பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

S.P. ஜனநாதன் இயக்கியபேராண்மைதிரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு:

‘கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமைத்தமிழையும், ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகபடுத்தியது திராவிட இயக்கம். வணக்கம் என்கிற கலகச் சொல்லோடு என் உரையை துவங்குகிறேன் வணக்கம்.

‘அய்ரோப்பாவை பிடித்து ஆட்டுகிறது ஒரு பூதம். கம்யூனிசம் என்னும் பூதம்’ என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கல்சும் சொன்னது போல், தமிழ்நாட்டைப் பிடித்து ஆட்டியது ஒரு பூதம். சுயமரியாதை இயக்கம் என்னும் பூதம்.

1925 ல் தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்தவம், காங்கிரஸ், நீதிக்கட்சி என்று பல இடங்களில் ஊடுறுவியது. அதுகாறும் அவர்கள் நம்பிக்கொண்டிருந்த புனிதமாக நினைத்துக்கொண்டிருந்தவைகளை தலைகீழாக கவிழ்த்து நொறுக்கியது. அதற்கு ஆதரவாக எதிராக ஏதோ ஒரு நிலை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அப்படித்தான் அது நாடக கலைஞர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்தான் நடிகவேள் எம்.ஆர். ராதா.

தந்தை பெரியார் அரசியல் மேடைகளில் எப்படி சமரசம் இல்லாமல் போர்க்குணத்தோடு இயங்கினாரோ, அதுபோல் நாடக மேடைகளில் பெரியாரைபோலவே ஒரு ஒற்றை போர்வாளாக இயங்கினார் நடிகவேள். இப்படித்தான் திராவிட இயக்கம்  கலைத்துறையில் கால்பதித்தது.

ஆனால், சினிமாவில் பெரியாரோ பெரியாரின் தீவிர தொண்டர்களோ பங்கு கொள்ளவில்லை. நடிகவேளே கூட ஒரு படைப்பாளனாக தன் பங்களிப்பை சினிமாவில் செய்யவில்லை. நடிகனாகத்தான் அதுவும் நீண்டநாட்கள் கழித்துதான் பங்கெடுத்தார். அதை தன் ‘ரிடையர்டு லைப்’ என்றுதான் சொன்னார். சினிமாவில் பங்கெடுக்க கூடாது என்பதல்ல பெரியாரின் எண்ணம். ‘முடியாது’ என்பதுதான்.

தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பை சினமாவில் செய்ய முடியாது என்பதுதான் காரணம். ஆனால், திமுக காரர்கள் சினிமாவில் பங்கெடுத்தார்கள். அதற்குக் காரணம் பெரியாரின் கொள்கையில் இருந்து விலகி அவர்கள் செய்து கொண்ட சமரசம்தான்.

அவர்கள் பெரியாரிடம் இருந்து விலகி பிற்போக்காளராக மாறினாலும், சினிமா அவர்களைவிடவும் பிற்போக்காக இருந்தது. அதனால் அவர்கள் சினிமாவில் முற்போக்காளர்களாக முன்னணி  பாத்திரம் வகித்தனர்.

அதனால்தான், பராசக்தியில் “கோயில் கூடாது என்பதல்ல…. அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது….” என்று வசனம் வந்தது. இதை பெரியார் சொல்லமுடியாது. திமுகவால் தான் சொல்ல முடியும்.

ஏய் குருக்கள்அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்று பார்ப்பனரை பார்த்து கேட்க மறுத்து, “ஏய் பூசாரி அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்என்று பார்ப்பனரல்லாதவரை பார்த்து கேள்வி கேட்டது.

இன்று காஞ்சிபுரத்தில், குருக்கள் என்ன பண்றானோ? அதைத்தான் பாரசக்தியில் அந்த பூசாரி பண்ணுவான். பூசாரிக்கு பதில் பார்ப்பன குருக்கள் காதாபாத்திரத்தை காட்டி பூணூலோடு கோர்ட்டு கூண்டுல நிறுத்தி இருந்தால் பராசக்தி ரிலீசே ஆகியிருக்காது.

பார்ப்பனியத்தை எதிர்த்து மேடையில், தனி பத்திரிகையில் ஆயிரம் எழுதலாம். ஆனால், பார்ப்பனர்கள் செல்வாக்காக இருக்கிற அதிகார மையத்தில் குறிப்பால்கூட எதிர்ப்பை காட்ட முடியாது.

ஆனாலும், திமுக காரர்களின் சினிமா பிரவேசம், ஆரோக்கியமான மாற்றத்தை தான் உருவாக்கிச்சு.  ‘ப்ரணநாதா, ஸ்வாமி’ என்ற பார்ப்பனவசனத்தை ஒழிச்சி, தனித்தமிழ் வசனங்களை கொண்டு வந்தது. ‘ராமாயணம், மகாபாரதம்’ போன்ற புராண குப்பைகளை தீர்த்துக்கட்டி சமூக படங்களை கொண்டு வந்தது.

திமுக வருகைக்கு முன் தமிழ்சினிமாவில், ஓரே ஒரு கதாபாத்திரம் கூட இஸ்லாமிய காதாபாத்திரம் கிடையாது. ராமாயணத்திலும், மகாபாரத்திலும் எப்படி முஸ்லீமை காட்ட முடியும்? திமுக கலைஞர்கள் உருவாக்கிய அலை தமிழ்சினிமாவின் உள்ளடக்கத்தை தலைகீழ் மாற்றியது.

அதற்கு முன் ஒரு முஸ்லீம் கதாபாத்திரம்கூட இல்லாமல் வந்த தமிழ்சினிமாவில், ஒரு இந்துகூட இல்லாத முமுமையான இஸ்லாமிய சூழலில் சினிமாக்களை கொண்டுவர திமுக  ஏற்படுத்திய அலை முழு காரணமாக இருந்தது.

குலேபகாவலி, அலிபாபவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன் என்று முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் திரைப்படங்கள் வர ஆரம்பித்தன. திமுக அல்லாத இயக்குநர்கள் கூட இப்படித்தான் படம் எடுக்க ஆரம்பித்தார்கள். குலேபகாவலியின் இயக்குநர் டி.ஆர். ராமண்ணா. இவர் திமுக காரர் அல்ல. இப்படி ஒரு Trend திமுக காரகள்தான் உருவாக்கினார்கள்.

பீம்சிங்கின் பாவமன்னிப்பில் இஸ்லாமியராக வரும் நாகையாதான் மிகவும் நல்லவர். இந்த உலகத்திலேயே மிகவும் நல்லவர் போல்தான் வருவார். அவர் ஒரு இந்து குழந்தையை எடுத்து நல்ல மனிதனாக வளர்ப்பார். கிறிஸ்துவராக வரும் சுப்பையா அவரும் ரொம்ப நல்லவர். அந்தப் படத்துல வில்லன் ஒரு இந்து. அதுவும் அந்த வில்லன் எல்லா வில்லத்தனங்களையும் இந்து அடையாத்தோடுதான் செய்வார்….எங்கப்பனே ஞானபண்டிதா…..என்ற குரலோடு….

நடிகவேள்தான் அந்த வில்லன். சொல்லவும் வேணுமோ?

கிறித்துவராக வரும் சுப்பையா, அநாதை பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பார். அதன் மூலம் மக்களிடம் அவருக்கு கிடைக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாத… ஆளவந்தார் என்கிற இந்து (எம்.ஆர்.ராதா)  “இதுனால நாட்டுக்கு என்ன புண்ணியம்? நான்கூடதான் போனவாரம் ஒரு கல்யாணம் பண்ணிவைச்சேன். அரசமரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் அதுல இல்லாத புண்ணியமா?” என்பார்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வந்த ‘அடுக்குமல்லி’ திரைப்படத்தில் கூட ஒரு முஸ்லீம், இறந்துபோன தன் இந்து நண்பனின் குடும்பத்தை காப்பாற்றுவார்.

ரஜனிகாந்த் நடித்த படிக்காதவன் படத்தில் கூட முஸ்லிமாக வரும் நாகேஷ்தான் அநாதையான குழந்தைகளை வளர்த்திருப்பார். இப்படி தமிழர்களில் ஒரு பகுதியான இஸ்லாமியர்ளை நல்லவர்களாக காட்ட வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது….. இதை மாற்றிய படம் மணிரத்தினமும் பாலசந்தரும் இணைந்து எடுத்த ரோஜா.

இந்தப் படம் அதுகாரும் தமிழ்சினிமாவில் இருந்த இஸ்லாமிய ஆதரவு என்கிற நிலையை தலைகீழாக மாற்றியது. இந்தப் படத்தின் ‘சிறப்பு மோசடி’  இசை.

வழக்கமாக வில்லனுக்கான பின்னணி இசை ஒரு அச்சமூட்டுகிற ஒலி….அல்லது திகிலூட்டுகிற இசை… என்றுதான் இருக்கும். ஆனால் இந்தப் படம்தான் முதல் முறையாக…இஸ்லாமிய இசையை, பாங்கு ஒலியை வில்லனுக்கான பின்னணியாக மாற்றியது. இஸ்லாமிய இறைவழிபாட்டு முறைகூட வில்லத்தனமான அடையாளமாக மாற்றியது.

இதற்காகவே அந்த படத்தின் இசைக்காக தேசியவிருதும் வழங்கப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் வழியாக ஆஸ்கார் விருதுவரை ஏ.ஆர். ரகுமானை அழைத்தும் சென்றது.

ரோஜா இப்படி இஸ்லாமிய எதிர்ப்பு அடையாளங்களோடு எடுப்பதற்கு, காஷ்மீர் பிரச்சினையும் பாகிஸ்தான் உளவாளிகளும் என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் பிரிவினையின்போதோ, பாகிஸ்தானோடு போர் நடந்தபோதோ கூட இஸ்லாமியர்களை வில்லனாக சித்தரித்து தமிழ்படங்கள் வரவில்லை.

தொடரும்

32 thoughts on “பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

  1. நல்ல பார்வை. கருத்தரங்கத்திற்கு நானும் வந்திருந்தேன். பார்வையாளர்களை மாற்று கருத்துகூற அனுமதித்தது நல்ல ஜனநாயகத் தன்மை. ஆனால் மாற்று கருத்துகூற வந்தவர்களில் சிலர் சிறப்பாக தன் கருத்தை பதிய வைத்தார்கள். பலர் ரசிக மனோபாவத்தோட நடந்துகொண்டார்கள்.

    நிகழ்ச்சிக்கு இயக்குநர் ஜனநாதன் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர் வரமுடியாத காரணத்தை தோழர் மதிமாறனிடம் முதல்நாளே வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார் என்று மதிமாறன் மேடையில் கூறினார்.

    மாற்று கருத்து சொல்லவந்த நடிகர்கள், உதவி இயக்குநர்கள், ஜனநாதனின் நண்பர்கள் அவரைப் பற்றிதான் பேசினார்களே தவிர அந்தப் படத்தைப் பற்றி பேசவில்லை. ஜனநாதனிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற தொனிதான் அவர்கள் பேச்சில் இருந்தது.

    அந்த ரஷ்ய படத்தை திரையிட்டு இருந்தால், இந்த விமர்சனம் கூட தேவைபட்டிருக்காது.

  2. வணக்கம்.
    அருமையான விமர்சனம்.
    நடிகவேள் எம்.ஆர்.ராதா ஒருவர் மட்டுமே தந்தை பெரியாரின் கொள்கைகளைத் திரையில் சமரசம் செய்து கொள்ளாமல் துணிந்து பறை சாற்றியவர்.
    பார்ப்பனர்களான பாலசந்தர், மணிரத்னத்தின் முகமூடியை இன்னும் நன்றாக, முழுமையாகக் கிழிக்க வேண்டும்.
    தொடர்ந்து, கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவனையும் கிழித்தெடுங்கள்.
    இவர்களின் உண்மை முகம் அனைவருக்கும் புலப்பட வேண்டும்.
    புராணக் குப்பைகள் மகாபாரதத்தையும், ராமாயாணத்தையும் இன மானத் தமிழர்கள் முற்றுமுழுதாகத் தூக்கியெறிய வேண்டும்.
    ஆனால் இவற்றை இன்னமும் எங்கள் நாட்டில் (மலேசியாவில்) சிலர் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
    இவர்கள் என்றுதான் விழித்துக் கொள்ளப் போகிறார்களோ?
    உங்கள் வலைப்பதிவை நான் அடிக்கடி வலம் வருவதுண்டு.
    மிகவும் நன்று.
    நன்றி, ஐயா.

  3. அன்புள்ள மதி உங்கள் உரை படித்தேன். திராவிட இயக்கமும் அதன் மேடை வசனங்களும் முற்போக்குத் தன்மை கொண்டவை என்பதில் எனக்கு மாற்ருக் கருத்து இல்லை. ஆனால் பார்ப்பன எதிர்ப்பு என்பதில் துவங்கிய திராவிட இயக்கத்தின் இன்றைய இருத்தல் என்பது சந்தர்ப்பவாத பார்ப்பன இருத்தலையே தாங்கி நிற்கிறது. என்பதோடு எப்படி தமிழ் தேசீயம் என்பது ஆதிக்கசாதிகளுக்கு அனுகூலமான ஒன்றோ அபப்டித்தான் இன்றைய திராவிட இயக்கமும் பிற்படுத்தபப்ட்ட சூத்திய சாதி ஆதிக்கத்தில்தான் இருக்கிறது. தவிறவும் ஒரு காலதில் பண்ணையார்களுக்கு எதிரானது என்றூ துவங்கப்பட்ட திராவிட இயக்கம் முற்போக்கு புரட்சிகர சகதிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அபகரித்துக் கொண்டது. இன்றைகு இடது சாரி இஅய்க்கங்கள் தமிழகத்தில் வளராமல் போய் சந்தர்ப்பவாத வசன பாணி தமிழ் நடை இன்றூ வரை கோலோச்சி தம்ழி மக்களை கடந்த நாற்பது வருடங்களாக மோசடியான முறையில் ஏமாற்றியும் வருகிறது. இன்றை நவீன முதலாளித்துவத்தின் மிகப் பெரிய இடைத்தங்கல் முகாம் தான் திராவிட இயக்கம். இதை எல்லாம் வைத்து என்னையும் இந்த மண்ணையும் விழித்தெழ வைத்த தந்தை பெரியாரின் சமூகப் பாத்திரத்தை குறைத்தோ மோசமானதென்றோ நான் விமர்சிக்கவில்லை. பெரியார் அவருக்குப் பிறகு கண்டெடுத்த திராவிடக் குஞ்சுகள் சுத்த மோசடிப் பேர்வழிகள். அவர்கள்தான் இந்த சீரழிவுக்கு வழி வகுத்தவர்கள்.

    நன்றி

  4. அருமையான அலசல் தோழரே..

    சமீபத்தில் வெளிவந்த நம்ம ஆளுக எடுத்த “பசங்க” என்ற திரைப்படம் குழந்தைகளின் வாழ்கையை அழகாக எடுத்துரைப்பார்கள்.. இப்படத்தில் எந்த ஆபாசமும் இருக்காது.. ஆனால் பார்ப்பன ரத்தினம் (அதான் மணிரத்தினம்) “அஞ்சலி” என்ற ஆபாசமான காட்சிகளை கொண்ட திரைப்படத்திற்கு கிடைத்த அங்கிகாரம் “பசங்க” என்ற திரைப்படத்திற்கு கிடைக்கவில்லையே.. பார்ப்பனியம் தன்னை எல்லா இடத்திலும் காலத்திற்கேற்ப மீள் கட்டமைப்பு செய்து கொண்டே இருக்குனு மட்டும் தெரியுது..

  5. //வழக்கமாக வில்லனுக்கான பின்னணி இசை ஒரு அச்சமூட்டுகிற ஒலி….அல்லது திகிலூட்டுகிற இசை… என்றுதான் இருக்கும். ஆனால் இந்தப் படம்தான் முதல் முறையாக…இஸ்லாமிய இசையை, பாங்கு ஒலியை வில்லனுக்கான பின்னணியாக மாற்றியது. இஸ்லாமிய இறைவழிபாட்டு முறைகூட வில்லத்தனமான அடையாளமாக மாற்றியது.

    இதற்காகவே அந்த படத்தின் இசைக்காக தேசியவிருதும் வழங்கப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் வழியாக ஆஸ்கார் விருதுவரை ஏ.ஆர். ரகுமானை அழைத்தும் சென்றது//

    அடப்பாவிகளா..!!! எப்பிடில்லாம் உக்காந்து யோசிக்குறாய்ங்க..

  6. அருள்எழிலன்

    //ஆனால் பார்ப்பன எதிர்ப்பு என்பதில் துவங்கிய திராவிட இயக்கத்தின் இன்றைய இருத்தல் என்பது சந்தர்ப்பவாத பார்ப்பன இருத்தலையே தாங்கி நிற்கிறது. என்பதோடு எப்படி தமிழ் தேசீயம் என்பது ஆதிக்கசாதிகளுக்கு அனுகூலமான ஒன்றோ அபப்டித்தான் இன்றைய திராவிட இயக்கமும் பிற்படுத்தபப்ட்ட சூத்திய சாதி ஆதிக்கத்தில்தான் இருக்கிறது. தவிறவும் ஒரு காலதில் பண்ணையார்களுக்கு எதிரானது என்றூ துவங்கப்பட்ட திராவிட இயக்கம் முற்போக்கு புரட்சிகர சகதிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அபகரித்துக் கொண்டது. இன்றைகு இடது சாரி இஅய்க்கங்கள் தமிழகத்தில் வளராமல் போய் சந்தர்ப்பவாத வசன பாணி தமிழ் நடை இன்றூ வரை கோலோச்சி தம்ழி மக்களை கடந்த நாற்பது வருடங்களாக மோசடியான முறையில் ஏமாற்றியும் வருகிறது. இன்றை நவீன முதலாளித்துவத்தின் மிகப் பெரிய இடைத்தங்கல் முகாம் தான் திராவிட இயக்கம்.///

    என்று அருள் எழிலன் குறிப்பிட்டிருப்பது பொறுத்தமானது.

    பெரியாரில்வாதிகள் சாதிஒழிப்புக்கு முக்கியத்துவம் தராததுதும், பெரியாருக்கு அடுத்தபடியாக அவர்கள் அம்பேத்கரை முன்னுறுத்ததாலும் வந்த தவறுகள் தமிழ்நாட்ல் சாதி வெறி தலைவிரித்தாடுகிறது.

    பல பெரியாரிஸ்டுகளும் பிரபhகரனுக்கு கொடுக்கிற முக்கியத்துவதை அண்ணல் அம்பேத்கருக்கு தரவதில்லை. இதில் தமிழ்த்தேசியவாதிகள், பெரியாஸ்டுகள் இருவரும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.

    இரண்டுபேரையும குறைசொல்லுகிற அருள்எழிலன் போன்றவர்கள்கூட ஈழ பிரச்சினைக்கு குடுக்கிற முக்கியத்துவதை சாதி ஒழிப்புக்கு கொடுப்பதில்லை. இவரும் தமிழ்தேசியவாதிகள் போல்தான் அண்ணல் அம்பேத்கரை புறக்கணிக்கிறார்.

    சாதி உணர்வு கொண்ட பெரியாஸ்டுள், தமிழ்த்தேசியவாதிகள் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை அண்ணல் அம்பேத்கருக்கு தருவதில்லை.

    அருள்எழிலன் போன்று நடுநிலையாளர்கூட காட்டிக் கொள்கிறவர்கள்கூட பிரபாகரனுக்கு தருகிற முக்கியத்துவத்தை அண்ணல் அம்பேத்கருககு தருவதில்லை.
    இந்த சாதிய மனோபாவம் அல்லது தலித் பிரச்சினையை இரண்டாம் பட்சமாக பார்க்கிற மனோபாவம் ஒழிந்தால்தான் எதையும் சரியாக பார்க்க முடியும்.

  7. Daring article. We (the normal viewers)are not too technical to see the hidden poision in their shows. What is the basic duty to the Censors? will they allow them knowingly or they too too innocent to allow with U/A certificate.
    M.S.Vasan

  8. ////அருள்எழிலன் போன்று நடுநிலையாளர்கூட காட்டிக் கொள்கிறவர்கள்கூட பிரபாகரனுக்கு தருகிற முக்கியத்துவத்தை அண்ணல் அம்பேத்கருககு தருவதில்லை.
    இந்த சாதிய மனோபாவம் அல்லது தலித் பிரச்சினையை இரண்டாம் பட்சமாக பார்க்கிற மனோபாவம் ஒழிந்தால்தான் எதையும் சரியாக பார்க்க முடியும்.///

    இதுதான் பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல். அரசியல் காரணங்கள் அல்லலாமல் தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் தனிப்பட்ட லாபங்களின் அடிப்படையில் விஷயங்களை முடிவு செய்வதால் வருகிற பிரச்சினை.
    அ. மார்க்ஸ் போன்றவர்கள் விடுதலைப் புலிகளை விமர்சித்து எழுதுகிறார்கள் என்று அவர்களை விமர்சிக்கிற அருள் எழிலன் போன்றவர்கள் அம்பேத்கர் சிலை இடிக்கப்பட்டால் கூட அதை கண்டித்து எழுதவேண்டும் என்று அவர்களுக்கு தோன்றுவதில்லை.

    தன்னை பிரபலபடுத்திக் கொள்வதற்காக எதவேண்டுமானாலும் பிரசுரிக்கிற கீற்று என்கிற கழிசடை இணையதளத்தில் விடுதலைப் புலி எதிர்ப்பு முதலீடு இல்லா லாபம் என்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் அருள் எழிலன்…. ஆனால் விடுதலைப்புலி ஆதரவு முதலீடு இல்லா லாபம் என்று அவர் எழுதியிருந்தால்தான் பொறுத்தமாக இருக்கும். அது அவருக்கும் பொறுத்தமாக இருந்திருக்கும்.

  9. தன் உயிரையே, தன் குடும்பத்தையே தன் கொள்கைக்காக தியாகம் செய்தார் தலைவர் பிரபாகரன்….. சுயலாபம், விளம்பரம் பிடித்த இவர்கள் அவரை ஆதரிப்பதற்குகூட அருகதை இல்லாதவர்கள். இவர்களால் அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. அவர்களை வைத்து தான் இவர்களுக்கு லாபம்.

  10. சகோதரர்களே,

    சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைக்க நோக்கம் உள்ளவர்கள், இந்த சுட்டியை அடைந்து, கட்டுரையைப் படித்து கருத்து தெரிவிக்கவும்.

    http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/08/casteless-homogenious-soceity-1/

  11. ஈழவளவன்
    ///தன் உயிரையே, தன் குடும்பத்தையே தன் கொள்கைக்காக தியாகம் செய்தார் தலைவர் பிரபாகரன்….. சுயலாபம், விளம்பரம் பிடித்த இவர்கள் அவரை ஆதரிப்பதற்குகூட அருகதை இல்லாதவர்கள்.///
    தன் குடும்பத்தையே தியாகம் செய்தர் என்று சொன்னது சரிதான். ஆனால், தன் உயிரையே என்று சொன்னது தவறு… தலைவர் உயிருடன்தான் இருக்கிறார். நிச்சயம் தலைவர் வருவார்.

  12. ///கிறித்துவராக வரும் சுப்பையா, அநாதை பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பார். அதன் மூலம் மக்களிடம் அவருக்கு கிடைக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாத… ஆளவந்தார் என்கிற இந்து (எம்.ஆர்.ராதா) “இதுனால நாட்டுக்கு என்ன புண்ணியம்? நான்கூடதான் போனவாரம் ஒரு கல்யாணம் பண்ணிவைச்சேன். அரசமரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் அதுல இல்லாத புண்ணியமா?” என்பார்.////

    சிறப்பு. நடிகவேள் நடிகவேள்தான்.

  13. ‘ரோஜா இஸ்லாமிய எதிப்பு அடையாளங்கள் கொண்ட படம்’ என்ற பேச்சில் உள்ள உண்மை , அனைவரையுமே கட்டுரையாளரின் ‘ஆராய்ச்சி’ திறனைக் கண்டு தெருத் தெருவாக ஓட வைக்கும் என நினைக்கிறேன்.இதனால் தான் பேராண்மையின் இயக்குனர் இக்கூட்டத்தைத் தவிர்த்திருக்க வேண்டும்.

    சூட்டோடு சூடாக தன் அறிய கண்டுபிடிப்பான ‘ஏ.ஆர்.ரகுமான் ஒரு பார்ப்பனக் கைக்கூலி’ என்பதை இக்கூட்டத்தில் சுயமரியாதைப் பேச்சாளர் வெளியிடாமல் ‘சிறப்பு மோசடி’ என்று பேசியது தான் பம்மாத்து.

    இவர்கள் மற்றவர்களின் ‘ரசிகமனோபாவம்’ பற்றி பாடம் எடுக்கிறார்கள் என்பது காலக் கொடுமை. தடுக்கி விழுந்தால் திராவிட அரசியலுக்கு மணியாட்டி கம்யூனிசத்திற்கு காவடித் தூக்குபவர்கள் மற்றவர்களின் ‘பற்று’க்களைப் பற்றி பேசுவதற்கு நாணி நிற்க வேண்டும்.

  14. ///கிறித்துவராக வரும் சுப்பையா, அநாதை பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பார். அதன் மூலம் மக்களிடம் அவருக்கு கிடைக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாத… ஆளவந்தார் என்கிற இந்து (எம்.ஆர்.ராதா) “இதுனால நாட்டுக்கு என்ன புண்ணியம்? நான்கூடதான் போனவாரம் ஒரு கல்யாணம் பண்ணிவைச்சேன். அரசமரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் அதுல இல்லாத புண்ணியமா?” என்பார்.////

    மக்களிடையே இப்படி மத அடிப்படையிலே பிரிவினையை உருவாக்குவது அவசியமா?

    இந்தியாவிலே உள்ள 90 கோடி இந்துக்களும், ஆளவந்தார் கதாபாத்திரம் போன்று கெட்டவராக உள்ளார்களா?

    இந்து, கிருத்துவன், முசுலீம் என்று பார்க்காமல் மனிதன் என்று பாருங்கள்.

    எந்த மதமாக இருந்தாலும் அது கூறும் கருத்துக்களை ஆராய்ந்து நன்மை தரும் கருத்துக்களை பாராட்டுங்கள். தவறான கருத்துக்களை, வெறுப்புக் கருத்துக்களை, வெறிக் கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள்.

    அரசியல்வாதிகள் போல இப்படி சிறுபான்மையினர் (மத) ஆதரவு வேடம் போடுவது ஏன்?

    பெரும்பான்மையான இந்துக்கள் பிற மதத்தவரை வெறுக்கவில்லை, அவர்களுக்கு கெடுதல் நினைக்கவும் இல்லை.

    சகோதரர் மதிமாறன் அரசியலில் குதிக்கப் போகிறாரா? அப்படி இறங்கினால், இப்படி எல்லாம் நம்ப தமிழினத் தலைவர் வழியிலே எழுதினால் உபயோகம் இருக்கும். Any way advance வாழ்த்துக்கள்!

  15. காமாலை கண்ணுக்கு பாக்குறதெல்லாம் மஞ்சளா தெரியுமாம், அது மாதிரில இருக்கு இந்த விமர்சனம். ஒரு கலையில உள்நோக்கம் பாக்குற லட்சனதுலயே உங்க கபட புத்தி புலப்படுதே. முஸ்லிம் ஆதரவாளனா காட்டிக்கிறிரோ? ரோஜா படத்துல பாகிஸ்தானிய தீவிரவாதியா தான் காட்டி இருப்பாங்க, அவன் எந்த மதம்? அப்ப பாகிஸ்தானிய தீவிரவாதியா நியாயப்படுத்துறிங்க.

    ஒரு ரஷ்ய படத்த அசிங்கமே படாம அப்பட்டமா காப்பி அடிச்சிருகான் , அந்த படத்த போயி பெரிசா பேசிட்டு வந்தது மட்டும் இல்லாம , கட்டுரையா வேற போட்டாச்சா ? திருந்துங்கையா , பேசுறதுக்கு மைக் குடுத்துட்டா என்ன வேணும்னாலும் பேசுவிங்களோ?

  16. கருத்துகளில் உடன்பாடு இல்லை எனிலும் பேசிய விதம், வாதாடும் தன்மை கவர்ந்தது.

    அன்புடன்

    சூர்யா.

  17. தந்தை பெரியாரால் வளர்க்கப்பட்ட பகுத்தறிவு முற்போக்கு சிந்தனைகள் ,எல்லா மக்களையும் சென்றடையாமல் போனதற்கு,திராவிடம், தமிழ் உணர்வு போன்ற வார்த்தைகளை கேட்டாலே ஊரை ஏமாத்துற கூட்டம்,இவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று மக்கள் நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் சுயநல திராவிட கட்சியினரே..
    ஈழ பிரச்சினை பற்றி எப்படி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லையோ,ஈழ பிரச்சினையை மக்களிடம் எப்படி கொண்டு செல்லவில்லையோ அதே போல் அம்பேத்கரையும் மக்களிடம் கொண்டு செல்லாமல் விட்டு விட்டார்கள் நம் தலைவர்கள்.அதற்க்கு காரணமும் சாதி காழ்புனர்சியே. ஆனால் மக்களிடமும் இந்த சாதிய மனப்பான்மை இருக்கிறது. அதை பாதுகாத்து வருவது இந்த ஒட்டு பொறுக்கிகள்.
    பிரபாகரன் அவர்கள் படம் போட்ட சட்டை அணியாததால் ஈழத்திற்கு எதிரானவர், அம்பேத்கர் அவர்களது படம் போட்ட சட்டை அணியாததால் சாதி உணர்வு உள்ளவர் என்று சொல்லுவது அறிவீனம் .
    சாதியை எதிர்த்து போராடவேண்டிய கட்டாயம், ஈழத்தில் வாடும் தமிழனுக்காக போராடவேண்டிய கடமை,இவை அனைத்திற்கும் காரணமான பார்பனியத்தை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நாம் எல்லோருக்கும் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளத்தில் நின்று போராடுகிறார்கள், இதில் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி கொண்டால் நம் பொது எதிரிகளாகிய பார்பனர்கள் தான் பயன் அடைவார்கள். முன்னைவிட இப்போது பார்ப்பனீயம் முனைப்போடு செயல்படுகிறது,
    அதே போல் திராவிடர் என்கிற சொல் அதன் பொருளை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மொத்தத்தில் இந்த கருத்து வேறுபாடுகளால் பலன் அடைந்து கொண்டு இருப்பது பார்பனர்கள் தான் ..சிந்தியுங்கள் தோழர்களே..!

  18. //திராவிட இயக்கமும் அதன் மேடை வசனங்களும் முற்போக்குத் தன்மை கொண்டவை என்பதில் எனக்கு மாற்ருக் கருத்து இல்லை. ஆனால் பார்ப்பன எதிர்ப்பு என்பதில் துவங்கிய திராவிட இயக்கத்தின் இன்றைய இருத்தல் என்பது சந்தர்ப்பவாத பார்ப்பன இருத்தலையே தாங்கி நிற்கிறது. என்பதோடு எப்படி தமிழ் தேசீயம் என்பது ஆதிக்கசாதிகளுக்கு அனுகூலமான ஒன்றோ அபப்டித்தான் இன்றைய திராவிட இயக்கமும் பிற்படுத்தபப்ட்ட சூத்திய சாதி ஆதிக்கத்தில்தான் இருக்கிறது. தவிறவும் ஒரு காலதில் பண்ணையார்களுக்கு எதிரானது என்றூ துவங்கப்பட்ட திராவிட இயக்கம் முற்போக்கு புரட்சிகர சகதிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அபகரித்துக் கொண்டது. இன்றைகு இடது சாரி இஅய்க்கங்கள் தமிழகத்தில் வளராமல் போய் சந்தர்ப்பவாத வசன பாணி தமிழ் நடை இன்றூ வரை கோலோச்சி தம்ழி மக்களை கடந்த நாற்பது வருடங்களாக மோசடியான முறையில் ஏமாற்றியும் வருகிறது. //

    புரட்சிகர வரலாற்று பாத்திரத்தை திராவிட இயக்கம் அபகரித்து கொண்டது. அருள் எழிலன் உங்களின் கருத்து சரியானது. இயங்கியல் பூர்வமாக திராவிட இயக்கம் சந்தர்ப்பவாத அரசியலை நோக்கி சென்றது. ஆனால் ஈழத்தை ஒப்பிடும் போது தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு நாத்திகம் போன்ற முற்போக்கான அம்சங்கள் தென்படுகின்றன. அதில் கணிசமான பங்கு திராவிட இயக்கத்தினுடையது. இருப்பினும், திராவிட இயக்கம் மக்களிடையே புரட்சிகர சக்திகளை புறம்தள்ளிய போக்கை மிக சரியாக மார்க்சிய பார்வையில் நேர்மையுடன் விமர்சிக்கிறீர்கள். ஆனால் ஈழத்தில் அரசியல் போராட்ட கருத்தை கூட மக்களிடம் பரப்பாத புலித்தலைமை புரட்சிகர கம்யூனிச சக்திகளை அழித்ததையும் திராவிட இயக்கத்தை விமர்சித்த அதே
    நேர்மையுடன் விமர்சிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    தமிழகத்தில் புரட்சிகர சக்திகளை இரட்டடிப்பு செய்ததற்கே திராவிட இயக்கத்தை இப்படி விமர்சிக்கும் நீங்கள் ஈழத்தில் புரட்சிகர சக்திகளை அழித்தொழித்த விடுதலை புலிகளை விமர்சிப்பீர்களா அருள் எழிலன்?

    உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

  19. எப்போதும் நான் தமிழ் தேசியத்தையும் திராவிட இயக்கத்தையும் எப்பொதும் நான் விமர்சித்து வந்திருக்கிறேன். அது போல புலிகளையும் என்னைப் பற்ரி சரியாக வாசிக்காமல் அறைகுரையாக வாந்தி எடுட்தால் என்ன வெனச் சொல்வது. இதுவல்லாமல் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது. நன் மிக உயர்ந்த மரியாதை வைத்திருக்கிறேன். சட்டக்கல்லூரி கலவரத்தை ஒட்டி எழுந்த போது கூட என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி அம்பெத்கரைப் பற்ரி நான் எழுதவில்லை என்பது உண்மைதான். அதற்காக வருந்துகிறேன். ஆனால் அம்பேதக்ரைப் பற்ரி பக்கம் பக்கமாக எழுதும் சில மார்க்ஸ்சிஸ்ட் நண்பர்கள் ஏன் பாரதி பற்றி மௌனம் சாதிக்கிறர்கள் என்றூ கேட்டால் நீங்கள் என்ன பதிலைச் சொல்வீர்களோ அதே பதில் என்னிடமும். உண்டு. நன்றி,

    தியாங்களை மதிப்போம். பிரபாகரனின் தியாகத்தை உயிர் உள்ள வரை வணங்குவோம்…..( என்ன பெருங்கதையாடலா?)

  20. “ஆனால் அம்பேதக்ரைப் பற்ரி பக்கம் பக்கமாக எழுதும் சில மார்க்ஸ்சிஸ்ட் நண்பர்கள் ஏன் பாரதி பற்றி மௌனம் சாதிக்கிறர்கள் என்றூ கேட்டால் நீங்கள் என்ன பதிலைச் சொல்வீர்களோ அதே பதில் என்னிடமும். ” என்று முதல் பின்னூட்டத்தில் எழுதினேன். அது தவறு பாரதி பற்றி பக்கம் பக்கமாக எழுதும் சில தேர்தல் அரசியல் மார்க்ஸ்சிஸ்டுகள் ஏன் அம்பேத்கர் பற்றி எழுதுவதில்லை என்று கேட்டால். அவர்கள் என்ன பதில் சொல்வார்களோ அது போனற பதில்கள் என்னிடமும். உண்டு. தமிழ்தேசியவாதிகளை விமர்சிப்பதும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பார்வையில் இருந்துதான். மற்றபடி புலிகளையும் அவர்களின் சுத்த இராணுவவாத போராட்டங்களையும் நான் விமர்சித்திருக்கிறேன். ஆனால் அ,மார்க்ஸ் மாதிரி நானும் புலிகளை மட்டுமே விமர்சிக்க வேண்டும் என்றால் நான் அதை ஒரு போதும் செய்யப் போவதில்லை. புலி எதிர்ப்பு முதலீடில்லா லாபம் என்று எழுதிய கட்டுரைக்கு இன்றூ வரை பதில் இல்லை.ஆனால் அந்த காழ்ப்புணர்ச்சியில் என் மீது பாய்ந்து விழுகிற நண்பர்கள் இரக்க மற்ற முறையில் ஈழ எதிர்ப்பைக் கொண்டிருக்கும். மறைமுகமாக இலங்கை அரசை ஆதரிக்கும். பிரபாகரனின் மரணத்திற்காக டக்ளஸ் தேவான்ந்தாவோடு சேர்ந்து மகிழும் முற்போக்கு பிதாமகன்கள் பற்றி பேசுவதில்லை. ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீதான பல் வேறு தருணங்களில் நான் பதிவு செய்திருக்கும் குரல்.மேலே என்னைத் தாக்கும் நோக்கோடு பின்னூட்டம் எழுதிய நண்பகளின் அரசியல் பார்வவையை விட ஆழமானது. அதை ஒரு காலத்தில் நீங்களே பாராட்டியும் இருக்கக் கூடும். ஈழப் போரின் முடிவை ஒட்டி அதிகமாக ஈழம் பற்றி எழுதத் துவங்கிய பின்பு நான் அம்பெத்கர் பற்ரி எழுத வில்லை என்று. தெளிவான உண்மையை கண்டு பிடித்து கதைக்கிறீர்கள். வேறு என்ன? பிராபாகரன் என்னும் மனிதன் உங்களுக்கு பிடித்தமில்லாதவராக இருக்கலாம். எனக்கு அபப்டியல்ல. வழிப்பாட்டுணர்வுகளுக்கு அப்பால் பட்டு வணக்கத்திற்குரிய மனிதர் அவர். ஆமாம். ஈழத்தில் எப்போதும் புரட்சிகர சக்திகள் ஆயுதப் போராட்டத்திலிருந்தது இல்லை. அப்படி ஏதேனும் எண்பதுகளில் புரட்சிகர சக்திகள் இருந்து அதுதான் புரட்சிகர சக்தி என்று நீங்கள் அடையாளம் கண்டால் அதைச் சொன்னால் விவாதிக்க வசதியாக இருக்கும்.

  21. அருள் எழிலன் நீங்கள் ஏன் வேந்தன் கேட்ட கேள்வியை திசை திருப்பி, உங்களை தீவிரமான பிரபாகரன் ஆதரவாளராக காட்டி கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறீர்கள். இப்படி காட்டிக் கொண்டவர்களில் பலர் இணையத்தில் இப்படிக் காட்டிக் கொண்டு வெளிநாடு வாழ் தமிழர்களிடம் நற்பெயர் எடுப்பதிலும் அவர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதிலும்தான் முடிந்திருக்கிறது. ஆனால் நீங்கள் அப்படி பட்டவராக இருக்க மாட்டிர்கள் என்று நம்புகிறேன்

    வேந்தன் உங்களிடம் கேட்டது என்ன? நீங்கள் தருகிற பதில் என்ன?

    ///தமிழகத்தில் புரட்சிகர சக்திகளை இரட்டடிப்பு செய்ததற்கே திராவிட இயக்கத்தை இப்படி விமர்சிக்கும் நீங்கள் ஈழத்தில் புரட்சிகர சக்திகளை அழித்தொழித்த விடுதலை புலிகளை விமர்சிப்பீர்களா அருள் எழிலன்?/// என்ற வேந்தனின் கேள்விக்கு., நீங்கள்

    ///ஈழத்தில் எப்போதும் புரட்சிகர சக்திகள் ஆயுதப் போராட்டத்திலிருந்தது இல்லை. அப்படி ஏதேனும் எண்பதுகளில் புரட்சிகர சக்திகள் இருந்து அதுதான் புரட்சிகர சக்தி என்று நீங்கள் அடையாளம் கண்டால் அதைச் சொன்னால் விவாதிக்க வசதியாக இருக்கும்.///

    என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். புரட்கிர சக்திகள் ஆயுதப் போரட்டத்தில் இருந்தார்களா? இல்லையா? என்பதல்ல கேள்வி.
    புரட்சிகர சக்திகளை புலிகள் எப்படி பார்த்தார்கள் என்பதுதான்.

    இதற்கு உங்கள் பதிலை நேரடியாக சொல்லுங்கள். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியோ, விடுதலைப் புலிககளின் தியாகத்தையோ யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதனால், விவாத்தை திசை திருப்பி, உங்களுக்கு ஆதரவாக சில புலிகளின் ஆதரவாளர்களை இழுக்கும் முயற்சியில் இறங்காதீர்கள்.

  22. இதுவரை நூறு கட்டுரைகளாவது எழுதிய நீங்கள் அம்பேத்கர் பற்றி இதுவரை ஒரு கட்டுரை கூட எழுதவில்லை என்பது மிக வருத்தமான விடயம். சரி.

    //மேலே என்னைத் தாக்கும் நோக்கோடு பின்னூட்டம் எழுதிய நண்பகளின் அரசியல் பார்வவையை விட ஆழமானது. //

    தோழரே, உங்கள் அரசியல் பார்வை ஆழமானது என்பதாலேயே தான் உங்களிடம் அந்த கேள்வியை கேட்டேன்.

    நாம் கேள்வியில் நுழைவோம்.

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே சரியாக புரியவில்லை.
    புலிகளை விமர்ச்சிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள்.

    நான் கேட்டது, ஒரு மார்க்ஸிஸ்டாக திராவிட இயக்கத்தை விமர்சித்த நீங்கள் ஏன் இதே நேர்மையுடன் புலிகளை விமர்ச்சிக்கவில்லை என்று.
    அதற்கு நீங்கள் புலிகள் வணங்குதளுக்கு அப்பாற்பட்டு வணக்கத்திற்குரியவர்கள் என்று சொல்கிறீர்கள். நான் புலிகள் வணக்கத்துக்குறியவர்களா இல்லையா என்று கேட்க வில்லை.
    அவர்களின் மீதான மார்க்ஸிய பார்வையில் உள்ள உங்கள் அரசியல் விமர்சனம் என்ன?

    வினவு தளத்தில் கட்டுரை எழுதுவதோடு நிறுத்தி கொள்ளாமல் அதில் உள்ள கட்டுரைகளையும் படித்து பாருங்கள். அதில் புலிகளை பற்றிய அரசியல் ரீதியான விமர்சங்கள் உண்டு.

  23. அருள் எழிலன் அவர்களே,

    நண்பர் ‘தமிழ்’ ஈழத்தில் இருக்கும் புரட்சிகர சக்திகள் பற்றி தெரியாதவர் என்று நினைக்கிறேன். அதனால் தான் இப்படி சொல்கிறார்.

    //புரட்சிகர சக்திகள் ஆயுதப் போரட்டத்தில் இருந்தார்களா? இல்லையா? என்பதல்ல கேள்வி. புரட்சிகர சக்திகளை புலிகள் எப்படி பார்த்தார்கள் என்பதுதான்//

    புரட்சிகர சக்திகள் இருந்தார்கள். இதை மறுக்க முடியாது.

    //எண்பதுகளில் புரட்சிகர சக்திகள் இருந்து அதுதான் புரட்சிகர சக்தி என்று நீங்கள் அடையாளம் கண்டால் அதைச் சொன்னால் விவாதிக்க வசதியாக இருக்கும்.//

    என்.எல்.எப்.ரி, பி.எல்.எப்.ரி, தீப்பொறி, பாசறை புதிய ஜனநாயக கட்சி போன்ற இயக்கங்கள் இருந்தன.

    மேலும் புரட்சிகர சக்திகளை புலிகள் ஒடுக்கியதை பற்றி விவாதிக்க நான் தயார்.

  24. அருள் எழிலன் திராவிட இயக்கம் பற்றிய உங்கள் பார்வை பழ.நெடுமாறின்,சிமான் பார்வையைபோல் தவறாக வறட்டுத்தனமாக உள்ளது. நேர்மையாக இல்லை.
    உங்களைப்போன்றவர்கள் திராவிடஇய்க்கம் கருணாநிதிபோன்றவர்கள் தமிழகத்தை கெடுத்துவிட்டதாக சொல்லுவார்கள். ஆனால் திராவிடஇயக்கத்தின் பெரிய கழிசடையான எம்.ஜி.ஆரை பற்றி ஒன்னும்சொல்லமாட்டிர்கள்.அவரை ஆதரிக்கவும் செய்வார்கள்.இது மிகப்பெரிய மோசடி.

  25. உங்களிடம் கழிசடையான தமினவாதம்தான் தீவிரமாக உள்ளது. திராவிட இயக்கத்தை விமர்சிப்பதற்கு மட்டும் நீங்கள் மார்க்சிஸ்டு போல் நடிக்கிறீர்கள். மார்க்சிய பார்வையில் திராவிடஇயக்கத்தை தவிர வெறுயாரையும் நீங்கள் விமர்சிக்கமாட்டிர்கள். ஏனென்றால் நீங்கள் மார்சிஸ்டு அல்ல. வெறும் தமிழனவாதி.

  26. Matt

    ////பிரபாகரன் அவர்கள் படம் போட்ட சட்டை அணியாததால் ஈழத்திற்கு எதிரானவர், அம்பேத்கர் அவர்களது படம் போட்ட சட்டை அணியாததால் சாதி உணர்வு உள்ளவர் என்று சொல்லுவது அறிவீனம் .///

    பிரபாகரன் படம் போட்ட சட்டையை அணிபவர்கள் அம்பேத்கர் படம் போட்ட சட்டையை அணிய மறுக்கிறார்கள் என்பதுதான்ன் உண்மை. அதனால், தாங்கள் இரண்டையும் ஒன்றாகக்கி விடவேண்டாம்.

  27. ஆனால் அம்பேத்கர் படம் போட்ட சட்டை அணிபவர்கள் பிரபாகரன் சட்டை அணிகிறார்கள்.

  28. அருள் எழிலன்

    ///எப்போதும் நான் தமிழ் தேசியத்தையும் திராவிட இயக்கத்தையும் எப்பொதும் நான் விமர்சித்து வந்திருக்கிறேன். அது போல புலிகளையும்…////
    புலிகளை பற்றி உங்களது விமர்சனம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா? எப்போது விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
    தயவு செய்து கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் அருள் எழிலன். அமைதி காக்காதீர்கள்….நீங்கள் விவாதிக்க தயங்குவதையே காட்டுகிறது.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading