கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை
நீங்கள் ஏன் உங்களைப் பற்றியான விமர்சன கட்டுரைகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் மறுப்பு சொல்வதில்லை?
–குமார்
நான் மறுப்பு சொல்ல வேண்டிய அளவிற்கு அவைகள் அருகதை அற்றவையாக இருப்பதுதான் காரணம்.
எனது கட்டுரைகளில், பதில்களில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு உள்ளே வராமல், வெளியே சுற்றிவந்து அரைத்தமாவையே அரைத்து கொண்டிருப்பவர்களிடம் நான் விவாதிக்க போனால், நானும் அவர்களைப்போல் அரைத்த மாவையேதான் அரைக்கவேண்டியிருக்கும்.
அல்லது எனது எழுத்துக்களுக்குள் நுழைந்து பதில் சொல்லமுடியாதவர்கள், அதை சுற்றி சுற்றி வந்து ‘ கம்முனாட்டி மதிமாறன் பிராமணரை மட்டும்தான் திட்டுவானா?’ ‘பாரதியை விமர்சிக்க இந்த மதிமாறனுக்கு என்ன யோக்கியதை இருக்கு?‘ ‘பொங்கி வருகிற தமிழனின் எழுச்சியை, சாதி உணர்வை தூண்டிவிட்டு திசை திருப்பிற மோசடி பேர்வழி மதிமாறன்’
‘மகஇகவின் கை ஆள் மதிமாறன்’ ‘இப்பதான் மதிமாறனுக்கு சாதி குறித்து தெரியுதா? நாங்க எல்லாம் இரண்டாயிரம் வருசத்துக்கு முந்தியே சாதிய எதிர்த்தவங்க… அப்ப எங்க போயிருந்தார் மதிமாறன்?‘ ‘இந்திய உளவு நிறுவனத்தின் கை ஆள் மதிமாறன்’ என்று அரசியல் விளக்கமே இல்லாமல், தங்கள் இயலாமையை கோபமாக, கிசு கிசு பாணியில் தனிப்பட்ட முறையில் என் மீது மண்ணை வாரி தூற்றுவதற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல?
ஒரு பெரியார் தொண்டனின் பார்வையில், டாக்டர் அம்பேத்கர் குறித்து நான் எழுதிய புத்தகத்தால் கவரப்பட்ட இளைஞர்கள், அந்தப் புத்தகத்திற்கு விழா எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அவர்களே விழா தேதியையும் சிறப்பு விருந்தினர்களையும் முடிவு செய்து அறிவித்தனர். எல்லோருக்கும் விழா பற்றி எப்போது தெரியுமோ அப்போதுதான் எனக்கும் தெரியும்.
ஆனால், என் ‘இனிய நண்பர்களோ’ மிக மோசமான முறையில்… அவதூறுகளைப் பரப்பி, அந்த விழாவை நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் அவதூறுகளை மறுத்து நான் சொல்வதற்கு என்ன பதில் இருக்கிறது?
தோழர்கள் கொளத்தூர் மணி, சீமான் பற்றி நான் தனிப்பட்ட முறையில் மிக மோசமாக பேசியதாக, அவர்களிடமே ஒரு குழுவாக போய் மாறி, மாறி பரப்புகிற அவதூறுகளுக்கு நான் என்ன விளக்கம் தர?
அதிலும் குறிப்பாக தோழர் கொளத்தூர் மணியை நான் ஜாதி உணர்வாளர் என்று சொன்னதாக, அவரிடமே சொல்லி இருக்கிற என் ‘இனிய நண்பர்களை’ பற்றி நான் என்ன விமர்சிக்க?
‘ஆண்டவனே என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நானாக கவனித்துக் கொள்கிறேன்’ என்று யாரோ ஒரு இறை நம்பிக்கையாளர் புலம்பியதைபோலவா நான் புலம்ப முடியும்?
“நீங்கள், தோழர் கொளத்தூர் மணியிடமும், சீமானிடமும் இதுபற்றி விளக்கம் கொடுத்துவிடுங்கள்… இதனால் விழா நின்று விடப்போகிறது” என்று தோழர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நான் பேசாத அல்லது எழுதாத ஒரு விசயத்திற்கு நான் ஏன் வலிந்து போய் விளக்கம் கொடுக்க வேண்டும்? இத்தனைக்கும் தோழர் கொளத்தூர் மணியோடு நான் வேறு விசயங்கள் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். இப்படி ஒரு அவதூறு பரப்பப்படுவதை பொறுட்டாக மதித்து என்னிடம் ஒரு வார்த்தைகூட அவர் கேட்டதில்லை.
நண்பர் சீமான் இதை உண்மை என்று நம்பியிருந்தால், அவரே என்னை தொலைபேசியில் அழைத்தாவது கேட்டிருப்பார். இப்படி இருக்கையில் நான் மட்டும் இவைகளை ஏன் ஒரு பொறுட்டாக மதிக்க வேண்டும்?
அரசியல் சார்ந்து நான் எழுப்புகிற கேள்விகளுககு உரிய விளக்கம் அளிக்க முடியாத அரசியல் எதிரிகளும், தனிப்பட்ட முறையில் என்மீது காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும் கொண்ட என் ‘இனிய நண்பர்களும்’ பரப்புகிற அவதூறுகளுக்கு நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்? (பொறாமை என்கிற உணர்வு-நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களிடம்தான் வேலை செய்யும்)
பாரதிக்கே மறுப்பு எழுதிய எனக்கு இவர்களுக்கு மறுப்பு எழுவதுவதா முடியாது?
என் கருத்துகளுக்களை உரிய விவரங்களோடு, தர்க்கத்தோடு மறுத்து எழுதுபவர்களுக்கு மறுப்பு எழுதலாம். வெறுப்புக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் என்ன செய்ய முடியும்?
தந்தை பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவதூறு பரப்பினார்கள். ஆனால் அவைகளை ஒரு பொறுட்டாகவே மதித்ததில்லை தலைவர் பெரியார். பெரியாரை ‘தமிழனல்ல கண்டன்’ என்று தமிழ்த்தேசியவதிகள், தமிழறிஞர்கள் அவதூறு செய்தபோது மட்டும் தலைவர் இப்படிக் கேட்டார்:
“தமிழர்களே! அட, மானங்கெட்ட தமிழர்களே! முதன் முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் ஒரு மலையாளி டி.எம். நாயர்.
அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கி தன் பொருளையெல்லாம் இழந்தவன் ஒரு தெலுங்கன் சர்.பி.தியாகராய செட்டியார்.
தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காக போராடியவன் கன்னடியனாகிய நான். உங்கள் தமிழர் தலைவர்கள் எல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள்?”
-விடுதலை நாளிதழ்
இந்த துணிச்சல், நேர்மை யாருக்கு வரும்?
தமிழர்களை ஏமாற்றி, ‘தமிழா நீ ஆண்ட பரம்பரை. இன்று அடிமைப்பட்டுக்கிடக்கிறாய்’ ‘தமிழ் இனம் உலகத்தின் மூத்த இனம்’ ‘தமிழ் என் மூச்சு’ என்றெல்லாம் ஏற்றி பேசி, தமிழர்களிடம் செல்வாக்கு பெற்று, தலைவனாக மாறி நாட்டையே பிடித்தவர்கள் மத்தியில், தமிழர்களிடம் வெறுப்பை சம்பாதிப்பதை போன்ற இப்படி ஒரு பதிலை தலைவர் பெரியாரைத் தவிர வேறு யாரால் தர முடியும்?
நான் இந்த சில்லரை விவகாரங்களுக்கு பதில் தரவேண்டும்மென்றால், தலைவர்போல்தான் பதில் தரவேண்டும்.
காந்தி தனது ‘அரிஜன்’ பத்திரிகையில், டாக்டர் அம்பேக்ரின் இந்து மத எதிர்ப்பையும், அவரையும் விமரிசித்து விரிவான கட்டுரை எழுதினார். அதற்கு பதில் அளிக்க வந்த அண்ணல் அம்பேத்கர்:
“சிறப்பான காரணங்கள் இருந்தால் தவிர, பொதுவாக என் எதிராளிகளோடு சர்ச்சையில் இறங்கும் வழக்கம் எனக்கு இல்லை. எனது எதிராளி ஒரு ‘அனாமதேய ஆத்மா‘வாக இருந்திருந்தால், நானும் போனால் போகட்டும் என விட்டிருப்பேன். ஆனால், ‘மகாத்மாவே’ என் எதிராளியாக இருப்பதால், அவர் முன்வைத்துள்ள வழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்றே கருதுகிறேன்.”
நானும் அண்ணலைப்போல்தான். சிறப்பான காரணங்கள் இருந்தால்தான் விவாதித்திறகு வருவேனே தவிர, என்னை கடுமையாக திட்டுகிறார்கள் என்பதற்காகவே இந்த சில்லரைகளுக்கும், சில்லரை விசயங்களுக்கும் பதில் தரவேண்டிய அவசியம் எனக்கில்லை.
sirappaana karuththukkal…
தோழர் மதி……..
உங்கள் பக்கங்களில் வரும் மறுமொழிகளை நிங்கள் தணிக்கை செய்து அரோக்கியமான விவாதங்களை மட்டுமே வெளியிடவும்.அல்லது மறுமொழி வசதியை எடுத்து விடுங்கள் தரமில்லா விவாதங்கள் உங்கள் பக்கத்தின் தரத்தை குறைத்து விடும்.
வடிவேலு மாதிரி உங்களை( மறுமொழிகளில்) வச்சு காமெடி கீமெடி பண்ற மாதிரி தெரியுது….
உங்கள் நலனில் அக்கறையுள்ள தோழனின் அன்பாண வேண்டுகோள்……
விவாதிப்பது தவறில்லை… தெளிவாக பொறுமையாக விவாதிக்கலாம். மதிமாறன் குறிப்பிட்டதுபோல் அவரை கண்டபடி திட்டுவதால் என்ன விவாதத்தை செய்ய முடியும்?
அதனால் விசயத்தை சரியாக உள்வாங்கி விவாதிக்கலாம்.
சரியான பார்வையோடு எழுதப்பட்டிருக்கிறது.. இதற்கும் பலபேர் சண்டைக்கு வரலாம். இன்னும் அவதூறுகளை பரப்பலாம்.
///அ.ப. சிவா
உங்கள் பக்கங்களில் வரும் மறுமொழிகளை நிங்கள் தணிக்கை செய்து அரோக்கியமான விவாதங்களை மட்டுமே வெளியிடவும்.அல்லது மறுமொழி வசதியை எடுத்து விடுங்கள் தரமில்லா விவாதங்கள் உங்கள் பக்கத்தின் தரத்தை குறைத்து விடும்.///
என்று பொறுப்போடு எழுதியிருக்கீறீர்கள்… இதை நீங்களே கடைப்பிடிக்கவில்லை.
///வடிவேலு மாதிரி உங்களை( மறுமொழிகளில்) வச்சு காமெடி கீமெடி பண்ற மாதிரி தெரியுது….///
எனறு நீங்களே கேலி செய்கிறீர்கள்…
உங்களைப்போன்ற சீரியசாக காமெடி செய்கிறவர்களால்தான் பிரச்சினைகள் துவங்குகிறது.
///உங்கள் நலனில் அக்கறையுள்ள தோழனின் அன்பாண வேண்டுகோள்///
இந்த் அன்பான வேண்டுகோளை அவருககு மெயிலில் சொல்லியிருக்கலாம். எதுக்கு பிரச்சினையை துவக்கி வைக்கிறீர்கள் சிவா?
பின்னூட்டம் வேண்டாம் என்று பின்னூட்டம் போடுகிறீர்கள்…..நல்ல காமெடி…
///இத்தனைக்கும் தோழர் கொளத்தூர் மணியோடு நான் வேறு விசயங்கள் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். இப்படி ஒரு அவதூறு பரப்பப்படுவதை பொறுட்டாக மதித்து என்னிடம் ஒரு வார்த்தைகூட அவர் கேட்டதில்லை.///
தோழர் கொளத்தூர் மணியின் பெறுதன்மை அவர் மீது கூடுதலாக மரியாதையை ஏற்படுத்துகிறது.
என்ன செய்வது தோழர் பார்பனியத்தை பாப்பான்களே விட்டாலும் விடுவார்கள் ஆனால் நம்ம தமிழர்களை காப்பாற்றும் தமிழர்கள்!!! விடமாட்டார்கள் போல அந்த அளவிற்கு பார்ப்பனியம் தமிழர்களின் நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இவர்கள் கிளப்பும் அவதூறுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க தேவையில்லை அதைவிட நமக்கு நிறைய வேலையிருக்கிறது. தோழர்.மணி,தோழர்.சீமான் போன்றவர்களுக்கு இவர்களைப்பற்றி நிறையவே தெரியும் அதனால இதெல்லாம் ஒரு பொருட்டல்ல..
உங்கள் ஆக்கங்களை தொடருங்கள்
இவர்களுக்கெல்லாம் ஒரு சிலரை பற்றி பேசினாலே பயம் வந்து விடுகிறது ….. அவர்கள் — தந்தை பெரியார் …அண்ணல் அம்பேத்கர் ..அண்ணலின் சிலையை பார்த்தால் கூட வெகுண்டு எழும் இவர்களுக்கு மத்தியில் பெரியாரை பற்றியும் அண்ணல் அம்பேத்கர் பற்றிய தெளிவான கருத்துடைய அண்ணன் மதிமாறன் மீது கோபம் வருவது இயல்பு தானே ….
நீங்கள் சொன்ன அந்த சில நண்பர்களுக்கு,” இவன் அவன இருப்பானோ ?” என்ற ஒரு காழ்புணர்ச்சி….சாதி ஒழிப்பை பற்றி பேசுபவர்களை சாதி வெறியர்கள் என்று திரித்து சொல்லும் தீய சக்திகள் இவர்கள் …..எப்பா ! இவன்களுக்காக நம்ப நேரத்தை ஏன் வீனடிகனும்…நம்ப சாதி ஒழிப்பு கொள்கையில் பிடிப்போடு தொடர்ந்து தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளை பதிவு செய்து கொண்டே இருப்போம்
இக்கட்டுரை ”மதிமாறன் தன் வலைதளத்தில் அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை” என்று இங்கேயும் மற்றும் வேறு சில தளங்களிலும் நச்சரிக்கும் நச்சரிப்பு கேசுகளுக்கு சரியான சவுக்கடி மாதிரியான பதில்.
பெரியார் கருத்துக்களை பேசுபவர்கள், மதிமாறன் அவர்கள் பார்ப்பானை திட்டும் போது மட்டும் அதை ஆதரிக்கிறார்கள்; அவரை தலையில் தூக்கிவைத்து ஆடுகிறார்கள். ஆனால் அவரை நட்பு பாராட்டிய இதே கரகாட்ட கும்பல் தமிழ் தேசியம் பேசும் போது அதன் மீதான சாதி தமிழரின் கறையை மதிமாறன் விமர்சிக்கும் போது உண்மையிலேயே கரகாட்ட கும்பல் ஆட்டம் கண்டு விடுகிறார்கள். அதனால் அவதூறு செய்கிறார்கள்.
//“நீங்கள், தோழர் கொளத்தூர் மணியிடமும், சீமானிடமும் இதுபற்றி விளக்கம் கொடுத்துவிடுங்கள்… இதனால் விழா நின்று விடப்போகிறது” என்று தோழர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்//
நானும் பல முறை இவ்வாறு கூறியிருக்கிறேன்.
அப்போதும் எனக்கு கிடைத்த பதில்:
”நான் பேசாத அல்லது எழுதாத ஒரு விசயத்திற்கு நான் ஏன் வலிந்து போய் விளக்கம் கொடுக்க வேண்டும்? இத்தனைக்கும் தோழர் கொளத்தூர் மணியோடு நான் வேறு விசயங்கள் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். இப்படி ஒரு அவதூறு பரப்பப்படுவதை பொறுட்டாக மதித்து என்னிடம் ஒரு வார்த்தைகூட அவர் கேட்டதில்லை.”
இதை தோழர் கொளத்தூர் மணி, தோழர் சீமான் போன்றோர் கவனத்தில் கொள்வது நலம். ஏனெனில் அவர்களின் மெளனம் சில அல்லகைகளை அவதூறு பேச வைத்துள்ளது. அரசியல் விமர்சனம் என்ற பெயரில் தொடங்கி பல வடிவம் பெற்று சாராம்சத்தில் தனிப்பட்ட நபரின் மீதான காழ்புணர்ச்சிக்கு இட்டு செல்கிறது. உதாரணமாக இதை தோழர் அதி அசுரன் பதிப்பில் கண்டோம்.
இவ்வாறான நிலையில், உங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு தோழர் கொளத்தூர் மணி, தோழர் சீமான் அவர்களின் வருகையிலேயே தெரிகிறது ‘நிறை குடம் தளும்பாது’. ‘அவதூறு அல்லகைகள்’ என்னும் குறைகுடங்களே தளும்புகின்றன.
//உங்கள் பக்கங்களில் வரும் மறுமொழிகளை நிங்கள் தணிக்கை செய்து அரோக்கியமான விவாதங்களை மட்டுமே வெளியிடவும்.அல்லது மறுமொழி வசதியை எடுத்து விடுங்கள் தரமில்லா விவாதங்கள் உங்கள் பக்கத்தின் தரத்தை குறைத்து விடும்.
வடிவேலு மாதிரி உங்களை( மறுமொழிகளில்) வச்சு காமெடி கீமெடி பண்ற மாதிரி தெரியுது….
உங்கள் நலனில் அக்கறையுள்ள தோழனின் அன்பாண வேண்டுகோள்……//
மறுமொழி வசதியை எடுப்பது என்பது கருத்தியலை மூடி மறைப்பதாகும். அதனால் கருத்து பரிமாற்றம் என்பதே இல்லாமல் போகும். தரமில்லா விவாதங்கள் என்று விவாதத்தை எந்த அளவீடை வைத்து அளக்கிறீர்கள்? இதை இத்தளத்தில் நான் விவாதிப்பதால் கேட்கிறேன். எங்கள் விவாதங்களும், மறுமொழியும் இத்தளத்தை தரமற்றதாக ஆக்குகிறதா?
மதிமாறனை வச்சு யாரும் காமெடி பண்ணல. நீங்க தான் விவாதிப்பதால் தளத்திற்கு தரகுறைவுன்னு காமெடி பண்றீங்க.
இவ்வளவு அக்கறையுள்ள அன்பாக வேண்டுகோள் வைக்கும் நீங்கள், மதிமாறனை அவதூறு செய்யும் போது எங்கிருந்தீர்கள்?
உங்கள் அக்கறையும் அன்பும் எங்கே சென்றது….?
தமிழ் சொற்களில் ர ற வேற்றுமை அறியாது பிழையாக எழுதுகிறீர்கள். எ.கா. பொறுட்டாக.
பாரதிக்கே மறுப்பு எழுதிய எனக்கு இவர்களுக்கு மறுப்பு எழுவதுவதா முடியாது? பாரதிக்கு மறுப்பு எழுதிப் புகழா அடைந்திருக்கிறீர்கள்? பாரதி தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் செய்த தொண்டில் ஒரு எள் முனையேனும் தாங்கள் செய்யவில்லை என்பதே உண்மை.
முதலில் தமிழை ஒழுங்காக எழுதப் பழகுங்கள்!
பாரதி அப்படி என்ன தொண்டு செய்து கிழித்தார்…………
//பாரதி தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் செய்த தொண்டில் ஒரு எள் முனையேனும் தாங்கள் செய்யவில்லை என்பதே உண்மை.//
தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும் அப்படியென்ன தொண்டு செய்தார் என்று சொல்ல முடியுமா?
பக்கம் பக்கமாக பார்ப்பன கண்ணோட்டத்தில் பாடல்களை எழுதினால் அது தமிழ் மொழிக்கும், இனத்திற்கும் செய்யும் தொண்டா? இன்று சினிமா துறையில் பாரதி எழுதிய பாடல்களுக்கு மேல் அதிக எண்ணிக்கையில் பாடலாசிரியர்கள் பாடல் எழுதுகிறார்கள். அவர்கள் அனைவரும் உங்கள் கூற்றுப்படி தமிழுக்கு தொண்டு புரிகிறார்களா? ”கண்ணதாசன் கூட தமிழுக்கும் தமிழனத்திற்கும் தொண்டு புரிந்தார்” என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை.
//முதலில் தமிழை ஒழுங்காக எழுதப் பழகுங்கள்!//
நக்கீரனின் நெற்றிகண்ணை திறந்து முதலில் பார்ப்பன பாரதியின் பாடல்களை படித்துவிட்டு பாரதிக்கு வக்காலத்து வாங்குங்கள். முடியவில்லையா?? சாதாரண மனித கண்களையாவது திறந்து மதிமாறனின் பாரதி மீதான விமர்சனக் கட்டுரையையாவது படித்துவிட்டு வாருங்கள். விவாதியுங்கள். பிறகு எழுதிப் பழக சொல்லி தாருங்கள் புலவரே.
//பாரதி தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் செய்த தொண்டில் ஒரு எள் முனையேனும் தாங்கள் செய்யவில்லை என்பதே உண்மை.//
தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும் அப்படியென்ன தொண்டு செய்தார் என்று சொல்ல முடியுமா?
பக்கம் பக்கமாக பார்ப்பன கண்ணோட்டத்தில் பாடல்களை எழுதினால் அது தமிழ் மொழிக்கும், இனத்திற்கும் செய்யும் தொண்டா? இன்று சினிமா துறையில் பாரதி எழுதிய பாடல்களுக்கு மேல் அதிக எண்ணிக்கையில் பாடலாசிரியர்கள் பாடல் எழுதுகிறார்கள். அவர்கள் அனைவரும் உங்கள் கூற்றுப்படி தமிழுக்கு தொண்டு புரிகிறார்களா? ”கண்ணதாசன் கூட தமிழுக்கும் தமிழனத்திற்கும் தொண்டு புரிந்தார்” என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை.
//முதலில் தமிழை ஒழுங்காக எழுதப் பழகுங்கள்!//
நக்கீரரே, நெற்றிகண்ணை (சிவனிடம் கடன் வாங்கியாவது) திறந்து முதலில் பார்ப்பன பாரதியின் பாடல்களை படித்துவிட்டு பாரதிக்கு வக்காலத்து வாங்குங்கள். முடியவில்லையா??
சாதாரண உங்கள் மனித கண்களையாவது திறந்து மதிமாறனின் பாரதி மீதான விமர்சனக் கட்டுரையையாவது படித்துவிட்டு வாருங்கள். விவாதியுங்கள். பிறகு எழுதிப் பழக சொல்லி தாருங்கள் புலவரே.
///முதலில் தமிழை ஒழுங்காக எழுதப் பழகுங்கள்!///
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர். நக்கீரன் என்ற பெயருக்கு பொருத்தமாக இருக்கிறார்.
அவர் சுட்டிக்காட்டியது சரிதானே? மற்றவர்களைபோல் இல்லாத அவதூறுகளை பரப்பாமல் இருப்பதை மட்டும் சுட்டிக்காட்டிய நக்கீரனை நாம் பாராட்டுவோம்.
இருந்தாலும் பாரதியாரை கடவுள் போல் அவர் கருதுவது அதிகபட்சம்.
பாரதி நக்கீரன் சொல்வதுபோல் தமிழை ஒன்றும் வளர்க்கவில்லை.
எழுத்து பிழையாக எழுதுவதே தவறு என்றால், பிறமொழி கலப்பு செய்து எழுதுவது எவ்வளவு பெரிய தவறு. அவர்தான் நிறைய பார்ப்பன சமஸ்கிருத சொற்களை தமிழில் கலந்து எழுதும் கேவலமான நிலையை உண்டாக்கினார்.
அவரும் தமிழை நிறைய தவறாக எழுத்துப்பிழைகளோடு, இலக்கண பிழைகளோடுதான் எழுதுவார். அவைகளை பாரதிதாசன் போன்ற நன்கு தமிழ் படித்தவர்கள் திருத்தி தருவார்கள் என்றும் அவரை பற்றிய குறிப்புகளில் படித்திருக்கிறேன்.
பாரதி தன்னை வளர்க்கவே பெரும்பாடு பட்டவன் எங்கே தமிழை வளர்ப்பது.
தட்டச்சு வேகத்தில் எழுத்து பிழையாக வருவது இயல்புதான். யாரும் வேண்டுமென்றே தவறாக எழுதுவதில்லை ஆனால் பிறமொழி கலப்பு செய்து எழுதுவது என்பது வேண்டுமென்றே எழுத்து வியாபாரிகள் செய்வது இவன்களுக்கு முன்னோடி பாரதி; அவன்தான் நிறைய பார்ப்பன சமஸ்கிருத சொற்களை தமிழில் கலந்து எழுதும் கேவலமான நிலையை உண்டாக்கினான்.
பாரதிதாசன் போன்ற நன்கு தமிழ் படித்தவர்கள் திருத்தி தருவார்கள் ஆனால் அதிலும் தமிழை சரியாக ஏற்றுக்கொண்டு சமற்கிருதத்தை அப்படியே பாடல்களில் வைத்திருப்பதையும் நாம் பார்க்க முடிகிறதே அதற்கு என்ன சொல்கிறார் நக்கீரர்?
உங்க சிவனுக்கு நாலாவதா எங்காவது கண் கிடைத்தால் அதைவைத்து கண்டுபிடிங்க சாமி..
நல்ல பதிவு தோழர் மதிமாறன்.
அநாமதேய பேர்வழிகளுக்கு நீங்கள் பதிலளிக்காமலிருப்பதும் அதர்கு நீங்கள் அளிக்கும் விளக்கங்களையும் நான் முழுமையாக ஏற்றுக்கொள்ள்கிறேன் அதே நேரத்தில் நீங்கள் பின்ணூட்டமே போடாமலிருப்பது உங்களிடமிருந்து வாசிப்பவர்களை தனிமைப்படுத்தும் இதை கணக்கில் கொண்டு விவாதங்களிலும் நீங்கள் பங்கேற்க வேண்டுமென கருதுகிறேன்.
நல்ல விளக்கம். ஆனாலும் இன்னும் என்ன சதி செய்து பொய் சொல்லி நிகழ்ச்சியை நிறுத்தலாம் என்று அவதூறு கும்பல்கள் யோசித்துக்கொண்டு இருக்கும். எப்படியும் ஒரிருநாளில், பல பொய்களை சுமந்துகொண்டு… அவதூறு கும்பல் தன் வேலைகளை ஆரம்பிக்கலாம்.
மீண்டும் அவர்கள் கேவலப்படப்போவது உறுதி.
மகிழ்நன், பாரதி அப்படி என்ன செய்து கிழித்து விட்டான் என்று மிகவும் சாதாரணமாக கேட்டு விட்டீர்களே? முதலில் ஒன்றை கவனியுங்கள் “தாழ்வு மனப்பான்மை கொண்டவனிடம் மட்டுமே இது போன்ற வன்மையான வார்த்தைகள் வெடிக்கும்.” பார்பனர்களை குறை சொல்வதை நிறுத்தி விட்டு உங்கள் நாணயத்தையும், நேர்மையையும் வளர்த்து கொள்ளுங்கள். உங்கள் இனத்தவர்களின் ஆதிக்கம் தான் இப்பொழுது எங்கும், எதிலும். லஞ்சமும் பெருகி விட்டன. சும்மா அடுத்தவரை குறை கூறாமல் ஒரு கக்கன் போலவோ அம்பேத்கர் போலவோ வாழ முயலுங்கள். அதை விட்டு உங்கள் தகுதிக்கு அப்பாற்பட்டு பாரதி போன்ற கவிஞர்களை சந்திக்கு இழுக்காதீர்கள். அப்படியே விரும்பினாலும் நூல்களை படித்து நிறைய தெரிந்து கொள்ளுங்கள்.
இங்ஙனம்
அருண் சங்கர்
மேட்டிமைவாதி சுற்றி வளைத்து சொல்வதென்ன ‘நீங்க சில்லற பசங்கட நாங்க யாருனுத் தெரியுமில்ல’ பாரதிக்கே மறுப்பு எழுதி வாய்ச்சவடால் விட்டு திரிபவர்கள்.
பாரதி ஒரு பார்ப்பான் எனும் அதி அறிய கண்டுபிடிப்பினால் தமிழ் சமுதாயமே சாதிகள் இல்லாமல் போய்விடும் ஆனால் அ.புத்திரனுக்குப் பேட்டிக் குடுக்கும் போது ‘கிறுத்தவர்கள கொஞ்சம் பார்த்து நடந்துக்க சொல்லுங்க’ என வால் குழைப்பது பெரியாரைப் பின் பற்றும் ‘பகுத்தறிவாதி’களுக்கே உரிய அடையாளம் !
மேட்டிமைவாதியின் out-of-context ‘ஆய்வுக் கட்டுரை’க்கு ஏற்கனவே சிலர் ‘சிறப்பான காரணங்கள்’ இல்லாமல் மறுப்பும் எழுதியுள்ளனர். அறிவு துணிவிருந்தால் அதனையும் இத்தளத்தில் வெளியிட்டு விவாதிங்க.
மா.வெங்கடேசனுக்கும் இந்த கட்டுரையை எழுதிய மேட்டிமைவாதிக்கும் இடையே என்னால் ஆரு வித்தியாசங்கள் கூட கண்டுபிடிக்க முடியவில்லை!
லஞ்ச லாவண்யங்களின் தொடக்கம் கருவறையில் கிடக்கும் பார்ப்பன பண்டார பரதேசிகளிடமிருந்துதான்… மணியாட்டி கடவுள் என்ற கல்லின் அருகே நின்று கொண்டு கையேந்தி கோவணத்திற்குள் முடிந்து லஞ்சத்தை பரவலாக்கின் கூட்டம்…
அதோடு,எங்கள் இனத்தவன்தான் ஆதிக்கம் செலுத்துகிறான் என்று கூறுகிறார்கள். சரிதான் தமிழர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்…
ஆனால், பெயருக்கு, ஒப்புக்கு….அவர்களின் மூளையை அரித்து வைத்திருப்பது..பார்ப்பன பனியாக்குணம்..சாதிய மனோபாவம்…..அதிலிருந்து எம்மக்களை நேர்மையுடையவர்களாக மாற்ற முயன்று கொண்டிருக்கிறோம்..அறிவுள்ள சமூகமாக மாற வேண்டும் என்ற தீரா விருப்பத்தோடு…அதில் உங்களை போன்ற மேலான ஒத்துழைப்பு மிகவும் போற்றுதலுக்குரியது..
பாரதி போன்ற கவிஞனை தகுதிக்கு மீறி விமர்சிப்பதாக கூறுகிறீர்கள்…என்னுடைய கருத்தே வேறு,என்னுடைய ஆதங்கமெல்லாம்….
பாரதியை தகுதிக்கு மீறி பாராட்டி வைத்திருக்கிறார்களே என்பதுதான்
நல்ல பதிவு
அய்யாவை பொருத்தமாக
கையாள்கிறீர்கள்,வாழ்த்துக்கள்.
தோழர் மதிமாறனுக்கு !
இவர் வேண்டுமென்றே! இவ்வாறு செய்கிறாரா? அல்லது வேறு யாராவது இவ்வாறு சக தமிழர்களுக்கு எதிராக செய்ய தூண்டுகிறார்களா? என தெரியவில்லை.. அங்கு அங்கு ஈழ தமிழன் சுட்டு கொல்லபடும் காணோளியை கண்டு தன்னால் இயன்ற அளவுக்கு மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் தடுத்து நிறுத்த மின்னஞ்சல் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்..முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கும் மக்களை மீட்க அடுத்த நாட்டினரிடம் கையேந்தி கொண்டு இருக்கிறார்கள்..ஆனால் இவரோ சக தமிழர்களை இந்த இக்கட்டான நேரத்திலும் திட்டி பதிவு போட்டு கொண்டு இருக்கிறார்.. ஒரு பதிவு சிங்கள களவாணிகளை கண்டித்து போடக்காணோம்.. இதில் இருந்தே தெரியவில்லை..உடனே இவர் கருநாகத்தின் வழியில் பதிவிட்ட பழைய தேதிகளை குறிப்பிடலாம்..ஆம் அதை குறிப்பிட்டால் நிகழ்கால பிரச்சனைகள் தீர்ந்து விடும்..போதாக்குறைக்கு இவர் ராஜராஜ சோழனையெல்லாம் திட்டி பதிவிடுவார்..யாராவது வரலாறு என்பது முழுமையடைந்துவிட்ட ஒன்று அல்ல என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.. முழுமையடைந்த ஒரு மனிதன் பிறக்கிறான் என்றால் நாகசாகி ஹரோசிமா போன்ற அவலங்கள் நிகழ்ந்திருக்காது..
மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடாது! நான் சிங்கள பாசிட்டுகளுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த தயார்..என்னோடு என்னால் முடிந்தவரை 120 தோழர்களை சேர்த்த்து இருக்கிறேன். நான் ஒன்றினை கேட்கிறேன்! இணையத்தில் தீட்டும் அட்டை கத்தி வீரர்கள் இசம்,ரசம் ,சாம்பார் என்று புலம்பியதை தவிர வேறு என்ன செய்தீர்கள் ..அது சரி மக்கள் போராட்டம்.. மக்கள் கிளர்ந்து எழவேண்டுமாம்.. என்ன உண்ணாவிரதமா?ஊர்வலமா?பொது கூட்டமா? எல்லாவற்றிலும் நான் கலந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் எவனும் ஒரு மயிறையும் இந்த இந்தி யாவில் புடுங்கவில்லையே!எப்போது தமிழன் சாவான் என்று விழி மேல் அல்லவா காத்து கொண்டு இருக்கிறார்கள். என்னால் இன்று ஈழத்தமிழர்கள் சுட்டு கொல்லப்படும் காணோளியை காண முடியவில்லையே! என் வயிறு எரிகிறதே!(ஒருவேளை இவர் யாழ்பாண வெள்ளார்களுகு இது தேவைதான் என அமைதியாக இருக்கலாம்) உண்ணாவிரதம் பொதுகூட்டம் தான் புரட்சி என்றால் எவன் இங்கு கண்ணேடுத்து பார்கிறான்.நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன் நீங்களும் இருங்கள் ..மொத்தமாய் எல்லாரும் செத்து போவோம்.. யாருக்கு என்ன லாபம்? நான் தீர்மானித்து விட்டேன் நாளைய ஈழத்திற்கு நீங்கள் சொல்லும் அந்த பொது உடைமையோ பெரியாரிசமோ அல்லது வேறு ஏதொ நான் ஆயுதமேந்த தயாறாகி விட்டேன் நீங்கள் தயாரா? முதலில் மக்கள் அங்கு உயிரோடு இருக்கவேண்டும் அப்போதுதான் தாங்கள் சொல்லும் ரசம் சாம்பார் ஈஸ்டுகளை கேட்க அங்கு இருப்பார்கள்! தய்வுசெய்து உங்கள் உங்கள் தோழர்களை ஓன்றிணைய சொல்லுங்கள் நாம் ஆயுதம் ஏந்தி சேகுவரா போல் போராடுவோம்!ஆயுத பயிற்சியை சீனா கொடுக்கட்டும் கூயுபா கொடுக்கட்டும் கிளம்புவோம் நாம் இது ஈழதிற்கு மட்டும் அல்ல நம் தாய் தமிழகதிற்கும் தான்..
தமிழ்தேசியன்
அய்யா, வணக்கம்
நிறைய பெரியவர்கள் கருத்துக்கள் இருக்கும் இந்த இடத்தில், இந்த சிறியவன் கருத்து என்னவென்றால், பிழை செய்யாதவன் மனிதனே அல்ல… பிழையை தடுப்பவனே மனிதன். பாரதி தப்பு செய்தார், பார்பணர்கள் நமக்கு தீங்கு செய்தார்கள்…. இருக்கட்டும். அது கடந்து விட்ட காலம், இராஜ இராஜ சோழன் தப்பு செய்து இருந்தாலும், பாரதி தப்பு செய்து இருந்தாலும்…. இனி அதை பேசி பலனில்லை.
சிங்களன் தப்பு செய்கிறான், தடுக்க பாருங்கள். அதை விட்டு விட்டு பாரதி பற்றியும், பெரியாருடைய கொள்கையின் மகத்துவத்தை பற்றியும் பேசி, எழுதி பலன்னென்ன?
இன்று பெரியார் இருந்தாலும், அதை விரும்ப மாட்டார்.
பெரியவர்கள் நீங்கள் இப்படி சண்டையிட்டால்? இளையவர்கள் நாங்கள்… எப்படி தமிழீழ கணவை நினைத்து பார்ப்பார்கள்?
திரு. தமிழ்தேசியன் அவர்கள் கூறியதை நான் வழிமொழிகிறேன்.
எங்களுக்கு (தமிழீழ கணவை காணும் எங்களை போண்ற இளைஞர்கள்) பாரதியும் தேவையில்லை…. பெரியாரும் தேவையில்லை… தமிழீழ மக்களின் துயர் துடைக்க, அணு அளவாவது, உழைக்க வேண்டும்… தயவு செய்து வழி காட்டுங்கள்.
எங்களை இன்னும் மானங்கெட்ட ஈனதமிழனாகவே வாழவைக்காதீர்கள். உங்களுடைய (திரு.மதிமாறன்) எழுத்துக்கள், எங்களை கூர் தீட்ட பயண்படட்டும்.
நன்றி, வணக்கம்.
மதிமாறன்,
நான் சில முறை இங்கே மறுமொழி எழுதி இருக்கிறேன். அனேகமாக இது கடைசி முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
எனக்கு நீங்கள் அம்பேத்காரை தலித் தலைவர் மட்டுமே என்ற குறிகிய அடையாளத்திலிருந்து விடுவிக்க எடுத்த முயற்சிகள் பிடித்திருந்தன. எனக்கு தெரிந்து அப்படி முயன்ற ஒரே ஆள் நீங்கள்தான். அதை தவிர எம்எஸ்வி பதிவுகளையும் விரும்பி படித்தேன். அந்த பதிவுகளுக்காக மீண்டும் ஒரு முறை என் பாராட்டுகள்.
உங்களுடைய பல நிலைகள் எனக்கு தவறாக தெரிகின்றன. பெரியார் மீது கண்மூடித்தனமான பக்தி, பெரியாரும் அம்பேத்காரும் விமர்சனத்துக்கும் பரிசீலனைக்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற நிலை, இன்றைய மதிப்பீடுகளை அன்றைய தலைவர்களிடம் பொருத்தி பார்க்கும் பண்பு, பார்ப்பன வெறுப்பு என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது. விமர்சனங்களுக்கு நீங்கள் பதில் அளிக்காத காரணம் என்ன என்று நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கமோ இன்னும் கடுப்பையே கிளப்புகிறது. நான் மட்டுமே அறிவாளி, மாற்று கருத்து உள்ளவர்கள் முட்டாள்கள் என்ற மேட்டிமைத்தனத்தை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதில்லை என்பதை நீங்கள் ஒரு கொள்கையாக வைத்திருக்கும் பட்சத்தில் இங்கே பின்னூட்டமிடும் வசதி எதற்காக? உங்கள் நண்பர்கள் இங்கே வந்து ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் என்று உங்களுக்கு முதுகு சொரிந்துவிடுவதுதான் பின்னூட்டங்களின் நோக்கம் என்றால் அதை தெளிவாக சொல்லிவிடலாமே! இல்லை நீங்கள் புகழ்ச்சியை விரும்பாதவர் என்றால் பின்னூட்டம் இடும் வசதியையே எடுத்துவிடலாமே?
இணையத்தின் பெரும் லாபமே அடுத்தவர்களின் கருத்தையும் கேட்டு கலந்துரையடுவதுதான் என்பது உங்களை போன்றவருக்கு புரியாமல் இருப்பது துரதிருஷ்டமே!
RV, mu.ira,tamildesian, இன்றைய நிலையிலேயும் பார்பன ஆதிக்கம் இருக்கிறது, இதை தடுக்கவில்லை என்றால் அது நம்மை அடிமை படுத்திவிடும்.உதாரனம் தமிழர்களுக்கு எதுராக ஈழ பிரச்சினையில் பார்பனர்களின் துரோக செயல். ஒவொருவரும் ஒவொரு விதத்தில் நம் மக்களுக்காக போராடுகிறார்கள்.மதிமாறன் அவரது வழியில் போராடுகிறார்.சமூகம் பெரியார் காலத்தில் எப்படி இருந்ததோ அது போலதான் இப்போதும் உள்ளது. அதனால் பெரியாரின் கருத்துகளை சிந்தனைகளை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டி உள்ளது. அதை தான் மதிமாறன் செய்கிறார்.
RV நீங்கள் ஒரு கடைதெடுத்தப் பார்ப்பானர்.
டோண்டு ராகவனிடமாவது ஒரு நேர்மைஇருக்கிறது. அவர் தன்னை மறைத்துக் கொள்ளாமல் வெளியிடுகிறார். ஆனால் நீங்கள் நடுநிலையாளர் போல் ஆடுகிற நாடகம் பச்சை பார்ப்பனத் தனம்.
பெரியார்மீதும் அம்பேத்கர் மீது் கண்முடித்தனமான பக்தி இங்கு யாருக்கும்இல்லை. உங்களைப்போன்ற பார்ப்பனர்கள்தான் பாரதி போன்ற பாப்பானிடம் பக்தியாக இருக்கிறார்கள்.
உண்மையில் தோழர்மதிமாறன் மீதான்உங்கள்கடுப்புக்கு காரணம்… அவர் பாரதிக்கு பாடைகட்டினார் என்பதினால்தான்.
வாசகர்கள் பாரதிககு ஆப்பு வைத்துவுடன் நடுநிலையாளர் மாதிரி வந்து அதை மட்டும் குறிப்பிடாமல்… பக்கத்து இலைக்கு பாயாசம் மாதிரி பஞ்சாய்த்து செய்கிறீர்கள்.
///நான் சில முறை இங்கே மறுமொழி எழுதி இருக்கிறேன். ///
நீங்கள இங்கே சில முறைமறுமொழி எழுதியது இருக்கட்டும் ஆனால்….இப்போது எல்லாம் இங்கு வருவதில்லை…. அதற்கு காரணம் மதிமாறனின் பாரதி எதிர்ப்பும் தொடர்ந்து எழுதிய பார்ப்பன எதிர்ப்பும்தான்.
நீங்கள் பெரியார், அம்பேத்கர் தளங்களில் தொடர்ந்து விவாதம் பண்ணாலமல் பார்ப்பன தளங்களில் மட்டும் கருத்து வேறுபாடு இல்லாமல் தொடர்ந்து பின்னூட்டம்போட்டு வருகறீர்கள்…..
உங்களை ரொம்ப நல்லன்வன் மாதிரி காட்டிக்கிறதுக்ககாக வினவு தளத்துல போய்நடுநிலை நாராணயசாமி மாதிரி பின்னூட்டம்போடுறீங்க…. நீங்க வினவு தளத்தில் தொடர்ந்து எழுதுறது…. வினவுக்குத்தான் கெட்டப் பெயரை ஏற்படுத்துகிறது.
தயவு செய்து மதிமாறன் தளத்தை புறக்கணிப்பது மாதிரி வினவு தளத்தையும் புறக்கணியுங்கள்.
ரொம்ப உசாரா யாராவது வந்து கேள்வி கேட்பான்…அதற்குபதில்சொல்லவேண்டி வரும்என்பதினால்தான்….
///அனேகமாக இது கடைசி முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்./// என்று அறிவித்துவிட்டிர்கள்.
இதுதான் பார்ப்பனியம்.
அதுசரி… பாரதியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் என்ற கட்டுரையில் உங்களைப் பற்றி பின்னூட்டம் போட்டு இருந்தேன் அப்போதே வருவீர்கள் என்று பார்த்தேன் இப்போதுதான் வந்து இருக்கிறீர்கள்.
நான் அப்போது போட்ட பின்னூட்டம் இதுதான்.
///Rv என்கிற பெயரில் எழுதுகிற தந்தரமான பார்ப்பனர், இப்போது இந்தப் பக்கம் வருவதில்லை.
அவர் பிளாக்கை போய் படித்துப் பார்த்தேன். பார்ப்பன தந்திரம் நிறைந்ததாக இருக்கிறது.
வெளிபடையா பார்ப்பன நலன் பத்தி எழுதுற டோண்டு ராகவனைவிட ஆபத்தானவராக தெரிகிறார்.
இதுபோன்ற பார்ப்பனர்களிடம்தான் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.//
அதுசரி… பாரதியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இங்கு வந்து எழுத முடியாவிட்டாலும் பரவாயில்லை…. உங்கள் தளத்தில் வந்து எழுதுங்கள்… நாங்க அங்க வந்து உங்களுக்கு அவார்டு கொடுக்குறோம்.
RV
////உங்களுடைய பல நிலைகள் எனக்கு தவறாக தெரிகின்றன. பெரியார் மீது கண்மூடித்தனமான பக்தி, பெரியாரும் அம்பேத்காரும் விமர்சனத்துக்கும் பரிசீலனைக்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற நிலை, இன்றைய மதிப்பீடுகளை அன்றைய தலைவர்களிடம் பொருத்தி பார்க்கும் பண்பு, பார்ப்பன வெறுப்பு என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது.///
RV உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா? பக்தி கிடையாதா? விநாயர் சிலையை செருப்பால அடிப்பீர்களா?
அப்படி என்றால் நீங்கள் பெரியார் அம்பேத்கரை பக்தியாக கொண்டாடுவதை குறை சொல்லலாம்.
ஆனால், நீங்கள் பக்தராக இருந்துக் கொண்டு கடவுள்கள், சங்கராச்சாரி போன்ற கிரிமனல்கைள கும்பிடும் ஆளாக இருந்தால் பெரியார் அம்பேத்கரை பக்தராக கொண்டாடுவதை குறை சொல்லும் யோக்கியதை உங்களுக்கு ஏது?
தனக்கு ஒரு நியாயம். அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம் சொல்லவதுதான் எப்போதுமே பார்ப்பனர்களின் யோக்கியதையாக இருக்கிறது.
நீங்கள் பார்ப்பனராக இல்லையா என்று எனக்கு தெரியாது…. ஆனால் இதற்கு நீங்கள் என்ன பதில் கொடுக்கிறீர்கள் என்பதை பார்த்துதான் பதில் சொல்ல முடியும். ஒரு வேளை பதிலே சொல்லாமல் இருந்தால் நீங்கள் தீவிர பார்ப்பன சாதி உணர்வாளகராகத்தான் இருப்பீர்கள்.
திரு RV,
//நான் சில முறை இங்கே மறுமொழி எழுதி இருக்கிறேன். அனேகமாக இது கடைசி முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//
நீங்கள் இப்படி சொல்வது, ”என்னை நீங்கள் அடிப்பதற்கு நானே அனுமதிப்பதிப்பது அனேகமாக இதுவே கடைசி முறையாக இருக்கும்” என்பது போல் நகைசுவையாக இருக்கிறது. நகைசுவையுடன் ஆரம்பத்த RVக்கு நன்றிகள் பல.
//எனக்கு நீங்கள் அம்பேத்காரை தலித் தலைவர் மட்டுமே என்ற குறிகிய அடையாளத்திலிருந்து விடுவிக்க எடுத்த முயற்சிகள் பிடித்திருந்தன. எனக்கு தெரிந்து அப்படி முயன்ற ஒரே ஆள் நீங்கள்தான்.//
அம்பேத்கர் தலித் தலைவர் மட்டுமல்ல தேசிய தலைவர் என்று நீங்கள் ஒப்புகொள்கிறீர்களா? அது உண்மையெனில், அவரது சநாதன இந்து மத எதிர்ப்பையும், பார்ப்பனியத்தை எதிர்ப்பையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
//உங்களுடைய பல நிலைகள் எனக்கு தவறாக தெரிகின்றன. பெரியார் மீது கண்மூடித்தனமான பக்தி//
பெரியாரின் மீதான கண்மூடித்தனமான பக்தி என்று எதை வைத்து சொல்கிறீர்கள். கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இல்லாமல் இருக்கிறோமே அதுவே உங்கள் பார்வையில் எங்களின் பக்தியா?
//பெரியாரும் அம்பேத்காரும் விமர்சனத்துக்கும் பரிசீலனைக்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற நிலை//
அவர்கள் இருவரும் இந்து மதத்தை எதிர்த்தது தான் உங்கள் விமர்சனமா?
//இன்றைய மதிப்பீடுகளை அன்றைய தலைவர்களிடம் பொருத்தி பார்க்கும் பண்பு, பார்ப்பன வெறுப்பு என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது//
‘அன்றைய தலைவர்களின் இன்றைய மதிப்பீடு’ உங்கள் பார்வையில் தவரென்றால், பயனுள்ள விஞ்ஞான வளர்ச்சியை ருசித்து அனுபவித்து கொண்டிருக்கும் இன்றைய உலகத்தை, பழங்கால வேதங்களையும் பொய் புராணங்களையும் வைத்து இவ்வுலகத்தை பொருத்தி பார்ப்பது உங்களுக்கு அது தவரென்று தெரியவில்லையா? அசிங்கமாக தெரியவில்லையா? இருந்தாலும் அதை ஏன் போற்றி பாதுகாத்து கடைபிடிக்கிறீர்கள்? உங்களை(சாதி பற்று) பற்றிய மதிப்பீடு தான் அன்றைய தலைவர்கள் எங்களுக்கு தந்தது. இது தவறா என்ன? இல்லையெனில் உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துகொள்ளுங்கள். உங்கள் பூணூல், அன்றைய தலைவர்களின் கூற்று இன்றைக்கும் பொருந்தும் உண்மையென ‘சாதி அதிதீவிர பற்றாளரான’ உங்களுக்கு உணர்த்தும்.
//விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதில்லை என்பதை நீங்கள் ஒரு கொள்கையாக வைத்திருக்கும் பட்சத்தில் இங்கே பின்னூட்டமிடும் வசதி எதற்காக? //
அவரது கட்டுரைகள் ஒவ்வொன்றும் ‘முந்தைய பதிவில் பின்னூட்டமிட்ட கேள்விகளுக்கான பதிலின் தொகுப்பு’ என்பதை படித்த உங்களை போன்றோர்க்கு ஏன் விளங்கவில்லை என்பது சாக்ஷாத் அந்த விஷ்ணுவுக்கே வெளிச்சம்.
//இணையத்தின் பெரும் லாபமே அடுத்தவர்களின் கருத்தையும் கேட்டு கலந்துரையடுவதுதான் என்பது உங்களை போன்றவருக்கு புரியாமல் இருப்பது துரதிருஷ்டமே!//
இந்து மத பக்திமானாய் ஒரு புறம் இருந்து அதை மறைத்து சக்திமான் போல் வேடம் போட்டு தமிழ் தேசிய காப்பாளர் மாதிரியும் ஆதரவாளர் மாதிரியும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திகிறீர்களே, உங்களை பற்றி தமிழ் தேசியவாதிகள் அறியாமல் உங்களையும் நல்லவராக நினைத்து உங்களையும் ஒரு ஆதரவு சக்தியாக நினைப்பதே துரதிருஷ்டம்!
////எனக்கு நீங்கள் அம்பேத்காரை தலித் தலைவர் மட்டுமே என்ற குறிகிய அடையாளத்திலிருந்து விடுவிக்க எடுத்த முயற்சிகள் பிடித்திருந்தன. எனக்கு தெரிந்து அப்படி முயன்ற ஒரே ஆள் நீங்கள்தான்.////
RV அவர்களே,
தோழர் மதிமாறனின் அம்பேத்கர் தொடரை பாராட்டியது மகிழ்ச்சி. நீங்கள் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கீறீரர்களா? அவரை தத்துவங்களை பின்பற்றி இதுவரை எத்தனை கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள்?
இருந்தால் எடுத்துக் காட்டுங்கள்.
அவர் புத்தகங்களை படித்து அதை குறித்து உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறீர்களா? இருந்தால் காட்டுங்களேன்.
ஐயங்கர் எங்கய்யா ஆளக் காணோம்…. அவருகொள்கையிலேயெ நல்ல உறுதியாக இருக்கார்…. அதான்
///நான் சில முறை இங்கே மறுமொழி எழுதி இருக்கிறேன். அனேகமாக இது கடைசி முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ///
அவருடைய பெருமாளே வந்து நமக்கு காட்சி கொடுத்தாலும் கொடுப்பான்… இந்த் ஐயங்காரு…ம்….ம்ம்….
தனக்குத்தானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக்கொள்ளும் எழுத்தாளரின் சமீபத்திய கேள்வியும் அதற்கான பதிலையும் படித்தபோது புல்லரிப்பே வந்துவிட்டது. அந்த கேள்வி இதுதான் நீங்கள் ஏன் உங்களைப் பற்றிய விமர்சன கட்டுரைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்வதில்லை ? நம் எழுத்தாளர் சொல்லியிருக்கும் பதிலை பார்த்தவுடன் உடனே அதற்கு ஒரு மறுமொழி எழுதாவிட்டால் பாரதி கல்லறையில் இருந்து எழுந்து வந்து நம்மை உதைத்துவிடுவார் என்று கருதியதால் இந்த பதிவு. )
மறுப்பு சொல்ல வேண்டிய அளவுக்கு அருகதை இல்லாததால் இவர் பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லையாம். விமர்சிக்க கூட தகுதியற்ற அவரின் எழுத்துக்களுக்கு இந்த அளவுக்கு மெனக்கெட்டு முக்கியத்துவம் கொடுத்து பின்னூட்டம் போடும் அப்பாவிகளை நினைக்கத்தான் நமக்கு கவலையாக இருக்கிறது. ( பின்னூட்டம் இட கூட தகுதி இல்லாத பதிவு என்பது வேறு விஷயம்) அடடா இப்போதுதான் நினைவுக்கு வருகிறது பெரும்பாலான பின்னூட்டங்களையும் அவரே போட்டுக்கொள்வதை மறந்துபோய்விட்டோம்!!
கிசுகிசுத்தனமாக அவர் மேல் வைக்கப்படும் விமர்சனங்களை நாமும் தவிர்த்துவிட்டு சில விசயங்களை பார்க்கலாம். ம.க.இ.க வி.ன் கையாள் மதிமாறன் என்று இவரை திட்டுகிறார்களாம் அட பெருமைப்பட்டுக்கொணடு இருக்க வேண்டிய விசயத்துக்கு போய் ஏன் இவர் அலுத்துக்கொள்ளுகிறார். உலகத்திலேயே தங்களை விட புர்ர்ரர்ச்ச்ச்சீகாரர்கள் இல்லை, என்றுசொல்லும் மருதையன் கலை இலக்கிய கழகத்துக்கு ஏஜெண்டாக இருப்பது எவ்வளவு பெருமிதத்துக்குறிய விசயம். அதைவிட்டுட்டு இப்படி மெகா சீரியல் ஹீரோயின் போல கண்ணை கசக்கிகிட்டு இருக்காரே நம்ம எழுத்தாளார்
பெரியாரின் தொண்டனின் பார்வையில் டாக்டர் அம்பேதகர் குறித்து இவர் எழுதிய புத்தகத்தால் கவரப்பட்ட இளைஞர்கள் விழா எடுக்க முடிவு செய்து இவருக்கு சிறப்பு விருந்தினர்களையும் அறிவித்தார்களாம். யார் அந்த அப்பாவிகள் எந்த பள்ளியில் எத்தனாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்களோ யாமறியேன் பாராபரமே!! என் இனிய நண்பர்களே கொளத்தூர் மணியிடமும் சீமானிடமும்போய் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக புலம்பிவிட்டு !! ஆண்டவனே என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று எதிரிகளை நானாக கவனித்துக் கொள்ளுகிறேன் என்று ஒரு இறை நமபிக்கையாளர் புலம்பியதுபோல தானும் புலம்ப முடியுமா என்று கேட்கிறார். என் இனிய நண்பர்களே என்று எதிரிகளை விளிக்கும் இவருக்குநண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்று அந்த ஆண்டவன் குழம்பிபோய் கோவணத்தை அவிழ்த்துக்கொண்டு திரியாமல்இருந்தால் சரி.
பேசாத எழுதாத விசயத்துக்கு வலிந்துபோய் கொளத்தூர் மணியிடமும் சீமானிடமும் விளக்கம் கொடுக்க விரும்பாத இவர் ஏன் பதிவு எழுதி தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ?
கொஞசம் ம.க.இ.க கொஞசம் பெரியார் கொஞ்சம் அம்பேத்கர்என்று லவட்டிப்போட்டி சுயசிந்தனையின் அடையாளமே இல்லாத இவரின் எழுத்துக்களுக்கு அரசியல் ரீதியான விமர்சனம் செய்ய இயலாதவர்கள் காழ்ப்புணர்சியால்வதந்தியை பரப்புகிறார்களாம்? பொறாமை உணர்வு நெருங்கிய நண்பர்களிடமும் உறவினர்களிடமும்தான் வேலை செய்யுமாம். முதலில் சுயபச்சாதாபத்தையும் கழிவிரக்கத்தையும்தவிர்த்துவிட்டு உண்மையாக வளர முயற்சி செய்யுங்க எழுத்தாளரே பாரதிக்கே மறுப்பு எழுதிய எனக்கு இவர்களுக்கு மறுப்புஎழுதுவதா முடியாது என்று ஒரு சவடால் வேறு அடிக்கிறார்? செத்து போனவர் திரும்ப வந்து மறுப்புக்கு மறுப்பு எழுத மாட்டார் என்கிற தைரியம் தானே மதிமாறரே ?
நல்ல வேளை பாரதியோடு நிறுத்தி கொண்டார். ,கே.பி . சுந்தராம்பாளை இழுக்கவில்லை. ( சுந்தராம்பாளை அம்பல படுத்திய (?) பதிவு உலக பிரசித்தி பெற்றது ) மறுப்பு என்பது ஒரு நபரின் கருத்தையோ கட்டுரையையோ மறுத்துஎழுதுவது. ஆய்வு என்பது புறநிலை பார்வையுடன் ஒரு எழுத்தாளரின் கருத்துகளைஆய்வு செய்து நிறை குறைகளை அலசி முன்வைப்பது. பாரதியை ஆய்வு செய்தாரா? பாரதிக்கு மறுப்பு எழுதினாரா இவர் ?இவருக்கே குழப்பம் இன்னும் தீரவில்லை போல இருக்கிறது. செத்துபோனவருக்கு மறுப்பு எழுதும் உங்கள் துணிவை எப்படிபாராட்டினாலும் தகும் எழுத்தாளரே!!
தந்தை பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற
தந்தை பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவதூறு பரப்பினார்கள். ஆனால் அவைகளை ஒரு பொறுட்டாகவே மதித்ததில்லை தலைவர் பெரியார்.
பெரியாரை ‘தமிழனல்ல கன்னடன்’ என்று தமிழ்த்தேசியவதிகள், தமிழறிஞர்கள் அவதூறு செய்தபோது மட்டும் தலைவர் இப்படிக் கேட்டார்: “தமிழர்களே! அட, மானங்கெட்ட தமிழர்களே! முதன் முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் ஒரு மலையாளி டி.எம். நாயர். அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கி தன் பொருளையெல்லாம் இழந்தவன் ஒரு தெலுங்கன் சர்.பி.தியாகராய செட்டியார். தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காக போராடியவன் கன்னடியனாகிய நான். உங்கள் தமிழர் தலைவர்கள் எல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள்?” -விடுதலை நாளிதழ் – இந்த துணிச்சல், நேர்மை யாருக்கு வரும்? தமிழர்களை ஏமாற்றி,‘தமிழா நீ ஆண்ட பரம்பரை. இன்று அடிமைப்பட்டு கிடக்கிறாய்’ ‘தமிழ் இனம் உலகத்தின் மூத்த இனம்’ ‘தமிழ் என் மூச்சு’ என்றெல்லாம் ஏற்றி பேசி, தமிழர்களிடம் செல்வாக்கு பெற்று, தலைவனாக மாறி நாட்டையே பிடித்தவர்கள் மத்தியில், தமிழர்களிடம் வெறுப்பை சம்பாதிப்பதை போன்ற இப்படி ஒரு பதிலை தலைவர் பெரியாரைத் தவிர வேறு யாரால் தர முடியும்? உங்களாலும் கொடுக்க முடியும் என்று சொல்லி உங்களைப் பெரியாரின் இடத்தில் வைத்து பெருமைப்படத் துடிக்கிறீர்களா?
அற்பவாதி, லும்பன், மாங்காமடையன், மாமா பையன் என்கிற வார்த்தையை whole sale-ல் டீலர் எடுத்து ஸ்டாம்பேடில் குத்தி on the way -ல் போகிற வருகிறவர்களுக்கு எல்லாம் இலவசமாக குத்திகொண்டிருக்கும் ம.க.இ.க வினரை பக்கத்தில் வைத்துக்கொண்டு இப்படிபேச உங்களுக்கு எவ்வளவு தைரியம்?
தனக்கு வசதியாக அம்பேத்கரை இவர் இழுப்பதைக் கண்டுதான் நமக்கு கோபம் ஏற்ப்படுகிறது. ஒரு அனாமதேய ஆத்மாவாக இல்லாமல் மாகாத்மாவே எனக்கு எதிராளியாக இருப்பதால் அவர் முன்வைத்த வழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்று அம்பேத்கர் கூறியதை தனக்கு துணையாக அழைக்கிறார்.
யார் வேண்டுமானாலும் துண்டுச்சீட்டில் கேள்வி எழுதிக்கொடுங்கள் என்று கூட்டங்களில் அறிவித்து வரும் கேள்விகளுக்கு பெரியார் பதில் சொன்னது நமக்கு தெரியும். வரும் கேள்விகள் அணைத்தும் நேர்மையானதாக இருந்தது என்று கூற முடியாது.ஆனால் அத்தனைக்கும் பதில்சொல்லிக்கொண்டிருந்தார் பெரியார்.
இந்த பெரியார் தொண்டர் அம்பேத்கரைப் பற்றி என்ன எழுதியிருப்பார் என்று நினைக்கையில் தலைசுற்றலே வந்துவிடுகிறது. எழுத்தாளர் அம்பேத்கார் பாதை , பெரியார் பாதை, எல்லாம் பின்பற்றட்டும் ஆனால் அவரது பதிவை படித்துவிட்டு “ எங்கே செல்லும் இந்த பாதை” யை நோக்கி வாசகர்கள் செல்லவேண்டிய காலம் வெகு தூரம் இல்லை. வெவ்வேறு சூழ்நிலைகளில் தங்கள் ஆளுமைகளுக்கும்தனிப்பட்ட கொள்கைகளுக்கும் ஏற்ப் நடந்துகொண்டபெரியார்,மற்றும் அம்பேத்கரின் கருத்துக்களைதனது வசதிக்கு ஏற்ப பயன்படுத்த முயலுவதில்கூட தோல்வி காணும் நம் மதிமாறர்ர் என்ற வீரர், தீரர் , சூரரை பாண்டிமட பஜனை எழுத்தாளர் என்று அழைத்தது தவறே இல்லை என்கிற முடிவுக்குதான் வந்துசேர முடிகிறது.
பி.கு அம்பேத்கார் டீ சர்ட்டை நம்ம ம.க.இ.க மருதையன் அணிவாரா கேட்டுச்சொல்லுங்க மதிமாறன்
குறிப்பு ) :- என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா என்று வரும் நன்பர்களும் ”தோலர்”களும் பின்னூட்டம் இடலாம்
http://allinall01.wordpress.com/
என்ன தோழர் இவங்க கொடும பெரிய கொடுமையாக அல்லவா இருக்கிறது. உசுப்பேத்தி உசுப்பேத்தியே இவனுங்க உடம்பு ரணகளமாயிடுச்சு பாவம், தோழர்கள் யாரும் அவரை சீன்டாதீங்க அப்புறம் சினங்கொண்ட சிங்கம் என்ன செய்யும்னு உங்களுக்கே தெரியும் !
என்னோட பிளாக் லிங்கே வரமாட்டேங்குது தோழர் ஏன் ?
http://periyarstalin.wordpress.com/
அம்பேத்கர் என்றவுடன் முதலில் எனக்கு நினைவு வருவது என்னுடைய மாணவப் பருவம்தான்! சென்னை கன்னிமரா நூலகத்தில், சில நாட்கள், மாலை நேரம் படித்துக் கொண்டிருக்கும் போது, நூலகர் “நேரம் ஆகி விட்டது” என்று நினைவு படுத்துவார். ‘ஒரு நாளைக்காவது, அம்பத்கரைப் போல படித்தோம்’ என்று மன நிறைவுடன் செல்வேன்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர் என்று நான் மனப் பூர்வமாகச் சொல்வேன்.
அப்படிப்பட்ட ஒரு அறிங்கரை, ஒரு வகுப்பின் பிரதிநிதியாக மட்டுமே காட்டுவது ஒரு அநீதி. அவரை புரிந்து கொள்ளாத மாணவர்களுக்கு நட்டமும் ஆகும்.
ஆனால் ஒடுக்கப் பட்ட மக்களின் சார்பாக பேசுபவர்களும் அப்பட்டமாக சாதி வெறியை, சாதிக் காழ்ப்புணர்ச்சியை தூண்டி எழுதும்போது, வேறு சாதி மாணவர்கள் தங்களின் சாதி வெறியை நிலை நிறுத்த அம்பேத்கரை அவமானம் செய்கின்றனர். இது அம்பேத்கரின் உழைப்பு, விடா முயற்சி , புலமை ஆகிய காரணங்களுக்காக்க அவர் மீது மதிப்பு வைத்துள்ள எல்லோருக்கும் மன வருத்தத்தை உண்டு பண்ணும் செயல் ஆகும்.
அம்பேத்கருக்கு இந்திய வரலாற்றில் தனி இடம் உண்டு.
எப்படி கரிகால் சோழன், அசோகர், ஹர்ஷர், நரசிம்ம பல்லவன்,
இராச இராச சோழன், பிருத்வி ராசன், அக்பர், சிவாஜி, திப்பு சுல்தான், சுபாஷ் சந்திர போஸ், திலகர்… இவர்களுக்கு எல்லாம் இந்திய வரலாறு (யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்) ஒரு தனி இடம் குடுத்து இருக்கிறதோ, அதைப் போல காந்திக்கும் ஒரு இடம் குடுத்தே உள்ளது. அதைப் போல அம்பேத்கருக்கும் ஒரு இடம் குடுக்கப்பட்டே ஆக வேண்டும். அதை வரலாறு குடுத்தே உள்ளது.
சகோதரர்கள் வே. மதிமாறன், வேந்தன், கி. சுந்தரம், ரமேசு ….
அனைவருக்கும் நான் தாழ்மையுடன் தெரிவிப்பது என்னவென்றால், நீங்கள் எதைக் குறிக்கோளாக வைத்து இருக்கிறீர்கள் என்பதை இன்னொரு முறை சிந்தித்துப் பாருங்கள்.
பெரியாரின் கொள்கைகளைப் பரப்புங்கள். ஆனால் பார்ப்பன எதிர்ப்பு என்பதை மட்டுமே மையமாக வைத்து நீங்கள் செயல் படுவது போல உள்ளது. எனவே எதிர்மறையான சிந்தனைகள் மட்டுமே தென்படுகின்றன.
சாதிக் காழ்ப்புணர்ச்சியை எரிய விட்டுக் கொண்டே எப்படி நீங்கள் சம்த்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும்?
பார்ப்பன எதிர்ப்பு என்பது இந்தக் கால கட்டத்தில் எந்த அளவுக்கு மக்களுக்கு முக்கியமானது?
I wrote “idlyvadai” blogspot as referred below!
“we dont want to under estimate Periyaars effect on Tamil nadu soceity from the period 1920 to 1970.
But the effect of Periyaars writings can not make the same chemical reaction in tamil nadu hereafter.
100 Years ago, Tamil nadu politics was controlled by Bhramins, hence the fight to wrestle the power from Bhramins was started much before Periyaar by Justice Party leaders.
Periyaars strong points were
1)Bhramins were not mingling with non- Bhramins.
Bhramins were considering themselves as higher class people during Periyaars days
2) Bhramins were high in numbers in Governmet Jobs and in Politics.
3) Hindu Religion was eclipsed with Superstition and Rigid caste system.
Now the above three points are nullified as follows,
1) Bhramins are mingling with non Bhramins freely. Many Bhramins eat at their friends home, including the friends from suppressed once.
2) Bhramins presence in Government offices are negligible
3) Hinduism is cleared of Superstition to a great extent. caste system is fostered by political leaders/ Caste leaders for their own benefit. now even suppressed people depict their caste tag proudly. Its only in tamil nadu the caste feeling is very high than in any other part of India. Hence in that way Periyaars camapaign in fact resulted increase in caste pride rather making a homogenious soceity.
Hence we can use Periyaars life as a mile stone, But its effect on future generations will be negligible.
The Congress fought against British from 1885 to 1947. But is there any meaning in fighting against British now?
Similaraly Periyaar camapaigned against Caste proud Bhramins during 1920 to 1970. Now the caste feeling Bhramins are not there. They are gone.
I request the todays Gentlman Bhramins as not to waste their time in debasing Periyaar, but use their energy to unite all Indians and to improve India.”
நீங்கள் பிராமண எதிர்ப்பு என்பதைத் தவிர வேறு எந்த செயல் திட்டமும் இல்லாதது போலவே தோன்றுகிறது. ஆனால் இப்போது பிராமணர்கள் எதிர்க்கப் பட வேண்டிய அளவுக்கு பெரிய சக்தியாக இல்லாமல் இருப்பதாகவே பெருவாரியான மக்கள் கருதுகின்றனர்.
எனவே நீங்கள் செத்த குதிரையை அடிப்பதாகவே , வீண் முயற்ச்சியாகவே இது தோன்றுகிரது.
தமிழ் நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி, எந்த ஒரு சாதியை சேர்ந்தவர்களோ, மதத்தை சேர்ந்தவர்களோ தனியாக தாங்கள் மட்டும் தனித்து வாழவோ, இயங்கவோ முடியாது.
தலித்களுக்கு, வன்னியர்களுக்கு, பிராமணர்களுக்கு,முதலியார்களுக்கு, தனித் தனியே சந்தைகள், ஒரு சாதியார் உற்ப்பத்தி செய்த பொருளை அதே சாதியாரிடம் மட்டுமே விற்க்க முடியும், தனித் தனி மருத்துவ மனைகள் ….. என்று எல்லாம் இருக்க முடியுமா?
நீங்கள் போய் பிற ஜாதி மக்களிடம் நாம் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு சாதியை மட்டும் காழ்ப்புனர்ச்சி செய்யலாம் என்று கூறிப் பாரூங்கள். அவர்கள் வர மாட்டார்கள். நாளைக்கு நம்மையே ஆப்பு வைப்பானோ என்று எண்ணுவார்கள்.
தமிழ் நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி, எந்த ஒரு சாதியை சேர்ந்தவர்களோ, மதத்தை சேர்ந்தவர்களோ தனியாக தாங்கள் மட்டும் தனித்து வாழவோ, இயங்கவோ முடியாது.
உயர்வதானால் எல்லொரும் ஒன்று சேர்ந்து உயர்ந்தால் உண்டு, இல்லையேல் எல்லோரும் சேர்ந்து கீழே விழ வேண்டியதுதான்.
அம்பேத்கர் எல்லா மக்களுக்கும் பொருந்தும், உயர்வைத் தரும் செயல்களை செய்தவர். நீங்களும் ஆக்க பூர்வமான சிந்தனைகளை முன்னெடுங்கள்.
குறிப்பு: நான் சாதி , குலம் , கோத்திரம் இவை பார்ப்பது இல்லை. ஆனால் என்னைத் திட்ட அவைகள் தேவைப் படும், மிக அவசியம் என்றால் அவற்றை தெரியப் படுத்துவேன்.
இதை ஏன் எழுதினேன் என்றால் மறைத்து விட்டான் என்று கூற வேண்டாம்.
இப்போது தான் தூத்துகுடியில் சீமான் அவர்களின் உரையை இணையத்தில் கேட்டேன்..
http://www.tamilkural.com/tamilkural/index.php?option=com_content&view=article&id=6209:——-video&catid=135:video&Itemid=337
திராவிடன் என்பது ஊரை ஏமாற்றும் கட்சிகளின் வழிமுறை என்று சீமான் முழங்குகிறார்.. இது பற்றி சீமானுடன் திராவிடதேசியமே தமிழ் தேசியம் என மதிமாறன் விவாதித்து இருக்கிறாரா?
தமிழ் தேசியன் அவர்களுக்கு,
தமிழ் தேசியம் வேண்டாம். திராவிட தேசியம் தான் வேண்டும் என்று இங்கு யாரும் பேசவில்லை. தோழர் சீமானின் கூற்று திராவிடம் பேசி மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிக்கு பொருந்தலாம். எமக்கு அல்ல.
மேலும் திராவிடம், தமிழ் என்னும் சொல்லாடல்கள் வேறு வேறு வரையறையை தருவன என்று சிலர் தவறாக எண்ணுகின்றனர். ‘திராவிடன் என்பவன் தமிழனே’ என்பதை அம்பேத்கரே தன் ஆய்வில் சொல்லியிருக்கிறார். திராவிடன் என்பது ஊரை ஏமாற்றும் கட்சிகளின் வழிமுறை என்று முழங்கும் சீமான் அம்பேத்கரின் ‘திராவிடன் என்பவன் தமிழனே’ என்று கூறும் ஆய்வு நூலை படிக்கவேண்டும். திராவிடன் என்பது ஊரை ஏமாற்றும் கட்சிகளின் வழிமுறை என்று முழங்கினால் அது தமிழன் என்றால் ஊரை ஏமாற்றும் கட்சிகளின் வழிமுறை என்றும் பொருள்படும். இதை பற்றி தோழர் சீமான் அவர்கள் கவனத்தில் கொள்வது நன்று.
திருச்சிகாரன் அவர்களுக்கு,
// நீங்கள் பிராமண எதிர்ப்பு என்பதைத் தவிர வேறு எந்த செயல் திட்டமும் இல்லாதது போலவே தோன்றுகிறது. ஆனால் இப்போது பிராமணர்கள் எதிர்க்கப் பட வேண்டிய அளவுக்கு பெரிய சக்தியாக இல்லாமல் இருப்பதாகவே பெருவாரியான மக்கள் கருதுகின்றனர்.
எனவே நீங்கள் செத்த குதிரையை அடிப்பதாகவே , வீண் முயற்ச்சியாகவே இது தோன்றுகிரது.//
உங்கள் கருத்தின் சாராம்சம் நாம் வெறும் பார்பன எதிர்ப்பை மட்டும் கொண்டுள்ளோம் என்பது. ஆனால் அதில் தவறுள்ளது.
நாம் பார்ப்பன எதிர்ப்பை மட்டுமல்ல பார்பனிய எதிர்ப்பை கொண்டுள்ளோம். ஒடுக்கபடும் மக்களை ஒடுக்கும் ஆதிக்க சாதிவெறியர்களையும் சேர்ந்தே எதிர்க்கிறோம் அதற்கு மூல காரணமான பார்ப்பன மதத்தையும் எதிர்க்கிறோம் என்பதை புரிந்து கொள்ளவும்.
//நீங்கள் போய் பிற ஜாதி மக்களிடம் நாம் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு சாதியை மட்டும் காழ்ப்புனர்ச்சி செய்யலாம் என்று கூறிப் பாரூங்கள். அவர்கள் வர மாட்டார்கள். நாளைக்கு நம்மையே ஆப்பு வைப்பானோ என்று எண்ணுவார்கள்//
சரி நீங்கள் போய் பிற சாதி மக்களை தாழ்த்தபட்டவரின் வீட்டில் சேர்ந்து சாப்பிட அழைத்து பாருங்கள் அவர்கள் சாப்பிடவரமாட்டார்கள்.உங்களை கட்டிவைத்து அடிக்க வருவார்கள். உங்களுக்கு பார்ப்பன சாதிவெறியை பற்றியும், ஆதிக்க சாதிவெறியைபற்றியும் நிதர்சன உண்மை தெரியாது போலும். உங்கள் நண்பர்களை விடுத்து சமூகத்தில் வந்து பாரும்.சாதி உக்கிரம் எவ்வளவு தலைவிரித்து ஆடுகிறதென்று.
//குறிப்பு: நான் சாதி , குலம் , கோத்திரம் இவை பார்ப்பது இல்லை//
இப்படி சொல்பவர்களை பொதுவாக நாங்கள் நம்புவதில்லை. ஏனெனில் நீங்கள் படிக்கும் வரையில், வேளையில் சேரும் வரையில் சாதியெல்லாம் இல்லையென்ற தொணி தெரிந்தாலும் உங்களுக்கு திருமணம் என்று வந்தாலே உங்கள் சாதி சனியன் உங்களுக்குள் எழுந்து அழையா விருந்தாளியாக உங்களினூடே வெளிபடும். அவையெல்லாம் வெளிபடாத அத்தருணத்தில் சொல்லுங்கள் நீங்கள் சாதி குலம் கோத்திரம் பார்ப்பதில்லை என்று. நாங்கள் நம்புகிறோம்.
வேந்தன் அவர்களே,
“பார்ப்பனீய எதிர்ப்பு, ஒடுக்கும் ஆதிக்க சாதிவெறியர் எதிர்ப்பு” –
இந்த பார்ப்பனீயத்தை , ஒடுக்கும் ஆதிக்க சாதிவெறியை மறைந்து போகச் செய்ய உங்களிடம் உள்ள திட்டம் என்ன?
“”மூல காரணமான பார்ப்பன மதத்தையும் எதிர்க்கிறோம்” என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? பிராமணர்களின் சட்ங்குகளையா? தெளிவாகக் குறிப்பிட்டால் நம் கருத்தைக் கூற இயலும்.
//நீங்கள் போய் பிற சாதி மக்களை தாழ்த்தபட்டவரின் வீட்டில் சேர்ந்து சாப்பிட அழைத்து பாருங்கள் அவர்கள் சாப்பிடவரமாட்டார்கள்.உங்களை கட்டிவைத்து அடிக்க வருவார்கள். உங்களுக்கு பார்ப்பன சாதிவெறியை பற்றியும், ஆதிக்க சாதிவெறியைபற்றியும் நிதர்சன உண்மை தெரியாது போலும்//
என்ன வேந்தன், நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்? நான் இப்போது வெளியூரீல் இருப்பதால் உங்களிடம் சவால் விட முடியாத நிலயில் இருக்கிறேன். கால அவகாசம் தேவை! எத்தனை பேர் வந்து சாப்பிட வேண்டும் என்று சொல்லுங்கள், வருகிறொம்.
//குறிப்பு: நான் சாதி , குலம் , கோத்திரம் இவை பார்ப்பது இல்லை
இப்படி சொல்பவர்களை பொதுவாக நாங்கள் நம்புவதில்லை//
சாதி வித்யாசம் பார்க்கக் கூடாது என்றும், சாதியை விட வேண்டும் என்றும் நினைத்தால் வெளியிடாமல் மறைக்கிறார் என்கிறார்கள்.
வெளியிட்டால் சாதீத் திமிர் என்கிறார்கள்.
என்ன செய்ய வேண்டும் வேந்தன் அவர்களே?
மதிமாறன் சார்,
நீங்கள் நிறையப் படிக்கிறீர்கள். எப்படிப்பட்ட கேள்வியையும் அறிவுப் பூர்வமாக சந்திக்கிற திறன் உங்களுக்கு இருக்கிறது. எந்தக் கேள்வியையும் எந்த விமர்சனத்தையும் ஒதுக்காமல், சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு அவர்கள் ஏற்கிற மாதிரி பதில் சொல்லுங்கள். உங்கள் பதில்கள் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் கிடைக்கும். அதில் இரு சாராரும் பயனடைவார்கள்.
எல்லா விதமான கருத்துக்களையும் படிப்பவன் என்பதாலும், ஒரு மூத்த பதிவாளர் என்கிற முறையில் உங்கள் மேல் மதிப்பு இருப்பதாலும் இதை சொல்கிறேன்.
ஒத்த கருத்துடையவர்களை விட எதிர்க்கருத்து இருப்பவர்களிடம் நிறைய தெரிந்து கொள்ளலாம் என்கிற கருத்துடையவன் நான்.
சரிதானே?
http://kgjawarlal.wordpress.com
‘ஆண்டவனே என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நானாக கவனித்துக் கொள்கிறேன்’ என்று யாரோ ஒரு இறை நம்பிக்கையாளர் புலம்பியதைபோலவா நான் புலம்ப முடியும்?////
ரஜினி கூறியது….
ஹ்ம்ம்ம்ம்ம் உங்க கருத்தில் மிகவும் urutiudan irukeenga…
ini nanbargaalai namba vendam…
thangal munbai vila mika sirappaka nadakka valthukal….
nanbargal anaivarum kalanththukolavum…….
yeduthukathu kku Periyar,,, Ambdkar ai ingu payanpaduthi engalukku nanku puriyavaithenga…..
ஆல் இன் ஆல் அழகுராஜாவின் பதிவில் பின்னூட்டமிட்டது
நீங்க என்ன கிழிச்சீங்கன்னு கேக்கணும்னு தோணினாலும்,எங்களை போன்ற இளம்வயது இளைஞர்கள் பகுத்தறிவு, சமூகத்தொண்டென்று இறங்குவதே பெரிய செய்திதான்…
தமிழ்ச்சமூகத்தில் சீழ்ப்பிடித்தார் போல் இருக்கிற ஒற்றுமையின்மையையும், அதற்கு தேவையான சாதி ஒழிப்பு என்னும் மருந்தும் இந்தச் சமூகத்திற்கு தேவை…
அதை வழங்கக்கூடிய மருத்துவர்கள் பெரியாரிய அம்பேத்கரிய கருத்துக்கள்தான்…
இவற்றை மும்பையில் புலம்பெயர்ந்து வாழுகிற தமிழ் இளைஞர்கள் பரவலாக எடுத்துச் செல்வதற்கான முன்னெடுப்புதான் எங்கள் பணிகளின் உள்நோக்கம்….
மீண்டும் சொல்கிறேன்…வெறும் பின்னூட்டங்களுக்கு பதிலெழுதி கிண்டல் செய்து காலத்தை வீணடிப்பதற்கு பதிலாக…நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம் முரண்பாடுகள் தீரும்…
09769137032
அல்லது உங்கள் எண் தரவும் நான் தொடர்பு கொள்கிறேன்
http://allinall01.wordpress.com/2009/09/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88/
நான் தமிழன்தான்,,,,,,ஆனால், தமிழன் என்ற போன்ற போர்வையில் திரியும் பகுத்தறிவில்லா மிருகமல்ல….
இட ஒதுக்கீடு, ஈழம் குறித்த அவரது பார்வை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்…
உங்களுக்கு தேவை என்கிற பொழுது, அவரிடம் நீங்களே கேட்டு தெரிந்து கொள்வதுதான் சிறந்தது…
நீங்கள் மேல வைத்திருக்கும் பின்னூட்டம் என்னை மட்டும் சொல்றியே அவரை சொல்ல மாட்டியா!என்பதுபோல் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது…
ஏற்கனவே சொன்னதுபோல் உண்மையிலேயே உங்கள் வாதத்தின், பதிவின் நோக்கம் உண்மையானதானால்,என்னுடைய அலைப்பேசியில் அழைத்து பேசுங்கள்
மதி எழுதியதை தான் நம்ம ஆல் இன் ஆல் நிரூபிக்கிறார். நம்முடைய அழகு ராஜாவுக்கு அப்படி என்ன தான் கொண்டாட்டமோ? சீமானின் பங்கேற்பு பற்றி மீண்டும் ஒரு முறை குழப்பம் விளைவிக்க பகீரத பிரயத்தனம் செய்கிறார்.
தோழர் மகிழ்நன் அவர்களுக்கு, தெளிவு ஏற்படுத்தியமைக்கு நன்றி. தங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். இவர்களைப் போன்றவர்களின் நோக்கம் தெளிவாக தெரிந்தது தான். இவர்களுடன் என்ன முரண்பாடுகளை களைய வேண்டும் என்று நினைகிறீர்கள்?
வெறும் அவதூறுகளை மட்டுமே அள்ளி வீசுபவர்கள் தங்களை பற்றி நேர்மையாக சுய விமர்சனம் செய்து கொள்ளட்டும்.
//நீங்க வேற யாரு புஸ்தகத்தையும் படிச்சது இல்லைன்னு நினைக்கிறேன்…//
நான் யாருக்கும் அடிமையில்லை,எனக்கடிமை யாருமில்லை என்ற நூல் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா? இல்லையா? இல்லையென்றால் ஏன் என்று விளக்கவும்..
////மகிழநன் அம்பேத்கார் பனியனை அணிய ஆசை படுபவர்களிடம் ஏன் ஒரு இம்மானுவேல் சேகரன் பனியனோ ? அல்லது மதுரை வீரன் பனியனோ அணிய கூடாது ? மதிமாறன் தமிழ்தேசியம் பேசவில்லை என்று உங்களுக்கே தெரியும்..அப்புறம் அவர் இந்திய தேசத்தின் மீது பற்று கொண்டு இந்திய தேசியம் பேசுபவர் என்று உங்களுக்கு புரிகிறது அல்லவா ?////
அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை படிக்கவில்லையா……அம்பேத்கர் இறந்தும் இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும்..அம்பேத்கரை இழிவுப்படுத்துவதின் நோக்கம் என்ன?
ஈழத்தில் நம் உறவுகள் செத்து சிங்கள் இனவெறிக்கு பலியாகி கொண்டிருக்க இங்கே சாதிய வன்மம் கொண்டு தீண்டாமை கண்ணும் கருத்துமாக நடைமுறைப்படுத்துபவன் உண்மையான தமிழனாக இருக்க இயலுமா? தாழ்த்தப்பட்ட சகோதரனை இதற்கு பிறகும் ஒதுக்கி வைக்காமல் தமிழ்த்தேசியத்தில் இணைத்திட, சாதி ஒழிக்கிறோம், சாதியை விடுத்து இன்று முதல் தமிழனாக அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் கூற ஆதிக்க சாதி வெறி ஈனப்பிறவிகளுக்கு கூற இன்றளவும் உள்ளம் பக்குவப்படவில்லையே…..
வலுவான தமிழ்த்தேசியம் கட்டியமைக்கும் லட்சியத்தை ஏந்தி களத்தில் நிற்கும் என் போன்ற இளைஞர்களுக்கு முதல் செயல்திட்டம் சாதிய ஒழிப்புதான்….
//அதாவது உங்கள் கைப்பேசிக்கு போன் செய்தால் தான் தமிழின உணர்வாளர் ..இல்லை எனில் போலிகள் நேர்மை இல்லாதவர்கள் என்று நீங்களே ஒரு முன்முடிவு எடுத்துவிட்டீர்களே என்ன கொடுமை நன்பா…இன் கம்மிங் இலவசம் என்பதற்க்காக இப்படியா….விவாதத்தில் இப்படி எல்லாம் பிட் போட வேண்டாம் நன்பா…//
என் கைப்பேசிக்கு அழைக்கமுடியாவிட்டால், நான் அழைத்துவிட்டுப்போகிறேன்….இணைய நண்பர்கள் எத்தனை பேரிடம் கொள்கை ரீதியாக, ஈழப்பிரச்சினை தொடர்பாக உரையாடியிருப்பேன் என்று இணைய நண்பர்களுக்கு தெரியும்…
மதிமாறன் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக பேசுவதாக நான் கருதவில்லை….தமிழ்த்தேசிய கொள்கை வடிவமைப்புக்கு உள்ளீடாக சாதிய மறுப்பை வலியிருத்துகிறார்…வலுவாக அவ்வளவுதான்….
கூட்டங்களில் தமிழனாக அணிதிரண்டு, வீடு சென்ற பின் அதே சாதிய வழக்கத்தை கடைபிடிப்பது வலுச்சேர்க்குமா,என்ன?
நம் இளைஞர்கள் மத்தியில் உள்ள சாதியை..தமிழ்த்தேசியத்தின் மிக முக்கியமான தேவைக்கருதி..சாதியை விடொழிக்க கூறுவது நியாயமான கோரிகையாக படவில்லையா?
தாழ்த்தப்பட்ட சகோதரர்கள், தமிழ்த்தேசியத்தின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட தோழர்கள்….தமிழ்த்தேசியத்திற்காக களமாடும் இளைஞர்கள் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாகும் அவர்களுக்கு ஏற்படும் வலியை கொஞ்சம் அவர்களின் இடத்திலிருந்து சிந்தித்து பாருங்கள்….அவர்களின் கோரிக்கையின் நியாயம் புரியும்
மேற்கண்டவை………..ஆல் இன் ஆல் இன் வலைப்பூவில் பதிவிட்டது
போங்கையா நீங்களும் உங்க பெரியாரும், தமிழ் தேசியமும், புரட்சியும், கருத்துக்களும். மலையாளத்துக்காரனை பாருங்கள்! எவ்வளவு சாமர்த்தியமாக போகிற இடத்தில எல்லாம் பிழைத்தக்கொள்கிறான். பெரியார் என்ற கன்னடக்காரனைப்பாருங்கள் எவ்வளவு திறமையாக வந்த இடத்தில ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டான். ஆனால் போகிற இடத்திலே எல்லாம் புரட்சி செய்கிறேன் என்று தானும் அடி வாங்கி மற்றவர்களையும் அடிவாங்க செய்வது, கடைசியில் ஒன்றுமே கிடைக்காமல் வெறும் கையுடன் திரும்புவதுதான் தமிழரின் சாபக்கேடு. நீங்கள் எல்லாம் கன்னடக்காரனுக்காகவும், தெலுங்குக்காரனுக்காகவும் தன் தமிழனையே காட்டிக்கொடுக்கும் தொண்டைமான்கள். நான் தமிழகத்தில் காண்பதெல்லாம் கன்னடனும், தெலுங்கனும்தான் இன்று தமிழரசன், தமிழழகன் என்றெல்லாம் பெயர் வைத்துக்கொண்டு அலைகிறார்கள்.