‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய்

‘ஆயிரம் கால் மண்டபம்’-ஒவ்வொரு தூண்களுக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறது மர்மக் கத்தி

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1

நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2

பகுதி – 3

ந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது காந்தி, இந்துமதத்திற்குள் இஸ்லாமிய ஆதரவு நிலையை கடைப்பிடித்தார். இது பார்ப்பனர்களின் கோபத்தை தூண்டுவதாக இருந்தது. அதற்குதான் காந்திக்கு ‘செக்ட்ச்’ போட்டார்கள் பார்ப்பனர்கள்.

இதை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், காந்தி கொலைவழக்கில் கைதாகி, கோர்ட்டை தன்னுடைய பிரச்சார மேடையாக பயன்படுத்திய கோட்சேவின் கோர்ட் பேச்சே சாட்சி.

பிரிவினைக்கு பிறகு காந்தி பாகிஸ்தானுக்கு 50 கோடிரூபாய் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார். அதைக்கூட பொறுத்துக்கொண்டோம். ஆனால், இந்துக்கோயில்களில் பிரார்த்தனையின்போது, இஸ்லாமிய பாங்கு ஓசை ஒலிக்கச் செய்தார். அதை மன்னிக்கவே முடியாது. அதனால்தான் கொன்றேன்என்றான் கோட்சே. இதை அவன் தெருவில் சொல்லவில்லை. தன்னை குற்றவாளியாக நிறுத்திய கோர்ட்டில் துணிச்சலோடு பேசிய பேச்சு.

சாந்த சொரூபிகளாக அப்பாவியாக காட்சி தருகிற பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கிட்டின் காரணமாக  உயர்கல்வியில், வேலை வாய்ப்புகளில் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆபத்து வரும்போதும், கோயில்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களால், பார்ப்பனர்களின் ‘புனித’த் தன்மைக்கு பாதிப்பு வரும்போது, கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்கள். பார்ப்பனியத்தின் ரவுடித்தனத்தை அப்போது நன்கு உணரலாம்.

ஒருத்தர் அந்த ஏரியாவுலேயே பெரிய ரவுடியா இருப்பாரு, அவர பாத்தாலே பார்ப்பனர்களில் இருந்து எல்லா ஜாதிமக்களும் பயந்து ஓடி ஒளிந்துகொள்வார்கள். அவரு எங்கவேணுன்னாலும் போவாரு, என்ன வேணுன்னாலும் கேக்கமலே எடுத்துப்பாரு, யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது. கேட்டா வெட்டுதான்.

எலலாத்துக்கும் துணிஞ்ச ரவுடியை கோயில் கர்ப்பகிரகத்திற்குள் நேராஉள்ளபோய், ரவுடித்தனத்தோடு இல்ல, பக்தியோடகூட சாமிய தொட்டு கும்பிட சொல்லுங்களேன் பாக்கலாம். அப்போதெரியும் உண்மையான ரவுடி யாருன்னு? அப்போ வெட்டு ரவுடிக்கு விழும். வெட்டுனது சாந்தசொரூபிகளான பார்ப்பனர்களாக இருப்பாங்க.

இந்தியாவின் மாபெரும் தலைவராக இருந்தார் காந்தி. அவர் அளவிற்கு  மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றத் தலைவர்கள் அவருக்கு முன்பும்  யாருமில்லை. பின்பும் யாருமில்லை. பிரிட்டிஷ் அதிகாரத்தின் உச்சியில் இருந்த மவுண்பேட்டன் போன்ற வெள்ளைக்காரன் கூட காந்தியை பார்த்தால், எழுந்து நின்னு கூம்பி்ட்டான். ஆனால்,  இந்த செல்வாக்கு எல்லாம், இந்துக் கோயிலுனுல் செல்லாது. அங்கே காந்தி கைகட்டி ஒரு முட்டாள் பார்ப்பான் முன்னால் நிக்கனும். அதைமீறி நடந்தால் சாகனும். அப்படித்தான் சாகடிக்கபட்டார் காந்தி.

இந்துக் கோயிலுனுள், இஸ்லாமிய பாங்கு ஒலிக்கச் செய்ததால், என்ன புனிதம் கெட்டுபோய்விட்டது? புனிதம் கெட்டுப்போய்விட்டது என்று தீர்மானிப்பதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது? காந்தியும் இந்துதான். அதுவும் இந்துமதத்தையும் ராமனையும் தன் கண்களாக கருதியவர்தான் காந்தி. அவருக்கு தெரியாத இந்துமதப் புனிதமா?

‘இஸ்லாமிய பாங்கு ஒலித்ததால் இந்துமத புனிதம் கெட்டுபோய் விடடது’ என்கிற உண்மையான இந்துவின் மத உணர்வில் இருந்துதான் காந்தியை பார்ப்பனர்கள் கொன்றார்களா? அப்படியானால், அதுஏன் பார்ப்பனர்களை தவிர மற்ற ஜாதி இந்துக்களுககு தவறாக தெரியவில்லை.?

சரி. அப்படியானால் இந்துக் கடவுள்களை போற்றி, சமஸ்கிருதத்தை தவிர தமிழ் போன்ற மற்ற மக்கள் மொழிகளில் அர்ச்சனை செய்ய ஏன் மறுக்கிறார்கள்?

சிவனை போற்றிபாடுகிற தேவாரம், திருவாசகத்தை கோயிலுனுள் பாடுவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? திருவாசகமும், தேவராமும் என்ன அரபு மொழியில் அல்லாவை பற்றிய பாடல்களா?

பார்ப்பன நலனேயே பிரதானமாக கொண்டதாக அல்லது பார்ப்பன ஆதரவாக இருந்தாலும் தேவாரத்தையும், திருவாசகத்தையும் கருவறை அர்ச்சனைபாடலாக பாட பார்ப்பனர்கள் ஏன் மறுக்கிறார்கள்?

உண்மையில் இந்துமதத்திற்கு புனிதம் என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால், ஜெயேந்திரன் கொலை செய்தபோதும், காமகளியாட்டத்தில் ஈடுபட்டபோதும், காஞ்சிபுரத்தில் ஒரு பார்ப்பனர் கோயில் கருவறையை, ‘கரு’ உண்டாக்கும் அறையாக மாற்றியபோதும் பார்ப்பனர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? வீதியில் இறங்கி போராடவில்லை. இந்து மத புனிதத்தின்படியே ஒரு பார்ப்பனரல்லாதவர் கருவறைக்குள் நுழைவதைவிட புனிதக்கேடு இல்லையா இது?

“பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான வேதமும் அதன் தொடர்ச்சியான இந்துமதமும் எந்த மாறுதலுக்கும் உள்ளாக்கப்பட முடியாதது. கூடாது” என்று பார்ப்பனர்கள் சொல்வது உண்மைதானா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் டாக்டர் அம்பேத்கரிடம்தான் போகவேண்டும்.  அவரிடம்தான் பார்ப்பனியத்தின், வேதத்தின், புராணங்களின், இதிகாசங்களின் மிக நுட்பமான மர்ம முடிச்சுகளை அவி்ழ்த்து அம்பலப்படுத்துவதற்கான ‘மந்திரம்’ இருக்கிறது.

-தொடரும்

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறத்தியதை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு.

மேடையில் பேசியசெய்திகளோடு, தொடர்புடைய சில செய்திகளையும்  சேர்த்து வெளி்யிட்டு இருக்கிறேன்.

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1

நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2

60 thoughts on “‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய்

 1. //உண்மையில் இந்துமதத்திற்கு புனிதம் என்று ஒன்று இருக்கிறதா? …….. கருவறைக்குள் நுழைவதைவிட புனிதக்கேடு இல்லையா இது//

  அப்படி பார்த்தா, காந்தி பார்ப்பனராக இருந்திருந்தால் பார்ப்பனர்களால் கொலை செய்யப் பட்டிருக்கமாட்டாரோ?

 2. முதல்ல நீங்க காந்திய ஒத்துகிறிங்களா இல்லையா…அதச் சொல்லுங்க… அவருக்காக கண்ணீர் விட்டுவிட்டு அப்பறம் காந்தியும் துரோக வரலாறும்னு ஆரம்பிச்சுடுவிங்க….

 3. //முதல்ல நீங்க காந்திய ஒத்துகிறிங்களா இல்லையா…அதச் சொல்லுங்க… அவருக்காக கண்ணீர் விட்டுவிட்டு அப்பறம் காந்தியும் துரோக வரலாறும்னு ஆரம்பிச்சுடுவிங்க….//

  காந்தியை ஒத்துக்கொள்வது பற்றிய கட்டுரை இதுகிடையாது காந்தியை ஏன் பார்பன்ர்கள் கொலைசெய்தார்கள் என்பது பற்றியது.

 4. ungaluku braminsa pidikathu athanala gandhiay supportku ilukarenga.. nalaiku gandhiya pidikati vera yarayavathu supportku ilupenga

 5. Nithil (05:22:59) : திருத்து

  //உண்மையில் இந்துமதத்திற்கு புனிதம் என்று ஒன்று இருக்கிறதா? …….. கருவறைக்குள் நுழைவதைவிட புனிதக்கேடு இல்லையா இது//

  அப்படி பார்த்தா, காந்தி பார்ப்பனராக இருந்திருந்தால் பார்ப்பனர்களால் கொலை செய்யப் பட்டிருக்கமாட்டாரோ?///

  காந்தி பார்ப்பனராக இருந்தால், இப்படி இந்துக் கோவிலில் முஸ்லிம் பாங்கு ஒலிக்கச் செய்திருக்கமாட்டார்.

 6. Dear Thozhar Vanakkam,

  This article very nice,actually Gandhi was understand about bramins criminal thoughts and policy last time before murder.but enemy won Gandhi Assasinated.

  Truly
  P.Selvaraj (Neelangarai)

 7. வேதிமாறன்
  உங்களுடைய பதிவுகளை அண்மைக்காலமாக படித்து வருகிறேன்
  உலகின் மிக நீளமான ராமேஸ்வரம் மூன்றாம் பிரஹாரத்தின், புகைப் படம் இது
  இதை வைத்து ஆயிரம் கால் மண்டபம் என்று எப்படி ஒரு பகுத்தறிவு கட்டுரை வெளியிடுகிறீர்கள்
  நீங்கள் இத ஒதுக்க கொள்ளவில்லை என்றாலும் அதே ஊரில் பிறந்த எனக்கு நீங்கள் நிருபித்து விட முடியாது

 8. தமிழ் போன்ற மற்ற மக்கள் மொழிகளில் அர்ச்சனை – கோவில்களுக்கு மட்டும்தான் தமிழ் பற்று வேண்டுமா
  இல்லை உங்களை போருத்ஹ்டவரை ஹிந்துக்களுக்கு மட்டும்தான் தமிழ்நாடு சொந்தமா
  மற்ற மதத்தினரை ஏன் இப்படி ஒதுக்குகிறீர்கள் . தோழர்

 9. ////அதைமீறி நடந்தால் சாகனும். அப்படித்தான் சாகடிக்கபட்டார் காந்தி. /// – தோழர்
  நீங்கள் உண்மையிலேயே வரலாறு படித்தவரா
  இல்லை வேண்டுமென்று மற்ற போலி பகுத்தறிவுகள் போல் திரித்துக் கூறுகிறீர்களே
  உங்களுக்குள் உண்மை இருந்தால் கோட்சே வாக்குமூலத்தை வைத்து வாதிடுங்கள்.
  உங்களுக்கு தோன்றியவை தான் வரலாறு என்று திணிக்காதீர்கள்

 10. இந்துக்கோயில்களில் பிரார்த்தனையின்போது, இஸ்லாமிய பாங்கு ஓசை ஒலிக்கச் செய்தார். – இதை விளக்கிச் சொல்லி உதவ முடியுமா ?????

 11. ‘புனித’த் தன்மைக்கு பாதிப்பு வரும்போது, கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்கள். – ஒரு பதிவு செய்யப் பட்ட எடுத்துக்காட்டு குடுங்களேன் ???

 12. சிவனை போற்றிபாடுகிற தேவாரம், திருவாசகத்தை கோயிலுனுள் பாடுவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? திருவாசகமும், தேவராமும் என்ன அரபு மொழியில் அல்லாவை பற்றிய பாடல்களா?
  =
  கோயிலுக்கு தினசரி போகிறவர் போலவே எழுதி இருகிறீர்கள் . உங்கள் பகுத்தறிவுக்கு எதிராக நீங்கள் ஏன் கோயிலுக்குப்போநீர்கள் ??
  வேதங்களில் பகுத்தறிவு தேடவா ?? அப்படியே நீங்கள் போனதில்லை என்றால் செவிவழி செய்தி வைத்து எழுதும் பகுதறிவ உங்களது.
  சரி ஒரு உண்மை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை – எல்லா கோயில்களிலும் தேவர் பாடப் படுகிறது

 13. உண்மையில் இந்துமதத்திற்கு புனிதம் என்று ஒன்று இருக்கிறதா? –
  இந்த ஒரு வரி போதாத வேதிமாறன், ஒரு வேசித்தனமான, வெறுப்பு உமிழும் பதிப்பென்ற நிருபணம் இது என்பதற்கு
  உடனே பார்பனர்கள் பிற்படுத்தப் பட்டோரை வெறுத்து இப்படி பேசுகிறார்கள் அதனால் தான் நானும் பேசினேன் என்று உரத்த குரலில் சொல்ல வேண்டாம். அவர்கள் வெறுப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை, அது தவறு என்றால், நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள் ????

 14. தோழர் நாளைய அரசியல் நாற்காலி ஆசைதான் உங்களுடைய எண்ணம் என்று சொல்லிவிட்டால் நான் உங்களிடம் கேள்வி கேட்டக் போவதில்லை – அனால் பகுத்தறிவு, பெரியார், லெனின், பிற்படுத்தப் பட்டோர், தலித்கள், பெனுரிமை, என்று நாளைய வோட்டு பிச்சைக்கு ஏன் இப்படி ஒரு போலி வேடம்

 15. காந்தி பார்ப்பனராக இருந்திருந்தால் –
  வேதிமாறன் போன்றோர்கள் கொன்றிருப்பர்

 16. Ambi Vikram…..

  Enna oru arivu…..

  mama/athimber,

  besh besh romba nanna iruku…….. i

 17. vikram , உங்கள் பிரச்சினை என்ன ? நீங்களாகவே கேள்வி கெட்டு கொண்டு நீங்களே பதிலும் சொல்லி கொள்கிறீர்கள்.
  //‘புனித’த் தன்மைக்கு பாதிப்பு வரும்போது, கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்கள். – ஒரு பதிவு செய்யப் பட்ட எடுத்துக்காட்டு குடுங்களேன் ???//
  இதுதான் அப்பு உலக மகா காமெடி ! ஒரு பதிவு செய்யப்பட்ட எடுத்துகாட்டு என்ன ,ஓராயிரம் எடுத்துகாட்டுக்கள் வரலாறாகவே உள்ளது.
  //சரி ஒரு உண்மை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை – எல்லா கோயில்களிலும் தேவர் பாடப் படுகிறது//
  சரி ,தில் இருந்தா போய் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாடிவிட்டு , ஒரு அடி வாங்காம உயிரோட வந்துடுங்க பாப்போம் .

 18. //ஒருத்தர் அந்த ஏரியாவுலேயே பெரிய ரவுடியா இருப்பாரு, அவர பாத்தாலே பார்ப்பனர்களில் இருந்து எல்லா ஜாதிமக்களும் பயந்து ஓடி ஒளிந்துகொள்வார்கள். அவரு எங்கவேணுன்னாலும் போவாரு, என்ன வேணுன்னாலும் கேக்கமலே எடுத்துப்பாரு, யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது. கேட்டா வெட்டுதான்.

  எலலாத்துக்கும் துணிஞ்ச ரவுடியை கோயில் கர்ப்பகிரகத்திற்குள் நேராஉள்ளபோய், ரவுடித்தனத்தோடு இல்ல, பக்தியோடகூட சாமிய தொட்டு கும்பிட சொல்லுங்களேன் பாக்கலாம். அப்போதெரியும் உண்மையான ரவுடி யாருன்னு? அப்போ வெட்டு ரவுடிக்கு விழும். வெட்டுனது சாந்தசொரூபிகளான பார்ப்பனர்களாக இருப்பாங்க.//

  இதை அமபலபடுத்தினால் அக்கிரகிராமத்து அம்பிகள் குடிமியை இறுக கட்டின்டு வராள் மாறுவேசம் போட்டு!!!

  நீங்கள் தொடருங்கள்..

  தோழர் matt பெயர் மட்டும்தான் மாற்றம் ஆள் ஒன்றே என நினைக்கிறேன்.. திருந்துமா அந்த கூட்டம்????????

 19. ஓராயிரம் எடுத்துகாட்டுக்கள் வரலாறாகவே உள்ளது – matt oru yeduthukkattu mattumdhaan kettaen neengal innum sollavillai, yenakku varalaaru theriyaadhu neengal sollungal // // / / /

  இதை அமபலபடுத்தினால் அக்கிரகிராமத்து அம்பிகள் குடிமியை இறுக கட்டின்டு வராள் மாறுவேசம் போட்டு!!! / // / /

  enaya samaya nanbargal mariyaadhai thavarum soolnilaiyil, vaarthai atthumeeralgalukku avai vazhi vagukkum, kurippaga avai vivaadhangalin porulai kondruvidum, ungalukku vivadhikkum arivu, porumai, thevai illayendraal, veenaaga kulappam vilaivikka oru karuthup padhivu vendaam

  vedhimaaran – ungal badhilgalukku kaaththu irukkiraen, ungalidam badhilgal illaiyendraal adhaik kooda naan madhikkiraen – neengal adhai oppuk kollum patchathil.
  indha padhivil koyil padangalai matrip pottu kulappam yerpaduthiya neengal, ‘nalla pagutharivazhar’ yendra murayil bagiranga mannippum ketpeergal yendru nambugiraen

 20. தலைப்பே அதை பற்றிதானே திரு விக்ரம் , காந்தியை தங்கள் புனித தன்மைக்கு பாதிப்பு வந்துவிமோ என்று அஞ்சிதானே கொன்றார்கள். எத்தனையோ சமண மதத்தவரை கழுவில் ஏற்றி கொன்றார்களே அது எதற்காம் ? பார்பன கை ஆள் ராமன் சம்பூகனை கொன்றானே எதற்கு , யார் சொல்லை கேட்டுவிட்டு கொன்றான் ? தில்லையில் தேவாரம் பாடபோன ஆறுமுக ஐயாவை உருட்டு கட்டை கொண்டு அடித்தார்களே ஏனாம் ?..

 21. விகரம் எழுதியது:

  //புனித’த் தன்மைக்கு பாதிப்பு வரும்போது, கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்கள். – ஒரு பதிவு செய்யப் பட்ட எடுத்துக்காட்டு குடுங்களேன் //

  நந்தனாரை சிதம்பரம் பூஜாரிகள் எரித்துக்கொன்றது.

 22. விக்ரம், மற்றுமொரு எடுத்துக்காட்டு: வாஞ்சினாதன் ஆஷை சுட்டுகொன்றது. ஆஷ் பார்ப்பனீயத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் பார்ப்பனர்கள் படுத்தியது. ஆஷின் கொலை ஒரு திருனெல்வேலி, செங்கோட்டைப் பார்ப்பனர்களால் அரங்கேற்றப்பட்ட கொடிய நாடகம். இன்று அதன் பெயர் சுதந்திரப்போராட்டம்.

 23. Matt,
  Nandri,
  புனித தன்மைக்கு பாதிப்பு வந்துவிமோ என்று அஞ்சிதானே கொன்றார்கள் – idhu evvalavu unmai enbadhai neengal ‘godse’ vakkumoolam padiththup paarungal theriyum.
  Oru silar seivadhai andha motha kuluvinarum appadithaan yendru sonnaal, idhai vaiththu ulagathil ulla anaiththu kulukkalukkum oru mattamaana ilakkanam appa mudiyum,

  Appadi paarkkap ponal kadantha moovayiram varudangalil, paarpanarai allaadha yendha oru kuluvinarukkum innoru kuluvinarukkum idayae idhu varai sandaigal, vandhadhillayaa
  *Indira Gandhiyai kondradhu oru seekiyar – moththa seekiya inathavarayum kolaikaarargal endru bagiranga arivippu veliyida mudiyumaa ?
  *Rajiv gandhiyai kondradhu oru eelath thamizhan – vedhimaaranin oru padhivil kooda avar andha kuluvinarai aadharikkamal eludhiyadhillai

  Gandhiyai vedhimaaran avargalae pala padhivil aadharikkavillai, appadi irukkayil avarudaya kolayai yaar seidhaar enbhadhai vida avar yendha saadhiyai saarndhavar yenbadhu mukkiyamaaga kangalil paduvadharkku – oru ina veri, alladhu mananoi, alladhu thelindha arasiyal , poruliyal ull nokku mattumae kaaranamaaga mudiyum.

  osamavai vaiththu sirupaanmayinarai edhippadhu moodam enbadhil naanum vedhimmaranum ondru. kasav oru theeviravadhi yendraalum avanai samayath theeviravaadhi yenbadhu sari.
  avanai islaamiya theevira vadhi yenbadhu yendha alavirkku naveena moodath thanamo adhae keeltharamaana oru adippadayae – oruvarai vaiththu paarpanarai moththamum kolaigaarargal enbadhu

  Vedhimaran,

  Ungal badhilukkaaka kaathirukiraen

 24. திரு விக்ரம் சார்,
  உங்கள் பின்னூட்டம் படிக்க சிறிது சிரமமாக உள்ளது.கீழ் உள்ள சுட்டியைப் பயன் படுத்தி தமிழில் எழுதலாம்.
  http://www.google.com/transliterate/indic/Tamil

 25. Vikram,
  பார்பனர்கள் என்ன என்ன செய்துள்ளார்கள் காலங்காலமாக தங்கள் சுயநலனுக்காக என்று இந்திய அரசியல் சாசனத்தை இயற்றிய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் கிழி கிழியென்று கிழித்து பார்ப்பன இந்து மதத்தை அம்மணமாகியதை படித்துவிட்டு வாருங்கள்.

  http://mathimaran.wordpress.com/2008/12/

 26. Vikram,
  // எத்தனையோ சமண மதத்தவரை கழுவில் ஏற்றி கொன்றார்களே அது எதற்காம் ? பார்பன கை ஆள் ராமன் சம்பூகனை கொன்றானே எதற்கு , யார் சொல்லை கேட்டுவிட்டு கொன்றான் ? தில்லையில் தேவாரம் பாடபோன ஆறுமுக ஐயாவை உருட்டு கட்டை கொண்டு அடித்தார்களே ஏனாம் ?..//

  இதை பற்றி தாங்கள் பேசவே இல்லையே .!?

 27. வெட்டுபவர் பார்ப்பனராக இருப்பார்.. இப்படி இல்லைன்னு தெரிஞ்சுதான் ஒரு காலத்துல பூணூல் வெட்டி விட்டீங்க, குடுமி செரைச்சீங்க. அவங்க அப்போ ஒன்னும் பெருசா தாக்குதல் நடத்தலையே?
  பகுத்தறிவு பேசுறவங்க குடும்பத்த பத்தி பேசினா கூட வீட்டுக்கு ஆட்டோ வருதே?
  ஒரு விஷயம். நான் அடிக்கடி பதிவு எல்லாம் பாக்குறதில்லை. அதனால மொக்கையா எதுனா கேட்டு எங்கே போனார் அப்படின்னு கத்தகூடாது சரியா? நீங்க சமத்துவத்துக்கு பாடுபடலை. அப்போ அவங்க பன்னதைத் தான் நீங்களும் பண்றீங்க.

 28. MATT – தங்கள் பெயர் என்ன ???

  அம்பேத்கர் எழுதிய காலத்தில் நிலை வேறு இன்றைய நிலை வேறு என்று நீங்கள் இன்னும் உணரவில்லை. சமண மதத்தை பார்பனர்கள் மட்டும் இல்லை – மொத்த ஹிந்துக்களும் எதிர்த்தது உண்மை – அதை வெறும் பார்பனர்கள் தலையில் போடுவது உண்மைகளை திரிப்பது மட்டுமே.

  பார்பனர்களின் கைல்கூலி ராமன் – எப்படி சொல்கிறீர்கள் ??
  =====
  தனபால் – என்னை மன்னியுங்கள்.
  ======
  வேதிமாறன் – உங்கள் பதிலுக்கு காத்திருகிறேன்

  தேவாரம் பாடப் போன ஆறுமுகம் அய்யாவை உருட்டுக் கட்டையால் அடித்தனர் – இது தவறுதான், அதற்க்கு அவர்கள் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்.

  ஒசாமா / அஜ்மல் கசவ் பிறப்பின் அடிப்பையில் , அவனுடைய இனம் சார்ந்த அனைவரையும் கொலைகாரர்கள் என்றோ,
  இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்களின் அடிப்படையில் அவர்களை முழுக்க கொலைகாரர்கள் என்றோ,
  சொல்லிவிட முடியுமா ???

  மீண்டும் நாம் இவ்வளவு குரல் கொடுக்கும் ஈழத் தமிழர்கள்தான் ராஜீவ் காந்தியை கொன்றார் – மொத்த ஈழத் தமிழர்களை எதிர்த்து நாம் போராட்டம் செய்கிறோமா ????

 29. வணக்கம்:

  இந்தத் தொடரில் ரவுடியிசத்தைப்பற்றி் நானும் கொஞ்சம் சொல்லியாகவேண்டும். இதோ எனக்குத்தெரிந்த உதாரணங்கள்:

  கருவூர் பகுதியில் ஒரு ஆலயத்தைப் பழுதுபார்த்து அதற்கு குடமுழுக்கு தமிழில் தமிழரால் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையைக் ஆலயத்தைக்கட்டியவர்கள் முயன்றபோது, அதற்கு அவர்களுக்கு நேராகவும் மறைமுகமாகவும் வேதியக்கூட்டம் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. கடைசியில் ஆலயம் கட்டியவர்கள் தமிழில், தமிழரால் குடமுழுக்கு இல்லையெனில் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டியபிறகே வேதியக்கூட்டம் பின்வாங்கியது. தமிழில் தமிழ்நாட்டில் தமிழரால் குடமுழுக்கு செய்வது ஏதோ ஒரு பாவக்கொடுமையைச் செய்வதுபோன்று சூழலை உருவாக்கிய வேதியக்கூட்டம் செய்த ரவுடித்தனம் ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்திற்கெதிரானது.

  ராஜகோபாலாச்சாரியை “ராஜாஜி” என்று மதிப்போடு அழைத்துவிட்டு தமிழ்ச்சமுதாயத்திற்கு கல்வி வள்ளலாகத் திகழ்ந்த பெருந்தலைவரை “காமராஜ்” என்றும், பேரறிஞரை “அண்ணாத்துரை” என்று இன்னும் எழுதும் ”சோ” போன்ற அயோக்கிய ரவுடியைவிடவா இன்னுமொரு ரவுடி வந்துவிடப்போகிறான். இந்த ஆள் எப்படியாவது ரஜினிக்கு குல்லாப்போட்டு அரசியலில் களம் இறக்கி குழப்ப நினைத்த அயோக்கியனாயிற்றே. இதைவிடவா தமிழ்ச்சமுதாயத்துக்கு ஒரு “சாதாரண ரவுடி” பங்கம் விளைத்துவிட முடியும்?.

  இன்றைக்கும் தமிழர்கள் மட்டுமே வழிபடும் ஆலயங்களில் கூட சமஸ்கிருதம் மட்டுமே ஒலிக்கவேண்டும், அதுவும் பூணூல் போட்டவர்தான் ஓதவேண்டும் என்பதைவிட ஒரு கடைந்தெடுத்த ரவுடித்தனத்தை உலகின் எந்தப்பகுதியிலாவது காணமுடியுமா?

  இந்தரீதியில் அடுக்கிக்கொண்டே போகலாமே!

  – அரசு

 30. எனது அடுத்த வீட்டில் வாழ்ந்துவரும் பார்ப்பனர் வீட்டில் காலியான ஒரு பகுதியை நண்பர் குடும்பத்துக்கு வேண்டி வாடகைக்கு கேட்டோம். நாம் எல்லோரும் எதிர்பார்த்த பதில் தான் வந்தது, கறி சாப்பிடுறவங்களுக்கு விடுறதில்லை என்று… இப்படியெல்லாம் பாத்தான்னா எப்படி மாமி என்றதற்கு, அந்த மாமி சொன்ன பதில் இருக்கே… அநேகமா அந்தப் பதில இதுவரை யாரும் கேட்டிருக்க மாட்டீங்கன்னு நிச்சயமா சொல்வேன்.. என் மனைவி, இந்தக் காலத்திலும் இப்படி இருப்பாங்களான்னு இதை என்னிடம் சொன்னபோது அதிர்ச்சி தானென்றாலும், முற்றிலும் புதியதாய்,எதிர்பார்க்காத பார்ப்பனத் திமிர் என்ற அந்தச்சொல்லுக்கு இதைவிட பொருள் இருக்காது…, (1) எங்காத்துல அடிக்கடி பூஜை திதி யெல்லாம் நடக்கும், அதுல சொல்ற மந்திரங்கள மத்தவா கேக்கக் கூடாது…(2) (இதுதான் திமிரின் உச்சம்..) நாங்கள்ளாம் புளுங்குற தண்ணீ ( கழிவு நீர் ) மத்தவா தண்ணியோடல்லாம் ( தமிழனின் கழிவு நீரில் ) கலக்கப் படாது…!
  எப்படியிருக்கு தமிழர்களே, இந்த அவமானம்..
  நகரத்திலேயே இப்படி…! இரண்டாயிரத்து பத்திலேயும் இந்த கொடூர சிந்தனை, உழைக்காமல்.. தமிழர்களை ஏமாற்றி, தமிழனின் சோற்றைத் தின்று தொப்பையை வளர்க்கும் வெட்கமற்ற பார்ப்பனர்களுக்கு…!! இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள், திருச்சிக் காரனும், தனபாலும், மருதுவும், விக்கிரம் முதலான பார்ப்பனர்கள்?
  காசிமேடு மன்னாரு.

 31. திரு அரசு அவர்களே,
  ///ராஜகோபாலாச்சாரியை “ராஜாஜி” என்று மதிப்போடு அழைத்துவிட்டு தமிழ்ச்சமுதாயத்திற்கு கல்வி வள்ளலாகத் திகழ்ந்த பெருந்தலைவரை “காமராஜ்” என்றும், பேரறிஞரை “அண்ணாத்துரை” என்று இன்னும் எழுதும் ”சோ” போன்ற அயோக்கிய ரவுடியைவிடவா இன்னுமொரு ரவுடி வந்துவிடப்போகிறான்.///

  ராஜகோபாலாச்சாரி என்னும் அவரின் பேரை அனைவரும் ராஜாஜி என்றே அழைத்தனர்.அது அவர் பெயரின் சுருக்கமே.ராஜாஜி என்று தானே அழைத்தார் “மூதறிஞர்” என்று அழைக்கவில்லையே.பெருந்தலைவர்,பேரறிஞர் என்பது பட்டப் பெயர் தானே!!!??? சோ.ராமசாமி , ராஜாஜி உள்பட அனைவரையும் பேர் சொல்லித்தானே அழைத்திருக்கிறார்.அதில் என்ன மதிப்புக் குறைவைக் கண்டீர்கள்.?

  ///தமிழ்ச்சமுதாயத்திற்கு கல்வி வள்ளலாகத் திகழ்ந்த பெருந்தலைவரை “காமராஜ்” என்றும், பேரறிஞரை “அண்ணாத்துரை” என்று இன்னும் எழுதும் ”சோ” போன்ற அயோக்கிய ரவுடியைவிடவா///

  ஒருவரின் பேரை குறிப்பிட்டாலே அயோக்கிய ரவடியா? சோவை உங்களுக்குப் பிடிக்காததால் அயோக்கிய ரவுடி என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் ?அப்படி சோ தனக்குப் பிடிக்காத யாரையாவது இப்படி அழைத்ததுண்டா?

  ///இந்த ஆள் எப்படியாவது ரஜினிக்கு குல்லாப்போட்டு அரசியலில் களம் இறக்கி குழப்ப நினைத்த அயோக்கியனாயிற்றே. இதைவிடவா தமிழ்ச்சமுதாயத்துக்கு ஒரு “சாதாரண ரவுடி” பங்கம் விளைத்துவிட முடியும்?.///

  ரஜினி அரசியலுக்கு வந்தால் அது இந்த தமிழ் நாட்டுக்கு நல்லது தானே?ஹிந்தி,சம்ஸ்கிருத எதிர்ப்பு,பார்ப்பனர் எதிர்ப்பு,என்று கூறி ஆட்சியைப் பிடித்து இன்று கோடான கோடி சொத்து சேர்த்த இந்த திராவிடக் கட்சி ஏற்ப்படுத்திய பங்கத்தைவிடவா இந்த ரஜினியால் ஏற்ப்படுத்த முடியும்?

 32. திரு காசிமேடு மன்னாரு அண்ணாச்சி,
  உங்க எழுத்துலே built -up கொஞ்சம் அதிகமா இருக்கு.அதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்க சார், என்னை பார்ப்பனர் பட்டியலில் சேர்த்ததைத் தான் கூறுகிறேன்.

 33. தனபால் அவர்கலே
  திரு காசிமேடு மன்னாரு அண்ணாச்சி,
  உங்க எழுத்துலே built -up கொஞ்சம் அதிகமா இருக்கு.அதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்க சார், என்னை பார்ப்பனர் பட்டியலில் சேர்த்ததைத் தான் கூறுகிறேன்.
  இங்கே கருத்து சொல்லும் பார்ப்பனர்கள் எல்லோரும் நாங்கள் பார்ப்பனர்கள் கிடையாது என்று தான் கருத்து சொல்கிரார்கள்

 34. திரு நவில் சார்,

  ///இங்கே கருத்து சொல்லும் பார்ப்பனர்கள் எல்லோரும் நாங்கள் பார்ப்பனர்கள் கிடையாது என்று தான் கருத்து சொல்கிரார்கள்///

  மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது சார்……ஆமா நீங்க சொல்லவருவது நான் பார்ப்பனன் என்று தானே???!!!

  இது தான் உங்கள் பகுத்தறிவா????!!!!!!!

 35. தனபால், நீங்கள் பார்ப்பணராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் எழுத்துக்களை வைத்துதான் பார்ப்பனர் எனறு சொல்கிறார்கள். நீங்கள் பிறப்பால் பார்ப்பனராக இல்லாவிட்டாலும், வளர்ப்பால் பார்ப்பனராகத்தான் இருக்கிறீர்கள்.

  பார்ப்பனராக பிறக்கவில்லையே எண்ற உங்களின் வருத்தமும் அடிமை உணர்வும் வெளிபடுவதாக இருக்கிறது உங்களுடைய வாதத்தில். இது பார்ப்பனராக இருப்பதைவிட கேவலமானது.

 36. ////எலலாத்துக்கும் துணிஞ்ச ரவுடியை கோயில் கர்ப்பகிரகத்திற்குள் நேராஉள்ளபோய், ரவுடித்தனத்தோடு இல்ல, பக்தியோடகூட சாமிய தொட்டு கும்பிட சொல்லுங்களேன் பாக்கலாம். அப்போதெரியும் உண்மையான ரவுடி யாருன்னு? அப்போ வெட்டு ரவுடிக்கு விழும். வெட்டுனது சாந்தசொரூபிகளான பார்ப்பனர்களாக இருப்பாங்க.

  இந்தியாவின் மாபெரும் தலைவராக இருந்தார் காந்தி. அவர் அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றத் தலைவர்கள் அவருக்கு முன்பும் யாருமில்லை. பின்பும் யாருமில்லை. பிரிட்டிஷ் அதிகாரத்தின் உச்சியில் இருந்த மவுண்பேட்டன் போன்ற வெள்ளைக்காரன் கூட காந்தியை பார்த்தால், எழுந்து நின்னு கூம்பி்ட்டான். ஆனால், இந்த செல்வாக்கு எல்லாம், இந்துக் கோயிலுனுல் செல்லாது.////

  மகாத்மா காந்தியை ஒரு ரவுடியோடு ஒப்பிட்டு மதிமாறன் எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.

 37. ச‌கோத‌ர‌ர் காசி மேடு ம‌ன்னாரு அவ‌ர்க‌ளே,

  //இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள், திருச்சிக் காரனும், தனபாலும், மருதுவும், விக்கிரம் முதலான பார்ப்பனர்கள்?//

  நாம் சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ முய‌ன்றாலும், சாதியான‌து ந‌ம் மீது வ‌லிந்து திணிக்க‌ப் ப‌டுகிர‌து என்ப‌தையே ச‌கோத‌ர‌ர் ம‌ன்னாருவின் ப‌திவு ந‌ம‌க்கு காட்டுகிற‌து.

  //மாமி சொன்ன பதில் இருக்கே… அநேகமா அந்தப் பதில இதுவரை யாரும் கேட்டிருக்க மாட்டீங்கன்னு நிச்சயமா சொல்வேன்.. என் மனைவி, இந்தக் காலத்திலும் இப்படி இருப்பாங்களான்னு இதை என்னிடம் சொன்னபோது அதிர்ச்சி தானென்றாலும், முற்றிலும் புதியதாய்,எதிர்பார்க்காத பார்ப்பனத் திமிர் என்ற அந்தச்சொல்லுக்கு இதைவிட பொருள் இருக்காது…,

  (1) எங்காத்துல அடிக்கடி பூஜை திதி யெல்லாம் நடக்கும், அதுல சொல்ற மந்திரங்கள மத்தவா கேக்கக் கூடாது…

  (2) (இதுதான் திமிரின் உச்சம்..) நாங்கள்ளாம் புளுங்குற தண்ணீ ( கழிவு நீர் ) மத்தவா தண்ணியோடல்லாம் ( தமிழனின் கழிவு நீரில் ) கலக்கப் படாது…!

  எப்படியிருக்கு தமிழர்களே, இந்த அவமானம்..
  நகரத்திலேயே இப்படி…! //

  ம‌ந்திர‌ம் அடுத்த‌வ‌ர் காதில் விழ‌க் கூடாது என்று சொன்ன‌ மாமி யார்? பேர் என்ன? முக‌வ‌ரி என்ன‌? காசி மேடு ம‌ன்னாரு விவ‌ர‌ங்க‌ளோடு, ஆதார பூர்வ‌மாக‌ எழுத‌லாமே.

  இந்த‌ திதி, த‌ர்ப்ப‌ண‌ம், பூஜை ஆகிய‌வ‌ற்றுக்கான‌ ம‌ந்திர‌ங்க‌ள் கேச‌ட்டுக‌ளாக‌வும், சிடிக்க‌ளாக‌வும் கிடைக்கிற‌து. ர‌ங்க‌னாத‌ன் தெரு, தியாக‌ராய‌ ந‌க‌ரில் ப‌ல க‌டைக‌ளிலும் கிடைக்கிற‌து.

  யார் வேண்டுமானாலும் அதை வாங்கி ச‌த்த‌மாக வைத்துக் கேட்கலாம். மாமி தெருவில் வ‌ரும்போகும், போகும் போது அவ‌ர் காதில் விழும்ப‌டியாக ச‌த்த‌மாக வைத்து கேட்டால், மாமியால் என்ன‌ செய்ய‌ இய‌லும்? அருகில் ஓடி வ‌ந்து உங்க‌ள் கையில் இருக்கும் டேப் ரிகார்ட‌ரை நிறுத்த‌ முடியுமா?

  இப்ப‌டி திதி, த‌ர்ப்ப‌ண‌ம், பூஜை ஆகிய‌வ‌ற்றுக்கான‌ ம‌ந்திர‌ங்க‌ள் கேச‌ட்டுக‌ளாக‌ வ‌ருவ‌து எல்லா மாமிக்கும் தெரியுமே, அப்ப‌டி இருக்கும் போது எப்ப‌டி ம‌ந்திர‌ம் காதில் விழ‌க் கூடாது என்று நினைக்க‌ முடியும்?

  மேலும் இந்த‌ க‌ழிவு நீர் க‌ல‌ப்ப‌து விட‌ய‌த்தை எடுத்துக் கொன்டால், மாமி சிறுமியாக இருந்த‌ போது ப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ ப‌டித்த‌தே இல்லையா? அப்போது ப‌ள்ளியிலோ, க‌ல்லூரியிலோ ச‌க‌ மாண‌விக‌ளுட‌ன் சேர்ந்துதானே ப‌டித்திருக்கிரார். அப்போது க‌ழிவு நீர் க‌ல‌க்க‌ கூடாது என்ப‌த‌ற்க்காக‌ ப‌ள்ளியில் ப‌டிக்க‌ம‌லே இருந்து விட்டாரா, அப்போது இல்லாத‌ பிரிவினை இப்போது எப்ப‌டி வ‌ந்த‌து?

  இது உண்மையில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வா, இல்லை ந‌ம‌து அருமை ச‌கோத‌ர‌ர் ஏதாவ‌து சினிமா சூட்டிங் பார்த்து விட்டு எழுதுகிராறா?

  என்னைப் பொருத்த‌ அளவிலே, நான் எல்லா ம‌னித‌ரையும் நேசிப்ப‌வ‌ன், ம‌ரியாதை கொடுப்ப‌வ‌ன்.

  என்ன‌ விட‌ வ‌யதான் எந்த‌ ஒரு ம‌னித‌ரையும் ம‌ரியாதை செய்யும் பொருட்டு அவ‌ரை வ‌ண‌ங்கி, உப‌ச‌ரித்து, அவ‌ருக்கு இருக்கை த‌ந்து அம‌ர வைத்து அவ‌ருடைய‌ கால்க‌ளை நீரால் க‌ழுவி சுத்த‌ம் செய்து, ச‌ந்த‌ன‌ம் பூசி ம‌ரியாதை செய்ய‍ நான் த‌யார். இதை ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ செய்ய‌ நான் த‌யார். நான் ஆகஸ்டு மாத‌ம் சென்னை வ‌ரும் வாய்ப்பு உள்ள‌து. யாருக்கு இந்த‌ ம‌ரியாதையை நான் செய்ய‌ வேண்டும் என்று காசி மேடு ம‌ன்னாரான‌வ‌ர் சொல்கிறாரோ அவ‌ருக்கு நான் ம‌ரியாதை செய்ய‌ த‌யார்.

  ச‌கோத‌ர‌ர் ம‌ன்னாருவின் க‌ண்ணில் ப‌டும் ப‌டி ஒரு ம‌ந்திர‌த்தை இங்கே எழுதி இருக்கிறேன். கீழே குறிப்பிட்டுள்ள‌ “ம‌ந்திர‌த்”தை ச‌கோத‌ர‌ர் காசி மேடு ம‌ன்னாரு ப‌டித்து அதில் கூற‌ப் ப‌ட்டுள்ள‌ க‌ருத்துக்க‌ள் ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளா இல்லையா என்று அவ‌ரே சிந்தித்து பார்க்க‌வும்.

  //அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக, பகைமை இல்லாதவனாக)

  சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

  நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

  ஸம – துக்க ஸுக (இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

  க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

  ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

  யோகி (யோக நெறியில் நிற்பவன், நேர்மை வ‌ழியில் செல்ப‌வ‌ன்)

  யதாத்மா (அமைதியான ஆத்ம நிலையில் நிற்பவன்)

  த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

  மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

  யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

  ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்) //

  ம‌ற்ற‌ப‌டி நான் உழைத்துதான் வாழ்கிறேன்.

  I live with the money earned by my sweat!

 38. ச‌கோத‌ர‌ர் காசி மேடு ம‌ன்னாரு அவ‌ர்க‌ளே,

  மாமி ச‌ம்ப‌வ‌ம் உண்மை ச‌ம‌ப‌வ‌மானால், இந்த‌ “ம‌ந்திர‌த்”தை அந்த‌ மாமிக்கு சொல்லிக் கொடுத்து, அக‌ந்தையும், திமிரும் இல்லாம‌ல், எல்லா உயிர்க‌ளுட‌னும் சினெக‌த்துட‌னும், க‌ருணையுட‌னும், அன்புட‌னும் ப‌ழ‌க வேண்டும் என்று சொல்லி இருப்ப‌தை சுட்டிக் காட்டுங்க‌ள்.

  //அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக, பகைமை இல்லாதவனாக)

  சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

  நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

  ஸம – துக்க ஸுக (இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

  க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

  ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

  யோகி (யோக நெறியில் நிற்பவன், நேர்மை வ‌ழியில் செல்ப‌வ‌ன்)

  யதாத்மா (அமைதியான ஆத்ம நிலையில் நிற்பவன்)

  த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

  மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

  யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

  ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்) //

 39. திருச்சிக்காரரே, வந்துவிட்டிரா பார்ப்பன பிரச்சாரம் செய்ய.
  இவ்வளவு சாதி திமிரோடு ஒரு பாப்பப்பன பெண் இருக்கிறார் என்றால், அவருக்கு கண்டனம் தெரிவப்பதை விட்டு, உங்கள் பார்ப்பன பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டிர்கள்.

  நீங்கள் சொல்ற மந்திரத்தை எல்லாம் நன்கு கற்று பிரச்சாரம் செய்கிற பார்ப்பனர்கள், சங்கராச்சாரியர்களே தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்கள். அதில் அந்த மாமி எம்மாத்திரம்?

  மந்திரங்களை நன்கு கற்று உணர்ந்து, அதை பலமுறை மேற்கோள்காட்டி பேசுகிற சங்கராச்சாரியர்கள் தீண்டாமையை கடைபிடிக்கிறார்களே, அவர்களை போய் செவிட்டில் அறைந்துவிட்டு வபந்து அதற்கு பிறகு… மந்திரம் பெருமையை பேசுங்கள்.

 40. டேய்

  இன்னகட மந்திரம் மெல்லாம் ஒதிக்கிட்டு

  நீங்க ஒதர மந்திரத ஓதம
  (அது இவனுக ஓதும் பொது நாம கேட்ட புரியாது)

  நல்ல புள்ளைய நடத்துகிட்ட
  அதுவே போதும் …….

 41. அறிவு சார் நண்பர்களே… திரு. மதிமாறன் அவர்கள் தொடங்கி வைத்த விவாதம் கருத்துப் பகிர்வோடு, புதுப்புது செய்திகளோடும் செல்வது சிந்தைக்குப் பயனுள்ளதாக இருக்கிறது..! இதற்குத் துணைபுரிந்த நண்பர் மதிமாறன் அவர்களுக்கு நன்றியைக் கூறிக்கொண்டு, மீண்டும் உங்களோடு இணைகிறேன்…!
  /// நாம் சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ முய‌ன்றாலும், சாதியான‌து ந‌ம் மீது வ‌லிந்து திணிக்க‌ப் ப‌டுகிர‌து என்ப‌தையே ச‌கோத‌ர‌ர் ம‌ன்னாருவின் ப‌திவு ந‌ம‌க்கு காட்டுகிற‌து.///
  ஆம் ! சாதி உணர்வு திணிக்கத்தான் படுகிறது ! யாருக்கு ? தமிழர்கள் தாழ்ந்த சாதிக் காரர்கள், பார்ப்பனர்கள் உயர்ந்தசாதிக்காரர்கள் என்று, பார்ப்பனப் பெண்களே அதை எங்கள் முகத்துக்கு நேராகவே வலியுறுத்திச் சொல்கிறார்கள்,அதுவும் அறிவியல் வளர்ச்சியை அனுபவிக்கும் பார்ப்பனர்களும் அவர்கள் ஆத்து (காவிரி ஆறா..?) மாமிகளும்.
  படபிடிப்பை பார்க்கலாமே தவிர அதன் கதையைச் நம்மால் கூற முடியாது! அப்படி கதை சொல்ல வேண்டுமென்றால் அதற்கான தளம் இதுவல்ல..வேறு, திருச்சிக்காரன் அவர்களே..
  தமிழர்கள் கோயிலுக்குள் வரவேண்டுமென்றால் குளித்துவிட்டு வரவேண்டும் என்று தமிழனைக் கேவலப்படுத்திய காஞ்சி சங்கரனுக்கும் எங்கள் பக்கத்து வீட்டு மாமிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எங்கள் பக்கத்து வீட்டு மாமியை விட, திருச்சிக்காரன் அவர்களின் மந்திரம் காஞ்சி சங்கரனுக்குத்தான் முதல் தேவையாயிருக்கிறது. இதைத்தான் நண்பர் தமிழன் அவர்கள், திருச்சிக்காரன் காஞ்சி சங்கரனை செவுளில் அறைந்து சொல்லச் சொல்லியிருக்கிறார்.
  திரு. தனபால் அவர்களே, இராஜ கோபாலச்சாரியை இராஜாஜி என்று அழைத்தது போலவே பெருந்தலைவர் அவர்களை காமராஜர் என்றுதான் அப்போதும் அழைத்தார்கள், ( அவரது எதிரிகள் மட்டுமே காமராஜ் என்று குறிப்பிட்டார்கள். ) இப்போதும் அழைக்கிறார்கள். நண்பர் அரசு அவர்களின் கோபம் மிகச்சரியானதும், நீதியானதும் கூட.. ‘சோ’ ஒரு அரசியல் தரகன், சுப்ரமணியசாமியைப் போல..
  காசிமேடு மன்னாரு.

 42. /// Vikram

  உண்மையில் இந்துமதத்திற்கு புனிதம் என்று ஒன்று இருக்கிறதா? –
  இந்த ஒரு வரி போதாத வேதிமாறன், ஒரு வேசித்தனமான, வெறுப்பு உமிழும் பதிப்பென்ற நிருபணம் இது என்பதற்கு////

  இது அநாகரிகமான பார்ப்பன சாதி வெறியனாக இருக்கிறார் இந்த Vikram. காந்தியடிகளை கொலை செய்த கோட்சேவை பற்றி கோபபடுகிறார்களா? இந்த பார்ப்பனர்கள்? இல்லை காந்தியடிகளளை ஆதரித்தவது எழுதுகிறீர்களா பாருங்கள். இதுதான் பார்ப்பன சாதி வெறி.

  ram என்கிற பார்ப்பன சாதி வெறியன் காந்திஅடிகளை கொலை செய்ததை ஆதரித்தும் கோட்சேவை ஆதரித்தும் எழுதினான். அதைக்கேட்டால் அசிங்கமாக திட்டினான்.

 43. தனபாலு, காசிமேடு மன்னாரு என்பவர் உங்கள பாப்பான்னு சொன்னதுக்கு மட்டும் கோபபபடுகிறீர்கள். அவர் சொன்ன மாமி விவகாரம் பற்றி மவுனம் சாதிக்கிறீர்கள்?

  நானும் கேட்கிறேன் நீங்கள் பார்ப்பனரா?

 44. திரு.SSK அவர்களே,
  ///தனபாலு, காசிமேடு மன்னாரு என்பவர் உங்கள பாப்பான்னு சொன்னதுக்கு மட்டும் கோபபபடுகிறீர்கள். அவர் சொன்ன மாமி விவகாரம் பற்றி மவுனம் சாதிக்கிறீர்கள்?///

  திரு.காசி மேடு மன்னாரு சொன்னது போல் அந்த மாமி இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக ஒரு இழிந்த,கேவலமான,அருவருக்கத்தக்கப் பிறவியே.இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.அதே சமயத்தில் இது திரு மன்னரு அவர்களின் built -up ஆக இருந்தால் ?????!!!!!
  ///நானும் கேட்கிறேன் நீங்கள் பார்ப்பனரா?///
  நான் பார்ப்பனன் இல்லை.இல்லை இல்லவே இல்லை.
  இந்த விசயத்தில் ஒரு ஐந்து லட்சமோ,பத்து லட்சமோ பந்தயம் வைத்துக்கொள்வோமா?டீலா???நோ டீலா???

 45. ////தனபால், நீங்கள் பார்ப்பணராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் எழுத்துக்களை வைத்துதான் பார்ப்பனர் எனறு சொல்கிறார்கள். நீங்கள் பிறப்பால் பார்ப்பனராக இல்லாவிட்டாலும், வளர்ப்பால் பார்ப்பனராகத்தான் இருக்கிறீர்கள்.

  பார்ப்பனராக பிறக்கவில்லையே எண்ற உங்களின் வருத்தமும் அடிமை உணர்வும் வெளிபடுவதாக இருக்கிறது உங்களுடைய வாதத்தில். இது பார்ப்பனராக இருப்பதைவிட கேவலமானது./////

  ஏற்கனவே நான் கேடடதற்கு எதுவுமே சொல்லவில்லைய என்ன சொல்கிறீர்கள்?

 46. திரிபுவாதங்களையும், குழப்பல்களையும் கேட்டுக்கேட்டு எங்களுக்கு சலித்துவிட்டது. தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கண்ணாடி போட்டுப்பார்த்தால் எல்லாவிதமான அந்தர் பல்டிகளும், சித்து விளையாட்டுக்களும் தெள்ளத்தெளிவாகப் புரியும்.

  ”ராஜகோபாலாச்சாரி” என்பதுதான் அவரது பெயர். மரியாதை நிமித்தம் “ராஜாஜி” என அறியப்பட்டார். ”அண்ணாத்துரை” என்ற பெயரும் அவர் மேல் மக்கள் கொண்ட அன்பாலும், மரியாதையாலும் “அண்ணா” என எல்லோராலும் அழைக்கப்படுகிறது. ஈ.வே.ராமசாமி என்ற பெயருக்குப் பதிலாக அவருக்கு மகளிர் மாநாட்டில் அளிக்கப்பட்ட பட்டமான “பெரியார்” என்ற பெயரே பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

  பச்சை பார்ப்பனீயப்புத்தியிருந்ததால் மட்டுமே “சோ” ஒரு தலைவரை ”ராஜாஜி” எனவும் இன்னொரு தலைவரை ”அண்ணாத்துரை” எனவும் அழைக்கமுடிகிறது. ஊழல் என்பது பலவேறு மக்களாட்சி முறைகளில் இருப்பதுதான். களையப்படவேண்டியது. கல்வி, சமுதாய உணர்வு மக்களிடையே பெருகும்போது ஊழல் தேய்ந்து அழியும். ஊழலை ஒழிப்பதற்காகவா “சோ” ரஜனியை ஒரு மாபெரும் அரசியல் ஞானியைப்போல் சித்தரித்து தமிழக அரசியலுக்குள் இழுக்க ஆசைப்படுவது? இல்லவே இல்லையே. “சோ” வுக்கு தமிழ் மக்கள்மேல் எள்ளின் முனையளவாவது பற்று இருப்பின் காவிரி நீர் பிரச்னை, பெரியாறு அணை உயரம் போன்று தமிழ் மக்களின் வாழ்வுப் பிரச்னைகள் எதிலாவது ஆர்வமே, கருத்தோ இந்த “மாமேதை” சொல்லியிருக்கிறாரா.

  தமிழ் மக்களை சாதியால் கூறு போட்டு, மதச்சாக்கடையில் தள்ளி அதில் தன் இன நலனைப் பாதுகாக்கத்துடிக்கும் சோ, எந்த ரவுடியைவிடவும் ஆபத்தானவர்.

  சாமி பெயரால் செய்யப்படும் இன்னுமொரு ரவுடித்தனம் “சேது” திட்டத்தை முடக்கும் முயற்சி.

  பல ஆயிரம் கோடி செலவிட்டு, பலப்பல ஆண்டு முயற்சிக்குப்பின்னர் முடிவடையும் தறுவாயில் இருக்கும் “சேது” திட்டத்தை “ராமர் கட்டிய பாலத்தை இடிக்கக்கூடாது” என்ற அயோக்கியத்தனமான வாதத்தை வைத்து நிறுத்தப்பார்க்கும் கொடுமையை விட எந்த ரவுடித்தனம் கொடுமையானது.

  சாமி நம்பிக்கையும், சாதி நம்பிக்கையும் கொண்ட தோழர்களே ஆழமாக சிந்தியுங்கள்.

  அரசு

 47. பெரியாரின் கால க‌ட்ட‌ம் வேறு. இன்றைய‌ கால‌ க‌ட்ட்ம் வேறு.

  பெரியாரின் கால‌த்தில் பார்ப்ப‌ன‌ வ‌குப்பின‌ர், அர‌சுப் ப‌ணியிலும் , அரசிய‌லிலும் அதிக‌ அளவில் இருந்த‌ன‌ர். என‌வே அவ‌ருடைய‌ பார்ப்ப‌ன‌ எதிர்ப்பு எடுப‌ட்ட‌து. ஆனால் இன்றைய‌ கால‌ க‌ட்ட‌த்திலே பார்ப்ப‌ன‌ர்க‌ள் அரசுப் ப‌ணியிலும் அரசிய‌லிலும் இருந்து ஏற‌ க‌ட்ட‌ப்ப‌ட்டு விட்ட‌ நிலையிலே, பார்ப்ப‌ன‌ எதிர்ப்பை பெரும்பாலான‌ ம‌க்க‌ள் முக்கிய‌மான‌தாக‌க் க‌ருத‌வில்லை.

  சாதிக் காழ்ப்புண‌ர்ச்சி உடைய‌ சில‌ர் ம‌ட்டுமே இப்போது பார்ப்ப‌ன‌க் காழ்ப்புண‌ர்ச்சி செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

  அதே நேர‌ம் சாதிகளுக்கு இடையிலான‌ வேறுபாடு குறைந்து வ‌ருகிர‌து. சாதி வேறுபாடுக‌ளை முற்றிலும் க‌லைந்து ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ நாம் சிந்திக்க‌ வேண்டும்.

  ஆனால் இங்கோ ப‌ல‌ரும் “நீ இந்த‌ சாதியாக‌த் தான் இருக்க‌ முடியும்” என்று க‌ணிணி மூல‌ம் ஜோதிட‌ம் க‌ணித்து வ‌ருவ‌து ந‌கைப்புக்குரிய‌ விட‌ய‌ம்.

  யாராவ‌து சாதியை விட்டால் கூட‌, “நீ ஏன் சாதியை விட்டு விட்டாய், சாதியை வைத்துக் கொள், சாதிக‌ள் அழிந்து விட்டால் நாங்க‌ள் எதை வைத்து காழ்ப்புண‌ர்ச்சி செய்வ‌து” என்கிற‌ ம‌ன‌ நிலையை அடைந்து இருக்கின்ற‌ன‌ர்.

  அதே நேர‌ம் பெரும்பாலான‌ ம‌க்க‌ள் சாதிக் காழ்ப்புண‌ர்ச்சியை விரும்ப‌வில்லை.

 48. திரு அரசு அவர்களே,
  ///பச்சை பார்ப்பனீயப்புத்தியிருந்ததால் மட்டுமே “சோ” ஒரு தலைவரை ”ராஜாஜி” எனவும் இன்னொரு தலைவரை ”அண்ணாத்துரை” எனவும் அழைக்கமுடிகிறது.///
  பச்சை பார்ப்பனீயப் (ஆரியப்)புத்தியிருந்ததால் “சோ” ஒரு தலைவரை ”ராஜாஜி” எனவும் இன்னொரு தலைவரை ”அண்ணாத்துரை” எனவும் அழைக்கமுடிகிறது.இது அவரவர் விருப்பு வெறுப்புப்பைப் பொறுத்தது.அவருக்கு பார்ப்பனப் புத்தி இருந்ததோ இல்லையோ .ஆனால் சோ பார்ப்பனர்(ஆரியர்) அல்லாதவர்களை அநாகரீகமாக அழைத்ததுண்டா?நீங்கள் சோவை பிடிக்கவில்லை என்பதால் அநாகரீகமாக “அயோக்கிய ரவுடி”. என்று கூறுகிறீர்கள்.இதிலிருந்து உங்களைவிட சோ நாகரீகமானவராகவே தெரிகிறார்.

  ///“சோ” வுக்கு தமிழ் மக்கள்மேல் எள்ளின் முனையளவாவது பற்று இருப்பின் காவிரி நீர் பிரச்னை, பெரியாறு அணை உயரம் போன்று தமிழ் மக்களின் வாழ்வுப் பிரச்னைகள் எதிலாவது ஆர்வமே, கருத்தோ இந்த “மாமேதை” சொல்லியிருக்கிறாரா ///
  நீங்கள் துக்ளக் படிப்பதில்லை என்று நன்றாகத் தெரிகிறது.

  நானும் துக்ளக் தொடர்ந்துப் படிப்பது கிடையாது.என் உடன் பணிபுரிபவர்(அவர் பார்ப்பனர் இல்லை) தொடர்ந்து படிப்பவர்.அவரிடமிருந்து அவ்வப்போது படிப்பேன்.காவிரி நீர் பிரச்னை, பெரியாறு அணை உயரம் போன்று தமிழ் மக்களின் வாழ்வுப் பிரச்னைகள் பற்றி பலமுறை கர்நாடக,கேரளா அரசை கண்டித்து இருக்கிறார்.

  அரசு சார்.யாரும் யாரையும் விமர்சிக்கலாம்,கருத்து வேறுபாடு காரணமாக கருத்து யுத்தம் நடத்தலாம்.ஆனால் இணைய யுகத்தில் இருந்துகொண்டு ,அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துவது நன்றாக இல்லை.(நான் கூறுவது அனைவரையும் தான் )

 49. திரு.தமிழன் அவர்களே,

  ////தனபால், நீங்கள் பார்ப்பணராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் எழுத்துக்களை வைத்துதான் பார்ப்பனர் எனறு சொல்கிறார்கள். நீங்கள் பிறப்பால் பார்ப்பனராக இல்லாவிட்டாலும், வளர்ப்பால் பார்ப்பனராகத்தான் இருக்கிறீர்கள்///
  ///வளர்ப்பால் பார்ப்பனராகத்தான் இருக்கிறீர்கள்///
  இது எனக்குப் புரிய வில்லை.நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.ஒரு வேலை இதைத் தான் கூறுகிறீர்களா?மற்றபடி நான் எப்போதாவது தான்(நம் தமிழ் (சித்தர்களின்) கடவுளான சிவன் ) கோவிலுக்கு செல்வேன்,முட்டை,மீன்,கருவாடு,நண்டு,கோழி,ஆடு,புறா,முயல்,வவ்வால் கூட சாப்பிடுவேன்,நான் ஜாதி மத வேறுபாடின்றி பழகுவேன்.நான் தென் மாவட்டக் காரன்.இந்தப் பகுதியில் பெயருக்கு அடுத்தபடி ஜாதியைத் தான் தெரிந்து கொள்ள விரும்புவர்.நான்கு வருடமாக என்னுடன் பணிபுரியும் பல பேரின் ஜாதி எனக்குத் தெரியாது.தெரிந்து கொள்ள விரும்பாததே முக்கிய காரணம்.ஆனால் மற்றவர்கள் அப்படியல்ல.

  ///பார்ப்பனராக பிறக்கவில்லையே எண்ற உங்களின் வருத்தமும் அடிமை உணர்வும் வெளிபடுவதாக இருக்கிறது உங்களுடைய வாதத்தில்.///

  அப்படியா???உண்மையாகவா??? நான் பத்து வருடங்களுக்கு முன் வரை சிவப்பாக பிறக்கவில்லையே என்று வருத்தப் பட்டு இருக்கிறேன்.ஒரு வேளை இதைத்தான் கூறுகிறீர்களா?என் வாதத்தில் இருந்து எப்படி இதை கண்டு பிடித்தீர்கள்?ஒரு வேலை நான் பார்ப்பனப் பெண்ணைக் காதலித்திருந்தால் அவர்கள் வீட்டில் சென்று பெண்கேட்க நான் பார்ப்பனாகப் பிறக்க வில்லையே என்று வருத்தப் பட்டிருக்க வாய்ப்புண்டு.
  என் வாதத்தைப் பற்றி நீங்கள் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.உங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.அதற்க்கு உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு.

  ///இது பார்ப்பனராக இருப்பதைவிட கேவலமானது.///

  நான் மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்.பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப் பட்டவர்களுக்காக பலர் குரல் கொடுத்தனர்,கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் நான் இந்த இணைய உலகில்(இணையத்தில்) தற்போது ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்காக அவ்வப் பொது கொஞ்சம் பின்னூட்டமிடுகிறேன்.இது கேவலம் என்றால் அந்த கேவலத்தை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன்.

 50. தனபால்
  ///நான் இந்த இணைய உலகில்(இணையத்தில்) தற்போது ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்காக அவ்வப் பொது கொஞ்சம் பின்னூட்டமிடுகிறேன்.இது கேவலம் என்றால் அந்த கேவலத்தை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன்.///

  நீங்கள் குரல் கொடுப்பது பார்ப்பனர்களுக்கு. பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதை பார்ப்பனர்கள் கூட ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
  நீங்கள் செய்வது கேவலம்தான். கேவலத்தை மனதராக செய்வதாக சொல்லியிருக்கிறீ்ர்கள். இனி பேசி பிரயோஜனம் இல்லை.

  உங்கள் கேவலத்தை தொடர வாழ்த்துக்கள்.

 51. சாதி காழ்புணர்ச்சி, பாவப்பட்டவர்கள் ,இன்று அந்த நிலை இல்லை ,அது பெரியார் காலம் என்று பேசுவது கூட பார்பனியத்தை அதன் மேலாண்மையை காப்பாற்ற பேசப்படும் பேச்சுக்களே. சாதி காழ்புணர்ச்சி யாரிடம் இருக்கிறது பார்பனர்களிடமா? பார்பனர் அல்லாதவர்களிடம? கிராமங்களில் படிப்பறிவில்லாத மக்களிடம் சாதி வேறுபாடு, தாழ்த்த பட்ட மக்கள் மீதான காழ்புணர்ச்சி இன்றும் கோர தாண்டவம் ஆடுகிறது. அதற்க்கு அடிப்படையே பார்பனிய இந்து மதம் தான். சரி அவர்கள் படிபரிவில்லாதவர்கள். படித்த நல்ல நிலையில் உள்ள பார்பனர்களின் சாதி காழ்புணர்ச்சி , தான் தான் உயர்ந்தவன் என்ற மனப்பான்மையை நகரங்களில், வேலை செய்யும் இடங்களில் கூட சாதாரணமாக பார்க்கலாம். இன்றும் பார்பனர்கள் அதிகம் வாழும் மாம்பலம்,தி நகர், மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் (TOLET only for Bramins) என்று பலகை வைத்துள்ளார்கள். எனது நண்பர் ஒருவர் ஒரு இடத்தில வீடு கேட்க்க பொய் அவமானபடுத்த பட்டார். அந்த பார்ப்பனன் (Which social animal you are?) என்று நேரிடையாக கேட்டிருக்கிறான். இத்தனைக்கும் அந்த நண்பர் மாமிசம் உண்ணாதவர்,சாந்தமானவர், இந்து மத நம்பிக்கை உடையவர். தீண்டாமையை நகரத்திலேயே பின்பற்றும் பார்பனர்கள் பாவப்பட்டவர்களா ? அப்பாவிகளா? சாதி காழ்புணர்ச்சி இல்லாதவர்களா?

 52. சாதிக் காழ்ப்புணர்ச்சி உள்ளவர்கள் தான் அதைக் நியாயப் படுத்த பல்வேறு காரணங்களை சொல்ல வேண்டியுள்ளது.
  சமத்துவத்துக்கான முயற்ச்சியை கூட பார்ப்பனீய மேலாண்மையை காப்பாற்ற என்று சொல்லி கட்டம் கட்டும் அளவுக்கு சாதீய உணர்வுகளை நிலை நிறுத்த பாடுபடுகின்றனர்.

  சாதி உணர்வே இல்லாமல் போய் விட்டது என்று நான் சொல்லவில்லை. கடந்த நூறு வருடங்களாக சாதி வேறுபாடுகள் கணிசமாக குறைந்து வருகின்றன. அந்தப் பாதையில் நாம் முன் நோக்கி செல்ல வேண்டும். சமத்துவப் பாதையில் சிலர் வேகாமாக செல்லாலாம். சிலர் மெதுவாக செல்லாலாம். ஆனால் சமத்துவத்தை நோக்கி நமது சமுதாயம் நகருகிறது.

  சாதி உணர்வு பற்றி சொல்லுங்கள், உண்மையை அறிய விரும்புகிறோம். அதே நேரம் ஆதாரத்தோடு தெளிவாக சொல்லுங்கள். பக்கத்து வீட்டு மாமி என்றால், மாமிக்கு பேர் இல்லையா, முகவரி இல்லையா? பெயர், வீட்டு எண், தெரு, பகுதி… இவைகளைக் குறிப்பிட்டு தெளிவாக எழுதுங்களேன். அது உண்மையானால் மாமியும் அதைப் படித்து அந்த வெட்கப் பட்டாவது திருந்தட்டுமே. வெறுமனே எழுதினால் அது வெறும் பில்டப் ஆக கருதப் பட கூடும்.

  கிராமப் புறங்களில் சாதி கொடுமை இன்னமும் இருக்கிறது. மக்களை ஒருங்கிணைக்க என்ன செய்ய வேண்டும் என சிந்திந்த்து செயல் பட வேண்டும். “பார்ப்பனரை திட்டினால் நமக்கு பிரச்சினை வராது, அதனால் பார்ப்பனர் மீது காழ்ப்புணர்ச்சி காட்டி மகிழ்ச்சி அடைவோம்” என்பது, அவலை நினைத்து உரலை இடிப்பது போன்றதே.

 53. ஒடுக்கப் பட்டேன். நசுக்கப் பட்டேன்.

  அதற்காக நான் யாரயும் குறை கூறவோ குற்றம் சாட்டவோ இல்லை. நாங்கள் பள்ளியில் படிக்கும் போது நண்பர்கள் யாருமே யார் எந்த சாதி என்று கேட்டதே கிடையாது. ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம, படிப்போம் அவ்வளவுதான்.

  பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் போதுதான், எங்களின் சாதிப் பாகுபாடுகள் எங்களுக்கு தெரிய வந்தது.

  ஆனால் என்னுடைய பிரச்சினை ஹாஸ்டல் செலவுதான்.

  சலுகை அளிக்கப்பட மாணவர்களுக்கு ஹாஸ்டல் பில் முழுவதுமாகவோ, பகுதியாகவோ கட்ட வேண்டியதில்லை.

  ஆனால் நான் முழு பில்லையும் கட்ட வேண்டிய நிலையிலே நான் மிகவும் சிரமப் பட்டேன்.

  சலுகை அளிக்கப்பட மாணவர்கள் அவர்களின் தந்தை கலெக்டராக இருந்தால் கூட ஹாஸ்டல் மெஸ் பில் கட்ட வேண்டியதில்லை. ஆனால் நான் கஷ்டப் பட்டு கட்டினேன்.

  இதற்காக நான் யாரயும் குறை கூறவோ குற்றம் சாட்டவோ இல்லை. ஆனால் நான் நசுக்கப் பட்டவன் தான்.

 54. சகோதரர் தமிழன் அவர்களே
  ///இது பார்ப்பனராக இருப்பதைவிட கேவலமானது.///,——–///நீங்கள் செய்வது கேவலம்தான்///

  என்று என்னைக் கூறுகிறீர்கள்.நான் செய்வது கேவலமாகவே இருக்கட்டும்..

  ///பார்ப்பனராக இருப்பதைவிட கேவலமானது/// என்றால் பார்ப்பனராக இருப்பதுக் கேவலமானது என்று தானே கூறுகிறீர்கள்.

  அப்படியென்றால் பார்ப்பனராகப் பிறந்தவர்கள் – பிறந்திருப்பவர்கள் அனைவரும் கேவலமானவர்கள் என்று தானே கூறுகிறீர்கள்.

  பார்ப்பனக் பிஞ்சுக் குழந்தைகள்,பள்ளிக்குச் செல்லும் சிறுபிள்ளைகள்,பெண்கள் ,வயதானோர் உள்பட அனைவரையும் பார்ப்பனராகப் பிறந்த ஒரே ஒரு காரணத்தாலேயே “கேவலமானவர்கள்” என்று தானே கூறுகிறீர்கள்.

  அப்படியென்றால் “பிறப்பின் அடிப்படையில்” ஒரு வகுப்பினரைக் “கேவலமானவர்கள்” என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

  எந்தக் “கேவலத்தை” பார்ப்பனர்கள் செய்தார்களோ,அதே “கேவலத்தைத்” தான் இப்பொழுது, நீங்கள் இந்த இணைய உலகில்-இணையத்தில் செய்துவருகிறீர்கள்.

  “கேவலத்தை”-“கேவலத்தால்” பழி தீர்க்கிறீர்கள்.

  இதனால் தான் ///நான் இந்த இணைய உலகில்(இணையத்தில்) தற்போது ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்காக அவ்வப் பொது கொஞ்சம் பின்னூட்டமிடுகிறேன்.இது கேவலம் என்றால் அந்த கேவலத்தை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன்.// என்று கூறினேன்.

  ///பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதை பார்ப்பனர்கள் கூட ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.///

  நான் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று கூறவில்லையே,///இந்த இணைய உலகில்(இணையத்தில்) தற்போது “””ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்காக””” அவ்வப் பொது கொஞ்சம் பின்னூட்டமிடுகிறேன்///-என்று தானே கூறினேன்.

  சகோதரர் தமிழன் அவர்களே-

  நான் சிறுவயதிலிருந்தே பார்ப்பன வெறுப்புக் கருத்துடனே வளர்ந்து வந்தவன்.ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக சிறிது சிறிதாக அந்த வெறுப்பு மறைந்து கொண்டிருக்கிறது.இன்னும் முழுதாக மறையவில்லை.இது சத்தியமான உண்மை.”

  உங்கள் மனத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என்ற உத்வேகம் இருக்கட்டும்.ஆனால்,உங்கள் வீட்டிற்கு இரண்டு வயதுள்ள பார்ப்பனக் குழந்தை வந்தால் அந்தக் குழந்தையின் மீது அன்பை செலுத்துங்கள்.வெறுப்பை உமிழாதீர்கள்.பார்ப்பன வெறுப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்,அதுவே உங்கள் உடல்நிலைக்கு நல்லது.காலம் கனிந்து விட்டது.இன்னும் ஒரு இருபதாண்டு காலத்தில் இந்த ஜாதி துவேசம் அழிந்துவிடும்.ஐம்பதாண்டு காலத்தில் ஜாதியே ஒழிந்துவிடும்.

 55. தோழர் மதிமாறன் அவர்களே,

  /// இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து.///

  “சனாதனமானது” என்றால் “எல்லாருக்கும் பொதுவானது” என்று அர்த்தம்.

 56. இங்கு காணப்படும் விவாதங்களின் தொகுப்பினால் உண்மை தெள்ளத் தெளிவாக புரிகிறது..நன்றி திரு மதிமாறன் அவர்களே…

Leave a Reply

%d bloggers like this: