கலைஞர்-இராம.நாராயணன்-எஸ்.வி.சேகர்

கலையம்சமே இல்லாமல் திரைப்படம் எடுத்தவர் இராம.நாராயணன். அவரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமித்திருக்கிறார்களே?

-எஸ்.கிருஷ்ணசாமி, விழுப்புரம்.

கலையம்சம் இல்லாமல் படம் எடுத்ததுக்கூட பரவாயில்லை. பகுத்தறிவுக்கு எதிரான மூடக்கருத்துகளை -ஏற்கனவே மூடநம்பிக்கையில் மூழ்கி இம்சைபடுகிற எளிய மக்களிடம் பரப்பி, பணம் பார்த்தவர் இராம.நாராயணன்.

குரங்கு, நாய், பாம்பு இவைகளை நடிக்க வைத்தக் கொடுமையைக் கூட மன்னித்துவிடலாம்.  எஸ்.வி.சேகர் என்கிற பார்ப்பன ஜாதி வெறியரை, தனது 16 படங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்து, தமிழர்களுக்கு அவர் செய்த தீமையை மன்னிக்கவே முடியாது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே எதிராக இருக்கிற பார்ப்பனரல்லாத பார்ப்பனரான இராம.நாராயணனுக்கு, கலைஞர் கொடுத்திருக்கிற முக்கியத்துவம் ரொம்ப அதிகம்.

சமூக விழிப்புணர்வு – மாத இதழ், செப்டம்பர் 2007

வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

தொடர்புக்கு;

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

சென்னை புத்தகக் காட்சியில் ‘கீழைக்காற்று’ புத்தகக் கடையில் கிடைக்கும்

9 thoughts on “கலைஞர்-இராம.நாராயணன்-எஸ்.வி.சேகர்

  1. //குரங்கு, நாய், பாம்பு இவைகளை நடிக்க வைத்தக் கொடுமையைக் கூட மன்னித்துவிடலாம். எஸ்.வி.சேகர் என்கிற பார்ப்பன ஜாதி வெறியரை, தனது 16 படங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்து, தமிழர்களுக்கு அவர் செய்த தீமையை மன்னிக்கவே முடியாது.//

    மனிதரும் மிருங்கள்தான் என நிரூபிக்கும் வசனம். ஐயா, பார்ப்பனரே இல்லாத வாழ்கை வாழ்வதற்கு தனியொரு தேசத்தை உருவாக்குங்கள்.

  2. தமிழர்கள் வேறு,பார்ப்பனர்கள் வேறா?அப்படியென்றால் மிகத் தொன்மையான தமிழ் இலக்கியமான தொல்காப்பியத்திலேயே பார்ப்பனர்கள் இடம் பெற்றுள்ளனரே?பார்ப்பனர்கள் தமிழகத்திற்கு (அல்லது இந்தியாவிற்கு) வெளியில் இருந்து வந்தார்கள் என்ற கருத்துக்கு தமிழ் இலக்கியங்களில் எதிலாவது ஆதாரம் இருக்கிறதா? இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

  3. கருணாநிதி மேல் உங்களுக்கு இருக்கும் அன்பு அதை விட அதிகமாக இருக்கிறது. அண்ணாதுறை என்று எழுதக் கூடாது என்றீர்கள் அறிஞர் அண்ணா என்று எழுதினோம். இப்போது கருணாநிதி என்று கூட எழுதத் தயங்குகிறீர்கள். இதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.

  4. கலைஞர், ஒரு கலைஞனை கலைஞனாக மட்டுமே பார்க்கிறார் என்பது இதில் உங்களுக்குத் தெரியவில்லையா?

    கலைஞர்களை கலைத் தொடர்பாக மட்டுமே பார்க்க வேண்டும். அவர்களை இந்துவாக, முகமதியராக, கிறிஸ்தவராக, பார்ப்பனராக, தாழ்த்தப்பட்டவராக பார்க்கிற போது கலை அழிந்து மனிதன் மட்டும்தான் தெரிவான்.

    நான் மதிமாறனை ஒரு சிந்தனாவாதியாக மட்டுமே பார்க்கிறேன்.

    http://kgjawarlal.wordpress.com

  5. தொம்பன்

    ////கருணாநிதி மேல் உங்களுக்கு இருக்கும் அன்பு அதை விட அதிகமாக இருக்கிறது. அண்ணாதுறை என்று எழுதக் கூடாது என்றீர்கள் அறிஞர் அண்ணா என்று எழுதினோம். இப்போது கருணாநிதி என்று கூட எழுதத் தயங்குகிறீர்கள். இதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை./////

    உங்கள் தானைத்தலைவர் தமிழ்நாட்டின் புரட்சிபுயல், விடுதலைப்புலி வைகோகூட கலைஞர் என்றுதான் குறிப்பிடுகிறார். அதற்காக அவர் என்ன கருணாநிதிமீது பாசமாக இருக்கிறார்? என்று அர்த்தமா?

    ////அண்ணாதுறை என்று எழுதக் கூடாது என்றீர்கள் …….///

    ஆமாம். ‘அண்ணாதுரை’ என்றுதான் எழுதவேண்டும்.

    ///அறிஞர் அண்ணா என்று எழுதினோம்.///

    எந்தக்ககூமுட்டை உங்கள அறிஞர் அண்ணாஎன்று எழுதச் சொன்னான்?

    சரி.

    வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களை ஏமாற்றி, பத்திரிகை நடத்துறேன்….என்று போலி கணக்கு காட்டி வாங்கிதின்னறானுங்களே அவனுங்கள பத்தி என்ன நினைக்கிறீங்க தொம்பன்?

  6. பகுத்தறிவு பேசிக் கொண்டு ஜோதிட நூலை செய்து கொண்டிருக்கிற அன்பர்கள் அது பற்றியும் பேசினால் நன்றாக இருக்கும்.

  7. வணக்கம் தோழர் மதிமாறன்…
    சாதி மற்றும் பொருளாதாரப் பிரிவினைகள் குறித்து பதில் அளிக்கையில்
    (மதிமாறன் பதில்கள் பக்-54) “யாருக்கும் இழப்பு இல்லாமல் நன்மை செய்ய கடவுளால் கூட முடியாது ” என்று கூறியிருப்பது சரியே என்றாலும் , சாதி இழிநிளைகளுக்கு ஆதி காரணமாக கூறப்படும் “கடவுள்” என்ற வெறும் வெற்றுச்சொல்லை உண்மை போல் பயன்படுத்தி இருப்பதும்…… அம்பேத்கர் விஷ்வ ரூபம் பற்றி கூறும் போது “விண்ணுக்கும் மண்ணுக்கும் விஷ்வ ரூபம் எடுத்தானாமே சிவன்” (பக்-36) என்றும் கூறி இருப்பது.. “கங்கை இன்னும் வற்றாமல் இருக்க பார்ப்பன பெண்களின் கண்ணீர்தான் காரணம்” (பக் -84) என்பது….சற்று கவனத்தில் கொள்ளவும். உண்மை கூறும் பக்கங்களில் இது போன்ற வர்ணனைகள் எதற்கு? பேராண்மை படத்தில் கம்யுனிசம் பேசும் நாயகன் பிற்பாதியில் “காளி மாரி” என்று பேசுவது ஆன்மீகச் சிந்தனை இல்லை என்றாலும் தவறு என்றதைப் போல! “சுயசாதி உணர்வை விட கவுள் நம்பிக்கை முற்போக்கானதுதான்” என்பது ஒப்புமை அடிப்படையில் உண்மைதான்

    vaazhththukkal

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading