ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

mwi
வர்க்கப் பாசம், ஜாதி பாசத்தைவிட பெரிதா?-ஜாதி பாசம், வர்க்கப் பாசத்தைவிட பெரிதா?

. தமிழரசன்

ன் சொந்த ஜாதிக்குள் உள்ள பணக்காரருக்கும் ஏழைக்கும் பிரச்சினை வரும்போது, ஜாதி பாசத்தை வர்க்க பாசம் மிஞ்சிவிடுகிறது. சரவணா ஸ்டோரில் வேலை பார்க்கும் நாடார் தொழிலாளிக்கு நாடார் முதலாளியால் பிரச்சினை வரும்போது ஜாதி சங்கம் முதலாளிக்குத்தான் சார்பாக நடந்து கொள்ளும்.

ஜெயேந்திரன் என்கிற பணக்காரன், ஏழையான சங்கரராமன் என்கிற பார்ப்பனரை கொலை செய்தபோது, பிராமணர் சங்கம் ஜெயேந்திரனுக்குதான் துணை நின்றது. சங்கரராமன் குடும்பத்தின் மீது பார்ப்பனர்கள் வெறுப்படைந்தனர். ஜாதி பாசத்தை வர்க்கப் பாசம் வென்றது.

ஒரு வேளை இப்படி இருந்திருந்தால்…. சங்கரராமன் என்கிற பார்ப்பனரை கொலை செய்தது, ஜெயேந்திரனுக்கு பதில் பங்காரு அடிகள் என்று வைததுக் கொள்ளுங்கள்… இந்நேரம் பங்காரை தூக்கில் ஏற்றி இருப்பார்கள் பார்ப்பனர்கள். வர்க்கம், ஜாதி மாறி இருக்கும்போது….. வர்க்க பாசத்தை ஜாதி பாசம் வெல்லும்.

தனிமனிதர்களை கடவுளாக வழபடுகிற வழக்கம் உள்ள பார்ப்பனர்கள், பங்காரு போன்றவர்களை கடவுளாக அல்ல சாமியாராகவே ஒத்துக் கொள்வதில்லை. பங்காரு போன்ற ‘தெய்வங்களிடம்’ ரொம்ப தெளிவாக பகுத்தறிவாளனைப் போல் நடந்து கொள்வார்கள். ஆனால் ஜெயேந்திரனிடம்….?

கொலை பண்ணினாலும் நம்பளவா நம்பளவாதான்.

சட்டம், கடமை, ஒழக்கம், நீதி, நேர்மை, ஜனநாயகம், தரம், தகுதி என்று தங்களின் ஆயுதங்களுக்கு பல புனைப்  பெயர்கள் வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். பொதுவான பார்ப்பன நலன் பாதிக்கப்படும்போது இவைகளை ஒவ்வொன்றாக எடுத்து நாகாஸ்திரமாக வீசுவார்கள். அப்போது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற, எந்த கிருஷ்ண பரமாத்மாவும் வந்து, தன் காலால் தேர் சக்கரத்தை அழுத்த மாட்டான்.

குறிப்பு:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உணர்வாளர்கள் பொங்கி எழுந்தபோது…. விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்று கட்டம் கட்டி ஜெயிலுக்கு அனுப்பிய பார்ப்பன பத்தரிகைகள், இப்போது ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு அறிக்கைக்கு பிறகு அடக்கி வாசிக்கிறார்கள் பாருங்கள்….. அதுதான் பார்ப்பன பாசம்.

அதுபோல், ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பார்த்து வராத கோபம்…. இப்போது இந்த பதிலை பார்த்தவுடன் பொங்கி எழுவார்கள் பாருங்கள்… அதுதான் ‘பிராமின்ஸ் ஒன்லி’. அதுவேதான் ஜாதி பாசம்.

*

2009 ஆம் ஆண்டு நம்பவர் மாதம் எழுதியது

தொடர்புடயவை:

பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்!(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

 

20 thoughts on “ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

 1. நூறு சதவீதம் உண்மை தோழரே. இதையே தான் இங்கு நண்பர்களோடு விவாதித்துக்கொண்டு இருந்தோம்.. ஞாநி, ஆனந்த விகடன், குமுதம், ஹிந்து, தினமலம் மற்றும் துக்ளக் போன்ற பண்டாரங்களுக்கு இது சாலப்பொருந்தும்…

  நீங்கள் சொல்லியது போலவே இன்னும் சில நேரத்தில் இந்த விவாதத்தை திசை திருப்பும் பணியில் ‘பிராமின்ஸ் ஒன்லி’ ஈடுபடுவார்கள்..

  உங்களின் ஒவ்வொரு எழுத்தும் மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக எண்ணும்போது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. வாழ்த்துக்கள்

  உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் தோழரே.. இந்தியாவிற்கு வரும்போது அண்ணல் அம்பேத்கரின் அணிந்து வருவேன்.

  தோழமையுடன்

  முகமது பாருக்

  (பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைப்பவன்)

 2. //சட்டம், கடமை, ஒழக்கம், நீதி, நேர்மை, ஜனநாயகம், தரம், தகுதி என்று தங்களின் ஆயுதங்களுக்கு பல புனைப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். பொதுவான பார்ப்பன நலன் பாதிக்கப்படும்போது இவைகளை ஒவ்வொன்றாக எடுத்து நாகாஸ்திரமாக வீசுவார்கள்.//

  இதைவிட அருமையாக எளிமையாக சொல்லமுடியுமா என்று தெயயவில்லை. சிறப்பான பதிவு

 3. நல்லா சொன்னீங்க போங்க
  அதாவது நாம் ஒடச்சா பொன்னுகொடம்
  நம்மவாள் ஒடச்சா மண்ணுகொடம்
  கொலையும் செய்வான் பாப்பான்
  கும்பிடும்போது வைப்பான் ஆப்பா
  அதுதானே மனு தர்ம வர்க்க ஜாதி செருப்பு துடைப்பம்னு எழுதிவைச்சிருக்கான்வோ……….

  கவலையே படாதீங்க எழுதட்டும் பாக்கலாம்.

 4. //ஞாநி, ஆனந்த விகடன், குமுதம், ஹிந்து, தினமலம் மற்றும் துக்ளக் போன்ற பண்டாரங்களுக்கு இது சாலப்பொருந்தும்…
  //

  தோழர் முகமதுவின் கருத்துகளை வழி மொழிகிறேன்.

  இவனுகள மக்கள் இன்னும் நம்புதே.. அது தான் சங்கடமான விஷயம்.

 5. ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு அறிக்கை மிகவும் நம்பும்படி உள்ளது. நேற்று நடந்த புதுச்சேரி கூட்டத்தில் திரு. சீமான் அவர்களின் இறுதி வார்த்தைகளை பற்றி ஜெயலலிதா நினைத்து பார்க்க வேண்டும். அப்படி ஒரு வேளை தேர்தலுக்கு பிறகு ஈழத்தை பற்றி ஜெயலலிதாவின் இன்றைய நிலை மாறினால் வர்க்கம், ஜாதி எல்லாம் என்ன ஆகும் என்று பாருங்கள்.

 6. கேள்வியை அனுப்பி வைத்த தமிழரசன் அவர்களே, இதே கேள்வியை ஏற்கெனவே தோழரிடம் கேட்டு இதே பதிலை நான் மட்டும் அறிந்திருந்தாலும், பலபேரைச் சென்றடைய காரணமாக நீங்கள் காரணமாக இருந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி தோழர்.

 7. http://www.keetru.com/kuthiraiveeran/june06/selvam.php

  http://www.keetru.com/literature/essays/suguna_diwakar_4.php

  இவ்விரண்டு இணைப்புகளையும் அன்பர்கள் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  தோழர் மதிமாறனும் இந்த கட்டுரைகளைக் கொண்டு விவாதத்தை விரிவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
  எப்படி, அம்பேத்கரை சாதிய அடையாளத்துக்குள் அமுக்க முயற்சி செய்கிறார்களோ, அதற்கு தாங்கள் எப்படி எதிர்வினை ஆற்றினீர்களோ அதுபோல, பெரியார் தலித்துகளுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரத்தை உடைக்க ஒரு எதிர்வினை உங்களிடமிருந்தும் தேவை என்று எனக்குப் படுகிறது.

 8. Reply for Dondus dos & donts from kanchi films

  //சங்கராச்சாரியார் பார்ப்பனரே, சங்கரரமனும் பார்ப்பனரே, சரிதான். ஆனால் முன்னவரை கைது செய்த ஜெயலலிதா யார்?//

  முன்னவா இரெண்டு பேரும் அத்வைத்திகள், பின்னவா(ஜெயலலிதா)பழுத்த சங்காழி அதாவது வைணவா. சிரீரங்கத்துக் காக்கை கதை தெரியுமோல்லியோ ?

  //கன்னட பலீஜா நாயுடு பிரிவைச் சேர்ந்த ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் //

  நாயுடு – நாயக்கர் இது இரெண்டும் ஒரே ஜாதின்னு சாதி சான்றிதழ் கொடுக்கிற எங்க ஊரு தாசில்தாருக்குக் கூடத்தெறியாது. இது ஒரு புது செய்தி.

  அன்புடன் காஞ்சி பிலிம்ஸ்

 9. அற்புதம் உங்கள் பதில்.. மிக அருமை..அதிலும் இந்த வரிகள் ” சட்டம், கடமை, ஒழக்கம், நீதி, நேர்மை, ஜனநாயகம், தரம், தகுதி என்று தங்களின் ஆயுதங்களுக்கு பல புனைப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள்.”

 10. anbulla mathimaran avargalukku vnakkam,

  naan ungaludaia rasigan. naan kadantha oruvarudathirku malaga vaasithukkonduvarugiran. vegu arumai karra thalaivargalellam velivedathmaga nadikkirargal. neengal oruvarmattuma ellavarrtaium thannalaminri pasugireergal. contrats. yours loving I. Periyanayagam, Tirrupattur

 11. உங்கள் அனைவருக்கும் என் அறிமுக வணக்கம்,

  சீமான் கூற்றில் அவர் உண்மையாக ஈழ தமிழர்களுக்கா பாடுவடுவதாக தெரியவில்லை. ஆளும் வர்க்கத்தினரிடம் அடிவருடி அரசியல் ஆதாயம் தேடுக்கொள்வதை அப்பட்டமாகவும், அவர் தொடங்கிய்யிருக்கும் இயக்கமும் தன் பேர் புகழினை வளர்த்துக்கொள்வதற்காக தொடங்கப்பட்ட இயக்கமாகவே திரை மறைவற்ற காட்சியாகவே தெரிகிறது.

 12. அரசர் என்பவர் சாதி இனப்பாகுபாடுகளை தூக்கி நிலை நிறுத்தி காப்பாற்றுவராக இருக்க வேண்டும் என்று மனு கூறுகிறது. இது அரசர்களாக ஆட்சி செய்பவர்களுடைய முதலாவது தகுதியாகும். ஒரு அரசரின் தலையாய கடமை தனது குடிமக்களை காப்பதோ, நாட்டை நல்லபடி ஆட்சி செய்வதோ, வளப்படுத்துவதோ , முன்னேற்றுவதோ , அல்ல. மாறாக சாதி என்கிற நரகலை அந்த அரசர் அல்லது அரசு தனது தலையில் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்கிறது. அத்துடன் அந்தந்த சாதி மற்றும் இனத்துக்குத் தகுந்த பாகுபாடான பொறுப்புகளை தனது மக்களுக்குத் தரவேண்டும் என்பதும் மனு தரும் விதி. பார்த்தீர்களா? இது விளங்குமா? இதைத்தான் இப்படி சொல்கிறது
  35. The king has been created to be the protector of the castes (varnas) and orders who, all according to their rank, discharge their several duties.

  மேலும் அரசர்களின் தகுதிகளை பட்டியல் இடும்போது எதிரிகளுக்கு பணியக்கூடாது, புறமுதுகிடக்கூடாது என்பவனற்றோடு பிராமணர்களை மதிப்புமிக்க இடத்தில் வைத்து தேனும் திணை மாவும் தரத் தயங்கக்கூடாது என்பதே கூடுதல் தகுதியாகும். இதோ

  87-88. A king who, while he protects his people, is defied by foes, be they equal in strength, or stronger, or weaker, must not shrink from battle, remembering the duty of Kshatriyas: Not to turn back in battle, to protect the people, to honor the Brahmins, are the best means for a king to secure happiness.

  ஒரு அரசர் மற்றொரு நாட்டுடன் போர்செய்து வெற்றி பெற்றால் தனது கடவுளை வணங்குவதோடு மட்டுமின்றி தனது நாட்டின் பிராமணர்களை கவுரவப்படுத்த வேண்டும்; அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் வாயில் விரலை வைத்து சூப்பிக்கொண்டு இருக்க வேண்டும். மரம வைத்து தண்ணீர் ஊற்றுபவன் ஒருத்தன் அதன் பலனை அனுபவிப்பவன் இன்னொருத்தன். அந்த இன்னொருத்தன் எவனுமல்ல பிராமணனே. அவனவன் உயிரை பணயம் வைத்து சண்டை போடுவானாம் அதில் வெற்றியும் பெறுவானாம். ஆனால் பிராமணனை கவுரவப்படுத்த வேண்டுமாம். இதோ !

  201. When he has gained victory, let him duly worship the gods and honor righteous Brahmins; let him grant exemptions; and let him cause promises of safety to be proclaimed [to his opponents].

  அதுமட்டுமல்ல நீதிக்குழு என்கிற கட்டுச்சோறு கட்டினால் அதில் கட்டாயம் ஒரு பிராமணப்பூனையும் அல்லது ஒரு பெருச்சாளியையும் வைத்துக் கட்டவேண்டும் என்கிறது மனுவின் சட்டம். வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் குழு அமைத்தால் அதில் கண்டிப்பாக பிராமணர்கள் இடம் பெற்று இருக்க வேண்டுமாம். எந்த சூழ்நிலையிலும் ஒரு தாழ்த்தப்பட்டவன் நீதிபதிகளுள் ஒருவனாக ஆகமுடியாது.

  A king, desirous of investigating law cases, must enter his court of justice, preserving a dignified demeanor, together with Brahmins and with experienced councilors.

  அரசர்கள் நீதி வழங்குவதிலும் , தண்டனை தருவதிலும் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் மனு நீதியால் வரையறுக்கப்படுபவை அப்பட்டமான பாகுபாடுகள். மாமியார் ஆக்கினால் மட்டன் கறி; மருமகள் ஆக்கினால் மீன் கறி. ( மண்சட்டி பொன் சட்டியையே எவ்வளவு நாள் சொல்வது) என்று ஒரே வகையான குற்றத்துக்கு இனத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கச் சொல்கிறது மனு நீதி. இவைகளைப் படிக்கும் ரோஷமுள்ள எவருக்கும் இரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிடும்.

  ஒரு குழப்பமான வழக்கு அரசரின் முன் வந்தால் அதில் மாறுபாடுகளான சாட்சிகள் இருக்குமானால் ஒரு பிராமணன் சொல்வதையே உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிராமணன் மட்டுமே மனிதருக்குப் பிறந்தவன் மற்றவர்கள் மாட்டுக்குப் பிறந்தவர்கள் இல்லையா?

  Upon hearing contradictory testimony from witnesses, the king is advised at Manu 8.73 to rely on what the majority of witnesses say, or else the testimony of witnesses of superior qualities; if discrepancy persists, the testimony of Brahmins is to be relied upon.[

  ஒரு தாழ்ந்த சாதிக்காரன் மற்ற மூன்று உயர் சாதிக்காரர்களை தூஷனையாக அவமானித்துப் பேசினால் அந்த தாழ்ந்த சாதிக்காரனது உதடுகளை வெட்டிவிட அரசு உத்தரவிடவேண்டும்.

  279. With whatever lip a man of a low caste does hurt to a man of the three highest castes, even that lip shall be cut off.

  ஒரு உயர்ந்த சாதிக்காரனோடு அதே இடத்தில் ஒரு தாழ்ந்த சாதிக்காரன் உட்கார முயற்சித்தால் தாழ்ந்த சாதிக்காரனுக்கு இடுப்பில் சூடு போடவேண்டும் அல்லது அவன் உட்காரப்பயன்படுத்தும் உடலின் உறுப்பை ( இடக்கரடக்கல்) வெட்டிவிட வேண்டும்.

  281. A low-caste man who tries to place himself on the same seat with a man of a high caste shall be branded on his hip and be banished, or the king shall cause his buttock to be gashed.

  அடங்கா கோபத்துடன் உயர் சாதியினர் மேல் காரி உமிழும் ஒருவனின் இரு உதடுகளும் வெட்டப்படவேண்டும்; சிறு நீர் கழித்தால் ஆண் குறி வெட்டப்படவேண்டும்; உடலில் இருந்து துர்நாற்றம் வீசும் காற்றை ( இதற்குமேல் நாகரிகமாக எனக்கு மொழி பெயர்க்க தெரியவில்ல – அது அப்படி நாறுகிறது) அவன் மேல் விட்டால் விட்டவனின் மலம கழிக்கும் மூலத்தை வெட்ட வேண்டும்.

  282. If out of arrogance he spits on a superior, the king shall cause both his lips to be cut off; if he urinates on him, the penis; if he breaks wind against him, the anus.

  ஒரு பிராமணருக்கு சொந்தமான அல்லது அவனது பாதுகாப்பில் இருக்கும் தானமாக வழங்கப்பட்ட பசுவை திருடும் தாழ்த்தப்பட்டவனின் இரண்டு கால்களின் பாதங்களும் அரைவாசி வெட்டப்படவேண்டும்.

  325. For stealing cows belonging to Brahmins, piercing the nostrils of a barren cow, and for stealing other cattle belonging to Brahmins, the offender shall forthwith lose half his feet.

  பிற பெண்களை பிராமணர் மட்டும் தொட்டுக்கலாம்; பட்டுக்கலாம்; இட்டுக்கலாம்; எடுத்துக்கலாம். மற்றவர்கள் தொட்டாலும், பட்டாலும், இட்டாலும், எடுத்தாலும் மரண தண்டனை அரசால் வழங்கப்படவேண்டும்.

  359. A man who is not a Brahmin ought to suffer death for adultery (samgrahana; for the wives of all the four castes must always be carefully guarded.
  – From மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? இப்ராகிம் அன்சாரி எழுதியது அதிரை நிருபர் வெளியீடு.

 13. The theory of difference between Brahmins and Non-Brahmins somewhat out-moded. When Jaya was convicted in corruption case, no Brahmin outfit has come forward to support Jaya. Many of us mistaken on Karunanithi’s that he is a crusader of Social Justice. Karunanithi never fought Jaya as if she is a Brahmin, but being failed before the people, due to his family members involvement in 2G scandal worth around 1,76,000/-Crores, he is fighting to topple Jaya so that a path will be cleared for his son Stalin to become the CM of Tamilnadu. Let us think whether Karunanithi fights for the interests of Tamils or for his family’s interests? Those who want to oppose Brahmanical domination, let them do of their own. If they oppose by backing Karunanithi, then Karunanithi or his son will become the leader and they compromise on Dravidian principles in preference to their family members.As Periyar said, we are not against Brahmins but against Brahmanical practices. All dravidian parties fought for the social freedom from the clutches Brahmin domination. Once the freedom is achieved, the Non-Brahmins practice oppression and suppression against the dalits. Is it social justice? How many dravidian parties condemned the communal fanaticism of Ramadoss and his party cadres against the Dalits in Dharmapuri, Krishnagiri and Villuppuram districts. It was Jaya who protected the Dalits by arresting Ramadoss, Anbumani Ramadoss and some party cadres for the communal riots and untouchability they unleashed and pracised in the above districts.We could not forget the mass untouchability practiced by Ramadoss and his cadres. While every person wants to practice social and political un-touchability against the dalits, how we can blame the brahmins alone.

Leave a Reply

%d bloggers like this: