‘நம்பிக்கைத் துரோகிகள்’

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1

1917 ஆண்டு அக்டோபர்  7 ஆம் தேதி சென்னை ஸ்பர்டாங் சாலையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு இரட்டைமலை சீனிவாசன் தலைமை தாங்கினார். தியாகராயரும் கலந்துகொண்டார். நன்றியுரை எம்.சி.ராஜா வழங்கி முடித்து வைத்தார். டி.எம். நாயர் சிறப்புரை. அவர் பேசிய பேச்சு வரலாற்று சிறப்பு மிக்கது.

நாயரின் மொழிநடை மிகவும் நவீனமாகவும், வீரியத்தோடும் இருக்கிறது. பெரியார் இயக்கமும் அதன்பின் புரட்சிகர இயக்கங்களும் இன்று பயன்படுத்துகிற வார்த்தைகளை அன்றே நாயர் பயன்படுத்தியிருக்கிறார். அவரின் பேச்சை தொடராக வெளியிடுகிறேன்:

ந்த நாட்டில் இரு இனங்கள் உண்டு. ஒன்று, இந்நாட்டின் சொந்த இனமான நம் திராவிடர் இனம். மற்றொன்று நாம் தூங்கிக்கொண்டிருக்கும்போது, வீட்டிற்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம். (கூட்டத்தினர் ‘வெட்கம், வெட்கம்’ என்று ஆரவாரித்துக் கைதட்டுதல்) இத்தகைய இழிதகைமை கொண்ட ஆரிய இனம் நம் நாட்டின் இந்தப் பகுதிகளில் திருட்டுத் தனமான நுழைவதற்கு என்றே, அவர்களுடைய கடவுள்களால், இயற்கையாவே, ஏற்படுத்தப்பட்டுவிட்டதோ என்று எண்ணவேண்டியிருக்கிறது.

வடஇந்திய மலைப்பகுதிகளான இமயமலை, இந்துகுஷ் மலை ஆகியவற்றின் இடையிடையே உள்ள கைபர் கணவாய், போலன் கணவாய் முதலிய கணவாய்களின் வழியாகத் தங்கள் ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு சாரை சாரையாக உள் நுழைந்து, வழிநெடுக மேய்த்துக் கொண்டே வந்து ஆங்காங்குப் பரவி, முகாம் அடித்துக் கொண்டவர்கள்தாம், இந்த ஆரியப் பரதேசிகள். (கைதட்டல், ஆரவாரம்)

இடைக்காலங்களில், நமது முன்னோர்கள் அப்பாவி மக்களாக அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டுத் தாங்கள் உண்டு, தங்கள் வேளாண்மையுண்டு என்ற முறையில் அப்படியே வாளா இருந்துவிட்டனர்.

இன்று நாம் பார்க்கவில்லையா? ஆறாயிரும் மைலுக்கு அப்பாலுள்ள நாட்டைச் சேர்ந்தவரான அன்னிபெசன்ட் என்னும் ஒரு அம்மையார், இங்கு வந்து இந்த நாட்டு அய்யன்மார்களோடு சேர்ந்து கொண்டு, தன்னாட்சி, தன்னாட்சி என்று ஆர்ப்பரித்துக் கொட்டங்கள் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள் (கைதட்டல், சிரிப்பு)

பாப்பனர்களல் 100 க்கு 90 பேர்கள் படித்தவர்களாகவும் பார்ப்பனரல்லாதவர்களில் 100க்கு 90 பேர்கள் படிக்காதவர்களாகவும் இருக்கும் இந்த அவலநிலையில், பார்ப்பனர் மட்டும் கொட்டமடிக்கத் தன்னாட்சியா? அவர்களையும் அவர்களது மூஞ்சியையும் பாருங்கள். (சிரிப்பு)

திருமதி அன்பெசன்ட் அம்மையாரைப் பற்றி நான் எழுதிய “Evolution Mrs. Annie Besant” என்ற நூலால், அம்மையாரின் உலோக மாதா தன்மையும், சீதா பிராட்டியின் மறுவாழ்வும் போன்ற அக்கிரமங்களின் சாயமும், வெளுத்துக் கொண்டு வருவதைக் காணலாம். அம்மையார் அரசியலிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டாலும் கொள்வார். (கைதட்டல்)

சில வடநாட்டுத் தலைவர்கள், தேசியம் என்று சொல்லிக்கொண்டு, இங்குவந்து இங்குள்ளவர்களுக்கு அறிவுரைகள் கூறத் தலைப்பட்டிருக்கினர். இங்கு நிலவும் வருணாச்சிரம தருமம் காரணமாக, இந்துக்களுக்குள்ளே பலப் பல வேறுபாடுகள் ஏற்பட்டுப் பலர் சூத்திரர் என்றும், வேசிகளின் மக்கள் என்றும், படிக்கக் கூடாதவர்கள் எனறும், தீண்டத்தகாதவர்கள் என்றும், நெருங்கத்தகாதவர்கள் என்றும், பார்க்கத் தகாதவர்கள் என்றும், இழிவுபடுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படிப் பட்டவர்கள், கோவிலுக்குப் பக்கத்திலே கூட வரத் தகாதவர்கள் என்றும், குடி தண்ணீர் நிலைகளை அண்டக் கூடாதவர்கள் என்றும், அவர்கள் எல்லோரும் ஊர்களுக்கு வெளியேதான் வாழவேண்டும் என்றும், அவர்கள் ஓட்டைக் குடிசைகளில் தான் தங்கவேண்டும் என்றும் கொடுமைப் படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை மேலும் கொடுமைப்படுத்தி இழிவு படுத்தவே, இந்து தருமம் பேசிக்கொண்டு சில வட இந்தியத் தலைவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் செயல், இங்குள்ள பார்ப்பனர்க்கு மேலும் ஆதிக்க அதிகார வெறியை ஊட்டவே பெரிதும் பயன்படுவதாக அமையும். இவர்கள் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு இங்கு வருகிறார்கள் எனறு தெரியவில்லை. (வெட்கம், வெட்கம்)

வடக்கே உள்ள மார்வாடிகளும் குஜராத்தியர்களும், இங்கே வியாபாரிகளகவும் வந்து வந்து போகிறார்கள். அவர்கள் வட்டிக்குப் பணம் கொடுத்து, கொள்ளை லாபம் அடித்துப் பணத்தை மூட்டை மூட்டையாகக் கட்டிக்கொண்டு போவதைப் பார்க்கிறோம் அல்லவா? அதே போக்கில் அரசியல் வியபாரிகளும் இங்கு அவ்வப்போது வந்து போகிறார்கள். இங்குள்ளவர் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். (சிரிப்பு)

இந்த நாட்டில், அறியாமை இருள் சூழ்ந்திருந்த காலத்தில், மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஆரியர்கள், இந்த நாட்டில் புகுந்து, சொந்தம் கொண்டாடத் தொடங்கிய நேரத்தில், நமது முன்னோர்கள் அப்பாவிகளாக இருந்து எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். ஆரியர்கள் வந்து சிறிது காலத்திற்குள்ளாகவே இங்கும் தம் வாலாட்டத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் நம் மக்களிடம் நம்பிக்கைத் துரோகங்கள் பலவற்றை செய்தார்கள். புராணக் கதைகள் பலவற்றையும் கட்டிவிட்டார்கள். செப்படி வித்தைகள் செய்து காட்டினார்கள். ஜேப்படி வித்தைகள் நடத்தினார்கள். அவர்கள் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டிக் ‘கடவுள்’ என்றொரு கற்பனைக் கருத்தைக் சுட்டிக் காட்டித், திராவிடர்களின் மூளையையே குழப்பிவிட்டார்கள்.

காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர் தம் ஆராய்ச்சி நூலான ‘மூலதனம்’ (Captial) பொருளாதார அறிவுக் களஞ்சியத்தில், ‘மதம் மக்களுக்கு அபின்’ என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்துதான் சொல்லியிருக்கிறார்! ( கைதட்டல்)

கடவுள் என்ற கற்பனைக் கருத்தை நிலைநாட்டித், தம் சூழ்ச்சிகளில் வெற்றி கண்ட ஆரிய வஞ்கர்கள், தம்முடைய வெண்ணிறத்தைக் காட்டித், தாம் உயர்ந்தவர் எனறும், திராவிடர்களின் கறுப்பு நிறத்தைக் காட்டி அவர்களெல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும், கடவுளின் தலையிலிருந்து வெடித்து வந்தவன்தான் ‘பார்ப்பனர்’ என்றும், கடவுளின் தோளிலிருந்து பிளந்துகொண்டு வெளிவந்தனவன் தான் ‘சத்திரியன்’ என்றும் கடவுளின் வயிற்றிலிருந்து வெடித்து வெளியே வந்தவன் தான் ‘வைசியன்’ என்றும் கடவுளின் காலிலிருந்து பிளந்து வெளிவந்தவன் தான் ‘சூத்திரன்’ என்றும் கூறித் திராவிட அப்பாவிகள் பலரையும் நம்ப வைத்தனர்.

நான் 30 ஆண்டுகளுக்கு மேல், இங்கிலாந்திலும் இங்கும் மருத்துவப் பணி செய்து அனுபவம் பெற்றவன். ஆனால் இம்மாதிரியான உடலின் பல பகுதிகளில் பிள்ளைபேறு மருத்துவங்களை நான் என் வாழ்நாளில் கண்டதுமில்லை, கேட்டறிந்ததுமில்லை. (சிரிப்பு, கைதட்டல்)

-தொடரும்

தொடர்புடைய கட்டுரைகள்,  பதில்கள்:

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

11 thoughts on “‘நம்பிக்கைத் துரோகிகள்’

  1. பிராமணர்கள் அரசு அலுவலகங்களிலும் , அரசியலிலும் சமுதாயத்திலும் அதிக அளவில் செல்வாக்கு பெற்று இருந்த காலம் மலையேறி விட்டது. அவர்கள் சமுதாயத்தில் எல்லா பிரிவினரையும் போலவே உள்ளனர்.

    இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு தமிழ் நாட்டு அமைச்சரைவையிலே பிரதிநிதித்துவம் கூட இல்லை. ஏதோ ஓரிரண்டு பேர் சட்ட மன்ற உறுப்பினராகி கஷ்டப் படுகிறார்கள்.

    எனவே நூறு வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றை, பேசியவற்றை எடுத்துப் போட்டு சாதிக் காழ்ப்புணர்ச்சி செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

    தமிழக ரசியலில் இனி பிராமண எதிர்ப்பு என்பது வாக்குகளைக் குவிக்காது, பிராமணர்கள் என்று சொல்லப் படுபவர்களால் தங்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை, தடை எதுவம் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர்.

    சகோதரர் மதிமாறன் உப்பளத்திலே உப்பு விற்கப் பார்க்கிறார்.

  2. இன்னும் பல கோவில்கள் பார்பனர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது திருச்சிக்காரன். கருவறைக்குள் காமகளியாட்டம் ஆடிய தேவநாதன் முதல் முட்டுசந்து முக்திவினாயகர் கோவில் குருக்கள் வரை எல்லாமே பார்பனர்கள்தானே திருச்சிக்காரன்?. கோவிலின் ‘கருவறைக்குள் கால்வைத்துப்பார் தெரியும் யார் ரவுடின்னு’.

    இன்னும் உச்சநீதிமன்றம் உச்சிகுடும்பிமன்றமாகத்தான் உள்ளது. தமிழக எதிர்கட்சி தலைவி மற்றும் முன்னாள் முதல்வர் பாப்பாத்திதானே திருச்சிகாரன்? . உயர்கல்வியில் இடஒதுக்கீடு கிடைக்கவிடாமல் தடுப்பது பார்பனர்கள்தானே?

    திரைத்துறையில் கோலேய்ச்சுவது பாப்புகள்தான். வெறும் மூணு விழுக்காடு இருக்கும் பார்பனர்கள் எத்தனை முறை தமிழகமுதல்வராக வந்துவிட்டார்கள் எத்தனைமுறை தலைமை செயலராக வந்துவிட்டார்கள். 27 விழுக்காடு இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள் திருச்சிக்காரன்.

  3. 1917இலேயே இத்தகைய வீரியமானதொரு உரையை நாயர் அளித்திருக்கிறார் என்பது போற்றத்தக்கது. நன்றி தோழர் மதிமாறன்!

  4. //கடவுள் என்ற கற்பனைக் கருத்தை நிலைநாட்டித், தம் சூழ்ச்சிகளில் வெற்றி கண்ட ஆரிய வஞ்கர்கள், தம்முடைய வெண்ணிறத்தைக் காட்டித், தாம் உயர்ந்தவர் எனறும், திராவிடர்களின் கறுப்பு நிறத்தைக் காட்டி அவர்களெல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும், கடவுளின் தலையிலிருந்து வெடித்து வந்தவன்தான் ‘பார்ப்பனர்’ என்றும், கடவுளின் தோளிலிருந்து பிளந்துகொண்டு வெளிவந்தனவன் தான் ‘சத்திரியன்’ என்றும் கடவுளின் வயிற்றிலிருந்து வெடித்து வெளியே வந்தவன் தான் ‘வைசியன்’ என்றும் கடவுளின் காலிலிருந்து பிளந்து வெளிவந்தவன் தான் ‘சூத்திரன்’ என்றும் கூறித் திராவிட அப்பாவிகள் பலரையும் நம்ப வைத்தனர்.

    நான் 30 ஆண்டுகளுக்கு மேல், இங்கிலாந்திலும் இங்கும் மருத்துவப் பணி செய்து அனுபவம் பெற்றவன். ஆனால் இம்மாதிரியான உடலின் பல பகுதிகளில் பிள்ளைபேறு மருத்துவங்களை நான் என் வாழ்நாளில் கண்டதுமில்லை, கேட்டறிந்ததுமில்லை. (சிரிப்பு, கைதட்டல்)//

    மகத்தான மனிதர் மாதவநாயர்.. தெள்ளத்தெளிவாக பார்ப்பன பண்டாரங்களை அடையாளப்படுத்தியுள்ளார்..

    நடந்த வரலாறுகளை தொகுத்துக் கொடுத்தால் அதிலுள்ள விசயங்களை பற்றிப்பேசாமல் வழக்கம் போல சாம்புமாமா (அதான் திரிச்சிகாரன்) கட்டுரை திசை திருப்ப வந்துட்டார்.. கணினி உலகத்திலும் பார்ப்பனர்களின் சுயகுனமான குயக்கு புத்தியை ஒட்டுமொத்தமாக திரிச்சிகாரனிடம் சாம்புமாமாவிடம் ஒட்டுமொத்தமாக (திரிச்சிகாரனிடம்) காணலாம்.. அதை கண்டு கொள்ளாமல் இந்த கட்டுரையை (வரலாற்று சம்பவத்தை) நம் நண்பர்கள் வட்டாரத்தில் பரப்பவேண்டும்..

    தொடருங்கள் ….

  5. தமிழன்பன், பாத்துங்க… அப்புறம் திருச்சி உங்களுக்காகவே தனியா 40 பக்கத்துக்குப் பின்னூட்டம் எழுதுவார். அப்புறம் இங்கே பின்னூட்டம் போடுற ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்றேன்னு அதிலேர்ந்து இரண்டொரு பேராவைக் காப்பி செய்து பேஸ்ட் பண்ணுவார். நீங்கள் துன்புறுவதுமில்லாமல் அனைவரையும் துன்புறச் செய்யாதீர்கள். 🙂

  6. செத்த பாம்பை இன்னும் எத்தனை வருஷத்துக்குய்யா அடிச்சுக்கிட்டு இருக்க போறிங்க.

    தலய அதுக்குள்ள விட்டுடீங்க. பப்பு வேகலயா.

  7. ////llallu///

    செத்த பாம்பா? இன்னும் நீ உயிரோடுதானே இருக்கே?

  8. நண்பர் விஜய கோபால சாமி அவர்களே,

    என் மீது இவ்வளவு அக்கறை காட்டுவதற்கு நன்றி. என்னால் யாருக்கும் எந்த துன்பமும் இல்லையே! நான் யாரையும் காழ்ப்புணர்ச்சி செய்து எழுதவில்லையே!!

    நான் நாற்பது பக்கம் எழுதினாலோ நானூறு பக்கம் எழுதினாலோ, உங்களுக்கு ஒரு தொல்லையும் இல்லையே நண்பரே! நான் உங்களது தளத்தின் பக்கங்களை நிரப்பவில்லையே? உங்கள் நோட்டுப் புத்தகத்தின் பக்கங்களையும் கிழித்து எழுதவில்லையே?

    மதிமாறன் அவர்களின் தளத்திலே தானே எழுதுகிறேன். நான் எழுதுவது அவருடைய பக்கங்களை நிரப்புவதாக தோன்றினால் அவர் என் எழுத்துக்களை தடை செய்யலாமே?

    நான் யாரையும் விஜய கோபாலச சாமியின் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்காதீர்கள் என சொல்ல வில்லையே?

    என்னுடைய பின்னூட்டங்களுக்கு மட்டும் இத்தனை எச்சரிக்கை என்றால், என் பின்னூட்டங்களில் உள்ள உண்மை சுடுகிறது என்பதாலா ?

  9. கைதட்டல், சிரிப்பு, ஆரவாரம், பலத்த கைதட்டல், பலத்த சிரிப்பு எல்லாம் நாயர் அந்தக் காலத்தில் வாங்கியிருப்பது உண்மைதான். காலதேச வர்தமானங்களில் எத்தனையோ மாறுதல், much water flown under the bridge என்பதை போல உலகம் திகழ்வதால், முதலாளித்துவத்தின் பலவீனமான கண்ணிகள் உடைந்து கம்யூனிச அரசு தோன்றும் என்பது போய் கம்யூனிச அரசின் சங்கிலித் தொடர்கள் உடைந்து நொறுங்கும் காலத்தை நாம் காண்பதால்…….அதே கைதட்டல் ஆரவாரம் சிரிப்பு சத்தம் தற்போது கேட்காது என்பதை 1976 பிறகு பேப்பர்வாங்க மறந்த மதிமாறன்கள் உணரவேண்டும
    நாகராஜ்

Leave a Reply

%d bloggers like this: