‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி


‘ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா....’

வ்வொரு முறையும் சாமியார்கள் பெரியார் தொண்டர்களின் வேலையை குறைக்கிறார்கள் அல்லது பெரியார் தொண்டர்களின் பேச்சுகளுக்கு ஆதாரமாக விளங்குகிறார்கள்.

பத்து மாநாடுகள், 1000 தெருக் கூட்டங்கள் நடத்தி அம்பலப்படுத்த வேண்டிய செய்தியை, தங்களின் கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுக் கடங்காத லீலைகளின் மூலம் அவர்களே அம்பலமாகிறார்கள்.

குமுதம் என்கிற பலனா பத்திரிகையில் ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்று ஆன்மீக தொடர் எழுதி ஆத்மாவை தொட்டு எழுப்பிய நித்தியானந்தம் சுவாமிகள், குமுதம் போலவே அந்தரங்கத்தையும் தட்டி எழுப்புகிற ஒரு வயகார சாமியார்தான் என்று மலையாள பிட்டு பட போஸ்டர் பாணியில் நடிகையுடன் ‘ஆழ்நிலை தியானத்தில்’ இருக்கும் படங்களை வெளியிட்டு இருக்கிறது தினகரன் நாளிதழ்.

நடிகையின் நற்பெயருக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக அவர் பெயரையும், படத்தையும் மறைந்து வெளியிட்டிருக்கிறது தினகரன். (யோவ், போயா…. அந்த நடிகை டி.வி. தொடரில் கற்பை வலியுறுத்தி குடும்ப பாங்கான கேரக்டரில் நடிக்கிற நடிகையா இருந்து, அதன் மூலம் அந்த தொடருக்கான ரேட்டிங் எறங்கி போச்சுன்னா… நீயா பதில் சொல்லுவே?)

‘அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பத்தெட்டு அருவா’  என்கிற பாணியில் ஜெயெந்திரன் போன்ற கிழடுகளே, ‘நேத்து… ராத்திரி…. யம்மா…’  பாணியில் ஏகப்பட்ட பெண்களோடு உல்லாசமாக ‘இருக்கும்’ போது, இளமை ஊஞ்சலாடும் நித்தியானந்தம் போன்றவர்கள் என்ன இளிச்சவாயர்களா? ‘இளமை இதோ… இதோ…’ என்று ‘இருக்க’ மாட்டார்களா? அதான் ‘இருந்து’ ட்டாரு.

அதுக்காக பக்தர்கள், ‘இனி சாமியாரே வேண்டாம், சாமியே போதும்’ என்று ஒதுங்கிவிடுவார்களா? அப்படியிருந்தால், பிரேமானந்தாவிற்கு பிறகு சாமியார்களே தமிழகத்தில் உருவாகி இருக்க முடியாது.

ஆனாலும், இப்போதெல்லாம் முன்பைவிட அதிகமாக, வசதியாக, நவீனமாக மல்டிநேஷ்னல் கம்பெனிகளின் ‘ஆசிர்வாதம்’ பெற்ற பணக்கார சாமியார்கள் உருவாகிறார்கள். அமெரிக்காவில் ஆசிரமம் வைத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளைபோல் ‘தனககுப் பிறகு தன் மகன்’ என்று பக்தி தொழில் நடத்தி, என்ஜினியரிங் கல்லூரி நடத்தி சம்பாதிக்கிறார்கள்.

‘தர்மம் பண்ண  புண்ணியம்’ என்கிற நம்பிகையையும் உடைத்து, பக்தர்களிடம் இருக்கும் பத்து ரூபாவைக்கூட நன்கொடை, செல்போன்  டோக்கன்,  புத்தக விற்பனை என்று புடுங்கிக் கொண்டு, உள்ளே எளிய மக்களான பிச்சைக்காரர்களை கூட அனுமதிக்காமல், தங்கக் கோயில் கட்டி ‘ரிசார்ட்’ டைப்போல் கோயில்களை, மடங்களை  நிர்வகிக்கிறார்கள்.

இப்படி வெள்ளைக்காரனையே ஏமாற்றி சம்பாதித்த சாமியார்களும் இருக்கிறார்கள். இதில் பார்ப்பான் பார்ப்பனரல்லாதவன் என்ற பேதமில்லாமல் ஒற்றுமையாய் கொள்ளை அடிக்கிறார்கள்.

அப்படி கொள்ளையடித்து மாட்டியிருக்கிறான் ‘கல்கி பகவான்’ என்ற ஒரு ஹைடெக் சாமியார்.

எது எப்படியோ? தொடர்ந்து இந்து மதத்தை அம்பலப்படுத்தும் பிரேமானந்தா, ஜெயெந்திரன், தேவநாத குருக்கள், நிந்தியானந்தம், கல்கி போன்றவர்களுக்கு பெரியார் தொண்டன் என்கிற முறையில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘மாட்றவரைக்கும் சாமியார், மாட்டிக்கிட்ட போலிச் சாமியார்’ என்கிற முறையில் தங்களின் பக்தியை சாமியார்களின காலடியில் தேடிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்காக…… என்ன சொல்றது?

நீங்க நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கிற சாமியாரின் லீலைகள், மோசடிகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். ஏன் என்றால், மோசடிகளும், லீலைகளும் செய்யாத சாமியார் எவனும் கிடையாது.

குறிப்பு :

டாக்டர் டி.எம். நாயரின் எழுச்சிஉரை தொடர், சாமியார்களின் விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடரும்.

தொடர்புடைய கட்டுரைகள், பதில்கள்:

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

ஜெயலலிதா என்ன பெரியார் பேத்தியா?

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

மாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியாரா?

துறவிகள்

காஞ்சி மகா ஸ்வாமிகளின் 116 ஜெயந்தி. இவுரு ரொம்ப… நல்லவரு…

27 thoughts on “‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி

 1. காலம் காலமாக தொடர்ந்து வரும் இச்செயல்கள் இனிவரும் காலங்களிலாவது தவிர்க்கப்படவேண்டும்; அதற்கான முயற்சிகளில் சம்பந்தப்பட்டவர்கள் களமிறங்கி துரிதமாக செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  “நீங்க நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கிற சாமியாரின் லீலைகள், மோசடிகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். ஏன் என்றால், மோசடிகளும், லீலைகளும் செய்யாத சாமியார் எவனும் கிடையாது” மிகவும் பொறுத்தமான இறுதி வரிகளைத் தந்திருக்கிறீர்கள்! நன்றி.

  இனியாவது நம் நாட்டு மக்கள் இப்பேர்வழிகளிடமிருந்து விலகி இருக்க கற்றுகொள்ளட்டும்.

 2. சாமியாரின்(?!) கொட்டு எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சிட்டுது போலிருக்கு அந்த வீடியோ காட்சி! உங்க பதிவும் கூட அதை நல்லாத்தான் செஞ்சுருக்கு. அந்த பொறம்போக்கு (சாமியாரு) பத்தி இதுவரைக்கும் ஆஹா….ஓஹோன்னு நெனச்சுகிட்டு உலகம் இப்ப முழிச்சுக்கிட்டது வரைக்கும் சந்தோசம்!

  //ஏன் என்றால், மோசடிகளும், லீலைகளும் செய்யாத சாமியார் எவனும் கிடையாது//
  இதுதான் நூத்துக்கு நூறு உண்மை! நம்ம ஊருல மட்டும் ஏந்தான் இந்த இம்சையோ தெரியல. காலங்காலமா இவனுங்க தொல்லைத் தாங்கலடா சாமி!

  நல்ல பதிவு (விளம்பர இடைவேளை)! பகிர்வுக்கு நன்றி.
  http://padmahari.wordpress.com

 3. சரியான படம் மாமூ! இதைத்தான் “டைமிங்”ன்னு சொல்றதா, இந்த சாரு நிவேதிதா இந்த சாமியார பத்தி “வுட்ட ரீலுக்கு” சாருவுக்கு பதிலடியா ஏதாச்சும் எழுதினா நல்லதுன்னு நான் நெனைக்கிறேன்?

 4. /// எது எப்படியோ? தொடர்ந்து இந்து மதத்தை அம்பலப்படுத்தும் ////

  இந்து மதம் மட்டுமில்லங்க எல்லா மதத்திலும் இருக்காங்க.

 5. இந்த காவியைக் கட்டிக் கொண்டு வேடம் போடும் நபர்களின் தொல்லை தாங்கலைடா சாமி.

  போன மாதம் தான் காஞ்சி அசிங்க அர்ச்சகர் பற்றி கட்டுரையை வெளியிட்டு அது சம்பந்தமான பின்னூட்டங்களும் வந்து முடிந்தன. சரி வேறு நல்ல விடயங்களைப் பற்றி எழுதுவோம் என ஆரம்பித்தால் அதற்குள் பரமஹம்சர் என்ற பட்டத்தையும் தனக்குத் தானே சூடிக் கொண்ட ” நித்யானந்தாவின்” லீலா வினோதங்கள் வெளியாகி இருக்கிறது. இவர்களைப் பற்றி கட்டுரை வெளியிடவே நேரம் போதாது போல உள்ளதே.

  http://thiruchchikkaaran.wordpress.com/2010/03/03/let-the-wind-comes-in/

 6. இந்த பரபரப்பில், சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்.பக்கத்துக்கு வீட்ல கேபிள் கட் பண்ண சொல்லிட்டாங்க.
  சன் டிவி இப்போ ஒரு படி மேல ஏறி இருக்கு..
  முதல் இடம், பரங்கி மலை ஜோதி, ரெண்டாவது இடம் சன் டிவி.

 7. IT IS A SAD SITUATION IN THE CHRISTIAN RELEGION. ALL OVER THE WORD, FROM ORAL ROBERTS TO DINAKARAN, AS AFORESAID, IT IS A HERIDITORY ISSUE. NOBODY OTHER THAN THE CHILDREN CAN INHRIT
  THEIR PUBLIC DONATED KINGDOM. BILLY GRAHAM IS NOT AN EXCEMPTION. UNFORTUNATELY NOBODY QUESTIONS THIS INPROPRIETY

 8. //ஏன் என்றால், மோசடிகளும், லீலைகளும் செய்யாத சாமியார் எவனும் கிடையாது.//

  600 கோடிப் பொன்னை துறந்து விட்டு துறவியானார் பட்டினத்தார். அவர் பணக்காரராக தொடர்ந்து இருந்திருந்தால் எத்தனயோ லீலைகளை செய்து இருக்கலாம். துறவி ஆகி தெருவிலே பிச்சை எடுக்கும் வாழ்க்கைக்கு அவர் சென்றது ஏன்? ஏனெனில் அவர் பொன்னும் பொருளும் தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றாது என்கிற உண்மையை அவர் உணர்ந்து விட்டார்.

  தியாகராசரும் தஞ்சை மன்னர் தந்த செல்வத்தை மறுத்து நித்தி சால சுகமா , ராம நீ சந்நிதி சேவா சுகமா என்று பாடினார். சாக்ரடீசும் மனிதன் தன் அறிவை வளர்த்து மிக சிறந்த நாகரீக நிலையை அடைய வேண்டுமேயல்லாது பொருள் ஈட்டுவதில் கவனம் எழுத்துவது வீணே எனக் கூறி உள்ளார்.

  எனவே பகுத்தறிவோடு சிந்திப்பவர் பணத்துக்கு , சொத்துக்கு மதிப்பு குடுப்பதில்லை. போலி பகுத்தறிவுவாதிகள் பாடுபட்டு பணத்தை சேகரித்து வைத்து, கூடு விட்டிங்கு ஆவிதான் போயின பின் யாரோ அந்தப் பணத்தை அனுபவிக்க விட்டு விட்டு அம்போ எனப் பரிதாபமாக அத்தனை பணத்தையும் விட்டு செல்கின்றனர்.

 9. சில அப்பாவி நல்லவர்கள் சொல்கிறார்கள் “பெரியார்வாதிகளின் வேலையை இந்த சாமியார்கள் குறைத்து விடுகிறார்கள்” என்று.

  இதெல்லாம் வெறும் நம்பிக்கை மட்டுமா? உலகம் தட்டை என்று நம்பியது வேண்டுமானால் நம்பிக்கை எனலாம் – அது உலகம் உருண்டை என்பதை விஞ்ஞானப் பூர்வமாக தெட்டத் தெளிவாக நிரூபனமாகும் ஒரு நாளுக்காக காத்திருந்து கலைந்து போய்விடும். ஆனால் இதுவோ வெறும் நம்பிக்கை அல்ல. நீங்கள் கரடியாய் கத்தினாலும் சரி.. ஜெயேந்திரன், பிரேமானந்தா, தேவநாதன், கல்கி, நித்தியானந்தன், இச்சாதாரி, கிச்சாதாரி என்று ஆயிரம் – லட்சம் சாமியார்கள் அம்பலப்பட்டு ஜட்டி கிழிந்து நின்றாலும் கூட – அடுத்த ரெண்டாவது வாரம் ஒரு xxxஆனந்தன் பின்னே போய் விழுவார்கள். அவனும் அயோக்கியனாகத்தானிருப்பான் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு.

  இந்த சாமியார்களெல்லாம் சல்லிவேர் தான். இந்த மதம், அதன் நம்பிக்கைகள், அதன் புரோக்கர்கள் என்று இதெல்லாம் நிலைத்து நிற்க
  காரணமாயிருக்கும் இந்தப் பொருளாதாரச் சூழல் தான் ஆணி வேர். உடலுறவும் சுய இன்பமும் அளிக்கும் கண நேர நெகிழ்வுணர்ச்சியும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் இரண்டரை மணி நேர ஆன்மீக உரை அளிக்கும் புல்லரிப்பு ஒன்று தான் – புறநிலையில் ஓயாமல் அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு ஏதோவொன்றில் இளைப்பாருதல் தேவையாயிருக்கிறது – இரு கரம் நீட்டி அணைத்துக் கொள்ள அழைக்கிறார் டி.ஜி.எஸ் தினகரன்; அம்பானியும் மன்மோகன் சிங்கும் ஏறி மிதித்த வலி தெரியாமல் வாழும் கலையைச் சொல்லித் தருகிறேன் வாருங்கள் என்று கூப்பிடுகிறார் ஸ்ரீ ஸ்ரீ.

  கான்சர் முற்றிப் போன நிலையில் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொன்றாக செயலிழக்கும். அப்போது கான்சருக்கு மருந்தளிப்பீர்களா அல்லது கைவலிக்கு அமிர்தாஞ்சன், இடுப்பு வலிக்கு மூவ், தலைவலிக்கு ஆக்சன் பைவ் ஹண்ட்ரட் என்று தனித்தனியாக மருத்து சாப்பிடுவீர்களா? “நோய் முதல் நாடி” – இந்த கார்ப்பொரேட் சாமியார் நோயின் மூலம் இந்த சமூகப் பொருளாதார அமைப்பு! இது நீடிக்கும் வரை இவர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள்.

  கேள்விப்பட்டிருப்பீர்களே – இந்த வருடம் சபரி மலையில் போன வருடத்தை விட கூட்டமாம். இத்தனைக்கும் போன வருடம் தான் மகர ஜோதியின் பூலவாக்கு அம்பலமானது.

  பெரியார் இயக்கத் தோழர்களே.. இன்னமும் நீங்கள் இருளில் தொலைந்த சாவியை வெளிச்சத்தில் தேடிக்கொண்டிருக்கிறீர்களே.

  இன்னும் சில தகவல்களுக்கு…

  http://kaargipages.wordpress.com/2010/03/03/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af-%e0%ae%b2%e0%af%80%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5/

 10. மக்களின் ஆன்மீக நம்பிக்கையைப் பயன்படுத்தி,அவர்களை ஏமாற்றும் இந்த நித்தியானந்தன்,கல்கி போன்ற அயோக்கிய,போலி ஆன்மீகவாதிகளை அம்பலப்படுத்திய,அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த விசயத்தில் ,இதைப் போன்று உள்ளவர்களை , புலனாய்வு மூலம் கண்டறிந்து மக்களுக்கு அரசே தெரிவிப்பது நல்லது என்றே கருதுகிறேன்.

 11. ///சில அப்பாவி நல்லவர்கள் சொல்கிறார்கள் “பெரியார்வாதிகளின் வேலையை இந்த சாமியார்கள் குறைத்து விடுகிறார்கள்” என்று.///

  மதிமாறனைத்தான் குறிப்பிடுகிறார் இவர். அதற்கு அடுத்த லைனிலேயே //அல்லது பெரியார் தொண்டர்களின் பேச்சுகளுக்கு ஆதாரமாக விளங்குகிறார்கள்./// என்று உள்ளதை ஏன் வசதியாக மறைத்திருக்கிறார்.
  கட்டுரையளார் குகுறிப்பிடுகிற தொனியிலேயே சாமியார்களின் தன்மைப் பற்றி இந்தக் கட்டுரையும் அதன் பழயகட்டுரைகளும் தான் குறிப்பிட்டிருக்கிறது.

  ///பெரியார் இயக்கத் தோழர்களே.. இன்னமும் நீங்கள் இருளில் தொலைந்த சாவியை வெளிச்சத்தில் தேடிக்கொண்டிருக்கிறீர்களே.///

  இதற்கு என்ன அர்த்தம்? கட்டுரையாளரர் ஆர்வக்கோளாறாக எழுதியிருக்கிறார்.

  இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம்.

 12. Media should have some ethics to broadcast such a nasty thing in front of the mass. If the media is broadcasting such a filthy thing then we should know there is something fishy around it…we, people working day and night and having stress through out the years.we are in need to ventilate our feelings out in some way..we are easily inspired by the words yoga, meditation and falling in this vicious circle.we should not blame this “swami” for his actions instead we need to blame ourselves for believing all kaavi dressed people as swamijis.how sun tv alone got this news first? how come they are broadcasting smashing of ashrams in all the places? we cant believe whether it is a rumor (all graphics gimmicks by media) or sex scandal by Nithyananda..GOD ONLY KNOWS..if he is there.

 13. இவனை மடத்தை மக்கள் அடித்து நொறுக்குவதுபோல், சங்கர மடத்தையும் மக்கள் அடித்து நொறுக்கி இருந்தால் நன்றாக இருக்கும்.

 14. மூடர்கள் இருக்கும் வரை மூர்த்திகளும் இருக்கத்தான் செய்வார்கள்.. மதி ஐயா.. நல்ல ஒரு நகைச்சுவை மீண்டும் அரேங்கேர்யுள்ளது.. நல்ல பதிவு…

 15. மக்களின் ஆன்மீக நம்பிக்கையைப் பயன்படுத்தி,அவர்களை ஏமாற்றும் இந்த நித்தியானந்தன்,கல்கி போன்ற அயோக்கிய,போலி ஆன்மீகவாதிகளை அம்பலப்படுத்திய,அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  ஆனால்,இந்த BLUE FILM -மை வெளிப்படையாகக் தொலைக் காட்சியில் காட்டியது கண்டிக்கத்தக்கதே.

 16. தனபால்
  நித்தியானந்தம், கல்கி இவர்களின் குரு அயோக்கிய,போலி ஆன்மீகவாதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் அம்பலப்படுத்தி எழுதுவீர்களா?

 17. கடவுளை நம்பாதீங்க மக்களே, அதெல்லாம் சும்மா நம்ம ஏமாத்துறதுக்காகச் சொல்லுறதுன்னு
  பகுத்தறிவு வாதிகள் அண்ணைய்லேந்து இன்னுவரைக்கும் கத்திட்டிருக்காங்க.. மக்கள் கேட்டாதானே… அப்படி என்ன போதயக் கண்டீங்க கடவுள நம்புறதுல…? ஏன் இப்படி பிடிவாதமா கடவுளப் புடிச்சுத் தொங்கி கிட்டிருக்கீங்க மக்களே ? நாங்களும் அந்த போதையிலேந்துதானே மீண்டு வெளியே வந்திருக்கோம், எங்களுக்கு என்ன ஆயிடுச்சு? எதுக்குத் தயங்குறீங்க? பாருங்க,
  எப்படியெல்லாம் ஏமாறுதீங்க? யாருகிட்டேல்லாம் ஏமாறுதீங்க ! இப்படி நடக்குததுக் கெல்லாம் என்ன காரணம்னு யோசிச்சீங்களா? நம்ம, இல்லாத கடவுள இருக்குன்னு நம்புறதுனாலதானே? கடவுள்னு ஒன்னு இருந்தா அதுக்க பேரச் சொல்லியே மக்கள ஏமாத்துரவன அது சும்மா பாத்துகிட்டிருக்குமா ? தொடந்தாப் போல இப்பிடியே ஒவ்வொருத்தனா ஏமாத்துறான்னா கடவுள்னு ஒன்னு சும்மான்னுதானே அர்த்தம்…? நாம நம்புறதுனாலதானே இப்படியெல்லாம் சாமியாருங்க புதுசு புதுசா வந்துகிட்டே இருக்கானுக…? இனியும் நம்ம ஏமாறக்கூடாதுன்னா கொஞ்சம் கொஞ்சமா இந்த கடவுள் நம்பிக்கையை விட்டுத் தொலைப்போம். அப்பதான் இந்தமாதிரி
  கருமம் புடிச்ச பயலுக மீண்டும் வரமாட்டானுக… நாங்க சொல்றது சரிதானே? அப்ப, ஏத்துக்கிடுங்க என்ன…

  இதுபோல, கிறித்தவப் பாதிரிகள ஒருநாளு கொஞ்சம் நோட்டம் விட்டா இத தூக்கி சாப்டுற அசிங்கங்க வெளியே வரும்… அதுக்கு எந்தத் தொலைக்காட்சிகாவது துணிவு இருந்தா, இதைவிட இன்னும் வீச்சா இருக்கும், யாராவது அந்தப் பக்கமும் கொஞ்சம் பாருங்கப்பா…

  காசிமேடு மன்னாரு.

 18. திரு. தமிழன் அவர்களே ,

  மக்களின் ஆன்மீக நம்பிக்கையைப் பயன்படுத்தி,அவர்களை ஏமாற்றும் அனைவருமே அயோகியனேயாகும்.இதில் ஜெயேந்திர சரஸ்வதி ஆக இருந்தால் என்ன,நித்தியானந்தம் ஆக இருந்தால் என்ன,அயோக்கியத்தனம் செய்தவன் அனைவரும் அயோகியனே.

 19. நித்யானந்தன் என்னும் அயோக்கியனின், அயோக்கியத் தனத்தை வைத்து காசு பார்க்கும் ஊடகங்களின் அயோக்கியத் தனத்தை என்னவென்று சொல்வது.குறிப்பாக நக்கீரன் பத்திரிகை இணைய தளம்.

 20. எனது பதிவின் சில பகுதிகளை கட் காப்பி செய்து சிண்டு முடியும் வேலையை செய்திருக்கிறார்கள்.. இப்போது தான் கவனித்தேன்.

  தோழர் மதிமாறன், உங்கள் பதிவை வாசிக்கும் முன்னே ( அல்லது நீங்கள் வெளியிடும் முன்பாகவோ கூட இருக்கலாம்) எனது பதிவை
  எழுதிவிட்டேன். நன்பர் வால்பையன் அவர்களின் பதிவின் பின்னூட்டத்திலும், இன்னும் வேறு சில இடங்களிலும் தோழர்கள் வெளிப்படுத்தியிருந்த
  ஒரு சந்தோச உணர்ச்சியில் அர்த்தம் இல்லை என்பதை சுட்டிக்காட்டவே அந்த வரிகள் எழுதப்பட்டது. உங்களை குறிப்பிட்டு அது
  எழுதப்பட்டதல்ல.

  SSK, பெட்டர் லக்கு நெக்ஸ்டு டைமு.. ஓக்கே?

  kaargi

  kaargi.pages@gmail.com

 21. naarppadhu latchaththirkum mearppatta rasigargalai(pakdhargalai) konda madaththin mugamudi kizhindhirukkiradhu? aanaalum kaanchipuraththu paarppanan chinna avaalin manmadha kaliyaattaththai velippaduththum thairiyamum? periya vaalin kolaiyai maraikkaadha velippaadum aatchiyaalarukku undaa? ingum paarppanan allaadhaan dhaan viraivil ozhiththukkattappadukiraan?….

 22. \\இதுபோல, கிறித்தவப் பாதிரிகள ஒருநாளு கொஞ்சம் நோட்டம் விட்டா இத தூக்கி சாப்டுற அசிங்கங்க வெளியே வரும்… அதுக்கு எந்தத் தொலைக்காட்சிகாவது துணிவு இருந்தா, இதைவிட இன்னும் வீச்சா இருக்கும், யாராவது அந்தப் பக்கமும் கொஞ்சம் பாருங்கப்பா…

  காசிமேடு மன்னாரு.\\
  nan Mr kasi medu mannaru karuththai Aamothikkerean.

 23. Nithyanantha intha valakil irrunthu thapikathanea BJP aatchi nadakum karnadakavuku matra pattu ullathu…. makkalea aadu maadukalai pontru kumbal kumbalaga poi nithyanantha kalil vila innum oru 6 matham wait pannungal…………………..

Leave a Reply

%d bloggers like this: