பணமா? பாசமா?

பொருளாதாரமே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கிறது என்கிறார்களே, அதெப்படி அன்புதானே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கும்?

வி.மஞ்சுளா, சென்னை.

அப்படி ஒரு அவல நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே மாமேதை காரல் மார்க்ஸ் அதைச் சொன்னார்.

நம் அன்புக்குரியவர்கள் இறந்துபோனால், அவர்கள் பயன்படுத்திய தலையணை, பாய் போன்றவற்றை தூக்கி தெருவில் வீசிவிடுகிறோம். ஆனால் 24 மணிநேரமும் அவர்கள் உடலோடு ஒட்டியிருக்கிற மோதிரம், செயின் போன்றவற்றை கழட்டிக் கொள்கிறோமே எதனால்?

பணமதிப்பை கழித்துவிட்டு, பயன்பாடு என்கிற அடிப்படையில் பார்த்தால்-படுக்க உட்கார, சாய்ந்து கொள்ள, ஓய்வெடுக்க, உறங்க என்று நமக்கு அனுசரணையாக இருப்பது பாயும் தலையணையும்.

தங்கத்தால் என்ன பயன்? ஆனால், தங்கத்திற்கு இருக்கும்  பண மதிப்புதானே, அதன் மீதான மதிப்பையும் உயர்த்தி இருக்கிறது.

ஒவ்வொரு திருமண நிகழ்ச்சிகளிலும் இந்த அன்பு அல்லோகலப் படுவதைக் கவனிக்கலாம். கல்யாண வீட்டுக்காரர்கள், கல்யாணத்திற்கு வந்திருக்கிற வசதி குறைந்த உறவினரை வரவேற்று பேசிக் கொண்டிருக்கும்போதே, தூரத்தில் வருகிற வசதியானவர் முகம் Closo up பில் தெரிவதும், அருகில் இருக்கிறவரின் முகம் Fade Out ஆகி மறைவதையும் எது தீர்மானிக்கிறது? அன்பா?

திருமணம் நிகழ்ச்சிக்கு போய் வந்த நடுத்தர வர்க்கத்தின் குடும்பங்களில் இப்படியான பேச்சு கண்டிப்பாக இருக்கும், “நம்மள அவ கண்ணுக்கு தெரிஞ்சதா பாத்தியா?”

***

செப்டம்பர்  2007 சமூக விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதியது.

‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்

12 thoughts on “பணமா? பாசமா?

  1. இது ஏற்றுக் கொள்ள முடியாத பதில். ஒரு தாய் தான் பெற்ற மகவை கொஞ்சி மகிழ்வது பணத்துக்கா? அன்புக்கா? அதே தாய் தனது அகவை சென்ற தாய், தந்தை, நோய்யுற்ற கணவர் போன்றோரை ஏந்தி எடுப்பது பணமா? அன்பா?

  2. …மார்கழி ஸ்பெஷல் எப்போ ?

  3. நக்கீரன் சார், தாய்ங்கிறது Exemption. Exemption எப்பவுமே rule ஆகாது. மனைவி சம்பாத்யத்திலே கணவன் சாப்பிடற வீடுகள்லே, கணவனுக்கு என்ன மதிப்பும் பிரியமும் கிடைக்குதுன்னு பார்த்திருக்கீங்களா?

    வெறும் வார்த்தைகள் பிரியத்தை வெளிப்படுத்துமா?

    எங்கே, பிறந்த நாள் வாழ்த்துக்களை உங்க பையனுக்கு எந்த கிப்ட்டும் இல்லாம வெறும் வாய் வார்த்தையா சொல்லிப் பாருங்க….

    http://kgjawarlal.wordpress.com

  4. மார்கழி ஸ்பெஷல்க்காக நானும் வெயிட்டிங்க்

  5. //பணமதிப்பை கழித்துவிட்டு, பயன்பாடு என்கிற அடிப்படையில் பார்த்தால்-படுக்க உட்கார, சாய்ந்து கொள்ள, ஓய்வெடுக்க, உறங்க என்று நமக்கு அனுசரணையாக இருப்பது பாயும் தலையணையும்.
    தங்கத்தால் என்ன பயன்? ஆனால், தங்கத்திற்கு இருக்கும் பண மதிப்புதானே, அதன் மீதான மதிப்பையும் உயர்த்தி இருக்கிறது.//

    உண்மைங்க..

  6. நக்கீரனுக்கு …

    பொருளாதாரமே அனைத்து உறவுகளையும் “தீர்மானிக்கிறது” என்று தான் சொன்னார்.நல்ல பணம் சந்பாதிக்கும் பிள்ளைக்கும், வருமானம் இல்லாமல் (வருமானம் இனி இந்தப் பிள்ளையால் வராது என்று தெரிந்தால்) இருக்கும் பிள்ளைக்கும் ஒரு வித்தியாசம் இருக்கும் அல்லவா? அதைதான் தீர்மானிக்கிறது என்று சொன்னார்.
    ஒரு தாய் தன் மகன் வழக்குரைஞர் ஆவதைவிட software engineer ஆகவே விரும்புவாள் அல்லவா? அதுபோல.. இதைத்தான் ஏங்கெல்ஸ் அன்றே “வருங்காலத்தில் குழந்தைகள் மூலதனமாகப் பார்க்கப்படுவார்கள்” என்றார். இது இப்பொழுது எவ்வளவு அழுத்தமான உண்மையாக இருக்கிறது பார்த்தீர்களா?
    இதை அவர்கள் சொன்னது மக்களின் மீதுள்ள அன்பினால்தான். பொருளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு மனிதனுக்கும் மனிதனுக்கும் மாறுவதை கண்டித்து சிந்தித்ததின் விளைவுதான் மார்க்சியம்.. “மார்க்சியமே உச்சகட்ட மனிதாபிமானம்” என்று எத்தனைமுறை சொன்னாலும் செருப்புத் தைக்கும் தோழரிடம் பேரம் பேசும் மனிதாபிமானிகளுக்கும், தனது பழைய மற்றும் இனிமேல் தனக்கு உதவாது என்று தெரிந்த ஆடைகளை கொடுக்கும்
    வள்ளல்களுக்கும் புரியாது…
    தோழமையுடன் தும்பையன்

  7. pantham yanpathu pathi mattumay payum

    anal panam yanpathu pathalam varai payum

Leave a Reply

%d bloggers like this: