கடவுள் நம்பிக்கையும் முற்போக்கானதுதான்…


சுயஜாதி உணர்வைவிட, மதஉணர்வும் கடவுள் நம்பிக்கையும் ஆபத்தானது அல்ல, முற்போக்கானது என்று சொல்லி இருக்கிறீர்களே, அது எப்படி?

-தமிழ்ப்பித்தன்

முத்துராமலிங்கத் தேவரின் சுயஜாதி உணர்வைவிடவும், வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் இறைநம்பிக்கை ஆபத்தில்லாதது. அன்பு மயமானது. வடமாவட்டத்து வாழும் முத்துராமலிங்கத் தேவரான டாக்டர் ராமதாசின் ஜாதி அபிமானத்தைவிட, சிவனடியார் ஆறுமுகசாமியின் இறைநம்பிக்கை முற்போக்கானது.

50 thoughts on “கடவுள் நம்பிக்கையும் முற்போக்கானதுதான்…

  1. சகோதரர் மதிமாறனின் கருத்தை வரவேற்கிறேன்.

    இப்போது வாழும் யாரும் நமக்கு கடவுளை நேரிலே காட்டத் தயாராக இல்லை.

    அதே நேரம் கடவுள் என்று ஒருவர் இருக்க சாத்தியங்கள் இருக்கின்றன என்பதையும் மறுக்கவில்லை.

    கடவுள் என்று ஒருவர் நிச்சயமாக இல்லை என்பது அறிவியல் பூர்வமாக நிரூப்பிக்கப் படவில்லை.

    அதை விட முக்கியமாக நம் உடல் இறந்த பின் உயிர் என்ற ஒன்று – அப்படி ஏதாவது தனியே இருக்கிறதா? அந்த உயிர் என்ற ஒன்று தொடர்ந்து வாழ்கிறதா என்பது மனிதனுக்கு முக்கியமான சிந்தனை.

    எனவே கடவுள் என்ற ஒன்று இருப்பதாக கருதி அதில் மனக் குவிப்பு பயிற்சி செய்து பழகுவதை ஒரு வகையான ஆராய்ச்சி எனக் கருதலாம்.

    ஆனால் அதையே காரணமாக வைத்து, நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று சொல்வதையோ,

    கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று ஒத்துக் கொள், என்று நேரிலே பார்த்தது போல உறுதியாக கூறுவதையோ,

    அந்தக் கடவுள் உருவம் இல்லாமல் தான் இருக்கிறார் என்றும்,

    இப்படியே அந்தக் கடவுளுக்காக அப்பாவிகளை கொள்ளுதல்,

    கடவுளே இன அழைப்பு , இனப் படுகொலை செய்ய கட்டளையிட்டு உதவியதாக கூறியோ

    இப்படி இன்ன பிற நச்சு கருத்துக்களை, வெறுப்பு கருத்துக்களை பரப்ப வேண்டாம், அது மனித சமுதாயத்துக்கு எதிரானது, மனிதத்தை அழிக்க கூடியது.

    பிறரைக் கட்டாயப் படுத்தாத, வன்முறை, இனவெறியை தூண்டாத, காம சலுகைகளை தந்து ஊக்குவிக்காத, அமைதியான ஆன்மீக ஆராய்ச்சி செய்வதில் தவறில்லை. அது நல்லதுதான்.

    அந்த வகையிலே வள்ளலார், ஆறுமுக சாமியார், இளையராஜா, தியாகராசர், விவேகானந்தர், பட்டினத்தார், நந்தனார், கண்ணப்பனார், அப்பர், இடைக் காட்டு சித்தர் முதலான சித்தர்கள் …………அனைவரையும் பாராட்டி மரியாதை செய்வதில் தவறு இல்லை.

  2. பொருத்தமாக இருப்பதால் மீள் பதிவு செய்கிறோம் :

    ——————–

    பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    “The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

    “அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.

    பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.

    சரிதானே ?

    பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

    ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.

    “மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா?

    மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

    இந்தக் கேள்வியை ஆத்தீகவாதி, நாத்தீக அறிங்கரிடம் முன் வைத்தாரா?

    அப்படி முன் வைத்திருந்தால்- அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக‌ இருந்தாரா?

    “மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

    உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

    ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு க‌ண்டிப்பாக‌ ‌ பதில் தேவை.

    இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?

    ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?

    நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?

    அதாவது “உடலோடு சேர்ந்துதான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும் – உயிர் தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

    ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

    மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!
    இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

    மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!

    எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

    மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

    நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!!

    கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    ஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?

    ஆனால் ந‌ண்ப‌ர்க‌ளே நாம் அபாய‌த்தில் இருக்கிறோம், எந்த‌ நோயோ அல்ல‌து துன்ப‌மோ ந‌ம்மையோ, ந‌ம‌து நெருங்கிய‌ உற‌வின‌ரையோ தாக்கினால் ‍ அதைத் த‌டுத்து ந‌ம்மை காத்துக் கொள்ளும் திற‌ன் ந‌ம‌க்கு இருக்கிற‌தா?

    ந‌ண்ப‌ர்க‌ளே, மிக‌ச் சிக்க‌லான‌ நிலையிலிருந்து விடுப‌ட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிறோம்.

    என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்!

    இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்!

    ஏன் எனில் உண்மை யாருக்காக‌வும் வ‌ளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் ப‌டையில் தேர்ந்து எடுக்க‌ப் ப‌டுவ‌தில்லை.

    உல‌கில் எல்லொரும் உல‌க‌ம் த‌ட்டை என்று நினைத்தாலும், ஒருவ‌ன் ம‌ட்டும் உருண்டை என்று கூறினால், அது உண்மையாக இருக்கும் ப‌ட்ச‌த்தில் எல்லொரும் அதை ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்.

    Because Truth can never be defeated- it is the property of the truth!

    Truth shall prevail! No body can defeat the Truth.

    Hence let us all strive to find the truth.

  3. \\பிறரைக் கட்டாயப் படுத்தாத, வன்முறை, இனவெறியை தூண்டாத, காம சலுகைகளை தந்து ஊக்குவிக்காத, அமைதியான ஆன்மீக ஆராய்ச்சி செய்வதில் தவறில்லை.\\

    திருச்சிக்காரன் கருத்தை ஆமோதிக்கிறேன்

    வாழ்த்துகள் நண்பரே

  4. உடலின் இயக்கம்தான் உயிர். அது தனியான பொருள் அல்ல. உடலின் இயக்கம் நின்று போவதே மரணமா?கும். அதன் பின் ஒன்றுமே எஞ்சியிருப்பதில்லை. மனிதன் தனது தாய் தந்தை இறந்ததை செரித்துக் கொள்ளாத காரணத்தாலேயே அவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள் என நம்பினான். உடல் அழிந்தாலும் உயிர் அழியாது என நம்பினான். மறுபிறப்பு உண்மையானால் உலகத்தின் மக்கள்தொகை 200 மில்லியன் (யேசு காலத்தில்) இப்போது எப்படி 600 கோடி ஆயிற்று? மரம், செடி, கொடி, புழு, பூச்சி போன்றவற்றுக்கு மறுபிறப்பு உண்டா? “நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?” என்பதற்கான விடை ஒவ்வொருவரும் பிறக்கும் சூழ்நிலை. அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாக வர கூடிய விழுக்காடு அதிகமாக இருக்கும்.

  5. பிரமாதம் மதிமாறன். உங்கள் துணிவுக்கும் கருத்துத் தெளிவுக்கும் பாராட்டுக்கள்.

    http://kgjawarlal.wordpress.com

  6. சகோதரர் நக்கீரன் அவர்களே,

    //உடலின் இயக்கம்தான் உயிர். அது தனியான பொருள் அல்ல. உடலின் இயக்கம் நின்று போவதே மரணமா?கும். அதன் பின் ஒன்றுமே எஞ்சியிருப்பதில்லை. மனிதன் தனது தாய் தந்தை இறந்ததை செரித்துக் கொள்ளாத காரணத்தாலேயே அவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள் என நம்பினான். உடல் அழிந்தாலும் உயிர் அழியாது என நம்பினான். மறுபிறப்பு உண்மையானால் உலகத்தின் மக்கள்தொகை 200 மில்லியன் (யேசு காலத்தில்) இப்போது எப்படி 600 கோடி ஆயிற்று? மரம், செடி, கொடி, புழு, பூச்சி போன்றவற்றுக்கு மறுபிறப்பு உண்டா?//

    என் பதிவை படைத்து தன் கருத்தை கூறியதற்கு நன்றி.

    நான் உடல் அழிந்த பின் உயிர் என்று ஒன்று தனியாக இருக்கிறது என்று நான் அடித்து சொல்லவில்லை.

    அது பற்றிய ஆராய்ச்சி, மிக முக்கியமான ஆராய்ச்சி என்று தான் சொல்கிறேன்.

    உயிர் என்ற ஒன்று தனியாக இல்லை என்பதை ஒரு முக்கியமான கருத்தாக கூறலாம். அது ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

    அதே நேரம் உயிர் என்ற ஒன்று, உடல் அழிவதற்கு பிறகு இல்லவே இல்லை என்பதை முடிவாக சொல்வதற்குஎன்னால் முடியாது.

    அதற்கான (உயிரும் சேர்ந்து அழிவதற்கான) வாய்ப்பு இருக்கிறது (There is a probablity ).

    அதே நேரம் உயிர் என்று ஒன்று தனியாக இருப்பதற்கான சாத்தியங்களை நாம் ஆராயாமல் ஒதுக்கி விட முடியாது.

    சித்தார்த்தர் இந்து மத நூல்களையோ, சாத்திரங்களையோ கல்லாதவர். உயிர்களுக்கு ஏற்படும் இன்னலகளுக்கான காரணத்தையும், அதற்க்கான தீர்வையும் காண காடு சென்று மனக் குவிப்பு செயலில் ஈடுபட்டு உயிர் பல பிறவிகள் எடுத்து இன்னலகளை அனுபவிப்பதாக கூறியுள்ளார்.

    சாவிலே மனிதனின் உயிர் மறைந்து விடுகிறது என்றால், பின்னர் புத்தர் சொன்னது போல ஆசையை அடக்க வேண்டிய அவசியம் என்ன.

    ஆனால் இன்னொரு பிறவி, அல்லது சொர்க்கம் , நரகம் இப்படிப்பட்ட இத்யாதிகள் ஒருவேளை இருக்க கூடுமானால் நாம் இதிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்பு இருக்குமானால் அதை நழுவ விடுவது சரியல்ல.

    புத்தர் சொன்னார் என்பதற்காக மறு பிறப்பு கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும், என்று நான் நிர்பந்திக்கவில்லை.

    ஆராய்ச்சியில் ஈடுப‌டுவோம், என்றுதான் சொல்கிறேன்!

    ஆனால் உடல் இறப்புக்கு பிறகு உயிர் வாழ்கிறது என்கிற கோட்பாட்டை நான் உடனே ஒத்துக் கொள்ளவும் தயாராக இல்லை, மறுக்கவும் தயாராக இல்லை.

    உண்மை என்ன என்று நாமே ஆராய்ந்து அறிய மனக் குவிப்பு பயிற்சி உதவுமா என முயற்சி செய்கிறேன்.

    அப்படி ஆராய்ச்சியில் ஈடுபடவும், அவர்கள் அறிந்த உண்மைகளை எடுத்து வைக்கவும் இந்த உலகில் எல்லோருக்கும் உரிமை உண்டு என நினைக்கிறேன்.

    அப்படி ஆராய்ச்சியில் ஈடுபடுபவரைப் பார்த்து யாரவது “ஏய், நீ உக்காரு, எல்லாம் தெரியும், கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், நீ அவரை வணங்கப் போகிறாயா இல்லையா ” என்று கட்டை பஞ்சாயத்து செய்தால் அதை பயமின்றி எதிர்ப்பேன்!

  7. சகோதரர் நக்கீரன் அவர்களே,

    //உடலின் இயக்கம்தான் உயிர். அது தனியான பொருள் அல்ல. உடலின் இயக்கம் நின்று போவதே மரணமா?கும். அதன் பின் ஒன்றுமே எஞ்சியிருப்பதில்லை. மனிதன் தனது தாய் தந்தை இறந்ததை செரித்துக் கொள்ளாத காரணத்தாலேயே அவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள் என நம்பினான். உடல் அழிந்தாலும் உயிர் அழியாது என நம்பினான். மறுபிறப்பு உண்மையானால் உலகத்தின் மக்கள்தொகை 200 மில்லியன் (யேசு காலத்தில்) இப்போது எப்படி 600 கோடி ஆயிற்று? மரம், செடி, கொடி, புழு, பூச்சி போன்றவற்றுக்கு மறுபிறப்பு உண்டா?//

    என் பதிவை படைத்து தன் கருத்தை கூறியதற்கு நன்றி.

    நான் உடல் அழிந்த பின் உயிர் என்று ஒன்று தனியாக இருக்கிறது என்று நான் அடித்து சொல்லவில்லை.

    அது பற்றிய ஆராய்ச்சி, மிக முக்கியமான ஆராய்ச்சி என்று தான் சொல்கிறேன்.

    உயிர் என்ற ஒன்று தனியாக இல்லை என்பதை ஒரு முக்கியமான கருத்தாக கூறலாம். அது ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

    அதே நேரம் உயிர் என்ற ஒன்று, உடல் அழிவதற்கு பிறகு இல்லவே இல்லை என்பதை முடிவாக சொல்வதற்குஎன்னால் முடியாது.

    அதற்கான (உயிரும் சேர்ந்து அழிவதற்கான) வாய்ப்பு இருக்கிறது (There is a probablity ).

    அதே நேரம் உயிர் என்று ஒன்று தனியாக இருப்பதற்கான சாத்தியங்களை நாம் ஆராயாமல் ஒதுக்கி விட முடியாது.

    சித்தார்த்தர் இந்து மத நூல்களையோ, சாத்திரங்களையோ கல்லாதவர். உயிர்களுக்கு ஏற்படும் இன்னலகளுக்கான காரணத்தையும், அதற்க்கான தீர்வையும் காண காடு சென்று மனக் குவிப்பு செயலில் ஈடுபட்டு உயிர் பல பிறவிகள் எடுத்து இன்னலகளை அனுபவிப்பதாக கூறியுள்ளார்.

    சாவிலே மனிதனின் உயிர் மறைந்து விடுகிறது என்றால், பின்னர் புத்தர் சொன்னது போல ஆசையை அடக்க வேண்டிய அவசியம் என்ன.

    ஆனால் இன்னொரு பிறவி, அல்லது சொர்க்கம் , நரகம் இப்படிப்பட்ட இத்யாதிகள் ஒருவேளை இருக்க கூடுமானால் நாம் இதிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்பு இருக்குமானால் அதை நழுவ விடுவது சரியல்ல.

    புத்தர் சொன்னார் என்பதற்காக மறு பிறப்பு கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும், என்று நான் நிர்பந்திக்கவில்லை.

    ஆராய்ச்சியில் ஈடுப‌டுவோம், என்றுதான் சொல்கிறேன்!

    ஆனால் உடல் இறப்புக்கு பிறகு உயிர் வாழ்கிறது என்கிற கோட்பாட்டை நான் உடனே ஒத்துக் கொள்ளவும் தயாராக இல்லை, மறுக்கவும் தயாராக இல்லை.

    உண்மை என்ன என்று நாமே ஆராய்ந்து அறிய மனக் குவிப்பு பயிற்சி உதவுமா என முயற்சி செய்கிறேன்.

    அப்படி ஆராய்ச்சியில் ஈடுபடவும், அவர்கள் அறிந்த உண்மைகளை எடுத்து வைக்கவும் இந்த உலகில் எல்லோருக்கும் உரிமை உண்டு என நினைக்கிறேன்.

    அப்படி ஆராய்ச்சியில் ஈடுபடுபவரைப் பார்த்து யாரவது “ஏய், நீ உக்காரு, எல்லாம் தெரியும், கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், நீ அவரை வணங்கப் போகிறாயா இல்லையா ” என்று கட்டை பஞ்சாயத்து செய்தால் அதை பயமின்றி எதிர்ப்பேன்!

  8. பதிவருக்கு நன்றி: திருச்சிக்காரன் மாறுபட்ட அணுகுமுறையை
    பதித்தமைக்கு.

    உயிர் என்பது உடலை விட்டபின்னும் இருக்கும் என்பது வெவ்வேறு முறைகளில் கிறிஸ்துவம், (all souls day), இஸ்லாம் ஒரு இரவு முழுவதும் இடுகாடு சென்று முன்னோர்களின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துதல்; சீனாவிலும் சாம்பலை பாதுகாத்து வைத்து வணங்குவது போன்றவை உள்ளன; அன்பர் சொல்லுவ்வது போலே, ஆராய்ச்சி தொடரலாம்; இது மூடத்தனம் என்று ஒரே சொல்லில் தூக்கி எறியக் கூடாது என்பதே சரி

  9. கடவுள் இல்லய் என்று நிரூபிக்க ஆராய்ச்சி எதற்கய்யா…? அந்த நேரத்தய் பயனுள்ள செயல் ஒன்றுக்காக செலவிடலாமே… நீங்கள் பார்த்தும், கூடவே பழகியும் வரும் ஒரு பொருளய் நான் இல்லய் என்று கூறும்போது அந்த இடத்தில் தேவய் அதற்கான ஆராய்ச்சி.. கடவுளய்க் கண்டாயா எனும்போது ஆம் இல்லய் எனும் இருவேறு கருத்துக்கள் உண்டெனில் கண்டிப்பாக அங்கு ஆராய்ச்சியின் தேவய் உண்டு, ஆராயவும் வேண்டும்.. அதல்லாமல் பெரும்பாலானவர்கள் வெறுமனே நம்புகிறார்கள், ஆம் வெறும் நம்பிக்கய் மட்டுமேதான், இந்த வெறுமனேயுள்ள (வெறும்) நம்பிக்கயின் மேல் என்ன ஆராய்ச்சி வேண்டிக்கிடக்கிறது? நாம் பார்க்காததய் இல்லய் என்றுதானே சொல்லமுடியும், என்னால் தொட்டுணர முடியாத ஒன்றய் இல்லய் என்று சொல்ல என்ன ஆராய்ச்சி தேவய்? கடவுளின் ஒலி எதய்யும் என்னால் கேட்கமுடியாதபோது எப்படி ஒத்துக்கொள்ள? மனிதனின் அய்ம்புலனில் ஒருபுலனுக்கும் எட்டாத ஒரு கருத்தய் எப்படி ஒத்துக்கொள்ளமுடியும்? அப்படி ஒத்துக்கொள்ளும் ஒருவனுக்கு பகுத்து அறியும் அறிவு என்ற ஒன்று இருப்பதாகக் கொள்ளமுடியுமா? அப்படிப்பட்ட ஒரு கருத்தய் ஒருவன் வலிந்து நம்மிடம் புகுத்த முற்படுகிறானென்றால் அவனுக்கு அதில் உள்நோக்கம் கண்டிப்பாக இருக்கும், அவனுக்கு அதில் இலாபமும் இருக்கும். என்னுடய்ய எந்த ஒரு புலனுக்கும் எட்டாததய்த்தானே இல்லய் என்று சொல்கிறேன்.. அதய் மறுத்து… இல்லயில்லய் கடவுள் இருக்கு.. என்று சொல்பவனுக்குத்தான் அதய் நிரூபிக்கவேண்டிய தேவய்யும் உண்டு, கட்டாயமும் உண்டு, அதற்கு தயாராக இல்லய் என்றால் வாயய் மூடிக்கொண்டாவது இருக்கவேண்டும், மெழுகுவர்த்தியில் ஏற்றப்பட்ட நெருப்பய் ஊதி அணய்க்கும்போது அந்த நெருப்பு எங்கே செல்கிறது என்று ஆவியய் நம்புகிறவர்கள் சொல்லமுடியுமா?
    அதேபோலதான் மனித உயிர் நீங்கும்போதும்.. உயிர் என்பது ஒரு உணர்வுதானே யொழிய வாயுப் (காற்றுப்)பொருளல்ல..
    தமிழன், கோடிமுனய்

  10. கடவுள் இருக்கிறார் என்று முடிவு கட்டவும் இல்லை. கடவுள் இருக்கிறார் என்று வெறுமனே நம்பவும் இல்லை. ஆராய்ச்சி செய்வோம் என்றுதான் சொல்கிறோம்.

    1) உயிர் ஆராய்ச்சி மிக முக்கியமானது. துன்பத்திற்கு காரணம் என்ன, தீர்வு என்ன என்பது பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியமானது. இயற்கையின் கையில் அடிமையாக வாழ்கிறோம். துன்பம் வரும் போது, நெருங்கிய உறவினர் துயர் உரும் போது கையறு நிலையிலே இருக்கிறோமே தவிர துன்பத்தை தடுக்கவோ, துன்பத்திலிருந்து காக்கவோ வலிமையற்று அடிமை நிலையிலே வாழ்கிறோம்.

    “நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்” எனப் பாடிய ஒரு தமிழன், அந்த நிலை அடைந்து அப்படி பாடி இருக்க கூடும். அந்த நிலையை நாமும் அடைய வழி இருந்தால் அதை பற்றி ஆராய்வதை விட்டு கிரிக்கெட் மேட்சு பார்ப்பதில் மகிழ்ந்து, அதே மகிழ்ச்சி நீடிக்கும் என மனப் பால் குடிக்க விரும்பவில்லை.

    2) எல்லோரும் ஆராய்ச்சியில் ஈடு படுங்கள் என்று கட்டாயப் படுத்தவில்லை. விருப்பமுள்ளவர் ஆராய்ச்சி செய்யும் போது தடுக்காதீர்கள் என்று தான் சொல்கிறோம்.

    “மானாட மயிலாட” நிகழ்ச்சி பார்க்க ஒதுக்கி இருந்த நேரத்திலே மனக் குவிப்பு பயிற்சியில் ஈடுபட்டு ஆராய முடிவு செய்தால், அதில் மற்றவர் ஆட்சேபிக்க வேண்டியது எதுவும் இல்லை.

    3) ஸ்பானிய கடற்கரையில் நின்று
    ‘நேராகப் பார், தொலை நோக்கியை உபயோகித்தும் பார். பார்த்தால் ஏதாவது பெரிய நிலப் பரப்பு தெரிகிறதா ? “ஆம், இல்லை” என்று ஏதாவது ஒன்று மட்டும் சொல்’, என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    “அப்புறம் இன்னாயா? சும்மா போக வேண்டியதுதானே” என்று கேட்கலாம்.

    ஆனால் கொலம்பஸ் இப்படி எளிதாக முடிவு எடுக்கவில்லை. கடின உழைப்பு, துணிவு, ஆரய்ச்சி – அவன் போக நினைத்ததோ இந்தியா, ஆனால் கண்டு பிடித்ததோ புதிய நிலம். ஒன்றும் இல்லை என்று அவன் போகவில்லை.

    ஆயிரம் வருடம் முன்பு, இந்த உலகமே தட்டை என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ” இதிலே நிரூபிக்க என்ன இருக்கு ? கண்ணுல பாத்தா தெரியலையா- தட்டையா தானே இருக்கு” என்று எகத்தாளம் செய்தனர்.

    ஆனால் பகுத்தறிவு வாதி சும்மா கண்ணிலே பார்ப்பதை வைத்து, யூகத்தின் அடிப்படையிலே அவசரப் பட்டு முடிவுக்கு வர மாட்டான். ஆராய்ச்சி செய்வான். ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும்.

    நாங்கள் “கடவுள் இருக்கிறது, உடல் மரணம் அடைந்தாலும் உயிர் கண்டிப்பாக தொடர்ந்து வாழுகிறது” என்று நம்பவோ, முடிவுக்கு வரவோ, சாட்சி குடுக்கவோ இல்லை.

    ஆராய்ச்சி செய்கிறோம், நேரிலே உணர்ந்தாலோ, அறிந்தாலோ, அன்றி உயிர் தொடர்ந்து வாழ்வதாக நாங்கள் முடிவுக்கு வர போவதில்லை. நாங்கள் யாரையும் கட்டாயப் படுத்தவும் இல்லை.

  11. நண்பர்கள், “நிகழ் காலத்தில்…” மற்றும் “nerkuppai.thumbi” ஆகியோருக்கு நன்றி.

    நண்பர் “nerkuppai.thumbi” அவர்களே, நீங்கள் பெரம்பலூருக்கு அருகில் இருக்கும் நெக்குபே பகுதியை சேர்ந்தவரா?

  12. அய்யா திருவரங்கத்தாரே.. கொலம்பசு கடவுள் உண்டு என்று நிரூபிப்பதற்காகவா பயணப்பட்டார்? அவரின் தேடலுக்கு அடிப்படய் உண்மய் ஒன்று இருந்தது. அந்த அடிப்படய்யில் அவர் பயணம் அமய்ந்தது, அடய்ந்த இடம்தான் வேறே தவிர, நிலத்தில் புறப்பட்டு கய்லாயத்தய் அடய்ந்து கடவுளோடு கலந்துரய்யாடவில்லய்.. நேரடியான பொருள்தரும்படி விவாதிக்காமல் ஸ்பெயினுக்கும், கிரேக்கத்துக்கும் போய்விட்டீர்கள்? ‘‘மானாட மயிலாட‘ வுக்குப்போன மனதய்ப் பிடுங்கி
    மனக்குவிப்புப் பயிற்ச்சியில் தள்ளிவிட்டால் இப்படியான தடுமாற்றங்கள் தாராளம்தான்.. நில அமய்ப்பு, தட்டய் இல்லப்பா அது கோள் வடிவத்திலுள்ளதய்யா என்று சொன்னவரய்த்தான் நஞ்சுகொடுத்து கய்லாயமோ, வைகுண்டமோ ஏதோ ஒன்றுக்கு அனுப்பிவய்த்த கூட்டத்திலிருந்து வந்தவரல்லவா?
    மனிதன் வாழ்வதற்கு கடவுள்தான் அடிப்படய் என்ற கற்பனய்க் கருத்தய் கடவுளய் நம்பும் எளியவன் கூட இப்போது நம்புவதில்லய், அவனுக்கே உண்மய் புரியத்தொடங்கிவிட்டது, தன் உடம்பு நொந்தால்தான் வீட்டில் உலய் எரியும் என்றும்… கடவுளுக்கு உடுத்த உடய் கொடுப்பதும், கடவுள் உண்ண உணவு கொடுப்பதும், கடவுள் இருக்க இருப்பிடம் கட்டிக் கொடுப்பதும், தினம் அதய் குளிப்பாட்டுவதும், விளக்கு ஏற்றி ஒளி கொடுப்பதும் தான்தான்.. இதுபோன்ற எந்த உதவியும் சாமி தனக்குச் செய்யாது என்பது, கடவுளய் நம்புகிறவனுக்குத் தெரியும், கடவுளின் மேல் அவனுக்குள் புகுத்தப்பட்ட அச்சம் காரணமாகவே கடவுள் நம்பிக்கய் இன்னும் கொஞ்சம் அவ்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது..
    நில அமய்ப்பய் உருண்டய் என்று அறுதியிட்டுச் சொன்னவர், கடவுள் பெயரய்ச் சொல்லி மக்களய் ஏய்த்துப் சொகுசு வாழ்க்கய் வழும் சாமியாரல்ல, கடவுளுக்கு எதிராக சிந்தித்தவர்..
    யாரும் யாரய்யும் கட்டாயப் படுத்த முடியாது திருவரங்கத்தாரே.. அப்படி கட்டாயத்தின்பேரில் ஏற்படும் மாற்றம் நெடுநாள் நீடிக்கவும் செய்யாது ஆட்டோ சங்கர் ( அதென்ன, ஆட்டோசங்கர்- னு ஒரு சமூக விரோதியின் பெயர் ) அவர்களே..
    மீண்டும் நேர்கொள்வோம்.. தமிழன், கோடிமுனய.

  13. பதிவில் உள்ள அரசியல் புரியாமல் சம்மந்தமேயில்லாமல் மறுமொழியும் நல்ல பழக்கம் திருச்சிக்காரருக்கு இருக்கிறது.

    பதில் ஒரு ஒப்புமை , ஒன்றை விட மற்றொன்று சிறந்தது போல சொல்கிறார்.

    அதாவது பெரியார் பக்தியால் அப்பாவியாக பூணுல் விற்பவரை அரிவாளால் வெட்டுவதை விட பெரியாருக்கு சிலை வைத்தவர்கள் ஆபத்தில்லாதவர்கள் என்று புரிந்து கொள்ளளாம்.

  14. நான் “கடவுள் இருக்கிறது, உடல் மரணம் அடைந்தாலும் உயிர் கண்டிப்பாக தொடர்ந்து வாழுகிறது” என்று நம்பவோ, முடிவுக்கு வரவோ, சாட்சி குடுக்கவோ இல்லை.

    பகுத்தறிவு வாதி சும்மா கண்ணிலே பார்ப்பதை வைத்து, யூகத்தின் அடிப்படையிலே அவசரப் பட்டு முடிவுக்கு வர மாட்டான். ஆராய்ச்சி செய்வான். ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும்.

    ஆராய்ச்சி செய்கிறோம், நேரிலே உணர்ந்தாலோ, அறிந்தாலோ, அன்றி உயிர் தொடர்ந்து வாழ்வதாக நாங்கள் முடிவுக்கு வர போவதில்லை.

    மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!
    இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

    ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

    ந‌ம‌து ப‌திவுக‌ள் , இங்கே ப‌திவாகின்ற‌ன‌. ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் சிந்த‌னை செய்ய‌ட்டும்.

    என் மீது த‌னிப் ப‌ட்ட‌ முறையிலே காழ்ப்புண‌ர்ச்சி செலுத்தினால், க‌ருத்துக்களை வெளியிடுவ‌தை நிறுத்து மாட்டேன்.

  15. திருச்சிகாரன் (அ) ஆட்டோ சங்கர் அவர்களே,

    பதிவின் அர்த்தம் புரியாமல் ஏதோதோ புலம்பகூடாது.

    சாதி தீண்டாமையை எதிர்த்த வள்ளலார், ஆறுமுக சாமியாரின் கடவுள் நம்பிக்கையை விட உங்களை போன்ற சாதி அபிமானமுள்ள கடவுள் நம்பிக்கையாளர்கள் ஆபத்தானவர்கள்.

    உடனே “நான் சாதி மறுப்பாளர். கடவுள் விஷயத்தில் நான் …. ” அப்படின்னு ஆரம்பிச்சு ரஜினி அரசியல் பேசுற மாதிரி குழப்பி குழப்பி பேசினாலும் பேசுவீர்கள்.

    உங்களை போன்றோரின் கடவுள் நம்பிக்கை என்பது சாதி மறுப்பை வற்புறுத்தாத நம்பிக்கை. ஆனால் வள்ளலார் ஆறுமுக சாமியாரின் நம்பிக்கை என்பது சாதி தீண்டாமையை எதிர்ப்பது. இந்த பதிப்பு அவர்களின் சாதிமறுப்பினூடக உள்ள கடவுள் நம்பிக்கையை விளக்கும் விதத்தில் பதிப்பித்தது.

    இதில் உடனே நீங்கள் “சகோதரர் மதிமாறனின் கருத்தை வரவேற்கிறேன். இப்போது வாழும் யாரும் நமக்கு கடவுளை நேரிலே காட்டத் தயாராக இல்லை” உபதேசத்தை ஆரம்பித்து குளிர்காய வரவேண்டாம்.

  16. வேந்தன் அவர்களே,

    அதிகார‌ம் தூள் பற‌க்கிற‌தே!

    வான‌ளாவிய‌ அதிகார‌ம் உள்ள‌ ச‌பா நாய‌க‌ர் போல‌ ஆணை இடுகிறீர்க‌ள்

    இது சகோதரர் மதிமாறனின் தளம் அல்லவா?

    அவர் தானே இங்கே யார் பதிவிடலாம், யார் பதிவிடக் கூடாது என்று முடிவு செய்ய வேண்டியது.

    நீங்கள் அவரிடம் திருச்சிக் காரனின் கருத்துக்களை தளத்திலே அனுமதிக்காதீர்கள் என்று சொல்லி முயற்சி செய்வது நல்லது.

    இங்கே என்னிடம் கட்டளைகளைப் போட்டு பயன் இல்லை. நான் தொடர்ந்து பதிவு இடுவேன்.

    நான் சாதி வேறு பாடு பாராதவன், சாதி வேறுபாடுக‌ளைக் க‌ளைந்து, ஒரே ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் உடைய‌வ‌ன்.

    அந்த‌ நோக்கிலே செய‌ல் ப‌டும் போது சில‌ ப‌ல‌ இடையூருக‌ளை ச‌ந்திக்க‌ வேண்டும் என்ப‌தை அறிந்த‌வ‌ன் தான்.

  17. பகுத்தறிவாளர்களுக்கு மற்றவர்களை விட பொறுப்பும், நிதானமும், எச்சரிக்கையும் அவசியமாகும்.

    ஒவ்வொரு வார்த்தையையும் பகுத்தறிவாளன் மிகவும் யோசித்தே, பலமுறை சிந்த்திதே கூற வேண்டிய நிலை உள்ளது.

    ஏனெனில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயல் படுபவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. என்ன வேண்டுமானாலும் கூறலாம். முழ‌ம் முழ‌மாக‌ காதில் பூ சுத்தல‌ம்! கேட்டால் “எனக்கு நம்பிக்கை இருக்கிறது”, என்பார்கள்,
    “நான் சாட்சி குடுக்கிறேன்”, என்பார்கள். நேரிலே பார்த்து கை குலுக்கி விட்டு வந்தது போல அவ்வளவு உறுதியாக சொல்வார்கள்.

    ஆனால் பகுத்தறிவு வாதி நேர்மையானவன். அவன் தன்னால் முடிந்த வரைக்கும் உண்மையைத் தேடுவான். தெரிந்த வரையில் கண்டதைக் கூறுவான்.

    “கடவுள் இருக்கிறார் என்பதை இது வரை யாரும் எனக்கு காட்டவில்லை. எனவே கடவுள் இருப்பதை ஆதாரம் காட்டி நிரூபிக்காதவரை கடவுள் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது” என்பதே சரியான பகுத்தறிவு என்பது எனது தாழ்மையான கருத்து.

    எனவே பகுத்தறிவுவாதி, “கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?” என்று அறிய தொடர்ந்து ஆரய்ச்சி செய்வான். அதில் தவறில்லை.

    அதே நெர‌ம் க‌ட‌வுள் இல்லை, கடவுள் இல்ல‌வே இல்லை என்று கூறும் க‌ருத்து சுத‌ந்திர‌ம் எல்லொருக்கும் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும். பார்க்காத‌ க‌ட‌வுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத‌ க‌ட‌வுளை பார்க்க‌வில்லை என்று கூற‌ அனும‌தி இல்லையா? இதைக் கூறினால் தண்ட‌ன.!

    பகுத்தறிவுவாதி, “கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?” என்று அறிய தொடர்ந்து ஆரய்ச்சி செய்வான். அதில் தவறில்லை. நாம் ந‌ம்பிக்கை வாதிகளை விட‌ நேர்மையாக‌ இருப்பொம்.

  18. ஆட்டோ சங்கர் அவர்களே,

    //ஆட்டோ சங்கர் (16:01:26) :

    பதிவில் உள்ள அரசியல் புரியாமல் சம்மந்தமேயில்லாமல் மறுமொழியும் நல்ல பழக்கம் திருச்சிக்காரருக்கு இருக்கிறது.

    பதில் ஒரு ஒப்புமை , ஒன்றை விட மற்றொன்று சிறந்தது போல சொல்கிறார்.

    அதாவது பெரியார் பக்தியால் அப்பாவியாக பூணுல் விற்பவரை அரிவாளால் வெட்டுவதை விட பெரியாருக்கு சிலை வைத்தவர்கள் ஆபத்தில்லாதவர்கள் என்று புரிந்து கொள்ளளாம்.//

    உங்க‌ளுடைய‌ புரித‌ல், சிந்த‌னை, நிலைப் பாடு வேறு.

    என்னுடைய‌ புரித‌ல், சிந்த‌னை, நிலைப் பாடு வேறு.

    I cant get into your shoes! For that matter there is no need for me to get into your shoes.

  19. வள்ளலாரை வழிபட்டால்

    1. தேவர் காலடி மண்ணே…
    2. கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரு…
    3. எஜமான் காலடி மண்ணெடுத்து…

    போன்ற பாடல்களுக்கு இசையமைப்பவரின் பக்தி சாலச் சிறந்தது. சுத்தம் !

  20. நெற்குப்பை சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே ஒரு சிற்றூர்.

  21. Thanks Mr. Thumbi,

    I think we have many villages named நெற்குப்பை in Tamil Nadu.

  22. ஆட்டோ சங்கர் அவர்களே,

    //ஆட்டோ சங்கர் (16:01:26) :

    பதிவில் உள்ள அரசியல் புரியாமல் சம்மந்தமேயில்லாமல் மறுமொழியும் நல்ல பழக்கம் திருச்சிக்காரருக்கு இருக்கிறது.

    பதில் ஒரு ஒப்புமை , ஒன்றை விட மற்றொன்று சிறந்தது போல சொல்கிறார்.

    அதாவது பெரியார் பக்தியால் அப்பாவியாக பூணுல் விற்பவரை அரிவாளால் வெட்டுவதை விட பெரியாருக்கு சிலை வைத்தவர்கள் ஆபத்தில்லாதவர்கள் என்று புரிந்து கொள்ளளாம்.//

    Whu do you view every article as some thing against the Bhramins.

    Was Vallalaar against Bhramins? Was சிவனடியார் ஆறுமுகசாமி against Bhramins?

  23. அய்யா ஆட்டோ சங்கர் ( திருச்சிக்காரரே..) அவர்களே..

    நான் சாதி வேறு பாடு பாராதவன், சாதி வேறுபாடுக‌ளைக் க‌ளைந்து, ஒரே ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் உடைய‌வ‌ன்.
    பூணூல் அணிவதன் அடய்யாளம் என்னவாம்? பூணூல் என்பது சாதியின் அடய்யாளமன்றி வேறென்ன? அதுவும், பிரம்மனுடய்ய நெற்றியிலிருந்து பிறந்தவர்களாக்கும் நாங்கள், அதனால் உங்களய்விட உயர்ந்தவங்க, நீங்கள்ளாம் சூத்திரவாளாக்கும் என்று எங்களய்ப் பார்த்து சொல்லாமல் சொல்லும், பூணூலய்யும் அணிவேன், ஆனால் சாதியற்ற சமுதாயம் அமய்க்கவும் பாடு படுவேனென்று சொன்னால்… இப்படிச் சொல்பவரய் எந்த நிலய்யில் வய்த்துப் பார்ப்பது நாங்கள்? தமிழன், கோடிமுனய்.

  24. ம‌னித‌ரிட‌ம் உய‌ர்வு தாழ்வு க‌ருதாத‌ வ‌ரையிலே, எல்லா ம‌னித‌ரையும் ச‌கோத‌ர‌ராக‌ க‌ருதும் ம‌ன‌ப் பாங்கு உடைய‌வ‌ர் பூணூல் அணிந்தால் என்ன‌, அணியாவிட்டால் என்ன‌? அவ‌ர்களை, க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து பாணியிலே, பூணுலை க‌ழ‌ட்டு என்று கூற‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌? வேண்டுமானால் , விருப்ப‌ப் ப‌டும் எவ‌ரும் பூணூலை அணிந்து கொள்ள‌லாமே? ர‌ங்க‌ நாத‌ன் தெருவிலே எத்த‌னையோ க‌டைக‌ளில் கிடைக்கிற‌தே? அதை வாங்கி அணிந்து கொள்வ‌தை யாரும் த‌டுக்க‌ வில்லையே?

    ச‌ரி பூணுலை அணியாம‌ல் நிறுத்தி விட்டு, அத‌ற்க்குப் ப‌தில் க‌ழுத்திலே அணியும் த‌ங்க‌ ச‌ங்கிலியை பூணூலாக‌ நினைத்துக் கொண்டு சாதி அபிமான‌த்தை தொட‌ர்ந்தால் என்ன‌ செய்ய‌ போகிறீர்க‌ள்? த‌ங்க‌ ச‌ங்கிலி அணிய‌க் கூடாது என்று கூற‌ப் போகிறீர்க‌ளா?

    பிராமணர்கள் பூணூல் அணிவதால் அவர்கள் தனித்துவ சாதியாக இருப்பதாக கருதினால், அவர்களின் அந்த தனி சிறப்பை அழிக்க சிறந்த வழி மற்றவர்களும் பூணூல் அணிவதுதான். பார்ப்பனர் அல்லாதவர்கள் அனைவரும் பூணூலை கடையிலே வாங்கி அதை உடலின் குறுக்கே அணிந்து கொண்டால் அப்போது பார்ப்பனர்கள் என்ன செய்ய முடியும்?

    சுப்பிரமணிய சாமியை வைத்து சுப்ரீம் கோர்ட்டிலே பார்பனர் அல்லாதவர்கள் உடலின் குறுக்கே நூலை அணியக் கூடாது என்று ஸ்டே ஆர்டர் வாங்க முடியுமா?

    அப்படி எந்த கோர்ட்டும் ஸ்டே தர முடியாது. ஆனால் வாங்கும் போது நல்ல தரமான பூணூலாக வாங்கி கம்பீரமாக அணிந்து வேற்று உடம்புடன் தெருவிலே நடந்து சொல்லுங்கள்.

    பல பார்ப்பனர்களுக்கு அப்போதுதான் அவர்கள் உடலில் பூணூல் இருப்பதே நினைவுக்கு வரும்!

    இப்படியாக பூணூலை அணிந்து நானும் மார்பிலே பூணூல் உள்ளவன்தான் என்ற நிலையை உருவாக்கினால் பார்ப்பனர்களால என்ன செய்ய முடியும்?

    சாதி ஒழிப்பிற்கு இதுவே சிறந்த வழி. அடுத்தவனை பூணூலை அணியாதே என்று கூற நமக்கு உரிமை இல்லை. அதைப் போல வேறு யாரும் பூணூல் அணியக் கூடாது என்று சொல்லும் உரிமையும் பாரப்பனருக்கு இல்லை.

    நீங்கள் பூணூலை சாதியின் அடையாளமாக பார்க்கிறீர்கள். பூணூலை அணிந்தவர்கள் சிலர் அதை அணிந்ததாலேயே தங்களை உயர்வானவராக கருதிக் கொண்டதால் , அப்படி அவர்கள நடந்து கொண்டதால் நீங்கள் இப்படி கருதுவது புரிந்து கொள்ளக் கூடியதே.

    ஆனால் நான் பூணூலை அணிவது, நான் உயர்ந்தவன் என்று பெருமைப் பட்டுக் கொள்ள அல்ல, பிறரை வித்யாசப் படுத்தி வாழ்வதற்கு அல்ல.
    நான் பூணூலை அணிவது, அது என் குறிக்கோளை நினைவு படுத்துவதால். அது தவறான எண்ணங்கள் மனதில் எழும் போது எச்சரிப்பதால். நான் அணியும் பூணூல் எனக்கும் என் மனசாட்சிக்கும் தொடர்பு படுத்துவதாக உள்ளது.
    ஏன் எங்களுக்கு எல்லாம் மனசாட்சி இல்லையா, நாங்கள் எல்லாம் தறி கெட்ட வாழ்க்கையா வாழ்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். நான் சொன்னது அந்த பொருளில் இல்லை. நீங்கள் வாழ்வது சிறந்த வாழ்க்கைதான். நாம் எல்லோரும் ஒரே முறையான வாழ்க்கையை தான் வாழ்கிறோம்.
    உண்மையிலே காலையில் எழுந்திருப்பது முதல் இரவு படுக்கும் வரை, நாம் செய்யும் செயல்கள் , உண்ணும் உணவு , பேசும் பேச்சு எல்லாமே ஒன்றுதான்.

    அப்ப என்ன, பூணூலை அறுக்க வேண்டியதுதானே, இவ்வளவு பேச்சு பேசுறியே என்று நீங்கள் கூறலாம்.
    பூணூல் சில முக்கியமான விடயங்களை நினைவு படுத்துகிறது.
    குளித்து விட்டு வரும்போது, உடல் முழுவதையும் துவட்டினாலும், பூணூலில் ஈரம் போக அதை அழுத்தி துவட்டுகிறேன். அப்போது மனக் குவிப்பு பயிற்ச்சியில் ஈடுபட எனக்கு நினைவு வருகிறது. கூடுமான வரையில் எல்லா நாட்களிலும், விடுமுறை நாட்களில் நிச்சயமாகவும் நான் மனக் குவிப்பு பயிற்சியில் ஈடுபடுகிறேன்.

    நான் கடவுளை கண்டதில்லை என்றும், கடவுள் என்று ஒருவர் உண்மையில் இருக்கிறாரா என்பதை, அப்படி இருந்தால் நான் நேரில் கண்ட பிறகே அதை உறுதி செய்து கூற முடியும் என்பதையும் பல தளங்களில் எழுதி விட்டேன். இந்த முயற்ச்சியில் எனக்கு மனக் குவிப்பு அவசியமாகிறது.
    எனவே சமத்துவ சமுதாயம் அமைக்க வேண்டும் என்பதான என் நோக்கத்திற்கோ, அதற்க்கு நான் தேர்ந்து எடுத்த பாதைக்கோ நான் அணியும் பூணூல் தடையாக இல்லை, தூண்டு கோலாகவே உள்ளது.
    நீங்கள் ஏன் பூணூல் அணியக் கூடாது?
    நீங்கள் ஏன் பூணூல் அணிந்து ஒவ்வொரு நாளும், அல்லது குறைந்த பட்சம் வார விடுமுறை நாட்களிலாவது மனக் குவிப்பு பயிர்ச்ச்யில் ஈடு படக் கூடாது|?
    அப்படி தொடர்ந்து ஒரு 6 மாதம் மனக் குவிப்பு பயிற்ச்சி செய்து, அதனால் உங்கள மனம் அமைதியும், வலிமையும், முன்னேற்றமும் பெற்று உள்ளதா என்பதை எல்லோருக்கும் தெரியப் படுத்தலாமே?
    என் மனதில் வித்யாசம் இல்லாத போது, நான் யாரையும் தாழ்வாக எண்ணாத போது, எல்லோரின் மன நிலையையும் சமத்துவ சமூகத்துக்கு உயர்த்துவதில் நேர்மையான நோக்கம் உடையவனாக இருக்கும் போது,
    “நான் பூணூலை அறுத்து விட்டேன், பார்த்தீர்களா நான் சமத்துவக் காரன்” என்று அறை கூவ வேண்டுமா?
    பூணூல் அணியாதவர்கள் சாதி வித்தாயசம் பார்க்கவில்லையா? பூணூல் அணியாதவர்கள் சாதி காழ்ப்புணர்ச்சி உடையவராக இருப்பதில்லையா?.
    சாதி வெறியும் , சாதிக் காழ்ப்புணர்ச்சியும் மனதில் தானே இருக்கிறது. அது பூணூலிலும் ஆடைகளிலும் ஒட்டிக் கொண்டு இருக்கிறதா?
    பள்ளிகளில் எல்லா மாணவர்களும் சீருடை அணிகிறார்கள்- சாதி வித்யாசம் மறைந்து விட்டதா?
    சன் கிளாஸ் அணிவது இரண்டு காரணக்களுக்காக இருக்கலாம்.
    ஒன்று கண்ணைக் காக்க, இரண்டாவது ஸ்டைலுக்காக.
    பூணூல் அணிவதும் இரண்டு காரணங்களுக்காக இருக்கலாம். ஒன்று தான் உயர்ந்த சாதி என்ற எண்ணத்தில். இரண்டாவது பொருப்புகளையும் , கடமைகளையும் நினைவூட்டி மனசாட்சியின் காவலனாக இருக்க.
    நான் சன் கிளாஸ் அணிவது கண்ணைக் காக்க. பூணூல் அணிவது பொருப்புகளையும் , கடமைகளையும் நினைவூட்டி மனசாட்சியின் காவலனாக இருக்க.
    நீங்கள் என்னை பூணூலை அறுக்க சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களைப் பூணூல் அணியச் சொல்லுகிறேன்.
    ——————–

  25. // பொறுப்புகளய்யும் கடமய்களய்யும் நினய்வூட்டி மனசாட்சியின் காவலனாக இருக்க //
    // மனதய் ஒருமுகப் படுத்த // பூணூல் மேல் இப்படி ஒரு உயர்ந்த மதிப்பய் ஒட்டுவதற்கு உங்களய்ப் போன்றவர்களால் மட்டுமே முடியும்… காலகாலமாக பூணூல் சாதிவுயர்வின் அடய்யாளமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு பார்ப்பனரய்க் கேட்டாலும் அது தொடர்பாகவே பதிலளிப்பார், நீங்கள் கூறும் பதிலென்பது உங்களாலும், உங்கள் ஒருவருக்காகவும் உருவாக்கப் பட்டதாகவே தெரிகிறது, இந்த பூணூல் பற்றி எளிமய்யான கருத்து ஒன்று உண்டு: ஒரு தெருவிலிருக்கும் பத்து வீடுகளில் ஒரு வீட்டில் மட்டும் ‘‘இது பத்தினியின் வீடு’ என்ற பலகய் தொங்கினால் எப்படியிருக்குமோ, அதுபோலதான் உங்கள் பூணூலின் கதய்யும். உனது அந்த பத்தினி பலகய் மற்றவர்களய் கீழ்தரமாக பார்க்கத் தூண்டுகிறது, அதனால் அதய் அணிவிக்காதே என்றால்… வேண்டு மென்றால் உங்கள் வீட்டிலும் தொங்கவிடுங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்..
    அதெப்படி, பூணூல் மனக்குவிப்புப் பயிற்சிக்கு உதவுதென்றே தெரியவில்லய்.. குனிந்து பார்த்துக் கொண்டா, அல்லது ஒயிட்பெல்ட்டய் கய்யில் பிடித்துக்கொண்டா ஒருமுகப் படுத்துவீர்கள் மனதய்? மேலும், குளித்தபின் உடம்பிலுள்ள ஈரத்தய்த் துடய்ப்பதற்காக… அதென்ன, முப்பிரி நூலா, உடுத்திக் குளிக்கும் துண்டா? அதய் வய்த்து ஈரத்தய்த் துடய்க்க..! எதய் எதற்கு பயன் படுத்துவது என்ற வரய்முறய் இல்லய்யா? அதுசரி…சாதியின் அடய்யாளமான பூணூலய் அப்படி ஒரு பயிற்ச்சிக்கு பயன் படுத்துகிற தாங்கள், பூணூலய் உடுத்திக் குளிக்க… மன்னிக்கணும்.. ஈரத்தய்த் துடய்க்க பயன் படுத்துகிறேன் என்று சொல்வதில் ஆச்சரியமில்லய்.
    உழய்க்கும் தமிழர்களய்யும் பூணூல் அணியச் சொல்கிறீர்கள்.. உங்களுக்கு முன்பே சுப்பிரமணிய பாரதி புதுவய்யில் வய்த்து தமிழர் ஒருவருக்கு பூணூல் அணிவித்தும், ஒன்றும் வேலய்க்காகவில்லய், இந்த விடயத்திலும் உங்கள் வழிகாட்டுதலய்த்தான் நாங்கள் ஏற்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்… அந்தகுணம் மாறவேயில்ல பாத்தீங்களா.. உங்களோடு சேர்ந்து ( ஒரு பேச்சுக்கு ) சமத்துவ சமுதாயம் அமச்சாலும் அங்கேயும் தலய்மய் பொறுப்பய் குறி வய்ப்பீங்கதானே..
    பூணூல் தடய்யாக இல்லய் உங்களுக்கு. உங்களய் அணுக தமிழர்களான எங்களுக்குத் தடய்யாக இருக்கிறது.
    தமிழன், கோடிமுனய்.

  26. தமிழன் மற்றும் திருச்சி இருவரும் “பாரதி’ ய ஜனதா பார்ட்டி” படிக்கவில்லை என நினைக்கிறேன். படிக்க பரிந்துரைக்கவில்லையெனினும் படித்தால் கட்டுரையாளரின் அரசியல் தெள்ளத்தெளிவாகும்.

    தமிழன் இங்க ‘பத்தினிப் பலகை’ வைத்திருப்பது நீங்களும் தான்.

  27. பூணுல் என‌க்கும் என் ம‌ன‌சாட்சிக்கும் தொட‌ர்பாக‌ இருக்கிர‌து. நாம் ஒரு பொருளை புனித‌மாக‌ க‌ருதினால் அது ந‌ம்மை சில க‌ட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிர‌து. த‌ந்தையைக் க‌ண்டால், பிடிக்க‌ எடுத்த‌ சிக‌ரெட்டை கீழே வைத்து விடுகிரேன். நான் என்னை உய‌ர்ந்த‌வ‌னாக‌ க‌ருதாத நிலையில், நான் யாரையும் தாழ்ந்த‌வ‌ராக‌ க‌ருதாத‌ நிலையில், க‌ட்ட‌ய‌த்துக்காக‌ பூணூலை விடுவ‌து என் ம‌ன‌சாட்சியை பொருத்த‌ அள்விலே கோழைத் த‌ன‌ம் ஆகும். ச‌ரியான‌ செய‌ல் அல்ல‌.

    ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்துக்கு நீங்க‌ளே த‌ல‌மை தாங்குங்க‌ள். உங்க‌ளிட‌ம் உள்ள‌ சிற‌ ந்த‌ சிந்த‌னைக‌ளை வ‌ர‌வேற்கிரோம். ப‌குத்த‌றிவு என்ற‌ வார்த்தையை முத‌லில் நான் க‌ற்ற‌து பெரியாரிட‌ம் இருந்தே. பெரியாரின் பல‌ க‌ருத்துக்க‌ள் என‌க்கு சிந்த‌னையை தூண்டி இருக்கின்ற‌ன‌. ஆனால் நீங்க‌ள் என்னை ந‌ம‌ப‌வில்லை.

    (பூணூலை வைத்து என் உட‌ல் ஈர‌த்தை துவ‌ட்டவில்லை, உட‌லில் ஈர‌ம் போனாலும் , பூணூல் ஈர‌ம் போகாத‌ நிலையிலே, அத‌ற்காக‌ அந்த‌ப் பூணுலை அழுத்தி துடைக்கும் போது, சிறிது நேர‌ம் ம‌ன‌க் குவிப்பு ப‌யிர்ச்சியில் ஈடுப‌ட‌ அது என‌க்கு நினைவுறுத்தும் வ‌கையில் இருக்கிற‌து. இது என் த‌னிப் ப‌ட்ட‌ உண்ர்வே.)

  28. //உங்களோடு சேர்ந்து ( ஒரு பேச்சுக்கு ) சமத்துவ சமுதாயம் அமச்சாலும் அங்கேயும் தலய்மய் பொறுப்பய் குறி வய்ப்பீங்கதானே..//

    சமத்துவ சமுதாயம் என்பதே சேர்ந்து அமைக்கப் படுவதுதான். சேர்ந்து சமதாயம் அமைக்காமல் அவரவர் வீட்டிலே, அவரவர் தெருவிலே மட்டும் சமத்துவ சமுதாயம் அமைக்க முடியுமா?

    //உங்களோடு சேர்ந்து ( ஒரு பேச்சுக்கு ) சமத்துவ சமுதாயம்//

    அப்படியானால் உங்களுக்கு உண்மையாகவே அமைக்கும் எண்ணம் இல்லையா?

  29. திரு தமிழன்,கோடிமுனய் அவர்களே,
    ”///நான் சாதி வேறு பாடு பாராதவன், சாதி வேறுபாடுக‌ளைக் க‌ளைந்து, ஒரே ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் உடைய‌வ‌ன்.///”
    ///உங்களய்விட உயர்ந்தவங்க, நீங்கள்ளாம் சூத்திரவாளாக்கும் என்று எங்களய்ப் பார்த்து சொல்லாமல் சொல்லும், பூணூலய்யும் அணிவேன், ஆனால் சாதியற்ற சமுதாயம் அமய்க்கவும் பாடு படுவேனென்று சொன்னால்… இப்படிச் சொல்பவரய் எந்த நிலய்யில் வய்த்துப் பார்ப்பது நாங்கள்? தமிழன், கோடிமுனய்.///

    ஜாதி வேறுபாடுகளைக் களைய பிராமணர்கள் பூணூலை அணியாமல்,பெரும்பான்மையினரைப் போல் இருந்தால் தான் சமத்துவ சமுதாயம் அமையும் என்று கூறும்
    நீங்கள் கூட நாத்திகர்களாக, மிகப் பெரும்பான்மை ஆத்திக மக்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறீர்கள்.

    ஒருபுறம் பெரும்பான்மை ஆத்திக மக்களை காட்டுமிராண்டிகள்,முட்டாள்கள்,பைத்தியக்காரர்கள் என்று கூறிக்கொண்டு,
    நாங்கள் மட்டுமே பகுத்தறிவாளர்கள் என்று மற்ற ஆத்திகர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட ,கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு ,
    மறுபுறம் அவர்களுடன் சேர்ந்து சமத்துவ சமுதாயம் உருவாக்க நீங்கள் நினைக்கும் போது,
    ஆத்திகர்களான பிராமணர்கள் பூணூல் அணிந்துகொண்டே சமத்துவ சமுதாயம் உருவாக நினைக்கக் கூடாதா?

    ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு அடையாளங்கள்,சடங்குகள் உள்ளன.உதாரணத்திற்கு பெண்கள் அணியும் மாங்கல்யம்.

    ஒவ்வொரு ஜாதியிலும் குழந்தை பிறப்பு,பெயர் வைத்தல்,காது குத்துதல்,திருமணம் செய்தல்,மற்றும் இறப்பு சம்பந்தமான சடங்குகளில் வேறுபாடுகள் உள்ளன.ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ்வொரு விதமான மாங்கல்யம் அணிகிறார்கள்.இதைப் போல் தான் பிராமணர்கள் பூணூல் அணிகிறார்கள்.எங்களுக்கு பிராமணர்களுடன் சேர்ந்து சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    எங்களைப் போன்ற ,மிகப் பெரும்பான்மை ஆத்திகர்களை வெறுக்கும் ,கேவலமாகப் பார்க்கும்,கேவலமாகத்திட்டும்,-உங்களைப் போன்ற கருப் புச் சட்டை,அணிந்த, அணியாத நாத்திகர்களுடன் , சேர்ந்து சமத்துவ சமுதாயம் உருவாக நாங்கள் நினைக்கும் போது, பூணூல் அணிந்த பிராமணர்களையும் சேர்த்துக்கொண்டு எங்களால் சமத்துவ சமுதாயம் அமைக்க முடியாதா?

    ஜாதி அடையாளமாக,பெரும்பான்மை ஆத்திக மக்களிடமிருந்து வேறுபட்டது என்று பூணூலை எடுக்கச் சொன்ன நீங்கள் ,உங்கள் நாத்திகவாதம்,பகுத்தறிவு வாதம்,கருப்புச்சட்டை போன்ற பெரும்பான்மை ஆத்திக மக்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும்,உங்கள் நாத்திக கருத்துக்களையும் வெளி அடையாளங்களையும் ,விட்டு ஆத்திகர்களுள் ஐக்கியமாவீர்களா?

    அதாவது சமத்துவ சமுதாயம் உருவாக அனைத்து மக்களிடமிருந்து வேறுபடாமல்,அனைத்து மக்களைப் போல் கடவுளைக் கும்பிடுவீர்களா?

    சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்றால்,வெறும் ஜாதி வேறுபாடுகளை களைந்தால் மட்டும் போதாது,மத,மொழி, இன வேறுபாடுகளையும் களைய வேண்டுவது அவசியம்.

    ஜாதி அடையாளமாக,பெரும்பான்மை மக்களிடமிருந்து வேறுபட்டது என்று பூணூலை எடுக்கச் சொன்ன நீங்கள் மத அடையாளமான,பெரும்பான்மை மக்களிடமிருந்து வேறுபட்டுள்ள இஸ்லாமியர்களின் குல்லா,பர்தா முதலியவற்றை எடுக்கச் சொல்வீர்களா?

    இதே போல் சமத்துவ சமுதாயம் அமைக்க தடையாக உள்ள,பெரும்பான்மை மக்களுக்கு வெறுப்பை உருவாக்கும் ,உங்கள் தமிழ் தேசியம் என்ற இன, மொழி வேறு பாடுகளை களையத் தயாரா?

    தமிழன்,கோடிமுனை அவர்களே, வெளி அடையாளங்களுக்கு முக்கியத்துவம் தராமல்,உள்ளிருந்து சமத்துவத்தை உருவாக்க நீங்களும் நாங்களும்,சேர்ந்து பாடுபடுவோம்.

    வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே சமத்துவ சமுதாயம் உருவாக மிகச் சிறந்த வழியாகும்.

  30. திரு தனபால் அவர்களே… நீங்கள் ஆரியனோ, திராவிடரோ தெரியாது, உங்கள் கருத்துக்களய் பார்க்கும்போது நீங்கள் ஒரு ஆரியனாகத்தான் இருக்கவேண்டும், காரணம், பகுத்தறிவுன்னா என்ன, நாத்திகம்னா என்ன, கருப்புச் சட்டய் எதுக்கு, பொது உடமய் சமூகம்னா என்ன, தமிழ் மொழி உணர்வு எதுக்கு…, இதற்கு எதிர் நிலய்யில் இருக்கும் பூணூல்னா என்ன…? இதுபோன்ற விடயங்களில் ஒன்றில் கூட நீங்கள் தெளிவாக இல்லய், என்பது விளங்குகிறது.
    நாங்கள் நாத்திகராக இருப்பது எங்களுக்காக அல்ல.. எங்கள் தமிழ் மக்கள்தான் எங்களய் நாத்திகராக ஆக்கியது.. எங்கள் தமிழர்களுக்காக நாத்திகரானோம், தமிழர்கலய் சாதி என்ற சாக்கடய்யினால் வெட்டி கொல்வதும், உடமய்களய், உறவுகளய் இழந்து தவிப்பதும், அந்த சாதியய் உண்டாக்கி தமிழர்களய் மோதவிட்டும், தமிழனய் சூத்திரன் ( வேசிமகன் ) என்று கேவலப்படுத்தி, கடவுள் பெயரால் பல வழிகளிலும் எங்களய் ஏமாற்றி பிழய்ப்பு நடத்தும் நயவஞ்சக நச்சு பார்ப்பனர்களய் அடய்யாளம் காணாமல், அவனய்யே உயர்ந்தவன் என்று ஏற்று, அவனுக்கு கீழ் இருப்பதும், எங்களய் நாங்களே தாழ்ந்தவர்கள் என்று கருதவும், நாய் சுதந்திரமாக நடமாடும் தெருவில் மனிதர்களான எங்கள் மக்களய் நடக்கவிடாமல் நாய்க்கும் கீழாக எங்களய் மிதிப்பதும், குடிசய்யோடு கொழுத்துவதும், எங்கள் மக்கள் வாயில் பீ யய் திணிப்பதும்…இதெல்லாம் இந்த பார்ப்பான் கொண்டுவந்து எங்கள் மேல் திணித்த இந்துமதம் செய்த தூண்டுதலல்லவா.. இப்படிப்பட்ட மதங்களும், இந்த மதங்களின் மூலமான தண்டச் சோறு, கய்யாலாகாத கபோதிப் பய சாமிகளும் எங்களுக்கு வேண்டாம்.. இதுவே எங்கள் கடவுள் மறுப்பின் அடிப்படய். இதில் எந்த எழவு சாமிக்கும் விதிவிலக்கே கிடய்யாது, எல்லா எழவுகளய்யும் குழிதோண்டிப் புதய்த்தால்தான் தமிழனுக்கு விடிவுகாலம்..
    கருப்புச் சட்டய் உணர்த்துவது எங்கள் தமிழ் மக்களின் இழிவய். எங்கள் தமிழர்களின் இழிவு மாறும்வரய் கருப்புச் சட்டய் எங்களோடே இருக்கும்.
    கடவுளய் வணங்குபவன் காட்டுமிராண்டி என்று திட்டுவதென்பது, என்பிள்ளயய் நல் வழிப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தும் சொல் அது, அப்படித்திட்டுவது அவன் அன்னியன் என்பதாலா? பெரும்பாலான பிள்ளய்கள் அப்படியேதான் நடந்துகொள்கிறார்கள், அவர்களய்க் கண்டிப்பதய் விட்டு நீயும் அவர்களய்ப் போல மாறிவிடு.. இதுதான் அறிவுடய செயலா, தனபால் அவர்களே… பார்பபனர்களோடு அமய்க்கும் சமத்துவ சமுதாயத்தில், சமத்துவமாக இருக்காது.. தமிழர்களுக்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் பார்ப்பான் திராவிடனுடன் வாழமுடியும், தமிழனுக்குள் ஏற்றத்தாழ்வுகளும், இந்து மதமும் இல்லய்யென்றால் தமிழர்கள் ( திராவிடர்கள் ) பார்ப்பானய் விட்டுவய்க்க மாட்டார்கள்.
    எங்கள் பார்வய்யல் தமிழர்களய் தமிழர்களாகத்தான் பார்ப்போம். இசுலமியனுக்கு ஒரு அளவுகோலும், கிறித்தவனுக்கு ஒரு அளவுகோலும், பார்ப்பன சாமியய்க் கும்பிடுபவனுக்கு… யாரும் விதிவிலக்கல்ல தனபால் அவர்களே.. இதில் ஏது பர்தா குல்லா ?
    //வேற்றுமய்யில் ஒற்றுமய்// வந்தேறிகள் நம்மய்ச் சுரண்டிப் ஏமாற்ற பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் இது..’வேற்றுமய் உள்ளே இருந்தால் ஒற்றுமய் வெளியேதான் நிற்கும்.‘‘
    மீண்டும் நேர் கொள்வோம்… தமிழன், கோடிமுனய்.

  31. தனபால் அவர்களே,

    சிறப்பாக சொன்னீர்கள்.

    எல்லா மக்களும் கனவானாக, ஒருவர் மற்றவரை மதிக்கவும் அன்பு செய்யவுமானன மனநிலையை மக்கள் அடையவும்,

    அதன் மூலம் சாதி மத வேறுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை அமைக்கவும் நாம் உழைப்போம்.

    கடவுளை வழிபடுவதும், வழி படாததும் அவரவர் விருப்பம். ஆனால் கடவுளின் பெயரால் கட்டளைகளைப் போட அனுமதிக்க முடியாது.

    கடவுளின் பெயரால் வெறுப்பு கருத்துக்களை, வன்முறையை , சாதியை நியாயப் படுத்துவதையும் அனுமதிக்க முடியாது.

    இவ்வாறாக நேர்மையான வகையிலே சமத்துவ சமுதாயம் அமைப்போம்.

    காழ்ப்புணர்ச்சி, சாதி வெறி ஆகியவற்றால் மனதிலே வெறுப்பு எண்ணம் நிரம்பிய நிலையில் இருப்பவருக்கு இதைப் புரிந்து கொள்ளவோ, நம்புவதோ கடினமே.

    அனைவரும் சமமே என்ற வகையிலே எல்லோரையும் சகோதரராகவே நாம் நோக்குவோம்.

    இவ்வளவு செய்தும், சமத்துவ சமுதாயத்தில் இணைய விருப்பமில்லாத , சாதி காழ்ப்புணர்ச்சியாளரை நாம் என்ன செய்ய முடியும்.

    சமத்துவ சமுதாயத்தில் நம்பிக்கை இல்லாத, அதிலே இணைய விரும்பாத, வெறுப்பு கருத்துக்கள் உடையவர்கள், சமத்துவ சமுதாயத்தில் இனிய விரும்பவில்லை என்றால் அது அவர்கள் விருப்பம். பொது மக்களோடு சேர்ந்து வாழ விருப்பமில்லாதவரி நாம் கட்டாயப் படுத்த முடியாது.

    நாம சமத்துவ சமுதாயம் அமைக்கலாம், வாங்க தனபால். சேர விரும்புபவர் சேரட்டும்.

  32. ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்ச‌ர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே,

    நல்லா கவனிங்க, அலெக்சாந்தரைப் போல, பாப‌ரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் ம‌ட்டும் வ‌ர‌வில்லை.

    முழு ச‌மூக‌மாக‌ குய‌வ‌ர்க‌ள், த‌ச்ச‌ர்க‌ள், நெச‌வாள‌ர்க‌ள், ச‌ல‌வைத் தொழிளாளிக‌ள், ம‌ருத்துவ‌ர்க‌ள், ச‌மைய‌ல் கார‌ர்க‌ள், பாட‌க‌ர்க‌ள், புல‌வ‌ர்கள், சேனாதிப‌திக‌ள், அமைச்ச‌ர்க‌ள் உள்ளிட்ட‌ மிக‌ப் பெரிய‌ ச‌மூக‌ம் இட‌ம் பெய‌ர்ந்து உள்ள‌து என்று கூற‌ப் ப‌டுகிர‌தே,

    அப்ப‌டியானால் அந்த‌ ச‌முதாய‌ம் உருவாக‌ ப‌ல‌ ஆயிர‌ம் ஆண்டுக‌ள் ஆகியிருக்குமே,

    அப்ப‌டி அவ‌ர்க‌ள் ச‌மூக‌மாக‌ உருவெடுத்த‌ நில‌ப் பிர‌தெச‌ம் எது?

    ருஷியாவா? ம‌த்திய‌ ஆசியாவா?

    ருஷியாவிலோ, ம‌த்திய‌ ஆசியாவிலோ ஆரிய‌ர்க‌ள் ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ கால‌ம் வாழ்ந்து ஒரு ச‌மூக‌மாக‌ உருவான‌ வ‌ர‌லாறு, உல‌க‌ வ‌ர‌லாற்றின் ப‌க்க‌ங்களில் இல்லையே!

    நைல் ஆற்று நாகரீக‌ம், ம‌ஞ்ச‌ள் ஆற்று நாகரீக‌ம், இதை எல்லாம் விட‌ ப‌ழைமையான‌ நாகரீக‌ம் சிந்து ச‌ம‌வெளி நாகரீக‌ம் என்றால்,

    அவ‌ர்களை 5000 வ‌ருட‌ங்களுக்கு முன்பு விர‌ட்டி அடித்த‌தாக‌க் கூற‌ப் ப‌டும் ஆரிய‌ ச‌முதாய‌ம், கைப‌ர் போல‌ன் க‌ன‌வாய் வ‌ழியாக‌ வ‌ருமுன் சூட்சர்லாந்திலே இருந்தார்க‌ள் என்றால்,

    கைப‌ர் போல‌ன் க‌ன‌வாய் வ‌ழியே அந்த‌ ச‌முதாய‌ம் இந்தியாவுக்குள் நுழையும் வ‌ரையிலே, அந்த‌ ச‌மூக‌த்தின் சுவிட்ச‌ர்லாந்து வ‌ர‌லாறு அல்ல‌து ருஷியா வ‌ர‌லாறு அல்ல‌து மத்திய ஆசிய வ‌ர‌லாறு ( 5000 வ‌ருட‌ங்களுக்கு முந்தைய‌ வ‌ர‌லாறு), ஏன் ப‌திவு செய்ய‌ப் ப‌ட‌வில்லை?

    ஆரிய‌ர்க‌ள் சுவிட்ச‌ர்லாந்திலே அல்ல‌து ருஷியாவிலே அல்ல‌து ம‌த்திய‌ ஆசியாவிலே எப்ப‌டி வாழ்ந்தார்க‌ள், ஒரு ச‌மூக‌மாக‌ உருவானார்க‌ள் ‌ என்ப‌து ப‌ற்றி ஒரு வார்த்தை கூட‌ உல‌க‌ வ‌ர‌லாற்றின் ப‌க்க‌ங்களில் இல்லையே?

    நைல் ஆற்று நாகரீக‌ம், ம‌ஞ்ச‌ள் ஆற்று நாகரீக‌ம் போல,

    ‌ரைன் ந‌தி நாக‌ரீக‌ம் என்றோ, வோல்கா ந‌தி நாக‌ரீக‌ம் என்றோ ஒரு சிறு குறிப்பு கூட‌ இல்லையே?

    உல‌கின் மிக‌ப் ப‌ழைமையான‌ இல‌க்கிய‌ங்களில் ப‌ல‌வ‌ற்றை உள்ள‌டக்கிய‌ மொழி அவ‌ர்க‌ளின் மொழி – அந்த‌‍ இல‌க்கிய‌ங்க‌ளில் இந்தியாவைத் த‌விர‌ வேறு நாடுக‌ள் ப‌ற்றிய‌ குறிப்பு ஒன்று கூட‌ இல்லையே?

    எனவே இந்த ஆரியர்கள் எனப் படுபவர் (அதாவது இந்தியர்கள்) கைபர் போலன் காவாய் வழியாக வந்தார்கள் என்று கூறப் படுவது ஒரு கட்டுக் கதை, ஆதாரம் இல்லாதது, நடந்திருக்க முடியாதது.

    எனவே ந‌ண்ப‌ர்க‌ளே,

    இப்போது இந்தியாவிலே இருப்பவர்கள் இந்தியாவின் அச்சு அச‌லான‌, ஆதி குடிக‌ள் என்ப‌தை உறுதி செய்ய வேண்டிய‌ அளவுக்கு சாத்திய‌ங்க‌ள் உள்ள‌ன‌.

    இந்தியாவின் தென் பகுதியே திராவிடம் ஆகும். நாம எல்லோரும் ஒரே இனமே.

  33. வேந்தன் அவர்களே,

    அதிகார‌ம் தூள் பற‌க்கிற‌தே!

    வான‌ளாவிய‌ அதிகார‌ம் உள்ள‌ ச‌பா நாய‌க‌ர் போல‌ ஆணை இடுகிறீர்க‌ள்

    இது சகோதரர் மதிமாறனின் தளம் அல்லவா?

    அவர் தானே இங்கே யார் பதிவிடலாம், யார் பதிவிடக் கூடாது என்று முடிவு செய்ய வேண்டியது.//

    திருச்சிகாரரே,

    நீங்க இங்க பதிவிட கூடாதுன்னு நான் எங்கே எப்போது சொன்னேன்?

    நான் உங்களை ஆட்டோசங்கர்னு அடையாளம் காட்டியதற்கு பதிலா இது. இது பரவாயில்லை இருந்துட்டு போகுது.

    ஆனால் இதை உங்கள் தளம் என்று சொல்லாமல் மதிமாறனின் தளம் என்றாவது சொன்னீங்களே! அப்பாடா!

    கொஞ்சம் போனாக்க மதிமாறனையே பார்த்து “சகோதரர் மதிமாறன் என்ன அதிகாரன் தூள் பறக்கிறதே. இது எங்கள் தளம்” என்று சொன்னாலும் சொல்வீர்கள்.

    இந்த தளத்தை இயக்கும் மதிமாறன் அவர்களை விடவும் அதிகமாக எழுதியிருப்பது நீங்களாகத் தான் இருப்பீர்கள்.

    புதுசா வருபவர்களும் ‘ஒரு வேளை திருச்சிகாரருக்கும் சொந்தமாக இருக்குமோ இந்த தளம்’ என்று சற்று குழம்பி போவார்கள்.

    ஏன்னா அந்த அளவுக்கு நீங்க பாட்டுக்கு எழுதிரீங்க.எழுதிரீங்க.. எழுதிட்டே இருக்கீங்க..

    //அந்த‌ நோக்கிலே செய‌ல் ப‌டும் போது சில‌ ப‌ல‌ இடையூருக‌ளை ச‌ந்திக்க‌ வேண்டும் என்ப‌தை அறிந்த‌வ‌ன் தான்.//

    நாங்க என்னமோ உங்களை கைகளை கட்டி போட்டது மாதிரியும் அதையும் மீறி நீங்கள் எழுதுவது போலவும் வசனம் பேசுறீங்க.

    என்னா பில்டப் யா இது???

    ஆட்டோ சங்கர் உங்களுக்கே இது ஓவரா தெரியல??

  34. வேந்தன் அவர்களே,

    //பதிவின் அர்த்தம் புரியாமல் ஏதோதோ புலம்பகூடாது//

    //இதில் உடனே நீங்கள் “சகோதரர் மதிமாறனின் கருத்தை வரவேற்கிறேன். இப்போது வாழும் யாரும் நமக்கு கடவுளை நேரிலே காட்டத் தயாராக இல்லை” உபதேசத்தை ஆரம்பித்து குளிர்காய வரவேண்டாம்.//

    //நீங்க இங்க பதிவிட கூடாதுன்னு நான் எங்கே எப்போது சொன்னேன்?//

    நான் பின்னூட்டமாக எதை எழுத வேண்டும் என முடிவு செய்ய வேண்டியவன் நான் தான். நீங்கள் சொல்கிறபடி அல்லது விரும்புகிறபடி மற்றவர்கள் எல்லோரும் எழுத முடியாது.

    நீங்கள் விருபுகிறபடி தான் எழுத வேண்டும் என்று
    சொல்வது, சொந்த சிந்தனைகளை எழுதாதே என்பது போன்றதுதான்.

    கட்டுரை ஆசிரியர், தல நிர்வாகி எல்லாமே சகோதரர் வே. மதிமாறன் அவர்கள்தான்.

    நான் பின்னூட்டங்களை பதிவு செய்யும் சாதாரணமானவன். ஆனால் என் பின்னூட்டங்களை அடுத்து அதை மறுத்தும், ஆதரித்தும் வேறு பின்னூட்டங்கள் வருவதால், நான் அதற்க்கு பதிலாக மேலும் பின்னூட்டங்களை இட வேண்டியதாகி விடுகிறது.

    எனவே என்னுடைய பின்னூட்டங்கள் அதிகமாக இருப்பதாக கருதினால் அதனை மட்டுறுத்தவோ, முழுமையாக தடை செய்யவோ சகோதரர் வே. மதிமாறன் அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.

    இதிலே தாங்கள் வந்து இப்படி எழுதாதே, அப்படி எழுதாதே என்று கட்டப் பஞ்சாயத்து செய்யும் பாணியிலே கட்டளை போட்டாதால் தான் நான் இதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

    என்னுடைய பதிவுகளை அனுப்புகிறேன், மதிமாறன் அனுமதிக்கிறார், வெளியிடுகிறார், இதிலே உங்களுக்கு என்ன வருத்தம்?

    //புதுசா வருபவர்களும் ‘ஒரு வேளை திருச்சிகாரருக்கும் சொந்தமாக இருக்குமோ இந்த தளம்’ என்று சற்று குழம்பி போவார்கள். //

    அவர் எங்கே, நான் எங்கே? அவர் பலரும் போற்றும் சிந்தனையாளர். நான் என் கருத்துக்களை தெரிவிப்பவன், அவ்வளவு தான்.

    சகோதரர் வே. மதிமாறன் எல்லோரின் கருத்துக்களையும் , மாற்றுக் கருத்துக்களையும் வெளியிடும் வகையிலே தளத்தை நடத்துபவர் என்றே பாராட்டப் படக் கூடும். இதை எல்லாம் சகோதரர் வே. மதிமாறன் பார்த்துக் கொள்வார். உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை சகோதரர் வே. மதிமாறன் அவர்களுக்கு தெரியப் படுத்தவும்.

    //கொஞ்சம் போனாக்க மதிமாறனையே பார்த்து “சகோதரர் மதிமாறன் என்ன அதிகாரன் தூள் பறக்கிறதே. இது எங்கள் தளம்” என்று சொன்னாலும் சொல்வீர்கள்.//

    சகோதரர் வே. மதிமாறன் அதிகாரம் இந்த தளத்திலே தூள் பறக்கிறது, பறக்க வேண்டும்.

    இந்த தளத்தையும் தாண்டி அவரது அதிகாரம் தூள் பறந்தாலும் நான் அதில் மகிழ்ச்சி அடையக் கூடியவன்.

    யார் யார் எல்லாமோ, அதிகாரம் செய்ய முடியுமா, வேந்தன் அவர்களே.
    உங்கள் தளத்திலே நான் வந்து எழுதினால், என்னை எழுதாதே என்று சொல்லலாம்.

    நானும் ஆட்டோ சங்கர் என்பாரும் வேறு வேறு நபர்கள், ஆனால் நீங்கள் எனக்கு ஆயிரத்தெட்டு பேர்களை வைத்து அழைத்தாலும், எனக்கு சாதகமோ, பாதகமோ இல்லை.

    நான் இளைய ராஜாவை ஆதரித்து பின்னூட்டம் எழுதிய நாளது முதல், நீங்கள் என்னைக் கட்டம் கட்டி காழ்ப்புணர்ச்சி செலுத்துகிறீர்களோ என நினைக்கிறேன்.

  35. //பூணுல் என‌க்கும் என் ம‌ன‌சாட்சிக்கும் தொட‌ர்பாக‌ இருக்கிர‌து.//
    சூப்பர்!
    // நாம் ஒரு பொருளை புனித‌மாக‌ க‌ருதினால் அது ந‌ம்மை சில க‌ட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிர‌து. // அது என்ன க‌ருதினால்… பூணூல் புனிதம் என்று எந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்தீர்? ஒரு புறம் கடவுள் உண்டா இல்லையா என்று தெரியவில்லை என்கிறீர். இன்னொருபுறம் பூணூலில் புனிதத்தன்மை உண்டு என்கிறீர். உமது உளறலுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

    உமது ஆராய்ச்சி எந்த நிலையில் இருக்கிறது? இல்லை அதுவும் வழக்கம்போல சொல்லும் பொய்தானா?

  36. //ஆனால் நான் பூணூலை அணிவது, நான் உயர்ந்தவன் என்று பெருமைப் பட்டுக் கொள்ள அல்ல, பிறரை வித்யாசப் படுத்தி வாழ்வதற்கு அல்ல.

    நான் பூணூலை அணிவது, அது என் குறிக்கோளை நினைவு படுத்துவதால். அது தவறான எண்ணங்கள் மனதில் எழும் போது எச்சரிப்பதால். நான் அணியும் பூணூல் எனக்கும் என் மனசாட்சிக்கும் தொடர்பு படுத்துவதாக உள்ளது.

    உட‌லில் ஈர‌ம் போனாலும் , பூணூல் ஈர‌ம் போகாத‌ நிலையிலே, அத‌ற்காக‌ அந்த‌ப் பூணுலை அழுத்தி துடைக்கும் போது, சிறிது நேர‌ம் ம‌ன‌க் குவிப்பு ப‌யிர்ச்சியில் ஈடுப‌ட‌ அது என‌க்கு நினைவுறுத்தும் வ‌கையில் இருக்கிற‌து.( இது என் த‌னிப் ப‌ட்ட‌ உண்ர்வே).//

    //சன் கிளாஸ் அணிவது இரண்டு காரணக்களுக்காக இருக்கலாம்.
    ஒன்று கண்ணைக் காக்க, இரண்டாவது ஸ்டைலுக்காக.
    பூணூல் அணிவதும் இரண்டு காரணங்களுக்காக இருக்கலாம். ஒன்று தான் உயர்ந்த சாதி என்ற எண்ணத்தில். இரண்டாவது பொருப்புகளையும் , கடமைகளையும் நினைவூட்டி மனசாட்சியின் காவலனாக இருக்க.//

    ந‌ம்மை ஒரு முக்கிய‌ அலுவ‌லுக்கு நினைவு ப‌டுத்தும் ஒரு பொருளை ம‌ரியாதையாக‌ அவ‌சிய‌மாக‌ க‌ருதுவ‌து இய‌ல்பே. ம‌ன‌சாட்சியை நினைவு ப‌டுத்தும் பொருளை , அதற்க்கு உயிர் இல்லை என்றாலும், அத‌ற்க்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கிரொம்.

    //நாம் ஒரு பொருளை புனித‌மாக‌ க‌ருதினால் அது ந‌ம்மை சில க‌ட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிர‌து. த‌ந்தையைக் க‌ண்டால், பிடிக்க‌ எடுத்த‌ சிக‌ரெட்டை கீழே வைத்து விடுகிரேன்.//

    நான் புனிதம் என்று குறிப்பிட்டது ஒரு எடுத்துக் காட்டாக தான். நான் சிகரெட் குடிப்பதும் இல்லை, அப்பாவை பார்த்து மறைத்ததும் இல்லை.

    இந்துக் கடவுள் உட்பட்ட எந்தக் கடவுளையும் இது வரை பர்ர்க்கவில்லை. இருக்கிறாரா என்று தெரியாது. ஆராய்ச்சி தொடர்கிறது.

  37. //கொஞ்சம் போனாக்க மதிமாறனையே பார்த்து “சகோதரர் மதிமாறன் என்ன அதிகாரன் தூள் பறக்கிறதே. இது எங்கள் தளம்” என்று சொன்னாலும் சொல்வீர்கள்.//

    சகோதரர் வே. மதிமாறன் அதிகாரம் இந்த தளத்திலே தூள் பறக்கிறது, பறக்க வேண்டும்.

    இந்த தளத்தையும் தாண்டி மேடையிலும் சமூகத்திலும் அவரது அதிகாரம் தூள் பறந்தாலும் நான் அதில் மகிழ்ச்சி அடையக் கூடியவன்.

    யார் யார் எல்லாமோ, இங்கே மதிமாறன் அவர்களின் தளத்திலே வந்து என்னை மிரட்டி அதிகாரம் செய்ய முடியுமா, வேந்தன் அவர்களே. முன்பு இப்படி தான் சகோதரர் முகமது பாரூக் பலமுறை இங்கே பதிவு இடக் கூடாது எனப் பலமுறை எச்சரித்தார்.

    நீங்கள் ஒரு தளம் ஆரம்பித்து செயல் படுங்கள். அதில் நான் பதிவுகளை இட்டால் அதை அனுமதிக்காமல் இருக்கலாம், அது உங்கள் விருப்பம், உங்கள் தளம்! உங்கள் தளத்திலே நான் வந்து எழுதினால், என்னை எழுதாதே என்று சொல்லலாம்.

  38. திரு.தமிழன், கோடிமுனய் அவர்களே,.
    //திரு தனபால் அவர்களே… நீங்கள் ஆரியனோ, திராவிடரோ தெரியாது, உங்கள் கருத்துக்களய் பார்க்கும்போது நீங்கள் ஒரு ஆரியனாகத்தான் இருக்கவேண்டும்,///
    “ரிக் வேதத்தைப் பொறுத்த வரையில்,ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து ,இந்தியா மீது படையெடுத்தார்கள் என்ற கருத்துக்குச் சிறிதளவு கூட ஆதாரம் இல்லை…வேத இலக்கியங்களின் சான்றைப் பொறுத்த வரையில்,ஆரியர்களின் தாயகம் இந்தியாவுக்கு வெளியே இருந்தது என்ற கோட்பாட்டுக்கு அவை (வேத இலக்கியங்கள்) எதிராக உள்ளன” -டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.
    அம்பேத்கர் கூறியதை ஏற்கிறீர்களா?இல்லையா?
    கிறிஸ்துவத்தைப் பரப்பும் உள்நோக்கத்துடன்,இந்து வேதங்களை கொச்சையாக,பொய்க் கதைகளைப் புனைந்து மொழி பெயர்த்த,கிறிஸ்தவ மிசனரிகளின் பிரதிநிதிகளான,கடைசி வரை சமஸ்க்ருதத்தில் சொந்தமாக ஒரு வாக்கியம் கூட பேசவோ,எழுதவோ தெரியாத,மாக்ஸ் முல்லர் போன்றவர்களின் எழுத்துக்களை,எந்தவிதமான ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல்,பகுத்தறியாமல்,அதை அப்படியே உண்மை என்று எப்படி பகுத்தறிவுவாதியான நீங்கள் நம்புகிறீர்கள்? என்று புரியவில்லை.

    எந்த வலுவான ஆதாரத்தை ஆராய்ந்து,பகுத்தறிவை பயன்படுத்தி ஆரியர் வெளியிலிருந்து இந்தியாவிற்கு வந்தார்கள் என்று நீங்கள் நம்பினீர்கள்?

    ஆரியர்கள் எங்கோ வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வந்தார்கள் என்று நீங்கள் பகுத்தறிந்து ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரங்களை கூறுங்கள்?

    யாரோ சொன்னார்கள்,பெரியார் நம்பினார் என்பதற்காகவே தானாக எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் ஏற்றுக்கொண்டு,தங்களை பகுத்தறிவு வாதிகள் என்று அழைப்பதில் என்ன உண்மை இருக்கிறது.?

    ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடிமக்களே.அதற்க்கான பல்வேறு வெளிநாட்டு,இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி நூல்கள்,புவியியல்,அகழ்வாராய்வு ஆதாரங்கள் நிறைய இருக்கிறது.பகுத்தறிந்து உண்மையை தெரிந்து கொள்ள உங்கள் பகுத்தறிவு அனுமதிக்குமா?
    ///திரு தனபால் அவர்களே… நீங்கள் ஆரியனோ, திராவிடரோ தெரியாது, உங்கள் கருத்துக்களய் பார்க்கும்போது நீங்கள் ஒரு ஆரியனாகத்தான் இருக்கவேண்டும்,///
    என்னுடைய கருத்துக்களை பார்த்து,உங்கள் பகுத்தறிவின் மூலம் ஆராய்ந்து, என்னை நீங்கள் பிராமணன்(ஆரியன்) என்று மிகத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.இதுதான் உங்களின் பகுத்தறியும் திறனா?இப்படித்தான் அனைத்து கருத்துக்களையும் தவறாகப் புரிந்து கொண்டீர்களா?மீண்டும் என் கருத்தைப் படியுங்கள்,உண்மை புரியும்.

    ///’வேற்றுமய் உள்ளே இருந்தால் ஒற்றுமய் வெளியேதான் நிற்கும்.‘‘///

    நீங்கள் கூறுவது சரிதான்.வேற்றுமையை வெளியிலேயே வைத்து,ஒற்றுமையை உள்ளே வைப்போம்.

  39. ஆட்டோ சங்கர் நான் திருச்சிக்காரைரை எப்போதோ சொன்னதை நினைவில் வைத்திருக்கிறீர்கள். பரவாயில்லையே உங்கள் நினைவாற்றல் அபாரம்.

    இனி நான் அவன் இல்லை என்ற நாடகம் மாறி மாறி எழுதிகொள்ளவேண்டிய அவலம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டதே ஆட்டோ திருச்சி சங்கர்.

  40. அய்யா தனபால் அவர்களே…
    பார்ப்பனர்கள் ஆரியர்களா இந்தியர்களா? என்ற வழக்காடுதலய் இன்னொரு பின்னூட்டத்தில் வய்த்துக் கொள்வோம், பார்ப்பனர்களின் தாய் மொழி தமிழா, சமர்கிருதமா? சமர்கிருதம் தானே…,? இல்லய், தமிழ்தான் என்று சொல்வீர்களா? இதற்கு தாங்கள் கொடுக்கும் பதில்தான் உங்களய் எனக்கு சரியாக உணர்த்த உதவும். இதற்கு நேர்மய்யான பதிலய்ச் சொல்லுங்கள்..
    தமிழன், கோடிமுனய்,

  41. ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாய் அதனை சீராட்டி, தாலாட்டி, பாராட்டி, பாலூட்டும் போது அதனுடன் பேசும் மொழியே ஒருவனின் தாய் மொழி.

    எனக்குத் தெரிந்த வரையிலே பார்ப்பனர்கள என்று கூறப் படும் சமூகப் பெண்மணிகள் கிட்டத் தட்ட எல்லோருமே தமிழ் மொழியில் மட்டுமே தன் குழந்தையுடன் பேசுகின்றனர்.

    அம்பது வருடங்களுக்கு முன்பு வரை பார்ப்பனர்கள என்று கூறப் படும் சமூகப் பெண்மணிகள், தமிழ் தவிர வேறு எந்த மொழியையும் அறியாது இருந்தனர்.

    பார்ப்பனர்கள் என்று அழைக்கப் படுபவர்கள், சாதி வேறுபாடுகளை நீக்கி சமத்துவ சமுதாம் உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்பதே நம் கருத்து.

    அதே நேரம் உருட்டு கட்டையை தூக்கி காட்டி, ” பார்ப்பன், உன் தாய் மொழி தமிழ் இல்லை” என்று சொன்னால் அது சரியாகுமா?
    ஒருவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் அவன் தாய் மொழி ஒன்றுதான், அவனை அச்சுறுத்தி அவன் தாய் மொழியை மாற்ற முடியாது.

    ஒருவனுக்கு சப்பாத்தி சாப்பிட பிடிக்கவில்லை என்றால், அவன் வாயிலே சப்பாத்தியை திணிக்கலாம்.

    ஆனால் அவனுக்கு தெரியாத மொழியை அவனை பேச வைக்க இயலாது.

  42. திரு தமிழன், கோடிமுனய் அவர்களே,
    பிராமணர்கள் நீங்கள் நினைப்பது போல் எங்கிருந்தும் வரவில்லை.அவர்கள் மற்றவர்களைப் போலவே இந்நாட்டின் பூர்வக்குடி மக்களே.
    பிராமணர்கள் எந்தெந்த பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தனரோ அந்த மொழியே அவர்களின் தாய் மொழி.
    தமிழக பிராமணர்களின் தாய் மொழி தமிழ் மொழியே.இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
    தமிழ் மொழியில் எழுத்துக்கள் தோன்றி,இலக்கணங்கள் உருவாகி எழுதப்பட்ட மிகத்தொன்மையான,தொல்காப்பியம் போன்ற நூல்களிலேயே அந்தணர்கள் பற்றி பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
    தமிழர்களின் வரலாறை அறிய உதவும் தொன்மையான தமிழ் நூல்கள் அனைத்திலும் அந்தணர் பற்றி கூறப் பட்டுள்ளது.
    தொல்காப்பியம்,பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,அகநானாறு,புறநானூறு,நற்றிணை,குறுந்தொகை,சிலப்பதிகாரம்,மணிமேகலை,பதினென்கீழ்கணக்கு நூல்கள்,திருக்குறள் போன்ற நம் தமிழ் நூல்கள் அனைத்திலும் அந்தணர்களை பற்றி எழுதப்பட்டுள்ளது.(.எந்த எந்த நூலில் எங்கெங்கு கூறப்பட்டுள்ளது என்று எழுதினால் இந்தப் பின்னூட்டம் மிகப் பெரியதாகிவிடும் என்பதால் அவற்றை எழுதவில்லை.நீங்கள் கேட்டுக்கொண்டால் எழுதுகிறேன்.)
    இதில் எதிலேயும் அந்தணர்கள் சமஸ்கிருதத்தில் பேசிக்கொண்டார்கள் என்று குறிப்பிடப்படவேயில்லை.தொல்காப்பியத்தின் காலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் என்று கூறப் படுகிறது.
    சாதாரணமாக ஐநூறு,அறநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நாடுகளில் உள்ள மக்களுக்கு,இந்த நாடுகளில் உள்ள மொழி தாய் மொழி என்னும் போது,ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழ் பேசிவரும் பிராமணர்களின் தாய் மொழி தமிழ் இல்லையா?
    அக்காலத்தில் வடக்கே சமஸ்கிருதமும்,தெற்க்கே தமிழும் இருந்தன.சமஸ்கிருதத்தில் இருந்து ஹிந்தி,குஜராத்தி,மராட்டி,பெங்காலி,போன்ற வட இந்தியமொழிகளும்,தமிழிலிருந்து,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளும் தோன்றின.இந்தியா முழுவதும் இருந்த அந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு(இதில் பிராமணர்களும் அடங்குவர்) அந்த அந்த பகுதியில் உள்ள மொழிகளே தாய் மொழியாயின.அவ்வாறே தமிழகத்தில் உள்ள பிரமணர்களுக்கு தமிழ் மொழியே தாய் மொழியாகும்.

  43. திரு தமிழன், கோடிமுனய் அவர்களே,
    (மேல்கன்டப் பின்னூட்டத்தில் சில நூல்கள் விடுபட்டுள்ளது இவற்றை சேர்த்துப் படிக்கவும்)
    தொல்காப்பியம்,பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,ஐங்குறுநூறு ,பதிற்றுப்பற்று,பரிபாடல்,கலித்தொகை,புறநானூறு,அகநானூறு,நற்றிணை,குறுந்தொகை ,சிலப்பதிகாரம்,மணிமேகலை,பதினென்கீழ் கணக்கு நூல்கள்,திருக்குறள் போன்ற நம் தமிழ் நூல்கள் அனைத்திலும் அந்தணர்களை பற்றி எழுதப்பட்டுள்ளது.

  44. திரிச்சிக்காரன் (கருத்துகளை திருப்பதால் அதாவது வழக்கம்போல பொய் புரட்டு பேசுவது) அவர்களே நீங்கள் உங்கள் கருத்துகளை
    எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யுங்கள் அதில் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் குறைந்த பட்சம் நேர்மையாக இருங்கள். உங்கள் முன்னோர்கள் வழியை தொடர நினைக்காதீர். கீற்று இணையத்தில் purambaokku@gmail.com என்ற பயனர் பெயரிலும் இங்கு திருச்சிக்காரன் மற்றும் இத்யாதி இத்யாதி இத்யாதி பெயரிலும் உலா வருவது அதாவது உளருவதுங்க!!.. உங்கள் கருத்தில் உண்மையும் உறுதியும் இருந்தால் உங்கள் உண்மையான பெயரிலேயே பதிவு செய்யலாமே!!!..

    ஆதாரம் : http://www.keetru.com/literature/essays/arivalagan_kaivalyam_6.php

    மனித சமூகத்திற்காக போராடிய தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் பற்றிய பதிவு என்றதுமே அங்கு சென்று பதிவிற்கு சம்பந்தமில்லாமல் உளறுவது இவரது பணி. அதுவும் பதிவின் நோக்கம் மக்களிடம் சென்ற விடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக திட்டமிட்டு திசைதிருப்புவார்.

    கூகுல் குழுமத்தில் அதிக பயனர் பெயர் (user id) வைத்துள்ள ஒரே நபர் நம்மவாள் தான் போல..

    தோழர்களின் கவனித்திற்கு:

    பார்ப்பனியத்தின் (இங்கு பிறப்பால் அல்ல செயலால்) சமீபத்திய மறு கட்டமைப்புதான் இந்த திருச்சிக்காரன் என்ற ஸ்ரீரங்கத்துகாரன் .. ஆகையால் அவரிடம் விவாதிப்பதை தவிர்ப்பது நன்று.

  45. நான் முன்பு புறம்போக்கு என்ற பெயரிலே எழுதி வந்தேன். ஆனால் அந்தப் பெயரின் காரணமாக என்னுடைய கருத்துக்கள் இகழப் பட்டு வந்தன, எனவே திருச்சிக் காரன் என்ற பெயரில் எழுதி வருகிறேன்.

    கீற்று தளத்திலே மட்டும் அதே பெயரிலே பதிவு இட்டு வந்தேன்.

    ஒரே கால கட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயரில் எழுதுவதுதான் நேர்மைக் குறைவு. இந்த திருச்சிக்காரன் என்ற பெயரிலே கிட்ட தட்ட 4 மாதங்களாக பதிவு இடுகிறேன். இந்தப் பெயரை மாற்ற வேண்டி இருக்காது.

    திருச்சிக் காரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்த பின் நான், வேறு எந்த புது பெயரிலாவது பதிவு இட்டதாக நிரூபிக்க முடியுமா?

    அம்பேத்கரைப் பாராட்டினால் அண்ணனுக்கு என்ன ஆற்றாமையோ? அண்ணனின் மிரட்டலுக்கு அஞ்சி அம்பேத்கரை பாராட்டுவதை நிறுத்த மாட்டேன்.

    நான் இங்கேயும் இன்னும் பல தளங்களிலும் தொடர்ந்து கருத்து பரிமாற்றம் செய்வேன். ஏதாவது விடயத்தில் என் நிலைப்பாடு தவராக இருந்தால் அதை ஒத்துக் கொள்வேன்.

    என் கருத்தை விட சிறந்த கருத்து இருக்கும் போது அதை ஏற்றுக் கொள்வேன்.

    உண்மையை அறிய விரும்புபவர்களிடம் நான் தொடர்ந்து கருத்து பரிமாற்றம் செய்வேன் என்பதை அன்பு நண்பர் பாரூக்கிர்க்கு தெரிவிக்கிறேன்.

Leave a Reply

%d bloggers like this: