‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்

 

https://i0.wp.com/www.jpl.nasa.gov/images/hubble/20090107/stars-browse.jpg?w=474

பயப்படாதீங்க இது கடவுள் இருக்கிற இடமில்ல, நட்சத்திரப் பாதை

உங்களைப் போன்ற நாத்திகர்கள் ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும், நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்பது உண்மை. அவன் நல்லது, கெட்டது, ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்று எல்லாவற்றையும், எல்லோரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். அவன் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது?

இதை தெளிவான புத்திக் கொண்டு ஆராய்ந்தால்தான் புரியும். உங்களைப்போல் முடிவு செய்து கொண்டு ஆராய்ச்சி செய்பவர்களால் முடியாது.

வீர. வீரபாண்டியன்

கடவுள் இல்லை என்பதை நிரூபித்த பிறகு, இறை நம்பிக்கையாளர்கள் தங்கள் இறை நம்பிக்கையை நியாயப்படுத்தமுடியாமல், நிரூபிக்கமுடியாமல் அல்லது கடவுள் மறுப்பாளர்களோடு விவாதிக்க முடியாமல் கடைசியாகப் போய் ஒளிந்து கொள்கிற இடம்தான் இந்த  ‘நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கறது. ஒருவன் இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான்’ என்கிற சுய சமாதானம்.

உண்மையிலேயே இந்த கருத்தில் உண்மையிருந்தால், மனித குலம் ஒரு கட்டத்திற்கு மேல் தன் இனவிருத்தியையே நிறுத்தியிருக்கும்.  அல்லது அப்படியே தொடர்ந்து இருந்தால், அது அநாகரிகமான சமூகமாக, மிருகங்களைப்போல், காட்டுமிராண்டித்தனத்தைவிட மோசமான மனநிலையில் இருந்து மாறாமல் இருந்திருக்கும்.

பின்ன என்னங்க, நமக்கு மேல இருந்து ஒருத்தன் நம்மள எப்பவும் பார்த்துகிட்டு இருக்கான் அப்படிங்கறதை  நம்புனா, நம்புறவன் தன் பொண்டாட்டி பக்கத்துல நெருக்கமா உக்காரகூட முடியாது.

எந்த நேரமும் நம்பள ஒருத்தன் மேல ஒக்காந்து பாக்கறதா சொல்ற யாரும்  அத துளிகூட நம்பள அப்படிங்கறதுக்கு, கோடிக்கணக்குல மக்கள் தொகை பெருகிக்கிட்டே இருக்குதே இதுதாங்க பலமான சாட்சி. இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி?