கலைஞன் பரப்பிய வெளி: சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி

https://i2.wp.com/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-49/sundara-ramaswamy.jpg?w=474
 

 ரஜினி ஸ்டைல்

சென்னை தெற்கு போக் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஹாலிவுட் படத்தின் பிரம்மாண்டமான செட் போல் சிவாஜி கணேசனின் வீடு. அது தீப்பற்றி எரிந்தது. காரணம், மின்கசிவு. மின்கசிவிற்குக் காரணம் வீட்டில் எல்லா அறைகளும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டவையாகும். கழிவறை கூடவா என்பது தெரியவில்லை.

அந்த வீட்டின் சொந்தக்காரர்களில் ஒருவரும், நடிகருமான பிரபு இது பற்றி பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில், “இந்த வீட்டை அப்பா ஆசையோடு வாங்கினார். வீட்டில் இருந்த மரப்படிக்கட்டுகள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஏறி, இறங்கிய படிக்கட்டுகள் எரிந்து போனது வருத்தமாக இருக்கிறது. (ஏறி இறங்கிய அப்பாவே எரிஞ்சி போயிட்டாரு. படிக்கட்டு போனதுதானா முக்கியம்?)  அவருடைய படம் எரியாமல் தப்பியது ஆச்சரியமாக இருக்கிறது(இதிலென்ன ஆச்சரியம். அதுல தீ பத்தல. அதனால அது எரியலை.)

வீடு தீப்பிடித்து எரிந்தவுடன் கமலா அம்மாள், நடிகர் பிரபு, அவர் மனைவி மற்றும் குழந்தைகள் எல்லோரும் வெளியே ஓடி வந்துவிட்டனர். ஆனால் சிவாஜியின் தம்பி மகன் முரளியின் மனைவி மற்றும் குழந்தைகள் ஓர் அறையில் சிக்கிக் கொண்டனர். அவர்களைக் காப்பாற்றுமாறு குடும்பம் கூக்குரலிட்டிருக்கிறது. சினிமாவில் தீயில் புகுந்து பலபேரைக் காப்பாற்றிய நம் கதாநாயகன் பிரபுவும் காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டிருக்கிறார். சினிமாவில் பிரபுவின் சாகசத்தைப் பார்த்துப் பிரமித்த ஆட்டோக்காரர் ஒருவர், பிரபுவின் கூக்குரலை கேட்டு தன் உயிரைப் பணயம் வைத்து கதாநாயகன் குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார் (இதற்கு முன் மற்ற நாட்களில் அந்த ஆட்டோ ஓட்டுநரை வீட்டுக்குள் சேர்த்திருப்பார்களா?) காப்பாற்றப்பட்ட பின் நம் சாகசக் கதாநாயகன் பிரபு சொல்லியிருக்கிறார். அப்பா கடவுளாக வந்து எங்களைக் காப்பாற்றி இருக்கிறார்

இதுதான் அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பிரபு காட்டிய நன்றி. (கடவுளாக வந்து காப்பாற்றிய அப்பா எதற்கு தீ வைத்து வீட்டைக் கொளுத்துவானேன்?) ‘’காப்பாற்றுங்கள்’ என்ற பிரபு குடும்பத்தின் கோரஸ் கூக்கூரல் கேட்டவுடன் ஆட்டோ ஓட்டுநர் தன் உயிரைப் பணயம் வைத்து சிவாஜியின் குடும்பத்தைக் காப்பாற்றியதற்குப் பதில், சிவாஜியின் உண்மை ரசிகனாக மட்டும் இருந்து ‘சிச்சுவேசனுக்கு’ப் பொருத்தமாக அந்தப் பிரமாண்ட ஹாலிவுட் படத்தின் செட் போன்ற வீட்டின் கேட்டருகில் நின்று, பிரபுவைப் பார்த்து இப்படிப் பாடி இருக்கலாம் ‘’போனால் போகட்டும் போடா! இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா…’’

***

மேற்சொன்ன இந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுநர்களும் வெட்கப்படும்படியான ஒரு செயலைச் செய்திருக்கிறார். இன்னொரு ஆட்டோ ஓட்டுநர். அவர் பெயர் புதுவை இளவேனில்.

வசதியான ஒரு வயதானவரை விதவிதமாகப் புகைப்படம் எடுத்திருக்கிறார். எடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்தக் கண்றாவிகளை கண்காட்சி வைத்து வேறு காட்டியிருக்கிறார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தப் பெரியவர் யார்? அவர் வெறும் கதை எழுதுற ஓர் ஆசாமி. அவர் பெயர் சுந்தர ராமசாமி. அவரை எதுக்குப் புகைப்படம் எடுக்கணும்? எடுத்ததை வைச்சி எதுக்கு கண்காட்சி நடத்தணும்?

இதோ புகைப்படம் எடுத்து புதுவை இளவேனில் சொல்கிறார். ஓர் எழுத்தாளரின் எழுத்துக்கள் அவனை வாசகனிடம் முழுமையாகக் கொண்டு சேர்ப்பதில்லை. (எழுதுவதைத் தெளிவா எழுதணும்) என்னைக் கவர்ந்த எழுத்தாளரின் இயல்பை. இன்னொரு பக்கத்தை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பது ஒரு கலைஞனாகிய எனக்கு (அப்படிப் போடு…!) அவசியமாய்த் தோன்றியது. எனவே, சுந்தர ராமசாமியின் நிஜங்களை நிழற்படங்களாக கண்காட்சி ஆக்கியுள்ளேன்…” இதுதான் ரசிகனின் கலைமனமோ? இல்லை, கலைஞனின் ரசிக மனமோ?

நடிகனை விதவிதமாகப் புகைப்படம் எடுத்து, ரசிக மனோபாவத்திற்குத் தீனியாக ‘ப்ளோ-அப்’ போட்டு விற்பதை வாங்கிக் குவிக்கும் நடிகனின் ரசிகனுக்கும், சுந்தர ராமசாமியின் ரசிகரான இந்த புதுவை இளவேனிலுக்கும் என்ன வித்தியாசம்? சரி, புதுவை இளவேனில்தான் ‘’தலைவா, உங்க முகத்தை காமிச்சிட்டு போங்க தலைவா!” என்று ரஜினியின் வீட்டு வாசலில் நின்று கூக்குரல் இடுகிற ரசிகனின் மனோநிலையில் இருப்பதால் அவருக்கு எதுவும் புரியவாய்ப்பில்லை. ஆனால், எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ஆயிற்றே சுந்தர ராமசாமி! அவருக்குக் கூடவா இது ஆபாசம் என்று தெரியவில்லை.

எதைப் பற்றிக் கேட்டாலும் உலக ஞானம் தளும்பத் தளும்ப ஆலோசனை தருகிற, அறிவுரை சொல்லுகிற, எச்சரிக்கிற ‘சுரா’வை, ‘பு.இ.’ உங்களை விதவிதமாக போட்டோ எடுக்கணும்னு கேட்டப்பவே “வேண்டாம் தம்பி, இந்த பத்தாவெல்லாம் எனக்குப் பிடிக்காது. தனி மனிதர்களை ரசிக மனோபாவத்தோட அணுகக்கூடாது” அப்படின்னு சொல்லியிருக்கலாம். ஏன்னா, புனைப்பெயரே பந்தாவா இருக்கக்கூடாது. என்கிற எண்ணம் உள்ளவர்தான் சுந்தர ராமசாமி.

***

2003 ஜுன் மாத தீராநதி இதழில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கிறார். இப்படி…

கவிதைகளுக்கு பசுவய்யா என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டதற்கு விசேஷ காரணம் உண்டா?”                                                        –டி.பி. கேசவமணி, திருப்பூர்-2.

தமிழ்க் கவிஞர்கள் பொதுவாக ரொமான்டிஸிசத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளுக்குச் சாதகமான உணர்வுகளும் கற்பனைகளும் உள்ளவர்கள். இவ்வியல்புகளைச் சட்டென நாம் கண்டு கொள்ள முடியாமல் நம்மைத் தடுப்பது அவர்களது வீராவேசமான போலி புரட்சிகரக் கோசங்களே. தமிழ்க் கவிஞர்களின் புனைப் பெயர்களின் பட்டியலை நீங்கள் தயாரித்தால் அவை கற்பனையும் மிகையும் கொண்ட படிமத்தை வற்புறுத்தி வாங்கிக் கொள்ளக் கூடியவையாகௌம் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கவிஞர்களின் கலாச்சாரத்தின் மீது மிகக் கடுமையான விமரிசனம் கொண்டவன் நான். ஆகவே, பந்தா இல்லாத ஓர் எளிமையான பெயர்தான் என்னைக் கவரக்கூடியதாக இருந்ததுஎன்று பதில் அளிப்பதின் மூலமாக திராவிட இயக்க, இடதுசாரிக் கவிஞர்களை கடுமையாகச் சாடிய இந்தப் பெரியவர், இளையவருக்கு அறிவுரை சொல்லி தவிர்த்திருக்க வேண்டாமா? ஆனால், இந்த ‘எளிமை விரும்பி’ என்ன செய்திருக்கிறார், தெரியுமா? இதோ அவரின் ரசிகர் புதுவை இளவேனில் அதை அன்போடு அம்பலப்படுத்துகிறார்.

காரணம் தெரியாத இந்த ஆர்வத்தை பூர்த்தியாக்கிக் கொடுங்கள் என்று என் புதுச்சேரி நண்பர் ஒருவரிடம் (காலச்சுவடின் பாண்டிச்சேரி ‘ஏஜெண்டோ’) முறையிட்டபோது அந்த நபரோ, தொலைபேசியில் சுராவுக்கு உடனடியாகத் தகவலைத் தெரிவித்துப் பேசச் சொல்லி போன் ரீசிவரையும் கொடுத்தார். வாங்கிப் பேசினேன். சொல்லுங்கஎன்னை படம் எடுக்கனும்னு கேட்டேளாமே? படம் எல்லம் நல்லா எடுப்பேளா?” என்று கேட்க, தயங்கித் தயங்கிப் பதில் சொன்னேன். சரியா எடுப்பேன் சார்!” “சரி, உடனே வாங்கோஎன்று சம்மதம் சொல்ல, ஊருக்குப் (நாகர்கோயில்) புறப்பட்டுப் போனேன். (குங்குமம், 16.7.2004.)

அடுத்தவரைக் கட்டிண்டிக்கிற இந்தப் பெரிய மனிதனின் யோக்கியதை எவ்வளவு கேவலமாக இருக்கிறது பார்த்தீர்களா? வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்கள் கூட இவ்வளவு அருவெறுக்கத்தக்க முறையில் நடந்து கொண்டதில்லை இது மட்டரகமான நடிகனின் மனோபாவம்தான் என்பதை நிரூபிப்பதுபோல் இந்தக் கண்றாவிகளின் கண்காட்சியின் துவக்க விழாவில், நடிகர் நாசர் இப்படிச் சொல்லியிருக்கிறார். ‘’இந்தப் படங்களை எல்லாம் பார்க்கும்போது சுந்தர ராமசாமியை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.

நாசர் சொன்னது உண்மைதான். சுந்தர ராமசாமி ஒரு கைதேர்ந்த நடிகர்தான். “லைட் எல்லம் அரேன்ஞ் பண்ணிட்டேன். சிந்திக்கிற மாதிரி ஒரு போஸ் கொடுங்கள்” என்று புதுவை இளவேனில் சொல்லியிருப்பார். சுந்தர ராமசாமி சிந்திப்பது மாதிரி தத்ரூபமா போஸ் கொடுத்திருப்பார்.

சிந்திப்பது மாதிரியான இந்த போஸ், புகைப்படத்திற்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், அவர் எழுத்துக்களில் எப்போதும் தென்படுகிற ஒன்றுதான். இந்தப் போசைப் பார்த்துதான் பல அறிஞர்கள் வியந்து போகிறார்கள். சுந்தர ராமசாமியை மையமிட்டு, இந்த அறிவாளிகள் அடிக்கிற அட்டகாசங்களைப் பார்க்கும்போது இந்தப் பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது. “கேணப்பய ஊருக்கு கிறுக்குப் பய நாட்டாமை!”

https://i1.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2009/08/sundara_ramasamy.jpg?w=474

உல்லாசமாக பேப்பர் படிக்கும்போது தெரியாம எடுத்தாங்களா? இல்ல படிக்கிறமாதிரி இருக்கச் சொல்லி எடுத்தாங்களான்னு தெரியல. என்ன ஒரு தத்துரூபம். என்ன ஒரு உல்லாசம்.

நின்று போன ‘காலச்சுவடு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1994-ல் மீண்டும் வரப்போவதாகக் கேள்விப்பட்டவுடனே பல அறிஞர்கள் சோம்பிக் கிடந்த மனதுக்குப் புத்துணர்ச்சிஎன்கிற பாணியில் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

அதில் ஒரு கடிதம் இலங்கை பேராதனையிலிருந்து. எழுதியவர் எம்.ஏ நுஃமான்.காலச்சுவடு மீண்டும் வருவது பெருமகிழ்ச்சி. எனது வியூகம் பேட்டியை அதில் மறு பிரசுரம் செய்ய விரும்புவது நீங்கள் எனக்குத் தரும் கௌரவம். (‘காலச்சுவடு’ மீண்டும் வருவதின் பெருமகிழ்ச்சிக்கான காரணம்) இத்துடன் இரு படங்கள் அனுப்புகிறேன்… “‘சுபமங்களாபேட்டிகளில் வருவதுபோல நடிகர்கள் மாதிரி செயற்கையான சூழலில் படம் பிடித்துப் போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அது மிகவும் கூச்சமாக உள்ளதுஎன்று எழுதியிருக்கிறார். காலச்சுவட்டில் எழுதுவது என்னைப் புதிதாகப் பிறப்பிக்கும்என்று அந்தக் கடிதத்தின் முடிவில் குறிப்பிட்டிருக்கும் நுஃமான் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் தகுதியை உயர்த்திக் கொண்டு காலச்சுவடுக்கே ஆலோசனை தரும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். ஆம். இப்போது அவர் ஆலோசனைக் குழுவில் ஒருவர். இவராவது சுந்தர ராமசாமியிடம் “எதுக்கு இப்படி சினிமா நடிகன் மாதிரி வெட்கம் கெட்ட வேலை?” என்று கேட்டிருக்கலாம்? கேட்டாரோ, என்னவோ?

‘காலச்சுவடு’ 2004 ஆகஸ்டு மாத இதழில் இந்தக் கண்றாவிகளின் கண்காட்சியைப் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அந்தச் செய்தியின் பின்னணிப்பாக தேவிபாரதி என்கிற சுராவின் ரசிகர்-அல்ல பக்தர்- இப்படிச் சிலிர்த்திருக்கிறார்.

உறங்கும் நதியின் சலனமின்மையும் ஆழியின் தீவிரமும் பின்னிப் படர்ந்த சுராவின் பேரு ஒரு குழந்தையின் பேதமையோடும், பூரிப்போடும் இளவேனிலின் புகைப்படச் சட்டங்களுள்ளாக நெகிழ்ந்து நிற்கும் தருணங்கள் வியப்பூட்டக்கூடியவை. இளவேனிலின் இப்புகைப்படங்களை சுராவைப் பற்றிய பல பரிமாணங்களைக் கொண்ட மிக நீண்டதொரு கவிதையை அல்லது குழந்தைகளுக்கான சித்திரக் கதையை, இருளையும், ஒளியையும் கொண்டு எழுத மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சியாகக் கூடப் பார்க்கலாம். ஒரு குழந்தையைப் போல அவரை இழுத்துக்கொண்டு கடல், காடு, கரை, வனாந்தரமெல்லாம் சுற்றித் திரிய முடிந்திருக்கிறது இளவேனிலுக்கு. கைப்பற்றி நடந்து, நிற்கச் சொன்ன இடத்தில் நின்று. உட்காரச் சொன்ன இடத்தில் உட்கார்ந்துகுழந்தை யார்? இளவேனிலா? சுந்தர ராமசாமியா?

சிந்தனையின் ஊற்றுக் கண்களைத் திறக்கும் நீண்ட உரையாடல்களினூடாக வெளிப்படும் அவரது உடல் மொழி, அவரது விழிகளின் அசைவிலும், அசைவின்மையிலும் தென்படும் குறிப்புகள். அவரது புன்னகை, உரத்த சிரிப்பு, கவலை, கோபம், வெறுப்பு, என அவரது ஆளுமையின் பல பரிமாணங்களைத் தமது நினைவின் பக்கங்களில் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இக்கண்காட்சி முற்றிலும் அந்தரங்கமான நெகிழ்வூட்டும் ஓர் அனுபவமாக இருக்கக்கூடும்.

இப்படிப் புல்லரித்துப் போகும் இந்த பக்தர், கடவுளிடம் (சு.ரா) என்ன வேண்டியிருப்பார்? மேற்கண்ட ஆராதனையின் உள்ளார்த்தம் இதுதான். “பகவானே, என் எழுத்துக்கள் தொடர்ந்து காலச்சுவட்டில் வருவதற்கு நீ அருள் புரியவேண்டும். அப்படி எழுதியவற்றைத் தொகுத்து ‘காலச்சுவடு’ பதிப்பகம் புத்தகமாக வெளியிட நீ துணை புரிய வேண்டும். இவை இரண்டைத் தவிர ஏழை எழுத்தாளன் எனக்கு வேறு என்ன வேண்டும்?”

இந்த உள்ளுணர்வு தேவிபாரதிக்கு மட்டுமல்ல, சு.ரா.வின் அடியார்கள் (எழுத்தாளர்கள்) அனைவரின் உள்ளுணர்வும் இதுதான் “அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடமாட்டேன்” என்பது போல சு.ரா.வைப் புகைப்படம் எடுத்துக் கண்காட்சி வைத்ததுபோல் “இனி யாரையும் எடுக்க மாட்டேன்” என்று அறிவித்து, மற்ற எழுத்தாளர்களை ஏமாற்றிவிட்ட ‘கேமரா மேதை’ இளவேனிலின் உள்ளுணர்வும் இதுதான். இது ‘அறிவாளி’களின் திட்டமிட்ட அறியாமை.

ஒருவகையில் புகைப்படம் எடுத்த புதுவை இளவேனிலுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த நன்றி அவர் எடுத்த படத்திற்காக அல்ல. எடுக்காமல் விட்ட படத்திற்காக.

‘ஆம்! சுந்தர ராமசாமி மலம் கழிப்பதுபோலப் படமொன்று எடுத்து கண்காட்சியில் வைத்திருந்தால் அறிவாளிகள் இப்படிக்கூட சிலாகித்து இருப்பார்கள் “என்ன ஒரு மேதமை! உறங்கும் நதியின் சலனமின்மையும், ஆழியின் தீவிரமும் பேளும்போது அந்தக் கலைஞனின் முகத்தில் எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்”

ஜெயலலிதா, ரஜினிகாந்த் இவர்கள் தங்களை விதவிதமாகப் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. அவர்களின் புகைப்படங்கள் லட்சக்கணக்கானவர்களால் விரும்பப்படுகிறது. அது அவர்களின் வியாபார அரசியல் முறைக்கு உகந்தது.

ஆனால், சுந்தர ராமசாமியின் புகைப்பட விருப்பம் சுயபோதையாக இருக்கிறது. தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்துக் காமுறுகிற மனநோயாளியைப்போல். இது பிழைப்புவாதிகளின் பந்தாவான மனநிலையைவிட ஆபாசமானதாக இருக்கிறது. ஒருவேளை சுயபோதை பிடித்த சுந்தர ராமசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டால் பிறகு ஜெயலலிதா தலைமையில்தான் சு.ரா. அரசை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.

(பின்குறிப்பு: புதுவை இளவேனிலுக்கு வேண்டுகோளோடு: நீங்கள் உங்களை கவிஞன், எழுத்தாளன், மகா கலைஞன் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். இதெல்லாம் உங்களுக்குப் பெருமையாக இருக்கும். தயவு செய்து ஆட்டோ ஓட்டுநர் என்று மட்டும் சொல்லாதீர்கள். அது ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பெருமையாக இருக்காது.)

-வே. மதிமாறன்

புதிய கலாச்சாரம் செப்டம்பர்-2004 இதழுக்காக எழுதியது

தொடர்புடையது:

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம்; டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி: இதுதாண்டா தமிழ்த்தேசியம்

2195237_ambedkar_periyar

தமிழ்த்தேசியவாதிகள் அம்பேத்கரை புறக்கணிப்பதற்கு காரணம் அவர் இந்திய தேசியத்தை வலியுறுத்தினார் என்பதினாலா?

-எம். முருகன்

தோற்றத்தில் அப்படி தெரியலாம். ஆனால் அது மாயத்தோற்றம்.

தேசியத்திற்காக டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்கணிப்பதாக சொல்லிக்கொள்கிற, அல்லது வெளியில் சொல்லமால் அவரை குறிப்படுவதை தவிர்க்கிற இந்த தமிழ்த்தேசியவாதிகள்தான், தன் வாழ்நாள் முழுக்க இந்திய தேசியத்தை வலியுறுத்திய, அதற்காகவே தன் வாழ்நாளை அர்பணித்துக்கொண்ட காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை மனமார விரும்புகிறார்கள். அல்லது அவர்களை விமர்சிக்க மறுக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய இந்திய தேசியத்தில் ஒரு நியாயம் இருந்தது. அது இந்தியா முழுக்க தாழ்தத்தப்பட்ட மக்களின் துயரம் ஒரு போலவே இருப்பது. ஊருக்கு வெளியே சேரி இந்தியா முழுக்க ஒரே மாதிரியாக இருப்பது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் அரியான ஜாட், உத்திரபிரதேச யாதவ், ஆந்திர ரெட்டி, தமிழகத்து தேவர், வன்னியர் ஜாதியை சேர்ந்தவர்களிடம் எந்த பிராந்திய வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியான ‘இந்திய குணம்’ இருப்பது.

இந்திய தேசியத்திற்கு அடையாளமாக இருக்கிற தலித் விரோத போக்கையும், ஜாதியையும், ஜாதிவெறியர்களையும் எதிர்த்து போராடியதால்தான் டாக்டர் அம்பேத்கர், இநதியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக உயர்ந்து நின்றார்.

ஆனால், காமராஜர் – முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்கள் வலியுறுத்திய தேசியத்தில் எந்தவிதமான முற்போக்கு அம்சங்களும் கிடையாது. பார்ப்பனர்கள், இந்து கண்ணோட்டம் கொண்டவர்கள் என்ன காரணத்திற்காக இந்திய தேசியத்தை வலியுறுத்தினார்களோ, அதுபோன்ற பிற்போக்கு காரணங்களும், ஆளும் வர்க்க மனோபாவமும்தான் இவர்கள் வலியுறுத்திய தேசியத்திலும் இருந்தது.

‘காமராஜர் கிராம பள்ளிக்கூடங்களை திறந்தார், அதற்காகத்தான் அவரை ஆதரிக்கிறோம்’ என்று தெளிவாக காமராஜரை தேசியத்தில் இருந்து பிரித்துப் பார்த்து ஆதரிக்கத் தெரிந்து இருக்கிற தமிழ்த்தேசியவாதிகள், அதைவிட பல படிகள் மேலேபோய் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக இடஒதுக்கீடு, இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்று விஸ்வரூபம் எடுத்து நின்ற டாக்டர் அம்பேத்கரை விமர்சிக்கிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள் அல்லது அவரை கொண்டாட மறுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம், இந்திய தேசியமா? அல்லது அவர்கள் மனதில் இருக்கிற இந்து ஜாதியமா?

காமராஜரை ஆதரிப்பதற்குக்கூட இதுபோன்ற ஒரு காரணமாவது இருக்கிறது. ஆனால் முத்துராமலிங்கத் தேவரை ஆதரிப்பதற்கு இதுபோன்ற எந்த முற்போக்கு காரணங்களும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தார். தேசியமும், தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்தார். முக்குலோத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்களை இந்திய தேசியத்தை காப்பதற்காக ராணுவத்தில் போய் சேரச் சொன்னார்.

ஆனால், தலைவர் பெரியார் தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்தார். அதற்காகவே அவரை  மிக கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் முத்துராமலிங்கத் தேவர். தேசியத்தை ஆதரித்த காமராஜரையும் அவரின் இடஒதுக்கீடு கொள்கைக்காக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். திராவிட இயக்கத் தலைவர் என்ற காரணத்திற்காகவே அண்ணாத்துரையை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார் முத்துராமலிங்கத் தேவர்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இருந்தார் என்பதை கூட விட்டுவிடுங்கள், ‘அதை குறித்து விமர்சித்தால் தமிழனின் ஒற்றுமை குலைந்து விடும்’ என்று ஒரு தமிழ்த்தேசிய காரணமாவது கூச்சமில்லாமல் கூறிக்கொள்ளலாம்.  ஆனால்,  இவர்கள் தீவிரமாக எதிர்க்கிற,  அவர் தீவிரமாக வலியுறுத்திய தேசியத்திற்காகக் கூட அவரை விமர்சிக்க மறுக்கிறார்களே தமிழ்த்தேசியவாதிகள். இதற்கு எது காரணம்?

தத்துவத் தெளிவில்லாமல் இருப்பதைக்கூட அறியாமை என்று புரிந்து கொள்ளலாம். அதுகூட ஒன்றும் மாபெரும் தவறல்ல. ஆனால், தவறாகவோ, சரியாகவோ தான் தீவிரமாக சொல்லுகிற ஒரு விஷயத்திற்குக்கூட உண்மையாக இல்லாத இந்தப் போக்கு  பச்சையான சந்தர்ப்பவாதம்.

பல தமிழ்த்தேசியவாதிகள், சில பெரியாரிஸ்டுகள், சில மார்க்சிஸ்டுகள் நேரடியாகவே ஜாதி அடையாளத்தோடு இருக்கிறார்கள். இன்னும் சிலர் தன் ஜாதி அடையாளத்தை மறைத்தாலும், தான் தலித் அல்ல என்பதை மறைமுகமாக அடையாளப்படுத்தி விடுகிறார்கள்.

இந்த ஜாதிய மனோபாவமும், தலித் வீரோத போக்கு அல்லது தலித் மக்கள் மீதான் வன்கொடுமைகள் பற்றிய அலட்சியப் பார்வைதான் டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதற்கு அல்லது முக்கியத்துவம் தராமல் இருப்பதற்கு காரணம். மற்றபடி அவர் தமிழனல்ல என்பதோ, தேசியத்தை வலியுறுத்தினார் என்பதோ காரணமல்ல. (சேகுவேராவும், எம்.ஜி. ஆரும் தமிழர்களா?)

தந்தை பெரியாரின் இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு என்கிற கண் கொண்டு பார்த்தால் டாக்டர் அம்பேத்கர் பச்சைத் தமிழனாகத்தான் தெரிவார்.

பெரியாரின் பார்வையில்லையேல், சந்தன கடத்தல் வீரப்பனுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம் கூட டாக்டர் அம்பேத்கருககு தரமாட்டார்கள் தமிழ்த்தேசியவாதிகள்.

குறிப்பு:

நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாரும் இல்லை என்ற டாக்டர் அம்பேத்கர் பற்றியான என்னுடைய நூலின் அறிமுக விழா விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பில் தோழர்கள் பன்னீர் செல்வம், ஸ்ரீரிதர், பாண்டியன், மகிழ்நன் இவர்களின் பெரும் முயற்சியில் அக்டோர் 4 தேதி (2009) மும்பையில் நடக்க இருக்கிறது.

இந்த விழாவில் தோழர் கொளத்தூர் மணியும், தோழர் சீமானும் கலந்துகொள்வதை தடுக்கும் வகையில், நான் அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு எழுதியதாக  பொய் செய்தியை பரப்புகிறார்கள், டாக்டர் அம்பேத்கர் மீது  வெறுப்புக் கொண்ட ஜாதி வெறி தமிழ்த்தேசியவாதிகள்.

இதுபோன்ற அவதூறு டாக்டர் அம்பேத்கர் படம்போட்ட டி சர்ட் கொண்டு வரவேண்டும் என்று நண்பர்களுடன் முயற்சித்தபோதும் அதை கேவலப்படுத்தும் விதமாக நடந்தது.

டாக்டர் அம்பேத்கர் என்ற சொல், எப்போதும் ஜாதி வெறியர்களை எரிச்சலடைய வைக்கிறது. எந்த முற்போக்கு முகமூடிக்குள் ஒளிந்திருந்தாலும், டாக்டர் அம்பேத்கர் என்ற பெயரை கேட்டவுடன் தன்னை அறியாமல் அம்பலமாகிறார்கள் தலித் விரோதிகள்.

தொடர்புடையவை:

`தலித்துகள்’ என்று சொல்வது தவறு

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது

என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

அம்பேத்கர் என்னும் ஆபத்து

விநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே


https://i2.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2008/09/truth-31.jpg?w=474

விநாயகன், பிள்ளையார், கணபதி, கணேசன் இப்படி பல்வேறு புனைப் பெயர்களில் இருக்கிற கலவர நாயகன் தமிழகத்திற்கு எப்போது வந்தார், என்பது பெரும் விவாதமாகத்தான் இருக்கிறது.

மதவாதிகள், ஜாதிய அபிமானிகள் தங்கள் மதத்தை, ஜாதியை, கடவுளை மிகப் பழமையானவர், பழமையானவை என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் பெருமை கொள்வார்கள்.

அப்படித்தான் விநாயகனை வழிபடுகிற, வழிபட பரிந்துரைக்கிற இந்து கண்ணோட்ட ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், 5 நூற்றாண்டு என்றும் இல்லை அதற்கு முன்பே 2 நூற்றாண்டிலேய வந்து விட்டார் என்றும் பெருமை பட்டுக் கொள்கிறார்கள். (’கடவுள் கொண்டுவரப்பட்டவர்‘ என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்)

சைவசமயத்தின் கட்டுக்கதையான பெரியபுராணத்தை சேக்கிழர் எழுதுவதற்கு காரணமாக இருந்தது, சுந்தரரின் பாடல்தான் என்று சொல்கிறார்கள். சுந்தரருக்கு அது எப்படி தெரியும் என்றால், அவருக்கு ஒரு கல்லு பிள்ளையார் அந்தக் கதையை சொன்னதாக விட்டலாச்சாரியார்பாணியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் பிள்ளையார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

வட இந்தியாவில் ஏன் முதலில் விநாயகன் அவதரித்தார் என்பதை தெரிந்து கொண்டால் அவர் தமிழகத்திற்கு எதற்காக வந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

மகாவீரரின் சமணமும், அதன் பிறகு புத்தரின் எழுச்சியும் பார்ப்பன வேதங்களை, வேத மதத்தை அதன் ஜாதிய கண்ணோட்டத்தை பொத்தல் ஆக்கியது. பிறப்பால் எவனும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை என்று இந்து மத அல்லது வேத மத எதிர்ப்பாக வீறு கொண்டு நின்றது பவுத்தம். புத்தருக்கு பிறகும் அவரின் சீடர்களால் இந்தியா முழுக்க இந்த அலை ஓயாது பார்ப்பனியத்திற்கு எதிராக அடித்துக் கொண்டே இருந்தது.

அதன் தாக்கத்தால்தான் தமிழகத்து திருவள்ளுவரும்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

என்று வேத மதத்தின் மீது காறி உமிழ்ந்தார்.

பவுத்ததின் இந்த அலை, பார்ப்பனியத்தை நிலை குலைய வைத்தது. பார்ப்பனியத்தை காப்பதற்காகத்தான் பெருமாள் பத்து அவதாரங்களை எடுக்கிறார். சிவன் மனித உருவம் (பார்ப்பன) கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஆனாலும் பெருமாளும், சிவனும் வீதியில் இறங்கி பக்தர்களோடு நெருக்கமாக இருக்க ஆகம விதிகள் இடம் தரவில்லை. அப்படி இடம் தருவதாக மாற்றிக் கொண்டால், பிறகு அவர்களின் மீதுள்ள ஒரு பயம் கலந்த பக்தி அற்றுப் போகும்.

அல்லது பார்ப்பனர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக கடவுளை வழிபட வேண்டிய முறை உண்டாகும் என்பதால், பவுத்தத்தை எதிர் கொள்ள அதுவரை இல்லாத முறையில் ஒரு புதிய ஜனரஞ்கமான கடவுள் தேவைப்படுகிறார்.

அதன் பொருட்டு பவுத்ததிடம் இருந்து இந்து மதத்தை மீட்க, தோழமையான, யார் வேண்டுமானாலும் தொட்டு உருவாக்க, வழிபட, எங்கு வேண்டுமானாலும் வைத்து புழங்க, நிறுவ ஒரு கடவுளாக உண்டாக்கப்பட்டவர்தான் விநாயகர்.

அதனால்தான் விநாயகர் அரசமரத்தடியிலும் அமர்ந்திருக்கிறார். அரசமரம் என்பது புத்தருக்கு உரியது. அரசமரத்தின் இன்னொரு பெயர்தான் போதி மரம்.

விநாயகர் என்ன காரணத்திற்காக உண்டாக்கப்பட்டாரோ அதை அவர் சிறப்பாக நடத்தி முடித்தார்.

(சைவர்களிடமும் வைணவர்களிடமும் பேதமிருந்தாலும் அவர்களிடம் விநாயகனை வழிபடுவதில் மட்டும் ஒரு ஒற்றுமையை பார்க்க முடியும்.)

அதன் பிறகு எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள், பின் தங்கிய மக்கள் ஜாதிய ஒடுக்குமுறையை கண்டித்து இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு குறிப்பாக இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்களோ அப்பொதெல்லாம் விநாயகர் அவர்களை போய் தடுத்தாட் கொள்வார்.

அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க அவர்களுக்கு அதிக முன்னுரிமை தருகிறார்கள். அதை இஸ்லாமியர்கள் வீதிகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கலவரம் செய்வதற்கு அவர்களையே பயன்படுத்துகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட இந்துக்களின் குடியிருப்புகளின் வழியாக செல்ல மறுக்கிற இந்துக் கடவுள்களின் ஊர்வலம், இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் வழிபாட்டுத் தளங்களின் வழியாக விநாயகனின் ஊர்வலம் கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்று இந்துவெறியர்கள் அடம்பிடிப்பதின் உள்நோக்கம் கலவரத்தை மனதில் கொண்டே.

விநாயகன் தீண்டாமையையும், பார்ப்பனியத்தையும் பாதுகாப்பதற்காக ‘தோழமையோடு‘ எந்த கலவரத்தையும் செய்யத் தயாரானவன்.

விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன்.

***

2008 ஆம் ஆண்டு விநாயகன் விஜயத்தின்போது ’சிந்தனையாளன்’ இதழுக்காக எழுதியக் கட்டுரை. மீண்டும் பதிவிட்டிருக்கிறேன்.

***

தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை

scan0001

திரு. குளோரியஸ் ஸ்டீவ் ச.ச அவர்களை ஆசிரியராக கொண்டு, தொன்போஸ்கோ கல்வி நிறுவனத்தாரால், நடத்தப்படுகிற ‘சலேசியன் செய்தி மலர்’ ஜீலை மாத இதழில்  சிறப்புப் பேட்டியாக என்னுடைய பேட்டியை வெளியிட்டு இருந்தார்கள். தோழர் ஆ.புத்திரன் எடுத்தப் பேட்டியை அவரின் முன்னுரையோடு அப்படியே தருகிறேன்.

-வே. மதிமாறன்.

ன்றையு தமிழ் சூழலில் வே.மதிமாறன் பற்றி சொல்லவேண்டியவை நிறைய உள்ளன. மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனையாளர், எழுத்தாளார், ஆய்வாளர், சமூக ஆர்வலர் என்று பல பாரிமாணங்களில் தீவிரமாக இயங்கிவருபவர்.

பாரதியார் ஒரு பார்ப்பன இந்து கண்ணோட்டம் கொண்ட எழுத்தாளர் என்பதை தனது ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி என்ற நூலில் ஆதாரத்தோடு எழுதி பெரிய சர்சையை உண்டு பண்ணியவர். சமூக விழிப்புணர்வு மாத இதழில் வாசகர் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் அடங்கிய ‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகம் முற்போக்காளர்கள் மத்தியில் புகழ் பெற்றது.

டாக்டர் அம்பேத்கரை தலித் அல்லாதவர்கள் விரோதிகளாக பார்ப்பதை கண்டித்து, அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் நிறைய செய்திருக்கிறார் என்று பல ஆதாரங்களை காட்டி ‘நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லை’ என்ற இவரின் புத்தகம் சமீபத்து பரபரப்பு.

இனி அவருடன்…..

1. கலாச்சாரம் என்றால் என்ன? இந்திய காலச்சாரம் பற்றி?

பெரியார் சொல்வதுபோல் ‘உன்னிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதுபோலவே நீ அடுத்தவரிடமும் நடந்துகொள்ள வேண்டும்’- என்பதைதான் கலாச்சாரம் – பண்பாடு -நாகரீகம் எனச் சொல்லவேண்டும். இந்தியாவிற்கு கலாச்சாரம் என்று ஒன்று இல்லை. ஆச்சாரம் தான் இருக்கிறது. சாதி ரீதியான ஏற்றதாழ்வுகளை கொண்ட ஆச்சாரம் தான் இருக்கிறதே ஒழிய சிறந்த பண்பாடு என்று ஒன்று இல்லை. இந்த மண்ணுக்கென்று ஒரு பண்பாடு இருந்ததில்லை. மாறாக ஒவ்வொரு சாதிக்குமான ஒரு வழிபாட்டுமுறை, வாழ்வுமுறை, பேச்சுவழக்கு, உணவுமுறை, உடை என்று இருந்ததே தவிர. பொதுவான கலாச்சாரம் என்று ஒன்று இல்லை. பிறமனிதனை தனக்கு கீழாக வைத்து துன்புறுத்துகிற, அவமானபடுத்துகிற, அசிங்கப்படுத்துகிற ஒரு ஆச்சாரம் தான் இங்கு இருக்கிறது.

2. காலச்சாரம் மற்றும் பண்பாடு என்று இரண்டு சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன…இதில் பண்பாடு என்பது என்ன? கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் வேறுபாடு உள்ளதா?

கலாச்சாரம் என்பது சமஸ்கிருத சொல்… பண்பாடு என்பது அதற்கான மாற்று தமிழ்சொல். பலபேர் கலாச்சாரம் என்பதும் பண்பாடு என்பதும் வேறு வேறு என்று கருதுகிறார்கள். ஆனால் இவை இரண்டும் வேறு வேறு அல்ல.. ஒரே விசயத்தை குறிக்கிற இரண்டு சொற்கள். ‘நடு சென்டர்’ என்று சொல்கிறோம் அல்லவா, அதுபோல்.

3. இந்திய பண்பாடு என்று ஒன்று இல்லை எனச்சொன்னீர்கள் அப்படியானால் தமிழ் பண்பாடு என்ற ஒன்றைப்பற்றி?

தமிழ் பண்பாடு என்றும் ஒன்று கிடையாது. தமிழர்களுக்கு அவர்களின் மொழியைத் தவிர பொதுவான பண்பாட்டு அடையாளம் ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை. மொழியில் கூட உடல்உழைப்பை மூலதனமாக கொண்ட மக்களை தாழ்த்தி பார்க்கின்ற சொல்லாடல்கள்தான் இருக்கிறது.

கீரை விக்ரவ வந்தாளா? ரிக்க்ஷாகாரன கூப்பிடு! உழைக்கும் எளிய மக்களை அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும், அவன், அவள் என்று மரியாதை குறைவாக விளிக்கிற மொழி, அதேவேளையில் ஒரு டாக்டரையோ, ஒரு எஞ்சினியரையோ, தொழில அதிபரையோ அப்படி அழைப்பதில்லை. அவர்கள் ஒரு சமூக விரோதியாக இருந்தாலும் – உ.தா: ஒரு டாக்டா; சிறுநீரகத்தை திருடுகிறவாராக இருந்தாலும் -அவர் இவர் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். இதை எப்படி ஒரு பண்பாடு என்று சொல்லமுடியும். மீடியா முதல் இந்த ஏற்றதாழ்வு தமிழ் சமூகத்தில் இன்னும் கட்டி காக்கப்படுகிறது.

4. ஆனால் ஆரிய பண்பாட்டுவழியில் தான் நீங்கள் சொல்லுகிற சமத்துவமற்ற ஒரு வாழ்வுமுறை இருந்துவந்தது என்பதும் தமிழர் பண்பாடு சாதிய பிளவுகளற்ற ஒரு சமத்துவ பண்பாடு என்பதும் உண்மையல்லவா?

நீங்கள் சொல்லுவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வுமுறை. அதை பெருமைக்காக வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளலாம். இன்றைககு அதை எப்படி கடைபிடிக்க முடியும்?

மேலும் அன்றைய தமிழ் சமூகத்தில் சாதிய ஏற்றதாழ்வுகள் (Caste Stertification) இருக்கவில்லை என்றாலும் வர்க்க வேறுபாடுகள் (Class Stertification) இருந்தது. உ.தா: மன்னர்கள், உழைக்கும் மக்கள் என்ற வேறுபாடு இருந்திருக்கும். இரண்டுபேரின் பழக்கம் வேறு வேறாகத்தான் இருந்திருக்கும். இதில் எதை நீங்கள் தமிழர் பண்பாடு என்று வகைபிரிப்பிரிகள்? கடைப்பிடிப்பீர்கள்?

தமிழன் என்றும் தமிழர்களின் அடையாளம் என்றும் நீங்கள் எதை சொல்வீர்கள்? இன்றைய தமிழர்கள் யாருடைய வாழ்முறையை கடைபிடிப்பது? மக்களின் முறையையா? மன்னரின் முறையையா?

5. தமிழ் பண்பாடென்று அதன் மொழியை தவிர ஒரு பொதுவான அடையாளம் இல்லை என்றுசொன்னீர்கள் அப்படியென்றால் பண்பாடு என்பதன் அடையாளம் என்னவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

சக மனிதனின் துயரங்களை புரிந்துகொள்ளுதலும் சகமனிதனை துன்புறத்தாமல் இருப்பதுதான் பண்பாட்டிற்கான அடையாளம். ஆனால் இவர்களின் பண்பாட்டில் இதற்கு நேர்மாறாக ஏற்றதாழ்வுகள் நிறைந்த, சகமனிதனை கீழ்ப்படுத்தி, அசிங்கபடுத்தி (திண்ணிய நிகழ்வுகள்) வாழ்கின்ற நிலைதான் இருக்கிறது. ஜாதி வேறுபாடுகள்அற்ற வர்க்க வேறுபாடுகள் அற்ற ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கவேண்டும். உழைக்கும் மக்களின் கலைவடிவங்களில் இருந்து அவர்களின் வாழ்வியலில் இருந்து அவைகளை உருவாக்க வேண்டும்.

6. இவ்வாறு வெறும் “ஆச்சாரம்” மட்டுமே இருந்துவந்த சூழமைவில் இந்தியாவிற்கு வந்த கிறித்தவத்தின் நிலை, அணுகுமுறை எவ்வாறு இருந்தது? இப்பொழுது எவ்வாறு இருக்கிறது?

பிறப்பினால் ஏற்றதாழ்வுகளை உறுதிப்படுத்திய பண்பாட்டை அடிப்படையாக கொண்ட இந்துக்களிடையே வந்திறங்கிய கிறித்தவம் பெரும்பாலும் ஜாதியை உள்வாங்கிய ஒன்றாகத்தான் இருந்தது. மேல்சாதிக்கார்களை குறிப்பாக பார்ப்பனர்களை மதம் மாற்றிவிட்டால் மற்றவரை மதம் மாற்றுவது எளிது என்ற நோக்கில் ஆரம்பகால இந்திய கிறித்தவம் செயல்பட்டது. அன்றைய கிறித்தவ கல்வி நிறுவனஙகள் பெரும்பாலும் மேல்சாதி இந்துக்களுக்கே பயன்பட்டது. அதற்கு சாட்சிபோல் இன்றும் சில கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களுக்குள் தாழ்த்தப்பட்ட வசதி குறைந்தவர்கள் நுழைய முடியாது என்பது தொடர்கிறது.

ஆனால் பார்ப்பனர்கள், கிறிஸ்துவத்திற்கு மாறவில்லை என்பது மட்டுமல்ல, அதற்கு எதிராகவே இருந்தார்கள். டாக்டர் அம்பேத்கர் சொல்வார் ‘அவர்கள் கிறிஸ்துவ நிறுவனங்களை ஏமாற்றி விட்டார்கள்’ என்று. இன்னும் சொல்லப்போனால் மேல்சாதி இந்துக்கள் குறிப்பாக கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் படித்தப் பார்ப்பனர்கள் கிறித்தவத்திற்கு எதிராக செயல்படத்துவங்கினார்கள். இன்றும் செயல்படுகிறார்கள். இந்து கண்ணோட்ட அரசியல் அறிவாளிகள் பலர் கிறித்துவ நிறுவனங்களில்தான் படித்தவர்கள்தான். உதாரணத்திற்கு சோ, குருமூர்த்தி போன்றோர்.

இந்தனை நூற்றாண்டுகள் ஆனபிறகும் கிறித்துவர்களின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம்தான். இதுகூட தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களால்தான். தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் கிறிஸ்துவ மதத்தின் மூலமாக பெற்ற 1 சதவீத உதவிக்கே அந்த மதத்திற்கு  100 சதவீதம் உண்மையாக நடந்து கொண்டார்கள். கிறிஸ்துவ மதததின் மூலம் 100 சதவீதம் உதவி பெற்ற பார்ப்பனர்கள், அதற்கு நேர் எதிர் கண்ணோட்டம் கொண்டார்கள். தலித் மக்களின் நன்றி உணர்வை, நேர்மையை ‘பால் பவுடருக்கு மதம்மாறிட்டான்’ என்று கொச்சை படுத்தினார்கள். படுத்துகிறார்கள்.

7. கிறித்தவரல்லாத ஒரு மார்க்சிய, பெரியாரிய சிந்தனையாளராக, இன்று கிறித்தவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

கிறித்தவம் என்பதைவிட கிறித்தவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் அல்லது இருக்கவேண்டும் என்றுதான் நான் பார்க்கிறேன்.

பகுத்தறிவளார்களாகிய எங்களின் கிறித்துவ மதம் பற்றிய விமர்சனங்களை கண்டு, நாங்கள் கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக செய்படுவதாக எங்கள் மீது கடுமையாக கோபப்படுகிறார்கள். ஆனால் அவர்களே கிறித்தவதிற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஜாதிய ஏற்றத் தாழ்வுகளும், பிறக்கும் போதே ஒருவன் உயர்ந்தவனாகவும், தாழ்ந்தவனாகவும் பிறக்கிறான் என்கிற இந்துமத தத்துவத்தை இந்துக்களைப் போலவே 100 சதவீதம் கிறித்துவர்களும் நம்புகிறார்க்ள். அதையே கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள். திருமணம் முடிப்பதுகூட அவர் கிறிஸ்துவரா என்று மட்டும் பார்க்காமல், அவர் நம்ம ஜாதிக்காரரா என்பதைத்தான் தீவிரமாக பார்க்கிறார்கள். கிறிஸ்துவராக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால் நம்ம ஜாதிக்காரராக கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று தேடிப்பார்த்து திருமணம் முடிக்கிறார்கள்.

இது இந்துக்களின் பழக்கம். ஒரு இந்து இன்னொரு இந்துவோடு சம்பந்தம் வைப்பதற்கு அவர்கள் மதத்தை வைத்து முடிவு செய்வதில்லை. அவர்களின் ஜாதிதான் முடிவு செய்கிறது. அதுபோல்தான் கிறிஸ்துவர்களும். அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு நாள் குறிப்பது நல்லநாள் கெட்ட நாள் பார்ப்பது, தாலி அணிந்து கொள்வது என்கிற அவரிகளின் பழக்கம் இந்துக்களின் பழக்கமாகவே இருக்கிறது. மத சார்பற்ற தனித் தமிழ் பெயர்களை தன் குழந்தைகளுககு வைக்க தயங்குகிற கிறித்துவர்கள், தாராளமாக இந்து சமஸ்கிருத பெயர்களை வைக்கிறார்கள்.

இயேசுவை நம்புகின்ற இந்துவாகத்தான் கிறித்துவர்கள் இருக்கிறாகள். இந்து மதத்தில் இருக்கிற அத்தனை சமூக சீர்கேடுகளையும் கிறித்தவர்களும் பின்பற்றுகிறார்கள்.

அவர்களிடம்ஒரு மார்க்சியவாதியாகவோ, பெரியாரியவாதியாகவோ இல்லாமல் ஒரு சாராசரி மனிதனாக நான் எதிர்பார்ப்பது அல்லது எதிர்பார்ப்போடு விடுக்கும் அழைப்பு, சமூக அக்கறைக் கொண்ட ஒரு முற்போக்காளராக, பகுத்திறவாளராக நீங்கள் வர முடியாவி்ட்டாலும் பரவாயில்லை. ஒரு உண்மையான கிறித்தவராகவாவது வாழுங்கள் என்பது தான். கிறித்துவம் ஏற்றுக் கொள்ளாத அல்லது பரிந்துரைக்காத ஜாதி என்ற நஞ்சை கடைப்பிடித்து கிறிஸ்துவிற்கும், கிறித்துவத்திற்கும் துரோகம் செய்யாதீர்கள்.

8. கிறித்தவ மதம் ஒரு அந்நிய கலாச்சார மதம் எனவே கிறித்தவர்கள் அந்நியர்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது அதை பற்றி?

கிறித்தவம் எந்த நாட்டில் உருவானதோ, அங்கு அந்த மதம் முற்றிலுமாக இப்போது வழக்கத்தில் இல்லை. அதே போல் நம் நாட்டிற்கு சொந்தமானவர் புத்தர். ஆனால் புத்தமதம் இந்தியாவை தவிர சீனா, ஜப்பான், கொரியா, இலங்கை போன்ற நாடுகளில் இருக்கிறது. அப்படியென்றால் சீனா, ஜப்பான், கொரியா, இலங்கை மக்கள் எல்லாம் அவர்களுடைய நாட்டிற்கு அந்நியர்களா? அல்லது அவர்கள் அனைவரையும் இந்தியர் என்று சொல்லமுடியுமா?

இந்தியாவில் வந்து மதம் பரப்பிய வெள்ளையர்கள், ஜெர்மானியர்கள், இத்தாலியர்கள், போர்த்துகீசியர்கள் இப்படி பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கும் கிறித்துவ மதம் தோன்றிய இடத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்கும் கிறித்தும் அந்நிய நாட்டில் இருந்து வந்தது என்றுதான் சொல்லமுடியும். இன்னும் நெருக்கி சொன்னால் அவர்களை விட இந்தியாவிற்கும் கிறித்துவத்திற்கும் இன்னும் கூடுதல் நெருக்கம் இருக்கிறது. இந்தியா இருக்கிற ஆசிய கண்டத்தில்தான் கிறித்துவ மதமும் தோன்றியது. வெள்யைர்களைவிடவும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் இந்தியர்களுக்குத்தான் அதிக நெருக்கம் கிறித்துவம்.

ஒரு மனிதன் சகமனிதனை கீழ்படுத்தி பார்ப்பது,அதை நியாயப்படுத்தி பல தத்துவங்களை எழுதி வைத்திருக்கிற மதம், இந்த மண்ணின் சொந்த மதம் என்றே வைத்துக்கொண்டாலும், அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆகவே இந்து மத தீவிரவாதிகள் கிறித்துவத்தை பற்றி சொல்லுகிற இந்த ‘அந்நிய’ என்கிற சொல்லாடலை பகுத்திவாளர்களான நாங்கள், மறுக்க மட்டும் செய்யவில்லை. கடுமையாக கண்டிக்கவும் செய்கிறோம்.

வீட்டு கூறைக்கு நெருப்பு வைக்கிறவன் நம்ம சொந்தக்காரன் என்பதற்காக அவனை நாம் விரும்புவதோ, என்னதான் நம்ம வீடு கட்டுவதற்கு பக்கத்து ஊருகாரன் உதவி செய்தாலும் அவன் அந்நியன் தானே என்று சொல்வது, நியாயம் அன்று எனபது மட்டுமல்ல, அது மோசடியானதும் கூட.

குறிப்பு:

நம்மை பொருத்தவரை நம்மீதுள்ள வெறுப்பினால் அல்ல மாறாக நம்மீது உள்ள பொறுப்பினால் சொல்லப்படுகின்ற விவாதங்களையும் விமர்சனங்களையும் சீர்தூக்கி பார்த்து நம் வாழ்விற்கு நம்பிக்கைக்கு அவற்றை உரங்களாக உள்வாங்கி உண்மைக் கிறித்தவர்களாய் வாழ்வோம்.

நம் வாழ்விற்கு நம்பிக்கைக்கு அவற்றை உரங்களாக உள்வாங்கி உண்மைக் கிறித்தவர்களாய் வாழ்வோம்.

சந்திப்பு : ஆ. புத்திரன்   – நன்றி : சலேசியன் செய்தி மலர்-ஜீலை 2009

கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

பெரியாரும் பெரியார் இயக்கத்தவர்களும், “கடவுள் பயல்களிலேயே களவானிப்பய கண்ணன்தான்” என்று பலமுறை அவனது லீலைகளை அம்பலப்படுத்தியப் பிறகும் கூட பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாத பக்தக் கோடிகளும் தங்களின் மூடநம்பிக்கைகளின் மீது மிகுந்த ‘நம்பிக்கை’யாக இருக்கிறார்கள்.

சில தமிழ்தேசியவாதிகளும், பார்ப்பனரல்லாத கடவுள்களின் நம்பிக்கையாளர்களுமான சில ‘நாத்திகர்களும்’ ஈவ்டீசிங் பேர்வழியான கண்ணனை ‘யாதவர்’ என்றும் அவன் ‘பார்ப்பனர் கிடையாது அதனால்தான் அவன் கருப்பாக இருக்கிறான். மாகாகவி பாரதிகூட அதன் காரணத்தால்தான் கண்ணனை சிலாகித்தான்’, என்றும் கோனார் உரை எழுதுகிறார்கள்.

கண்ணன் அல்லது கிருஷ்ணன் பார்ப்பானோ இல்லை பார்ப்பனரல்லாதவனோ, அவன் தூக்கி நிறுத்தியது பார்ப்பனியத்தை. அதனால்தான் அவனை பார்ப்பனர்களும் கொண்டாடுகிறார்கள். ‘நானே நாலு வர்ணத்தை உண்டாக்கியவன்’ என்று ஒரு அசிங்கத்தை அதிகாரத்தோடு சொன்ன காரணத்திற்காகத்தான், அய்யங்கார் அல்லது வைணவ கடவுள் கண்ணனை, அய்யர் பாரதியும் கொஞ்சி குலாவுகிறார். பெருமாளை வணங்காத அயயர்கள்கூட கண்ணணை வணங்கும் ரகசியமும் அதுவே.

ஒருவேளை பார்ப்பனரல்லாத அறிஞர் பெருமக்கள், தங்களின் கூர்மையான அறிவினால் துப்பறிந்து, ‘கண்ணன் பிறப்பால் பார்ப்பனரல்லாதவன்தான், அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று நிரூபித்தாலும்கூட, இல்லை அதுவே உண்மையாக இருந்தாலும்கூட அதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூகத்திற்கும் என்ன பயன்? அவமானம்தான்.

அவன் பிறப்பால் என்னவாகப் பிறந்தானோ? ஆனால் தன் செயலால் அவன் பார்ப்பானராகவே உயர்ந்து நிற்பதால், நிச்சயம் அவன் பார்ப்பனர்தான்.

அன்றைக்கு சத்ரியனாக அவதரித்த ராமன், பார்ப்பன நலனுக்காக பாடுபட்டதினால்தான் இன்றைக்கும் பார்ப்பனர்கள் ராமனை கடவுளாக போற்றுகிறர்கள்.

இன்றைக்கு பார்ப்பனர்களின் இந்திய கதாநாயர்கள் யார் தெரியுமா?

பார்ப்பனரல்லாத மோடியும், அத்வானியும்தான்.

***

ளவானித்தனம் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாலும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’ என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித் தனத்தை பாடல் எழுதி பெருமைபட்டுக் கொண்ட பாரதி போன்ற பக்தர்களுக்கு பச்சைக் குழந்தையாகவே காட்சியளிக்கிற,  பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர்களின் கவர்ச்சிகக் கடவுளான கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்:

கிருஷ்ணன் என்ற பெயரில் நான்கு பேர் இருக்கிறர்கள். ஒரு கிருஷ்ணன், சத்யவதியின் மகன். திரிதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை. இரண்டாவது கிருஷ்ணன், சுபத்ராவின் சகோதரன், அர்ஜுனனின் நண்பன். மூன்றாவது கிருஷ்ணன், வசுதேவர், தேவகி ஆகியோரின் மகன், மதுராவில் வசித்தவர். நான்காவது கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தனாலும் யசோதாவாலும் வளர்க்கப்படடவர்; இவர்தான் சிசுபாலனை கொன்றவர்.

பிரமா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் வழிபாட்டுடன் ஒப்பிடும்போது கிருஷ்ணன் வழிபாட்டில் ஒரு செயற்கைத் தன்மை காணப்படுகிறது. பிரமா, விஷ்ணு, மகேஸ்வரன் கடவுள்களாகவே பிறந்தவர்கள். கிருஷ்ணன் மனிதனாகப் பிறந்து கடவுளாக உயர்த்தப்பட்டவர்.

கிருஷ்ணனின் தொடக்க நிலை இப்படி அடக்கமானதாயிருந்தாலும், அவர் எல்லோருக்கும் மேலாக உயர்ந்த கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர் ஆனார்.

எனவே பகவத் கீதையைப் பொறுத்த மட்டில் கிருஷ்ணனைவிடப் பெரிய கடவுள் யாரும் இல்லை என்பது தெளிவாகிறது. அவர் அல்லா ஹு அக்பர். அவர் மற்ற எல்லாக் கடவுள்களையும் விடப் பெரியவர்

இப்படி  ஹாலிவுட் மேக்கப் மேனின் உதவியே இல்லாமல் பல வேடங்களில் வந்து கமல்ஹசனையே தூக்கிச் சாப்பிடுகிற கிருஷ்ணனின் யோக்யதை எப்படிப்பட்டது? என்பதை டாக்டர் அம்பேத்கர் விவரிக்கிறார்:

கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.

கிருஷ்ணன் மாவீரன் மாத்திரமல்ல; இளம்வயது முதலே மிகச் சிறந்த அரசியல் வித்தகன் எனவும் சொல்லப்படுகிறது. போர் வீரனாகவோ அல்ல அரசியல் வாதியாகவோ அவன் செய்த ஒவ்வொரு காரியமும் அறத்திற்கு மாறானவை. அந்த வகையில் அவன் செய்த முதற்காரியம் தன் சொந்த தாய்மாமனான கம்சனைக் கொன்றதாகும். அப்போது கிருஷ்ணனுக்கு வயது பன்னிரெண்டுதானாம்

கிருஷ்ணன் கம்சனைப் போர்க்களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையில் சண்டையிட்டோ கொன்றிடவில்லை.

மதுராபுரியை வந்தடைந்தவுடன் (கம்சனை கொல்வதற்கு) தாம் அணிந்திருந்த சாதாரண ஆயர் உடையை மாற்றிச் சற்று நாகரிகமான உயைணிந்து கொள்ள கிருஷ்ணனும் அவனுடைய சகோதரர்களும் விரும்பினர். அவ்வழியே வீதியில் வந்த கம்சனனின் சலவைக்காரரிடம் மிரட்டித் துணி கேட்டனர். அவன் திமிரா நடந்து கொண்டதால் அவனைக் கொலை செய்துவிட்டு, அவன் சுமந்துவந்த துணி மூட்டையிலிருந்து தாம் விரும்பிய துணிகளை எடுத்துக் கொண்டனர்.

பிறகு கம்சனுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசும் குப்ஜா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். குப்ஜா ஒரு கூனி. அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவள் மணங்கமழும் சந்தனக் குழம்பைப் பூசி விட்டாள். பதிலுக்கு கிருஷ்ணன் கூன் விழுந்த குப்ஜாவின் முதுகை குணப்படுத்தினானாம்.

வேறோர் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் குப்ஜாவைச் சந்திக்க நேர்ந்தபோது வழக்கம் போல தகாத முறையில் குப்ஜாவுடன் உடலுறவு கொண்டதாகப் பாகவதம் சொல்கிறது. (பன்னிரெண்டு வயசு பையன் பண்ணற வேலைய பாத்திங்களா?-வே. மதிமாறன்) இருப்பினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் குப்ஜா வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.

ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பாதாயிரம் பேர்கள்.

நிர்வாணமாக்கி ஊர் பெண்கள் மானத்தை எல்லாம் வாங்கிய கிருஷ்ணன், மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க உடைகொடுத்ததானம்! பாஞ்சாலியின் மானம் காத்தது இருக்கட்டும், இங்கே டாக்டர் அம்பேத்கரின்  வாதத்திறமையின் முன்னால் அவன் மானம் போகிறேதே என்ன அவதாரம் எடுத்து ‘தன் மானத்தை’ காப்பற்ற முயற்சிப்பான், கிருஷ்ணன். என்ன பதில் சொல்லி கிருஷ்ணனின் ‘மானம்’ காப்பார்கள் பக்தர்கள்.

http://4.bp.blogspot.com/_TRTWM57Ux1g/SlGi8B58xDI/AAAAAAAAAog/gKuczTzQltI/s400/baba.axd

விசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறைநம்பிக்கை.

‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக வாழ்ந்தான் ராமன் அதற்காகத்தான் அவனை வணங்குகிறோம்’ என்கிறார்கள் இந்துக்கள். அவர்களேதான்,  பாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகமேட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலைபோன்ற கிரிமனல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்த்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாக தொழுகிறார்கள்.

ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாட்டை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவும் அற்றவர்களாகவே உருவாக்கி வைத்திருக்கிறது.

இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு, முட்டாள்களாக, சூத்திரர்களாக நடத்தப்படுகிற, அவமரியாதைக்குள்ளாகிற பிற்படுத்தப்பட்டவர்களின்  சுயமரியாதைக்காக பார்ப்பனிய தந்துவங்களோடு நேருக்கு நேர் மோதிய டாக்டர் அம்பேகத்ரை, அவமதிக்கிறார்கள், சுயமரியாதையற்ற சூத்திரர்கள்.

‘நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாருமில்லை’

என்ற நூலிலிருந்து…….

ஆசிரியர் வே. மதிமாறன்

விலை ரூ. 45

கிடைக்குமிடம்:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

ராக்கி – ஜாதி, மதத்தை கட்டிக் காப்பாற்றும் கயிறு

rb

-விஜய்கோபால்சாமி

வணக்கம் தோழர்,

நாளை (5-8-2009) இங்கே (அய்தராபாத்) ராக்கி கட்டும் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. அதைக் குறித்த எனது சிந்தனைகளை ஒரு பதிவாகத் தொகுத்திருக்கிறேன். இந்தப் பண்டிகை வட்டிக் கடைக்காரர்களால் சென்னையிலும் இறக்குமதி செய்யப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது.

அதனால் சென்னை வாசிகளும் இதைப் பரவலாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பிரசுரிக்கத் தகுந்தது என்று கருதினால் தங்கள் தளத்தில் பிரசுரிக்கவும். இல்லையெனில் உரிய திருத்தங்கள் செய்து தந்தாலும் போதும். எனது தளத்திலேயே வெளியிட்டுவிடுவேன்.

நன்றி தோழர்.

விஜய்கோபால்சாமி

***

ய்தராபாத்தை சேர்ந்த் நண்பர் விஜயகோபால்சாமி, (http://vijaygopalswami.wordpress.com) இந்தக் கட்டுரையை ரக்சாபந்தன் அன்று வெளியிடுவதற்காக அனுப்பியிருந்தார்.

சிங்ப்பூரைச் சேர்ந்த நண்பர் கவியின், பெரியார் பற்றிய தொடர் இடம் பெற்றதால், விஜயின் கட்டுரையை அப்போது பிரசுரிக்க முடியவில்லை.கட்டுரை வளவளவென்று வார்த்தைகளை விரயப்படுத்தமால், எளிமையகாவும்,  சொல்ல வந்த செய்தியை குழப்பமில்லாமல், சுருக்கமாக நேரடியாக சொன்னதாலும் எந்தத் திருத்தங்களும், சேர்க்கையயும்  இல்லாமல் அப்படியே பிரசுரிக்கப்படுகிறது.

நன்றி விஜய்கோபால்சாமி.

-வே. மதிமாறன்

***

புளி என்ன விலை விற்றாலும் ஆண்டுக்கு ஒரு நாள் வயசுப் பசங்களின் வயிற்றில் செலவே இல்லாமல் கரைகிற நாள் ஒன்று உண்டென்றால் நிச்சயம் அது ரக்சா பந்தன் நாளாக மட்டுமே இருக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் வரக்கூடிய முழு நிலவு நாள் ரக்சாபந்தன்.

ரக்சா பூர்ணிமா என்ற பெயரில் வடமாநிலங்களிலும் வடமாநில மக்கள் மிகுதியாக வசிக்கும் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. சொந்த சகோதரர்களுக்கும் இந்த நாளில் சகோதரிகள்  ரக்சை  கட்டிவிடுவார்கள். ரக்சையைக் கட்டாவிட்டாலும் அவர்களுக்குள் சகோதர உணர்வு இருக்கும் என்பதால் அதைக் குறித்து அதிகம் பேசப்போவதில்லை.

அன்பின் பெயரால் நடைபெறுகிற விழா என்று சொல்லப்பட்டாலும் காதலர் தினத்தைப் போலவே இதனுள்ளும் பல வர்த்தக நோக்கங்கள் ஒளிந்திருக்கிறது.

காதலர் தின வாழ்த்து அட்டைகளுக்கும், ரோஜாப் பூக்களுக்கும், காதலர்களோடு தொடர்புடைய பரிசுப் பொருட்களுக்கும் ஒரு சந்தையை உருவாக்கித் தருகிறது என்றால், ராக்கி கட்டும் நாள் விதவிதமான ராக்கி கயிறுகளுக்கும், இனிப்புப் பொருட்களுக்கும், சகோதர சகோதரிகளுக்குள் பரிமாறிக் கொள்ளக் கூடிய பரிசுப் பொருட்களுக்குமான சந்தையை உருவாக்கித் தருகிறது.

பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, அலுவலகங்களிலோ உடன் பணிபுரிகிற ஆண்களுக்குப் பெண்கள் இந்த கயிறைக் கட்டுகிறார்கள். பதிலுக்கு அவர்கள் இனிப்புகள், புத்தாடைகள், பணம் போன்றவற்றைப் பரிசளிக்க வேண்டும். ஆழ்ந்து நோக்கினால் உள்முகமாகப் புதைந்திருக்கும் சில செய்திகளையும் புரிந்துகொள்ளலாம்.

பெண்கள் யாருக்கெல்லாம் கயிறு கட்டவேண்டும் என்று பட்டியலிடுகிறார்களோ, அந்த நபர்களில் பெரும்பாலோருக்கு அன்பு, நட்பு, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுவது வெகு குறைவே. இன்னாரிடமிருந்து எனக்குப் பாலியல் தொந்தரவுகள் வரக் கூடாது, அதற்கு இந்த நாளை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பே இப்படித் தேடித் தேடிக் கயிறு கட்டுவதற்கான காரணமாக இருக்க முடியும்.

இந்தக் கயிறு கட்டும் நாளுக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற மதவாத அமைப்புகளின் ஆசீர்வாதம் கிடைத்து வருகிறது. இவர்கள் மட்டுமல்ல அனைத்து மத அமைப்புகளும் பகிரங்கமாகவே இந்த நாளை ஆதரிக்கின்றன. இந்த அமைப்புகள் சொந்த சகோதரர்களுக்குக் கயிறு கட்டிவிடுவதை விட பிற மதத்தவர்களுக்கும், பிற சாதியாருக்கும் கயிறு கட்டிவிடுவதையே பாராட்டுவார்கள். இந்த நாளின் சிறப்பு என்று இவர்கள் சொல்லுவது “இந்த நாள் மத வேறுபாட்டையும் கடந்து சகோதர பாசத்தை வளர்க்கிறது” என்பதே. இதற்கான பதில் இறுதிப் பத்தியில் இருக்கிறது.

எத்தனைதான் ஒற்றுமை சகோதரத்துவம் என்றேல்லாம் கரகமெடுத்து ஆடினாலும், இவர்கள் தலைகீழாய் நின்று தண்ணீர் குடிப்பதெல்லாம் சாதி, மதக் கட்டுமானங்கள் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். அடப் பாவி, மத வேறுபாடு இல்லாமல் தானேடா கயிறு கட்டுகிறான் என்று நீங்கள் கேட்கலாம்.

இதையே கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கள், பெண்கள் மத, சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சகோதரர்களைத் தேர்ந்துகொள்ள ஒரு நாளை உருவாக்கியவர்கள், மத, சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஒரு நாளை உருவாக்கவில்லையே? அப்படியே இருந்தாலும் அது ஒரே ஜாதியைச்சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களுக்கு உரிய கணவன்/மணனவியைத் தேர்ந்தெடுக்கக் கூடிய சுயம்வர விழாக்கள் மட்டுமே இருந்துவருகின்றன.

இந்த நாளுக்கான ஆதிவேர், இந்தியாவின் மீது அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்த காலத்தில் ‘மிலேச்சர்கள்’ தங்கள் வீட்டுப் பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதிலிருந்து காப்பாற்றிக் கொள்வது என்ற கருத்தியலில் ஆரம்பமாகிறது. ‘மிலேச்சர்களின்’ படையெடுப்புக்கு முன்பும் இந்தியாவில் படையெடுப்புகளுக்கும் போர்களுக்கும் பஞ்சமில்லை. அப்போது எவனாவது தங்கள் பெண்களைக் காக்க இப்படி ஒரு முயற்சி எடுத்தது உண்டா?

ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிற உரிமை அவளது சகோதரனுக்கு மட்டும்தான் இருக்கிறதா? ஏன், அவள் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கிறவர்களுக்குக் கிடையாதா? இதையெல்லாம் கூட ஒதுக்கி வைத்துவிடுவோம், ஒரு பெண்ணுக்கு, தன்னைத் தற்காத்துக் கொள்ளுகிற உரிமை கூடவா கிடையாது? ஆண்களால் மட்டுமே பெண்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கருத்தியலை நிறுவுகிற முயற்சியல்லவா இது.

ராஜபுத்திரப் பெண்கள் கற்பு நிலை தவறாதவர்களாம், அந்நியன் படையெடுத்து வரும்போது தோற்றுவிடும் நிலை ஏற்பட்டால் ராஜபுத்திர ஆண்கள் தங்கள் மனைவி, சகோதரி, குழந்தைகள் அனைவரையும் குத்திக் கொன்றுவிட்டு சண்டையிட்டு மடிவார்களாம்? அல்லது அவர்களே தீமூட்டி விழுந்து சாக வேண்டுமாம். அந்தப் பெண்களின் கையிலும் ஆயுதத்தைக் கொடுத்திருந்தால் அவர்களாவதுசண்டையிட்டுத் தங்களைக் காத்துக் கொண்டிருப்பார்களே. குறைந்தபட்சம் ஆண்களைப் போல சண்டையிட்டாவது மடிந்திருப்பார்களே. கயிறு கட்டும் பண்டிகை உருவான அதே வடநாட்டில்தான் இந்த அவலங்களும் நிகழ்ந்திருக்கின்றன. கயிறு கட்டும் பண்டிகை கொண்டாடப்படுகிற அளவுக்குப் பெண்களுக்கு எதிரான இந்தக் குற்றங்கள் ஏன் பெரிதும் பேசப்படவில்லை?

காதலர் தினத்தைக் கண்டிக்கிற கலாச்சாரக் காவலர்கள் யாரும் இந்தக் கயிறு கட்டும் நாளைக் கண்டிப்பதில்லை. ஏனெனில் சகோதரத்துவம் சாதி, மதக் கட்டுமானங்களை உடைக்காது. ஆனால் காதல் சாதி மதத்தை மீறிய சந்ததியை உருவாக்கிவிடும். கவனிக்கவும், “காதல்” சாதி, மதம் மறந்த சந்ததியை உருவாக்கும் என்று தான் சொல்லியிருக்கிறேன். காதலர் தினம் அப்படி உருவாக்கும் என்று சொல்லவில்லை.

தாலிக் கயிறு, ராக்கிக் கயிறு என்று ஏதாவது ஒரு கயிறு, பெண்களை காப்பாற்றுவதாக காலகாலமாக சொல்லிவருகிறார்கள்.

இந்தக் கலாச்சார கயிறுகளின் கட்டுகளில் இருந்து பெண்கள் தங்களை விடுவித்துக்கொள்ள நினைக்கும்போது, ஆணாதிக்க சமூகமும், இந்து சமூகமும் அவர்களுக்கு தூக்கு கயிறைதான் பரிசளிக்கிறது.

பெரியாரின் மொழிக் கொள்கையிலும் தமிழரின் முன்னேற்றம்தான்

mozhikkolkai copy

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4

‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5

‘புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன்’- பெரியார் வைக்கும் குட்டு – 6

கவி, சிங்கப்பூர்

பெரியார் மொழிக் கொள்கை வகுக்க வில்லை என்று கூறுகிறார் பெ.மணியரசன். மொழிக் கொள்கை என்றால் தனி நாடு பெற்றால் நாட்டில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது ஆகும். இது தொடர்பாக இங்கு பெரியார் கூறி பதிவு செய்துள்ளதை மணியரசன் கூர்ந்து கவனிக்க வேண்டும்,

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழ் நாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டு தமிழ் நாட்டுக்கு அரசியலுக்கானாலும், இலக்கியத்திற் கானாலும் போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது தமிழ் மொழி என்பதாகத்தான் தோன்றும்.

ஆனால் நாடு நம்முடைய சொந்த நாடு  ஆனாலும் ஆட்சி தமிழர் களல்லாத, அன்னியர்களுடைய ஆட்சியாக இருப்பதால் அந்த அன்னியர்கள் பல நாடுகளை ஒன்று சேர்த்து அடக்கி ஆள்பவராக இருப்பதனால், அவர்களுடைய ஆட்சி நிலைப் பிற்கும் வசதிக்கும் ஏற்றபடி ஏதோதோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு அன்னிய மொழியாகிய இந்தி மொழி என்பது தான் ஆட்சி  மொழியாகவும்  கல்லூரி போதனா மொழியாகவும் பள்ளிகளில் கட்டாய மொழி யாகவும் கூட இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களால் வலியுறுத்தும் படியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆங்கிலம் ஏன் என்பதற்கு பெரியார், தமிழ், வடமொழியை, இந்தி மொழியை விடச் சிறந்தது என்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும் நாம் இன்றைய நிலைமையை விட வேகமாக முன்னேற வேண்டுமானால், ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும் ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும் ஆங்கில எழுத்துக்களை தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும் ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விளக்கினார். (‘மொழியும் அறிவும்’ 1957-1962).

1957 மற்றும் 1962 இல் பெரியார் கூறியதன் அடிப்படையில் தான் இன்று தமிழக மக்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி பயில அனுப்புவதற்கு காரணமாக உள்ளது. ஆங்கில வழி மழலையர் பள்ளிகள் ஏற்பட்ட பின்னர் தான் சேரி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் கழுத்தில் “டை” கட்டிக் கொண்டு கிழிசல் இல்லாத “டவுசருடன்” பள்ளிக்குச் செல்லும் அழகைப் பார்க்கிறோம்.

ஆரம்பக் காலங்களில் பாலிடெக்னிக் என்பது பார்ப்பனக் குழந்தைகளுக்கு என்றும் ஐ.டி.ஐ என்பது பிற சாதியினருக்கு என்று இருந்ததையும்  மாற்றி சேரி மக்கள் குழந்தைகளும் பிற்படுத்தப்பட்ட மக்கள் குழந்தைகளும் பாலிடெக்னிக் படிக்க முடிகிறது எதனால் என்பதையும் உணர வேண்டும்.

இன்று பெருமளவில் இன்ஜினியரிங் கல்லூரி வந்து அனைத்து வகுப்பினரும் இன்ஜினியரிங் படிப்பதால் ஏற்கனவே பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த இப்படிப்பு இப்போது எல்லா சாதியினருக்கும் பொதுவுடமை ஆக்கப்பட்டுவிட்டதே. இதற்கும் பெரியாரின் தொலை நோக்கு உணர்வுதானே காரணம்.(கல்வி வியாபாரமாக நடப்பது வேறு கதை)

தமிழ் வழிக் கல்வியை விரும்புகிறவர்கள் இன்றுவரை அதற்கான எந்த ஒரு சிறு முயற்சியையும் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திரு.டொமினிக் சுவாமிநாதன் அவர்களைக் கொண்டு தமிழில் மருத்துவம் படிப்பதற்கான குழு அமைக்கப் பட்டது. அவரும் அதற்கான வரைவுகளைத் தயார் செய்தார். அதை கணினியில் ஒரு வாரம் உடனிருந்து இரவில் அச்சிட்டுக் கொடுத்தவன் நான். ஆனால் தமிழறிஞர்கள் அவரையோ அவரின் செயல்பாட்டையோ கண்டு கொள்ளவே இல்லை. திரு. டொமினிக் சுவாமிநாதன் அவர்களுக்கு இருந்த தமிழ் ஆர்வத்தை  அக்கறையை நான் நேரில் பார்த்தவன்.

இப்போது திருவாரூரில் மருத்துவர் ஜெயசேகர் அவர்கள் இருக்கிறார்கள். எம்.டி. பட்டபடிப்புக்கான தேர்வை தமிழில் எழுதினார்கள். அவர்களுடைய தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் இன்று வரை போராடி வருகிறார். எந்த தமிழ் அமைப்புகளும் அவருக்கு எந்த ஆதரவும் தந்ததில்லை. ஆனால் அவரோ அதைப்பற்றியயல்லாம் கவலைப்படாமல் தமிழில் படிப்பதற்காக ஆங்கிலத்திலிருந்து அவரே மொழிபெயர்த்த எம்.டி படிப்பிற்கான அனைத்து தமிழ் பாடங்களையும் அச்சிட்டு புத்தகமாக வெளியிட்டு வருகிறார். அந்த பாட நூல்கள் அனைத்தும் மருத்துவத் துறைக்கு கருவூலங்கள். மருத்துவத்திற்கு தமிழில் நூல்கள் இல்லை என்று இனியும் யாரும் கூற முடியாது என்ற அளவிலான நூல்கள். இக்கருத்தை நான் முனைவர் கு.அரசேந்திரன் அவர்களிடம்  மருத்துவர் ஜெயசேகர் அவர்களை வைத்துக் கொண்டே கூறினேன். கு. அரசேந்திரன் அவர்களும் மகிழ்ந்து ஒவ்வொரு நூலின் ஒரு படியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். இவை யெல்லாம் நான் கூற காரணம், மருத்துவர் ஜெயசேகர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட தமிழ் அமைப்புகள் யாரும் முன்வரவில்லை என்பதால் தான்.

புதுச்சேரியில்  மருத்துவர் அரிமாமகிழ்கோ அவர்கள் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர். தமிழில் மருந்து சீட்டு எழுதி நோயாளிகளுக்கு கொடுத்தார் என்பதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  இதுவரை அவருக்காக எந்த தமிழ் அமைப்புகளும் போராட முன்வரவில்லை. இதையயல்லாம் பெரியார், அவர் காலத்தில்  செய்தார். மறைமலையடிகளுக்கு சிக்கல் என்றால் போரடினார். தமிழ் புலவர்களுக்கு சமஸ்கிருத புலவர்களைவிட சம்பளம் குறைவு என்றால் போராடி உரிமையையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால் பெ.மணியரசன் இதெல்லாம் மொழிக்கொள்கையாகாது என்று கூறுகிறார்.

அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான் என்றார் பெரியார். உடனே பெ.மணியரசன் துள்ளிக் குதிக்கிறார். ஆகா பெரியார் மாட்டிக் கொண்டார் என்று. உடனே கேள்வி கேட்கிறார், “உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிதான் உயர்வின் எல்லையா?” என்று.

பெரியார் நன்றாகவே அடைமொழி போடுகிறார், அதாவது “அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான்” என்று. இவனே ஆங்கிலம் ஒன்றைமட்டுமே படித்துவிட்டு வேறு எந்த தகுதியுமே யில்லாமல் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறான் என்றுதான் கூறுகிறார்.

தமிழறிஞர்களுக்காக வருத்தப்படுகிறார், “தமிழ் மொழிக் களஞ்சியங்களான ‘மாணிக்க வாசகர் காலம்’ எழுதிய காலஞ்சென்ற மறைமலையடிகள், பெரியபுராணத்திற்கு புதுஉரை எழுதிய திரு.வி.கலியாணசுந்தரம் முதலியோர் வாழ்வில், முக்கியத்துவத்தில் என்ன தரத்தில் இருந்து சென்றார்கள்?”

பெரிய அளவில் வாழ்க்கைத்தரத்தில் பெரும்வாழ்வு வாழவில்லை என்பதுதானே பெரியாரின் கவலைக்கு காரணம். இங்கு காலம் சென்ற அறிஞர்களைப் பற்றிக் கூறுகிறார். அவர்கள்  “சைவத்தை நிலை நிறுத்திய மூடநம்பிக்கைக் கeஞ்சியங்களாகத்தானே முடிவெய்தினார்கள்” என்று கவலைப்படுகிறார்.

காலஞ்சென்றவர்களைப் பற்றி கவலைப்பட்ட பெரியார், இப்பொழுது வாழ்கின்ற  அறிஞர்களைப் பற்றியும் கவலைப்படுகிறார்,

காலம் செல்லாத இன்றையத் தமிழ்க் களஞ்சியங்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், டாக்டர்கள் சிதம்பர நாதன் செட்டியார், மு. வரதராசனார், இராஜமாணிக்கனார் மற்றும் ஒரு டஜன் உருப்படிகளின் இன்றைய நிலை என்ன? அவர்களால் ஒரு அளவுக்கு நன்றாய் பிழைக்கிறார்கள் என்பதை தவிர நாட்டிற்கோ மனித சமுதாயத்திற்கோ என்ன பயன்? அன்னக் காவடி பஞ்சாங்கப்பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான் என்று வேதனைப்படுகிறார்.

பெரிய அறிஞர்கள் டாக்டர்கள் எல்லாம் சாதாரண வாழ்வே வாழ்கிறார்கள். அன்னக்காவடி பார்ப்பான் மகன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிறான் என்றுதானே பெரியார் கவலைப்படுகிறார். பெ.மணியரசனுக்கு இது புரியவில்லையா? இல்லை. புரிகிறது. அதனால்தான் அடுத்து , பெரியார் குறிப்பிடும் தமிழறிஞர்கள் அத்தனைபேரும் மிகச் சிறப்பாக ஆங்கிலம் கற்ற ஆய்வாளர்கள். ஒருவர் ஆங்கிலம், தமிழ் அகராதி எழுதிய அறிஞர் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். இவர்கள் உயர் பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்து ஒளி வீசியவர்கள். இவர்களைக் காலஞ்செல்லாத தமிழ்க் களஞ்சியங்கள் என்று பெரியார் குறிப்பிடுவது நடப்புக்கு முரணான செய்தி. இவர்களைப் போன்ற ஒரு டஜன் உருப்படிகள் என்று பெரியார் கூறுவது தமிழ் அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப் பைத்தியங்கள் உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற கருத்தாகும். பெரியாரின் இக்கணிப்பு தவறு. என்று எழுதுகிறார் பெ.மணியரசன்

இறுதியாக தமிழறிஞர்களுக்கு ஆதரவான குரலையும் கவலையும்  பெரியார் தெரிவிக்கிறார்,

பார்ப்பனரல்லாத என்கின்ற உணர்ச்சிப் போராட்டம் இல்லாதிருந்தால் இந்த மேதாவி டாக்டர்கள் மகான்கள் நிலை இன்று எப்படி இருக்கும்? கிறுக்கன் பாரதிக்கு இருக்கிற மதிப்பில் நூற்றில் ஒன்று கூட இவர்களில் எவருக்குமே இன்று இல்லை. இவர்கள் தரத்தைவிடக் குறைந்த தரமுள்ள, ஆங்கிலத்தில் பேர் பெற்றவர்கள், சாதாரண அளவு ஆங்கிலப் படிப்பாளிகள் எவ்வளவு மேல் நிலையில் இருக்கிறார்கள்.(விடுதலை தலையங்கம் 5.4.1967)

பெரிய அறிஞர்கள் பொருளாதாரத்திலாவது பெரும் வாழ்வு வாழ்ந்திருக்க வேண்டாமா? என்பதுதான் பெரியாரின் கவலை. மேலும் “உருப்படிகள்” என்ற சொல்லையும் “காலஞ்செல்லாத” என்ற சொல்லையும் ஒன்றாக இணைத்து குழுப்பி பெரியார் மீது குற்றஞ்சாட்டுகிறார் பெ.மணியரசன்.

மேலும் பெரியாரோடு இருந்ததால்தான் சாமி.சிதம்பரனார், புலவர் குழந்தை, பொன்னம்பலனார் மற்றும் பாரதிதாசன் சமுதாய சிந்தனைகளில் ஈடுபட்டு செயல்பட முடிந்ததே தவிர பெ.மணியரசன் கருதுவது போல் தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள் என்பதால் அல்ல.

மறைமலையடிகளைப் பற்றியும் திரு.வி.க அவர்களைப் பற்றியும் குறிப்பிடும் போது பெரியார், மரியாதைக்குரிய பாராட்டத்தகுந்த தமிழ்ப் பெரியார்கள் மறைமலை அடிகள் முதல் திரு.வி.க.வரை உள்ள பெரியார்களிடம் அவர்கள் கருத்துக்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறைகளில் இருந்து, இன்றைய நாட்டு முன்னேற்றத்திற்கு என்றோ மக்கள் முன்னேற்றத்திற்கென்றோ எடுத்துக் கொள்ளதக்க சாதனங்கள் என்ன இருக்கின்றன என்று அன்பர்கள் தோள் தட்டிக் கூற முடியுமா? (பெ.ஈ.வெ.ரா.சி. பக்.992) என்றுதான் குறிப்பிடுகிறார்.

மறைமலையடிகளைக் குறிப்பிடும் போதும் திரு.வி.க. அவர்களைக் குறிப்பிடும் போதும் தமிழ்க் களஞ்சியங்கள் என்றுதான் கூறுகிறார். சுப.வீ அவர்களை வாளாகக் கொண்டு பெரியார் மீது வீசுகிறார் பெ.மணியரசன். இவரும் இரவிக்குமார் மாதிரி சிந்தனை செய்கிறாரோ என்ற அய்யமும் அதனால் இரவிக்குமார் மாதிரி மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போய் விடுவாரோ என்றக் கவலையும் எனக்கு ஏற்பட்டுள்ளது.

-முற்றும்

தொடர்புக்கு

Periyar Pattarai
7/11 B, Alivalam Salai
Sundravilagam
Thiruvarur
610 001

‘புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன்’- பெரியார் வைக்கும் குட்டு – 6

https://i0.wp.com/www.vikatan.com/av/2008/mar/26032008/p215d.jpg?w=474

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4

‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5

கவி, சிங்கப்பூர்

மிழ்ப்புலவர்களைப் பற்றி இன்னமும் கூறுகிறார் பெரியார்,

நான் தமிழை அறியாதவனல்ல. தமிழ்ப்புலவர்களை மேதாவிகளைத் தெரியாதவன் அல்ல. தமிழ் இலக்கியங்களின் தன்மையை உணராதவனல்ல.

இன்றையப் புலவர்கள் தமிழ் அபிமானிகள் தியரிடிகல் புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் பிராக்டிகல் தமிழ் அறிவு உடையவன் என்று கருதி இருப்பவன். 1920 வரை என்னிடம் வந்து வாதம் செய்யாத, கை நீட்டாத தமிழ்ப் புலவர்கள் குறைவென்றே சொல்லுவேன்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையை எனக்குத் தெரியாது. சாமிநாத அய்யரை எனக்கு நன்றாய்த் தெரியும். சாமி வேதாச்சலத்தையும் தெரியும். கலியாண சுந்தர முதலியார் தரத்திலுள்ள பிரபல தமிழ்த் தென்றல்களையும் தெரியும்.

ஒரு சமயத்தில் நாங்கள் காங்கயம் சேஷாசல நாயுடு, முத்துசாமிக் கவிராயர், சங்கரதாஸ் (சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆனபின்) இவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது, வள்ளுவரை  மன்னிக்கலாம். மற்ற எந்த புலவனையும், எந்த இலக்கியத்தையும் மன்னிக்க முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை வரையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள் என்று சொன்னேன். அவர்கள் பெரும் சிரிப்பு சிரித்து கை தட்டினார்கள். இது சுமார் 1900 முதல் 1920 வரை உள்ள காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

சுமார் 50. 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் புலவர்கள் யாராயிருந்தாலும் பிச்சை எடுத்தே தீருவார்கள். பெரிய புலவர்களுக்கு எல்லாம் மாதம் ரூ 15 முதல் ரூ 30 வரை சம்பளம் தான் சாதாரணமாக இருக்கும். அவர்கள் தகுதி எல்லாம் இலக்கியங்களை உருப்போட்டு ஒரு சொல்லுக்குப் பல பொருள் சொல்லி, மக்களை மருகச் செய்து, காசு வாங்குவதுதான் உயர்ந்த தொழிலாகும்.

புலவரைப் பற்றி என் கருத்து புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் உரை கூறுவேன். நா.கதிரை வேற்பிள்ளை என்கின்ற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்த போது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடமும் கண்டேன் என்று சொன்னதற்கு உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்து விட்டார்.

இப்படி கூறிய பெரியார் இன்னும் ஒரு படி மேலே போகிறார்,

இது வரை நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு இந்த நாட்டில் எந்தப் புலவனாலும் வளர்ச்சி , அபிவிருத்தி காரியமும் ஆனது கிடையாது. அதற்கு தகுதியான புலவன் இன்று இங்கு யாரும் இல்லை. எந்த புலவனாலும் இதுவரை நமது நாட்டுக்கு சிறு மதிப்பிற்குரிய முன்னேற்ற நூல் கூட உண்டாக்கப்பட்டதில்லையே! கம்பராமாயணத்திற்கும் பெரிய புராணத்திற்கும் புதிய பொருள் எழுதிப் பணம் சம்பாதிப் பார்கள்.

இன்று தமிழில் மேதாவிகள் டாக்டர்கள் ஏராளமாக ஆகி விட்டார்கள். பூச்சும் பொட்டும் நாமமும் தான் இருக்கிறது. அவர்கள் தலையில் இருக்க வேண்டியது அறவே இல்லை. புலவரை இடித்துரைக்க இந்த நாட்டில் என்னைத் தவிர வேறு எவரும் முன்வரப் பயப்படுகிறார்கள்.

எவனைப் பக்குவப்படுத்தினாலும் மரியாதை, விளம்பரம் வந்தவுடன் தமிழைக் காக்க அல்லவா புறப்பட்டுவிடுகிறார்கள். புலவன் பொறுக்கித் தின்ன இலக்கியங்களைக் காப்பதுபோல் பொது தொண்டு மக்களும் இப்போது பலன் அடையத் தமிழைப் பயன்படுத்திக் கொண்டு வெட்கமில்லாமல் தமிழைக் காக்கிறேன் என்கிறார்கள். என்னைக் குடிகாரர் போல் வைவதில் சமாதானம் ஏற்பட்டு விடாது. கையிலுள்ள சரக்கைக் காட்ட வேண்டும்.

அட கெடுவாய் பல தொழிலுமிருக்கக் கல்வி (தமிழ்)

அதிகமென்றே கற்றுவிட்டோம். அறிவில்லாமல்

திடமு³மோ கனமாடக் கழைக் கூத்தாடச்

செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைத்

தடமுலை வேசையராகப் பிறந்தோமில்லைச்

சனியான தமிழைவிட்டு தையலார் தம்

இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை

என்ன சென்ம மெடுத்து உலகிலிரக்கின்றோமே

“தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்கவில்லை. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத்தவிர வேறு உயிர்வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறுதுறையில் செலவிட்டால் வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதையும் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ்க் கற்ற அனுபவப் புலவர் மேற்கண்ட பாடல் மூலம் எடுத்திக் காட்டியிருக்கிறார்”. (விடுதலை தலையங்கம் 16.3.1967)

-தொடரும்

‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5

https://i2.wp.com/2.bp.blogspot.com/_YrhcIR9jjEw/SBbWbCDRlXI/AAAAAAAAAHY/92T2arHh3Xs/s320/periyar.jpg?w=474

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4

கவி, சிங்கப்பூர்

ங்கில மொழியை விரும்புவதற்கு பல காரணங்களை பெரியார் அடுக்குகிறார், வடமொழித்தொடர்பால் ஏற்பட்ட இன்னல்கள் ஒருவாறு மேலே விளக்கப்பட்டன. அதற்கு மாறாக ஆங்கில மொழித் தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள நன்மைகளையும் அம் மொழியிலுள்ள கருத்துச் செறிவுகளையும் பாருங்கள்.  ஆங்கில மொழி நூல்களில்  முன்னேற்றக் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி அறிவு நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன. அடிமை வாழ்வே ஆனந்தம் என்று நினைத்திருந்த இவ் இந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில மொழி அறிவுதான் என்று கூறினால் மிகையாகாது. இராஜா வேண்டாம். குடியரசு தான் வேண்டும் என்கிற அறிவு. சமதர்மம் வேண்டும், சனாதனம் ஒழிய வேண்டும் என்கின்ற அறிவு ஆணும் பெண்ணும் சமம் என்கிற அறிவு ஆகிய சகல அரசியல் பொருளாதார முன்னேற்ற அறிவுக் கருத்துக்களையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது.

தந்தியையும், மின்சாரத்தையும், படக் காட்சியையும், ஆகாய விமானத்தையும் ரேடியோவையும், எக்ஸ்ரேயையும் அதுதான் அறிமுகப்படுத்தியதேயயாழிய, நமது தமிழ் மொழியோ அல்லது அதை அழிக்க வந்த  வடமொழியோ அல்ல.

வீட்டு வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள். குழந்தைக்கு தாய்பாலில் ஆங்கிலத்தை கலந்து கொடுங்கள் என்று பெரியார் சொல்லியதற்கு அடிப்படை காரணம் இவை தான் என்பது  நன்றாகவே தெரிகிறது. ஆனால் பெ.மணியரசன் போன்றவர்கள் பெரியாரைப் படிப்பதுமில்லை. படிக்க முயற்சிப்பதுமில்லை.

மேலும் பெரியார் கூறுகிறார், “அறிவு வளர்ச்சிக்கு பெரும்பாலும் சுற்றுச் சார்பு தான் காரணம்.  ஒரே தகப்பனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்து பாருங்கள். இங்கிலாந்தில் வளர்ந்த மகன் இந்தியாவில் வளர்ந்த மகனை விடப் பல மடங்கு அறிவு விசாலம் அடைந்தவனா யிருப்பான் என்பது திண்ணம். அவன் எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன் எதையும் மதக் கண் கொண்டு பார்ப்பான். பெரியார் இப்படி ஒப்பிட்டுக் கூறுவதையும் அவர் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.

தமிழ் ஒரு காலத்தில் சிறந்த மொழியாக இருந்தது என்று கூறும் பெரியார் அது சீரழிந்து போனதற்கு காரணம் மதம் அதில் புகுந்ததுதான் என்று கூறுகிறார்.

தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வட மொழிக்கலப்பால் இடது கைப்போல் பிற்படுத்தப் பட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய தமிழ் மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையயன்பது இங்கு கவனிக் கத்தக்கது.

பெரியாரை தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தேசிய வாதிகளும் கடும் விமர்சனம் செய்வதற்கு காரணம் அவர்கள் பெரியாரால் பலமாக தாக்கப்பட்டது தான் . தமிழறிஞர்களைப் பற்றி பெரியாரின் பார்வை இதுதான்,

தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப்பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப் போல் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு கவைக் குதவாத கட்டுக் கதைகளை நம் குழந்தைகளுக்குப் போதித்து விட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதை விட்டு, திருவாசக அறிவையும் பாரத, இராமாயண அறிவையும் பரப்பி விட்டனர். சிந்திக்கத் தவறினார்கள்.

சிலப்பதிகாரத்தை தலை சிறந்த நூலென்று இன்னமும் போற்றி வருகிறார்கள்.அதில் கண்ணகி என்ற மாது மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள், கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றிக் கொள்கிறது. இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக் காட்டு. அந்த சமயத்திலும் அவள் நெருப்புக்கு ஆணை யிடுகிறாள், பார்ப்பனரை அழிக்காதே என்று. பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுபவள் ஆரிய பெண்ணாக இருப்பாளா? தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

இன்னுமும் பெரியார் தமிழ் கீழ் நிலையை  அடைந்ததற்கு மிகவும் வேதனையடைகிறார்,

தமிழில் ஆரீயம் புகுந்ததால் தான், மற்ற மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மொழி என்பதை பற்றிய மற்றொரு கருத்தை இங்கு பெரியார் வெளியிடுகிறார். இதையயல்லாம் தமிழிறிஞர்கள் உணர வேண்டும்,

மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்.  நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம் மொழிக்கு மிக்க அநீதி விளைவித்துவிட்டார்கள். தமிழ் சிவனும் சுப்பிரமணியனும் பேசிய மொழி. உண்டாக்கிய மொழி என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதே சிவனும் சுப்பிரமணியனும் உபயோகித்த போர்க்கருவிகள் இன்று நம் மக்களுக்கு பயன்படுமா? இயற்கையின் தத்துவம் நமது அறிவு வளர்ச்சிக்கேற்ப மாறுதல்களுக்கும் செப்பனிடுவதற்கும் வசதியளிக்கக் கூடியதேயாகும்.

தமிழை விட தமிழறிஞர்களைத்தான் பெரியார் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர். இதற்கும் பார்ப்பனர்களை ஒழிப்பதற்காக கடவுள் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்திய பெரியாரை பார்ப்பனர்கள் சாமார்த்தியமாக மத நம்பிக்கையில் கைவைக்கிறார் என்று திசை திருப்பியதற்கும் தொடர்பு இருக்கிறது என்று நாம் உணரலாம்.

தமிழைப் பற்றி கூறும் போது, தமிழைப் பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனும் அல்ல. தமிழுக்காக எவ்வித தொண்டும் புரிந்தவனும் அல்ல என்றும் அடக்கமாகக் கூறுகிறார்.

மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது.

உதாரணமாக, மக்கள் தேவர் நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தை விடப் புராண ஞானங்கள்தானே அதிகமாய் இருக்கின்றன. (குடி அரசு 26.1.1936).

-தொடரும்

`பெரியார் திக பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் விடுதலை‘- மீண்டும் போராட தயாராகிறது கோவை

3ழத்தமிழர்களுக்கு எதிராக  இந்திய ராணுவம், இலங்கைக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ராணுவ லாறிகளை வழி மறித்து மறியல் செய்ததற்காக, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலார் ராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழக பெரம்பளுர் மாவட்டத் பொறுப்பாளர் தோழர் லட்சுமணனும் இன்று விடுதலை ஆனார்கள்.

சிறை முன்பு அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது.

அண்ணன் ராமகிருட்ணணை 8-7-2009 அன்று கோவை சிறைக்கு சென்று பார்க்கபோனபோது, அவரை பல்லடம் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். பிறகு கோவையிலிருந்து நணபர் சாஜீத், பாலா, கார்த்தி, கண்ணன் உடன் பல்லடம் சென்று அண்ணன் ராமகிருட்டிணனையும், தோழர்களையும் சந்தித்தேன். தோழர் லட்சுமணனை வழக்கு விசாரணைக்காக சென்னை கொண்டு சென்றிந்தார்கள். அவரை சந்திக்க முடியவில்லை. (இந்து மக்கள் கட்சியினர் பெரியார் சிலை இடித்தபோது, ஸ்ரீரங்கத்தில் பல பூணூல்களையும், குடுமிகளையும் அறுத்தவர் லட்சுமணன்.)

4

லட்சுமணன்

அண்ணணும் மற்றத் தோழர்களும் சிறையில் இருப்பதைபோல் இல்லாமல் ஏதோ கோர்ட்டுக்கு சுற்றுலா வந்திருக்கிற மனநிலையில்தான் இருந்தார்கள்.

‘தொடாமல் பேச வேண்டும்’ என்ற காவல் துறை அனுமதியிடன் நீதிமன்ற வளாகத்தில் பேசினோம். “எவ்வளவு சிரமப்பட்டு சென்னையிலிருந்து வந்துருக்கிங்க அந்த நேரத்திலும் நமது நலத்தை விசாதித்தார் அண்ணன்.

வழக்குரைஞர்கள் சாஜித், பாலாவிடம், பிணை கிடைக்க வாய்ப்பிருக்கிற மற்றத் தோழர்களை உடனே எடுங்க, ஏன் தாமதிக்கிறீங்க என்று தொடர்நது அவர்களுக்கு ஆலோசனை சொல்லிகொண்டிருந்தார். வெளியில் இருக்கிற மற்றத் தோழர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று அன்போடு விசாரித்தார்.  செலவுக்கு பணம் வேணுண்ணா அக்காகிட்ட வாக்கிங்க…. என்ற ஒரு வார்த்தையைத் தவிர தன் குடும்பம் பற்றி விசாரிக்கவில்லை.

தோழர்கள் மீதான அண்ணனின் இந்த அன்பும், அக்கறையுமே கோவை பெரியார் திக தோழர்களை – மத்தியஅரசு அலுவலகங்களுக்கு பூட்டு, பாஸ்போர்ட் அலுவகம் மீதான தாக்குதல், ராணுவ லாறி மறியல் என்று  பல புரட்சிகரப் போராட்டங்களை நடத்த உந்து சக்கதியாக இருந்தது. இருக்கிறது.

எந்தப் பிரச்சினையிலும் அதை கேள்விபட்ட ஒரு மணிநேரத்திற்குள் 150 தோழர்களுக்கு மேலும் திரட்டி ஒரு மிகப் பெரிய போரட்டத்தை அவரால் நடத்தமுடிகிறது என்றால், அதன் மந்திரம் இதுதான்.

தீடிர் என்று அரை மணிநேரத்திற்குள் முடிவு செய்து, நீங்கள் நடத்திய ராணுவத் தளவாட மறியல், இந்திய அளவில் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம். இதற்கு முன்  மணிப்பூரில் ராணுவத்தினரின் பாலியல் கொலைகளை கண்டித்து, பெண்கள் நிர்வாணமாக நடத்தியபோராட்டம் குறிப்பிடத்தக்கது. அதுபோன்று சாமான்ய மக்களையும் திரட்டி நடத்திய இந்தப் போராட்டம் வராலாற்று சிறப்பு மிக்கது என்றேன்.

எனன பிரயோஜனம், இவ்வளவு கஷ்டப்பட்டு நடத்தியும் ஈழத்தில் எல்லாரையும் கொன்னுட்டானே… என்ற வருத்தம்தான் இருந்தது அணணன் குரலில், பெருமை இல்லை.

மாலை 4 மணிக்கு மேல் சிறைக்கு சென்று மற்றத் தோழர்களையும் சந்தித்தோம். அன்றுதான் தோழர் வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. அதே வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரின் தந்தை  திரு. பன்னீர் செல்வம் அவர்களையும்  சந்தித்தேன் அவருக்கு மகன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது குறித்து, கவலையில்லாமல் பேசினார். வீரமணியின் முகத்திலும் அந்த கவலைகள் இல்லை.

சிறையில் இருக்கும் வீரமணி, தமிழ்விழி, ஜோஸ்வாவும் விரைவில்  விடுதலை ஆவார்கள்.

அண்ணன் ராமகிருட்டிணன் சிறையில் இருந்து விடுதலையாகிவிட்டார், இனி கோவையில் பெரியார் தொண்டர்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் துவங்கிவிடும்.

ஆம், மீண்டும் சிறைக்கு போகத் தயாராகிவிட்டார்கள் தோழர்கள்.