பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்!(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

‘பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கட்டுரையில் , பார்ப்பனர்களை மட்டும்தான் குற்றம் சொல்கிறேன். பார்ப்பனரல்லாதவர்களி்ல் எவ்வளவோ பேர் ஈழ மக்களுககு எதிராக இருக்கிறார்கள் அவர்கைளப் பற்றி ஏன் எதுவுமே சொல்லவி்ல்லை’ எனறு  பார்ப்பனர்கள் நம்மை கேட்கிறார்கள்.

அப்படி கேட்கும்போதுகூட தங்களின் அந்தச் செயலுக்கு வருத்தமோ அல்லது அதற்குரிய விளக்கமோ தராமல் ‘மத்தவன் மட்டும் யோக்கியமா?’ என்றுதான் மடக்குகிறார்கள்.

பொதுப்புத்தியில் இருந்து கேட்கப்படும் இதுபோன்ற கேள்விககு ஏற்கனவே நான் (12 02 2009) பதில் அளித்திருக்கிறேன். தேவைக்கருதி அந்தப் பதிலை இங்கே மீண்டும் பிரசுரிக்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக பார்ப்பன ஊடகங்கள் சொல்லி வைத்தாற்போல் ஒன்றுபோலவே செயல்படுகின்றனவே?

-கு. தமிழ்ச்செல்வன்

ஒருமுறை தந்தை பெரியார், பார்ப்பனர்களின் சுயநலத்தை விளக்கி சொல்லும்போது:

“நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறதை எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று சொன்னார்.

‘என்னடா இது பைத்தியத்துலக் கூடவா பார்ப்பனப் பைத்தியம், பார்ப்பனரல்லாத பைத்தியம் இது கொஞ்ச ஓவரா தெரியுதே’ என்கிற எண்ணம் அதை படித்தபோது எனக்கு தோன்றியது.

ஆனால், இந்த சுப்பிரமணிய சுவாமி, சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து ராம் போன்றவர்களின் செயல்களைப் பார்க்கும்போது, பெரியார் எவ்வளவு தெளிவா, தீர்க்கமா சிந்திச்சிருக்காருன்னு புரியுது.

‘பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை’ என்று பெரியார் சொன்னார்.

தமிழ்த்தேசியவாதிகள், ‘பெரியார்தான் தமிழர் இல்லை. பார்ப்பனர்கள் பச்சைத் தமிழர்கள்’ என்று திருப்பிப் போட்டனர்.

ஆனால், தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போது, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போதெல்லாம், பார்ப்பனர்கள் தமிழ்தேசியவாதிகளின் கூற்றைப் பொய்யாக்கி, பெரியாரின் வார்த்தையை மெய்யாக்குகிறார்கள்.

‘ஈழத்தமிழர்களை குவியல் குவியலாக கொலை செய்கிறான் சிங்கள ராஜபக்சே. இந்திய அரசே, அதை தடுத்து நிறுத்து’ என்று தமிழகத் தெருக்களில் மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் என மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது, ‘டிசம்பர் மாத கச்சேரி’ என்று சபாக்களில் கர்நாடக சங்கீத ஆலாபனைகளில் தாளம்போட்டு ‘ச்சூ’ கொட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள் பார்ப்பனர்கள்.

அவர்களின் ‘ச்சூ’, ஒலி ரசனையின் அடிப்படையில்தான் எழுகிறதே தவிர, தமிழர்களின் மீதான இரக்கத்தின் அடிப்படையில் ஒருநாளும் எழுவதில்லை.

(வீதியில் இறங்கி போராடுவதை கேவலமாக, பொது மக்களுக்கு இடைஞ்சலாக கருதுகிற இவர்கள்தான், கொலை செய்த ஜெயேந்திரனுக்கு ஆதரவாக, வீதியில் இறங்கி போராடினார்கள்.)

