ஜெயலலிதா என்ன பெரியார் பேத்தியா?
என்னுடைய முந்தைய கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலில் ஒரு சந்தேகம். கொலை செய்த ஜெயேந்திரனைக் கைது செய்ததே ஜெயலலிதாதான். அப்படியானல் ஜெயலலிதா பார்ப்பன உணர்வு இல்லாதவர் என்று அர்த்தமாகிறதே?
–க. தமிழரசன்
‘சங்கராச்சாரியார் சரியாக பார்ப்பன தர்மத்தை கடைபிடிக்கவில்லை’ என்று சங்கராச்சாரியாருக்கே பார்ப்பன தர்மத்தைப் சுட்டிக் காட்டிய தீவிரப் பார்ப்பன உணர்வாளர்தான் சங்கரராமன் அய்யர்.
அவரையே போட்டுத் தள்ளளுனவர்தான் ஜெயேந்திரன். அப்போ ஜெயேந்திரன் என்ன பார்ப்பன எதிர்ப்பாளரா?
தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட சங்கரராமனை என்ன காரணத்திற்காக, சங்கராச்சாரி போட்டுத் தள்ளுனாரோ. அதுபோன்ற ஒரு காரணத்திற்காகத்தான், ஜெயேந்திரனை கைது பண்ணார் ஜெயாமாமி.
அதுக்காக ஜெயலலிதாவை பெரியார் பேத்தின்னு சொல்லமுடியுமா?
http://www.keetru.com/kuthiraiveeran/june06/selvam.php
http://www.keetru.com/literature/essays/suguna_diwakar_4.php
இவ்விரண்டு இணைப்புகளையும் அன்பர்கள் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தோழர் மதிமாறனும் இந்த கட்டுரைகளைக் கொண்டு விவாதத்தை விரிவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எப்படி, அம்பேத்கரை சாதிய அடையாளத்துக்குள் அமுக்க முயற்சி செய்கிறார்களோ, அதற்கு தாங்கள் எப்படி எதிர்வினை ஆற்றினீர்களோ அதுபோல, பெரியார் தலித்துகளுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரத்தை உடைக்க ஒரு எதிர்வினை உங்களிடமிருந்தும் தேவை என்று எனக்குப் படுகிறது.
மதிமாறன்,
லாஜிக் உதைக்கிறதே?
போன பதிவில் நீங்கள் இப்படி சொன்னீர்கள் – 1. இரு வேறு ஜாதி மனிதர்களுக்குள் பிரச்சினை எழும்போது ஜாதி உணர்வை வைத்து செயல்படுகிறார்கள்/செயல்படுகிறோம். 2. ஒரே ஜாதி மனிதர்களுக்குள் பிரச்சினை எழும்போது வர்க்கம் முன்னால் நிற்கிறது.
உதாரணமாக பங்காரு அடிகளார் பணக்காரர்தான். சங்கரராமன் அவரோடு ஒப்பிட்டால் ஏழைதான். ஆனால் பங்காரு அடிகளார்தான் சங்கரராமனை கொன்றார் என்று வழக்கு போடப்பட்டிருந்தால் பார்ப்பனர்கள் பங்காரு அடிகளார் தண்டிக்கப்பட வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதி இருப்பார்கள் என்று சொல்லி இருந்தீர்கள்.
ஜெயலலிதா பார்ப்பனர். பணக்காரர். அவர் பார்ப்பன, பணக்கார ஜெயேந்திரரை விட்டுவிட்டு சங்கரராமனுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். இது உங்கள் கருத்துக்கு ஒரு exception-ஆ? இல்லை உங்கள் கருத்து தவறா?
அட்டே , இன்னும் உங்களுக்கு வெளங்கலையா?
ஜெயலலிதா பெரியாரின் பேத்தியென்று மாத்திப் போய் மாசம் ஒன்றாச்சு.
ஜெயலலிதா பார்ப்பனர். பணக்காரர். அவர் பார்ப்பன, பணக்கார ஜெயேந்திரரை விட்டுவிட்டு சங்கரராமனுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். இது உங்கள் கருத்துக்கு ஒரு exception-ஆ? இல்லை உங்கள் கருத்து தவறா?///
தவறு இல்லை தோழர்….
ஜெயா க்கு ஜெயேந்திரன் மேல கோவம்…
அதுக்கு தான் கைது…
பல புலனல்வு பத்திரிகை கட்டுரை எழுதியது ஜெயேந்திரன் தான் காரணம் என்று ஏன் உங்க ஜெயா அப்போ கைது பண்ணல…?
எல்லாம் சாதி பாசம் தான் வேறு என்ன இருக்கும் சொல்லுங்க…
அதே ஜெயேந்திரன் அந்த அம்மாக்கு ரொம்ப திமிரு நு பேட்டி அளித்தார்…..
இவங்களுக்கு வேறு வழி இல்லை
கைது பண்ணிட்டாங்க பா…[:o]
எல்லாவற்றையுமே சாதி, வர்க்கம் என்ற எல்லைக்குள் அடைக்க வேண்டியதில்லை. தனி நபர்களுக்குள் தனிப்பட்ட குரோதங்களும் உண்டு தானே!
ஜெயேந்திரனுக்கும், ஜெயாவுக்கும் தனிப்பட்ட குரோதங்கள் உண்டு. இரண்டு பேருமே கிரிமினல்கள் தானே!
மட்டுமல்லாமல் தனது அரசியல், அதளபாதாளத்திற்குப் போகும் போது, “எதையும்” பயன்படுத்துவார் ஜெயலலிதா. சென்ற 40/40 க்கு அப்புறம் அவர் ஜெயேந்திரனை நன்கு பயன்படுத்தி ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார்.
ஈழச்சிக்கலுக்கு முழுமுதற்காரணமே ஜெயலலிதாதான். ஆனால், இன்று தனது அரசியல் அஸ்தமனத்திலிருந்து, மீண்டும் ஒளி வீசி எழ, “தனி ஈழம் தான் ஒரே தீர்வென்று” போட்டாரே ஒரே போடு, பார்த்தீரா?
பாரப்பனீயத்திற்கு பிழைப்பு மட்டும் தான் ஒரே குறி. அதற்காக “எதையும்” செய்யும்!
மதிமாறனும் லாஜிக்குமா? அடப்போங்கப்பா…
டாக்டர் பாண்டியன், எல்லாமே ஜாதி, வர்க்கம் இல்லை என்று ஒத்துக்கொண்டால் சரி. என்ன எல்லா பார்ப்பனர்களும் ஜெவுக்கேவா ஓட்டு போடுகிறார்கள்?
நிதி செல்லம், எங்க ஜெயாவா? என்ன சொல்ல வரீங்க?
அடப்போங்கப்பா…
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5752:2009-05-14-12-42-28&catid=277:2009
பார்ப்பனருக்கும் பார்ப்பனர் அல்லாதவருக்கும் பிரச்சினை வந்தால் ஜாதி உணர்வில் பார்ப்பனருக்கு தான் ஆதரவு
பணக்கார பார்ப்பனருக்கும் ஏழை பார்ப்பனருக்கும் பிரச்சினை வந்தால் வர்க்க உணர்வில் பணக்கார பார்ப்பனருக்கு தான் ஆதரவு
பணக்கார பார்ப்பனருக்கும் இன்னொரு பணக்கார பார்ப்பனருக்கும் பிரச்சினை வந்தால் அதிகார வர்க்கத்தில் இருப்பவருக்கு தான் ஆதரவு
–
இது தான் நான் புரிந்து கொண்டது
சரியா..?
தவறா..?
ontrum illai bjb mathavatha katchiya ? pathil kooravum
உண்மையில் சிந்த்தித்துப் பார்த்தால், அம்மையார், ஜெயேந்திரர், தமிழினத் தலைவர், மான மிகு ஐயா- இவர்களைப் போன்றவர்களுக்கிடையில் எந்த பெரிய வேறுபாடும் இல்லை என்பது தெளிவாகும்.
இவர்களுக்கான கொள்கை என்ன வென்றால், பெரும் சொத்து குவிப்பதும், பதவிகளை, ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கை நிலை நிறுத்துவதுமே அல்லாமல் வேறே என்ன?
பெரியாரின் வாரிசு என்று கூறிக் கொண்டாலோ, அல்லது ஆதி சங்கரரின் வாரிசு என்று சொல்லி கொண்டாலோ என்ன?
சொத்து குவிப்பு- சொத்து குவிப்புதான் , செல்வாக்கு- செல்வாக்கு தான்.
ஆதிசங்கரரின் தத்துவம் என்ன என்று தெரியாமலே – அப்படித் தெரியாததால் ஜெயேந்திரரை பெரிய ஞானி என்று எண்ணி ஜெயேந்திரருக்கு ஜெ போட ஒரு கும்பல் இருக்கிறது,
பார்ப்பனர்களையும் தாண்டி பெரிய கும்பல் இருக்கிறது. அந்த மக்களின் அறியாமை தான் ஜெயேந்திரரின் வலிமை.
அந்த கும்பல் ஜெயேந்திரரின் செல்வாக்கையும் பணபலத்தையும் பார்த்து வாய் பிளந்து நிற்கும் கும்பல். அந்த வெகுளிக் கும்பலிடம் போய், ” நீங்கள் கற்றது என்ன? உடல் இறப்பிற்கு பின் உயிர் தொடர்ந்து வாழ்கிறதா? ” இது போன்ற கேள்விகளை முன் வைத்தால் அவர்கள், நம்மை தான் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள்- ஏனெனில் அதிகம் சிந்த்தித்து பழக்கப் படாத கூட்டம்!
அவர்களுக்கு மசாலா சினிமா போல, ஆக்ஷன் ,அதிரடி, ஆள் கடத்தல், காதல், கள்ளக் காதல், கற்ப்பழிப்பு இப்படி காரம் மணம் குணம் செறிந்த காட்சிகளாக விவரித்தால் தான் புரியும் .
இப்படி யாருமே அறியாத வகையில் தனியாக தானே ஆக்ஷன் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்தார் சங்கர ராமன்.
உண்மையில் எல்லோரும் ஜெயேந்திரரை பார்ப்பனர் என்ற காரணத்துக்காக , அந்த ஒரு காரணத்தையே முன்னிறுத்தி அவரை எதிர்த்தது ஜெயேந்திரருக்கு வசதியாகி இருந்தது. ” அவா பிராமணாள்னா, வைதீகால்ணா, திட்டுவா” என்று எளிதாக அவர் விளையாடி விட்டார். பார்ப்பனர் அல்லாத பிற பகதர்களும், அப்படியே நினைத்தனர்.
ஜெயேந்திரரை உண்மையில் மக்களுக்கு அறியப் படுத்தியது சங்கர ராமன் தான்.
Now people are atleast cautious and a bit releivedof Jayenthra!
When and how the people will be saved from Ammaiyaar, Maana Mikus , Thamilanath Thalaivar etc…?
நேரம் இன்மையால் சென்ற பின்னூட்டத்தில் எழுதாமல் விடுபட்டதை இங்கெ எழுதுகிறேன். சங்கர ராமன்” பெயருடன் “அய்யர்” பட்டத்தையும் சேர்த்து சாதியை விடாமல் சேர்த்து கல்லில் பொறிப்பது போல பொறித்து, சாதி அமைப்பு முறையை நொறுங்க விடாமல், சாதி அமைப்பைக் காக்க இன்னும் அதிக தூண்களை எழுப்பியிருக்கிறார்.
ஜெயேந்திரரின் தொழில் ஆன்மீகம் (அதாவது அவர் செய்ய வேண்டிய தொழில்) அதை அவர் சரியாக செய்யவில்லை என்று தானே சுட்டி காட்ட முடியும்? ஜெயேந்திரர் ரோடு சரியாகப் போடவில்லை- பாலம் கட்டியது இடிந்து விட்டது என்றா கூறி விமரிசிக்க முடியும்?
எனவே ஜெயேந்திரர் ஆன்மீகப் பணியை சரியாகச் செய்யவில்லை என்று சங்கர ராமன் கூறியதற்கு அவருக்கு அய்யர் பட்டம். அவசரம் அவசரமாக சங்கர ராமனுக்கு அய்யர் பட்டத்தை வழங்கி பிறப்பு அடிப்படையில் சாதியைக் கட்டமைப்பை இருக்குகிறார்கள்!
“சங்கராச்சாரியாருக்கே பார்ப்பன தர்மத்தைப் சுட்டிக் காட்டிய தீவிரப் பார்ப்பன உணர்வாளர்தான் சங்கரராமன் அய்யர்”
அப்படி என்ன “பார்ப்பன தர்மத்தை” சுட்டிக் காட்டினார் சங்கர ராமன் என்று பார்ப்போமா?
சங்கர ராமன் ஜெயேந்திரரையும் , வியேந்திரரையும்
எதிர்க்க முக்கிய காரணம்
1) துறவிகள் போல அலங்காரம் செய்து கொண்டு, துறவிகள் எனப் பிரகடனப் படுத்திக் கொண்டு ஆனால் துறவிகள் எதை செய்யக் கூடாதோ அதை எல்லாம் செய்வது .
2) “மடத்துப்” பணம் தவறான செயல்களுக்கு பயன்படுகிறது.
இது போன்றவை தான் சங்கர் ராமன் இவர்களை எதிர்க்க முக்கிய காரணம்!
இதில் பார்ப்பன தர்மம் எங்கேயிருந்து வந்தது?
1)வேஷம் போட்டு வூரை ஏமாற்றக் கூடாது!
2)கள்ளக் கணக்கு எழுதக் கூடாது!
3)துறவிகள் உண்மையே பேச வேண்டும்!
4)துறவிகள் வன்முறை, உல்லாசங்களில் ஈடுபடக் கூடாது!
5)மடத்துப் பணம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உபயோகப் படுத்தப் பட வேண்டும்!
இவை எல்லா மக்களுக்கும் தெரிந்த தர்மம் தானே?
இதுதான் பார்ப்பன தர்மமா- இதுதான் பார்ப்பன தருமம் என்றால், இது நல்ல தருமம் தானே!
துறவிகள் கடல் கடந்து செல்லக் கூடாது என்ற காரணத்தைக் காட்டி சங்கர ராமன் கேசு போட்டதை மறுக்கவில்லை- ஆனால் ஜெயேந்திரர் சீனா செல்வதையும் அங்கே
தன்னுடைய “சாம்ராஜியத்தை” விரிவு படுத்துவதையும் தடுக்க, சங்கர ராமன் வேறு என்ன காரணம் கூறி கேசு போட முடியும்?
ஜெயேந்திரரின் செல்வாக்கு அகில இந்திய அளவில், எல்லா அரசியல் தளங்களிலும் கொடி கட்டிப் பரந்த நேரத்தில், அவரை பெரிய புள்ளிகளே எதிர்க்கத் தயங்கிய நேரத்தில், ஒரு சாதாரணமான , பண வலிமையோ, அரசியல் வலிமையோ இல்லாமல் தனியாக நின்று எதிர்த்து இருக்கிறார்-போராட்டத்தில் தன் உயிரையும் விட்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு போராட்டக்காரரை சாதி வட்டத்தில் அடைக்க முற்ப்படுவது சிறுமை அல்லவா?
எந்த ஒரு பிரசினையையும் சாதி கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்ப்பது பழக்கம் ஆகிப் போனதினால் தான் இப்படி !
சங்கர ராமன் ஜெயேந்திரரையும் , விஜயேந்திரரையும்
எதிர்த்தார்.
நாம் சந்திர சேகரேந்திரரையும் எதிர்க்கிறோம்.
பல கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியாக இருந்து கொண்டு தன்னை துறவி, ஆன்மீக வாதி
என்று கூறிக் கொள்ளும் எவரையும் எதிர்க்கிறோம்!
தன்னுடைய கையில் ஐந்து பைசா வைத்து இருப்பவன் கூட துறவி என்று அழைக்கப் படக் கூடாது என்கிறோம்.
மடம் என்ற அமைப்பு முறைக்கு, தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட வேண்டியதில்லை, ஆன்மிகம் என்பது வீடுகளில் ஒவ்வொரு மனிதனும் மனதில் வளர்க்கப் பட வேண்டியது என்கிறோம். ஆன்மீக சுதந்திரம் மிக முக்கியம் என்பதே நம் கருத்து.
We refer PATTINATHAAR, NANATHANAAR, KANNAPPAR, THIYAKARAASAR, VIVEKAANATHAR… etc as the best examples for spiritualaity
// 1) துறவிகள் போல அலங்காரம் செய்து கொண்டு, துறவிகள் எனப் பிரகடனப் படுத்திக் கொண்டு ஆனால் துறவிகள் எதை செய்யக் கூடாதோ அதை எல்லாம் செய்வது .
2) “மடத்துப்” பணம் தவறான செயல்களுக்கு பயன்படுகிறது.
இது போன்றவை தான் சங்கர் ராமன் இவர்களை எதிர்க்க முக்கிய காரணம்!
இதில் பார்ப்பன தர்மம் எங்கேயிருந்து வந்தது?
1)வேஷம் போட்டு வூரை ஏமாற்றக் கூடாது!
2)கள்ளக் கணக்கு எழுதக் கூடாது!
3)துறவிகள் உண்மையே பேச வேண்டும்!
4)துறவிகள் வன்முறை, உல்லாசங்களில் ஈடுபடக் கூடாது!
5)மடத்துப் பணம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உபயோகப் படுத்தப் பட வேண்டும்!
இவை எல்லா மக்களுக்கும் தெரிந்த தர்மம் தானே?
இதுதான் பார்ப்பன தர்மமா- இதுதான் பார்ப்பன தருமம் என்றால், இது நல்ல தருமம் தானே! //
நல்ல தர்மம் தான்.ஆனா ஏனோ தீண்டாமை கொடுமை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை சங்கர்ராமன் அய்யர்.தீண்டாமை பற்றி சங்கரராமனுக்கும் ஜெயேந்திரருக்கும் கருத்து வேருபாடு வந்திருக்கா?
கள்ள கணக்கு எழுதாத என்று சொன்ன சங்கர்ராமன் சாதி பார்க்க கூடாதுன்னு சொன்னாரா? அல்லது தலித்த சங்கராச்சரியாக்கனும்னு சொன்னாரா?அதெல்லாம் சொல்லாத போது அவர் அய்யரில்லாமல் தலித்தா?
உங்களை போன்ற பார்ப்பன உணர்வு கொண்ட முற்ப்போக்கு புத்தி கொண்டவர்களை நான் எதுவும் திட்டவிரும்பவில்லை திரு.புறம்போக்கு.
ஜெயலலிதா பார்ப்பனர். பணக்காரர். அவர் பார்ப்பன, பணக்கார ஜெயேந்திரரை விட்டுவிட்டு சங்கரராமனுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். இது உங்கள் கருத்துக்கு ஒரு exception-ஆ? இல்லை உங்கள் கருத்து தவறா? //
ஜெயலலிதா ஜெயேந்திரரோடுதான் நட்பாக இருந்தார்கள்.
அந்த நட்புக்கு அடையாளமாகத்தான் மதமாற்று தடை சட்டம் கொண்டு வந்தார்கள்.
அவர்கள் இருவரையும் ஒன்றாக இணைத்து சாதி.
பிரித்தது துட்டு.
சங்கரராமனனுக்கு ஜெயலலிதா உதவியாக இருந்ததில்லை.ஜெயேந்திரருக்குதான் உதவியாக இருந்தார்.
பங்கு பிரிப்பதில் தகராறு.அந்த நேரத்தில் ஜெயேந்திரரு சங்கரராமனை கொலை பண்ணதினால சங்கரராமன் கொலைவழக்கை பயன்படுத்திக் கொண்டார் ஜெயலலிதா.
//5)மடத்துப் பணம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உபயோகப் படுத்தப் பட வேண்டும்!//
ஐயா, நீங்கள் சொல்லுகிற மடம் அருந்ததிய, ஆதி திராவிட மாணவர்களையும் உள்ளடக்கியதாக இருந்தால் சங்கரராமன் வலியுறுத்தியது பொது தருமம் என்று சொல்லலாம். பார்ப்பன மாணவர்களை மட்டுமே உள்ளடக்கிய மடம்தானே, சங்கரராமன் பார்ப்பன தருமத்தை வலியுறுத்தினார் என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை.
பின்னூட்டத்துக்கு பதில் அளித்த நண்பர்கள் வேந்தன் மற்றும் விஜய கோபலாசாமிக்கு நன்றி.
தீண்டாமை கொடுமை பற்றி சங்கர ராமன் ஒரு வார்த்தை கூட ஏன் கூறவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
சங்கர ராமன் ஒரு பெரிய அறிங்கர் அல்ல- ராஜா ராம் மோகன் ராய், விவேகானந்தர்,அம்பேத்கர், பெரியார், பாரதி இவர்களைப் போல சமுதாயத்தின் பலவேறு தளங்கள், அவற்றில் நிலவி வரும் பிரச்சினைகள், அதில் உள்ள அநீதிகள், அதற்கான தீர்வு பற்றிய தன்னுடைய அறிவுரை மற்றும் நிலைப்பாடு – பற்றிய தன் கருத்தை தெரிவிக்கும் அளவுக்கு சங்கர ராமன் ஒரு அறிங்கரோ, பேராசிரியரோ அல்ல.
சங்கர ராமன் ஒரு சாதாரண மனிதன்- ஆனால் தனக்கு அருகில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் துணிவு உள்ள ஒரு போராட்டக்காரர் – அவ்வளவுதான்!
அவர் தனிப்பட்ட முறையில் அவரது வீட்டிலோ, வேறு எங்கோ தீண்டாமையைக் கடைப் பிடித்து இருந்தால், அவரைக் குற்றம் கூறலாம். ஆனால் நமக்கு கேள்விப்பட்ட வரையில் அவர் எல்லோருடனும் சகஜமாக பழகுபவர் என்பதாகவே இருக்கிறது.
அவர் சந்திக்கும் யாரிடமும் அவரின் சாதியைப் பற்றி விசாரித்தாகவோ, சாதி வித்தியாசம் பாராட்டியதாகவோ, நமக்கு கேள்விப்பட்ட அளவில் இல்லை.
மடத்துப் பணம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உபயோகப் படுத்தப் பட வேண்டும் என்ற கருத்து எல்லா ஏழை மாணவர்களுக்குமாக கூறப்பட்டதேயல்லாமல் பார்ப்பனர்களுக்கு மட்டும் கூறப் படவில்லை.
இன்றைக்கு காஞ்சி “மடம்” நடத்தி வரும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் எந்த பிரிவு மாணவராக இருந்தாலும் பணம் குடுத்தால்தான் இடம் கிடைக்கும், மாதா மாதம் பணம் கட்டி கல்வி கற்கலாம் என்ற நிலை தான் உள்ளது.
ஏழை மாணவர்கள் – அவர்கள் பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப் பட்ட அல்லது தாழ்த்தப் பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு இலவச கல்வியோ, இடமோ கிடையாது.
அதாவது எல்லா தனியார் கல்வி நிறுவனக்களும் நடத்தப் படுவது போலத்தான் இவையும் நடத்தப் படுகின்றன.
1980 முதல் 2004 வரையிலான கால கட்டத்தில் யாராலும் எதிர்க்க முடியாத அளவுக்கு, யாரும் எதிர்க்க தயங்கிய அளவுக்கு பெரிய பணபலம், அரசியல் பலம் இவற்றைப் பெற்று விளங்கிய மிகப் பெரிய சக்தியாகிய ஜெயேந்திரரை தனியாக நின்று எதிர்த்து இருக்கிறார்.
தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் மட்டும் இல்லாமல் உலகெங்கும் உள்ள பார்ப்பனர்கள் – எல்லா பிரிவு பார்ப்பனர்களும்- தங்களது குருவாக, கடவுளாக வணங்கி பார்ப்பனீயத்தின் மன்னராக விளங்கிய ஜெயேந்திரரை எதிர்த்து இருக்கிறார்.
ஜெயேந்திரரின் காலில் விழுவதைத் தவிர வேறு எந்த “ஆன்மீக” முறையும், அறிவும் தெரியாமல் பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்பது சங்கர ராமனுக்கு தெரியும்.
ஜெயேந்திரரின் உண்மைகள் அம்பலப் படுத்தப் பட்டால், ஒட்டு மொத்த பார்ப்பன சமுதாயமும் அவமானப் படும், பார்ப்பனீயம் ஆட்டம் காணும் என்பதும் சங்கர ராமனுக்கு நன்கு தெரியும்.
இதையெல்லாம் அறிந்தும், தன்னுடைய சமூகம் அசிங்கப் பட்டு, அவமானப் பட்டு நிற்கும் என்பது தெரிந்தும், அதைப் பொருட்டாக எண்ணாமல் உண்மையின் பக்கம் நின்று, பார்ப்பனீயத்தின் மிகப் பெரிய சக்தியை வீழ்த்த போரடியிருக்கிறார்.
அப்படிப்பட்ட போராட்டக்காரர், போராட்டத்தில் தன உயிரை விட்ட பின்னும் அவருடைய சமுதாயத்தைச் சார்ந்த எல்லோராலும் இகழப்பட்டு, வையப் படுகிறார்.
அறிவு ஜீவிகாளாலும் பார்ப்பனப் பட்டம், அய்யர் பட்டம் அளிக்கப்பட்டு அவருடைய செயல்களுக்கு உள் நோக்கம் கற்பிக்கப் பட்டு, கொச்சைப் படுத்தப் படுகிறார்.
தனி ஒரு மனிதனாக இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தியும், பார்ப்பனீயத்தின் ஆணி வேரையே பிடுங்கி எறிந்தும், அதில் தன் உயிரையும் விட்ட போராட்டக்காரன் சங்கர ராமன் இன்று இறந்த பின்னும் எல்லோராலும் கொச்சைப் படுத்தப் படும் பொருளாக ஆகி விட்டார்.
ஒரு முக்கியமான விடயத்தையும் இங்கே நண்பர் வேந்தர் எழுப்பியுள்ளார்.
அதாவது “ஒரு தலித் சங்கராச்சாரியார் ஆக வேண்டும் என்று சங்கர ராமன் குரல் குடுத்தாரா?” என்று கேட்டு இருக்கிறார்.
நாம் முன்பே எழுதியுள்ளது போல சங்கர ராமனின் பணி, இந்திய சமுதாயத்தை சீர் திருத்துவதோ, இந்து மதத்தை செப்பனிடுவதோ அல்ல. அது மிகப் பெரிய பணி, அதற்கான ஆற்றலும், செயல் திறனும் சங்கர ராமனிடம் இல்லை என்பதே உண்மை.
அவருடைய ஒரே குறிக்கோள் தான் வாழும் இடத்திற்கு அருகாமையில், தான் மேற்கொண்ட அதே கோவில் நிர்வாக துறையில் பெரும் முறைகேடு நடப்பதை தட்டிக் கேட்டதாகவே இருந்தது.
ஆனால் அவருடைய அந்த செயலின் விளைவுகள் இந்திய சமுதாயத்தைத் திருத்தவும், இந்து மதத்தைச் செப்பனிடவும், ஒரு தலித் சங்கராச்சாரியார் ஆவதற்க்குமான வழிகளை உண்டு பண்ணியுள்ளது.
இந்தியாவின் ஆன்மீக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அதன் முக்கிய நாயகர்கள் கிருஷ்ணர், புத்தர், சங்கரர், அப்பர், விவேகானந்தர் போன்றவர்களில், சங்கரர் மட்டுமே பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவரும்.
நான் வேந்தன் அவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்க விரும்புகிறேன்.
சங்கராச்சாரியார் ஆவது என்றால் என்ன? பில்லியன் கணக்கில் சொத்துக்கள், கல்லூரிகள், சக்தி வாய்ந்த அரசியல் செல்வாக்கு இவைகளைப் பெற்று, அதனால் பலரும் வந்து பார்க்கும்படியாகவும், கும்பிட்டு செல்லும்படியாகவும் உள்ள நிலை தான் சங்கராச்சாரியார் ஆவது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அப்படி என்றால் இப்படிப்பட்ட சங்கராச்சாரியார் பதவிக்கும், பிற மாண்புமிகு, மான மிகு பதவிகளுக்கும் என்ன பெரிய வேறுபாடு?
இப்படிப்பட்ட “சங்கராச்சாரியார்” பதவி வேண்டுமென்றால், அரசாங்கமே ஆங்காங்கே (ஐ.ஐ.டி. களை உருவாக்குவது போல) மடங்களை உருவாக்கி, அருகிலே கோவில், அதற்க்கு நிலங்களையும், கல்லூரிகளையும் அளித்து தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை “சங்கராச்சாரியார்” ஆக நியமித்து விடலாமே!
காஞ்சியில் உள்ள மடமே தமில் நாட்டில் உள்ள பார்ப்பனர்களால் உருவாக்கப் பட்ட நிறுவனம்தானே ? ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாறு தெளிவாக உள்ளதே? அதில் அவர் நிருவிய 4 மடங்கள் பூரி, சிருன்கேரி, துவாரகா, பத்ரினாத் எனபாகத்தானே உள்ளது?
அப்படி அவரால் உருவாக்கப் பட்ட இந்த 4 மடங்களை விட, அவர் பேரை வைத்து உருவாக்கப் பட்ட காஞ்சி மடம் தானே பேரும் புகழும் பெற்று விளங்கியது? அதற்க்கு காரணம் பணமும், அரசியல் செல்வாக்கும் தானே?
அது மட்டும் இல்லாமல் ஆதி சங்கரர் தானே உருவாக்கிய நான்கு மடங்களிலும் இப்பொது என்ன பெரியதாக சாதித்து விட்டார்கள்? அப்படி அவர்கள் சங்கரரின் கருத்தை மக்களிடம் சரியாக
பரப்பியிருந்தால் மக்கள் எப்படி ஜெயெந்திரரிடம் ஏமாறுவார்கள்?
சங்கரரின் முக்கிய சிறப்பு, அவரது தத்துவ கண்டு பிடிப்பு தான்.
போகிற போக்கில் சில மடங்களையும் அமைத்து விட்டுப் போனார்.
ஆதி சங்கரர் தன்னுடைய ஆன்மீக சக்தியை நாலாகப் பிரித்து, நாலு மடங்கலிலும் கொஞ்சம் ஒட்டி வைத்து விட்டுப் போனாரா? அந்த சக்தி கதிர் வீச்சாக வருபவர் மீது பிரகாசிக்கிறதா?
எனவே மடம், மடம் என்று மடத் தனமாக அலைவது எதற்க்கு?
நான் சொல்லுவது என்னவென்றால் அத்வைத மடமோ, கடவுள் மடமோ அதை உருவாக்கியவர்கள் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடை பெற அமைப்புகள உருவாக்குவார்கள். ஆனால் பின்னே வருபவர்கள் ஆராய்ச்சியை பரணில் போட்டு விட்டு சொத்து குவிப்பு, சொகுசு என்று ஆக வேண்டியதைப் பார்ப்பதுதான் நடக்கிறது.
புத்தர், சங்கரர், அப்பர், விவேகானந்தர் ஆகியோர் தங்கள் ஆன்மீகப் பணியைத் துவக்கிய போது அவர்களிடம் பணம், அரசியல் செல்வாக்கு இருந்ததா?
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பணத்தையோ, செல்வாக்கையோ நம்பியது உண்டா? பணமோ, தங்கமோ, செல்வாக்கோ, பதவியோ-இந்த உலகத்தில் மக்கள் அடைய விரும்பும் எந்த பொருளும்- அவர்களைக் காக்க முடியாது என்பது தானே ஆன்மீகத்தின் அடிப்படை?
தொண்ணூராயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், திருபாய் அம்பானியை மரணத்தில் இருந்து காக்க முடிந்ததா?
ஆஃப்கானில் பயங்கரவாத குழுவிடம் சிக்கிய ஒருவரை அமேரிக்க, ருஷிய, சீன, இந்திய நாடுகள் கூட்டாக அறிக்கை விட்டாலும் காக்க நமுடியுமா? அப்படி மாட்டிக் கொள்ளாமல் அவர் “பத்திரமாக” வீட்டில் இருந்தாலும் அவர் எத்தனை நாள் சாகாமல் “பத்திரமாக” இருக்க முடியும்?
நம் நெருன்கிய உறவினர்கள் சாகும் நிலையில் இருந்தால் அழுவதத் தவிர நம்மால் ஆவது வேரென்ன?
எந்தக் கடவுளாவது இந்த உலகத்தில் எந்த மனிதனையோ, மிருகத்தியோ எப்போதும் சாகாமல் கப்பாற்றீ வைத்து இருக்கிறாரா?
இந்த சாவு, நோய் ஆகிய பிரச்சினகள் மட்டும் அல்லாமல் இன்னும் எத்தனையொ பிரச்சினைகள் நம்மை வந்து தாக்குகிறதே?
பிரச்சினைகலுக்கு அடிமையாக வாழ்ந்து, நோயால் வருந்தி, கடைசியில் சாகும் நாம், நம்முடைய வாழ்க்கைய நாமே தீர்மானிக்கும் வலிமை உடையவராக, அடிமை நிலையிலிருந்து முழு விடுதலையான நிலையை, அதாவது எந்த துன்பமும் நம்மை தாக்க முடியாத அளவுக்கு முழு விடுதலையான நிலையை அடைய முடியுமா?
என்னுடைய கவலையும் அக்கறையும் கடவுளைப் பற்றி அல்ல- மனிதனைப் பற்றித்தான்
நான் உடபட இந்த உலகிலுள்ளா எல்லா மனிதர்களூம், கொடுமையான இயற்க்கையின் கையில் சிக்கி தவிக்கும் அடிமை நிலையில் உள்ளதாகவே நான் கருதுகிரேன். ஆனால் இந்த உலகில் நமக்கு கிடைக்கும் சிறு வெற்றிகளை வைத்து நாம் வலிமை உடையவர் என்று எண்ணி மயங்கி விடுகிறோம், என்பதாகவே முடிவுக்கு வருகிரென்! என்னைப் பொருத்த வரையில் இது ஒரு மிக முக்கியமான PROBLEM .
இதற்க்கு யாராவது SOLUTION கண்டுபிடித்தால் அவர்கள் ஆதி சங்கரர், புத்தர், விவேகானந்தர், “நாமார்க்கும் குடி அல்லோம்” அப்பர் வரிசையில் சேருவார்கள்.
எனவே நீங்கள் ‘தலித்த சங்கராச்சரியாக்கனும்னு’ என்று கூறுவது, ஆதி சங்கரர், புத்தர் போன்ற நிலையை அடைவதா? அது சிறிது கடினம் என்றாலும் நிச்சயம் முடியும். கடின உழைப்பு, விடா முயற்சி இவைதான் தேவை. அதை அப்படி ஆக விரும்பும் ஒருவர்தான் அந்த உழைப்பை அளிக்க வேண்டும். இந்த நிலையை அடைய பணமோ, அரசியல் செல்வாக்க்கோ உதவ முடியாது.
ஆனால் எனவே நீங்கள் ‘தலித்த சங்கராச்சரியாக்கனும்னு’ என்று கூறுவது, ‘ஜெயெந்திரர் போல சங்கராச்சாரியார்’ ஆவது என்றால் அது சிறிது எளிதானது. அதற்க்கு தேவை பணம், அரசியல் செல்வாக்கு, ஆள் பலம் இவைதான்.
ஒருவர் சங்கராச்சாரியார் ஆவது என்பது பார்ப்பனர்களின் கையில் இல்லை.
வேள்வி சடங்குகளை வைத்துக் கொண்டு, விடுதலை அடைய முடியாது என்ற உண்மையை புத்தர் நினைவு படுத்தியவுடன், அக்கால பார்ப்பனர்கள் வேள்வி சடங்குகளை வீட்டு விட்டு புத்தரிடம் ஓடினார்கள். ஆனால் புத்தர் விடுதலை அடைந்த உயிர் என்ன ஆகிறது என்று தெளிவாக கூறவில்லை. சூனியமாக ஆவதாக புத்தரின் சீடர்கள் கூறினர்.
ஆளற்ற தீவிலே தவிக்கும் ஒருவனை விமானத்தில் ஏற்றி தப்புவிக்கும் வேலையை புத்தர் செய்தார்.ஆனால் விமானம் எங்கே இறங்குகிரது என்று அவர் தெளிவு படுத்தவில்லை.
சங்கரர் அதையும் தெளிவு படுத்தினார். உடனெ சங்கரரிடம் ஓடினார்கள். எனவே பார்ப்பனர்கள் தான் சங்கரர் பின்னெ ஓடினார்களெ தவிர, சங்கரர் பார்ப்பனர்களல் உருவாக்கப் படவில்லை.
இன்றைக்கு இருக்கும் பார்ப்பனர்களுக்கு, அதாவது எல்லோராலும் பார்ப்பனர் என்று அழைக்கப் படுபவர்களுக்கு, யார் சரியான ஆன்மீக வாதி என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு கூட ஆன்மீக அறிவும் கிடையாது, அதப் பற்றி அக்கரையும் இல்லை. இவர்கல் மதிப்பது, பணத்தை, பட்சணத்தை, பதவியை தான். எனவே இவர்களுக்கு சரியான குரு ஜெயெந்திரர் தான்.
இந்தியாவின், இந்து மதத்தின் உண்மை ஆன்மீக தலைமை வெற்றிடமாக உள்ளது. தலித் சமுதயத்தினர் அதைப் புரிந்து கொண்டால் அந்த தலமைப இடத்தை அவர்கள் நிரப்பலாம்.
தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சங்கராச்சாரியார் ஆக சரியான நேரம் இதுவெ!
எனவே நீங்கள் ‘தலித்த சங்கராச்சரியாக்கனும்னு’ என்று கூறுவது, ஆதி சங்கரர், புத்தர் போன்ற நிலையை அடைவதா? அது சிறிது கடினம் என்றாலும் நிச்சயம் முடியும். கடின உழைப்பு, விடா முயற்சி இவைதான் தேவை. அதை அப்படி ஆக விரும்பும் ஒருவர்தான் அந்த உழைப்பை அளிக்க வேண்டும். இந்த நிலையை அடைய பணமோ, அரசியல் செல்வாக்க்கோ உதவ முடியாது. //
நண்பரே உங்கள் இந்துமத விசுவாசம் நடைமுறை உண்மையை மறைக்கின்றது என எண்ணுகிறேன்.கடின உழைப்பு,விடாமுயற்சி இருந்தாலும் ஒடுக்கபடும் சாதியில் உள்ளவர் எவ்வாறு இந்துமத குரு இடத்தை அடைவார் என்பது அனைவரும் அறிந்ததே..
சான்று: சிதம்பரம் தில்லையில் எத்தனை ஆண்டுகள் ஆறுமுக சாமியார் போராடியிருக்கிறார்.நீங்கள் கூறுவது போல் அல்லாமல் அரசியல் செல்வாக்குதான் தீட்சிதர்களை இத்துணை ஆண்டு காலம் அங்கே சொகுசு வேலை பார்க்கவைத்தது;ஆறுமுக சாமியை உள்ளே விட மறுத்தது.
இது அவரின் விடா முயற்சி,கடின உழைப்பு என்று சொல்வதை விட அரசுக்கெதிரான,பண பலததிற்கேதிரான பல போராட்டங்களுக்கு பின்னேதான் சாத்தியமாயிற்று.
மறு மொழி அளித்த நண்பர் வேந்தன் அவர்களுக்கு நன்றி.
//நீங்கள் ‘தலித்த சங்கராச்சரியாக்கனும்னு’ என்று கூறுவது, ‘ஜெயெந்திரர் போல சங்கராச்சாரியார்’ ஆவது என்றால் அது சிறிது எளிதானது. அதற்க்குத் தேவை பணம், அரசியல் செல்வாக்கு, ஆள் பலம் இவைதான்//
தில்லை அந்தணர்கள் கிட்டத்தட்ட ஜெயேந்திரரைப் போன்றவர்கள்தான். அவர்கள் பூசனைத் தொழிலை தங்கள் பிழைப்புக்கான ஆதரமாகவே வைத்து உள்ளனர். ஆறுமுக சாமியாரினால் தங்கள் பிழைப்பு கெடுமோ என்ற அச்சத்திலே அவர்கள் கடுமையாக எதிர்ததனர்! கோவில் நிர்வாகம் தங்கள் கையை விட்டுப் போய் விடுமோ என்ற கவலையே அவர்களுக்கு இருந்தது. அப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள் ஆறுமுக சாமியின் ஆன்மீக உணர்வை புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
நான் முன்பே கூறியது போல நீங்கள் அடைய விரும்புவது என்ன? உங்கள் குறிக்கோள் என்ன என்று முதலில் தெளிவாக்குங்கள்! தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், தில்லை அம்பல தலைமை பூசாரி பதவி, காஞ்சி நிறுவன தலைமை பதவி போன்ற பதவிகளை அடைவதுதான் உங்கள் குறிக்கொளா?
ஆனால் நான் கூறிய கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவை, இது போல பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் பூசனை செய்யும் உரிமையை பெறுவதற்க்கோ, பார்ப்பணர்கள் உருவாக்கிய மடத்தில் தலைமை பதவி பெறுவதற்க்கோ அல்ல.
நான் கூற வந்தது தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புத்தர், ஆதி சங்கரர், விவேகானந்தர் போன்ற நிலையை அடைவது பற்றிதான்.
புத்தர் என்ன செய்தார்? அவருடைய கால கட்டத்தில் மிகப் பெரிய வேள்விகளை நடத்திக் கொண்டிருந்த பார்ப்பனர்களிடம் சென்று “என்னையும் உங்கள் யாக குண்டங்களில், நான் விருப்பப் படும் மந்திரங்களை ஓதி, யாக குண்டத்தில் நெய்யை விட்டு, யாகம் செய்ய விடுங்கள்” என்று கூறிக் கொண்டு இருந்தாரா? புத்தர் பார்ப்பனர்களை பற்றிக் கவலைப் படவில்லை. அவருடைய கருணை மனம், உலக மக்களின் துயரங்களுக்கு ஒரு விடிவைக் கண்டு பிடிக்க விரும்பியது. தன்னுடைய கடின உழைப்பு , விடா முயற்சி மூலம் துயரத்தில் இருந்து விடுதலை பெரும் வழியை அவர் கண்டு பிடித்தும் விட்டார். வேள்விகளை “கட்டிக் கொண்டு அழுத” பார்ப்பனர்களை தாண்டி ஆன்மீகத்தில் வேகமாக மேலே சென்று விட்டார்.
உலகமே புத்தரை பின் பற்ற ஆரம்பித்து விட்டது. ஆனால் புத்தர் ஆன்மீகத்தில் உயரிய நிலையை அடைந்து விட்டதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அக்கால பார்ப்பனருக்கு ஆனமீக அறிவு இருந்தது. எனவே அவர்களும் புத்தரை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
நான் கூறிய நிலை இது போன்றதுதான். “தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், உலக மக்களுக்கு உதவக் கூடிய உயரிய ஆன்மீக உண்மைகள கண்டறியும் நிலைக்கு உயர முடியும்” என்பதுதான் நான் கூறுவது.
கோவில்கள் என்பவை, அதில் வழிபாடு செய்யும் பக்தர்களின் அர்ப்பணிப்பு எண்ணத்தினால் தான் ஆன்மீக வலிமை பெறுகின்றன.
பழனி கோவிலின் மூல விக்கிரகம், போகர் என்னும் சித்தர் தானே உருவாக்கி வழிபட்டு வந்த விக்கிரகம்தான். போகருடைய சிறந்த பக்தியினால்தான் அந்த இடம் புனிதமாக கருதப் பட்டு பிற்காலத்தில் பெரிய கோவிலாக உருவாக்கப்பட்டது.
காலஹஸ்தியில் உள்ள கோவில் கண்ணப்ப நாயனாரின் பக்தியின் சிறப்பு கருதி உருவாக்கப்பட்டது.
போகரோ, கண்ணப்பரோ, 1500 கிலோ தங்கம் வைத்து, இலட்சக் கணக்கானவர் வந்து குமியும் கோவில் கட்டவில்லை. அவர்கள் ஒரே ஒரு சிலையை வைத்து காட்டிலே, மலையிலே தனிமையிலே ஆன்மீகத்திலே கவனம் செலுத்தினார்கள்.
போகரைப் போல, கண்ணப்பரைப் போல, புத்தரைப் போல, ஆதி சங்கரரைப் போல ஆறுமுக சாமியாரோ, நீங்களோ, நானோ பக்தியில், ஆன்மீகத்தில் அர்ப்பணிப்பு காட்டி நாமே ஆன்மீகத்தில் உயர முடியும். அப்போது நாம் வழி பட்ட சிறிய இடம் பிறகு பெரிய கோவிலாகக்க கூடும்.
ஆனால் அதை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.
ஆனால் நீங்கள் “பார்ப்பனர்கள் ஆங்கீகரிக்கவில்லை, பார்ப்பனர்கள் அனுமதிக்கவில்லை” என்று, பார்ப்பனர் வாயால் பாராட்டுப் பெறுவது, அவர்களால் அங்கீகாரம் பெறுவது, அவர்கள் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து இருக்கும் கோவிலகளில் பூசனை வழிபாடு செய்ய அனுமதி – என்று பார்ப்பனர்கள் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் வழியையே முக்கியமாக கருதுகிறீர்கள்.
நான் புத்தரைப் போல. சங்கரரைப் போல, விவேகானந்தரைப் போல பார்ப்பனர்களையும் தாண்டி மேலே சிந்திக்கும் முறையைக் கூறுகிறேன்.
பார்ப்பனர்களை முன்பு மரியாதை செய்து அவர்களைப் பின்பற்றியது போல, இப்போது பார்ப்பனர்களைத் திட்டிக் கொண்டே அவர்களைப் பின் பற்றும் செயல்தான் நடக்கிறது.
இன்னும் எத்தனை நாட்கள் பார்ப்பனர்களின் பின்னாலே செல்லும் செயல் என்பது தெரியவில்லை.
பார்ப்பனர்களோ, முட்டாள் தனமாக ஆன்மீக வலிமையை முற்றிலும் இழந்தவர்களாக ஜெயேந்திரர் போன்றவர்களைன் காலில் விழுவதை தவிர வேறேதும் அறியாத வகையில், பணம், பதவி, அதிகாரம் இதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
அவர்களோடு முண்டியடித்துப் போராடுவது ஆட்சி அதிகாரத்தை, சொத்தை கைப்பற்றும் செயலாகவே இருக்குமே தவிர உண்மையான ஆன்மீக உயர்வாக அமையாது.
நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.
என்னை இந்துமத விசுவாசி என்று நினைக்கிறீர்கள். இந்து மதத்தில் இருந்து பல உண்மைகளை கற்றவன்தான் நான்.
அதோடு ஏசு கிரிஸ்துவிடமும், இஸ்லாமிய மார்க்ககதிடம் இருந்தும், பெரியாரிடம் இருந்தும், சாக்ரடீசிடம் இருந்தும் பல கருத்துக்களை கற்றவன்.
At the same time , I always take liberty to check whether the ideas of these religions are true. I also think laterallay and linearly along with these ideas which i learnt from these religions, and I also think lataerallay and linearly other than these ideas .
Hence It is not necessary for me to be a விசுவாசி! In fact I can not be a விசுவாசி to any religion or dogma- because I want to be a free thinker.
I am not a self seeker. I never tried or wish to be praised or eulogised by others. I never posted my name or photo in any blogs nor opened any blog for my own!
My only aim is to seek the truth, If I have to be a விசுவாசி for some one its for Truth , absolute and unqualified truth.
நான் யாருக்காவது விசுவாசியாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டால் உண்மைக்கு, கலப்படமில்லாத அச்சு அசலான உண்மைக்கு மாத்திரமே விசுவாசியாக இருக்க விரும்புபவன்!

mami
thamilil
You have tested it and writing form your personal experience or you find some information online?
assalamu
vanakkam
நக்கிப் பிழைக்கும் ஜெயாவும்,கருணாவும் இருக்கும் வரை,தமிழன் தலை நிமிர முடியாது!