ஈழத் தமிழர்களும் வர்க்க வேறுபாடும்
வர்க்க வேறுபாடுகளை குறித்த உங்களது பதில்களை படித்துவருகிறேன். ஆனால், ஈழப் பிரச்சினை வர்க்க ரீதியான பிரச்சினை என்பதைவிட அது இனரீதியான பிரச்சினை. அதில் எப்படி வர்க்க வேறுபாடுகளை பார்க்க முடியும்?
–தமிழ்ப்பித்தன்
ஈழமக்களின் பிரச்சினையை வர்க்க வேறுபாட்டினால் வந்தப் பிரச்சினை என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகவும், ஈழ மக்களின் துயரங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சொல்கிற தலைவர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், அறிஞர்களும்தான் ஈழ மக்களிடம வர்க்க வேறுபாட்டுன் நடந்து கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், செங்கல்பட்டு, கும்பிடிபூண்டி போன்ற இடங்களில் மிக ஏழ்மையான, அவலமான நிலையில் அகதிகளாக வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் காட்டுகிற அன்பை விட, ஆஸ்திரேலியா, அய்ரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அகதிகளாக வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் இவர்கள் காட்டுகிற அன்பு அலாதியானது. பிரத்தியேகமானது. பாசமயமானது.
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், பல நாடுகள் கடந்து வாழ்கிற, இணையத்தில் வலம் வருகிற புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் சாட்டில், மெயிலில், விசா வாங்கி நேரில் சென்றும், அவர்கள் நேரில் இங்கு வந்தால் ‘விருந்தோம்பலில்’ வெளிப்படுத்துகிற அன்பில், நட்பில் ஒரு சிறு பகுதியையாவது தன் அருகில் அகதிகள் முகாமில் அவதிப்படுகிற ஈழத்தமிழர்களிடம் காட்டவேண்டுமல்லவா?
பிரான்சில், ஜெர்மனியில், இங்கிலாந்தில், கனடாவில், ஆஸ்திரேலியாவில் வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் நெருக்கமாக நட்பு வைத்திருக்கிறவர்களில் எத்தனைப் பேர் தன் அருகில் உள்ள கும்மிடிபூண்டி, செங்கல்பட்டு, ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வாழ்கிறவர்களிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்?
இந்த ‘ இன உணர்வில்’ இருக்கிறது வர்க்க வேறுபாடு?
திசெம்பர்2, 2009 அன்று எழுதியது.
//பிரான்சில், ஜெர்மனியில், இங்கிலாந்தில், கனடாவில், ஆஸ்திரேலியாவில் வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் நெருக்கமாக நட்பு வைத்திருக்கிறவர்களில் எத்தனைப் பேர் தன் அருகையில் உள்ள கும்மிடிபூண்டி, செங்கல்பட்டு, ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வாழ்கிறவர்களிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்?
இந்த ‘ இன உணர்வில்’ இருக்கிறது வர்க்க வேறுபாடு?//
GREAT,
GREAT,
GREAT!
மிகச்சரியான பதிவு…….
அதோடு அருகாமை என்பதை அருகில் என்று மாற்றிக் கொள்ளவும்
மார்க்சின் வர்க்க வேறுபாடு என்ற கோட்பாடு இன்று நீர்த்துப் போய்விட்டது. மேற்குலக நாடுகளில் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் வேறுபாடு காண்பது அரிதாக இருக்கிறது. இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி ஆகிவிடுகிறான். அவனது வாழ்க்கைத் தரம் தமிழ்நாட்டில் உள்ள முதலாளியைவிட பல மடங்கு உயர்ந்தது. இங்கு தேர்தல் நடக்கும் போது தொழிலாளி இடதுசாரிக் கட்சிக்கு (ஒப்பீட்டளவில் இடதுசாரி) வாக்குப் போடுவதில்லை. முதலாளிக் கட்சிக்கே வாக்குப் போடுகிறான். தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளை மட்டுமல்ல அங்கு வாழும் தமிழ்நாட்டு ஏழைகளையும் யாரும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. தேர்தல் காலம் மட்டும் விதிவிலக்கு. காரணம் வர்க்கம் அல்ல. அவர்களது ஏழ்மை. இலங்கைத் தமிழ் அகதிகள் ஏழ்மையை பங்கு போட்டுக் கொள்கிறார்கள். மேற்கு நாட்டில் வாழும் இலங்கை அகதிகள் (பெரும்பான்மையோர் குடிமக்கள்) செல்வத்தை பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இதுதான் வித்தியாசம். இந்தியாவில் ஏழைகளின் விழுக்காடு பாதிக்கு மேல். மேற்கு நாடுகளில் ஒரு விழுக்காடு மக்களே ஏழைகள். கனடாவில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானம் 18,000 டொலராக ( இந்திய ரூபாய் 810,000) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறது எனக் கணிக்கப்படுகிறது.
நூற்றில் ஒரு வார்த்தை…
நல்லா சொல்லிருக்கீங்க..
Brother Nakkeran,
//மேற்கு நாடுகளில் ஒரு விழுக்காடு மக்களே ஏழைகள். கனடாவில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானம் 18,000 டொலராக ( இந்திய ரூபாய் 810,000) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறது எனக் கணிக்கப்படுகிறது.//
மேற்கத்திய நாட்டவர் மகிழ்ச்சியாக வாழட்டும். நாம் அவர்களைப் பார்த்து அல்சர் படவில்லை.
ஆனால் அடுத்தவன் பணத்தைக் கடன் வாங்கி அதிலே வூதாரி செலவு செய்தே பெரிய பொருளாதாரம் இருப்பது போலத் தோற்றம் அளித்த நீர்க் குமிழி பொருளாதாரம் உடைந்து தள்ளாடுகிறது.
எப்படியோ அவர்கள் சரி செய்து மீண்டு வந்தால் கூட இப்படி திரும்ப இப்படி உல்லாச வாழ்க்கை வாழ முடியாது என வர்களே கணிக்கிறார்கள்.
ஆனால் சகோதரர் மதிமாறனின் கேள்வி வேறு, அது மிக முக்கியமானது.
//பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், பல நாடுகள் கடந்து வாழ்கிற, இணையத்தில் வலம் வருகிற புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் சாட்டில், மெயிலில், விசா வாங்கி நேரில் சென்றும், அவர்கள் நேரில் இங்கு வந்தால் ‘விருந்தோம்பலில்’ வெளிப்படுத்துகிற அன்பில், நட்பில் ஒரு சிறு பகுதியையாவது தன் அருகில் அகதிகள் முகாமில் அவதிப்படுகிற ஈழத்தமிழர்களிடம் காட்டவேண்டுமல்லவா?
பிரான்சில், ஜெர்மனியில், இங்கிலாந்தில், கனடாவில், ஆஸ்திரேலியாவில் வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் நெருக்கமாக நட்பு வைத்திருக்கிறவர்களில் எத்தனைப் பேர் தன் அருகில் உள்ள கும்மிடிபூண்டி, செங்கல்பட்டு, ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வாழ்கிறவர்களிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்?
இந்த ‘ இன உணர்வில்’ இருக்கிறது வர்க்க வேறுபாடு?//
Can brother Nakkeeran give specific reply to this?
சிந்திக்க வைக்கக்கூடிய இடுகை. ஒரே கேள்வி…இது எழுப்பக்கூடும் சில வேள்வி.
நல்ல ஆட்டைய போடுறாங்கய்ய்யா…… வெளிநாட்டுல வாழ்ற ஈழத்தமிழனை……
arumaiyaana pathivu.
//ஈழ மக்களின் துயரங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சொல்கிற தலைவர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், அறிஞர்களும்தான் ஈழ மக்களிடம வர்க்க வேறுபாட்டுன் நடந்து கொள்கிறார்கள்//
முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுவிட்டு ஐரோப்பிய வானொலிக்காக செல்போன் மூலம் அன்பைப் பரிமாரியவர்கள் இவர்களில் அடக்கமா ?
Mr.Mathimaran, what have you done for the SriLankan Tamils who are in Tamilnadu as refugees. Have you ever visited any of the camps and written about them.Perhaps you are angry that you did not get a chance to go on a
global tour like some others
//real tamilan (19:19:52) :
Mr.Mathimaran, what have you done for the SriLankan Tamils who are in Tamilnadu as refugees. Have you ever visited any of the camps and written about them.Perhaps you are angry that you did not get a chance to go on a
global tour like some others//
சகோதரன் மதிமாறன் சொன்னதைத்தான் செய்கிறார். செய்வதைத்தான் சொல்கிறார்.
காசு உள்ள தமிழரிடம் மட்டும் உறவு கொள்ள நட்பு பாராட்ட ஆர்வம் காட்டுபவர்கள், ஏழை பாழை தமிழர்களை கண்டு கொள்ளாமல் விடுவதை உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவு படுத்தி விட்டார்.
மேலும் இங்கே தமிழ் உணர்வாளர்கள் போல காட்டிக் கொள்பவர்கள் எல்லாம் ஈழத் தமிழரின் நன்மைக்கு பாடு பட்டது போல சரடு விடுவது ஏன்? சாகும் வரை உண்ணா விரதம் என்று எல்லாம் காட்சிகளை நடத்தி விட்டு கடைசியில், அம்மா தாயே, நீங்கள் தான் காக்க வேண்டும் என மன்றாடுகிறோம் என, சரண் அடையவில்லையா?
சகோதரர் மதிமாறன் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவராகவோ, இல்லை பெரிய அதிகாரியாகவோ இல்லை என நினைக்கிறோம். அகதிகள் முகாமில் சென்று பார்த்து உதவி செய்ய அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? அவர் கட்சி வைத்து கூட்டணியும் அமைக்கவில்லை. எனவே அவர் என்ன உதவி செய்ய முடியும்?
நக்கீரனுக்கு…..
முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வேறுபாடு பார்ப்பது அரிதா?, அடுத்த மாதம் தொழிலாளி முதலாளிக்கு சம்பளம் தருவானா? முதலாளி தொழிலாளி என்ற வேறுபாடே போதுமானதுதான்.மார்க்சின் தேவை இங்கேயே வந்துவிடுகிறது. தேர்தலில் இடதுசாரிக்கு ஒட்டு போடுகிறார்களா வலதுசாரிக்கு போடுகிறார்களா என்பதற்கும். வர்க்க வேறுபாடு இல்லை என்பதற்கும் என்ன ஒற்றுமை?
தேர்தலில் இடதுசாரிக்குதான் தொழிலாளர்கள் வாக்களிப்பார்கள் என்றால் தேர்தலே நடக்காது!
தொழிலாளிகளும் முதலாளியாகிரார்களா? ஏன் அவ்வாறு ஆகிறார்கள் தொழிலாளியாகவே இருந்துவிட்டுப் போகலாமே?சரி நீங்கள் சொல்லும் வர்க்க வேறுபாடு இல்லாத மேலைநாடுகளில் கூட ஏன் எந்த முதலாளியும் தொழிலாளியாக விரும்புவதில்லை?
மேலை நாடுகளில் பாதிக்குமேல் பணக்காரக்களா? ஒரு நாட்டில் இருக்கும் அனைவருமே பணக்காரர்களாக முடியும்! நாடே ஏழையாய் இருந்தது தெரியாதா? இதெல்லாம் கூட மர்க்சியத்தால்தான் மாறியது.
வர்க்க வேறுபாடு கம்யுனிச்ச சமுதாயத்தில் மட்டுமே இருக்காது. மார்க்சியம் ஒன்றும் வேதம் அல்ல காலம் கடந்ததும் பொய்த்துப்போக விஞ்ஞானம்! வளர்ந்துகொண்டேதான் இருக்கும். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தலை சிறந்த சிந்தனையாளர் மர்க்சுதான் இதஈ நாங்கள் சொல்லவில்லை BBC தான் சொல்லி இருக்கிறது..
கனடாவில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானம் 18,000 டொலராக ( இந்திய ரூபாய் 810,000) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறது எனக் கணிக்கப்படுகிறது.////////////
அய்யா நக்கீரரே உங்கள் ஒப்பீடை நிங்களே ஒருமுறை படித்து பார்க்கவும், கனடாவில் அரிசி(பிரட்டும், ஜாமும்) விலை என்னவென்று யாரிடமாவது கேட்டு இருக்கிறீர்களா. இங்கு ஒரு மனிதனின் வாழ்விற்கான செலவும் அங்கு ஒரு மனிதனுன் வாழ்வதற்கான செலவும் ஒன்றா?