60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் பற்றி, NFDC மும்பை மேலாளரிடம் பேசியதை  தோழர் வேந்தன் இங்கே பதிவு செய்கிறார்.

***

அன்பார்ந்த  தோழர்களே!

நாம் தொடர்ந்து சாதிக்கெதிரான பிரச்சாரங்களை குறிப்பாக இளைஞர்களிடம் கருத்தரங்குகள், அண்ணல் அம்பேத்கர் உருவம் பொறித்த ஆடையை அணிதல் போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக செய்து வருகிறோம்.

சில மாதங்களுக்கு முன்பு அண்ணல் உருவம் பொறித்த ஆடையை, சில எதிர்மறை அனுபவங்களையும் கடந்து வெற்றிகரமாக நாம் வெளிகொண்டு வந்ததை தோழர்கள் அறிந்ததே! இந்த வெற்றிக்கு தோழர்களுடன் தோள் கொடுத்து ஆதரவு அளித்த தோழர்கள் அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வெற்றியை தொடர்ந்து  சாதிக்கு எதிராக அண்ணல் பற்றி பிரச்சாரங்களில் அடுத்த கட்ட நிகழ்வாக நாம் கூடி ஆலோசித்தது முதல் NFDC ஐ அணுகியது வரை உங்களுக்கு ஏற்கனவே  தெரிந்த தகவல்களே!

NFDC சென்னை  கிளையின் மேலாளரை சந்தித்த  போது அவர் மும்பையில் உள்ள NFDC யின் தலைமை  அலுவலகத்தின் மேலாளர்  திரு.ராமகிருஷ்ணன் அவர்களை  தொடர்பு கொள்ளும்படி அவருடைய தொலைப்பேசி எண்ணை கொடுத்தார். நாம் அவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

டாக்டர். பாபா  சாகேப் அம்பேத்கர் படம்  இன்னும் தமிழில் வெளியாகாததன்  காரணம் பற்றி கேட்டபோது அதற்கான முழு காரணம் படத்தை தமிழில் வெளியிட வாங்கிய வினியோகிப்பாளரையே சாரும். என்றார்.

இந்த விஸ்வாஸ் சுந்தர் என்பவர் படத்தை வெளியிட எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவே இல்லை. இந்த படம் தமிழில் வெளியிட தயாராகி இருக்கிறது என்ற குறைந்தபட்ச தகவல் கூட பலருக்கும் தெரியவில்லை. பத்திரிகை துறையை சேர்ந்தவர்களுக்கே கூட தெரியவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தினமலரில் ‘பாபாசாகேப் அம்பேத்கர் படம் இன்னும் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை’ என்று செய்தி வெளியிட்டது. இப்படம் தமிழில் தயாரித்தாகிவிட்டது பற்றியும் இப்படம் விஸ்வா சுந்தர் என்ற வினியோகிப்பாளரிடம் தான் முடங்கியுள்ளது என்ற தகவல் பத்திரிக்கை துறையினருக்கு கூட தெரியவில்லை.  இந்த அளவுக்கு விஸ்வாஸ் சுந்தர் என்பவர் படத்தை பற்றிய தகவல்களை வெளியே தெரியப்படுத்தவில்லை என்பது தான் இதன் பின்னணியில் உள்ள உண்மை. ஏன் இவர் தமிழ் சமூகத்திற்கு இப்படத்தைப் பற்றிய தகவல்களை தெரியபடுத்தவில்லை என்ற இந்த கேள்விகளை தலைமை அலுவலக மேலாளரிடம் கேட்ட போது,

இதற்கு NFDC எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்றார்.

“அப்படியென்றால்  விஸ்வாஸ் சுந்தர், Dr.Babasaheb Ambedkar படத்தை தமிழில் வெளிக் கொண்டுவர முயற்சிக்காததால் ஒருவேளை அவர் படம் வெளிவராமல் முடக்கும் முயற்சியாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. அப்படி அவர் முடக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அப்படி நேர்ந்தால் படத்தின் நிலையென்ன?” என்று கேட்டோம்.

அதற்கு  அவர், படம் வினியோகிப்பாளருக்கு  படத்தை வெளியிட உரிமம் குறிப்பிட்ட  காலத்திற்கு மட்டுமே இருக்கும். ஒருவேளை படம் வெளியாகவில்லையென்றால் உரிமம் மறுபடியும் NFDCக்கே திரும்பிவிடும் என்றார்.

சரி, படத்தை வெளியிட எத்தனை வருடங்கள்  அவருக்கு உரிமம் உண்டு என்று  கேட்டதற்கு 5 வருடங்கள் என்றார். எப்போது அவருடைய உரிமம் காலாவதியாகிறது என்று கேட்டதற்கு அவர் கூறிய தகவல் திடுக்கிட வைத்தது.

அவரின்  உரிமம் வருகிற டிசம்பர் 2010 த்துடன்  முடிகிறது.

“அடப்பாவி! அப்படின்னா அஞ்சு வருஷமா இந்த படத்தை வச்சிட்டு என்னடா பண்ண?” என்ற மனத்தின் கேள்வியுடன் திரு.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தொலைப்பேசி தொடர்ப்பை துண்டித்தோம்.

கடந்த ஐந்து  வருடங்கள் படத்தை பற்றி  வெளி உலகிற்கு தெரியாமல்  படத்தை மூடக்கிவைத்ததற்கு விஸ்வாஸ் சுந்தர் என்ன காரணங்கள் சொன்னாலும் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் ஒருவேளை அவருக்கு படத்தை வெளியிடுவதில் நிதிப் பிரச்சனை இருந்தாலும் அதைப் பற்றி கூட தெரியப்படுத்தவிலை.

கூடுதல் தகவல்: நண்பர் ஒருவர் விஸ்வாஸ் சுந்தரை தொடர்பு கொண்டு படத்தை வெளிகொண்டுவர என்ன பிரச்சன்னை என்று கேட்டதற்கு “படத்தை வெளியிட தேவையான நிதியில்லை. நிதி இல்லாததால் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை போன்றோரை கூட அணுகியிருக்கிறேன். ஆனால் அவர்கள் முடியாது என்று கையை விரித்துவிட்டனர்” என்று செண்டிமெண்டலாக பேசியிருக்கிறார்.

ஆனால், இன்னொரு திரைத்துறை நண்பரிடம் விஸ்வா சுந்தர், திருமாவளவன்  45 இலட்சங்கள் வரை விலை பேசியதாகவும், செல்வபெருந்தகை 40 இலட்சங்கள் வரை தரத் தயாராக இருந்ததாகவும், ஆனால், இவர் 60 லட்சம் தந்ததால் படத்தை தருவதாகவும் சொல்லியிருக்கிறார்.

ஒரு படத்தை வினியோக்கிப்பாளர் வாங்குவது எதற்காக?

அதை வெளிகொண்டு வர கடன் வாங்கியோ, அல்லது எப்படியாவது  பணத்தை போட்டு வினியோகிப்பாளர்கள் படத்தை வெளியிடுவார்கள். ஆனால்  இவருக்கு 60 இலட்சங்களும் தேவையாம்! அப்படி 60 இலட்சங்கள் கிடைத்தால் தான் படம் வெளியிட முடியுமாம்!

அப்படியென்றால்  இவரால் ஒரு ரூபாய் கூட  போட முடியாதா?

அப்புறம்  என்னத்து இவர் படத்தின் உரிமை  வாங்கினார்?

இவருடைய நோக்கம் தான் என்ன?

தோழமையுடன்

வேந்தன்.

***

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடுவது தொடர்பான எங்களின் முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும்  தோழர்கள், தோழர் லெமூரியனை தொடர்புகொள்ளுங்கள்.

பா.லெமூரியன் – செல்பேசி: 9940475503

தொடர்புடைய கட்டுரைகள்:

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
அம்பேத்கர் என்னும் ஆபத்து
*
முற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது
*
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
*
இந்து என்றால் ஜாதி வெறியனா?

பாலியல் முதலாளி

விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிப்பது, ஆண்களின் பொறுக்கித் தனத்தை அங்கீகரிப்பதாகும் என்பதால்தான் நான் ‘பாலியல் தொழில்’ என்பதற்கு பதில் ‘விபச்சாரம்’ என்று குறிப்பிட்டேன்.’ என்று ஒரு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ‘விபச்சாரம் என்று குறிப்பிடுவது சரிதான். ஆனால் அதில் ஈடுபடுகிற பெண்களைபாலியல் தொழிலாளி என்று அழைப்பதுதானே மரியாதை. அதையும் ஏன் கூடாது என்கிறீர்கள்?

மீனாட்சி

விபச்சாரத்தில் ஈடுபடுகிற பெண் பாலியல் தொழிலாளி என்றால், அந்தப் பெண்ணிடம் பணம் கொடுத்து விபச்சாரம் செய்கிற ஆண் பாலியல் முதலாளியா?

***

தொடர்புடையவை:

பாலியல் தொழிலா? விபச்சாரமா?
*
ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்
*
பலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

ஓமோ செக்ஸ்… சூப்பர்டா மச்சான்…

 

‘பழைய ஏற்பாடு’ காலத்திலேயே இருந்த இந்த பழக்கத்தை ரொம்ப நவீனமானதுன்னு… புதுசா வந்து கட்டுடைக்கிறாங்களாம்.

. மார்க்ஸ் போன்றவர்கள் சில பெண்களுககு ஆதரவாக ஒரு கோஷ்டியாகவும், சூரியதீபன் போன்றவர்கள் அதுபோலவே சில பெண்களுக்கு  ஆதரவாக இன்னொரு கோஷ்டியாகவும் பிரிந்து மார்க்சியத்தின் பேரில் ஆதரிப்பது மகா மகா மோசடியானது. ஆபத்தானதுஎன்று இலக்கியத்தையும் கோட்பாட்டுக்குள் அடக்கி, அடுத்தவர்களின் சுதந்திரத்தில் தலையிடுகிற உங்களைப் போன்ற பாசிஸ்டுகள்தான் ஆபத்தானவர்கள்.

ஜெகதீஸ்.

முதலில் ‘பாசிசம்’ என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு, அந்த வார்த்தையை பயன்படுத்துங்கள். அரசியல் காரணமே இன்றி உங்களுக்குப் பிடிக்காத, உங்களால் பதில் சொல்லமுடியாத அளவிற்கு கேள்வி கேட்கிற, உங்களை கடுமையாக விமர்சிக்கிற நபர்களை திட்டுவதற்காக,  உங்களின் இயலாமையில் இருந்து வழக்கமாக கிளம்பி வருகிற ‘வெத்து’ வார்த்தையாக ‘பாசிசம்’ என்கிற சொல்லை பயன்படுத்தாதீர்கள்.

இப்படி சாதாரண விசயத்திற்கெல்லாம் ‘பாசிசம்’ என்ற சொல்லை பயன்படுத்துவது, இட்லர்-முசோலினி போன்ற பாசிஸ்டுகள் மனிதகுலத்திற்கு செய்த மாபெரும் தீமையை, கொடுமையை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமாகும்.

பாரதியின் பார்ப்பன இந்து உள்ளத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி, நான் எழுதிய , ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ என்ற புத்தகத்திற்கு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓர் கண்டன கூட்டம் நடத்தியது.

அதில் பேசிய பேராசிரியர் தொ. பரமசிவம், மதிமாறன் பாரதியை முற்றிலுமாக புறக்கணிக்கிறார். ஒரு விசயத்தை முற்றிலுமாக புறக்கணிப்பது பாசிசம். மதிமாறன் ஒரு பாசிஸ்ட்என்று பாசிசத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தார்.

கம்யூனிஸ்ட் மட்டும் அல்ல, ஒரு முதலாளித்துவ ஜனநாயகவதிகூட பாசிசத்தை ஒரு துளி அளவிற்கு கூட ஒத்துகொள்ள முடியாது. பாசிசத்தை முற்றிலுமாக புறக்கணிப்பது மட்டுமல்ல, எதிர்ப்பதுதான் ஒரு முற்போக்காளனுக்கு அழகு.

‘ஒரு விசயத்தை முற்றிலுமாக புறக்கணிப்பது, பாசிசம்’ என்கிற பேராசிரியர் தொ. பரமசிவனின் அளவுகோலோடு பார்த்தால், பாசிசத்தை முற்றிலுமாக புறக்கணிப்பவர்களையும் பாசிஸ்டுகள் என்று சொல்லிவேண்டிய கோமாளித்தனமான, ஆபத்தான முடிவுக்குத்தான் போக முடியும்.

ஆக, ‘பாசிசம்’ என்கிற சொல்லை மிகச் சாதாரணமாக பயன்படுத்துகிற அறியாமையை அல்லது தவறை திருத்திக் கொள்ளுங்கள்.

இலக்கியத்தை கோட்பாட்டுக்குள் அடக்குவதாக ஒரு குற்றம் சாட்டி என்னை பாசிஸ்ட் என்கிறீர்கள். ஆனால், பலான எழுத்தாளர்கள் கோட்டுபாடுகளையே குறிகளாக பார்க்கிறார்கள். அவர்களை என்னவென்று சொல்வீர்கள்?

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, பலருடன் பாலியல் லீலைகளில் ஈடுபடுவது இவைகள் எல்லாம் சமூகத்தில் புதிய பழக்கங்கள் அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தில் இருக்கிற பழக்கம்தான். இன்னும் சொல்லப் போனால், புனிதர்களாக கருதப்படுகிற துறவு வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட மதவாதிகள் ‘இதெல்லாம் சாமியார் வாழ்க்கையில் சாதாரணமப்பா..’ என்று இதுபோன்ற லீலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களைப் போல், நீங்கள்  ஓமோ செக்ஸில் ஈடுபடுங்கள். வரைமுறையற்று பலருடன் பாலியல் லீலைகளில் ஈடுபடுங்கள். அதில் கிடைக்கிற அனுபவத்தை உங்கள் கருத்தை ஒட்டிய நண்பர்களோடு ‘சூப்பர்டா… மச்சான்’ என்று கூட பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆனால், அவைகளை எழுத்துக்களாக்கி ‘கலக அரசியல்’ என்று முற்போக்கான சாயம் பூசி பொது புழக்கத்தில் விடும்போது, அவைகளுக்கும் ‘சூப்பர்டா மச்சான்’ என்கிற வகையிலேயே எல்லோரும் பாராட்ட வேண்டும்  என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

அதுகுறித்தான முறையான விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டும் என்பதுதானே அறிவு நாணயம். எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல விரும்பாத அல்லது முடியாத உங்களை, அந்தக் கேள்விகளோடோ சகித்துக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கிற தன்மையில்தான் இருக்கிறது பாசிசத்தின் கூறுகள்.

உங்களுக்கு கொசுறாக ஒரு தகவல் சொல்கிறேன். ‘வரலாற்றில் மக்கள் விரோதிகளாக மிக மோசமான பாத்திரம் வகித்தவர்களில் பலர், தங்களை ஓரினச் சேர்க்கையாளர்களாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு பாசிஸ்ட் முசோலினி ஓர் ஓரினச் சேர்க்கையாளன்.

*

ஏப்ரல்26, 2010 அன்று எழுதியது.

தொடர்புடையவை:

ஓரினச்சேர்க்கை: உறவல்ல, நோய்

பலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்

பலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2008/07/hu002881.jpg?w=474

மீப காலமாக ஆபாச எழுத்துக்களை கலக இலக்கியங்கள் என்றும், பெண்களால் எழுதப்படுகிற அவைகள் ஆணாதிக்கத்திற்கு எதிரானவைகள் என்றும் பிரகடனபடுத்துகிறார்கள் ஆண்கள். அப்படியானால், அதுபோலவே அல்லது அதைவிட மோசமாக ஆண்களால் எழுதப்படுபவைகளை என்னவென்று சொல்வார்கள்?

ஜாதிய உயர்வு தாழ்வுகளை நியாயப்படுத்தியும், பெண்களை இழிவானவர்களாக குறிப்பிட்டாலும், ‘மனு ஸ்மிருதி மிக சிறந்த தத்துவம், அரசியல் சட்டம்’ என்று பாராட்டுகிற பார்ப்பன இந்து வெறியைனைபோல்,

ஆண்-பெண் உறவு குறித்து எவ்வளவு இழிவாக எழுதினாலும் அதையும் இலக்கியம் என்று சொல்கிற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி ஒரு கூட்டம் இதுபோன்ற கழிசடை எழுத்துக்களை ஆதரிப்பதுகூட பிரச்சினை இல்லை. ஆனால், இவைகளை முற்போக்கானவையாக சித்தரிப்பது மோசடியானது.

அதையும் மார்க்கிசியத்தின் பேரில் செய்வது மகா மோசடியானது.

அ. மார்க்ஸ் போன்றவர்கள் சில பெண்களுககு ஆதரவாக ஒரு கோஷ்டியாகவும், சூரியதீபன் போன்றவர்கள் அதுபோலவே சில பெண்களுக்கு  ஆதரவாக இன்னொரு கோஷ்டியாகவும் பிரிந்து மார்க்சியத்தின் பேரில் ஆதரிப்பது மகா மாக மோசடியானது. ஆபத்தானது.

அ. மார்க்ஸ், சூரியதீபன் போன்றவர்கள் தங்களை பழைய எம்.எல் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த பழைய எம்.எல்களுக்கு இந்த ஆபாசத்தை ஆதரிப்பது மோசடியானது என்பதை தலைவர் லெனின் சொல்கிறார்.

ஜெர்மானிய கம்யூனிஸ்டான கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில் இதுபோன்ற கழிசடைகளை கண்டிக்கிறார் தலைவர் லெனின்.

2003 பிப்பரவரி மாதம் தலித்முரசு இதழுக்காக ஒரு முன்னுரையுடன் தலைவர் லெனின் இந்தப் பேச்சை எழுதி தந்தேன். அதே முன்னுரையுடன் இங்கே ஏற்கனவே பிரசுரிததிருக்கிறேன்.

இன்று (22-4-2010) தலைவர் லெனின் பிறந்தநாள் என்பதாலும் இன்றைய சூழலில் தலைவர் லெனினின் இந்த சாட்டை மீண்டும் தேவையானது என்பதாலும் என்னுடைய அதே முன்னுரையோடு மீண்டும் பிரசுரிக்கிறேன்.

கட்டுடைக்கிறார்கள் கடவுள்கள்

‘பாலியல் உறவுகள் பற்றி பகிரங்கமாக எழுதி கலகக் குரலை (முக்கல்-முனகலோ) ஏற்படுத்திக் கட்டுடைப்பது; ஆண்-பெண் பிறப்பு உறுப்புகளைப் போற்ற வேண்டும். உடலைக் குறித்து உயர் மதிப்பீடு வேண்டும். அப்போதுதான் சமூக அக்கறை கூடுதல் வலுப்பெறும்.’

‘ஓரினச் சேர்க்கை என்பது ஆணாதிக்கத்தைத் தகர்ப்பது. அது பெண்ணுரிமை அல்லது ஆணின் உரிமை’ இப்படி ‘மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேதான் இருக்கிறது’ என்பது மாதிரியான போக்கு – இன்றைய இலக்கிய, தத்துவ(?) சூழலில் நவீனத்துவத்திற்கும், பிந்தைய நவீனத்துவமாக இன்னும் வெவ்வேறு பெயர்களில் விளக்கப்படுகிறது.

இந்த உறுப்புகளின் உறவு குறித்தும், உறுப்புகளின் நலன் விசாரிப்புக் குறித்தும் தீவிரமாக எழுதுகிற இந்த ‘டிகிரி’ எழுத்தாளர்கள் – சரோஜாதேவியின் பிழைப்பைக் கெடுத்து, ‘பருவ காலம்’, ‘விருந்து’ இதழ்களின் விற்பனையை பாதித்திருக்கிறார்கள்.

ஆம், சரோஜாதேவி, ‘பருவகாலம்’, ‘விருந்து’  இவைகளின் இலக்கிய வடிவமே இந்த டிகிரி எழுத்தாளர்கள். சரோஜாதேவியும், ‘விருந்து‘ம் தடை செய்யப்பட்ட தலைமறைவு இயக்கப் பத்திரிகைகள்; எழுத்தாளர்கள் (UG Movement)

பிந்தைய நவீனத்துவ டிகிரி எழுத்தாளர்கள், பத்திரிகைகள், வெகுஜன இயக்கப் பிரச்சார பீரங்கிகள்!

சரி, இப்படி கட்டுடைத்துக் கலகம் செய்யும் எழுத்தை, தத்துவத்தை (?) மதங்கள் எப்படிப் பார்க்கின்றன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். (தத்துவத்திற்கு முன்னால் கேள்விக்குறி போட்டிருப்பது, ‘தத்துவங்களை எல்லாம் கேள்விக்குட்படுத்த வேண்டும்’என்ற பின் நவீனத்துவ பாணியில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக!)

இஸ்லாம்: இந்த பிந்தைய நவீனத்துவத்தை அல்லது வேறு, வேறு பெயர்களில் அழைக்கப்படுகிற இந்த ஆபாசத் தத்துவத்தை(?) தனது இடது காலால் எட்டி உதைக்கிறது.

கிறித்துவம்: கட்டுடைத்தலிடம் பழைய ஏற்பாடு கொஞ்சம் பாசம் காட்டினாலும், புதிய ஏற்பாடு ‘தூரப்போ சாத்தானே’ என்று விரட்டி அடிக்கிறது.

இந்து மதம்: கை கொட்டி சிரிக்கிறது. ‘அடப்பாவிகளா, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எங்க வேதத்திலேயும், புராணத்திலேயும், இதிகாசத்திலேயும் நாங்க கட்டுடைச்சதல பாதிகூட நீங்க உடைக்கல, அதுக்குள்ளே ரொம்ப பீத்திக்கிறீங்களே?’

‘எங்க பாஞ்சாலி அய்ந்து கணவர்களோட ஒரே வீட்டில் வாழ்ந்தாள்; எங்க பிரம்மா மானோட உறவு கொண்டார், மகளோடு உறவு கொண்டார்; மாமனும் மச்சானுமான சிவனும் – திருமாலும் செய்யாத ஓரினச் சேர்க்கையா நீங்க செஞ்சிடப் போறீங்க? அவுங்க ‘ஓமோ செக்ஸ்’ல ஈடுபட்டு ‘அய்யப்பன்’னு ஒரு சக்தி மிக்க புள்ளையையே பெத்தவங்க.

சிவனும் – பார்வதியும் ஆண் – பெண் குறிகளாக மாறி இன்னும் சிவலிங்கமாக இருந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறாங்க. எந்த மதத்திலாவது ஆண்-பெண் குறிகளை கும்புடுற, போற்றுகிற, கொண்டாடுகிற, மனம் உருகி வழிபடுகிற பழக்கம் உண்டா? குறிகளுக்கு முக்கியத்துவம் தந்த ஒரே மதம் இந்து மதம்தான்.

பெரிய புராணத்தில் வர எங்க இயற்பகை நாயனாரை, ஊரே கூடி உதைக்க வந்த போதும் அஞ்சாமல், தன் பொண்டாட்டிய சிவனடியாருக்கு கூட்டிக் கொடுத்தாரு. பொண்டாட்டிய கூட்டிக் கொடுக்கறதயும் மாமா வேலை பார்ப்பதையும் நியாயப்படுத்தி  விளிம்புநிலையில் இருக்கிற மாமக்களுக்கும் சமூகத்தில் மரியாதை தந்த ஒரே மதம் இந்து மதம்தான்.

கொழந்தையிலேயே கொய்யாப் பழமான திருஞான சம்பந்தரு, ‘கடவுள் இல்லைன்னு சொல்றவன் பொண்டாட்டிக் கூட நான் படுக்கனும்னு’ அற்புதமான தமிழால், ரொம்ப நாகரீகமாக பாட்டெழுதினாறு.

இன்னும் கோயில் சிற்பங்களில் உடல் உறவுக் காட்சிகளை தத்ரூபமாக சித்தரிச்சி, எங்க புனிதத்தை நாங்களை உடைச்சிருக்கோம். உலகத்தில வேறு எந்த மதக் கோயிலாவது இதை பார்க்க முடியுமா?

நீங்கள் என்ன பெரிய மஞ்சள் கலர் எழுத்தாளர்? எங்க ஆண்டாளு, ‘என் உடல் முழுதும் திருமாலுக்கே’ என பச்சைக் ‘கலர்ல’ பாட்டெழுதி இருக்காங்க.

இப்பவும் நவீனத்துவத்தோடு இருக்கிற மிகப் பழமை வாய்ந்த கலை, இலக்கியத்துக்கு வாரிசா இருக்கிற  எங்கள இருட்டடிப்புப் பண்ணிட்டு, எங்கோ இருக்கிற வெள்ளை கிறிஸ்தவனுங்களோட பேரை எல்லாம் சொல்லி, ரொம்ப புதுசு மாதிரி பிந்தைய நவீனத்துவம்னு பொய் சொல்லி இந்து மதப் பெருமைகளை இருட்டடிப்பு செய்றீங்களே, நியாயமா இது?’’ என்ற உரிமையோடு கோபப்படுகிறது இந்து மதம்.

ஆம். வேதத்தின், பார்ப்பனியத்தின் இந்த ஆபாசக் குவியலையும், ஒழுக்கக் கேட்டையும் கண்டித்து, புத்தர் ஒழுக்கத்தையும், நன்னடத்தையும் உயர்த்திப் பிடித்தார். அவர் வழி வந்த டாக்டர் அம்பேத்கரும் தலித் மக்களுக்கு கட்டளைகளாக ஒழுக்கத்தையும் – தூய்மையையும் வலியுறுத்தினார்.

கிராமங்களில் ஜாதி இந்துக்களின் முன்னால் வெள்ளையும் சொள்ளையுமாக தலித் மக்கள் போவதே, ஜாதி இந்துக்களின் ஜாதி திமிர்த்தனத்தை உடைப்பதாக இருக்கிறது. தேநீர்க் கடையில்தான் இரட்டை டம்ளர் முறை இருக்கிறது. சாராயக் கடையில் சகஜ நிலைதான். கல்யாணத்திற்குதான் ஜாதி பார்க்கிறார்கள். கள்ளக் காதலுக்கு ஜாதி பார்ப்பதில்லை.

சமூகம் எதையெல்லாம் கவுரவம் என்று கருதுகிறதோ, அங்கெல்லாம் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சமூகம் எதையெல்லாம் அகவுரவம் என்று கருதுகிறதோ அங்கெல்லாம் தலித் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது.

சாக்கடையை சுத்தப்படுத்துதல் போன்ற ‘அரச உத்தியோகத்திற்கு’ தலித் மக்களைத் தவிர வேறு யாரும் விண்ணப்பிப்பது கூட இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இந்த சமூகக் கட்டுகளை உடைத்துக் கொண்டு, தலித் மக்கள் உரிமைகளோடு எழும்போதே – ‘தன் கை மீறிப் போகிறார்கள்’ என்கிற பொறாமையே, வெறுப்பே, இயலாமையாக மாறி கோபமாக ஜாதி இந்துக்களிடம் வெளிப்படுகிறது.

இவற்றோடு, டாக்டர் அம்பேத்கர் சொன்ன ‘தூய்மை’ என்கிற சொல்லப் பொருத்திப் பார்த்தால், அது எவ்வளவு அர்த்தமுள்ள வலுவான சொல்லென்று விளங்கும்.

‘தூய்மை’ என்பதையே பாசிசம் என்கிறார்கள் கட்டுடைப்பவர்கள். ‘தூய்மை’ என்பது பாசிசம் அல்ல. ‘புனிதம்’ என்பதுதான் பாசிசம். ஒரு தலித் எவ்வளவு தூய்மையானவராக இருந்தாலும், புனிதராக (சங்கராச்சாரியாக) முடியாது. ஒரு பார்ப்பனர் எவ்வளவு அசுத்தமானவராக இருந்தாலும் அவரின் புனித்தத் தன்மை கெட்டுப்போகாது. அவர் மீது தீண்டாமையை திணிக்க முடியாது. இதுதான் இந்து பார்ப்பன மதம்.

தந்தை பெரியாரும், பக்திக்கு எதிரான நிலையில் ஒழுக்கத்தை நிறுத்தி, ‘ஒரு மனிதனுக்கு பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா? என்பதோடு பக்தி, தனிமனித, சமூக ஒழுக்கத்திற்கு எதிரானது என்று நிறுவினார்.

முற்போக்கு போர்வையில், சில நேரங்களில் மார்க்சியத்தின் பேரிலும் நடக்கிற இந்த ஆபாசக் கூத்தை, தலைவர் லெனின் கடுமையாகக் கண்டிக்கிறார், கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில்:

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2008/07/ih156245.jpg?w=474

‘‘ஆண் – பெண் உறவுகள் பற்றி வியன்னாவிலுள்ள ஒரு கம்யூனிஸ்ட் நூலாசிரியை எழுதியுள்ள புத்தகம், இங்கு மிகவும் பிரபலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் புத்தகம் எத்தகைய குப்பைக் கூளம்!

இந்த நூலில், ப்ராய்டின் சித்தாந்தம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது அறிவியல் மணம் இருப்பதைக் காட்டி ஏமாற்றவேயாகும், இந்த நூல் ஒரு கேவலமான குப்பையாகவே இருக்கிறது. ப்ராய்டின் சித்தாந்தம், இப்பொழுது ஒரு புது மோகம் போல இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் சாணிக்குவியலிலிருந்து இத்தனை செழிப்பாக முளைத்தெழுந்துள்ள – இங்கே குறிப்பிட்ட நூலிலும், இதைப் போன்ற நூல்கள், கட்டுரைகள், அறிவியல் பத்திரிகைகள் இவற்றில் வெளியிடப்பட்டுள்ள ஆண் – பெண் உறவு பற்றிய கொள்கைகள் பற்றியும் எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்தியப் பக்கிரி ஒருவன் தனது தொப்புளைப் பற்றியே தன் சுயநலத்தை நினைத்து கொண்டிருப்பது போல, எப்பொழுது பார்த்தாலும் ஆண் – பெண் உறவு பற்றிய பிரச்சினைகளில் இடைவிடாமல் மூழ்கிக் கிடப்பவர்களையும் நான் நம்பவில்லை. இவ்வாறு ஆண் – பெண் உறவிலேயே அளவுக்கு மீறி அபரிதமாகக் காணும் சித்தாந்தங்கள், பெரும்பாலும் உத்தேசங்கள் மட்டுமே. பெரும்பாலும் எதேச்சதிகாரமான போக்குகளே. இவை எல்லாம் சொந்தத் தேவையிலிருந்து எழுபவையேயாகும். முதலாளித்துவ ஒழுக்க முறையின் முன்னால், தனது அசாதாரணமான அளவு மீறிய ஆண் – பெண் உறவு வாழ்க்கையை நியாயப்படுத்துவதற்கும், தன்னோடு பிறர் சகிப்புத் தன்மை காட்ட வேண்டும் என்று கோரியுமே இவற்றை எழுப்புகின்றனர்.

ஆண் – பெண் உறவுகள் பற்றிய பிரச்சனைகளில் ஆழ முழுகிக்கிடப்பது எத்தனை வெறுக்கத்தக்கதாக இருக்கிறதோ, அதே போல முதலாளித்துவ ஒழுக்க முறைக்குத் திரைகட்டி மதிப்புக் கொடுக்க முயல்வதும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.

‘இந்த முயற்சி கலகமயமானது; புரட்சிகரமானது’ என்று வெளித்தோற்றத்தில் மிகையாகக் காணப்பட்டாலும், இறுதியாக இது முற்றிலும் முதலாளித்துவப் போக்கில் செல்வதாகவே அமையும். இந்தப் பொழுது போக்கு வேலையை சிறப்பாக அறிவு ஜீவிகளும் அவர்களது வர்க்கத்தோடு ஒட்டிய உறவுகள் வட்டத்தில் உள்ளவர்களுமே மிகவும் விரும்புகிறார்கள்.

பிரதானமான சமூகப் பிரச்சினையில் ஒரு பகுதியான ஆண் – பெண் உறவு, விவாகம் முதலிய பிரச்சினைகள் என்று மீண்டும் எடுத்துக் கொள்ள முடியாத ஒரு நிலைமையில்தான் இது கொண்டு போய்விடும். இதற்கு மாறாக, மிகப் பெரிய சமூகப் பிரச்சினை ஆண் – பெண் உறவுப் பிரச்சினையின் ஒரு பகுதியாகி அதன் அனுபந்தமாகக் கருதப்படும் நிலை ஏற்பட ஏதுவாகும். பிரதானமான பிரச்சனை பின்னணிக்குத் தள்ளப்பட்டு, இரண்டாந்தரப் பிரச்சினையாகிறது. இதனால் இந்தப் பிரச்சினையில் தெளிவு ஏற்படாமல் தவிப்பது மட்டுமல்ல, பொதுவாக சிந்தனையையே மூட்டமிட்டு மறைப்பதுடன் தொழிலாளி மற்றும் பெண்களின் வர்க்க பேதத்தையும் ஒளித்து மறைக்கும் நிலை நேருகிறது.

மேலும், ஒரு கருத்தை இங்கே குறிப்பிடுவது மிகையாக இருக்காது. ஒவ்வொன்றுக்கும் உரிய காலமுண்டு என்று அறிவாளியான சாலமன் நமக்குக் கூறியிருக்கிறார். தொழிலாளி மாதக் கணக்கில் ஒரேடியாக காதல் செய்வது எப்படி? காதலிக்கப்படுவது எப்படி? மணக்கக் கேட்பது எப்படி? என்ற விஷயங்களில் மும்முரமாக இறங்கச் செய்வதற்கு இதுதான் நேரமா?

முதலாளித்துவ சாயம் பூசிய முட்டைகளிலிருந்து வெளிவரும் மஞ்சள் மூக்கு குஞ்சுகள் மெத்தக் கெட்டிக்காரர்கள்தான். நமது வழிகளைத் திருத்திக் கொள்ளாமல் இந்த நிலைமையை ஏற்க வேண்டியது அவசியமே. ஆண் – பெண் உறவு பற்றிய நவீன விளக்கத்தின் விளைவாகவும், அதில் அளவு மீறிய அக்கறை காட்டியதாலும் இளைஞரியக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் துறவியின் புலனடக்கம் பற்றியும், குப்பைத் தனமான முதலாளித்துவ ஒழுக்க முறையின் புனிதத் தன்மையைப் பற்றியும் போதனை செய்வதை விடப் பொய்யான வேலை வேறு எதுவும் இல்லை. என்றாலும், இந்த நாட்களில் ஆண் – பெண் உறவுப் பிரச்சினைகள் இயற்கையான காரணங்களால் வலுக்கட்டாயமாக முன்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது இளைஞர் மனநிலையின் நடு அம்சமாக ஆகி வருகின்றன. இது நல்லதுதான் என்று ஒருவர் கூறுவது அரிது. இதன் விளைவுகள் சில நேரங்களில் படுநாசகரமானவையாக முடியும்.

ஆண் – பெண் வாழ்க்கை உறவு பற்றிய பிரச்சினைகளில் இளைஞர்களின் மாறுபட்ட போக்குகள், கொள்கையின் பேரிலுள்ள கோட்பாடு விஷயத்தை அடிப்படையாக்கியே எழுந்துள்ளன. பலர் தாம் எடுத்துக் கொண்டுள்ள நிலைமை ‘புரட்சிகரமானவை’ கம்யூனிஸ் நிலைமை’ என்று கூறுகிறார்கள். இது அப்படித்தான் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள்.

நான் ஒரு கிழவன். இதை என் மனது ஏற்கவில்லை. நான் எக்காரணம் கொண்டும் ஒரு துக்கம் நிறைந்த துறவியாக இல்லை. என்றாலும், இளைஞர்களின் இந்தப் ‘புதிய ஆண் – பெண் வாழ்க்கை’ என்று அடிக்கடி அழைக்கப்படும் இந்த விஷயத்தை, வயது வந்தோரும் அடிக்கடி சுட்டிக்காட்டுவது முற்றிலுமாக முதலாளித்துவப் போக்குள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் புரிந்து கொண்டுள்ள வகையில் சுதந்திரமான காதலின் சிறு சுவடு கூட இதில் இல்லை. கம்யூனிஸ்ட் சமூகத்தில் ஒருவர் தமது ஆண் – பெண் உறவு இன்பத்தை அனுபவிப்பதும், காதலுக்காக ஏங்குவதும், எல்லாம் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது போல சாதாரணமானது. சில்லறை வேலை என்று பெயர் போன கொள்கை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நமது இளைஞர்கள் இந்த ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கை பற்றியப் பித்தேறி – முழு பித்தேறி அலைகிறார்கள்.

இது, பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அழிவைத் தந்திருக்கிறது. இதனை வலியுறுத்துகிறவர்கள், இதுவும் மார்க்சிய சித்தாந்தம் என்று கூறுகின்றனர். சமூகத்திலுள்ள சித்தாந்த ரீதியான சகல போக்குகளையும் மாறுதல்களையும் நேரடியாக தவறவிடாமல், ஒரே ஒரு அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் இருப்பதாகக் கூறும் அத்தகைய மார்க்சியத்திற்கு நல்லது நடக்கட்டும். இது அத்தனை எளிதான விஷயமல்ல. இந்த உண்மையை, வரலாற்று இயல் பொருள் முதல் வாதம் தொடர்பான உண்மையை, நீண்ட நாட்களுக்கு முன்னால் பிரடரிக் ஏங்கெல்ஸ் நிரூபித்திருக்கிறார்.

பெயர்போனதான ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கையை நான் மார்க்சிஸ்ட் கொள்கை என்று கருதவில்லை. மாறாக, அது சமூக விரோதமானது என்று நினைக்கிறேன்.

ஆண் – பெண் வாழ்க்கையில் முக்கியமானது, இயற்கை உதவியுள்ள விஷயங்கள் மட்டுமல்ல, மேல் மட்டத்திலாயினும் சரி கீழ் மட்டத்திலாயினும் சரி, கலாச்சாரத்திலிருந்து வந்த கலவைப் பண்புகளும் முக்கியமானதாகின்றன. ஏங்கெல்ஸ் தனது ‘குடும்பத்தின் தொடக்கம்’ என்ற நூலில், சாதாரணமான ஆண் – பெண் காதலாக வளர்ச்சியடைந்து, உயர்ந்த தரத்தை எய்தியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆண் – பெண் இரு சாராரிடையே உள்ள உறவுகள், வெறும் சமூகப் பொருளாதாரத்திற்கும் உடலின் தேவைக்கும் இடையே உள்ள விளையாட்டு மட்டுமல்ல. இந்த உறவுகளில் ஏற்படும் மாறுதல்களை, தத்துவத்துடன் உள்ள தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தி சமூகத்தின் பொருளாதார அடிப்படையுடன் மட்டும் பொருத்துவது மார்க்சியமாகாது. அது பகுத்தறிவு வாதமாகும். தாகத்தை தணிக்க வேண்டியதுதான். ஆனால், எளிய மனிதன் சாதாரணமாக உள்ள நிலையில் சாக்கடைக்குள் படுத்து – ஒரு சேற்றுமடைத் தண்ணீரைக் குடிப்பானா? பல எச்சிற்படுத்திக் குடித்த கிளாசிலிருந்து குடிக்க விரும்புவானா?

சமூக அம்சம்தான் இதில் மிக மிக முக்கியமானது. தண்ணீர் குடிப்பது என்பது தனி ஒருவரின் விஷயம். ஆனால், காதல் செய்வதில் இரண்டு பேர் பங்கு கொள்கின்றனர். மூன்றாவது புது உயிர் பிறக்கிறது. இங்குதான் சமூக நல உரிமை கூட்டான அமைப்போடு உள்ள கடமை இவை எல்லாம் எழுகின்றன.

‘விடுதலை பெற்ற காதல்’ என்ற ஆழமான முத்திரையுடன் காணப்பட்ட பொழுதும் ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கையை ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் நான் விரும்பவில்லை. மேலும் இது புதிதுமல்ல, கம்யூனிசம் அடிப்படையானதுமல்ல.’’

***

கிளாராஜெட்கினின் ‘லெனின் நினைவுக்குறிப்புகள்’ என்ற நூலிலிருந்து.

தலித் முரசு பிப்ரவரி 2003 ல் எழுதியது, 1990 ஆம் ஆண்டு நான் நடத்திய ‘அக்கினிக்குஞ்சொன்று.. தாகம்’ என்ற இதழில், தலைவர் லெனின் இந்தப் பேச்சை, ‘ரஜினிஷ், ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற கழிசடைகள் பற்றி லெனின்’ என்று தலைப்பிட்டு பிரசுரித்திருந்தேன்.

தொடர்புடைய கேள்வி:

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு
*
ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்

‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்

இந்து சமூக அமைப்பு, சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தால் நீண்ட காலத்திற்கு முன்பே அது தூக்கியெறியப்பட்டிருக்கும். ஆனால், அது படிப்படியான சமத்துவமின்மையைக் கொண்டிருப்பதால், சூத்திரர்கள் பிராமணர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தீண்டப்படாதவர்கள் தங்களுடைய நிலைக்கு உயர்ந்து வந்துவிடுவதை சூத்திரர்கள் விரும்பவில்லை.

அவர்கள் தீண்டப்படாதவர்களுடன் சேர்ந்து சமூக முறைமையின் மேல் படிகளையெல்லாம் ஒரே மாதிரியாகக் கீழிறங்குவதைவிடத், தங்கள் மீது பிராமணர்கள் சுமத்துக்கின்ற அவமதிப்புகளைத் தாங்கிக் கொள்வதையே விரும்புகிறார்கள்.

இதன் விளைவாகத் தீண்டப்படாதவர்களின் போராட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து கொள்ள யாரும் இல்லை என்று ஆகிவிடுகிறது. அவர்கள் முற்றிலுமாகத் தனிமைப்பட்டு நிற்கிறார்கள். தனிமைப்பட்டிருப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு இயற்கையாகத் தோழமையாளர்களாக இருக்க வேண்டிய வகுப்புகளே அவர்களை எதிர்த்து நிற்கிறார்கள். இவ்வாறு தனிமைப்பட்டிருக்கும் நிலை தீண்டாமையை ஒழிப்பதற்கு மற்றொரு இடையுறாக உள்ளது.”

டாக்டர் அம்பேத்கர் அன்று சொன்னதை இன்றும் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஜாதி உணர்வுகொண்ட சராசரி சூத்திரர்களும், ‘ஜாதி உணர்வு எனக்கு கிடையாது’ என்கிற முற்போக்கு சூத்திரர்களும், பார்ப்பனர்களும்.

அண்ணலின் முகத்தோடு பெரியார் திராவிடர் கழகத்தினர்

தீண்டாதவர்களின் (தாழ்த்தப்பட்டவர்களின்) பரிதாபமான நிலையைக்கண்டு மனம் வருந்துவோர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போதுதீண்டாதவர்களுக்கு நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்எனறு ஓலமிடுவதை வழக்கமாகக் கேட்கிறோம். இந்தப் பிரச்சினையில் அக்கறையுள்ள எவரும்தீண்டத்தக்க இந்துவை (ஜாதி இந்துவை) மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்வோம்என்று சொல்லுவதைக் கேட்பது அரிது.”

என்றார் அண்ணல் அம்பேத்கர்.

டாக்டர் அம்பேத்கர் சொன்னதற்கு சாட்சியாக இன்றும் பல சூத்திர, பார்ப்பன அறிவாளிகள் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை பார்த்தால் மட்டும் தீண்டாமைக்கு எதிராக பேசுவது. தலித் இளைஞர்களால் நடத்தப்படுகிற பத்திரிகைகளில் மட்டும் அம்பேத்கரை புகழ்வது என்று ‘பெர்ப்பான்ஸ்’ தருகிறார்கள்.

மீண்டும் மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் போய் ‘அம்பேத்கர் மாபெரும் தலைவர்’ என்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் சூத்திர அறிவாளிகள். தாழ்த்தப்பட்ட மக்கள் அம்பேத்கரை புறக்கணிப்தோ, அவமதிப்பதோ கிடையாது. தங்களுக்கான தலைவராக அவரை சரியாக புரிந்து கொண்டுள்ளனர்.

ஆனால், சூத்திரர்களும், சூத்திர எழுத்தளார்கள் பலரும்தான் அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள். அவமதிக்கிறார்கள். ஆக,  டாக்டர் அம்பேத்கரை கொண்டுபோய் சேர்க்க வேண்டியது, பிற்படுத்தப்படடவர்களிடம்தான். அதுதான் ஜாதி எதிர்ப்பு அரசியலின் சரியான. நியாயமான முறை.

இப்படி பிற்படுத்தப்பட்டவர்களிடம் அம்பேத்கரை கொண்டு போய் சேர்க்கும் முயற்சியாக, பெரியார் திராவிடர் கழகத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருப்பதை கண்டித்து 13-4-2010 அன்று பெரியார் திராவிடர் கழகததினர் கோவையில் அம்பேத்கர் படம் கொண்ட முகமூடி அணிந்து ஆர்ப்பட்டம் நடத்தினர். ஆர்ப்பட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஆறுசாமி முன்னிலை வகித்தார்.

மறுநாள் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு (14-4-2010) ‘தலித் அல்லாதவர்களின் கவனத்திற்கு’ என்று சுவரொட்டி அடித்து கோவை முழுவதும் ஒட்டியிருக்கிறார்கள்.

ஒரு ஆண்டுக்கு முன்பே ‘நான் யாருக்கும் அடிமையில்லை – எனக்கடிமை யாருமில்லை’ என்ற வாசகத்தோடு அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட டி சர்ட்டை அணிந்து கொண்டு ஈழத் தமிழருக்குத் துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டு  கைதாகினர், கோவை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு ‘டாக்டர் அம்பேத்கர் திரைப்பட வெளியிட்டுக்குழு’ சார்ப்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

***

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடுவது தொடர்பான எங்களின் முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும்  தோழர்கள், தோழர் லெமூரியனை தொடர்புகொள்ளுங்கள்.

பா.லெமூரியன் – செல்பேசி: 9940475503

தொடர்புடைய கட்டுரைகள்:

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
அம்பேத்கர் என்னும் ஆபத்து
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது
*
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
*
இந்து என்றால் ஜாதி வெறியனா?

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி

டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளி கொண்டுவருவதற்காக பலர் முயற்சிக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரின் டி சர்ட் கொண்டு வந்த நாங்களும் அண்ணலின் திரைப்படத்தை வெளிகொண்டு வர  முயற்சிக்கிறோம். அந்தப் பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட தோழர்கள் வேந்தனும், லெமூரியனும். டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளிகொண்டுவரும் எங்களின் முயற்சியை இங்கு விவரித்து எழுதுகிறார் தோழர் லெமூரியன்.

***

07.03.2010 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு ஓரத்தில் காலை 11மணியளவில் தோழர் மதிமாறன் முயற்சியில் ஒரு சிறிய கலந்துரையாடல். கலந்துகொண்டவர்கள், தோழர்கள் சசி, வேந்தன், ஈழம் வெல்லும், மகிழ்நன், மற்றும் நான் (லெமூரியன்)

தமிழகத்தில் வெளியிடப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் ஏன் வெளியிடப்படவில்லை? அதற்கு நாம் என்ன செய்வது? என்று விவாதித்தோம்.

பல முறைகளில் முயற்சிகள் செய்வது என்று முடிவெடுத்தோம். அதில் முதன்மையான முயற்சியாக தேசிய திரைப்பட துறையிடம் (N.F.D.C) அம்பேத்கர் திரைப்படம் குறித்த விவரங்களை கேட்பது, தமிழகத்தில் வெளியிடப்படாமல் இருப்பதற்கான காரணங்களை கேட்டு, அதை ஒரு புகாராக எழுதி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், 31-03-2010 அன்று  தோழர்கள் வே. மதிமாறன் சசி, வேந்தன், சுவன், நிதி, அசோக், விவேக் மற்றும் நான்(லெமுரியன்) உட்பட நண்பர்கள் எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக (N.F.D.C) மேலாளரை சந்தித்தோம்.

ஆங்கிலத்தில் ROOTING என்ற வார்த்தை உண்டு. ‘நம்மால் முடியும் ஆனால் அதை செய்யக்கூடாது’ என்று தீர்மானித்துவிட்டால் அதை தாமதப்படுத்த இந்த ROOTING முறை சிறந்த வழியாகும். அதை திரைப்பட வளர்ச்சிகழக மேலாளர் செவ்வனே செய்ய முயற்ச்சித்தார்.

ஆனால் தோழர்கள் விடுவதாய் இல்லை. ‘விளக்கம்தான் பெற வந்தோம்’ என்ற தொனியில் அடுக்கடுக்காய் எடுத்து வைத்த கேள்விகளினால் மேலாளருக்கு மேல்மூச்சி வாங்கியதை உணர முடிந்தது.

முதலில் உங்கள் புகாரை மேலிடத்திற்கு அனுப்புகிறேன் அவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும் என்று அம்பேத்கர் படத்தை பற்றி எதுவுமே தெரியாதவர்போல் பேச ஆரம்பித்தவர், தோழர்களின் வலிமையான கேள்விக்குப்பின், அந்தப் படத்தை ஐந்து முறை நான் பார்த்திருக்கிறேன் சிறந்த படம் என்று அசடு வழிந்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

அம்பேத்கர் படம் பற்றிய விவரங்களை மும்பை தலைமை அலுவலகத்திடம் இருந்துதான் பெற முடியும் என்றார். மேலும் இதன் விநியோக உரிமையை சென்னையில்தான் யாரோ!  வைத்திருப்பதாக சந்தேகமாக சொல்வது போல் சொன்னார்.

அவர் யாரோ அல்ல. அவர் பெயர் விஷ்வா அவரிடம் பேசினோம். பணம் இருந்தால் இந்தப்படத்தை வெளியிட்டுவிடலாம். பணம் மட்டுமே இந்த படம் வெளியாக தடையாய் உள்ளது என்றார் விஷ்வா.” என்று நாங்கள் சொன்னதை சின்ன முகமாற்றத்தோடு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் N.F.D.C மேலாளர்.

சரி, பணம்தான் பிரச்சினை என்றால், விஷ்வா சுந்தர் என்ற தனிநபரை நம்பி எப்படி பண உதவி செய்யமுடியும்? எவ்வளவு தொகை தேவைப்படும்? அதற்கு என்ன வரையறை? அவர் பெரும் லாப நோக்கமற்றுதான் அந்தத் தொகையை சொல்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்டோம்.

சற்றும் எதிர்பாராத இந்த விவரங்களால் தடுமாறிய மேலாளர் பின்பு சுதாரித்து உதிர்த்த வார்த்தை VISHVAA SUNDAR (முழுப்பெயர் தெரிந்திருக்கிறது) IS A GOOD DISTRIBUTOR, HE RELEASED MANY FILMS” என்று சப்பை கட்டு கட்டினார்.

அவர் ஒரு வியாபார ரீதியிலான பெரிய விநியோகஸ்தர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் என்பதை நாங்களும் அறிவோம். இந்தப் படம் வியாபார ரீதியாக பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியாது என்பது அவருக்கு நன்றாக முன்பே தெரிந்து இருக்கும். அப்படி இருந்தும் அம்பேத்கர் படத்தை N.F.D.C யிடம் இருந்து அவர் வாங்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு வேளை அவர் தீவிரமான அம்பேத்கரிஸ்டா என்றால், அதுவும் இல்லை. அவர் ஒரு ANTI AMBEDKARIST. அதாவது அவர் ஒரு தீவிரமான இந்துமத உணர்வாளர். (பார்ப்பனர்)

டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வேறு யாரும் வாங்கி விடக்கூடாது. வேறு யாரும் வாங்கினால் இதை வெளியிட்டுவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இதை அவர் வாங்கியிருப்பாரோ என்று சந்தேகிக்கிறோம்.

இதுபோன்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக, விஷ்வா சுந்தர் இதுவரை அம்பேத்கர் படம் சம்பந்தமான எந்த ஒரு சிறிய விளம்பரமோ ஏன் ஒரு துண்டறிக்கையோ, சின்ன பத்திரிகைச் செய்தியோ  கூட வெளியிடவில்லை.

எனவே இதில் பணம் மட்டும் பிரச்சினை அல்ல எதோ உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கிறோம். இதுவரை படத்தை வெளியிடாததற்கான காரணத்தை, அதைப் பற்றி விளம்பர படுத்தாதற்கான காரணத்தை நீங்கள் (N.F.D.C) விஷ்வா சுந்தரிடம் கேட்டிர்களா? அதற்கு அவர் என்ன விளக்கம் கொடுத்தார்?” இப்படி எங்கள் கேள்விகளை N.F.D.C மேலாளர் முன் அடுக்கினோம்.

மேலாளர் “Good Question” என்று சொல்லிவிட்டு அமைதிகாத்தார். பிறகு

Mr. RAMAKRISHNAN

MANAGER OF DOMESTIC DISTRIBUTION.

என்பவரின் தொடர்பு எண்ணை அளித்து, இவரை தொடர்புகொண்டால் உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும் என்றார்.

மேலும் நமது தொலைபேசி எண்ணையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். நாம் அளித்த புகாரையும் மேலிடம் அனுப்பி விவரம் பெற ஆவன செய்வதாக ஒப்புக்கொண்டார். மனு அளித்ததற்கான ஒப்புதலை பெற்றுக்கொண்டு அவரிடம் இருந்து விடைபெற்றோம்.

சசி, அசோக்,லெமூரியன், வேந்தன், விவேக், கலாநிதி, சுவன், மதிமாறன் (N.F.D.C அலுவலகத்திற்கு முன்)

வெளியில் வரும்போது அவரது சட்டையையும்  மீறி துரித்து தெரிந்த  மேலாளரின் பூணூல் எங்களுக்கு ஏதோ உறுத்தலை தந்தது.

மேலும் இதற்கான முயற்சிகளை வேகப்படுத்திகொண்டிருக்கிறோம் விரைவில் வெற்றியும் பெறுவோம்..

நன்றி.

தோழமையுடன்,

பா.லெமூரியன்

தொடர்புக்கு: 9940475503

(முன்னதாக கரூர் வழக்கறிஞர் ராசேந்திரனின் எண்ணை தவறுதலாக கொடுத்துவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். அதை சரி செய்து லெமூரியனின் சரியான எண்ணை தந்திருக்கிறேன்.)

தொடர்புடைய கட்டுரைகள்:

‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது
*
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
*
இந்து என்றால் ஜாதி வெறியனா?

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்

சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்ற கழிசடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆதரவாகவும் எதிராகவும் எழுதுகிற பலர் அந்த இரு கழிசடைகளையும் விரும்பி படிக்கிற அல்லது தீவிரமாக  படிக்கிற அளவிற்குக்கூட அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் படிப்பதில்லை.

இன்னும் பலர் பெரியாரையும் டாக்டர் அம்பேத்கரையும்  படிப்பதில்லை என்பது மட்டுமல்ல, இருவரையும் பொதுப்புத்தியளவில் மட்டுமே புரிந்து கொண்டு அவர்களை கடுமையாக விமர்சிக்கிற ஆபத்து நிறைந்த மூடர்களாகவும் இருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் முழுவதும் புத்தக வடிவம் பெறாதது பெரிய சோகம்.

டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்கள், பேச்சுக்கள் முழுவதும் புத்தக வடிவமான பிறகும் அதை வாங்குவதற்கு ஆளில்லையே என்பது அதைவிட பெரிய சோகம்.

பிரபல எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, முற்போக்காளர்களாக இருக்கிற பலபேரிடம் அண்ணல் அம்பேத்கரை படித்ததற்கான அறிகுறிகள் சுத்தமாக இல்லை அல்லது மிக மிக சொற்ப அளவில் அற்பத்தனமான புரிதலோடு இருக்கிறது.

சில எழுத்தாளார்கள், பேச்சாளர்கள், பத்திரிகையாளர்களிடம் ‘டாக்டர் அம்பேத்கர் எழுத்துக்களை, பேச்சுக்களை ஏன் படிக்கவேண்டும்? இந்து சமூக அமைப்பை அம்பேத்கர் எப்படி துல்லியமாக, நேர்மையாக அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறார் என்று விவரித்து, அவசியம் அம்பேத்கரை நீங்கள் படிக்க வேண்டும், அவரை பற்றி எழுத வேண்டும், பேச வேண்டும் என்று நான் பல முறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு சிலருக்கு புத்தகமும் வாங்கித் தந்திருக்கிறேன். என்னிடம் ‘சரி, சரி’ என்று மண்டையை ஆட்டிவிட்டு,  மீண்டும் பழைய மாதிரியே ஒரே இடத்தில் சுத்தி சுத்தி வந்து செக்காட்டுகிறார்கள்.

அதிக வார்த்தை விரயங்களோடு, அலுப்பூட்டும் நடையில் எழுதும் ‘நவீன’ எழுத்தாளர்கள்,  ஊர் பேர் தெரியாத புதுசா எவனையாவது ஒரு வெளிநாட்டுக்காரன கண்டுபுடுச்சி சிலாகித்து எழுதுவதன் மூலம் தன்னை பெரிய அறிவாளியாக காட்டிக் கொள்கிறவர்கள், உலக அறிவாளிகளில் முக்கியமானவராக திகழ்கிற டாக்டர் அம்பேத்கரை பற்றி ஒருவார்த்தைக் கூட குறிப்பிடுவதில்லை. அவரை குறிப்பிட்டால் இவர்களின் நவீன தன்மை, தரமிழந்து தீட்டாயிடும்போல.

பத்து பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலைசெய்தவனை கருணாமூர்த்தி என்று சொல்வதுபோல், ஆயிரம் ஆண்டுகால  தீண்டாமையை தீவிரமாக கடைபிடிக்கிறவர்களுக்கு பேரு நவீன எழுத்தளார்களாம்!

உலக நியாயம் எல்லாம் பேசுகிற ‘ஞாநி’ போன்ற பிற்போக்காளர்கள் சும்மா பொய்யாக நடிப்பதற்குக் கூட அண்ணல் அம்பேத்கரை குறித்து ஒரு வார்த்தைகூட குறிப்படுவதில்லை. ‘அம்பேத்கரை எனக்கு பிடிக்காது’ என்று எழுதினால்கூட ‘அம்பேத்கர்’ பெயரை குறிப்பிட வேண்டி வருமே என்பதற்காகவே அதை தவிர்க்கிறார் போலும்.

ஜாதி ஆதிகத்திற்கு எதிராக எழுதுகிற, பேசுகிற எவரும் அண்ணல் அம்பேத்கரை படிக்காமல் செயல்படுவது முறையற்றது என்பது மட்டுமல்ல, அது அறிவற்றதும், அயோக்கியத்தனமானதும்கூட.

அண்ணல் அம்பேத்கரை ‘அவர்தானே’ என்று முன்முடிவோடு, அலட்சியமாக தவிர்க்கிற ‘முற்போக்காளர்’களிடமும், ‘அம்பேத்கரா? அட அவரு எதுக்குங்க நமக்கு?’ என்று  புறக்கணிக்கிற ஜாதி வெறியர்களிடமும், மாபெரும் ஆய்வாளரும், மாமேதையுமான அம்பேத்கரை தீவிரமாக கொண்டு சேர்க்க வேண்டும். அண்ணலின் சிந்தனைகள் அவர்களின் ஜாதி வெறி உள்ளத்திற்கு மாற்றாக அமையும் அல்லது அவர்களின் ஜாதிவெறியை அம்பலப்படுத்தும்.

அண்ணல் அம்பேத்கரின் 119 பிறந்த நாளில் முற்போக்காளர்களிடமும் ‘நுட்பமான’ வடிவில் மறைந்திருக்கும் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம்.

தொடர்புடைய கட்டுரைகள்:

அம்பேத்கர் என்னும் ஆபத்து
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது
*
 
 
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
 
*
இந்து என்றால் ஜாதி வெறியனா?

போலி மருந்து:பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை குடி வைச்சக் கதை

மனிதர்களை தின்னும் மருந்து கம்பெனிகள்

போலி மருந்துகளைவிற்று கோடிகோடியாக பணம் சம்பாதித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. அரசின் இந்த அசுர வேகம் வியப்பளிக்கிறதே?

சதிஸ்

இந்த நடிவடிக்கை மக்கள் மீது உள்ள அக்கறையினால் அல்ல. அப்படியானால் உணவுப் பொருட்களில் விஷத்தன்மையுள்ள பொருட்களை  கலப்படம் செய்கிறவன், உணவின்றி மக்கள் பட்டினியால் சாகும்போதும், உணவுப் பொருட்களை பதுக்கி வைக்கிறவன் இவர்கள் மீதும் இதே வேகத்தை காட்டியிருக்கவேண்டும்.

போலி மருந்துகளினால், வர்த்தக ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறவர்கள் பன்னாட்டு கம்பெனிகளும், இந்தியப் பெரு முதலாளிகளும்தான்.

மிகப் பெரும்பான்மையான மருந்துகளில் ஒரு மாத்திரையின் தயாரிப்பு செலவு, சில பைசாக்களிலேயே முடிந்துவிடுகிறது. ஆனால், மக்களிடம்  நூறு மடங்கு லாபம் வைத்துதான் விற்கப்படுகிறது. இதில் மிகப் பெரிய கொள்ளை அடிப்பவர்கள், பன்னாட்டு கம்பெனிகளும், உலகப் பெரும் பணக்காரர்களான இடைத்தரகர்களும்தான். போலி மருந்துகளினால், பன்னாட்டு கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு பிரச்சினை என்பதால்தான் இந்த வேகம்.

குறிப்பிட்ட மருந்துகளை சாப்பிட்டால் அது தற்காலிகமாக நிவாரணம் தரலாம். ஆனால், மிக கடுமையான  உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்கா, அய்ரோப்பா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட ஏராளமான மருந்துகள், மிக தாராளமாக இந்திய அரசு அனுமதியோடு கொள்ளை லாபம் வைத்து இந்திய நோயாளிகளின் வயிற்றில் புதைக்கப்படுகிறது.

அரசு அனுமதியோடு முறையாக மருந்துக்கடைகளில் விற்கப்படுகிற பல மருந்துகளே போலி மருந்துகள் தான் என்பதை தெரிந்துகொண்ட சமூகவிரோதிகளான சில மருந்து வியாபாரிகள், காலவதியான மருந்துகளை குப்பைகளில் இருந்து பொறுக்கி  விற்று இருக்கிறார்கள்.

போலி மருந்துகளைத் தேடி எல்லா இடங்களிலும் சோதனை போடுகிறார்கள் அதிகாரிகளும், காவல் துறையினரும். அரசு மருத்துவமனைகளில் போய் சோதனைப் போடடுப் பார்க்கட்டும். அங்கே தேவையான அளவிற்கு உயிர் காக்கும் அத்தியாவசியமான மருந்துகள் இல்லை. காலவதியான போலி மருந்துகள் கூட இல்லை.

அரசு மருத்துவமனைகளில், அவசர அறுவை சிகிச்சைக்கு அனுமதியாகிற நோயாளிகள் உரிய கருவிகள், மருந்துகள் இல்லாததால் பல மாதங்கள் மருந்துவமனையிலேயே சும்மா படுத்துக்கிடக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நோய் முற்றி மேலும் தொந்தரவு. ஏற்கனவே வறுமையின் துயரத்தில் இருக்கிற அவர்களுக்கு பல மாதங்களாக வேலைக்கும் போக முடியாமல் இருப்பதால், குடும்பமே ஒரு வேளை உணவிற்கு அவதி.

இப்படி பலரின் வாழ்க்கையை சீரழிக்கிற இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண, அதிக விலை வைத்து மருந்து கம்பெனிகள் அடிக்கிற கொள்ளையை தடுத்து, மருந்துகளை குறைந்த விலைக்கு விற்க மருந்து கம்பெனிகளுக்கு அரசு கடுமையான சட்டம் கொண்டுவரவேண்டும்.

நடுத்தர மக்களை மிகப் பெரிய அளவில் பாதிக்கிற ஆஸ்மா, சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இருதய நோய் போன்றவற்றிற்கான விலை அதிகம் உள்ள மிக முக்கியமான மருந்துகளை அரசே தயாரித்து மானியத்தின் மூலம் பாதிவிலைக்கு தர வேண்டும்.

அரசு மருந்துவமனைகளில் சிகிச்சை பெரும் எளிய மக்களுக்கு, எல்லா மருந்துகளும் இலவசமாக, உடனடியாக கிடைக்கச்  செய்யவேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள்தான் போலி மருந்துகளை ஒழிக்குமே தவிர, அதற்கு மாறாக வேறு எந்த நடவடிக்கையும் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, அந்த நடவடிக்கைகள் பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை கொண்டு வந்து குடி வைச்சக் கதையாகத்தான் ஆகும்.

முதலாளிகளும், தனியார் மருத்துவமனைகளும், தனிநபர்களும் கொள்ளையடிப்பதற்குத்தான் பயன்படும்.

இப்போ போலி மருந்து விக்கிற இந்த திருட்டுக் கும்பல புடுச்சி சிறையில் தள்ளுனா, இன்னொரு திருட்டுக் கும்பல் உருவாகமலா இருக்கும்? போலி மருந்து கும்பல கடுமையாக தண்டிக்கிறது எவ்வளவு சரியோ, அதைவிட மருந்து கம்பெனிகள் மருந்துகளின் விலையை குறைக்க அரசு கடுமையான நடிவடிக்கைகளை எடுப்பது ரொம்ப ரொம்ப சரி.

குப்பையில் இருந்து மருந்த பொறுக்குனா, கொஞ்நஞ்ச பணமா? கோடிக்கணக்கல இல்ல கிடைக்குது… இந்த மோசடியை செய்வதற்கு அடிப்படைக் காரணம், அந்த மருந்தோட உண்மையான ஒரிஜனல் அநியாய விலைதான்.

கடுமையான தண்டனைன்னு தெரிஞ்சும், சாரயத்திற்கே கள்ளச் சாரயம் போடுறான். மருந்துக்கு போலி மருந்து போடமா இருப்பானா? இது அதவிட லாபம். அதவிட ‘கவுரவமான’ வேலை.

இனி பணத்துக்காக எதையும் செய்ய துணிஞ்ச எவனும் இந்த மோசடியை செய்வான்.

தாய்மை விற்பனைக்கு

கையில் கத்தியுடன் வருவது வழிப்பறிக்காறர்கள் மட்டுமல்ல; டாக்டர்களும்கூடத்தான்

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

ஏற்கனவே பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டபோது  வெளியிட்டு இருக்கிறேன். மீண்டும் அதன் காரணத்திற்காகவே வெளியிடுகிறேன்.

***

கனவில் அவள் வந்தாள்
கனவிலும்
தூங்கிக் கொண்டிருந்த
என்னைத் தட்டியெழுப்பி
எனக்கொரு
பிரச்சினை என்றாள்.
.
நான்கு கைகளோடு நின்ற
அவளைக் கண்டு மிரண்டு,
யார் நீங்கள்? என்றேன்.
என் பெயர் காமாட்சி
ஊர் காஞ்சிபுரம் என்றாள்.
.
அய்யோ கடவுளா!
கடவுளுக்கே பிரச்சினையா?
ஆச்சரியத்தோடு
கணவனாலா என்றேன்.

கணவனால்
பிரச்சினை இல்லை
பிரச்சினைகளைப்
புரிந்து கொள்ளாமல்
கல்போல் நிற்பவன்
கணவனா என்றாள்.
.

புரியவில்லையே என்றேன்.

தினம் தினம்
நான் அவமானத்தால்
செத்துப் பிழைக்கிறேன்
என் பெண்மை
கேவலப்படுத்தப்படுகிறது
என்று உடைந்தாள்.

நான் பதட்டமாகிப் போனேன்
அய்யோ உங்களையா?
யார் அவன்? என்றேன்.

கோயில் குருக்கள் என்றாள்.

குருக்களா!
என்ன செய்தார் அவர்?
அதிர்ச்சியாகக் கேட்டேன்.
.
தினம் தினம்
கருவறையின் கதவுகளை
உட்பக்கமாக சாத்திக்கொண்டு
என்னை நிர்வாணப்படுத்தி அபிஷேகம்…
என்று சொல்லிக்
கொண்டிருக்கும்போதே
அவமானத்தால் கதறி விட்டாள்.
.
பின் நிதானித்து
குருக்கள் வாயில்
மந்திரம் இருக்கலாம்
மரியாதை இருக்கலாம்
ஆனால்
இதை
பெண்ணின் மனநிலையில்
புரிந்து கொள்
அவமானம் புரியும் என்றாள்.
.
சரிதான், ஆனால்
இதற்கு என்ன செய்ய முடியும்
என்றேன்-மிகுந்த வருத்தத்தோடு.

ச்சீ… இப்படிக் கேட்க
உனக்கு வெட்கமாக இல்லை?

உக்கிரமாகிப் போனாள் காமாட்சி

கோபத்தோட தொடர்ந்தாள்
எல்லாத் துறைகளிலும்
பெண்களுக்கு உரிமையும்
ஒதுக்கீடும் வேண்டும் என்று
கேட்கிறீர்களே
கோயில் கருவறைக்குள்
குருக்களாக
அர்ச்சகர்களாக
பெண்களை அனுமதித்தால்
உங்கள் புனிதம் என்ன
நாறி விடுமோ? என்று
காறித் துப்புவது போல் கேட்டு
நிலம் நடுங்க
சலங்கை உடைய
தீயைப் போல் போனாள்
காஞ்சி காமாட்சி

***

சமீபத்தில் (2006) சபரிமலை அய்யப்பன் பெண்களுக்கு எதிராக எடுத்த அவதாரத்தை முன்னிட்டு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

‘கர்ப்பக் கிரகத்திற்குள் பெண்கள் நுழைந்து விட்டார்கள்’ என்பதை ஏதோ சிலைத் திருடன் நுழைந்து விட்டான் என்பதை விடவும், கேவலமாக விவாதிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டார்கள், பெண்கள்.

(பெரியார் இதற்காகத்தான் சாமியை செருப்பாலடித்தார்)

நாடாளுமன்றத்தில் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 33% இட ஒதுக்கீடும் கிடைக்க இருக்கிறது. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் கூட உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையைத்தான் பெயரளவிலாவது முன் வைக்கிறார்கள்.

உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் `இதுல ஜாதியெல்லாம் பார்க்கக் கூடாது. முதலில் அமலாகட்டும்` என பெண்களுக்குள் ஜாதி வேறுபாடு இல்லாதது போல் பேசுகிறார்கள்.

ஒரு பெண் பிரதமராக முடிகிறது. அர்ச்சகராக முடிவதில்லை.உள் ஒதுக்கீடு கூட வேண்டாம். அர்ச்சகராவதற்கு முழுக்க முழுக்க அய்யர், அய்யங்கார் பெண்களை மட்டுமாவது அனுமதிப்பார்களா? நாடாள முடிகின்ற பெண்ணால்- கேவலம் அர்ச்சகராக முடியாதா?

சட்டம் சந்து பொந்துகளில் நுழைகிறது. சிலர் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து விடுகிறார்கள். ஆனால் கர்ப்பக் கிரகம் என்ற சந்துக்குள் எந்தச் சட்டம் நுழைய முடிகிறது?

பரந்து விரிந்த அந்த நாடாளுமன்றம் சின்ன கர்ப்பக் கிரகத்திற்கு முன் மண்டியிடுவது, பக்தியினால் அல்ல.

சுதந்திர இந்தியாவின் நவீன சட்டங்கள், மனுவின் சட்டங்களுக்கு முன் மண்டியிடுவதைப் போல.

நாடாளுமன்ற உறுப்பினர் என்பது அதிகாரம்.

கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது சுயமரியாதை.

அதிகாரத்தை விடவும், சுயமரியாதை முக்கியம் அல்லவா!

`தீட்டு` என்று காரணம் சொல்லி பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர்.

தந்தை பெரியார் கேட்டார்:

“மலம் கழித்துவிட்டு கோயிலுக்குள் வரலாம்.

மலத்தை விடவா, மாதவிலக்கு தீட்டு”

விழிப்புணர்வு,2006 நவம்பர் இதழுக்காக,  2002 தலித் முரசில் வெளியான கவிதையை, புதியதாக இந்தப் பின்னுரையோடு   எழுதி தந்தேன். இதன் தேவைக் கருதி மறுபிரசுரம் செய்த அதன் ஆசிரியர் கு. காமராஜ் அவர்களுக்கு நன்றி.