தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம்; டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி: இதுதாண்டா தமிழ்த்தேசியம்

2195237_ambedkar_periyar

தமிழ்த்தேசியவாதிகள் அம்பேத்கரை புறக்கணிப்பதற்கு காரணம் அவர் இந்திய தேசியத்தை வலியுறுத்தினார் என்பதினாலா?

-எம். முருகன்

தோற்றத்தில் அப்படி தெரியலாம். ஆனால் அது மாயத்தோற்றம்.

தேசியத்திற்காக டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்கணிப்பதாக சொல்லிக்கொள்கிற, அல்லது வெளியில் சொல்லமால் அவரை குறிப்படுவதை தவிர்க்கிற இந்த தமிழ்த்தேசியவாதிகள்தான், தன் வாழ்நாள் முழுக்க இந்திய தேசியத்தை வலியுறுத்திய, அதற்காகவே தன் வாழ்நாளை அர்பணித்துக்கொண்ட காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை மனமார விரும்புகிறார்கள். அல்லது அவர்களை விமர்சிக்க மறுக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய இந்திய தேசியத்தில் ஒரு நியாயம் இருந்தது. அது இந்தியா முழுக்க தாழ்தத்தப்பட்ட மக்களின் துயரம் ஒரு போலவே இருப்பது. ஊருக்கு வெளியே சேரி இந்தியா முழுக்க ஒரே மாதிரியாக இருப்பது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் அரியான ஜாட், உத்திரபிரதேச யாதவ், ஆந்திர ரெட்டி, தமிழகத்து தேவர், வன்னியர் ஜாதியை சேர்ந்தவர்களிடம் எந்த பிராந்திய வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியான ‘இந்திய குணம்’ இருப்பது.

இந்திய தேசியத்திற்கு அடையாளமாக இருக்கிற தலித் விரோத போக்கையும், ஜாதியையும், ஜாதிவெறியர்களையும் எதிர்த்து போராடியதால்தான் டாக்டர் அம்பேத்கர், இநதியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக உயர்ந்து நின்றார்.

ஆனால், காமராஜர் – முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்கள் வலியுறுத்திய தேசியத்தில் எந்தவிதமான முற்போக்கு அம்சங்களும் கிடையாது. பார்ப்பனர்கள், இந்து கண்ணோட்டம் கொண்டவர்கள் என்ன காரணத்திற்காக இந்திய தேசியத்தை வலியுறுத்தினார்களோ, அதுபோன்ற பிற்போக்கு காரணங்களும், ஆளும் வர்க்க மனோபாவமும்தான் இவர்கள் வலியுறுத்திய தேசியத்திலும் இருந்தது.

‘காமராஜர் கிராம பள்ளிக்கூடங்களை திறந்தார், அதற்காகத்தான் அவரை ஆதரிக்கிறோம்’ என்று தெளிவாக காமராஜரை தேசியத்தில் இருந்து பிரித்துப் பார்த்து ஆதரிக்கத் தெரிந்து இருக்கிற தமிழ்த்தேசியவாதிகள், அதைவிட பல படிகள் மேலேபோய் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக இடஒதுக்கீடு, இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்று விஸ்வரூபம் எடுத்து நின்ற டாக்டர் அம்பேத்கரை விமர்சிக்கிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள் அல்லது அவரை கொண்டாட மறுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம், இந்திய தேசியமா? அல்லது அவர்கள் மனதில் இருக்கிற இந்து ஜாதியமா?

காமராஜரை ஆதரிப்பதற்குக்கூட இதுபோன்ற ஒரு காரணமாவது இருக்கிறது. ஆனால் முத்துராமலிங்கத் தேவரை ஆதரிப்பதற்கு இதுபோன்ற எந்த முற்போக்கு காரணங்களும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தார். தேசியமும், தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்தார். முக்குலோத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்களை இந்திய தேசியத்தை காப்பதற்காக ராணுவத்தில் போய் சேரச் சொன்னார்.

ஆனால், தலைவர் பெரியார் தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்தார். அதற்காகவே அவரை  மிக கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் முத்துராமலிங்கத் தேவர். தேசியத்தை ஆதரித்த காமராஜரையும் அவரின் இடஒதுக்கீடு கொள்கைக்காக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். திராவிட இயக்கத் தலைவர் என்ற காரணத்திற்காகவே அண்ணாத்துரையை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார் முத்துராமலிங்கத் தேவர்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இருந்தார் என்பதை கூட விட்டுவிடுங்கள், ‘அதை குறித்து விமர்சித்தால் தமிழனின் ஒற்றுமை குலைந்து விடும்’ என்று ஒரு தமிழ்த்தேசிய காரணமாவது கூச்சமில்லாமல் கூறிக்கொள்ளலாம்.  ஆனால்,  இவர்கள் தீவிரமாக எதிர்க்கிற,  அவர் தீவிரமாக வலியுறுத்திய தேசியத்திற்காகக் கூட அவரை விமர்சிக்க மறுக்கிறார்களே தமிழ்த்தேசியவாதிகள். இதற்கு எது காரணம்?

தத்துவத் தெளிவில்லாமல் இருப்பதைக்கூட அறியாமை என்று புரிந்து கொள்ளலாம். அதுகூட ஒன்றும் மாபெரும் தவறல்ல. ஆனால், தவறாகவோ, சரியாகவோ தான் தீவிரமாக சொல்லுகிற ஒரு விஷயத்திற்குக்கூட உண்மையாக இல்லாத இந்தப் போக்கு  பச்சையான சந்தர்ப்பவாதம்.

பல தமிழ்த்தேசியவாதிகள், சில பெரியாரிஸ்டுகள், சில மார்க்சிஸ்டுகள் நேரடியாகவே ஜாதி அடையாளத்தோடு இருக்கிறார்கள். இன்னும் சிலர் தன் ஜாதி அடையாளத்தை மறைத்தாலும், தான் தலித் அல்ல என்பதை மறைமுகமாக அடையாளப்படுத்தி விடுகிறார்கள்.

இந்த ஜாதிய மனோபாவமும், தலித் வீரோத போக்கு அல்லது தலித் மக்கள் மீதான் வன்கொடுமைகள் பற்றிய அலட்சியப் பார்வைதான் டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதற்கு அல்லது முக்கியத்துவம் தராமல் இருப்பதற்கு காரணம். மற்றபடி அவர் தமிழனல்ல என்பதோ, தேசியத்தை வலியுறுத்தினார் என்பதோ காரணமல்ல. (சேகுவேராவும், எம்.ஜி. ஆரும் தமிழர்களா?)

தந்தை பெரியாரின் இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு என்கிற கண் கொண்டு பார்த்தால் டாக்டர் அம்பேத்கர் பச்சைத் தமிழனாகத்தான் தெரிவார்.

பெரியாரின் பார்வையில்லையேல், சந்தன கடத்தல் வீரப்பனுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம் கூட டாக்டர் அம்பேத்கருககு தரமாட்டார்கள் தமிழ்த்தேசியவாதிகள்.

குறிப்பு:

நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாரும் இல்லை என்ற டாக்டர் அம்பேத்கர் பற்றியான என்னுடைய நூலின் அறிமுக விழா விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பில் தோழர்கள் பன்னீர் செல்வம், ஸ்ரீரிதர், பாண்டியன், மகிழ்நன் இவர்களின் பெரும் முயற்சியில் அக்டோர் 4 தேதி (2009) மும்பையில் நடக்க இருக்கிறது.

இந்த விழாவில் தோழர் கொளத்தூர் மணியும், தோழர் சீமானும் கலந்துகொள்வதை தடுக்கும் வகையில், நான் அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு எழுதியதாக  பொய் செய்தியை பரப்புகிறார்கள், டாக்டர் அம்பேத்கர் மீது  வெறுப்புக் கொண்ட ஜாதி வெறி தமிழ்த்தேசியவாதிகள்.

இதுபோன்ற அவதூறு டாக்டர் அம்பேத்கர் படம்போட்ட டி சர்ட் கொண்டு வரவேண்டும் என்று நண்பர்களுடன் முயற்சித்தபோதும் அதை கேவலப்படுத்தும் விதமாக நடந்தது.

டாக்டர் அம்பேத்கர் என்ற சொல், எப்போதும் ஜாதி வெறியர்களை எரிச்சலடைய வைக்கிறது. எந்த முற்போக்கு முகமூடிக்குள் ஒளிந்திருந்தாலும், டாக்டர் அம்பேத்கர் என்ற பெயரை கேட்டவுடன் தன்னை அறியாமல் அம்பலமாகிறார்கள் தலித் விரோதிகள்.

தொடர்புடையவை:

`தலித்துகள்’ என்று சொல்வது தவறு

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது

என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

அம்பேத்கர் என்னும் ஆபத்து

43 thoughts on “தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம்; டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி: இதுதாண்டா தமிழ்த்தேசியம்”

 1. உங்கள் நண்பர் கீற்று ஆசிரியர் ரமேஷ், (நந்தன்) அதிரடியான் என்கிற பெயரில் உங்களைப் பற்றி, மிகமோசமாக நீங்கள் இந்திய உளவு நிறுவனத்தின் ஆள் என்று கட்டுரை எழுதியிருக்கிறார்.

 2. அதிரடியான் என்கிற பெயரில் கீற்றுவில் கட்டுரை எழுதியது ரமேஷ் அல்ல. உங்கள் மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கொண்ட அதிஅசுரன் என்கிற தாமரைக் கண்ணன்தான். நீங்கள் விடுதலைப் புலிகளை விமரிசித்து இதுவரைஎனக்கு தெரிந்து எழுதியது இல்லை. அப்படியிருந்தும் உங்களை ஷோப சக்தியோடு ஒப்பிட்டு நீங்கள் உளவு வேலை செய்கிறீர்கள் என்று எழுதியுள்ளார்.

  விடுதலைப் புலிகளை கடுமையாக விமரிசித்து தொடர்ந்து எழுதி வருகிற சுகுணா திவாகரைப் பற்றி ஒரு வார்த்தைகூட அந்தக் கட்டுரையில் குறிப்பிட வில்லை. இத்தனைக்கும அவர் ஷோபா சக்தியின் நெருங்கிய நண்பர். அ. மார்க்சியன் சிஷியர். நீங்கள் அ. மார்க்சை விமர்சித்து எழுதியும் உங்களை அவர்களோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

  சுகுணா திவாகரை குறித்து எழுதாதற்குக் காணரம், அதி அசுரன் என்கிற தாமரைக் கண்ணனும், சுகுணா திவாகரும் இளமை கால நண்பர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். (திண்டுக்கல்) ஒரே சாதியை சேர்ந்தவர்கள்.

  நீங்கள் பெதிக சம்பபந்தப்பட்ட போராட்டங்களுககு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியி்ட்டதாலும், பெதிக தலைவர்களிடமும் தோழர்களிடம் குறிப்பாக கோவை தோழர்களிடம் நட்பாகஇருப்பதாலும் உங்கள் மீது காழ்ப்புண்ர்ச்சி கொண்டவர் இந்த அதி அசுரன்.

  கோவை ராமகிருட்டிணன் சிறை சென்றது குறித்தோ, வெளியானது குறித்தோ இதுவரை ஒரு கட்டுரைகூட எழுவில்லை இவர். காரணம் நீங்கள் கோவை ராமகிருட்ணனை குறித்து சிறப்பாக எழுதியதுதான் காரணம். இப்படி சொந்தக் கட்சி தலைவர்களுக்கே துரோகம் விளைவிக்கிற, கோஷ்டி சேர்க்கிற இவர்கள்தான்….தமிழனத்திற்கு வழிகாட்டப் போகிறார்கள்.

 3. அய்யா போராளி மதிமாறன் அவர்களே,

  மும்பையில் நடைபெற இருக்கும் உங்கள் புத்தக வெளியிட்டு விழாவிற்கு எதிராக சதி செய்து, அவதூறு பரப்புவது தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. உங்களின் நெருங்கிய நண்பர் கோவையை சேர்ந்த எழுத்தாளரும், இப்போது சீமானிடம் நெருக்கமாக இருக்கும் கும்போகோணத்தைச் சேர்ந்த முன்னாள் சிபிஐ கட்சியில் இருந்து இந்திய தேசியம் பேசிய ஒருவரும்தான்

 4. ////தந்தை பெரியாரின் இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு என்கிற கண் கொண்டு பார்த்தால் டாக்டர் அம்பேத்கர் பச்சைத் தமிழனாகத்தான் தெரிவார்.///

  மிகச் சரியான வரி

 5. தொடர்ந்து உங்களது வலைப்பக்கத்தில் தமிழ் தேசியவாதிகளை அடிச்சி தும்சம் பண்ணுகிறீர்கள்.

  தமிழ்தேசியம்னா என்ன இங்கு இருக்கும் தமிழ்தேசியவாதிகள் எப்படி எல்லாம் மோசடி செய்கிறார்கள் என ஆழமாக உங்கள் கட்டுரை அலசி ஆய்கிறது.

  இதற்கு மேலும் ஒரு மகுடமாய் இன்றைய இந்த பதிப்பும் மிகவும் சிறப்பான சிந்திக்க வேண்டிய கட்டுரையாக அமைகிறது.

  உங்கள் கட்டுரைக்கு பின் தான் தெரிகிறது இவர்கள் ஏன் முத்துராமலிங்கத்தையும் காமராஜையும் தமிழ்தேசியத்தில் இணைக்க வில்லை என்று.

  தமிழ்தேசியவாதிகள் உங்கள் கட்டுரைகளை படித்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.

 6. என் அன்புத்தோழரே அருமையான கட்டுரை. உங்களை எதிர்த்து யார் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டும். குறைக்கிற நாய்கள் குறைக்கட்டும். இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்காக எதையும் செய்ய நாங்கள் இருக்கிறோம்.

 7. தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் மீது தொடர்ந்து ஆதிக்க சாதிவெறி முத்திரை குத்தப்படுகின்றது என்றும் இதற்கான வேலையை தமிழகத்தின் ஏஜெண்டாக ’தோழர் மதிமாறனை’ திட்டகுழுவில் வைத்திருப்பது போலவும் இவர்கள் கூறுகிறார்கள். இதுவரை அவர் தனது வலைதளத்தில் புலிகளை பற்றி விமர்சித்தது கூட கிடையாது. இருந்தும் ஏன் அவர்களுக்கு மதிமாறனை பிடிக்கவில்லை என்றால் தமிழ் இனவாதிகளின் சாதிய முகத்தை டார் டாராய் கிழித்து தமிழ் என்பதற்கு உண்மையான பொருளான சாதியை சுட்டிக் காட்டுகிறார். அதுவும் அம்பேத்கர், பெரியாரின் துணை கொண்டு தமிழினவாதிகளின் கருப்பு பார்ப்பனிய முகத்தை அம்பலப்படுத்துகிறார். இதற்காக சாதிவெறியர்கள் கோபப்படுவது இயற்கையே. ஆனால் தன்னை போராளிகள் என்றும், புரட்சியாளர்கள் என்றும் அடையாளப்படுத்தி கொள்பவர்கள் கோபப்படுவது உண்மையிலேயே நல்ல நகைச்சுவை.

  http://vrinternationalists.wordpress.com/2009/08/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/

 8. ////அதி அசுரன் என்கிற தாமரைக் கண்ணனும், சுகுணா திவாகரும் இளமை கால நண்பர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். (திண்டுக்கல்) ஒரே சாதியை சேர்ந்தவர்கள்.////

  இதெல்லாம் வேலைக்கு ஆவுற கதயாண்ண…..?
  அட கலி காலமே….

 9. Past several months i have been reading all your articles….time to time i posted my opinion too, the above ariticles is nice.

  i would like to ask one question about perriyars views on islam., i am not completely yet read about periyar, but i would say that i am following most of his points and i triying my level best to convince all my friends in my village and started from my home..

  i read in some aritcle that periyar accepted only islam and buddhism… i dont understand how could he accepted islam since there is no equality between men and women in so many things, then women are considered only for producing babies, then men can marry as many women he wants for some reasons …..so there are somany things like that…………could you explain this ? may be i misunderstood about periyars views on the islam …?

 10. இதெல்லாம் ஒரு பொழப்பு நீங்களே உங்களுக்கு பின்னுட்டம் போட்டுக்கிறது.. விவாதத்திற்கு தயாரா மதிமாறன்..

 11. இதெல்லாம் ஒரு பொழப்பு நீங்களே உங்களுக்கு பின்னுட்டம் போட்டுக்கிறது.. விவாதத்திற்கு தயாரா மதிமாறன்..//

  தமிழ் தேசிய சாத்தியத்திற்க்கான வரையறை எங்கியாவது தமிழ் தேசியவாதிகள் வகுத்து இருக்கிறார்களா?? ஒரு கொள்ளையும் இல்லை,கோட்பாடுகளும் இல்லை,குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை தவிர….

 12. கீற்று தளத்தில் அதிரடியான் என்ற பெயரில் எந்தக்கட்டுரையையும் நான் எழுதவில்லை. வெறும் ஜோசியம் சொல்லிக்கொண்டிருப்பதைவிட தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்நாளில் அதை எழுதியவரை கண்டு பிடிப்பது மிகச்சுலபம். கண்டுபிடியுங்கள்.

  சுகுணா திவாகர் எனது நெருங்கிய நண்பர் தான். இளமைக்காலத்தில் என்பது தவறு. இப்போ எங்களுக்கு முதுமைக்காலமல்ல. இருவரும் இளைஞர்கள்தான். ஒரே ஊர்தான். ஒரு சாதி அல்ல. சரியாகச் சொல்ல வேண்டுமானால் நானும் மதிமாறன் அவர்களும்தான் ஒரு சாதி.

  விடுதலைப்புலிகளை சுகுணா திவாகர் மட்டுமல்ல இணையதளங்களில் வருவோர் போவோர் எண்ணற்றோர் கடுமையாக விமர்சித்து எழுதுகிறார்கள். படித்து விட்டு சிரித்துவிட்டுப் போய்விடுவேன். அவ்வளவுதான். அதற்கு மேல் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை.

  பெ.தி.க தலைவர் சிறையில் இருந்தபோது இயக்கம் நெருக்கடியான காலகட்டத்தில் இருந்தபோது பொதுச்செயலாளர் கோவை. இராமகிருட்டிணன் அவர்கள் தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தார். அவரது நிலைப்பாட்டை விமர்சித்ததால் மதிமாறனை பதிலுக்கு விமர்சிக்க வேண்டிவந்தது. அதன்பிறகு மதிமாறன் அவர்கள் எழுதிய பல முரண்பாடான செய்திகளுக்குக்கூட நான் எந்த பதிலும் எழுதியதில்லை.

  பெ தி க நடத்திய பெரியாரியல் தொடர்பான எந்தப் போராட்டத்தைப் பற்றியும் மதிமாறன் அவர்கள் வாழ்த்தியோ, தகவலாகவோ எப்போதும் எங்கும் பதிவு போட்டதில்லை. அவரது பதிவுகள் வரிசையாக தொகுக்கப்பட்டு உள்ளன. படித்துப்பாருங்கள் தெரியும். பெ தி க வின் வரலாற்றில் முக்கியப் போராட்டங்களாக எமது தோழர்கள் கருதுவது கருவறைநுழைவுப் போராட்டம், பஞ்சாங்க எரிப்புப் போராட்டம், சங்கரமடமுற்றுகைப் போராட்டம், கண்டதேவியில் அத்துமீறி நுழைவு, பாப்பாபட்டி,கீரிப்பட்டி நுழைவு, பூணுால் அறுப்புப்போராட்டம், முக்கியமாக இரட்டைக்குவளை உடைப்புப் போராட்டம், இப்படி எந்தப் பெரியாரியல் நோக்கிலான போராட்டங்கள் பற்றி என்றும் செய்தி வெளியிட்டதில்லை தோழர் மதிமாறன்.

  கோவை தோழர்கள் அண்ணன் ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் இரட்டைக்குவளை உடைப்பு நடத்திய செய்தியைக்கூட வெளியிடவில்லை. காளப்பட்டியில் தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக கோவை இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் களமறிங்கிய செய்தியையும் வெளியிடவில்லை. கோவை வடக்கு மாவட்டத் தோழர்கள் இரட்டைக்குவளை உடைப்பு நடத்தியதையும் பதிவு செய்யவில்லை. சாதி ஆதிக்கத்துக்கு எதிராக பெதிக வின் எந்தப் பகுதி தோழர்கள் நடத்திய போராட்டங்களையும் பதிவு செய்யவில்லை.

  அண்ணன் இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற பிரதமருக்குக் கருப்புக்கொடி மறியலை மட்டுமே பதிவு செய்தார். அதுவும் ஈழஆதரவுப் போராட்டம்.

  மகஇக நடத்திய தமிழ்ஆதரவு போராட்டங்களையெல்லாம் பதிவு செய்த மதிமாறன், அந்த மகஇகவே பாராட்டிய பெ தி க வின் இரட்டைக்குவளை உடைப்புப்போராட்டங்களைப் பதிவுசெய்யாதது ஏன்? இப்போது தன்னை மிகப்பெரும் சாதி ஆதிக்க எதிர்ப்பாளராக காட்டிக்கொள்வது ஏன்?

  கோவை சிறையில் இருந்து மணி அண்ணன் விடுதலை ஆன போதோ, இராமகிருட்டிணன் அண்ணன் விடுதலை ஆனபோதோ, சென்னையில் விடுதலை இராசேந்திரன் விடுதலை ஆனபோதோ என்றும் வரவேற்க நான் சென்றதில்லை. மணி அண்ணன் சிறையில் இருக்கும் போதோ இராமகிருட்டிணன் அண்ணன் சிறையில் இருக்கும் போதோ பதிவு எதுவும் போட்டதில்லை. தலைவர்கள் சிறையில் இருக்கும்போது ஒரு தொண்டன் என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்து கொண்டிருப்பேன். தலைவர்களுக்கு நெருக்கமானவனாகக் காட்டிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

  தோழர் பாமரனாக இருந்தாலும்சரி தோழர் மதிமாறனாக இருந்தாலும்சரி களத்தில் நமக்குச் சரிக்குச்சரியாக நிற்காத யாரையும் தோழர்கள் நம்பவேண்டாம்.

 13. ka.sundaram wrote…
  சுகுணா திவாகரை குறித்து எழுதாதற்குக் காணரம், அதி அசுரன் என்கிற தாமரைக் கண்ணனும், சுகுணா திவாகரும் இளமை கால நண்பர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். (திண்டுக்கல்) ஒரே சாதியை சேர்ந்தவர்கள்.

  athi asuran wrote…
  =========
  ஒரே ஊர்தான். ஒரு சாதி அல்ல. சரியாகச் சொல்ல வேண்டுமானால் நானும் மதிமாறன் அவர்களும்தான் ஒரு சாதி.

  Fantastic evolution of people who say they are opposed to caste and followers of periyar! Seeing/Finding/Knowing caste of each and every person and keeping it mind all along the time but acting as if they want to eradicate caste!

 14. திரு அதி அசுரன், உங்களை பற்றிய செய்தியை கண்டதும் பதிலளித்தீர்கள் சரி. ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் மீதான விமர்சனத்திற்கு நீங்கள் பதிலளிக்கவில்லையே ஏன்?
  உங்களை பற்றி விமர்சித்தால் மட்டும் தான் பதிலளிப்பீர்களா? உங்கள் கொள்கையை விமர்சித்தால் கண்டும் காணாமல் அதை காற்றில் பறக்க விட்டுவிடுவீர்களா?
  உங்களை போன்ற முற்போக்காளர்கள் ”தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்று இந்திய தேசியத்தையும், மூடநம்பிக்கையுமே தன் இரு கண்களாய் கொண்டிருந்த முத்துராமலிங்கம் போன்ற தலைவர்களை விமர்சிக்க மறுப்பது ஏன்? அவரின் ’இரு கண்கள்’ உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையா என்ன!

  அம்பேத்கர் அவர்களை லாவகமாக தமிழ் தேசியவாதிகள் புறக்கணிக்கும் காரணம் என்ன? அவர் இந்திய தேசியத்தை முன் மொழிந்தார் என்கிற ஒரே காரணம் தானா?
  இக்கேள்விகளுக்கும் தோழர் அதி அசுரன் பதிலளித்தால் நன்று.

  //தோழர் பாமரனாக இருந்தாலும்சரி தோழர் மதிமாறனாக இருந்தாலும்சரி களத்தில் நமக்குச் சரிக்குச்சரியாக நிற்காத யாரையும் தோழர்கள் நம்பவேண்டாம்.//

  சரி. அவர்களை நாங்கள் நம்பவில்லை. ஆனால் வீரமணியின் கொள்கையற்ற செயலுக்காகவும், கன்னட பார்ப்பாத்தி ஜெயாவுக்கு வீரமணியின் ஆதரவு என்பதனாலேயே, திக விடமிருந்து பெதிக புரட்சிகர நோக்கத்துடன் வெளியேறியது. ஆனால் அதே கன்னட பாப்பாத்திக்கு கடந்த தேர்தலில் வாக்கு சேகரித்தீர்களே, உங்களை எப்படி நம்புவது?
  இது ’அரசியல் தந்திரம்’ என்று மட்டும் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், எந்த ஒரு அரசியல் தந்திரமும் தன் கொள்கையை மண்ணில் புதைத்துவிடுவதாகவும், சமரசம் செய்து கொள்ளவதாகவும் இருக்காது. இருக்கவும் கூடாது.
  பெரியார் தன் காலம் முழுவதும், திராவிட தேசிய கோரிக்கை, தமிழ் தேசிய கோரிக்கை, காமராஜருக்கு ஆதரவு போன்ற விடயங்களில் தன் பார்ப்பன எதிர்ப்பை மையமாக கொண்டு தான் செய்தார். மாறாக தன் பார்ப்பன எதிர்ப்பு கொள்கையை விடுத்து அரசியல் தந்திரம் என்று எதுவும் செய்யவில்லை. எந்த அரசியல் முன்னெடுப்பும் ‘பார்ப்பன எதிர்ப்பு’ எனும் மையப்புள்ளியை ஒட்டியே இருந்தது. பெரியாரின் கொள்கையை மறந்து அடிப்படை அரசியலின்றி ஜெயலலிதாவுக்கு ஓட்டு கேட்டதை என்ன சொல்லி சமாளிக்க போகிறீர்கள்?
  ஈழத் தமிழ் மக்களோ முள்வேளியில், அம்மாவோ கொடநாட்டில் தன் வேலையை பார்க்க அவர் போய்விட்டார். ஆனால் நாம்?
  இலையும் மலரவில்லை, ஈழமும் மலரவில்லை. ஈழ மக்களின் குருதி மட்டுமே மண்ணில் மலர்ந்தது…

 15. தமிழ்தேசியம் பேசுபவர்கள் பற்றிய மதிமாறனின் விமர்சனங்களுக்கு தமிழ்தேசியவாதிகள் பதில்சொல்லட்டும். எனக்கு அந்த வேலை இல்லை. மதிமாறனின் தமிழ்தேசியம் குறித்த கருத்துக்களை வரவேற்கிறேன்.

  இதைப் பல ஆண்டுகளாக பெ தி க தோழர்களிடமும் தமிழ்தேசிய தோழர்களிடமும் எனது பதிவுகளிலும் எழுதியுள்ளேன். அப்போதெல்லாம் மதிமாறனோ நீங்களோ எங்கிருந்தீர்கள்?இப்போதுதான் மதிமாறன் தொடங்கியுள்ளார். வாழ்த்துக்கள்.

  முத்துராமலிங்கத்தேவரை கணினி முன் உட்கார்ந்துகொண்டு விமர்சிப்பது மட்டும் நம் வேலை அல்ல. அவரை தெய்வமாக வணங்கும் மண்ணில் அந்த மக்களின் ஆதிக்கத்தை எதிர்த்து களத்தில் நிற்பவர்கள் நாங்கள். அதற்காக வழக்குகளையும் அடிதடிகளையும் சந்தித்தவர்கள் நாங்கள்.

  அம்பேத்கார் – தேவர் பற்றி மதிமாறன் செய்திகளே போதுமானது.

  தேர்தல் நிலைப்பாட்டை வைத்து எங்களை நீங்கள் நம்பவேண்டியதில்லை.

 16. “”””விடுதலைப் புலிகளை கடுமையாக விமரிசித்து தொடர்ந்து எழுதி வருகிற சுகுணா திவாகரைப் பற்றி ஒரு வார்த்தைகூட அந்தக் கட்டுரையில் குறிப்பிட வில்லை. இத்தனைக்கும அவர் ஷோபா சக்தியின் நெருங்கிய நண்பர். அ. மார்க்சியன் சிஷியர். நீங்கள் அ. மார்க்சை விமர்சித்து எழுதியும் உங்களை அவர்களோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

  சுகுணா திவாகரை குறித்து எழுதாதற்குக் காணரம், அதி அசுரன் என்கிற தாமரைக் கண்ணனும், சுகுணா திவாகரும் இளமை கால நண்பர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். (திண்டுக்கல்) ஒரே சாதியை சேர்ந்தவர்கள்.”””””

  இந்த மாதிரியான கேவலமான ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு
  உருப்படியாக எதாவது செய்யலாமே தோழர்களே…….
  எனக்கு தெரிந்தவரை நமக்கான பொது எதிரியை விட்டு
  இப்படி ஆராய்வதை நிறுத்துங்கள்…….தாமரையும் மதியும்
  நம் தமிழ் சமுகத்திற்க்கு தேவை………என் வருத்தமே யார் பிரியனும் என நிணைப்போமோ அவர்கள் இணைகிறார்கள்…
  யார் இணைந்து பணியாற்ற வேண்டுமென நிணைக்கிறோமோ அவர்களுக்குள்ளான இடைவெளி அதிகமாகிறதே என்பதே……
  க. சுந்தரம் அவர்களே இனியாவது வேண்டாமே……..

 17. வணக்கம் மதிமாறன் அவர்களே. இத்தளத்தில் விவாதம் செய்யும் அளவுக்கு பெரியாரியமோ, அம்பேத்கரியமோ, தமிழ்தேசியமோ எனக்குத்தெரியாது.

  ஆனால் உங்கள் வலைப்பூவை படிப்பதில் இருந்து நீங்கள் நாரதர் போல் இருப்பதாக எனக்குத்தோன்றுகிறது.

  ஆனால் நாரதர் கூட வாய் திறப்பார் நீங்கள் திறக்க மறுப்பது ஏன். எனக்கு தெரிந்தவரையில் நீங்களும் , அதி அசுரன் போன்றவர்களும் நண்பர்கள் என்று தெரிகிறது.

  உங்களின் கருத்துக்களை மோதலை நேரடியாக பேசி தீர்க்காமல் ஏன் இதில் எழுதி அனைவரையும் குழப்பி நேரத்தினை வீணடிக்கிறீர்கள்,

  அதி அசுரன் அவரது அமைப்பினர் சிறையில் இருக்கும் காலத்தில் அவர்களை வெளியில் எடுப்பதற்குண்டான வேலையில் இருந்தார் அவரது வலைப்பூவில் தெரிந்தது.

  வெட்டியாக இருக்கும் நீங்களும் நானு வேண்டுமென்றால் எப்போதும் இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கலாம்.

  களத்தில் வேலை செய்துக்கொண்டிருக்கும் அவரை போன்றவர்கள் வலைப்பூவில் எழுதுவது கூட அரிதுதான்,

  அவரது வலைப்பூவை படித்த வரையில் அவர் ஒரு களப்போராளி அவரது கொள்கையை அவர் சரியாக கொண்டு செல்கிறார் என்பது விளங்குகிறது.

  ஆனால் உங்கள் வலைப்பூவைப்பார்த்தவரையில் இது வரையிலும் நீங்கள் ஆக்கப்பூர்வமாக என்ன செய்தீர்கள் என்பது சாதாரண பாமரனாகிய எங்களுக்கு விளங்கவில்லை.

  உங்களின் வலைப்பூவை படித்தால் என்னைப்போன்று சிறிதளவு மக்களுக்கு ஏதும் செய்ய வேண்டுமென்று வரும் மக்களுக்கு சோர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதில் சரியோ தவறோ எனக்கு தெரியவில்லை,

  உங்களைப் போன்ற அறிவும் மக்களுக்காக களத்தில் இறங்கி போராடிய அனுபவமும் எனக்கில்லை. நான் சாதாரண காகித சுரைக்காய் போல் இணையதள சுரைக்காய்தான்.

  நீங்கள் விளக்கமாக என்னிடம் எனது தவறினை தெளிவுபடுத்தினால் நான் என்னை திரித்துக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

 18. //இராமகிருட்டிணன் அவர்கள் தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தார். அவரது நிலைப்பாட்டை விமர்சித்ததால் மதிமாறனை பதிலுக்கு விமர்சிக்க வேண்டிவந்தது//

  மதிமாறன் அவர்களின் மீதான உங்கள் பதில் விமர்சனத்தை வெறும் அரசியல் நோக்கத்துடன் மட்டும் பொருத்தி பார்க்க இயலாது. ஏனெனில் உங்கள் தேர்தல் நிலைபாட்டை மதிமாறன் மட்டுமல்ல, தமிழச்சியும் கடுமையாக விமர்சித்தார். ஆனால் மதிமாறன் அவர்களை பதிலுக்கு விமர்சித்த ’உங்கள் நியாயம்’ தமிழச்சியின் மேல் இதுவரை இல்லையே. ஏன்?
  அதுமட்டுமல்ல வி.பி.சிங் மீதான விமர்சனத்தை ம.க.இ.க வைத்தது போல் தமிழச்சியும் வைத்திருந்தார். ஆனால் அப்போதும் தமிழச்சியின் மீது விமர்சனமோ அவருக்கு பதிலோ இதுவரை உங்களிடமிருந்து இல்லையே. இதுவே, மதிமாறன் அவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே நீங்கள் விமர்சிப்பதை காட்டுகிறது.

  மதிமாறன் பெ.தி.கவின் போராட்டங்களை பதிக்கவில்லை என்று ஆதங்கபடும் நீங்கள் எத்தனை முறை பெ.தி.க.வின் போராட்டங்களை பதிவு செய்தீர்கள்? அவராவது ஆதரவாளர் அல்லது தனி நபர். நீங்களோ பெ.தி.க எனும் அமைப்பின் முக்கிய செயல் வீரர்.

  1.தோழர் இராமகிருட்டிணன் தலைமையில் நடந்த இந்திய இராணுவத்தின் மீதான தாக்குதலை நீங்கள் ஏன் பதிவு செய்யவில்லை? ஆனால் மதிமாறன் வரலாற்றின் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த செயல் என்று தனது வலைதளத்தில் பதித்திருந்தார்.

  2.தோழர் இராமகிருட்டிணன் சிறையிலிருந்த போதும் நீங்கள் எதுவும் அதை பற்றி எழுதவில்லையே. ஆனால் அவர் சிறையில் தோழர் இராமகிருட்டிணனை பார்த்து வந்ததை எழுதியிருந்தார்.

  3.தோழர் இராமகிருட்டிணன் சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகும் அதனை பற்றி ஒரு வார்த்தை கூட உங்கள் தளத்தில் பதிக்கவில்லை.
  ஆனால் அவர் `பெரியார் திக பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் விடுதலை‘- மீண்டும் போராட தயாராகிறது கோவை ” என்னும் தலைப்பில் புரட்சிகர வாழ்த்துக்களை பதிப்பிட்டார்.

  உங்களுக்கு என்ன வெறுப்பு தோழர் இராமகிருட்டிணன் மீது?

  இதையெல்லாம் கேட்டால், ”சிறையில் இருக்கும்போது ஒரு தொண்டன் என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்து கொண்டிருப்பேன். தலைவர்களுக்கு நெருக்கமானவனாகக் காட்டிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை” என்று ஒரே போடாக போடுவீர்கள்?

  //தேர்தல் நிலைப்பாட்டை வைத்து எங்களை நீங்கள் நம்பவேண்டியதில்லை//

  பெ.தி.க வின் தேர்தல் நிலைபாடு மட்டும் எங்களின் நம்பிக்கையை இழக்கவில்லை. நீங்கள் ஒருவரே போதும் பெ.தி.க மீதுள்ள நம்பிக்கையை இழப்பதற்கு. புரியவில்லையா? நீங்கள் செய்யும் உள்குத்து வேளையும் (இராமகிருட்டிணன் X விடுதலை ராஜேந்திரன்) எங்களின் நம்பிக்கையை இழக்க செய்கிறது. ஆரம்பத்தில் பெ.தி.க போராட்டங்களினால் அதன் மீது நாங்கள் வைத்துள்ள மரியாதையும் மறைகிறது உங்களை போன்ற நபர்களால்.

 19. தேர்தல் நிலைப்பாட்டை தமிழச்சி மட்டுமல்ல இணையத்தில் மட்டுமே உலவும் பலரும் விமர்சித்திருந்தனர். பெ தி க பற்றி இணையம்வழியே மட்டும் செய்திகளை அறிந்தவர்கள் எவருக்கும் நான் பதில் எழுதவில்லை. நேரடியாக பெ தி க தோழர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் நேரடியாகப் பேசாமல் இணையத்தில் எழுதியதால்தான் விமர்சித்தேன். அதுவும்கூட மதிமாறன் வெளிப்படையாக நேர்மையாக அதுபற்றி கேட்கட்டும். அவருக்கு விரிவாக பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

  எனது முந்தைய பதிவுகளைப் படித்தவர்களுக்கு பெ தி க போராட்டங்களைப் பதிவு செய்தது தெரியும். பொழுதுபோகாமல் இருந்தால் அவற்றைப் பாருங்கள்.

  பொதுச்செயலாளர்கள் குறித்த உங்கள் கேள்விகளுக்கு இதற்குமேல் விளக்கமளிக்கும் அளவுக்கு நீங்கள் உகந்தவர் அல்ல. எமது தோழர்களுக்கும் தலைவர்களுக்கும் என்னைப்பற்றித் தெரியும்.

  எந்தச்சூழலிலும் நீங்கள் பெ தி க மீது நம்பிக்கை வைத்துவிடாதீர்கள். அது எமது இயக்கத்திற்கும் கொள்கைக்கும் ஆபத்து.

 20. தோழர் அதிஅசுரன்
  உங்களின் விளக்கம் மிகுந்த வருத்தமளிக்கிறது.

  மதிமாறன் தனது அம்பேத்கர் புத்தகத்தில் கூட அந்த் புத்தகத்தின் முத்தாய்ப்பாக ‘பெரியார் திராவிடர் கழகத்தின் இரட்டை டம்பளர் உடைப்பு போரட்டம், வரலாற்று சிறப்பு மிககது. பெரியார் காலத்தில் கூட இப்படி நடந்து கிடையாது என்று எழுதியிருந்தார்.

  அதுமட்டுமல்ல என்போன்ற வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு பெரியார் திராடவர் கழத்தின் ஈழ ஆதரவு போராட்ங்களும், தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன் போன்றவர்களின் சிறை சந்திப்புகளும் தோழர் மதிமாறன் பதிவுகள் மூலமாக அறிந்திருக்கிறென்.

  பெரியார் திராவிடர் கழத்தின் மீதனா என்னுடைய ஆதரவு நிலைக்கு மதிமாறனின் எழுத்துக்கள் முக்கிய காரணம்.

  இந்த நிலையில் உங்களுடைய விளக்கங்கள் வருத்தத்திற்குரியதாக இருக்கிறது.

  சதிசு
  சுவிஸ்

 21. தோழர் அதி அசுரன்
  உங்கள் எழுத்தில் முதிர்ச்சி இல்லை. தோழர் வேந்தன் சொன்னதுபோல் உங்களிடம் தோழர் மதிமாறன் மீது காழ்ப்புணர்ச்சிதான் இருக்கிறது.

  /////இப்போதுதான் மதிமாறன் ஆரம்பித்திருக்கிறார்…… பொழுதுபோகாமல் இருந்தால் அவற்றைப் பாருங்கள். ……….///

  ////இதைப் பல ஆண்டுகளாக பெ தி க தோழர்களிடமும் தமிழ்தேசிய தோழர்களிடமும் எனது பதிவுகளிலும் எழுதியுள்ளேன். அப்போதெல்லாம் மதிமாறனோ நீங்களோ எங்கிருந்தீர்கள்?இப்போதுதான் மதிமாறன் தொடங்கியுள்ளார். வாழ்த்துக்கள்.////

  ////முத்துராமலிங்கத்தேவரை கணினி முன் உட்கார்ந்துகொண்டு விமர்சிப்பது மட்டும் நம் வேலை அல்ல…..///

  ///மகஇக நடத்திய தமிழ்ஆதரவு போராட்டங்களையெல்லாம் பதிவு செய்த மதிமாறன், அந்த மகஇகவே பாராட்டிய பெ தி க வின் இரட்டைக்குவளை உடைப்புப்போராட்டங்களைப் பதிவுசெய்யாதது ஏன்? இப்போது தன்னை மிகப்பெரும் சாதி ஆதிக்க எதிர்ப்பாளராக காட்டிக்கொள்வது ஏன்?///

  /// தோழர் மதிமாறனாக இருந்தாலும்சரி களத்தில் நமக்குச் சரிக்குச்சரியாக நிற்காத யாரையும் தோழர்கள் நம்பவேண்டாம்.///

  இந்த விவாதத்திற்கும் நீங்கள் குறிப்பிடுகிற இந்தவிசத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா, யாரோ ஒருவர் உங்களை பற்றி போட்ட பின்னூட்டத்திற்கு பதில் சொல்ல வந்த நீங்கள்…. மதிமாறனை குறிவைத்து தாக்குவது ஏன்?

  இந்த வரிகள் உங்களின் முதிர்ச்சியற்ற தன்மையும், மதிமாறன் மீது வேறு ஏதோ ஒரு காரணத்தால் காழ்ப்புணர்ச்சி அடிப்படையிலும் எழுபைவையாக இருக்கிறது.

  நான் பெரிதும் மதிக்கும் பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்துகொண்டு, இதுபோன்ற விமர்சனங்களை நீங்கள் வைப்பது அந்த அமைப்புக்குதான் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

  தயவு செய்து எதை விமர்சிப்பதாக இருந்தாலும் அதில் உண்மையாக இருங்கள்.

  தமிழச்சிக்கு ஒரு ஆதரவு பார்வையும் மதிமாறனுக்கு எதிர்பார்வையும் வைப்பது…. என்ன வகை நியாயம்?

  ////விடுதலைப்புலிகளை சுகுணா திவாகர் மட்டுமல்ல இணையதளங்களில் வருவோர் போவோர் எண்ணற்றோர் கடுமையாக விமர்சித்து எழுதுகிறார்கள். படித்து விட்டு சிரித்துவிட்டுப் போய்விடுவேன். அவ்வளவுதான். அதற்கு மேல் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை.////

  இந்த வரிகளில் கொஞ்சமாவது நேர்மை இருக்கிறதா? அரசியல் காரணம் இருக்கிறதா?
  அப்படியானால் மதிமாறனை மட்டும் மேயற மாடு நக்குற மாடு என்று கடுமையாக விமர்சிப்பதற்கு காரணம் என்ன?

  ///பொதுச்செயலாளர் கோவை. இராமகிருட்டிணன் அவர்கள் தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தார். அவரது நிலைப்பாட்டை விமர்சித்ததால் மதிமாறனை பதிலுக்கு விமர்சிக்க வேண்டிவந்தது.///

  மேயற மாட்டை நக்குற மாடு என்று மதிமாறனை நீங்கள் கண்டித்து எழுதிய கட்டுரையில், ஒரு வரிகூட இதை பற்றி குறிப்பிடவில்லை. இப்போது புதியதாக தோழர் ராமகிருட்ணனுக்கு முக்கயத்துவம் கொடுத்து எழுதுகிறீர்கள். ஏன் இந்த குழப்பம்?

  நீங்கள் மேலே எழுதிய பின்னூட்டங்களையே ஒரு முறை மீண்டும் ஒரு முறை பொறுமையாக படித்துப் பாருங்கள். எவ்வளவு முரண்பாடு. எவ்வளவு காழ்ப்புணர்ச்சி. எவ்வளவு சுயதம்பட்டம் என்பது புரியும்.

 22. கட்டுரையில் சொல்ப்பட்டிருக்கிற விஷயத்தை விவாதிப்பதை விட்டுவிட்டு, தேவையற்ற விவாதமாக திசை திருப்பப்பட்டிருக்கிறது. ஆகவே தோழரகள் கட்டுரை குறித்து விவாதிக்கவும்.

 23. அதிரடியான், என்கிற பெயரில் அவதூறு எழுதுவது அவர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் யார் என்றும் அந்த எழுததுக்கிளில் அவரருடை மற்றும் கீற்று ரமேஷின் பங்கும் கணிசமாக உண்டு எனபது மட்டும் உண்மை.
  அதுபோல் வெட்டிப்பாமரபயல் என்கிற பெயரில் தொடர்ந்து மதிமாறனை கேவலமாக விமர்சித்து எழுதும் நபரும் இந்த அவதூறு கும்பலை சேர்ந்தவர்தான்.

  விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் சுகுணா திவாகரை ஏன் விமர்சிக்கவில்லை என்று கேட்டால், அது படிச்சு நான் சிரிப்பேன் என்கிறார்……

  சொந்த கட்சிக்குள்ளேயே சீண்டு முடிக்கிற வேலையை சிறப்பாக செய்கிற….அதிஅசுரனுக்கு அந்தக் கட்சியில் என்ன பொறுப்பு? சிண்டு முடியிற வேலைதானா?

  இதை எல்லாம் கட்சி கேட்டுக்கொள்ளதா?

 24. வெட்டிப்பாமரபயல் என்கிற பெயரில் எழுதுவது அதி அசுரன் அல்ல. மதிமாறன் மேல் எந்த காரணமு் இல்லாமல் தொடர்ந்து தன் கைத்தடிகளை வைததுக் கொண்டு, கேவலமாக ஆர்குட்டிலும் எழுதுகிற ஊதாரி பாமரன்தான் அது.

  பெரியார் திராவிடர் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் இரண்டு அமைப்புகளிடமும் தொடர்பில் இருப்பதால், அவருக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு அமைப்புகளையும் பாராட்டி, மதிமாறனை திட்டி தனிமை படுத்த வேண்டும் என்று சதி செய்கிறாராம்…. அதற்காகத்தான் இந்த வெட்டி பாமர பயல் என்ற பெயரில் எழுதுகிறார்.

  சினிமாகாரனுக்கு சோப்பு போடுவது, பிரபலமானவரை்களை நக்கி பிழைப்பதுதான் இந்த பாமரனுக்கு வேலை. மற்றபடி யாராவது தனக்கு தெரிந்தவர்கள் தனிப்பட்ட முறையில் இயங்க நினைத்தால், அவர்களுககு எதிராக கீழ்த்தரமான முறையில் உள் குத்து செய்வதுதான் இந்த பாமரனின் வேலை.

  அதனால்தான் மும்பையில் நடக்க இருக்கும் மதிமாறனின் புத்தக வெளியிட்டு விழாவை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று
  திட்டமிட்டு அவதூறுகைளை பரப்பி வருகிறார் இந்த எழுத்தாளார்.
  சீமானிடமும், கொளத்தூர் மணியிடமும் அவர்களை மதிமாறன் தனிப்பட்ட முறையில் திட்டி பேசுவதாக அவர்களிடமே தன் கைத்தடிகளை வைத்து கோள் முட்டி வருகிறார். இந்த வெட்டி பாமர பயல்.

 25. தோழர் மதிமாறன் அவர்களே நமக்குள் ஏற்படும் சிறு கருத்து மோதல் (பேசித் தீர்க்கலாமே) கூட பார்ப்பான் மற்றும் பார்பன அடிவருடிகளுக்குத்தான் நன்மை விளைவிக்கும். அக்டோபர் நான்காம் நாள் கண்டிப்பாக பெரியார் திராவிட கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழர் சீமான் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள். ஏனெனில் களத்தில் பெரியார் திராவிட கழக தோழர்கள் செய்வதைத்தான் நீங்கள் கணினியில் எழுதிகிறீர்கள்..

  நாடாளுமன்ற தேர்தலின் போதுகூட ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையை எப்படியாவது தடுக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தவர்கள் பெரியார் திராவிட கழக தோழர்கள், ஆனால் அ.தி.மு.க. வை ஆதரிப்பது என்பதில் அவர்களுக்கும் கண்டிப்பாக உடன்பாடு இருந்து இருக்காது, ஆனால் நமது உறவுகளை(மனித உயிர்களை) காக்கவே எடுத்த முடிவு.

  ஆனால் என்ன செய்ய எப்போதும் நாம் வீழ்வது பார்ப்பனித்தீயதிடம் தானே. அது முற்போக்கு, பிற்போக்கு எதுவாக இருந்தாலும்…

  //தந்தை பெரியாரின் இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு என்கிற கண் கொண்டு பார்த்தால் டாக்டர் அம்பேத்கர் பச்சைத் தமிழனாகத்தான் தெரிவார்.//

  நூற்றுக்கு நூறு உண்மையே..

  //
  பெரியாரின் பார்வையில்லையேல், சந்தன கடத்தல் வீரப்பனுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம் கூட டாக்டர் அம்பேத்கருககு தரமாட்டார்கள் தமிழ்த்தேசியவாதிகள்.//

  சமீப காலமாக தமிழ்தேசியம் (சைவ தேசியம்) பேசுபவர்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க!! பார்பன (ஆர்ய) குடும்பியில் தேடுகிறார்கள்..

  //இந்த ஜாதிய மனோபாவமும், தலித் வீரோத போக்கு அல்லது தலித் மக்கள் மீதான் வன்கொடுமைகள் பற்றிய அலட்சியப் பார்வைதான் டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதற்கு அல்லது முக்கியத்துவம் தராமல் இருப்பதற்கு காரணம். மற்றபடி அவர் தமிழனல்ல என்பதோ, தேசியத்தை வலியுறுத்தினார் என்பதோ காரணமல்ல. (சேகுவேராவும், எம்.ஜி. ஆரும் தமிழர்களா?)//

  தமிழனை பொறுத்தவரை எதையும் யாரையும் ஏற்றுக்கொள்வான்..ஆனால் டாக்டர் அம்பேத்கர் மேல் மட்டும் ஏன் வெறுப்பு???????

  ஒருவேலை பார்ப்பானை கடுமையாக எதிர்த்ததால் போல!!.. அருமையாக ஆதிக்க ஜாதிகளை டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு எதிராக திருப்பி விட்டார்கள் இந்த ஈனப் பிறவிகள்..

  வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள் தோழரே..

  தோழமையுடன்

  முகமது பாருக்

 26. அம்பேத்கார் – தேவர் பற்றி மதிமாறன் செய்திகளே போதுமானது. /
  athi asuran ungalukku yaarukku yaareodu oppeedu seiuivathentre theriyaathaa? ambedkarudan thevarai oppida thevarukku adippadai thaguthi kooda illanga ,

 27. எதைச் சொல்ல வேண்டுமானாலும் அதை உரியவர்களிடம் நேரடியாவே சொல்லுகிற துணிச்சலுள்ளவர்தான் தோழர் மதிமாறன். குறை சொல்லுகிறவர்கள் கீழ்க்கண்ட இந்த வரிகளை வசதியாக இருட்டடிப்பு செய்துவிடுகிறார்கள்.

  தோழர் கொளத்தூர் மணியை சிறையில் சந்தித்தேன்

  தேர்தலில் பெரியார் திராவிடர் கழத்தின் நிலை குறித்து முதல் நாள் மத்தியம் (21 தேதி) என்னுடைய வலைப்பதிவில் நான் எழுதிய ‘ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது‘ கட்டுரையின் பிரதியை அவரிடம் கொடுத்தேன். அது குறித்து விளக்கியும் பேசினேன்.

  (இதற்கு முன் போனமாதம் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் கோவை ராமகிருட்டிணனிடம் தொலைபேசியில், ‘தேர்தலில் காங்கிரசை எதிர்ப்பதற்காக அதிமுகவை ஆதரிப்பது என்கிற முடிவை பெரியார் திராவிடர் கழகம் எடுக்காமல் இருக்க வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்ற எந்தக் கொள்கைகளும் அற்றத் தமிழ்த் தேசிய அமைப்புகள் இதுபோன்ற ஒற்றைக் கோரிக்கையில் ஒரு முடிவை எடுக்கலாம். ஆனால் பெரியார் இயக்கம் அதை செய்யக்கூடாது.” என்று கேட்டுக் கொண்டேன். அண்ணன் ராமகிருட்டிணன் தேர்தல் முடிவுப் பற்றியான எங்கள் பொதுக் குழு கூட்டத்தில் பேசும்போது இதையும் கவனத்தில் கொள்கிறேன். எங்கள் தோழர்களிடம் கலந்து பேசுகிறேன்‘ என்று சொன்னார்.)

 28. /////பெரியார் திராவிடர் கழகம்தான் தொடர்ந்து, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஈழமக்களுக்காக சமரசமற்று தினம் ஒரு போராட்டம் என்று அர்ப்பணிப்போடு போராடி வருகிறது. அதன் தலைவர் கௌத்தூர் மணி அதன் காரணத்திற்காகவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு அண்ணன் ராமகிருட்டினண் தடா கைதியாக 3 ஆண்டுகள் கொடுஞ் சிறையில் இருந்தார். இப்படி எல்லாம் தியாகங்கள் செய்தபோதும் கூட அவர்கள் ஈழமக்கள் பணத்தில் உலகம் சுற்றி வந்ததில்லை.
  ஈழப் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகத்தின் அர்ப்பணிப்பு, ‘அதிமுகவை ஆதரிப்பது‘ என்ற அவர்களின் தேர்தல் நிலைபாட்டில் விரயம் ஆகியிருக்கிறது.////

  இதுதான் தோழர் மதிமாறன் பெரியார் திராவிடர் கழகத்தின் தேர்தல் நிலைபாட்டை குறித்து எழுதியது.
  இதற்குத்தான் அதிஅசுரன் ////மேயிறமாட்டை நக்குற மாடு கெடுத்தது போன்ற மதிமாறன் வேலை!///
  ///ஈழத்தமிழர் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியதோ இல்லையோ, இந்தக் கட்டுரை தோழர் மதிமாறனை எங்களைப்போன்ற பெரியார் தி.க தோழர்களிடம் அம்பலப்படுத்திவிட்டது. காத்திருந்து கருவறுத்துவிட்டார் மதிமாறன். ////
  ///மேயிறமாட்டை நக்குற மாடு கெடுத்துச்சாம் என்று எங்கஊர்ல சொல்வாய்ங்க. அத கரெக்டா செஞ்சிருக்காரு தோழர். ///
  என்று இன்னும் மிக கேவலமான வார்த்தைகளால் தோழர் மதிமாறனை திட்டி எழுதியிருந்தார் அதிஅசுரன். இது என்ன நியாயம்?

  ஆனால் தோழர் தமிழச்சி தோழர் மதிமாறனைவிட தெளிவாக, மிக கடுமையாக, துணிச்சலாக பெரியார் திராவிடர் கழகத்தின் நிலைபாட்டை விமரிச்சித்து எழுதியிருந்தார்.

  வி.பி.சிங் விவகாரத்தில் தோழர் விடுதலை ராசேந்திரன் மகஇகவை பற்றி பார்ப்பனிய தலைமை என்று எழுதியதை கண்டித்து, அவரைப் பற்றியும் கடுமையாக எழுதியிருந்தார் தோழர் தமிழச்சி.

  ஆனால் தோழர் தமிழச்சிக்கு உரிய பதிலையோ, மென்மையான மறுப்பையோகூட அளிக்கவில்லை அதிஅசுரன். என்ன காரணம்? இதற்கு உரிய விளக்கம் கொடுக்க வேண்டியது அதி அசுரனின் கடமை.

  கீற்றுவில் அதிரடியான் என்கிற பெயரில் கட்டுரை எழுதியது இவர்தான் என்று நான் சொன்னதற்கு ஓடி வந்து பதில் சொன்ன அதி அசுரன், மேற்கண்ட இந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவேண்டும்.

  இல்லையேல், அதிஅசுரனின் இந்த கேவலமான செய்கை பற்றி, பெரியார் திராவிடர் கழகத் தலைமையாவது உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

 29. வேந்தன், முருகன், கி.சுந்தரம்,க.சுந்தரம் போன்ற பெயர்களில் ஒளிந்துகொண்டு எழுதிக்கொண்டிருக்கும் மதிமாறன் எப்போ வெளியே வருவார்? தெம்பு திராணி இருந்தால் உங்கள் பேர்லயே எழுதலாம். இதெல்லாம் ஒரு பொழப்பு

 30. நன்நிலா என்கிற பெயரில் எழுதும் பாமரனின் அடியாள் அவர்களே ரமேஷ், கண்ணன், முகமது பாருக், விஜய்கோபாலசாமி, சதிசு, ரமேஷ், புண்ணாக்கு இன்னும் பல பெயர்களில் எழுதுவதும் மதிமாறன் என்றுதான் வைத்துக்கொள்ளுங்கள்….. அவைகளுககு உங்கள் பதில் என்ன?

 31. //எந்தச்சூழலிலும் நீங்கள் பெ தி க மீது நம்பிக்கை வைத்துவிடாதீர்கள். அது எமது இயக்கத்திற்கும் கொள்கைக்கும் ஆபத்து//

  அதி அசுரன் அவர்களே,
  எமது இயக்கத்திற்கும் கொள்கைக்கும் ஆபத்து என்று சொல்கிறீர்கள். ஆனால் உண்மையிலேயெ உங்கள் இயக்கத்திற்கு நீங்கள் தான் ஆபத்து. கவலைபடாதீர்கள். உங்களை பற்றியும், உங்கள் உள்குத்துகள் பற்றியும் நன்றாக தெரிந்த பிறகும் உங்கள் இயக்கத்திற்கு வருவதற்கோ, அதன் மீது நம்பிக்கை வைப்பதற்கோ நான்…… என்ன சொல்ல????? ஏனெனில் உங்கள் அமைப்பில் உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்கும் தோழர்களை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

 32. வேந்தன் மற்றும் சுந்தரம் ஆகியோருக்கு
  எங்கள் இயக்கத்தின் மீது நீங்கள் காட்டும் ஆர்வம் அடேயப்பா…எதிர்பாக்கவே இல்லங்க. முடிஞ்சா என்னைப் பற்றி தனியே ஒரு பதிவே எழுதுங்க சார். இல்லேன்னா ஒரு புத்தகம் போட முடியுமான்னு பாருங்க. எத்தன நாளைக்குத்தான் பின்னுாட்டம் மட்டுமே போடுவீங்க…உங்கள மாதிரி நாலு பேர் திட்டுனாத்தான் நானெல்லாம் இருக்கிறேன்ங்கறதே நாட்டுக்குத் தெரியும்.

 33. உங்களை பிரபலபடுத்தி கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மதிமாறனை ‘மேயர மாட்டை நக்கற மாடு’ என்று எழுதினீர்களோ?

  //தனியே ஒரு பதிவே எழுதுங்க சார். இல்லேன்னா ஒரு புத்தகம் போட முடியுமான்னு பாருங்க. எத்தன நாளைக்குத்தான் பின்னுாட்டம் மட்டுமே போடுவீங்க…உங்கள மாதிரி நாலு பேர் திட்டுனாத்தான் நானெல்லாம் இருக்கிறேன்ங்கறதே நாட்டுக்குத் தெரியும்//

  ரொம்ப நல்லாதான் இருக்கு உங்கள் ஆசை. விட்டால் நீங்கள் பெரியார் திராவிட கழகத்திற்கே தலைவர் ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறது.
  சரி அதெல்லாம் இருக்கட்டும். உங்க ஆசைய சொல்லிட்டீங்க.நானும் தோழர் சுந்தரமும் கேட்ட கேள்விக்கு பதில் எப்போது சொல்ல போரீங்க?

 34. நான்கு மாதத்திற்கு முன்பு, மதிமாறன் பெதிக விற்கு எதிராக சதி செய்தார்போல் மேயர மாடு நக்கற மாடுன்னும் இன்னும் பல கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறு எழுதி இருந்தீர்கள்.
  ஆனால் உங்கள் அமைப்பின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நீங்கள் எழுதிய மதிமாறனை பற்றிய அவதூறுகள் எதையும் நம்பவில்லை. அதனால் தான் மும்பையில் மதிமாறனின் புத்தக அறிமுக விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார். உங்கள் எழுத்து எந்த அளவிற்கு அவதூறானது என்பதற்கு இதுவே நல்ல சான்று.

 35. அதி அசுரன் அவ்ர்களுக்கு,

  உங்களை பற்றி விமர்சித்ததும் ஜெட் வேகத்தில் வந்த நீங்கள் கேள்விகளை கேட்டதும் சட்டென்று மறைந்துவிட்டீர்கள்.

  கொள்கையில் நேர்மையும் துணிவும் இருந்தால் பதில் நிச்சயம் இருக்கும். ஒரு முற்போக்கான களப்பணியாளரின் நெஞ்சுருதியையும், தக்க பதிலையும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

  பதில் கிடைக்குமா?

 36. //
  இந்த விழாவில் தோழர் கொளத்தூர் மணியும், தோழர் சீமானும் கலந்துகொள்வதை தடுக்கும் வகையில், நான் அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு எழுதியதாக பொய் செய்தியை பரப்புகிறார்கள், டாக்டர் அம்பேத்கர் மீது வெறுப்புக் கொண்ட ஜாதி வெறி தமிழ்த்தேசியவாதிகள்.
  //

  சில சாதி வெறித் தமிழ்த் தேசிய வாதிகள், உங்களுக்கு எதிராக செயல்படுகின்றார் எனத் தெரிவித்திருக்கின்றீர்கள்..

  தயவு செய்து அவர்களை அம்பலப்படுத்த வேண்டுகிறேன்..

  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும் அண்ணல் அம்பேத்கரையும், பார்ப்பனியத்திற்கு எதிரான அவரது போராட்டத்தை அங்கீகரித்தும் அவற்றை தம் வழிகாட்டும் நெறியாகவும் கொண்டுள்ளன என்பது வெளிப்படை.

  இருந்தாலும், பொத்தாம் பொதுவாக சாதி வெறித் தமிழ்த் தேசிய வாதிகள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?

  எந்தெந்தத் தமிழ்த் தேசியவாதிகள் சாதி வெறியுடன் நடந்து கொண்டார்கள் என்று பட்டியிலிடுங்கள்…

  தோழமையுடன்,
  க.அருணபாரதி,
  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

 37. காமராஜரை ஆதரிப்பதற்குக்கூட இதுபோன்ற ஒரு காரணமாவது இருக்கிறது. ஆனால் முத்துராமலிங்கத் தேவரை ஆதரிப்பதற்கு இதுபோன்ற எந்த முற்போக்கு காரணங்களும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தார். தேசியமும், தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்தார். முக்குலோத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்களை இந்திய தேசியத்தை காப்பதற்காக ராணுவத்தில் போய் சேரச் சொன்னார்.

  ஆனால், தலைவர் பெரியார் தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்தார். அதற்காகவே அவரை மிக கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் முத்துராமலிங்கத் தேவர். தேசியத்தை ஆதரித்த காமராஜரையும் அவரின் இடஒதுக்கீடு கொள்கைக்காக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். திராவிட இயக்கத் தலைவர் என்ற காரணத்திற்காகவே அண்ணாத்துரையை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார் முத்துராமலிங்கத் தேவர்.

  enna oru kevalamaana, unmaikku purambana varthaigal , muthalil thevarai patri naalla padithu vittu vanthu unnuidaiya karuthai eluthu.

Leave a Reply