தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

mathi1

மிழ்த்தேசியவாதிகள் சிலர், “பார்ப்பனர்களால் என்ன பிரச்சினை அவர்கள் நல்லவர்கள்தான். திராவிடம் பேசி தமிழர்களை வீணாடித்துவிட்டார்கள் –  திராவிடம் பேசுபவர்கள்தான் நமக்கு எதிரி” என்று தொடர்ந்து, பேசிவருகிறார்கள்.

பார்ப்பனர்களோ மறந்தும் தமிழ்த்தேசியம் பேசமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் அதற்கு நேரடி எதிரானவர்கள். இந்திய தேசியவாதிகள். அனேகமாக குறிப்பிட்ட ஒரு ஜாதிக்காரர்களின் ஒட்டுமொத்த உணர்வும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்றால், அது பார்ப்பனர்களாக மட்டும்தான் இருப்பார்கள்.

தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள், உருதை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியத் தமிழர்கள் கூட தமிழ்த்தேசியத்திற்கு தீவிர ஆதரவாளராக இருக்கிறார்கள். ஈழபிரச்சினைக்காக தன்னை அர்பணித்து போராடியும் இருக்கிறார்கள்.

ஆனால், தமிழை ‘தாய்மொழியாக’ கொண்ட பார்ப்பனர்களோ, இந்தியத் தேசியத்திற்குதான் ஆதரவளராக இருக்கிறார்கள்.

‘மற்ற ஜாதியில் இல்லையா?’ என்று கேட்கலாம். இருக்கலாம்.

அது,  தனிநபரின் கொள்கைதானே தவிர அந்த ஜாதியை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களின் உணர்வு என்று சொல்லமுடியாது.

தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்திய தேசியத்திற்கும் ஆதரவாக இல்லை,  தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவாக இல்லை. அல்லது அவர்களின் வாழ்க்கை நிலை இதுபற்றி எல்லாம் தெரிந்து கொள்ளும் சூழலில் இல்லை. ‘இன்றைய பொழுது எப்படிடாபோகும்? ’என்கிற பொருளாதார, சமூக நெருக்கடிகளின் துயரங்களில் சிக்கி இருக்கிறார்கள்.

ஆனால், பார்ப்பனர்களின் நிலை இப்படி இல்லை. பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கிற ஒரு ஏழை பார்ப்பனரின் கருத்துகூட இந்திய தேசியத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கிறது.

ஆனாலும், தமிழ்த்தேசியவாதிகள்-பெரியாரை அல்லது திராவிடத்தை எதிர்ப்பதுபோல் பார்ப்பனியத்தை எதிர்ப்பதில்லை என்பது மட்டுமல்ல, பார்ப்பனியத்தின் மீது கள்ளக்காதலும் கொள்கிறார்கள்.

தந்தை பெரியார், ‘சூத்திரனாக இருக்காதே, சுயமரியாதையோடு இரு’ என்றார்.

“அதெல்லாம் முடியாது. நான் சூத்திரனாகத்தான் இருப்பேன்” என்று அடம்பிடிக்கிறார்கள், இவர்கள்.

இந்த சூழலில், 20122007 அன்று எழுதிய ஒரு கேள்விக்கான பதிலை ‘அவர்களுக்கு’ காணிக்கையாக்குகிறேன்.

தேசியத்தை வலியுறுத்துகிறவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களாகவே இருக்கிறார்களே?

ஜான்சன்.

எதை ஒன்றை ஒருவர், எந்த விதமான அரசியல் காரணங்களும் இன்றி, போலியான ‘சப்பைக் கட்டுகளோடு’ தீவிரமாக வலியுறுத்திகிறாரோ, அதில் அவர் தனிப்பட்டமுறையில் லாபம் அடைபவராக இருப்பார். இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

அதன் பொருட்டே, அதை நேரிடையாக சொல்லாமல், தனது ‘சமூக அக்கறையின்’ வாயிலாக ‘தேசப்பற்றின்’ மூலமாக ‘உயர்ந்த ரசணை’யின் அடிப்படையில் வலியுறுத்துவார்.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

“அகமதாபாத் மாமா, சிம்லா சித்தி, அய்தராபாத் அத்தை, பம்பாய் மன்னி, விஜயவாடா பெரியப்பா, டெல்லி கணேஷ், கல்கத்தா விஸ்வநாதன், பாம்பே ஞானம் – இப்படி இந்தியா முழுக்க சொந்தக்காரங்க இருக்கிறவங்க ‘தேசியம்’ த்தை வலியுறுத்தி பேசறதுல அர்த்தமிருக்கு.

மேலத் தெரு பெரியப்பா, மூணாவது தெரு மூலி சித்தப்பா,  சின்னத் தெரு குள்ளச்சி அத்தை, கீழத் தெரு மொண்டி மாமா, குன்னுமேடு கோவிந்த மாமா  இப்படி நாலு தெருவுக்குள்ளேயே நம்ம சொந்தம் முடிஞ்சிபோது.

இப்படி இருக்கிற நம்மளையும் தேசியத்தை பேசச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

நம்ம சொந்தக்காரங்களுக்கு டெல்லி ன்னா, எருமை மாடுதான் தெரியும். அவுங்களுக்கு எப்படி தேசியத்தை புரியவைக்கிறதுன்னுதான் புரியலை.

***

‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

42 thoughts on “தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

 1. அட உங்க காமெடிக்கு அளவில்லாம போச்சு! நீங்களே சொல்லீட்டிங்க தமிழ்த்தேசியவாதிகள் ”சிலர்”ன்னு. ஆமா
  அவங்க உண்மையான த.தே.வா வான்னு பார்க்கணும்?
  த.தே.வாதிகள் “பலர்” பெரியாரை தமிழ்த்தேசியத்தின் முதல்புள்ளியாகப் பார்க்கிறார்களே.. அதுக்கு என்ன சொல்லப் போறீங்க? இல்ல அதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதா? ஏன் வி.சி. தலித்தியர்கள் பலர் பெரியாரை முற்போக்காளாரப் பார்க்கிறாங்களா? பெரியாரை எதிர்க்கும் புள்ளிகள் பொதுவுடைமைவாதிகளாவும் இருக்காங்க, தலித்தியராவும் இருக்காங்க, வெவ்வேறு கொள்கைகளிலும் இருக்காங்க. அதுக்காக
  தலைப்ப இப்படி போடுவீங்களா “தலித்தியம் + தமிழ்த்தேசியம் + பொதுவுடமை + … = பெரியார் எதிர்ப்பு” ? எளிய உண்மை இது! எதுக்கு இந்த முத்திரை குத்தும் வேலை! மத்தப் படி உங்க காழ்ப்புணர்ச்சி பலமுறை உங்களாலே இங்கே அம்பலப் பட்டது தானே! இது இன்னொரு சாட்சி!

 2. பார்பனர்கள் எது செய்தால் ஆதாயம் கிடைக்குமோ அதைதான் செய்வார்கள், தன் பிழைப்புக்கு ஆபத்து வராமல் மற்றவரை தனக்கு கீழ் வைத்துக்கொள்ள எதை செய்துகொண்டே இருக்கவேண்டுமோ அதை செய்துகொண்டே இருப்பார்கள்.அதற்காக எதையெல்லாம் விட்டுகொடுக்க வேண்டுமோ அதையெல்லாம் விட்டும் கொடுபார்கள்.(மற்றவர்கள் அதை ஏற்று கொள்ளவே வெட்கபடுவார்கள்). தமிழ் தேசியத்தை ஆதரிக்காத எவனும் தமிழ்நாட்டில் பிழைக்க முடியாது எனும் நிலை ஏற்பட்டால், பார்பனர்கள் தான் முதலில் நிற்பார்கள் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாய்! இது தெரியாத அறிவுஜீவிகள் அவர்களை கள்ள பார்வை பார்பதற்கு அடிமைதனமே காரணம்.

 3. இதைச் செய்தால் தான் பிழைக்கலாம் என இருந்தால் பார்ப்பனர் தமிழ்த் தேசியத்துக்கு மாத்திரம் ஆதரவாய் நிற்க மாட்டார்கள்… திராவிடம், தலித்தியம், பொதுவுடமைவாதம், அம்பேத்காரியம் என எது வருதோ அதற்கு ஆதராவாய் நிற்பார்கள். ஏனைவற்றை தழுவிக் கொள்ள அவர்களுக்குப் பெரிய தடை இருக்காது, ஆனால் இரு இசங்களைத் தவிர, தலித்தியத்தை தழுவினால் அவர்கள் ஊட்டி வளர்த்த சாதி அமைப்புக்குத் துரோகம். தமிழ்த்தேசியத்தைத் தழுவினால் அவர்கள் கொண்டாடி வரும் சமஸ்கிருதத்துக்கு துரோகம்.
  அவர்களால் தமிழைப் பாராட்ட முடியுமே தவிர, சமஸ்கிருதம் என்கிற அரைச் செயற்கை மொழியை வெறுத்து தமிழ்த் தேசியத்தை ஆதரிக்க முடியாது.

 4. சகோதரர் மதிமாறன், அவருடைய வலைப் பூவில் இடும் பதிவுகளில் இருந்தே அவரின் முன்னுரிமைகள் என்ன, சிந்தனைத் தளம் என்ன, அவருடைய செயல் முறை என்ன என்பதை எளிதாக வூகிக்க முடியும்.

  சகோதரர் மதிமாறனின் முன்னுரிமை, சுய பாதுகாப்பு தான் என்பதை தெளிவாக அறியலாம். அதில் தவறும் இல்லை.
  இந்த உலகத்தில் எந்த மனிதன் தன் பாதுகாப்பில் ரிஸ்க் எடுக்க, பிரச்சினையில் சிக்க தயாராக இருக்கிறான்?

  எனவே எல்லா உயிர்களுக்கும் உள்ள அடிப்படை உள்ளுணர்விலேயே மதிமாறன் செயல் படுகிறார். முக்கியமான பிரச்சினைகளின் மையப் பகுதிக்கு செல்லவே மாட்டார். அப்படியே ஓரமாக நின்று விசில் அடித்து விட்டு சென்று விடுவார்.

  இப்போது பாருங்கள் இந்த விடயத்தில் அதாவது

  இந்திய தேசியமா, தமிழ் தேசியமா என்ற விடயத்தில் வே. மதிமாறனின் கருத்து என்ன?

  வே. மதிமாறன் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

  இதில் வே. மதிமாறனின் நிலைப் பாடு என்ன? பதில் சொல்வாரா?

 5. திருச்சிக்காரன், மதிமாறன் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை விமர்சிக்கும்போது மகிழ்ச்சியாக வந்து அதில் பின்னூட்டம் போட்டு வேறு வேறு தலைப்புகளில் விவாதித்தீர்கள். இப்போது பார்ப்பனர்களை திட்டி போட்டவுடன்…. உங்களுக்கு கோபம் வருகிறது.

  மேல பார்ப்பனர்களின் தேசியத்திற்கான காரணம் என்ன என்று சொல்லப்பட்டிருக்கிறது… அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  உங்களைப்போலவே RV என்ற ஒரு பார்ப்பனர் (வினவில் தொடர்நது பின்னூட்டம் போடுபவர். பார்ப்பன பாரதியை பற்றி கேள்வி கேட்டதால், இங்கிருந்து ஓடியவர்) இருக்கிறார். அவரும் இப்படித்தான், மற்றவற்றை பற்றி எழுதும்போது, மகிழ்ச்சியாக வந்து கருத்து சுறுவார். பார்ப்பனர்களை திட்டினால் உடனே இப்படித்தான் கேள்வி கேட்பார்.

  எவ்வளவு நல்லவர் மாதிரி நடந்துகிட்டாலும் பார்ப்பனர்களை நம்ப கூடாது என்பதற்கு நீங்களும், RV யும் நல்ல உதாரணம்.

 6. இந்தியாவை அண்டிப்பிழைக்கும் நாம் இந்தி’ய தேசியத்துக்கு ஆதரவாக இருப்பதுதானே முறை ?

  பார்ப்பணர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை இருக்காதே என்று சொல்ல நீங்கள் யார் ? அது அடிப்படை கருத்துரிமையை எதிர்ப்பது அல்லவா ?

  நீங்கள் இந்திய தேசியத்துக்கு எதிராக என்ன செய்தீர்கள் அல்லது செய்துவிட முடியும் ? இந்திய கடவுச்சீட்டை வைத்துத்தானே நாலு நாடுகள் சுற்றமுடியும் ? அல்லது தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக அதனை சரண்டர் செய்துவிடலாமா என்றும் சொல்லுங்கள்.

  இந்த கருத்தாக்கம் எல்லாம் குறுகிய கண்ணோட்டம் அய்யா. இன்னும் 200 ஆண்டுகளில் உலகமே ஒரே தலைமையின் கீழ் வரும். ஐநா சபை முக்கிய இடம் வகிக்கும். நாடு என்ற கட்டமைப்பே இருக்காது. யாகாவா முனிவர் சாகும் முன் எனக்கு மின்னஞ்சல் செய்தார்.

 7. //தமிழ்த்தேசியவாதிகள் சிலர், “பார்ப்பனர்களால் என்ன பிரச்சினை அவர்கள் நல்லவர்கள்தான். திராவிடம் பேசி தமிழர்களை வீணாடித்துவிட்டார்கள் – திராவிடம் பேசுபவர்கள்தான் நமக்கு எதிரி” என்று தொடர்ந்து, பேசிவருகிறார்கள்.//

  தமிழ் நாட்டில் தனி தமிழ் நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் கொளத்தூர் மணி, நெடுமாறன் போன்றோர்களா “திராவிடம் பேசி தமிழர்களை வீணாடித்துவிட்டார்கள்”. தயவுசெய்து இந்த சிலர் என்று நீங்கள் கூறும் நபர்களை பட்டியல் போட்டு அவர்கள் எத்தனை முறை பிரிவினையை தூண்டியதாக கைதுசெய்யபட்டார்கள் என்பதையும் அட்டவனைபடுத்தவும்.

  இந்த “சிலர்” “பலர்” என்று சினிமா கிசு கிசு வாக்கில் எழுதாமல் நேரடியாக சொல்லவும்.

 8. சகோதரர் சுந்தரம் அவர்களே,

  //எவ்வளவு நல்லவர் மாதிரி நடந்துகிட்டாலும் பார்ப்பனர்களை நம்ப கூடாது என்பதற்கு நீங்களும், RV யும் நல்ல உதாரணம்//

  என்னிடம் நீங்கள் என்ன அப்படி நம்பிக் கெட்டு விட்டீர்கள்?

  நான் பைனான்ஸ் கம்பெனி வைத்து, உங்க துட்டை ஏமாற்றினேனா?

  தமிழினக் காவலனாக மேடையில் விரத நாடகமெல்லாம் போட்டு, இறுதியில் பரிபூரண சரணாகதி அடைந்தேனா?

  //திருச்சிக்காரன், மதிமாறன் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை விமர்சிக்கும்போது மகிழ்ச்சியாக வந்து அதில் பின்னூட்டம் போட்டு வேறு வேறு தலைப்புகளில் விவாதித்தீர்கள். இப்போது பார்ப்பனர்களை திட்டி போட்டவுடன்…. உங்களுக்கு கோபம் வருகிறது//

  முந்தைய கட்டுரையில் சென்று படித்துப் பாருங்கள், ஜெயேந்திரரையும், சந்திர செகரேந்திரரையும் எப்படி விமரிசித்து
  எழுதியுள்ளேன் என்று பாருங்கள்.

  நான் ஓடவில்லை. நின்று எழுதுகிறேன்.

  //மேல பார்ப்பனர்களின் தேசியத்திற்கான காரணம் என்ன என்று சொல்லப்பட்டிருக்கிறது… அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

  பார்ப்பனர்களுக்கு மட்டும் தான் டில்லியிலும் , மும்பையிலும் உறவினர்கள் இருக்கிறார்களா? டில்லியில், மும்பையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் பார்ப்பனரா?

  பார்ப்பனரல்லாத பிற தமிழ்ருக்கு இந்தியாவின் பிற நகரங்களில் உறவினர்கள் இல்லையா? இந்தியாவின் பிற நகரங்களில் வசிக்கும் தமிழர்களைல் பார்ப்பனர் எத்தனை பேர், பார்ப்பனர் அல்லாதார் எத்தனை பேர்?

  பார்ப்பனரின் உறவினர்கள் தில்லியிலே , மும்பையிலே வசித்தால் இங்கெ தமிழ் நாட்டில் இருக்கும் பார்ப்பனருக்கு என்ன பிரச்சினை?

  பார்பனரின் உறவினர்கள் சிங்கப்பூரில், அமேரிக்காவில், தென் ஆப்பிரிக்காவில் கூடத் தான் வசிக்கிறார்கள்.

  சகோதரர் வே. மதிமாறன் ஒரே நேரத்தில்,

  தமிழ் தேசிய வாதிகளும் திருப்தி அடையும் வண்ணமும்,

  அதே நேரத்தில் கலைங்கரின் பின்னால் அணி வகுக்கும் வகையிலும்,

  அதே நேரம் சட்டப் பிரச்சினை, நடவடிக்கை என்று ஒன்றும் வராத வகையிலும்,

  தமிழ் தேசியம், இந்திய தேசியம் இந்த இரண்டையும் பற்றித் தன்னுடைய நிலைப் பாடு என்ன என்று தெரிவிக்காமலேயே ,

  எந்த சைடு எபெக்டும் இல்லாத,

  பார்ப்பன எதிர்ப்பு என்ற பாதையில் சுளுவாக வண்டி ஓட்டுகிறார்.

  நீங்களும் அவருடன் ஜோதியில் கலப்பதால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை!

  நான் ஓடவில்லை. நின்று எழுதுகிறேன்!

 9. திருச்சி,
  உங்களுககு பார்ப்பன பாசம்னு சொன்ன இல்லன்னு சொல்றீங்க…. பிறகு சொன்ன எழுத்து காயறதுக்கு முன்னமேயே… மீண்டும் பார்ப்பன பாசத்தோடு எழுதி முடிக்கிறீங்க….
  என்னத்த் சொல்றது.? எவ்வளவு சொன்னாலும் உங்களுக்கு புரிய போறதில்ல, புரிஞசாலும் நீங்க பார்பபனராதான் நடந்துப்பீங்க.

 10. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த பார்ப்பனர்களைப் பார்க்க முடியாது. போராட்டத்தை எதிர்த்த துக்ளக் சோ, இந்து ராம், அதிமுக ஜெயலலிதா, கோமாளி சுப்பிரமணியன் சுவாமி எல்லோரும் பார்ப்பனர்கள் என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. தமிழ்த் தேசியத்தில் அவர்கள் குளிர்காய முடியாது. இந்திய தேசியத்தில் அப்படிக் குளிர் காயமுடியும். வடநாட்டுப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களை மதிப்பதில்லை என்பது வேறு கதை. தமிழீழத்தில் வாழும் பிராமணர்களும் தமிழர்களோடு திருமணத் தொடர்புகள் வைத்துக் கொள்ளாமல் தனித்தே வாழ்கிறார்கள். மறுபுறம் அவர்களது தமிழ்த் தேசிய எதிர்ப்பு தமிழ்நாடு போல் கூர்மையாக இல்லை. சிலர் ஆதரிக்கிறார்கள். பலர் மதில் மேல் பூனையாக இருந்து விடுகிறார்கள்.

 11. //உங்களுககு பார்ப்பன பாசம்னு சொன்ன இல்லன்னு சொல்றீங்க…. பிறகு சொன்ன எழுத்து காயறதுக்கு முன்னமேயே… மீண்டும் பார்ப்பன பாசத்தோடு எழுதி முடிக்கிறீங்க….//

  சுந்தரம் அது தான் பார்பனீயம்.

 12. முண்டம் மதிமாறன்,

  பெரியார் = வெறி நாய்.

  பெரியாரிஸ்ட் = சொறி நாய் + வெறி நாய்.

 13. சகோதரர் சந்தரம் அவர்களே,

  நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் அளித்திருக்கிறேன்.

  உண்மையை எடுத்து விளக்கினால் அது பார்ப்பனப் பாசமா?

  பார்ப்பனப் பாசம் உள்ள யாரும் சந்திர சேகரேந்திர சரஸ்வதியை விமரிசிப்பது இல்லை. நானோ அவரையும் விமர்சித்து எழுதியுள்ளேன்.

  நீங்கள் விருபுவது போல எழுதினால் உங்களிடம் இருந்து எனக்கு பார்ப்பனப் பாசம் நீங்கியவர் என்ற பட்டம் கிடைக்கும்.

  ஆனால் நான் உண்மையை எந்த வித தயக்கமும் இன்றி எழுதுபவன்.

  நான் எழுதியதை மேற்க்கோள் காட்டி – இதில் இந்த தவறு என்று எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  ஆனால் நீங்கள் நான் கூறிய கருத்தைப் பற்றி விவாதிக்காமல் எனக்குப் பட்டம் கட்டுகிறீர்கள்.

  ஆனாலும் நம்மை உரிமையோடு திருச்சி என்று அழைத்து பதில் அளித்த வகையிலே நன்றி!

 14. சகோதரர் சந்தரம் அவர்களே,

  பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையிலே,

  மையக் கருத்தான- இந்திய தேசியமா, தமிழ் தேசியமா – என்கிறதைப் பற்றி சகோதரர் வே. மதிமாறன் எந்த விதக் கருத்தையும் கூறாமல்,

  பார்ப்பன எதிர்ப்பு என்கிற கருத்தைக் காட்டி விலக்கி விடுகிறார்.

  நீங்களும் அதே வகையிலே நான் கூறிய கருத்தை விட்டு விலகி, எனக்கு பார்ப்பனப் பாசம் இருக்கிறதா, எனக்கு பாயசம் சாப்பிடப் பிடிக்குமா என்ற வகையிலே எழுதுகிறீர்களே!

  சகோதரர் பென் அவர்களும் இதுதான் சாக்கு என்று கூட்டத்திலே தரும அடி போடுவதைப் போல, நாலு வாங்கு வாங்குகிறார். நல்லது என் மேல் ஆணியை இரக்குவது அவருக்கு மகிழ்ச்சியை தருமானால், அந்த வகையிலே எனக்கும் மகிழ்ச்சியே.

  நான் மீண்டும் கேட்பது இதுதான்.

  இந்திய தேசியமா, தமிழ் தேசியமா என்ற விடயத்தில் சகோதரர் வே. மதிமாறனின் கருத்து என்ன?

  சகோதரர் வே. மதிமாறன் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

  இதில் சகோதரர் வே. மதிமாறனின் நிலைப் பாடு என்ன? பதில் சொல்வாரா?

 15. மாதவராஜ் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டம்

  எதிர்க்கப்பட வேண்டியது பார்ப்பனீயம் தான், மாறாக அந்த சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே ஒருவரை எதிர்க்கக்கூடாது என்கிற உங்கள் கூற்று முற்றிலும் சரி ஆனால் யார் அப்படி எதிர்க்கிறார்கள் ? கமலஹாசன் பார்ப்பன சமூக‌ பின்னணி கொண்டவர் என்பதாலேயே அவரை எதிர்ப்ப‌வர்கள் யார் ? அல்லது பாரதியை அவ்வாறு எதிர்ப்பவர்கள் யார் ?

  நீங்கள் கூறுவது போல‌ கமலஹாசனை ஒரு மாபெரும் கலைஞன் என்று அவருடைய‌ ஒரு பகுதியை மட்டும் (நடிப்பு,அதிலும் அவர் சிவாஜிக்கு ‘வாரிசு’) வைத்துக்கொண்டு வாழ்த்த முடியாது. அவ்வாறு செய்தால் த‌ன் காலத்தின் மாபெரும் கலைஞனாக திகழ்ந்த,கலையை தன் மக்களுக்காகவே(மக்கள் என்றால் உழைக்கின்ற மக்கள்) வடித்தெடுத்த‌ சாப்ளினுக்கும் கமலஹாசனுக்கும் வேறு பாடு இல்லாமல் போய் விடும். அவரும் கலைஞன் இவரும் கலைஞன் என்றாகி விடும் ! அது சரியா ?

  கமலஹாசனுடைய பார்ப்பனச்சார்பு பளீர் என்று பருண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை,அது மிகவும் சூக்குமமானதாக இருக்கலாம், சில சமயம் பெரியார்,கம்யூனிசம் என்று அவருக்கான‌ ஊறுகாயுடன் முற்போக்கும் கலந்திருக்கலாம்,அதாவது பாரதியை போல. நான் கமலஹாசனை ஒரு ‘பார்ப்பன பாசிஸ்ட்’ என்று கூறவில்லை.பாசிச கருத்தை பேசுபவனெல்லாம் பாசிஸ்ட் இயக்கத்தில் இருக்க வேண்டியதுமில்லை.ஆனால் கலஹாசனுக்கு தனது பார்ப்பன சமூகத்தின் மேண்மை பற்றிய பெருமை இருக்கிறது.

  பாரதி பற்றி இனியும் சொல்வதற்கென்ன இருக்கிறது ? சொல்லியும் ஆகப்போவது ஒன்றுமில்லை.அனைத்தும் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும் எனவே பாரதி பற்றிய கதையை இத்துடன் விட்டுவிடுகிறேன்.

 16. திருச்சி,
  உங்களை பார்ப்பன எதிர்ப்பாளர், பெரியார் கொள்கையாளர் என்று சொல்ல வேண்டுமா?

  அப்படி சொன்னால்….. படிக்கிற மற்றத் தோழர்கள் என்னை அசிங்கமாக திட்டமாட்டார்களா?

 17. திராவிடம் என்பது தமிழிலிருந்து பிரிந்த மலையாளம் கன்னடம் தெலுங்கு துளு கொங்காணி என ஒரு தொகுதி மக்களை உள்ளடக்கியது.. இங்கு தமிழனை அடிக்கும் போது மற்ற திராவிடகழிசடைகளுக்கு எவனுக்கும் வலிப்பதில்லையே!.. அடிப்பவனே அவனாக தானே உள்ளான்.. எனவே தமிழன் திராவிடனாக இருந்தாலும் அதைபுறந்தள்ளி தமிழ்தேசியத்தினை முன்னிறுத்துதல் வேண்டும். அடுத்த திர்வாவிடன் மலையாளி கன்னடன் உட்பட தமிழனை அடிக்கும் போது அவர்களுக்குள் இவன் தாழ்த்தபட்டவன் நம் சாதி.. என விட்டு வைப்பதில்லை அவனுடைய கண்ணுக்கு தமிழன் என்ற இனமே எதிராக நிற்கிறது..
  மேலும் தமிழனல்லாத கச்சாடைகள் இங்கு கட்சி ஆரம்பித்து வண்டி ஓட்டவே திராவிடம் என்ற சொல் தேவைபடுகிறது.. எனவே சாதி ஒழிப்பை ஒருபுறமும் தமிழ் தேசியத்தினை கட்டமைப்பதை மறுபுறமும் எடுத்து செல்வதே தமிழ்தேசியர்களின் கடமை ஆகிறது….அதுவே தமிழன் உருப்பட வழி

 18. சகோதரர் சுந்தரம் அவர்களே,

  //திருச்சி,
  உங்களை பார்ப்பன எதிர்ப்பாளர், பெரியார் கொள்கையாளர் என்று சொல்ல வேண்டுமா?

  அப்படி சொன்னால்….. படிக்கிற மற்றத் தோழர்கள் என்னை அசிங்கமாக திட்டமாட்டார்களா?//

  உங்கள் தோழார்கள் திட்டுவார்களா என்பது எனக்குத் தெரியாது.

  ஆனால் நான் பார்ப்பன எதிர்ப்பாளர் என்பதோ , பெரியார் கொள்கையாளர் என்பதோ சரியல்ல என்று நானே சொல்கிறேன்.

  நான் பார்ப்பன எதிர்ப்பாளருமல்ல.

  நான் பெரியார் கொள்கையாளருமல்ல.

  நான் பகுத்தறிவாளன் அல்லது குறைந்த பட்சம் பகுத்தறிவாளனாக இருக்க முயற்சி செய்பவன் என்பதை உறுதியாகச் சொல்லுவேன்.

  என்னுடைய கொள்கை பகுத்தறிவும், சமத்துவமும் தான்.

  ஒரு பகுத்தறிவாளன் ஒரு போதும் பிறர் கூறிய கருத்துக்களைக் கேட்டு அதோடு தன்னுடைய சிந்தனையை முடித்துக் கொள்ள மாட்டான்,

  ஒரு பகுத்தறிவாளன் தொடர்ந்து சிந்திப்பான்.

  ஒரு பகுத்தறிவாளன் தன்னுடைய சிந்தனைகளின் தளத்தை குறுக்கு வாட்டகவும், நெடுக்கிலும் விரிவு படுத்துவான்.

  நான் பெரியாரின் கருத்துக்களில் இருந்து பல விடயங்களைக் கற்றவன் தான்.

  நான் வள்ளுவர், கிருட்டினர், புத்தர், சாக்ரடீஸ், இயேசு, பட்டினத்தார், அப்பர், ஆதி சங்கரர், முஹமது நபி,தியாகராசர், விவேகானந்தர், மார்க்ஸ், பாரதி, அம்பேத்கர், காந்தி, பெரியார் ….இன்னும் பலரிடமும் பல விடயங்களை கற்றவன். ஆனால் யாரோடும் என்னுடைய சிந்தனையை நிறுத்துவதில்லை.

  பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?

  “The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

  “அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.

  பகுத்தறிவாளர் என்பவர் யார்?

  இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.

  சரிதானே ?

  பெரியார் சிந்திப்பவன் தேவையில்லை, நான் கூறுவதைக் கேட்டால் போதும் என்கிற நிலைப் பாட்டை எடுத்தார்.

  ஆனால் நாம் சிந்திக்கிரவராக இருக்கிறோம்.

  பெரியார் கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்.

  ஆதி சங்கரர் கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்.

  புத்தர் கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்!

  இயேசு , காந்தி கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்!

  கிருட்டினர் , கீதை கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்!

  கேட்க்கப் படும் ஒவ்வொரு க‌ருத்தும் உண்மை என்னும் உரை க‌ல்லில் சோத‌னை செய்ய‌ப் ப‌ட்டே அங்கீக‌ரிக்க‌ப் ப‌டும்- உண்மை அல்லாத‌து வில‌க்க‌ப் ப‌டும்.

  “ச‌த்ய‌ம் ஏவ‌ ஜ‌ய‌தெ, உண்மையே வெல்லும்” என்கிற‌ ப‌குத்த‌றிவு கொள்கை அடிப்ப‌டைக் கொள்கையாகும்.
  எங்க‌ள் நிலைப் பாடு, செய‌ல் பாடு இதுதான்.

  நான் பார்ப்பன எதிர்ப்பாளருமல்ல!

  நான் யாரையும் வெறுக்கவில்லை, பார்ப்பனர்கள் உள்ளிட்ட எல்லா மக்களையும் நல்லெண்ணத்தின், அன்பின் அடிப்படையில் சமத்துவ சமூகமாக இணைப்பதே என் நோக்கம்.

  அன்பும், பிறரை மதிக்கும் பழக்கமும் , நிதானமும், கட்டுப்பாடும், நாகரீகமும் இல்லாத மக்கள் தொகுப்பை வைத்து சாதிகள் இல்லாத சமத்துவம் சமுதாயம் உருவாக்க முடியாது.

  வெறுப்புக் கருத்துக்களை வைத்து அல்ல, அன்பை வைத்துதான் சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியும்.
  எனவே நம்முடைய திட்டம் மக்களை செம்மைப் படுத்துவது.

  சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சாதி வெறி சுவரை உடைப்பது அரசின் கையில் உள்ளது.

  மக்களின் மனங்களில் உள்ள சாதி வெறி சுவரை உடைப்பதே நம் பணி!
  மக்கள் மனதில் உள்ள சுவர் உடையாத வரை செங்கல் சுவர்கள் உடைந்தும் நிலையான பலன் இருக்காது.

  அரசாங்கத்தின் கையிலே சட்டமும், ஆட்சியும், அதிகாரிகளும், புல்டோசரும் உள்ளன.

  நம்மிடம் அன்பும், நாகரீகமும் தான் உள்ளன. நீங்களும் நானும் தான் இருக்கிறோம்.

  அரசாங்கத்தை நாம் குறை கூறவில்லை. நாம் நம் பங்கை செய்கிறோம்.

  நீங்கள் என்னைப் பெரிய பகுத்தறிவு வாதி என்றோ, சாதா பகுத்தறிவு வாதி என்றோ சமத்துவ வாதி என்றோ ஒத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. அது என் நோக்கமும் அல்ல.

  கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்,

  எந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதற்க்கு முக்கியத்துவம் குடுங்கள்,

  என்னுடைய கருத்துக்களில் குறை இருந்தால், தவறு இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள்,

  நான் முக்கியப் பிரச்சினைகளை விட்டு விலகி எழுதினால் அதை சுட்டிக் காட்டுங்கள் என்பதே என் நிலைப் பாடு.

 19. //நான் பகுத்தறிவாளன் அல்லது குறைந்த பட்சம் பகுத்தறிவாளனாக இருக்க முயற்சி செய்பவன் என்பதை உறுதியாகச் சொல்லுவேன்.

  என்னுடைய கொள்கை பகுத்தறிவும், சமத்துவமும் தான். //

  மூன்றே வரியில் நீங்களே உங்கள் கருத்திற்கு முரணாக எழுதுகிறீர்கள். அப்புறம் என்னத்த சொல்றது.

  //“The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!//

  உண்மை தான் ஆனால் அது சமூகம் சார்ந்தாக இருக்க வேண்டும். வெறும் நான் அறிவாளி, உன்னம் தெரிஞ்சிக்க வேண்டும் மறுமொழி நறைய எழுதனுன்னு நினைச்சா அது தெண்டம். சு.சாமி என்று ஒரு கழிசடை கிட தான் நறைய படிச்சி இருக்கான் அதுனால என்ன பயன். சுய அபிமானத்தில் சமூகத்தை அளப்பது என்பது முதலாவது மட தனம் அப்புறம் அது சுயநலம் நம்ம கமல்ஜி மாத்ரி. நீங்க நறைய படிச்சி இருக்கீங்க, படிக்கறீங்க ரொம்ப சந்தோசம் ஆனா அதன் நோக்கம் முக்கியம்(கேட்பது என்னது உரிமை இல்லை ஆனாலும் விவாதிற்காக…).
  தயவு செய்து உங்கள் மறுமொழியை சிறியதாக ஏழுதவும். நன்றி

 20. உனனோர்று matter திருச்சிகாரரே விதண்டாவாதம் பகுத்தறிவு ஆகாது.

 21. ///நான் பார்ப்பன எதிர்ப்பாளருமல்ல.

  நான் பெரியார் கொள்கையாளருமல்ல.

  நான் பகுத்தறிவாளன் அல்லது குறைந்த பட்சம் பகுத்தறிவாளனாக இருக்க முயற்சி செய்பவன் என்பதை உறுதியாகச் சொல்லுவேன்///

  இவர்களைப் பொருத்தவரை பகுத்தறிவு என்பது இந்துக்களின் கடவுளை அசிங்கப் படுத்துவது , அப்பாவி பிராமணனை கொல்ல நினைப்பது அவ்வளவு தான். அதை ஏன் செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என்றெல்லாம் யோசிக்கும் பகுத்தறிவு இந்த பெரியார் கும்பலுக்குக் கிடையாது. மதம்மாற்றத்திற்காக ப்ரெயின் வாஷ் செய்யப்பட்ட மக்களைப் போல இவர்களும் பெரியார் பெயரால் ப்ரெயின் வாஷ் செய்யப்பட்ட சைக்கோக்கள். பார்ப்பன எதிர்ப்பு என்பது இவர்கள் பிழைப்பு நடத்த, தங்களை தற்காத்துக் கொள்ள ஒரு கேடையம் அவ்வளவே.

  ஈழத்தில் தமிழர்களாக இருந்து கொண்டு போராட்டம் என்னும் போது நாங்கள் முஸ்லீம்கள் என்று தனித்துச் சென்று சிங்களவனோடு ஐக்கியமான முஸ்லீம்களை எதிர்க்க இவர்களுக்கு முதுகெலும்பே கிடையாது.

  இப்படி துரோகம் செய்த முஸ்லீம்களைப்பார்த்து இஸ்லாமீயம் எதிர்ப்பு என்று எதையாவது துவங்கினார்களா??? அறுத்துவிடுவான் என்ற பயம். அதனால் பார்ப்பன எதிர்ப்புடன் தங்களது வீரத்தை மூட்டை கட்டி வைத்து விடுகிறார்கள்.

  இதெல்லாம் ஒரு பிழைப்பு!!! தூ

 22. //////சுந்தரம் (16:46:09) :
  திருச்சி,
  உங்களை பார்ப்பன எதிர்ப்பாளர், பெரியார் கொள்கையாளர் என்று சொல்ல வேண்டுமா?/////

  தோடா, இல்லன்னா இதுக்கு ஏதாவது யுனிவர்சிடியில சர்டிபிகேட் குடுங்குறாங்களா, சொல்லுங்க சுந்தரம்..நாங்க போய் சர்டிபிகேட் வாங்கிட்டு வர்ரோம்…தெருப்பொறுக்கி கூட பகுத்தறிவாளன் தான். எதை பொறுக்கலாம் எதைப்பொறுக்கக்கூடாதுன்னு பகுத்தறிந்து பொறுக்குறான் ல்ல…

  நல்லா கேக்றாங்கய்யா டீட்டேய்லு..

 23. //பெரியார் சிந்திப்பவன் தேவையில்லை, நான் கூறுவதைக் கேட்டால் போதும் என்கிற நிலைப் பாட்டை எடுத்தார். //

  இப்படி வாய்க்கு வந்த மாதிரி பெரியாரை குறை சொல்வதுதான் பகுத்தறிவோ ! கேள்வி கேட்போம் பெரியாரை மட்டும் ! ஆனால் பதில் சொல்லமாடோம் பெரியாரின் கேள்விகளுக்கு! ஆதிசங்கரரை , பகவத்கீதையை கேள்வி கேட்டால் இந்து மத விரோதி ! நல்லாதான் இருக்கு மனுதர்மத்தின் பகுத்தறிவு !

  என்ன கேள்வி கேடீர்கள் இதுவரை பகவத்கீதையை, ஆதி சங்கரரை, புராண இதிகாசங்களை, மனுதர்மத்தை, பாகவதத்தை …?

  சிங்கள நாட்டுல இருக்க முஸ்லிம் துரோகம் பண்ணவில்லை என்று யார் சொன்னது , அவர்கள் துரோகிகள் தான் , அதற்காக இங்குள்ள முஸ்லிம்களை வைய வேண்டும் என்று எதிர்பார்பது ராமகோபாலன்(ராம்) வேலை ! ஆனால் பார்பன கும்பல் இங்கு பிழைப்பு நடத்திக்கொண்டே துரோகம் செய்ததே அதற்கு என்ன சொல்வது!

 24. //இந்திய தேசியமா, தமிழ் தேசியமா என்ற விடயத்தில் சகோதரர் வே. மதிமாறனின் கருத்து என்ன?

  சகோதரர் வே. மதிமாறன் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

  இதில் சகோதரர் வே. மதிமாறனின் நிலைப் பாடு என்ன? பதில் சொல்வாரா?//

  அட பதருகளா! இந்தியா என்பது ஒரு தேசம் இல்லை என்பதை எப்போது உணர போகிறீர்கள்? இந்தியா தேசியங்களின் சிறைசாலை.

  ஆனால், தமிழ் தேசியம் என்பது சாத்தியமா?

  நீ ரஜினி ஆளா இல்லை கமல் ஆளா என்னும் சிறு பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக கேட்கும் கேள்வியை முதலில் விடுத்து தேசியம் என்றால் என்ன? நம் நாட்டில் தேசியம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 25. திருச்சி,
  நீங்க பார்ப்பனராக இருக்கீங்க. பார்ப்பன ஜாதி ஆதிக்கத்தின் குறியீட இருக்கீங்க… நாங்க சொன்ன எங்களை கேள்வி மேல், கேள்வி கேக்குறீங்க?

  ram என்று ஒருவர் வந்து எங்களையெல்லாம் கடுமையா திட்டுறார். நாங்கள பார்ப்பனியத்திற்கு எதிராக இருக்கிறோம் என்று. (நாகரிகமான ஆளு ‘தெருப்பொறுக்கி கூட பகுத்தறிவாளன் தான்’ என்று கண்ணியத்தோடு எழுதுகிறார்)

  ஆனால், உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இது போதாதா உங்க பார்ப்பன நடுநிலைமையை காட்டுவதற்கு.

 26. சகோதரர் சுந்தரம் அவர்களே,

  //நீங்க பார்ப்பனராக இருக்கீங்க. பார்ப்பன ஜாதி ஆதிக்கத்தின் குறியீட இருக்கீங்க//

  நான் யார் மீது ஆதிக்க‌ம் செலுத்தினேன்.

  நான் யார் காலில் விழுந்து வ‌ண‌ங்க‌ வேண்டும் என்று சொல்லுங்க‌ள். அவ‌ர் காலில் நான் விழுந்து வ‌ண‌ங்குவேன். உல‌கில் உள்ள எல்லா ம‌னித‌ரும் ம‌திக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌வ‌ரே என்ப‌தே என் க‌ருத்து.

  //… நாங்க சொன்ன எங்களை கேள்வி மேல், கேள்வி கேக்குறீங்க?//

  சகோத‌ர‌ரே நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் அளித்தேன்.

  நான் யாரையும் வேறுபாடு பார்ப்ப‌து இல்லை. பார்க்க‌வும் மாட்டேன். ஒரே ச‌மத்துவ‌ ச‌முதாய‌த்தை உருவாக்கும் வ‌ழியில் செய‌ல் ப‌ட்டு வ‌ருகிறேன். யார் த‌டுத்தாலும், என் முடிவு உறுதியான‌து.

  //ram என்று ஒருவர் வந்து எங்களையெல்லாம் கடுமையா திட்டுறார். நாங்கள பார்ப்பனியத்திற்கு எதிராக இருக்கிறோம் என்று. (நாகரிகமான ஆளு ‘தெருப்பொறுக்கி கூட பகுத்தறிவாளன் தான்’ என்று கண்ணியத்தோடு எழுதுகிறார்)//

  அவ‌ர் அப்பபடி எழுதிய‌து த‌வ‌று. அது ச‌ரி அல்ல‌. அதையே ஒரு பின்னூட்ட‌மாக‌ இட‌வேண்டும் என்று இருந்தேன். அத‌ற்க்குள் நீங்க‌ளே சுட்டிக் காட்டி விட்டீர்க‌ள். ந‌ன்றி.

  //ஆனால், உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இது போதாதா உங்க பார்ப்பன நடுநிலைமையை காட்டுவதற்கு//

  அதற்க்கு நான் என்ன‌ செய்ய‌ முடியும்? நானா அவ‌ரை அப்ப‌டி எழுத‌ சொன்னேன்? நானா அவ‌ரை என்னை ஆத‌ரியுங்க‌ள் என்று கேட்டேன்? என்னிட‌ம் உள்ள‌ கொள்கைக‌ளே என‌க்கு போதும். அவையே என‌க்கு ஆத‌ர‌வு!

 27. //அட பதருகளா! //

  இதுதான் பார்ப்ப்னீய‌ம், அடுத்த‌வ‌ரை இக‌ழ்வ‌து!

  //இந்தியா என்பது ஒரு தேசம் இல்லை என்பதை எப்போது உணர போகிறீர்கள்? இந்தியா தேசியங்களின் சிறைசாலை.

  ஆனால், தமிழ் தேசியம் என்பது சாத்தியமா?

  நீ ரஜினி ஆளா இல்லை கமல் ஆளா என்னும் சிறு பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக கேட்கும் கேள்வியை முதலில் விடுத்து தேசியம் என்றால் என்ன? நம் நாட்டில் தேசியம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.//

  வேந்த‌ன் அவ‌ர்களே,

  தேச‌ம் என்ப‌து என்ன, தேசிய‌ம் என்ப‌து என்ன‌ என்ப‌தை எல்லாம் யார் வ‌ரைய‌றுப்ப‌து? இது நியூட்ட‌னின் விதியா? மின் புல‌ விதிக‌ளா? ம‌க்க‌ளின் க‌ருத்து, எண்ண‌ப் ப‌டி அமைவ‌து தேச‌ம் அல்ல‌வா? தேசிய‌ம் என்ப‌தைப் புரிந்து கொள்ள செர்ம‌னி கொலோன் ப‌ல்க‌லையில் முனைவ‌ர் ப‌ட்ட‌ம் வாங்க‌ வேண்டுமா?

  இந்திய தேசியமா, தமிழ் தேசியமா என்ற விடயத்தில் சகோதரர் வே. மதிமாறனின் கருத்து என்ன?

  சகோதரர் வே. மதிமாறன் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

  இதில் சகோதரர் வே. மதிமாறனின் நிலைப் பாடு என்ன? பதில் சொல்வாரா

 28. //தேச‌ம் என்ப‌து என்ன, தேசிய‌ம் என்ப‌து என்ன‌ என்ப‌தை எல்லாம் யார் வ‌ரைய‌றுப்ப‌து?//

  ஐ.நா. மற்றும் அதன் அடிவருடிகள் தான் அதற்கு விளக்கம் தருகிறார்கள்.

  //ம‌க்க‌ளின் க‌ருத்து, எண்ண‌ப் ப‌டி அமைவ‌து தேச‌ம் அல்ல‌வா? //

  எவ்வளவு வெகுளி தனமா பேசுறீங்க நீங்க. காஷ்மீர், ஈழம், அசே(இந்தோனேசியா), பாலஸ்தீன போன்ற நாடுகளில் மட்டும் இது செல்லாததின் மருமம் என்ன.

  // இது நியூட்ட‌னின் விதியா? மின் புல‌ விதிக‌ளா?//

  நீங்க தான் எவன் சொன்னால்லும் கேட்க மாட்டீர்களே அப்புறம் எதற்கு அந்த உதாரணம்.

 29. ////ram என்று ஒருவர் வந்து எங்களையெல்லாம் கடுமையா திட்டுறார். நாங்கள பார்ப்பனியத்திற்கு எதிராக இருக்கிறோம் என்று. (நாகரிகமான ஆளு ‘தெருப்பொறுக்கி கூட பகுத்தறிவாளன் தான்’ என்று கண்ணியத்தோடு எழுதுகிறார்)////

  ஐயா மரியதையை எதிர்பார்ப்பவர்களே! நான் யாருக்கும் ஆதரவாக எழுதவில்லை. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பகுத்தறிவு என்ற பெயரில் நீங்கள் மற்றவர் உணர்வுகளை எவ்வளவு கடுமையாக சாருகிறீர்கள் என்பதை உங்களைக் கடுமையாக திட்டுவதன் மூலம் உணர்த்த வேண்டாமா! பார்ப்பனீயத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி நீங்கள் காட்டாத கடுமையா??? அப்பாவி கிழவரை பார்ப்பனன் என்ற ஒரே காரணத்துக்காக அயோத்தியா மண்டபம் வாசலில் வெட்டிக் கூறு போட்டீர்களே?? அது என்ன கொஞ்சலா இல்லை கடுமையா???

  உங்கள் காட்டுமிராண்டித்தனத்திற்கு நீங்கள் அளவு வைக்க மாட்டீர்கள். ஆனால் வார்த்தைகளில் கடினம் இருக்கிறது, எங்களைத் திட்டுகிறார்கள் என்று அங்கலாய்ப்பீர்கள். இது என்ன அயோக்கியத்தனம். அருவாளால் வெட்டி ஒரு வரைக் பார்ப்பனன் என்ற ஒரே காரணத்தால் கொல்லப்பார்ப்பதை விட தெருப்பொறுக்கி என்ற வார்த்தை ஒன்றும் கடுமை இல்லை. ஜுஜுபி!!

 30. //ஆனால், உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இது போதாதா உங்க பார்ப்பன நடுநிலைமையை காட்டுவதற்கு//

  நீங்கள் மட்டும் கூடி கூத்தடிக்கலாம், உங்களை எதிர்பவர்கள் மட்டும் ஒரு அணியில் சேரக்கூடாதா!! அப்படி ஒன்றாகிவிட்டால் உங்களுக்கு ஏன் பதற்றம் வருகிறது. தொடை நடுங்குகிறது.

  ஏனென்றால் இந்துக்களை இப்படி ஜாதிவாரியாக பிரித்து வைத்து விளையாடினால் தான் மதிமாறன் போன்றவர்களெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றாகி விட்டால் உங்களுக்கு வேலையில்லையே. பார்ப்பனைப் பாரு, மேல் ஜாதியைப் பாரு, கீழ்ஜாதியைப்பாரு என்று யாருக்கும் வக்காலத்து வாங்கி பேசமுடியாதே! தலைவனாக முடியாதே! சமூகத்தில் பிரித்தாளும் கொள்கையில் கொடிகட்டிப் பறப்பவர்களே நீங்கள் தான். அதற்கு நீங்கள் எடுத்திருக்கும் முக்கிய ஆயுதம் பார்ப்பன எதிர்ப்பு.

  உங்களைத் திட்டுபவன் எல்லோருமே பார்ப்பனன் என்று நினைப்பதும் பகுத்தறிவற்ற மூட நம்பிக்கையே என்பதை மனதில் கொள்ளுங்கள்.

 31. என்ன திருச்சி, ராம் உங்களுக்கு நல்லா சப்போட் பண்றாரு. என்ன உங்கள ஆளைக் காணொம்.
  இல்ல நீங்கள்தான் ராமா?

 32. சுந்த‌ர‌ம்,

  முத‌லில் என்னை அதிய‌மான் என்றார்க‌ள்,

  பின்ன‌ர் பொய் முக‌ம் என்ற‌ த‌ள‌ம் வைத்து எழுதுப‌வ‌ர் என்றார்க‌ள்.

  நீங்க‌ளோ, நான் தான் ram என்ற‌ பெய‌ரில் எழுதுகிரேனோ என்று நினைக்கிரறீர்க‌ள்.

  நான், ram என்ற‌ பெய‌ரில் எழுதுவில்லை.

  IF YOU HAVE DOUBT YOU CAN CLARIFY IT WITH BRITHER VE. MATHIMAARAN

  நான் எங்கேயும் போக‌வில்லை. உங்க‌ளை போன்ற‌ ச‌கோத‌ர‌ரை விட்டு செல்ல மாட்டேன்.

 33. சகோதரர் Matt அவர்களே,

  //கேள்வி கேட்போம் பெரியாரை மட்டும் ! ஆனால் பதில் சொல்லமாடோம் பெரியாரின் கேள்விகளுக்கு! ஆதிசங்கரரை , பகவத்கீதையை கேள்வி கேட்டால் இந்து மத விரோதி ! நல்லாதான் இருக்கு மனுதர்மத்தின் பகுத்தறிவு !

  என்ன கேள்வி கேடீர்கள் இதுவரை பகவத்கீதையை, ஆதி சங்கரரை, புராண இதிகாசங்களை, மனுதர்மத்தை, பாகவதத்தை …?//

  கிருட்டின‌ர், ஆதி ச‌ங்க‌ர‌ர், இருவருமே உயிர் அழிவ‌தில்லை. என்றுமே அழிவ‌தில்லை, என்று கூறி இருக்கிறார்க‌ள். நான் அதை அப்ப‌டியே ஒப்புக் கொள்ள‌வில்லையே!

  மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!
  இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

  மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!

  எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

  மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

  நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!!

  கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

  கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

 34. Brother Ben,

  //உனனோர்று matter திருச்சிகாரரே விதண்டாவாதம் பகுத்தறிவு ஆகாது.//

  தைரிய‌மாக‌ விவாதியுங்க‌ள்‍. Can you expalai as when I enter into விதண்டாவாதம்?

 35. நீங்க தான் எவன் சொன்னாலும் நம்ப மாட்டன் நானா ஆராய்ச்சி பண்ணி தான் ஒத்துபேன் சொல்றீங்க. இது சாத்தியமா எந்த விஷயத்திலும் சொல்ற விஷயம், நோக்கம் போன்றவைகள் தான் அதன் உண்மையை தீர்மானிக்கும். இப்படி ஒரு விஷயத்தை அணுகாமல் அவான் யாரு சொல்றது நான் என்ன கேக்றதுன்னு சொன்ன அது விதண்டாவாதம் அல்லாமல் வேற என்ன.

 36. திருச்சிக்காரன் அவர்களே,
  இங்க நான் கடவுள் இருக்காரா இல்லையா ? உயிர் அழியுமா அழியாதா? என்று கேட்கவில்லையே ! தொடர்பு இல்லாத பினூட்டம்…கடவுள் கொள்கைகளின் அடிப்படையே இல்லாத இந்த நூல்களை கேள்வி எழுப்பியது உண்டா?இந்த பார்ப்பனிய குப்பைகள் அடுத்தவனை ஏய்த்து பிழைக்க பார்பானுக்கு வழி சொல்லியதே தவிர வேறு என்ன கிழித்தது..? அதை கேள்வி கேட்டால் பெரியார் மீது கோபம்..ஏன் என்றால் பதில் இல்லை ..

  //கிருட்டின‌ர், ஆதி ச‌ங்க‌ர‌ர், இருவருமே உயிர் அழிவ‌தில்லை. என்றுமே அழிவ‌தில்லை, என்று கூறி இருக்கிறார்க‌ள். நான் அதை அப்ப‌டியே ஒப்புக் கொள்ள‌வில்லையே//

  இதேபோல் பெரியாரையும் நான் அப்படியே ஒப்புகொள்வதில்லை என்று சொல்லிவிட்டு போகவேண்டியது தானே ? பெரியார் சிந்திப்பவன் தேவையில்லை, நான் கூறுவதைக் கேட்டால் போதும் என்கிற நிலைப் பாட்டை எடுத்தார் என்று பொய் புனைகிறீர்கள் சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவனை . ஆனால் சமுதாயத்தை சீரழித்த ,அடிமை படுத்திய மேற்கண்ட நூல்களையும் , அதன் காரண கர்தாகளையும் என்ன கேள்வி எழுபிநீர்கள் ? பிறப்பால் பிராமணனாக இருபவனால் மட்டுமே பிரமத்தை உணர முடியும் என்று சொன்ன ஆதி சங்கரரை,ஆன்மிகத்தின் அடிசுவடையே புரிந்து கொள்ளாதவரை ” சித்தர்கள் ,முகமது நபி ,இயேசு கிறிஸ்து, பெரியார் ,விவேகானந்தர் ” இவர்களுடன் சேர்த்து எழுதுவதே தவறு.

 37. “இப்படி இருக்கிற நம்மளையும் தேசியத்தை பேசச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

  நம்ம சொந்தக்காரங்களுக்கு ‘டெல்லி’ ன்னா, எருமை மாடுதான் தெரியும். அவுங்களுக்கு எப்படி ‘தேசியத்தை’ புரியவைக்கிறதுன்னுதான் புரியலை.”

  True. Well put.

 38. சரியான பதிவு தான்

 39. முதலில் தமிழன் பின்பு தான் இந்தியன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும்,. நான் பார்பனீயத்தை கடுமையாக எதிர்க்கிறேன்.. பார்பனர்களை அல்ல. எல்லா பிரச்சனைகளுக்கும் தொடக்க புள்ளி கடவுள். கடவுளின் கொள்கை பரப்பு செயலாளர் ஜாதி , மதம் . மனிதனை மனிதனாக பாருங்கள் . தமிழ் தானாக வளரும் . நாடும் முன்னேறும். தமிழன் என்று சொல்வதால் ஒன்றும் குறைந்துவிட போவதில்லை . இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்றால் முதலில் நிற்பவன் தமிழனாகத்தான் இருப்பான். மறந்து விட வேண்டாம். நாம் தமிழன் என்று சொல்ல வேண்டிய இடங்களில் இந்தியன் என்று சொல்லி இழந்தது போதும். (ஈழம்) . சமத்துவம் ஜாதி ஒழிப்பு இதெல்லாம் சாத்தியம் ஆகி விட்டால் அரசியல் தோற்று விடும், எதிர்க்க வேண்டியது மானங்கெட்ட ஒட்டுண்ணி அரசியல் வாதிகளை தான்.

 40. மதி உங்கள் பணி தொடரட்டும்

Leave a Reply

%d bloggers like this: