.ஜ.க. அலுவலகம் மீதான தாக்குதலும் சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலும்

 1. we had only one traitor:
  ETTAPPAN!
  now one can see so many ETTAPPANS in TN!
  to occupy the CHAIR,people like karunanidhi/jeya will do all dirty tricks:
  Street dogs are much better than these gang!

 2. சு.சாமிக்கு நீதிமன்ற மரியாதை ஒன்றும் புதியது அல்ல! ஏற்கனவே அதிமுகவின் மகளிர் அணியினரின் புடவை அவிழ்ப்பு மரியாதையைப் பெற்ற சு.சாமிக்கு அழுகிய முட்டை வீச்சு எல்லாம் பொருட்படுத்தவே மாட்டார். மானங்கெட்ட ஈனப்பிறவிக்கு ஏது அவமானம்?

 3. 🙂

  நல்ல யோசனை சொல்லி தந்தீங்க…செஞ்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

  //‘அய்யா, சிதம்பரம் கோயில் அறநிலையத் துறைக்கு கைமாறியது, நல்ல அறிகுறியல்ல. அது உங்கள் ஆட்சிக்கே ஆபத்து. பாருங்கள் கை மாறியவுடன் எவ்வளவு கெடுதல்கள், உங்கள் ஆட்சிக்கு ஏற்படுகிறது. உங்கள் ஆட்சி கவிழ்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னால் போதும், தடியடி செஞ்சி, தமிழக அரசே, கோயிலை மீட்டு தீட்சிதர்களிடம் ஒப்படைத்துவிடும், என்றும் சிலர் சொன்னார்கள்.//

 4. //முதல்வரை போய் பார்த்து, ‘அய்யா, சிதம்பரம் கோயில் அறநிலையத் துறைக்கு கைமாறியது, நல்ல அறிகுறியல்ல. அது உங்கள் ஆட்சிக்கே ஆபத்து. பாருங்கள் கை மாறியவுடன் எவ்வளவு கெடுதல்கள், உங்கள் ஆட்சிக்கு ஏற்படுகிறது. உங்கள் ஆட்சி கவிழ்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னால் போதும்,//
  அய்யா மதிமாறன். நீங்க அவிங்க ஆளா? அவ்வ்வ்வ்வ்வ……
  ஐயைய்யோ. இந்த மாதிரி சொல்லிக் கொடுத்து, காரியத்த கெடுத்துருவீங்க போலிருக்கே.:))

 5. Mathi,
  Your PS advice is a potant one. Please, do not give such ideas to MK. As Sultan has quipped, it might happen!

 6. //தங்கள் தலைவரின் தலையை வெட்ட சொன்னதற்காக, தங்களின் கோபத்தை, திமுககாரர்கள் வெளிப்படுத்தியதற்கு என்ன நியாயம் இருந்ததோ, அதே நியாயம் ஈழத்தமிழர்கள் கொலையை நியாயப்படுத்தி பேசிய சுப்பிரமணிய சுவாமியை அடித்திருந்தால் அதிலும் இருப்பதாக சில நண்பர்கள், சொன்னார்கள்//

  உண்மை தான். தனது ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாத வரை
  தமிழகத்தில் எது நடந்தாலும் முதல்வருக்கு பாதிப்பு இல்லை.

  ஆகா!! இவரல்லவா சிறந்த முதல்வர்???????

Leave a Reply

%d bloggers like this: