அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கருத்தரங்கம்



அண்ணல் அம்பேத்கரின் 53 ம் ஆண்டின் நினைவு நாளையொட்டி

“சாதியொழிக்க அண்ணல் அம்பேத்கர்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கருத்தரங்க உரை :  வே.மதிமாறன்

மனிதனை மனிதன் சுரண்டவும் ஒடுக்கவும் பயன்படும் சாதியை ஒழிக்க நாம் என்ன செய்யவேண்டும்?

விவாதிப்போம்! அனைவரும் வருக!

நாள்: 6-12-09

நேரம்: மாலை 3 மணி

இடம்: சென்னை மாநகராட்சி குழந்தைகள் பள்ளி,

டாக்டர் சந்தோஷ் நகர், எழும்பூர், சென்னை – 8

தொடர்புக்கு:

வேந்தன்

சாகேப் முடித்திருத்தகம்

எழும்பூர், சென்னை – 8.

அலைப் பேசி எண்: 98841 99901

தொடர்புடைய பதிவுகள்:

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலைவர் டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?

மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்

சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்

12 thoughts on “அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கருத்தரங்கம்

  1. தேவையான கருத்தரங்கம் வாழ்த்துகள்

  2. மனிதனை மனிதன் சுரண்டவும் ஒடுக்கவும் பயன்படும் சாதியை ஒழிக்க நாம் என்ன செய்யவேண்டும்?//

    சாதிவெறியை பற்றிய பாசிச இந்துமதவெறியை பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல மற்ற முற்போக்கு எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் இது போன்று முன்னெடுக்க வேண்டும்.

    வாழ்த்துகள் !

  3. கருத்தரங்கம் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

  4. அண்ணலின் நினைவுநாளில் சாதியை ஒழிக்க உறுதிஏற்போம்.

  5. Dear brothers & Sisters

    Do not marrry your own caste,everybody give & take and freindship with all caste.

    Yours freind
    P.Selvaraj
    Neelangarai,Chennai-600 041.

  6. I should be participate tomarrow meeting at Egmore.

    Thanking you for your calling letter.

    P.Selvaraj
    Neelangarai,Chennai-600 041.

  7. Thx for calling letter.

    Hi friends pls pass this meg to all by mails,, sms, phone call’s…….

    Ponna murai meri intha murai late panna vendam time kku nam meeting ha aarambikalam…
    Sorry ithu en karuthu thavaru irunthal sorry

    Saathi oolika nam muyachi vetri perum yenna nambuvom…

    Valthukal…

  8. கருத்தரங்கம் சிறப்பாக அமைந்தது.

    ‘எழுத்தாளர்’ மதிமாறன் அவர்கள் அண்ணலை பற்றியும் சாதி ஒழிப்பு பற்றியும் சிறப்பாக உரையாற்றினார். கருத்தரங்க இறுதியில் தோழர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாகவும் சிறப்பாகவும் விளக்கம் கொடுத்தார்.

    கருத்தரங்கில் தோழர் ‘குமுதம்’ பாலா, தோழர் செல்வராஜ், தோழர் லெமூரியன், தோழர் நிதி மற்றும் சந்தோஷ் நகர் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    நாம் எந்த நோக்கத்திற்காக அண்ணலின் உருவம் பொறித்த ஆடையை வெளிக்கொண்டு வந்தோமோ அதை நடைமுறையில் கொண்டுவரும் விதமாக எழும்பூர் மாமன்ற உறுப்பினர்(தலித் அல்லாதவர்) அண்ணல் உருவம் பொறித்த ஆடையின் நோக்கத்தை விளக்கி சொல்லி அவருக்கு அணிய கொடுத்தோம்.

    இக்கருத்தரங்கத்தில் பங்கு பெற்ற மாமன்ற உறுப்பினரும் அண்ணலின் ஆடையை அணிந்தே வந்திருந்தார்.

    நேற்று கருத்தரங்க உரை பற்றியும் ஏற்பாடு பற்றியும் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசிய மாமன்ற உறுப்பினர்(கவுன்சிலர்)

    “எழுத்தாளர் மதிமாறன் அவர்களின் கருத்து எனக்கு அண்ணலை பற்றியும் சாதியொழிப்பு போரட்டத்தின் புதிய அணுகு முறையை பற்றியும் விளக்கியது. இதை தெரிந்திருந்தாலே, இன்றைய தலித் இயக்கங்கள் மக்கள் உரிமையை கோருவதில் முன்னேற்ற பாதையை அடைந்திருக்கும். ஆனால் ஏனோ இவர்கள் இந்த அணுகு முறையில் செய்ய தவறுகின்றன. இதே கருத்தியல் அணுகுமுறை எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நானும் என் சுற்றத்தாரிடம் ஏற்கனவே பேசியிருந்திருப்பேன்” என்று கூறினார்.

    நம் பிரச்சாரத்தில், இது போன்ற சிலரின் சமூக கருத்தியல் மாற்றம் தான் நம்மை பலரிடம் பிரச்சாரம் செய்ய வைக்கும் உந்து சக்தியாக திகழ்கிறது. தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம். சாதியொழிக்க போராடுவோம்!

    மற்ற நம் தோழர்கள் பலரும் அவர்கள் பகுதியில் இது போன்ற கருத்தரங்க நிகழ்வுகளை முன்னெடுத்து, சாதி ஒழிப்பை பற்றியும் சாதி ஒழிப்பில் அண்ணலின் பங்கு பற்றிய செய்திகளையும் கொண்டு செல்ல வேண்டும்.

    சாதியொழிக்க போராடுவோம்! சாதி மத வெறியர்களை முறியடிப்போம்!

    பள்ளி மாணவர்களுக்கு கூட எளிமையாக புரியும் வகையில் சிறப்பாக கருத்தரங்க உரையாற்றிய தோழர் மதிமாறன் அவர்களுக்கு நன்றி! நன்றி! வாழ்த்துக்கள்!

  9. அன்புள்ள ச‌கோத‌ர‌ர்க‌ள், வேந்த‌ன், சுந்த‌ர‌ம், matt, நித்தில், ssk, Robin, ben, nithichellam, பாரூக், கவிமதி, பனி மலர், கலை, முர‌ளி,Thamizan, ஆட்டோ ச‌ங்க‌ர், பொய் முக‌ம், வீர‌ பாண்டிய‌ன், கொம்ப‌ன் அவ‌ர்க‌ளே& இன்னும் ஏனைய‌ ச‌கோத‌ர‌ர்க‌ளே,

    நம்முடைய கருத்துக்களை வெளியிட நாம் ஒரு புதிய‌ பிலாகு ஆரம்பித்து இருக்கிறோம்.

    இதை நீங்கள் அவ்வப் போது பார்வையிட்டு உங்களின் மேலான கருத்துக்களை வெளியிடுங்கள்.

    இந்த பிளாகின் மூலம் நாட்டுக்கு, மக்களுக்கு, உலகுக்கு நன்மை உருவாகும் என நம்புகிறோம்.

    எங்க‌ள‌து ச‌மீப‌த்திய‌ ப‌திவு ‍

    சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌மூக‌ம்‍ -1

    http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/08/casteless-homogenious-soceity-1/

    நன்றியும், அன்பும்,

    திருச்சிக் காரன்.

  10. தோழரே, மதிமாறன் , வேந்தன்
    உங்களின் கருதரங்கதில் கலந்துகொள்ள பெண்களுக்கும் அனுமதி உண்டா………..?

  11. தோழரே, மதிமாறன் , வேந்தன்

    உங்களின் கருதரங்கதில் கலந்துகொள்ள பெண்களுக்கும் அனுமதி உண்டா………..?

Leave a Reply

%d bloggers like this: