முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் இணைகிற மையப்புள்ளி ஒன்று இருக்கிறது’’ என்கிறார்களே, அது என்ன மையப்புள்ளி?

-க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில்.

ஜாதி. முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லாதவர்கள் தங்களை நேரடியாக ஜாதி உணர்வாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ்’ ன்னு பேசுற இந்த ‘நம்மாளு’ ங்கதான் ஜாதிக்கு நிறைய ரகசியப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள். அதுல ஒண்ணுதான் இந்த மையப்புள்ளி.

இந்த உணர்வு பார்ப்பன அல்லாத ‘முற்போக்கனவர்கள்’ மத்தியிலும் அதிகமாக இருக்கு. பார்ப்பனர்களை குறை சொல்ல இவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்பதே நமது கருத்து. இந்த விசயத்துல இவுங்கள விடவும் ரஜினி ரசிகர்கள் முற்போக்கானவர்கள்தான்.

இந்த மையப்புள்ளியைப் பத்தி ஒரு உதாரணத்தின் மூலமாகவே பார்க்கலாம்.

சுஜாதா, மதன், ஞாநி இந்த மூம்மூர்த்திகளில் ஞாநிதான் ‘முற்போக்கானவர்’ என்கிற தோற்றம் இருக்கிறதல்லவா, அது மாயத் தோற்றம். உண்மையில் இந்த மூவரையும் இணைக்கிற மையப்புள்ளி ஒன்றல்ல, இரண்டு இருக்கிறது. 1. ஆனந்த விகடன் 2. கமல்ஹாசன்.

உலகத்தின் எந்த முற்போக்கு சக்திகளையும் கடுமையாக விமர்சிக்கிற இந்த மாமேதைகள் இந்த இரு புள்ளிகளிடம் மட்டும் சமரசம் அல்ல, சரணாகதியாய் இருக்கிறார்கள்.

ரஜினியும் கமலும் இணைந்து நடித்தக் காலத்தில் ஒரு வாரப் பத்திரிகையில், ‘எழுத்தாளர்’ சுஜாதா ‘கமல்ஹாசனை போன்ற அழகான நடிகர்கள் பக்கத்தில் இப்படி அசிங்கமான நடிகர்’ என்று ரஜினியை குறிப்பிட்டு எழுதியதாக நண்பர் தீஸ்மாஸ் ஞாபகப்படுத்தினார்.

அதே போல் ஞாநியின் – ‘ரஜினி, டாக்டர். கிருஷ்ணசாமி, திருமாவளவன் எதிர்ப்பை’ கமல்ஹாசனோடு தொடர்புபடுத்திதான் புரிந்து கொள்ள வேண்டும். ‘சண்டியர்’ படத்தின் தலைப்பை மாற்ற டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்த்த போதுதான் அவரை கண்டித்திருக்கிறார் ஞாநி. ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தின் பெயரை தமிழில் வைக்க சொன்னபோதுதான் அவர் திருமாவளவனை கண்டித்திருக்கிறார்.

ஞாநிக்கு டாக்டர் அம்பேத்கர் என்று ஒரு தலைவர் இந்தியாவில் இருந்தது தெரியுமா என்பது கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது. காந்தியவாதியின் தொனியில் காந்தியை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். டாக்டர் அம்பேத்கரைப் பற்றி எதவாது குறிப்பிட்டு இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.

ஞாநியின் ‘குமுதம் எதிர்ப்பை’ ஆனந்த விகடனோடு தொடர்புபடுத்திதான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனந்த விடகன் வேறு, இந்த மூவரும் வேறு வேறு வேறு அல்ல. ஆனந்த விகடனை கழித்து விட்டு இந்த மூவரையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், இந்த மூவரின் உருவம் நம் கண்களுக்கு புலப்படாமலே போகும்.

‘’அகம் வேறு, பிரமம் வேறு அல்ல. அகம்தான் பிரமம், பிரமம்தான் அகம்.’ ’கமல்-ஆனந்த விகடன்-சுஜாதா-மதன்-ஞானி ’ இந்த அய்ந்து புள்ளிகளையும் இணைத்தால்…..

பொதுவாக புள்ளிகளை இணைத்தால் கோலம் வரும். ஆனால் இந்தப் புள்ளிகளை இணைத்தால் ‘நூல்’ வரும். இந்த நூல் பலபேருக்கு உடலில் இருக்கும். சில பேருக்கு மனதில் இருக்கும். இதுதான் ஆதிசங்கரர் தனது அத்துவைதைதத்தில் சொல்லியிருக்கிறாரோ?

‘நீங்கள் பாம்பாக பார்க்கும் போது கயிறு. கயிறு என்று நினைத்துப் பார்த்தால் பாம்பு’ என்று.

சமூக விழப்புணர்வு மாத இதழ் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இதழில் எழுதியது.

வே. மதிமாறன் பதில்கள் நூலில் இருந்து

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 33 7384

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

29 thoughts on “முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

 1. உங்கள் மீது இய்க்குனர் சீமான் மிகுந்த மரியாதையாக இருக்கிறார். நான் அவரிடம் பேசும்போது கூட உங்களைப் பற்றி மரியாதையாக குறிப்பிட்டார்.

  மும்பையில் உங்கள் புத்தக விழாவில் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்கிற நோக்கில் உங்களுககு அவருக்கும் சிண்டு முடியும் நோக்கில் பல அவதூறுகளை பரப்புகிறார்கள் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற ஜாதி வெறியார்கள்.

  நீங்கள் தமிழ் தேசியவாதிகளை விமர்சனம் பண்ணி எழுதியதே சீமானை குறிவைத்துதான் என்று அவதூறு பரப்புகிறார்கள்.

  அப்படியானால் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள் என்று பெரியார் சொன்னார். அதை பெரியாரிஸ்டுகள் தீவிரமாக நம்புகிறார்கள. பிரச்சாரம் செய்கிறார்கள்.

  அப்படியானல் விடுதலைப் புலிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான், அதற்காக அவர்களையும் அதன் தலைவரையும் பெரியாரிஸ்டுகள்- முட்டாள்கள், காட்டுமிரண்டிகள் என்று சொல்கிறார்கள் என்று அர்த்தமாகுமா?

  இதுபோன்ற அவதூறுகளை பரப்பும் முட்டாள்கள் இருக்கும் வரை, பார்ப்பனர்களுக்கு பிரச்சினை இல்லை.

  இதுபோல் முட்டாள் தனமாக பேசி பேசிதான் ஈழ மக்களையும், விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் இவர்கள் ஏமாற்றினார்கள்.

  இந்த பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் மறைந்து இருக்கிற இந்த முட்டாள் ஜாதி வெறியர்களை, காழ்ப்புணர்ச்சிகாரர்களை அம்பலப்படுத்தி நீங்கள் எழுத வேண்டும்.

  அப்போதுதான் பெரியார் பெயருக்கு இவர்கள் ஏற்படுத்துகிற இழுக்கை துடைக்க முடியும்.

 2. சில வன்னியர்களும் முதலியார்களும் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் செய்கிற தமிழ் தேசிய தமாசுகளை பற்றி நீங்கள் எழுத வேண்டும்.

  பாபாசாகேப் அம்பேத்கரை ஒரு அறிஞராக கூட மதிக்காத முதலியார் பெரியாரிஸ்ட் ஒருவர், உங்கள் மீது கொண்ட காழ்புணர்ச்சியில் தன்னுடைய அல்லகைகளை வைத்துக் கொண்டு இணையத்தில் உங்களுக்கு எதிரான அவதூறுகள் பரப்பி வருகிறார்கள்.

  இப்போது பார்ப்பனர்களை விடவும் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற சாதி வெறியர்களும், தலித் விரோதிகளும்தான் உங்கள் மீது கடும் வெறுப்பில் இருக்கிறார்கள்.

  இன்னும் தமிழ் தேசியத்தின் பேரில் உங்கள் மீது படை எடுத்துவருவார்கள் பல சாதி வெறியார்கள்.

 3. Poda என்கிற வெண்ணை,
  சமூக விழப்புணர்வு மாத இதழ் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இதழில் எழுதியது என்று அந்த பதிலுக்கு கீழே குறிப்பிட்டிருக்கு.
  அத ஒழுங்க படி வெண்ணவெட்டி.

  அப்போ உங்க ஞாநி விகடன்லதான் குப்ப கொட்டிக்கொண்டு இருந்தார். குமுதம் ஒரு ஆபசா பத்திரிகை அதில் எழுதுகிறவர்களை மன்னிக்கவே முடியாது என்று சவடால் விட்டிக் கொண்டிந்தார்.

 4. ஏற்கனவே அதி அசுரன் என் ஒரு அரை வேக்காடு, தோழர் மதிமாறன் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியில் அவதூறு செய்திருந்தார். பெரியாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு. இப்போது அவர் வேலையை சில முனைவர்கள் (முனைவர் திரு போன்றவர்கள்) செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  தோழர் மதிமாறன் பெரியார் திகவை மென்மையாக தோழமையாக மிகவும் தயக்கத்தோடுதான் அவர்களின் தேர்தல் நிலைபாட்டை சுட்டிக் காட்டினார். விமர்சிக்க கூட இல்லை.ஆனால், அவரை மிக கேவலமாக அவதூறு செய்தார் அதிஅசுரன்.

  விபிசிங் விவகாரத்தில், மகஇகவிற்கு ஆதரவாக பெரியார் திகவின் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரனை கடுமையாக விமர்சித்தும், பெரியார் திகவின் தேர்தல் நிலைபாட்டை கண்டனம் செய்தும் தோழர் தமிழச்சி சிறப்பான இரண்டு கட்டுரைகளை எழுதியிருந்தார்.
  அவரை இதுவரை ஒரு வார்த்தைக்கூட கண்டித்தோ, அவருக்கு பதில் சொல்லியோ எழுதவில்லை இந்த அதி அசுரன் என்கிற காழ்ப்புணர்ச்சிகாரர்.
  ஆனால் மதிமாறனை மட்டும் மிக கேவலாமா எழுதினார். அதற்கு என்ன காணரம்? மதிமாறன் வன்னியர், முதலியார், செட்டியார் போன்றபிற்படுத்தப்பட்ட சாதிகளை பெயர் சொல்லி விமர்சிப்பதால்தான்.

  இதுபோன்ற விமர்சனங்களை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் செய்வதில்லை. அப்படி விமர்சிப்பவர்களையும் எதிர்ப்பதுதான் பெரியார் பார்வையா? இது பெரியாருககு எதிரானது இல்லையா? இப்படிபட்ட உணர்வு கொண்ட இவர்களால்தான் பெரியாருக்கு அவப் பெயர்.

 5. வணக்கம்,
  அண்ணன் மதிமாறன் அவர்களே,
  நல்ல சிந்தனைகள். தங்களது எழுத்துக்கள் பல உண்மைகளை இக்கால இளைஞர்கள் அறிந்து கொள்ள உதவுகின்றன. சிந்திக்க தூண்டுகின்றன. உங்கள் பதிவுகளிலிருந்து பெரியார், அம்பேத்கர் போன்றவர்களைப் பற்றியும், பெரியார் கொள்கைகளைப் பேசும் ஜாதி அபிமானிகளைப் பற்றியும், தெளிவான பர்வை கிடைத்துள்ளது.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  சிறு விண்ணப்பம்:
  தங்களது டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்? என்ற கருத்தரங்கின் உரையை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி! வணக்கம்!

 6. முற்போக்கு வேடம் போட்டு சினிமா மட்டுமல்லாமல் நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் போலி பகுத்தறிவாளி கமல்ஹாசன் பின்னால் பல முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் கமல் ஹாசனின் உண்மையான முகத்தை அறிய வேண்டும். பார்ப்பன பாரதிக்கும், பார்ப்பன கமல ஹாசனுக்கும் பூசப்படும் ஒரே அரிதாரம் ”முற்போக்கு”. பாரதியின் முற்போக்கு எனும் சாயம் வெளுத்தது போல், போலி பகுத்தறிவாளி கமலஹாசனின் முற்போக்கு சாயத்தையும் நாம் வெளுக்க வேண்டும்.உலகிற்க்கு அம்பலபடுத்த வேண்டும்.

 7. சில பேர் பெரியாரிஸ்ட் ஐ இப்படி தான் இருப்போம் என்று ஒரு தவறான வழி கட்டும் நபர்கள் தான் நீங்க sonna அந்த சாதி சார்ந்தவர்கள்…

  மதிமாறன் அவர்களுக்கு நண்பர் ஏகன் சொன்னது போல் அவங்களை அம்புலம்படுதுங்கள்…

 8. இந்த 21ஆம் நூற்றாண்டிலும், இன்றும் நாம் சாதிகளை கைவிடாமல் வாழ்நாடகள் முழுவதயும் இதிலேயே வீணடித்து வருகிறோம். இன்றோ, இந்திய மத்திய அரசாங்கத்தின் முட்டாள்தன அரசியலால், சிங்களவனின் முட்டாள்தனத்தாலும் நம் மிக அருகில் சீனனும், பாக்கிஸ்தானியனும் நம்மை அச்சுறுத்த துவங்கிவிட்டனர். நமக்கு எதற்கும் உதவாத சாதிகள் பெரியதா அல்லது அனைத்து தமிழ் மக்களின் பாதுகாப்பு பெரியதா என்பதை தமிழ் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அலோசித்து உடனடி முடிவிற்கு வரவேண்டும்.

 9. தமிழ் தேசிய வாதிகளின் விவாதத்திற்கு பதில் இது. இந்த பதிப்பிலும் தமிழ்தேசியத்தின் லட்சணம் பற்றி தெரிந்து கொள்வதற்காக பதிக்க பட்டுள்ளது.

  //இந்த அமைப்புக்குள்ளாகவே இருந்து கொண்டு, வர்க்கம், தேசத்தை கடந்தது, வர்க்கத்தை முன்னெடுக்க வேண்டும்,
  வர்க்கத்தை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடும் என்பதல்லாம் பார்ப்பனியம் த்ன் இருப்பை தற்காத்துக் கொள்ளும் ஒர் உத்தியே! இந்த மாய்மாலங்களையெல்லாம் பெரியாரியவாதிகள் நன்கு அறிவர். எமது வரலாற்று எதிரிகளான பார்ப்பனியவாதிகளும் நன்கு அறிவர்.//

  சாதிய அமைப்புகுள்ளாக இருந்து கொண்டு மட்டும் இன ரீதியாக,மொழி ரீதியாக நம் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பது மட்டும் சாத்தியமா?
  ”தமிழராய் ஒன்று படுவோம்” என்று சொல்வது ஆதிக்க சாதியினர் தன்னை தற்காத்துகொள்ளும் ஓர் உத்தியே! இந்த முழக்கத்தை தாழ்த்தப்பட்ட மக்களிடம் வன்கொடுமைகளை நிகழ்த்தும் ஆதிக்க சாதியினரிடம் முழங்க வேண்டும்.
  இந்த வாய்ஜாலங்களையும், மாய்மாலங்களையெல்லாம் அம்பேத்கரிய, பெரியாரியவாதிகளான நாங்களும் நன்கு அறிவோம்..
  எமது வரலாற்று எதிரிகளான பார்ப்பனியவாதிகளும்(ஆதிக்க சாதியினரும்) நன்கு அறிவர்.

  //தமிழ் தேசியம் பார்ப்பனிய தேசியத்தை எதிர்க்க வேண்டும் என்று எடுத்துக் கொண்டால் பார்ப்பனிய தேசியத்தை உள்ளடக்கிய வன்னிய தேசியம், தேவர் தேசியம் இன்ன பிற வெங்காய தேசியங்களையும் எதிர்த்தாக வேண்டும்.//

  வன்னிய தேசியம், தேவர் தேசியம் எதிர்க்க வேண்டும் என்று மழுப்பாமல், முதலில் ஆதிக்க சாதிவெறியை நிகழ்த்தும் ஆதிக்க சாதிவெறிகளை கண்டியுங்கள். தேசியத்தை எதிர்த்தால் ஆதிக்க சாதிகளை எதிர்த்ததாய் ஆகிவிடுமா? முத்துராமலிங்கம் ஆதிக்க சாதிவெறியை தூண்டிவிட்ட செயல் இன்றும் தொடர்கிறதே தென்மாவட்டங்களில் இவர்களை எதிர்க்க முடியுமா உங்களால்.
  அதன் பிறகு இன்ன பிற வெங்காய தேசியத்தை பற்றி பேசுங்கள்.

  ஒரு மார்கழி மாதக் குளிர் இரவில், கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களை, குழந்தைகளோடு கொளுத்திக் குளிர் காய்ந்தார்கள்.
  குளப்பாடி பொதுக்குளத்தில் குளித்த தாழ்த்தப்பட்ட தமிழ் குழந்தைகளை மின்சாரம் பாய்ச்சிக் கொன்றார்கள்.
  மேலளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட, ஏழு தாழ்த்தப் பட்டத் தமிழர்களின் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள்.
  திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களை பீ தின்ன வைத்தார்கள்.
  இக்கொடுமைகளையெல்லாம் செய்தது வெள்ளைகாரனோ, பிரென்சுகாரனோ, டச்சுகாரனோ, போர்த்துகீசியனோ, கன்னடனோ, மலையாளியோ, தெலுங்கனோ அல்ல….. பச்சை தமிழர்கள்..
  தமிழ் தேசியம் பேசும் நீங்கள் யாராக இருந்தாலும், ஒடுக்கபட்ட மக்களின் மீதுள்ள ஒடுக்குமுறைகளை மறைத்து, அப்பிரச்சனையை புறங்கையால் ஒதுக்கி, சமூகநீதியை சீர்குலைக்கும் காரணியை மறைத்து தமிழராய் ஒன்று படுவோம், தமிழ் தேசியம் வெல்வொம் என்று வெற்று சவடால் விட்டீர்களேயானால், நாங்கள் சொல்கிறோம் ”உங்கள் தேசியப் பிரச்சனை எங்கள் தூசிக்கு சமம்”.

  வேண்டுமானால் உங்கள் சாதிக்கு தனிதேசிய கோரிக்கை முன்வையுங்கள். ஆனால் பெரியாரை இழுக்காதீர்கள்.
  பெரியார் முதலில் திராவிட தேசியத்தை முன்மொழிந்தார்.
  ஏனெனில் தமிழர் என்கிற பெயரில் பார்ப்பனர்களும் உள்ளே நுழையக் கூடும்.ஆனால் பிறகு காலத்தின் தேவையை கருதி தமிழ் தேசியம் முன் மொழிந்தார்.
  ஆனால் அவர் முன் மொழிந்த தமிழ் தேசியம் என்பது எல்லா சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் நேர்மையான இடது சாரி போக்குடைய தமிழ்தேசியம்.சாதி கொடுமைகளை ஆதிக்க சாதியிடம் விலைக்கு விற்று,
  அவர்களின் சாதிவெறிக்கு சாதகமான வாங்கும் தமிழ் தேசியம் அல்ல!

  சாதி கொடுமைகளை ஆதிக்க சாதியிடம் விலைக்கு விற்று தமிழ் தேசியம் வாங்குவது உங்களை போன்ற சாதி உணர்வு கொண்ட சாதி தமிழர்கள். பெரியார் அல்ல.
  அவர் முன்மொழிந்த தமிழ் தேசியம் இதுவும் அல்ல.

  தமிழுணர்வுள்ள தமிழ் தேசிய வாதிகளே!
  தாழ்த்தபட்டவர்கள் தமிழர்கள் இல்லையா??அவர்கள் (ஆதி தமிழர்) தாக்கப்படும்போது மட்டும்,அவர்களை தாக்கிய கயவர்களை ஏன் கண்டிக்க வில்லை??
  உங்கள் தமிழ் தேசியத்தின் அரசியல் திட்டம் என்ன?
  தமிழ் தேசியத்தை வழிநடத்தும் கொள்கை என்ன?
  அதை அடையும் போராட்ட திட்டம் என்ன?
  இப்படியே ”தமிழன் தமிழன்” என்று நரம்பு புடைக்க மேடை போட்டு கத்துவதும், கீ போர்டை வேகமாக தட்டுவதுமா?
  தமிழ்தேசியம் அடைந்தபின் அதற்கு பின் கட்டமைக்கப்படும் பொருளாதார கொள்கைகள் என்ன?
  தமிழ்தேசியத்தில் சாதியற்ற சமூகம் எப்படி சாத்தியம்? அதை ஒழிக்கும் திட்டம் என்ன?
  சாதியற்ற தமிழ் தேசியம் அமைப்போம் என்று வாய்சவடால் விடலாம்.. அதில் தமிழர்கள் குறைந்தவர்கள் அல்ல! ஆனால் உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கபடும் போது அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா?
  தேசிய கோரிக்கை பேசிய இத்தனை ஆண்டுகாலங்களிலே ஒடுப்பட்ட மக்களின் பிரச்சனை பற்றி பேசாமல் உங்கள் தமிழ் தேசியத்தின் ”சாதி எனும் புனிதம்” காக்கும் நீங்கள், அதிகாரத்தில் இருக்கும் போது மட்டும் எப்படி ஒடுக்கபட்ட மக்களுக்கு ஆதரவாய் செயல்பட முடியும்?

  வெறும் வாயால் வடை சுடுகிறீர்கள். இதை நம்பி சிலரும் வடை நன்றாக இருக்கிறது என்று வெறும் வாயால் மென்று கொண்டிருக்கிறார்கள்.

 10. /மதிமாறன் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியில்’ …… பெரியாரையும்
  துணைக்கு அழைத்துக் கொண்டு இப்போது….
  சில முனைவர்கள் (முனைவர் திரு போன்றவர்கள்)
  செய்து கொண்டு இருக்கிறார்கள்.’/

  மிக மிக வருத்தமளிக்கும் அவதூறு இதுதான்.
  பரவாயில்லை. தோழர்களே! ஒரு பெரியாரியவாதி என்கிற முறையில் என் புரிதல்கள் இதுதான்.

  தந்தை பெரியார் தன் வாழ் நாள்
  குறிக்கோள்களாக கொண்டவை அய்ந்து:

  சாதியை ஒழிக்க வேண்டும்
  மதத்தை ஒழிக்க வேண்டும்
  கடவுளை ஒழிக்க வேண்டும்
  காங்கிரசை ஒழிக்க வேண்டும்
  பார்ப்பானை ஒழிக்க வேண்டும்

  சாதி, மதத்துக்குள் அடங்கியது. மதம் கடவுளுக்கு ஆட்பட்டது.
  கடவுள் பார்ப்பானுக்கு அடங்கியவர். பார்ப்பானை ஒழித்தால் கடவுள்,
  மதம்,சாதி ஆகியவை ஒழிக்கப்படும். பார்ப்பானை ஒழிக்க வேண்டும்
  என்றால் பெரியாரின் காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் கொண்ட காங்கிரசை ஒழிக்க வேண்டும்.

  ஆனால் இன்றைய கால கட்டத்தில் பார்ப்பனியம்
  ஆதிக்கம் செலுத்தும் (காங்கிரஸ்,பாரதிய சனதா,மார்க்சிய கம்யூனிஸ்டு முதல் அ தி மு க வரை), மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், மா லெ குழுக்கள், போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை – சுருக்கமாக இந்திய பார்ப்பனிய தேசம்
  ஒழிக்கப் பட வேண்டும் என நான் சொல்லவில்லை. தமிழ் நாடு தமிழருக்கே என தந்தை பெரியார்தான் சொன்னார்.

  பார்ப்பனியத்தை இனங்காண, இட ஒதுக்கீட்டை
  விட அருமையான வழி இருக்கிறது. இட ஒதுக்கீட்டை விட்டுத் தள்ளுங்கள்! இருக்கவே இருக்கிறது பார்ப்பானுக்கு-அமேரிக்காவும், அம்பானிகளும்! இந்தியாவை ஒழிக்க வேண்டும் என கூறிப் பாருங்கள்! செட்டி நாடு, கொங்கு நாடு என பார்ப்பான் குதிப்பான்!

  ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியை, நிகரமைய (சோசலிச), பொதுமைய (கம்யூனிச) சமூக அமைப்புக்கான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே.
  ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம்.

  இந்த அமைப்புக்குள்ளாகவே இருந்து கொண்டு, வர்க்கம், தேசத்தை கடந்தது, வர்க்கத்தை முன்னெடுக்க வேண்டும்,
  வர்க்கத்தை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடும் என்பதல்லாம் பார்ப்பனியம் த்ன் இருப்பை தற்காத்துக் கொள்ளும் ஒர் உத்தியே! இந்த மாய்மாலங்களையெல்லாம் பெரியாரியவாதிகள் நன்கு அறிவர். எமது வரலாற்று எதிரிகளான பார்ப்பனியவாதிகளும் நன்கு அறிவர்.

  தோழர்களே! இது வரை உலகம் கண்டிராத மிக மிக கொடூரமான முறையில் ஒரே நாளில் 25 ஆயிரம் தமிழ் மக்கள், பெண்கள், குழந்தைகள் என ஈழத்தில் படுகொலை செய்யப் பட்டது
  என்ன இராச பக்சேவுக்கு உதவுவதற்க்கு மட்டுமா என்ன! அது தமிழ் தேசியம் பேசும் இந்திய தமிழர்களுக்கு, பெரியாரியவாதிகளுக்கு இந்தியப் பார்ப்பனியம் அளித்த கடுமையான எச்சரிக்கையல்லவா!

  தமிழ் தேசியம் பார்ப்பனிய தேசியத்தை எதிர்க்க வேண்டும் என்று எடுத்துக் கொண்டால் பார்ப்பனிய தேசியத்தை உள்ளடக்கிய வன்னிய தேசியம், தேவர் தேசியம் இன்ன பிற வெங்காய தேசியங்களையும் எதிர்த்தாக வேண்டும்.

  ஏன் தந்தை பெரியார் கூட நாயக்கர் தேசியம் தான்.
  அவர் தான் இன்ன பிற வெங்காய தேசியங்களையும் கடந்து தமிழ் தேசியத்தியனை முன்னெடுத்தவர் என்பதாலும் மீண்டும் மீண்டும் இன்ன பிற வெங்காய தேசியங்களைக் காட்டி தமிழ் தேசியத்தை மதிமாறன் போன்ற தோழர்கள் இகழ்வதை, தந்தை பெரியாரை இகழ்வது போல என்பதால் தான் நான் என் வருத்ததை இங்கு வெளியிட்டிருக்கிறேன். நன்றி!

 11. /”உங்கள் தேசியப் பிரச்சனை எங்கள் தூசிக்கு சமம்”.
  வேண்டுமானால் உங்கள் சாதிக்கு தனிதேசிய கோரிக்கை முன்வையுங்கள்./

  மன்னிக்கவும். உங்கள் யோசனையை எந்தப் பெரியாரியவாதிகளும் ஏற்க மாட்டார்கள்.

  / பெரியார் முதலில் திராவிட தேசியத்தை முன்மொழிந்தார்.
  ஏனெனில் தமிழர் என்கிற பெயரில் பார்ப்பனர்களும் உள்ளே நுழையக் கூடும்.ஆனால் பிறகு காலத்தின் தேவையை கருதி தமிழ் தேசியம் முன் மொழிந்தார்./

  என்ன? பார்ப்பனர்களும் உள்ளே நுழையலாம் என்று பெரியார் சொல்லி விட்டாரா என்ன?

  /ஆனால் அவர் முன் மொழிந்த தமிழ் தேசியம் என்பது எல்லா சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் நேர்மையான இடது சாரி போக்குடைய தமிழ்தேசியம்/

  ஒரு சின்ன (மன்னிக்கவும் மிகப் பெரிய) திருத்தம்.

  எல்லா சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் ” நேர்மையான ” இடது சாரி போக்குடைய ??? அப்படியானால் அங்கு பார்ப்பான் இருக்க வாய்ப்பு இல்லையே!!!!

  எனவே தந்தை பெரியார் முன் மொழிந்த தமிழ் தேசியம் என்பது எல்லா சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் நேர்மையான பார்ப்பன ஆதிக்கமற்ற அல்லது பார்ப்பனத் தலைமையற்ற இடது சாரி போக்குடைய தமிழ்தேசியம் என்பது தான் சரியான பெரியாரிய வழியிலான கருத்தியல். நன்றி!

 12. “‘நீங்கள் பாம்பாக பார்க்கும் போது கயிறு. கயிறு என்று நினைத்துப் பார்த்தால் பாம்பு’ என்று”

  தசாவதாரம் பட பாடல் தான் “கல்லை மட்டும் ..” நினைவிற்கு வருகிறது.

  நீங்கள் தசாவதாரம் விமர்சனம் எழுதவே இல்லையே..? விமர்சனம் செய்வோம் என்று ஒரு பதிவின் இறுதியில் எழுதியதை படித்ததாக ஞாபகம்.

 13. //// எல்லா சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் நேர்மையான பார்ப்பன ஆதிக்கமற்ற அல்லது பார்ப்பனத் தலைமையற்ற இடது சாரி போக்குடைய தமிழ்தேசியம் ////

  இங்கு பார்பன தலைமை இல்லையென்றால், சரி யாருடைய தலைமை??? ஆதிக்க சாதிகளின் தலைமையிலா??

  /////தமிழ் தேசியம் பார்ப்பனிய தேசியத்தை எதிர்க்க வேண்டும் என்று எடுத்துக் கொண்டால் பார்ப்பனிய தேசியத்தை உள்ளடக்கிய வன்னிய தேசியம், தேவர் தேசியம் இன்ன பிற வெங்காய தேசியங்களையும் எதிர்த்தாக வேண்டும்.////

  இங்கு யாரும் தனி சாதி தேசியத்தை கோரவில்லை என்பதை Dr.திரு நினைவில் கொள்வது நலம்! இங்கு குற்றசாட்டே தமிழ் தேசியம் என்கிற பெயரில், சாதி இந்துக்கள் தமது சாதி ஒடுக்குமுறையை ஆண்ட பரம்பரை கனவில் நிலைநாட்டுகிறார்கள் என்பது தான்! இந்நிலையில் நீங்கள் ஒத்துக்கொள்ளும் “தந்தை பெரியார் முன் மொழிந்த தமிழ் தேசியம் என்பது எல்லா சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் நேர்மையான பார்ப்பன ஆதிக்கமற்ற அல்லது பார்ப்பனத் தலைமையற்ற இடது சாரி போக்குடைய தமிழ்தேசியம்” என்பது எப்படி சாத்தியம்?

  வேந்தனின் கருத்துகளை நானும் வழிமொழிகிறேன்..
  /வன்னிய தேசியம், தேவர் தேசியம் எதிர்க்க வேண்டும் என்று மழுப்பாமல், முதலில் ஆதிக்க சாதிவெறியை நிகழ்த்தும் ஆதிக்க சாதிவெறிகளை கண்டியுங்கள். தேசியத்தை எதிர்த்தால் ஆதிக்க சாதிகளை எதிர்த்ததாய் ஆகிவிடுமா? முத்துராமலிங்கம் ஆதிக்க சாதிவெறியை தூண்டிவிட்ட செயல் இன்றும் தொடர்கிறதே தென்மாவட்டங்களில் இவர்களை எதிர்க்க முடியுமா உங்களால்.
  அதன் பிறகு இன்ன பிற வெங்காய தேசியத்தை பற்றி பேசுங்கள்./

  ////”உங்கள் தேசியப் பிரச்சனை எங்கள் தூசிக்கு சமம்”.
  வேண்டுமானால் உங்கள் சாதிக்கு தனிதேசிய கோரிக்கை முன்வையுங்கள்./

  மன்னிக்கவும். உங்கள் யோசனையை எந்தப் பெரியாரியவாதிகளும் ஏற்க மாட்டார்கள்.////////

  ஆம் ஏற்க மாட்டார்கள். சின்ன திருத்தம் போலி பெரியாரிய வாதிகள் ஏற்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு தான் அடிமை படுத்த தனக்கு கீழே ஒடுக்கப்பட்ட மக்கள் வேண்டுமே!

  தமிழராக நம் வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று இங்கு சொல்லாடல்கள் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன!

  நீங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதில் முனையும் போது எந்த வரலாற்றை எனும் கேள்வி எழுகிறது! நீங்கள் மீட்டெடுக்க முனைவது ஆண்டபரம்பரையின் வரலாரையா?

  இது வரை எழுதப்பட்ட, நம்மால் படிக்கப்பட்ட வரலாறுகள் அனைத்தும், அதிகாரவர்கத்தின் வரலாறே அன்றி மக்களுக்கானவை அல்ல. வரலாறு மார்க்சிய முறையில் பார்க்கப்படாதவரையில், மீட்டெடுக்கப்படும் வரலாற்றில், எல்லா சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் நேர்மையான பார்ப்பன ஆதிக்கமற்ற அல்லது பார்ப்பனத் தலைமையற்ற இடது சாரி போக்குடைய தமிழ்தேசியம் என்பது வெறும் வாய் பேச்சே!

 14. ஆதிக்க சாதியின் அடக்கு முறைகள் பார்பன ஆதிக்கத்தை பார்பனீயத்தை பிரதிபலித்தாலும், அதற்க்கு ஆதிக்க சாதியினர் எவ்விதத்திலும் பொறுப்பில்லையா? ஆதிக்க சாதி வெறிக்கும் பார்பன பட்டம் சுமத்துவதும், போலி பெரியாரியவாதிகளின் நுண்-சுயசாதி அபிமான-பார்பனியமே காரணம்!
  (மேலும் பார்பன மற்றும் ஆதிக்க சாதி அடக்குமுறைகள் இங்கு தமிழகத்தில் மட்டுமா நடக்கிறது? கயர்லாஞ்சியில் நடந்தது என்ன?)

  பார்பன ஆதிக்கத்தை எதிர்க்கும் அதே வேளை ஆதிக்க சாதி அடக்குமுறையையும் எந்த சமரசமும் இன்றி எதிர்க்கவேண்டும்!
  இதை பெரியார்.தி.க. வை தவிர வேறு எந்த முற்போக்கு பேசும் அமைப்பும் கடைபிடிக்கவில்லை!

  தமிழ் தேசியம் பேசும் எந்த அமைப்பாவது, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக சமரசமின்றி போராடி இருக்கிறதா? எந்த அமைப்பாவது காவிரி, முல்லை பெரியாறு, ஒக்கேனக்கல் மற்றும் மற்ற மாநில உறவு பிரச்சனைகளில் சமரசமின்றி போராடி இருக்கிறதா?

  குறைந்த பட்சம் தனி தமிழ் தேசியத்தில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு அல்லது செயல்திட்டம் வைத்திருக்கிறதா?

  எந்த திட்டமும் இல்லை, எல்லாம் தமிழ் தேசியம் அமைந்தால் சரியாகிவிடும் என்று கூறுவது, கவர்ச்சி பொருளை காட்டி மக்களை ஏமாற்றுவதே!!!!

  ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களை சாதி பெயர் சொல்லி அழைப்பதே மிக சமீபமாக தான் குறைந்துள்ளது! அந்த வெறியர்களை சாதி வெறியர்கள் என்று அம்பலப்படுத்தாமல், மெல்ல கடிந்து கொள்வதும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்து போராடுவது போல காட்டி கொள்வதும், அரசியற்பிழைப்பு நடத்த அன்றி வேறெதற்கு?
  ////தமிழ் தேசியம் பார்ப்பனிய தேசியத்தை எதிர்க்க வேண்டும் என்று எடுத்துக் கொண்டால் பார்ப்பனிய தேசியத்தை உள்ளடக்கிய வன்னிய தேசியம், தேவர் தேசியம் இன்ன பிற வெங்காய தேசியங்களையும் எதிர்த்தாக வேண்டும்./////
  ////இன்ன பிற வெங்காய தேசியங்களைக் காட்டி தமிழ் தேசியத்தை மதிமாறன் போன்ற தோழர்கள் இகழ்வதை, தந்தை பெரியாரை இகழ்வது போல என்பதால் தான் நான் என் வருத்ததை/////

  இன்ன பிற வெங்காய தேசியங்கள், தனியாக இல்லை என்பதும் அவை அனைத்தும் சாதி வெறிகளாக மற்ற தேசியஇனங்களை போலவே தமிழ் தேசியத்திலும் இருக்கிறது!
  அதை புற கூறாகிய பார்ப்பனிய இந்திய தேசியம் மட்டுமா பாதுகாக்கிறது? பார்ப்பனிய அக கூறுகள் பாதுகாக்கவில்லையா?
  பார்ப்பனிய அக கூறுகள் தமிழ் தேசியத்தில் இல்லை இல்லவே இல்லை என சாதிப்பீர்களா?

 15. இந்தியாவில் ஜாதி ஆர்யர் வருகைக்கு முன்பே இருந்ததாக விக்கி கூறுகிறது.

  Caste System in India – Wiki says:

  A 2006 study by Ismail Thanseem et al. of Centre for Cellular and Molecular Biology (India) :
  The study indicated that the Indian caste system may have its roots much before the arrival of the Indo-Aryans.

  It concluded that the “lower caste groups might have originated with the hierarchical divisions that arose within the tribal groups with the spread of Neolithic agriculturalists, much earlier than the arrival of Aryan speakers”,

  Neolithic – Stone Age (BC)….

  (You can read more details in wiki – Caste System in India)

 16. No thanks to BALA: “The caste system in India originated before the arrival of Aryans”. Sorry, it does not suit our arguments built up over all these years. We shall continue to curse the brahmins for every evil in the society.

 17. ஏன் இவ்வளவு சிக்கல், இவ்வளவு வன்மம் தோழர்களே?

  சில கேள்விகளை நேர்மையோடு எதிர்கொள்ளுங்கள். தாழ்த்தப்பட்டவர்களின் நிலை தற்போது உயர்ந்துள்ளதா இல்லையா?

  கல்வியும் பொருளாதாரமும் உயரும்போது தாழ்த்தப்பட்டவர்களின் நிலை சீராகும். மற்றவர்களுக்கு இணையாகும். அப்போது ஜாதியம் ஒழியும்.

  சாராயமும், தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் தான் கிராம மக்களின் உயர்வைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. வீண் வசைபாடல்களை விடுத்து, இதைக்களைய வழிகாணுங்கள் தோழர்களே!

  தமிழத்தேசியம் பேசுபவர்களில் சிலர் இன்னும் ஜாதி மாயையிலிருந்து விடுபடவில்லை என்றால், அனைவரையுமா குறை சொல்வீர்கள்?

  தமிழ்த்தேசியம் நாளையே கிட்டப் போவதில்லையே! அதற்குள் நிறைய மாற்றங்கள் நிகழும் தோழர்களே! அதற்கு நாமும் உழைக்க வேண்டும். வெறும் சண்டைப்பிடாரிகளாக இருந்தால், சிக்லுக்கு தீர்வேது?

  நம்மிடம் கசடுகள் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் சேர்த்து வைத்த கசடுகள். பொருப்புள்ள அனுகுமுறைமூலமாகவே அந்தக் கசடுகள் குறைந்த கால அளவுக்குள் களையப்படும்.

  ஒரு தோழர் யாருடைய வரலாற்றை மீட்கப்போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். பொதுவாகத் தமிழர் வரலாற்றையும், குறிப்பாக தலித்திய வரலாற்றையும் தான். அது நிகழ்ந்து கொண்டுள்ளது தோழர்களே! குணா அவர்களின் “வள்ளுவத்தின் வீழ்ச்சி” தலித்திய வரலாற்று மீட்சிக்கு ஒரு சான்று. நீங்களும் உங்களது கடமைகளை ஆற்றுங்களேன்!

  வீண் விறைப்புகள் வேண்டாம். புரிதலோடு செயல்பட்டால், அனைவருக்குமான தமிழத்தேசியம் கட்டமுடியும். வரட்டு வியக்கியானங்கள் இல்லாமல் செயல்பட்டால் ஒரு உன்னத தமிழத்தேசத்தைக் கட்டமுடியும். ஆனால், அதை எதிர்த்து நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்ள வேண்டாம்.

  பார்ப்பனீய இந்தியா உள்ளவரை உலகமயம்/தனியார்மயம் உண்டு. இவை உள்ளவரை, மிகையாகப் பாதிக்கப்படுவோர் தலித்துகளே என்பதை உணர அதிக கல்வி தேவையில்லை என்று நினைக்கிறேன்.

 18. வந்துட்டாருய்யா நாட்டமை….

 19. பிராமணர்களுக்கும் மற்ற ஜாதியினருக்கும் இடையே பிரிட்டிஷார் ஏற்படுத்திய காழ்புணர்ச்சி. மத மாற்றத்திற்கு எதிராக இருந்த பிராமணர்க்கு எதிராக தூண்டிவிட்ட சதி. பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டது. ஆனால் இந்த காழ்புணர்ச்சியிலிருந்து விடுதலை எப்போதோ?

  பூணூலை கழற்றி விட்டு வரும் கமல் போன்றவர்க்கு அங்கேயும் நல்ல பெயர் இல்லை, இங்கேயும் நல்ல பெயர் இல்லை. அந்தோ பரிதாபம்!

 20. Dr. V. Pandian
  ————-
  இது தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு தோழர் சொன்னது:

  ////வர்க்கத்தை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடும் என்பதல்லாம் பார்ப்பனியம் த்ன் இருப்பை தற்காத்துக் கொள்ளும் ஒர் உத்தியே! இந்த மாய்மாலங்களையெல்லாம் பெரியாரியவாதிகள் நன்கு அறிவர். எமது வரலாற்று எதிரிகளான பார்ப்பனியவாதிகளும் நன்கு அறிவர்.////

  நீங்கள் சொல்வது:
  ///கல்வியும் பொருளாதாரமும் உயரும்போது தாழ்த்தப்பட்டவர்களின் நிலை சீராகும். மற்றவர்களுக்கு இணையாகும். அப்போது ஜாதியம் ஒழியும். ////

  இரன்டும் வேறு வேறா எவ்வாறு என்பதை விளக்கவும்.
  ———————–

 21. ///தாழ்த்தப்பட்டவர்களின் நிலை தற்போது உயர்ந்துள்ளதா இல்லையா?////

  இல்லை.

  ஒரு சில ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளதால், இங்கு சாதி இல்லாமல் போய் விட்டதா? சில முற்போக்கு மூதேவிகள் “இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறா?” என்று சொல்வது போல நீங்கலும் சொல்லாதீர்கள்!!!

  ///கல்வியும் பொருளாதாரமும் உயரும்போது தாழ்த்தப்பட்டவர்களின் நிலை சீராகும். மற்றவர்களுக்கு இணையாகும். அப்போது ஜாதியம் ஒழியும். ////

  ஒரு சில ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலை உயர்வதால் மட்டும் எப்படி ஒடுக்குமுறை ஒழியும் தோழர்? பொருளாதாரத்தில் மேலுள்ளவர்கள் கீழுள்ளவர்களை ஒடுக்குவது இன்றும் தொடர்கிறது, இனியும் தொடரும்.
  ————————

  எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்கி அடக்கி வைத்திருக்கும் பார்பனிய இந்திய தேசியமே, தேசிய இனங்களுக்கு இடையிலான முரன்பாடுகளை பகையாக வளர்க்கிறது! அதை கொன்டு தான் நாம் மற்ற தேசிய இனங்களின் தமிழின எதிர்ப்பை பார்க்கவேண்டும்.

  ////காவிரி பிரச்சனையின் போது தமிழர்கள் பெரும்பாலும் கூலிவேலை செய்த தலித்துகள் அடித்து விரட்டபட்டார்கள்..அப்போது அங்குள்ள தலித்துகள் யாரும் குரல் கொடுக்கவில்லை..////

  இங்குள்ள தலித்துகள் எந்த அளவுக்கு குரல் கொடுத்தார்கள்? இங்குள்ள ஆதிக்க சாதியினர் எந்த அளவு குரல் கொடுத்தார்கள்????

  ////இன்று ஈழ விடுதலை போராட்டத்தால் ஈழதமிழர் அனைவரும் சாதிய அடையாளங்களை மறந்து////

  யாழ் நடுத்தரவர்க்க ஆதிக்க சாதி மனோபாவத்தை நினைவில் கொள்வது நலம்!

  ////தோழர்கள் வேந்தன், முருகன் போன்றவர்கள் என்னதான் சொல்லவராங்கன்னு எனக்கு புரியவில்லை…/////

  தமிழ் தேசியம் என்பது இங்கு பெரும்பாலும் (ஓரிரு அமைப்புகளை தவிர) ஆதிக்க சாதி மனோபாவமுடைய போலி முற்போக்கு அமைப்புகளின் அரசியல் லாபத்திற்கான கவர்ச்சி பொருளாக இருக்கிறது. அத்தகைய போலி அமைப்புகள் இதுவரை ஒடுக்கப்பட்டமக்களின் பிரச்சனைகளுக்காக ஒரு துரும்பையும் அசைக்காத போது, ஒடுக்கபட்ட மக்களையும் உள்ளடிக்கிய தமிழ் தேசியத்தில் நம்பிக்கை என்பது, ‘கடவுள் நம்பிக்கை எமக்கு கிடையாது, ஆனாலும் கடவுளே காப்பாற்று’ என்பதை போலாகும்.

  /////தமிழினம் மானத்தோடு வாழ உருப்படியான செயல்திட்டம், வேலைதிட்டம் ஏதாவது உங்களிடம் இருந்தா சொல்லுங்கையா…/////

  அதை தானுங்க நாங்களும் கேட்கிறோம். ஒடுக்கப்பட்டமக்களையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய செயல்திட்டம், வேலைதிட்டம் ஏதாவது உங்களிடம் இருந்தா சொல்லுங்கையா…

  /வரலாறு மார்க்சிய முறையில் பார்க்கப்படாதவரையில், மீட்டெடுக்கப்படும் வரலாற்றில், எல்லா சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் நேர்மையான பார்ப்பன ஆதிக்கமற்ற அல்லது பார்ப்பனத் தலைமையற்ற இடது சாரி போக்குடைய தமிழ்தேசியம் என்பது வெறும் வாய் பேச்சே!/

 22. ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை, ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும் மாறித்தானுள்ளது. எனது வயது 50. நான் தமிழகத்தின் வட மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும், பெருநகரங்களில் கட்டிட வேலை செய்து, நிலங்களை வாங்கி, வீடுகளைக் கட்டி, செம்மையாக வாழ்கின்றனர். எனது வாழ்நாள் அனுபவத்தில் நான் உணர்ந்துள்ளது, அவர்களின் நிலை கணிசமாக உயர்ந்துள்ளது என்பது தான்.

  தென் மாவட்டங்களில் இன்னும் அந்த அளவு மாற்றங்கள் இல்லை என்பது உண்மை. அங்கு அடக்குமுறைகளும் உள்ளன என்பதும் உண்மை.

  ராமதாஸும், திருமாவும் இணைந்து நடந்ததால் வன்னியர்-தலித் சண்டைகள் கிட்டத்தட்ட முற்றாக ஒழிந்துள்ளன. எனவே, ஜாதித் தலைவர்களின் நிலைப்பாடுகள் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதும் உண்மை.

  அதேநேரம், ஜாதிய சிக்கல் தீராததற்கு, ஜாதியை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதும் ஒரு முகாமையானக் காரணம். அதுவும் இப்போது தகர்கிறது. ராமதாஸ் தனது குடும்ப நலனுக்கு ஜாதியைப் பயன்படுத்துகிறார் என்பது நிரூபனமானதால், அவரது செல்வாக்கு தனது ஜாதிக்குள் சரிந்துள்ளது. அதேபோல, திருமாவின் அரசியல் விளையாட்டுகளால் அவரது செல்வாக்கும் சரிந்துள்ளது.

  பொதுவாக, அனைவருக்குமான, வரலாற்று ரீதியான புரிதல் வரும்போது, மாற்றங்களும் வரும். ஆனால், கொம்பு சீவி விட்டுக்கொண்டிருந்தால்?

  தமிழ்த்தேசியம் அமையும் போது, அரசமைப்புச் சட்டம் மூலமாகவே பல மாற்றங்களை உறுதிப்படுத்தலாம். ஆனால், அதற்கு முன் அதற்கான அடிப்படையை உருவாக்க வேண்டும்.

  வர்க்கத்தை ஒழித்தால் ஜாதி ஒழியவேண்டிய அவசியம் இல்லை. ஜாதி என்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள ஒரு உளவியல் சார்ந்த நிலைப்பாடு. ஆனால், ஜாதி ஒழிவதை அப்புறம் பார்ப்போம். நாம் உடனடியாகக் கவனிக்கவேண்டியது, ஜாதி ரீதியிலான ஒடுக்குமுறைகளே! தாழ்த்தப்பட்ட ஜாதிகளின் கொருளாதாரம் உயரும்போது, ஒடுக்குமுறைகளும் ஒடுங்கும். அம்மக்களிடம் தற்சார்புப் பொருளாதாரம் உயர்ந்தால், அந்த அளவுக்கு ஒடுக்குமுறைகளும் குறையும் என்பது உண்மை தானே!

 23. ////ஏன் இவ்வளவு சிக்கல், இவ்வளவு வன்மம் தோழர்களே?////

  நீஙகள் உங்கள் முதல் மறுமொழியில் (வேறு ஒரு தலைப்பில்) உள்ள வனமத்தை திரும்பி பார்ப்பது நலம்!

  முதலில் என்ன பேசினீர்கள் இப்போது என்ன சொல்கிறீர்கள் என பார்த்தல் நலம்!

Leave a Reply

%d bloggers like this: