ஜெயலலிதா என்ன பெரியார் பேத்தியா?

fox

என்னுடைய முந்தைய கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலில் ஒரு சந்தேகம். கொலை செய்த ஜெயேந்திரனைக் கைது செய்ததே ஜெயலலிதாதான். அப்படியானல் ஜெயலலிதா பார்ப்பன உணர்வு இல்லாதவர் என்று அர்த்தமாகிறதே?

. தமிழரசன்

‘சங்கராச்சாரியார் சரியாக பார்ப்பன தர்மத்தை கடைபிடிக்கவில்லை’ என்று சங்கராச்சாரியாருக்கே பார்ப்பன தர்மத்தைப் சுட்டிக் காட்டிய தீவிரப் பார்ப்பன உணர்வாளர்தான் சங்கரராமன் அய்யர்.

அவரையே போட்டுத் தள்ளளுனவர்தான் ஜெயேந்திரன். அப்போ ஜெயேந்திரன் என்ன பார்ப்பன எதிர்ப்பாளரா?

தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட சங்கரராமனை என்ன காரணத்திற்காக, சங்கராச்சாரி போட்டுத் தள்ளுனாரோ. அதுபோன்ற ஒரு காரணத்திற்காகத்தான், ஜெயேந்திரனை கைது பண்ணார் ஜெயாமாமி.

அதுக்காக ஜெயலலிதாவை பெரியார் பேத்தின்னு சொல்லமுடியுமா?