ஈழத்தமிழர்களின் துயரங்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், என்பதுகூட பிரச்சினை இல்லை. அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதுதான் வருந்ததக்கது. அதையும்மீறி, ஒன்றிரண்டு பார்ப்பனர்கள் ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறையோடு பேசுகிறார்கள். ‘பரவாயில்லையே’ என்று நாம் புருவம் உயர்த்தினால், ஈழத்தமிழர்கள் பிரச்சினையில், மாவரைக்கிற கருணாநிதியை திட்டுவதற்கான ஒரு நல்வாய்ப்பாகத்தான் ஈழத்தமிழர்களின் துயரங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், ஞாநியைப் போல.

‘தங்கபாலு, ப. சிதம்பரம், இளங்கோவன், திருநாவுக்கரசு, குமரி அனந்தன், ஓ. பன்னீர்செல்வம், தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்கள் பச்சைத் தமிழர்கள்தான். அவர்கள் என்ன ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவா இருக்கிறார்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம்.

இவர்கள் தங்கள் சொந்தக் கருத்தைவிடவும் தாங்கள் சார்ந்திருக்கிற கட்சியின் நிலைபாட்டை பிரதிபலிக்கிறார்கள். அல்லது இவர்களுக்கு சொந்தக் கருத்து என்பதே கிடையாது. எது அவர்களுக்கு லாபமாக இருக்கிறதோ அதை செய்கிறார்கள். ஆக, இவர்களை தமிழர்கள் என்றோ, இல்லை அவர்கள் சார்ந்திருக்கிற ஜாதிகளின் பிரதிநிதிகள் என்றோகூட முடிவு செய்யமுடியாது.

ஆனால், கட்சி சாராத பார்ப்பனர்கள்கூட பெரும்பாலும், ஈழத்தமிழர்கள் விவகாரங்களில் எதிராக இருக்கிறார்கள். அல்லது  அக்கறையற்று இருக்கிறார்கள். பிராமணர் சங்கம் உட்பட.

பத்திரிகைகளில்கூட, பார்ப்பனரல்லாத பத்திரிகைகளில் வருகிற இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளுக்கு பின்புலமாக,  இலங்கை அரசின் ‘விருந்தாளி’யாக இன்ப சுற்றுலா சென்று வந்த பத்திரிகையாளர்கள், தாங்கள் வாங்கிய காசுக்கு விசுவாசமாக செய்திகள் வெளியிடுகிறார்கள்.

ஆனால், துக்ளக், தினமலர், இந்து நாளிதழ்கள் இன்ப சுற்றுலாவிற்கு முன்பிருந்தே, ஈழத்தமிழர்களுக்கு எதிராகத்தான் இயங்குகிறார்கள்.

“நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறத எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று பெரியார் சொன்னது எவ்வளவு தீர்க்க தரிசனம்.

தேசப்பற்றாளரைப்போல், ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்று தீவிரமாக எழுதிய சுப்பிரமணிய பாரதி, ‘பார்ப்பன எதிர்ப்பு’  அல்லது ‘பார்ப்பனரல்லாதார் உரிமை’ என்று சிலர் முயன்றபோது, அவர்கள் மீது சரமாரியாக கல்லை விட்டெறிந்தைப் போல்,

சுற்றுசூழல் பாதுகாப்பு,  முதலாளித்துவ எதிர்ப்பு, இயற்கை வேளாண்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம், அமெரிக்காவின் அட்டூழியம் என்று எழுதினால் ஓடி வந்து  அதற்கு ஆதரவாக ஒரு நக்சலைட்டைப் போல் கருத்து சொல்கிற பார்ப்பனர்களில் பலர்,

பெரியார் – அம்பேத்கர் நிலையில் இருந்து இந்து மத எதிர்ப்பு, இட ஓதுக்கீடு ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, பாரதியின் பார்ப்பனப் பாசம் என்று நாம் எழுதினால், அதில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளாமல், ஒரு வெறிப்பிடித்த தெருநாய் பாய்ந்து வந்து கடிப்பதுபோல், நம்மை கடித்து குதுறுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகளில் பலர்.

ஆக, பெரியார் சொன்னபடி பெரியார் கட்சிக்காரர்கள் நடந்துகொள்கிறார்களோ இல்லையோ, பார்ப்பனர்கள்தான் பெரியார் சொன்னபடி நடந்து கொள்கிறார்கள்.

குறிப்பு:

ஈழத்தமிழர்களின் துயரங்களுக்காக தன் வருத்தத்தைத் தீவிரமாக பதிவு செய்கிற, மிகச் சிறுபான்மையான ஒன்று, இரண்டு பார்ப்பனர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றபடி, எந்த நேரமும் நான் என்ன எழுதுகிறேன் என்பதையே கண்காணித்து, என்னை பாய்ந்து புடுங்குகிற அறிவாளிகளே… ஆரம்பிங்க உங்க வேலையை…

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

16 thoughts on “பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்!(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

 1. பழைய பின்னூட்டங்கள்:

  ஆண்ட்ரு சுபாசு (05:44:55) :

  வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கி ,விசாலமாக மூளையை செயல்படவிட்டு எழுத்துருவாக்கும் உங்கள் திறமை வியப்பளிக்கிறது.அருகில் இருந்து கற்றுக்கொள்ள அநேகம் உள்ளது ..

  மற்றபடிக்கு …..”எந்த நேரமும் நான் என்ன எழுதுகிறேன் என்பதையே கண்காணித்து, என்னை பாய்ந்து புடுங்குகிற அறிவாளிகளே… ஆரம்பிங்க உங்க வேலையை…”

  இந்த வார்த்தைகள் கொஞ்சம் நெருடலை ஊட்டுகிறது.இத்தகைய தூசிகளின் பாதிப்பு தொடருமாயின் …அது உங்கள் கருத்தின் திசையை மாற்றகூடுமோ என்ற ஐயத்தை உண்டு பண்ணுகிறது ..

  12 02 2009
  தமிழ் ஓவியா (07:09:18) :

  சிறப்பான பதிவு.

  12 02 2009
  Dr. V. Pandian (12:57:21) :

  மதிமாறன் அவர்களே!

  தமிழ்த்தேசிய வாதிகள் பெரியாரை வேறு மனிதராக பார்க்கவில்லை. ஒரு சிலரின் செயல்களை வைத்து அனைவரையும் பழிதீர்க்காதீர்.

  பெரியாரின் மீது மாறா நன்றியுணர்வு கொண்டுள்ளவர்கள் தாம் தமிழர்கள்.

  தமிழர்கள், நீண்டகாலமாக தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களையும் தமது உறவுகளாகத்தான் பார்க்கின்றனர்.

  தமிழ் என்று பேசினாலேயே சிலருக்கு தாம் அன்னியப்பட்டு வட்டதைப்போல உணர்கின்றனர். அது தேவையில்லை!

  (சிதம்பரம் பேசுவதற்கும், தங்கபாலு, இளங்கோவன் போன்றோர் பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் எந்த அடிப்படையில் வருகிறது என்று நீங்கள் உணரவில்லையானால், உங்களின் நேர்மையை நான் சந்தேகிக்க நேரும்.நாம் பகுத்தறிவாளராயிருந்தால் மட்டும் போதாது!)

  நாமெல்லாம் இனரீதியாக தமிழர்களே!

  பார்ப்பான் நம்மை பிறப்பின் அடிப்படையில் பிறத்தான், அவனது பாதுகாப்பிற்காக! இது பிறித்தாளும் சூழ்ச்சி!

  அதேபோல, நம்மை மொழியாலும் பிறித்தான்! வட்டார வழக்குகளாக இருந்த தமிழை சமஸ்கிருதம் கலந்து திட்டமிட்டு, தென்னிந்திய மொழிகளை உருவாக்கினான். அவற்றின் முதல் இலக்கண நூல்கள் வடமொழியில் இருப்பதே அதன் சாட்சி!

  ஆக, நாம் நம்மை சூத்திரன் என்று அழைப்பது எப்படி கேவலமோ, அதேபோல தான், நாம் நம்மை தமிழரல்லாதவராக அழைத்துக்கொள்வது!

  தமிழகத்தில் தமிழே பேசுவோம்! தமிழராக நம்மை இனம்காண்போம்! சுய மரியாதையுடன் வாழ்வோம்!

  13 02 2009
  dr.anbumani (10:25:20) :

  தோழர் மதி, அருமையான பதிவு. நடப்பு நிகழ்வுகளோடு அய்யாவின் அண்ணலின் கருத்துக்களை சிறப்பாக ஒப்பு மைப்படுத்தி எழுதுகிறீர்கள்.இந்திய பார்ப்பன ஆளும் வர்க்கத்தை எதிர்க்க வீழ்த்த அய்யா, அண்ணலின் கருத்துக்கள் அவசியம்.

  15 02 2009
  prasanna (16:32:17) :

  உடன்பிறப்பே! ஈழம் ஒருபுறம் எரிய, தமிழகம் ஒருபுறம் கொதிக்க, தங்களை தமிழின தலைவர்கள் என சொல்லித்திரிபவர்கள் தங்கள் நாடகங்களை அறங்கேற்ற, நானும் என் பங்குக்கு ஓரளவிற்கு செய்ய, ஒன்றுமே வேலைக்காகாமல் போய்விட்டது. நான் என்செய்வேன்? 40 MP களும் ராஜிணாமா செய்வார்கள் என்று நான் பிரதமரிடம் கூறிய போது அவர் ரிஸீவரை லைனிலேயே வைத்துவிட்டு தடாலென தரையில் வீழ்ந்து, புரண்டு புரண்டு சிரித்தாரே, அப்போது நான் அந்த அவமானங்களை தாங்கிக்கொண்டு அண்ணா வழியில் எதையும் தாங்கும் இதயமாக நின்றதெல்லாம் யாருக்காக ? உணக்காகத்தானே உடன்பிறப்பே!

  இப்போது நீங்களெல்லாம் உசாராகி விட்டதால் வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. ஆமாம் நானும் அழுது அழுது கண்கள் பொங்கி விட்டன. கடிதம் எழுதி எழுதி கை வீங்கிவிட்டது. உலகத்தமிழர்களின் அழுகையை நிறுத்த நான் எடுத்த சிறுமுயற்சி தான் இந்த செருப்பொலி, மன்னிக்க சிரிப்பொலி. இந்த காமெடி சேனலை நீங்கள் பார்ப்பது மூலம் உங்கள் கவலைகளை மறக்கலாம். இலங்கைத்தமிழர்கள் இனியும் கவலைப்படவேண்டா. “டயலாக் டிவி” வழியாக உங்களுக்கு சிரிப்பொலி கிடைக்கும். மக்கள் டிவியைப் பார்த்துப் பார்த்து மண்டையை சொரிந்து கொண்டிருக்கும் மலேய தமிழர்கள் இனி “அஸ்த்ரோ” வழியாக சிரிப்பொலியைக் காணலாம். தமிழகமே! இன்னும் இசையருவிக்கே இடமளிக்காமல் இழுத்தடிக்கும் என் இதயம் இனித்த இம்சைகளின் சன்குழுமம் சிரிப்பொலியை சிதைக்காமல் அளிக்குமா என்பது சந்தேகமே! நான் சிரிப்பொலியென்றால் அவர்கள் ஆதித்யா என்கிறார்கள். நான் என் செய்வேன்..,மாற்றச் சொல்ல முடியாது அந்தப் பெயரை. ஆதித்யா என்பது என் கண்மணி கணிமொழியின் மகனல்லவா? பாருங்கள் என்குடும்ப சிக்கலை, அது காய்ந்து போன இடியாப்பம் போன்றது, பிரிக்க நினைத்தால் உடைந்து விடும். எந்தமிழ்மக்களே! உங்கள் துயரங்களைப் போக்க சிரிப்பொலி வரும் 22ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. தமிழகம் இலங்கை மட்டுமின்றி உலகமே சிரிப்பாய் சிரிக்கட்டும். -கலைஞர்

  15 02 2009
  ந.செந்தில் (16:39:19) :

  தமிழர்கள் என்று சொல்லும்போதெ நமக்குள் ஒரு பிரிவினை வந்து விடுகிறது.

  பெரியார் தொண்டராக இருந்தாலும் தமிழ் தேசியவாதியாக இருந்தாலும் நாம் அனைவரும் தமிழரே.

  நமக்குள் பிரிவினை வரும்போது தான் பாப்பான்
  தலை தூக்குகிறான் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

  உலகின் மூத்த குடி,கிரேக்கர்களுக்கு வணிகம் கற்று கொடுத்தவர்கள் அண்டை மாநிலத்தவர்க்கு விவசாயம் கற்று கொடுத்தவர்கள் எல்லாம் உண்மை தான்

  ஆனால் இனிமேல் நமக்குள் ஒற்றுமை இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்ட நிலை விரைவில் தமிழகத்துலும் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

  16 02 2009
  Shyam (12:31:59) :

  நமக்குள் பிரிவினை வரும்போது தான் பாப்பான்
  தலை தூக்குகிறான் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.///

  பார்ப்பனியமும் முதலாளித்துவத்தின் கூறு தான்.

  மக்கள் வர்க்கரீதியாக அணிதிரலாமலிருக்க, அதிகாரமையங்கள் உருவாகிய கருத்தியல் கூறுகளையே நாம் பின்பற்றிக்கொண்டு, அவற்றையே எதிர்ப்பது எவ்விதம்?? தமிழர் தமிழரல்லாதோர் என்பதும் அவ்வகையான கருத்தியல்க்களே என்பது என் கருத்து!

  தோழர்.மதிமாறன் விளக்குங்களேன்??

  18 02 2009
  oru tamilan (10:54:35) :

  கலைஞர் அழைக்கிறார் வாருங்கள் தமிழ்ர்களே ஈழத்தின் அழுகையொலி மறக்க திராவிட இன பாதுகாவலர் கலைஞரின் சிரிப்பொலி தொலைக்காட்சி காண்போம்

  28 02 2009
  verummaramum (15:39:18) :

  melum ezhuthavum

 2. //ஈழத்தமிழர்களை குவியல் குவியலாக கொலை செய்கிறான் சிங்கள ராஜபக்சே. இந்திய அரசே, அதை தடுத்து நிறுத்து’ என்று தமிழகத் தெருக்களில் மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் என மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது, ‘டிசம்பர் மாத கச்சேரி’ என்று சபாக்களில் கர்நாடக சங்கீத ஆலாபனைகளில் தாளம்போட்டு ‘ச்சூ’ கொட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள் பார்ப்பனர்கள்//

  டிசம்பர் மாதத்தில் பார்ப்பனர்கள் கச்சேரியில் உச் கொட்டியதை அங்கலாய்க்கும் மூடரே, அந்த டிசம்பர் மாதம் முழுவதும் தமிழ் நாட்டில் திரையரங்குகள் எதுவுமே ஓட வில்லையா. தமிழர்களில் பிராமனர் அல்லாத யாருமே தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்கவில்லையா. விசில் அடிக்கவில்லையா. ஹீரோயின் தொப்பிளை ரசிக்க வில்லையா? அல்லது பார்ப்பனர் அல்லாத வேறு ஜாதிக்காரர்கள் யாருமே டிவி சீரியல் பார்க்கவில்லையா. மானாட மயிலாட குத்தாட்டத்தை ரசிக்கவில்லையா அல்லது பார்ப்பன எதிர்ப்பு தொலைக்காட்சி அதை ஒளிபரப்பாமல் நிறுத்தி விட்டதா.அல்லது டாஸ்மாக் முழுவதும் டிசம்பர் மாதத்தில் மூடி வைத்து பிராமனர் அல்லாத ஜாதியினர் யாரும் குடித்துக் கூத்தடிக்காமல் தான் இருந்தார்களா? மடையர்களே. பார்ப்பன எதிர்ப்பு சாடிச மனோவியாதியை ராமசாமி நாயக்கர் தோற்று வித்தார், நீங்கள் தொடர்கிறீர்கள்…தொழிலாகவே செய்கிறீர்கள் அவ்வளோதான்.

 3. ஐயா ராம் அவர்களே,

  வேறு எவனுமே டிவி பாக்கலியா, சினிமாவுக்குப் போகலியான்னு கேக்கறீங்க. இதையே தான் மதிமாறன் தனது பதிவுலயும் சொல்லிருக்கிறார். பார்ப்பனர்களில் யாராவது ஈழத்தமிழர்களுக்காக எதாவது செய்தார்கள் என்று உங்களால் சொல்ல முடிந்ததா? உங்களால் மதிமாறனை அவதூறு செய்ய மட்டும் தான் முடியும். இப்படி உங்களை நீங்களே அம்பலப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக மதிமாறனின் பதிவுகளை தவிர்த்துவிடலாம்.

 4. //‘பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை’ என்று பெரியார் சொன்னார்.

  தமிழ்த்தேசியவாதிகள், ‘பெரியார்தான் தமிழர் இல்லை. பார்ப்பனர்கள் பச்சைத் தமிழர்கள்’ என்று திருப்பிப் போட்டனர்.//

  யார் அந்த தமிழ்த் தேசியர்கள்? என்ன படங் காட்டுறீங்க? ஒரு வேளை
  பெரியார் காலத்துல இருந்த மா.போ.சி, ஆதித்தனார், கொஞ்ச காலம் மறைமலையாரோட இருந்த ஜீவா, இவங்களத் தான் தமிழ்த் தேசிய
  வாதிகளாக் கருதறீங்களோ? தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் தொட்டு சுப.வீ., தியாகு, மணியரசன், பழ.நெடுமாறன், தொல்.திருமா வரை பெரியாரை ஏற்றுக் கொண்டோர் தான் தமிழ்த் தேசிய மரபில் உண்டு! இவர்களில் சிலர் அவரின் சில கருத்துக்களோடு உடன்பாடில்லாதோர். ஆனால் அதுக்காக அவரை மறுத்தொதுக்கி விட்டுச் செல்வோர் அல்லர். திருமா கட்சியில் ரவிக்குமார் இருந்தாலும்
  முதல் உருவாக அவர் அம்பேத்கரையே முன்னிறுத்தினாலும் பெரியாரைப் புறந்தள்ளி விட்டுச் செல்லவில்லை! பெரியார் தமிழின் புறந்தள்ளமுடியா ஓர் ஆளுமை! தமிழ்த் தேசியத்தின் தொடக்கமாக அவரைக் காண்போரும் உளர், எப்படியாயினும் தமிழ்த் தேசியத்தின் முக்கிய தூண் அவர். அவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் எடுத்திருந்த முடிவுகளால், அவரை அந்த அந்தக் காலங்களோடு நிறுத்திப் பார்க்கத்
  முடியா, இல்லை விரும்பா சிலர் அவரின் கருத்தோட்டங்கள்
  புரியாது அவரைத் தூற்றச் செய்கின்றனர். இவ்வகைப் பேர்வழிகள்
  தமிழ்த் தேசியத்தில் மட்டுமில்லை, தலித்தியம் , மார்க்சியம், நக்சலியம் & பின்நவீனம் என எல்லாவற்றிலும் உளரே.
  ஒரு வேளை நீங்கள் குமரிமைந்தனைக் குறிப்பிடுகிறீர்களோ
  அவர் பெரியாரை மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்தையும் விமர்ச்சிக்கவே
  செய்கிறார் அவரின் விமர்சனங்கள் நன்றாக இருந்தால், செழுமை தருவதாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். “திராவிடத்தால் வீழ்ந்தோம்” குணா தான் நீங்கள் குறிக்க விரும்பும் தமிழ்த் தேசியர் என்றால், அவர் ஒருவருக்காக ஒட்டுமொத்தோரைப் பழிக்கும் உங்கள்
  பண்பு கண்டு வருத்தம் அடைவதைத் தவிர வேறு வழியில்லை!
  புலிகள் கூட – அவருக்கு ஊரூரா சிலை வைக்கா விடினும்- அவரை
  தமிழ் தேசியத்தின் பெருங் கூறாகத் தான் பார்த்தார்கள், இதை அவர்களின் மாதிகைகள், நாளிதழ்கள் பலவற்றிற் காணலாம். தமிழீழக்
  கல்விக் கழகத்தின் கல்விநூல்களில் ஒவ்வோர் வகுப்பாருக்கும் பெரியார் பற்றிய ஒரு பாடம் உண்டு.

  மற்றபடி, உங்களுக்கு ஒரு கொள்கை பிடிக்கவில்லை என்றால் அவர்களை ஒட்டுமொத்தமாகப் போட்டுத் தாக்குவது நல்லதா? பெரியாரைப் பிடிக்காதோர் வேறு கொள்கைமரபுகளில் இல்லவே இல்லையா ?

 5. vanakkam..thozha..
  karuththugal miga arumai…

  m.khathiravan[mumbai]
  09321 454424

 6. தமிழகத்தில் வாழும் தமிழரல்லாத தென்னிந்தியர்களில் ஒரு சிறிய சதவீதத்தினர், நாம தமிழன் என்று பேசினாலேயே, தாம் அன்னியப் பட்டள்ளது போல உணர்கின்றனர். இது அவர்களின் அறியாமையின் வௌிப்பாடு தான்.

  இவர்கள் இங்கு வந்து வாழ்வதால் நாம் தமிழன் என்று பேசுவதோ அல்லது தமிழ்த்தேசியம் பேசுவதோ தவறு என்ற அவர்களின் சிந்தனை தான் குறுகிய நோக்கம் கொண்டது. சிறுபாண்மையினர் இல்லாத நாடு உலகில் இல்லை.

  அமெரிக்கா செல்கின்றவன், அங்கே அவன் ஒரு சிறுபாண்மை சமூகமாக வாழவேண்டிய நிர்பந்தத்தைத் தெரிந்தே, அமெரிக்காவில் குடியுரிமை கேட்கிறான். அது அவனுக்கு சரியாகப் படுகிறது.

  அதே ஆள் இங்கே நாம் தனி நாடு கேட்டால் எதிர்க்கிறான், ஏனென்றால் இவன் இங்கே சிறிபாண்மையாகி விடுவானாம். என்ன ஒரு அட்டூழிய சிந்தனை பாருங்கள்?

  ஈழ கொடூர யதார்த்தம் நமக்கு தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாத தேவையை இன்று பறை சாற்றியுள்ளது. இனி இதை யாரும் எதிர்க்கவோ, கொச்சைப் படுத்தவோ முடியாது.

  எமது அன்பார்ந்த தமிழன் மதிமாறன் அவர்களும் ஆமோதிப்பார் என்று என்னுகிறேன்.

 7. நன்றாகச்சொன்னீர்கள் மதி போராட்டகாலத்தை விடவும் ஈழத்தமிழர்கள் இப்போது படும் துயரங்கள் சொல்லி மாளாதது.
  நம் நாட்டு அரசியல் தலைவர்களை நினைத்தால் தலை சுற்றுகிறது.
  ஊடகங்களும் இப்போது கண்டுகொள்வதில்லை.

 8. ஆமாம் ஆமாம்.. இந்தப் பார்ப்பன கவி சுப்பிரமணியன் அப்போதே தற்போதைய நமது திராவடத் தலைவர்களைப் பத்தி எவ்வளவு நக்கல் பண்ணி பாடியிருக்கிறார் பாருங்கள்..“சொந்தச் சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும், சிந்தை இரங்காரடி….”
  என்ன நக்கல் பாருங்க மதி… சரியாத்தான் சொல்றிங்க… இலங்கைப் பிரச்சனையிலிருந்து நமது திராவிடத் தலயக் காப்பாத்னும்னா உங்கள மாதிரி பாப்பரபாப்பரபாய்ன்னு ஆரன் சத்தம் போட்டா அந்தச் சத்தத்தில நம்ம திராவிடத் தலைங்க பொழச்சிப்பாங்க… அவங்கள காப்பத்திடலாம்.. என்ன நா சொல்றது… பட்டய கௌப்புங்க மதி….

 9. ஒரு உளறலுக்கு இன்னொரு உளறல் பதில். இப்படி எழுதுவது நல்லது தான். மனநோயாளிகள் மக்களுக்குத் தெரிவதும் அவசியம்.

 10. All you have said is fine.. But just one small doubt..

  இந்திய அரசே, அதை தடுத்து நிறுத்து’ என்று தமிழகத் தெருக்களில் மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் என மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது, ‘டிசம்பர் மாத கச்சேரி’ என்று சபாக்களில் கர்நாடக சங்கீத ஆலாபனைகளில் தாளம்போட்டு ‘ச்சூ’ கொட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள் பார்ப்பனர்கள்.

  Does that mean only brahmins were enjoying and the rest of the lot were crying all the time without watching TV or hearing music or rather even working??? Just because someone participating once in a while in such rallies.. does that mean he alone is great?? What difference does that make between normal non-brahmins and party workers??

 11. Is Karunanidhi a brahmin? what he has espoused on the eelam issue speaks about the issue at hand.. I can only understand that you are a Brahmin-hater..

 12. டிசம்பர் மாதத்தில் பார்ப்பனர்கள் கச்சேரியில் உச் கொட்டியதை அங்கலாய்க்கும் மூடரே, அந்த டிசம்பர் மாதம் முழுவதும் தமிழ் நாட்டில் திரையரங்குகள் எதுவுமே ஓட வில்லையா. தமிழர்களில் பிராமனர் அல்லாத யாருமே தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்கவில்லையா. விசில் அடிக்கவில்லையா. ஹீரோயின் தொப்பிளை ரசிக்க வில்லையா? அல்லது பார்ப்பனர் அல்லாத வேறு ஜாதிக்காரர்கள் யாருமே டிவி சீரியல் பார்க்கவில்லையா. மானாட மயிலாட குத்தாட்டத்தை ரசிக்கவில்லையா அல்லது பார்ப்பன எதிர்ப்பு தொலைக்காட்சி அதை ஒளிபரப்பாமல் நிறுத்தி விட்டதா.அல்லது டாஸ்மாக் முழுவதும் டிசம்பர் மாதத்தில் மூடி வைத்து பிராமனர் அல்லாத ஜாதியினர் யாரும் குடித்துக் கூத்தடிக்காமல் தான் இருந்தார்களா? மடையர்களே. பார்ப்பன எதிர்ப்பு சாடிச மனோவியாதியை ராமசாமி நாயக்கர் தோற்று வித்தார், நீங்கள் தொடர்கிறீர்கள்…தொழிலாகவே செய்கிறீர்கள் அவ்வளோதான்.////

  Ithu dhan பார்ப்பனப் பைத்தியம்…

 13. தோழர் மதி தங்களுடைய கட்டுரைகளை படிக்கும் போது தங்களைப் பாராட்டி ரெண்டு வார்த்தை எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனத்தால் விட்டு விடுவேன். நாங்கள் சொல்ல வருவதை சொல்லி பார்ப்பனர்களையும்,தமிழ் தேசிய பக்தர்களையும் அம்பலப் படுத்தும் தங்கள் பணி தொடரட்டும்.

Leave a Reply

%d bloggers like this: