ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’

maheswaran

ழத் தமிழரை பலியிட்டு பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல்என்பதுபோல் ஓட்டோ ஓட்டுஎன்று தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் திருவிழாவில தீவிரமாக இருக்கின்றன.

இதற்கு முன் போரை நிறுத்து என்று தீவிரமாக நடந்த போரட்டங்கள் தேர்தல் நெருங்க நெருங்க சுத்தமாக நின்று போனது. யாரும் தமிழர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை நிறுத்துவது குறித்து பேசுவதுகூட இல்லை. வசனங்களும் நடிப்புகளும் மட்டுமே ஈழத்தமிழர்களுக்குஆதரவாகவருகிறது.

தேர்தல் முடிந்தால் எல்லாவற்றையும் முடிப்போம் என்கிறார்கள் வசனகர்த்தாக்களும், நடிகையும், துணை நடிகர்களும். ஆனால் ஈழத்தில் அதற்குள் எல்லோரும் முடிந்துவிடுவார்கள்.

வழக்கமாக தமிழ் தமிழர் குறித்து வீரவேசமான வசனங்களை பேசும் வசனகர்த்தா, இந்த முறை வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய வசனங்களை பேசியதால், நடிகைக்கு கொண்டாட்டம்.

நடிகையின் வசனமோ பஞ்ச் டயலாக்காக பறந்து வந்து வாக்காளர்களையும்உணர்வாளர்களையும் தன் வசப்படுத்துகிறது. இந்த முறை அவர் போட்டு இருக்கிற இன உணர்வு வேடத்துக்கு நல்ல வரவேற்பு. அவரின் நடிப்பு தத்துரூபமாக இருக்கிறது என்று பலதரப்புகளில் இருந்தும் பாராட்டுக் கிடைக்கிறது. அவார்டு கிடைத்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. (தேர்தல் வெற்றி)

வசனகர்த்தாவின் உணர்ச்சிப் பொங்கும் நடிப்போ மிகைப்படுத்தப்படட நடிப்பாக மாறி சென்டிமெண்டுக்குப் பதிலாக நகைச்சுவை உணர்வாக மாறிவிட்டது.

நடிகையின் தமிழ் உணர்வால் வசனகர்த்தா கோபத்தில் இருக்கிறார். இனி தமிழ் உணர்வு என்று சொல்வதே தேச துரோகம் என்று அறிவித்துவிடுவார் போலும். (ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் கொடுத்தாலே குற்றம்)

நடிகைக்கு வசனம் எழுதி கொடுக்கும் துணை நடிகர்கள், கொண்டாடத்தில் இருக்கிறார்கள். நடிகைதான் நாடாளப் போகிறார் என்று.

ஆனால் ஈழத்தமிழர்களோ இப்போதுதான் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள். தமிழகத்திலோ எரிகிற வீட்டில் புடுங்கற வரைக்கும் லாபம் என்று அலைகிறார்கள் அரசியல்வாதிகள்.

தனது இறுதி சொற்பொழவில் சும்மாவா சொன்னார் தந்தை பெரியார்: “ஓட்டு என்றால் எதை எதை கொடுக்குறான்? பெண்டாட்டி தவிர எல்லாவற்றையும் கொடுக்கிறானே” என்று, (பெரியார் களஞ்சியம், ஜாதிதீண்டாமை பாகம் 15 பககம் 347)

ஏப்ரல்30, 2009 அன்று எழுதியது.

11 thoughts on “ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’”

 1. யார் காலை யார் நக்குவது
  நக்குவதற்கு போயஸ்தோட்டத்துக்கும்
  கோபாலபுரத்துக்குமென
  சிறுத்தையும் மாங்காயும்
  புலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு
  படையெடுக்க

  ஈழத்திலோ
  ரசாயன எரிகுண்டு
  தமிழகத்திலோ
  செயாவுக்கு பூச்செண்டு…..

  “காங்கிரசை புறக்கணிபோம்”
  காங்கிரசை புறக்கணித்து
  இந்தியச்சாக்கடையில் விழச்சொல்கிறார்கள்
  புறக்கணிக்கப்படவேண்டியது
  காங்கிரசு மட்டுந்தானா இல்லை இந்தியமா?………..

  செருப்புகள் காத்திருக்கின்றன
  இப்போது தவறவிட்டால்
  மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்காது
  வாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி
  பன்றிகளுக்கு செருப்புமழையை
  பரிசாய்த்தருவோம் – பரிசோடு
  கொசுறாக போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்

  kalagam.wordpress.com

 2. இன்று ஜனநாயக்ம் தன் அர்த்தத்தை மாற்றிக்கொண்டது போலும். இறையாண்மை பற்றி கவலை படும் இன்றைய அரசியல்வாதிகலுக்கு ஜனநாயகம் பற்றி கவலை இல்லை.தெர்தலில் வாக்கு பெற அடுத்த நாட்டுக்குல் ராணுவத்தை அனுப்பி ஈழத்தை மீட்டு தருவேன் என்று ஜெயலலிதா சொல்லும் போது இறையாண்மை குறை பட்டு போக வில்லையாம். என்ன கொடுமைங்க……………….

 3. நடிகையையும், வசனகர்த்தாவையும் நன்றாக அம்பலப் படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் நடிகைக்குப் புதிதாக ரசிகர் மன்றம் அமைத்துள்ள கறுப்புச் சட்டைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் ஏமாற்றி விட்டீர்களே

 4. அரசியல் திருடர்களை திருத்த புரட்சி தேவை!

  இன்று… இலங்கை தமிழர்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கும் உலகத் தமிழர்களின் தலைவர் என்று நம்பப்பட்டவர் (நம்பிக்கை குறைகிறது) தன் பணியை செய்ய தவறிவிட்டார் என்பதற்காக…

  நேற்றுவரை… இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்காத (இல்லை இல்லை போர் என்றால் பொதுமக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று குரல் கொடுத்த) அம்மையாரை ஆதரிக்கும், இலங்கை தமிழர்களை காக்க து(ந)டிக்கும் அமைப்புகள், ஏன் தேர்தலை புறக்கணிக்கும் / தேர்தலில் நடுநிலையை பதிவு செய்யும் படிவத்தை முன்னுக்கு நிறுத்தி பிரச்சாரம் செய்யக்கூடாது? இப்படி செய்வதால் மட்டுமே அரசியல் புரட்சியை உருவாக்கி அரசியல் திருடர்களுக்கு பாடம் கற்பிகாலாம்…

  நமது வலையில் அடுத்த பதிவிலிருந்து பிரச்சாரத்தை துவங்குங்களேன்… கத்தியின்றி ரத்தமின்றி…

 5. லட்சங்களை செலவு செய்கிறான் அரசியல்வாதி
  அவன் லட்சியங்களை அடைய
  லட்சங்களை கோடிகளாகும் லட்சியம் !!!

 6. மிக அருமையான கட்டுரை,

  தமிழர்களின் துரோகியான கருணாநிதிக்கு எதிராக தமிழர்களின் எதிரியான செயலலிதவை ஆதரிப்போரைக் கேட்கிறேன்,

  ஏன் துரோகிக்கு எதிராக எதிரியை ஆதரிக்க வேண்டும்?

  மக்களுக்கு 49O பற்றிய விழிப்புணர்வை கொடுக்கலாமல்லவா?

  ஒட்டுமொத்த தமிழக மக்களையும் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுக்கலாமல்லவா?

  இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்துகாரனும் மனிதாபிமானத்துக்காகவாவது தமிழ் இனப்படுகொலையை எதிரித்து ஒரு வார்த்தை பெசிருப்பானா, இப்படிப்பட்ட இந்தியா நமக்கு தேவைதானா தமிழர்கள் சிந்திக்க வேண்டும், ஏன் தமிழகத்திலேயே IPL கிரிகேட்டுக்கு தரும் மதிப்பை ஈழத்தமிழ் மக்களின் உயிருக்கு தரமறுக்கிறார்கள், என்றைக்கு ஒரு குவட்டருக்கும் பிரியாணிக்கும் இந்தியத் தமிழன் விலைபோகத் தொடங்கினானோ அன்றே தமிழனின் தன்மானமும் காணாமல் போய்விட்டது, இவர்களை மீண்டும் தன்மானமுள்ளவர்களாக மாற்ற மீண்டும் ஒரு பெரியார் வந்தால் தான் உண்டு.

  கோகுலகிருட்டிணன்

 7. அளவில் சிறியதாக இருந்தாலும், உணர்ச்சி வயத்தில் தமிழின் இருக்கும் போது,அறிவார்ந்த நிலையில் அரசியலை பற்றி அலசும் ஆழமான கட்டுரையாக இருக்கிறது.
  உணர்ச்சி வசப்பட்டு கொண்டு காங்கிரசை தோற்கடிக்கிறோம் என்று சொல்லி ஜெயாவிற்கு வாக்களிக்க தயாராக இருக்கும் குருட்டு நம்பிக்கையுள்ள, உணர்வுள்ள தமிழர் படிக்க வேண்டிய கட்டுரை..
  பிணங்களின் மீது ஓட்டு வேட்டை நடத்தும் ஓட்டு சீட்டு கட்சிகளை பற்றி புரிந்துகொள்வோம்..
  தேர்தலை புறக்கணிப்போம்.

 8. காலத்திற்குகேற்ற அவசியமான பதிவு.

  தற்கால அரசியல்வாதிகளை புறந்தள்ளிவைப்பதற்க்கு இத்தேர்தலில் 49’0 வை தேர்ந்தெடுப்பதின் மூலமாக ஆளும் கட்சியை எதிர்க்கிறேன் பேர் வழி என்று ஜெயலலிதாவிற்க்கோ, விஜயகாந்திற்க்கோ வாக்களிப்பது போன்ற மடத்தனம் தவிர்க்கப்படும்.

 9. நன்றாகத்தான் நடிகையை அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் நடிகையைப் பார்த்து வசனகர்த்தா தமிழுணர்வைக் கூடாதென்று சொல்லிவிடுவார் என்பதெல்லாம் கொஞ்சமில்லை , ரொம்பவே ஓவர்.

  எனக்கென்னவோ போடுங்கம்மா ஓட்டு ரெட்டை இலையைப் பார்த்துன்னு பாட்டுப்பாடுற கொளத்தூரார் கோஷ்டிக்கு தான் எலக்சனுக்கு பிறகு எமகண்டம் போல தோணுது.

  பெரியார் இருந்திருந்தால் கூட இரட்டை இலைக்குதான் ஓட்டு கேட்டிருப்பார்னு சொல்லாத வரைக்கும் சரிதான். ஒருகாலத்துல அந்தப் பெரியாரே ஆதரிச்ச காங்கிரசை வீழ்த்திதான் களத்துல செயிச்சது திமுகழகம் என்பதை மறக்காதவரைக்கும் தவறில்லை.

 10. நடிகை என்ற ஓநாய் அழுகிறது.
  இந்த தேர்தலை தமிழர் புறகணித்தால் என்ன குறைய போகிறது.
  ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி, மயக்கம் ,நரம்பு தளர்ச்சி மருந்துகளை பயன்படுத்தி விடுதலை புலிகளை அழிப்பதற்குள், தமிழர்கள் இங்கிருந்து இலங்கை செல்வதாக அறிவிக்க வேண்டும். போக வேண்டும் இப்போதைக்கு இது மட்டுமே இந்திய, இலங்கை அரசுகளை பணிய வைக்கும.

Leave a Reply