பலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2008/07/hu002881.jpg?w=1170

மீப காலமாக ஆபாச எழுத்துக்களை கலக இலக்கியங்கள் என்றும், பெண்களால் எழுதப்படுகிற அவைகள் ஆணாதிக்கத்திற்கு எதிரானவைகள் என்றும் பிரகடனபடுத்துகிறார்கள் ஆண்கள். அப்படியானால், அதுபோலவே அல்லது அதைவிட மோசமாக ஆண்களால் எழுதப்படுபவைகளை என்னவென்று சொல்வார்கள்?

ஜாதிய உயர்வு தாழ்வுகளை நியாயப்படுத்தியும், பெண்களை இழிவானவர்களாக குறிப்பிட்டாலும், ‘மனு ஸ்மிருதி மிக சிறந்த தத்துவம், அரசியல் சட்டம்’ என்று பாராட்டுகிற பார்ப்பன இந்து வெறியைனைபோல்,

ஆண்-பெண் உறவு குறித்து எவ்வளவு இழிவாக எழுதினாலும் அதையும் இலக்கியம் என்று சொல்கிற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி ஒரு கூட்டம் இதுபோன்ற கழிசடை எழுத்துக்களை ஆதரிப்பதுகூட பிரச்சினை இல்லை. ஆனால், இவைகளை முற்போக்கானவையாக சித்தரிப்பது மோசடியானது.

அதையும் மார்க்கிசியத்தின் பேரில் செய்வது மகா மோசடியானது.

அ. மார்க்ஸ் போன்றவர்கள் சில பெண்களுககு ஆதரவாக ஒரு கோஷ்டியாகவும், சூரியதீபன் போன்றவர்கள் அதுபோலவே சில பெண்களுக்கு  ஆதரவாக இன்னொரு கோஷ்டியாகவும் பிரிந்து மார்க்சியத்தின் பேரில் ஆதரிப்பது மகா மாக மோசடியானது. ஆபத்தானது.

அ. மார்க்ஸ், சூரியதீபன் போன்றவர்கள் தங்களை பழைய எம்.எல் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த பழைய எம்.எல்களுக்கு இந்த ஆபாசத்தை ஆதரிப்பது மோசடியானது என்பதை தலைவர் லெனின் சொல்கிறார்.

ஜெர்மானிய கம்யூனிஸ்டான கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில் இதுபோன்ற கழிசடைகளை கண்டிக்கிறார் தலைவர் லெனின்.

2003 பிப்பரவரி மாதம் தலித்முரசு இதழுக்காக ஒரு முன்னுரையுடன் தலைவர் லெனின் இந்தப் பேச்சை எழுதி தந்தேன். அதே முன்னுரையுடன் இங்கே ஏற்கனவே பிரசுரிததிருக்கிறேன்.

இன்று (22-4-2010) தலைவர் லெனின் பிறந்தநாள் என்பதாலும் இன்றைய சூழலில் தலைவர் லெனினின் இந்த சாட்டை மீண்டும் தேவையானது என்பதாலும் என்னுடைய அதே முன்னுரையோடு மீண்டும் பிரசுரிக்கிறேன்.

கட்டுடைக்கிறார்கள் கடவுள்கள்

‘பாலியல் உறவுகள் பற்றி பகிரங்கமாக எழுதி கலகக் குரலை (முக்கல்-முனகலோ) ஏற்படுத்திக் கட்டுடைப்பது; ஆண்-பெண் பிறப்பு உறுப்புகளைப் போற்ற வேண்டும். உடலைக் குறித்து உயர் மதிப்பீடு வேண்டும். அப்போதுதான் சமூக அக்கறை கூடுதல் வலுப்பெறும்.’

‘ஓரினச் சேர்க்கை என்பது ஆணாதிக்கத்தைத் தகர்ப்பது. அது பெண்ணுரிமை அல்லது ஆணின் உரிமை’ இப்படி ‘மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேதான் இருக்கிறது’ என்பது மாதிரியான போக்கு – இன்றைய இலக்கிய, தத்துவ(?) சூழலில் நவீனத்துவத்திற்கும், பிந்தைய நவீனத்துவமாக இன்னும் வெவ்வேறு பெயர்களில் விளக்கப்படுகிறது.

இந்த உறுப்புகளின் உறவு குறித்தும், உறுப்புகளின் நலன் விசாரிப்புக் குறித்தும் தீவிரமாக எழுதுகிற இந்த ‘டிகிரி’ எழுத்தாளர்கள் – சரோஜாதேவியின் பிழைப்பைக் கெடுத்து, ‘பருவ காலம்’, ‘விருந்து’ இதழ்களின் விற்பனையை பாதித்திருக்கிறார்கள்.

ஆம், சரோஜாதேவி, ‘பருவகாலம்’, ‘விருந்து’  இவைகளின் இலக்கிய வடிவமே இந்த டிகிரி எழுத்தாளர்கள். சரோஜாதேவியும், ‘விருந்து‘ம் தடை செய்யப்பட்ட தலைமறைவு இயக்கப் பத்திரிகைகள்; எழுத்தாளர்கள் (UG Movement)

பிந்தைய நவீனத்துவ டிகிரி எழுத்தாளர்கள், பத்திரிகைகள், வெகுஜன இயக்கப் பிரச்சார பீரங்கிகள்!

சரி, இப்படி கட்டுடைத்துக் கலகம் செய்யும் எழுத்தை, தத்துவத்தை (?) மதங்கள் எப்படிப் பார்க்கின்றன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். (தத்துவத்திற்கு முன்னால் கேள்விக்குறி போட்டிருப்பது, ‘தத்துவங்களை எல்லாம் கேள்விக்குட்படுத்த வேண்டும்’என்ற பின் நவீனத்துவ பாணியில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக!)

இஸ்லாம்: இந்த பிந்தைய நவீனத்துவத்தை அல்லது வேறு, வேறு பெயர்களில் அழைக்கப்படுகிற இந்த ஆபாசத் தத்துவத்தை(?) தனது இடது காலால் எட்டி உதைக்கிறது.

கிறித்துவம்: கட்டுடைத்தலிடம் பழைய ஏற்பாடு கொஞ்சம் பாசம் காட்டினாலும், புதிய ஏற்பாடு ‘தூரப்போ சாத்தானே’ என்று விரட்டி அடிக்கிறது.

இந்து மதம்: கை கொட்டி சிரிக்கிறது. ‘அடப்பாவிகளா, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எங்க வேதத்திலேயும், புராணத்திலேயும், இதிகாசத்திலேயும் நாங்க கட்டுடைச்சதல பாதிகூட நீங்க உடைக்கல, அதுக்குள்ளே ரொம்ப பீத்திக்கிறீங்களே?’

‘எங்க பாஞ்சாலி அய்ந்து கணவர்களோட ஒரே வீட்டில் வாழ்ந்தாள்; எங்க பிரம்மா மானோட உறவு கொண்டார், மகளோடு உறவு கொண்டார்; மாமனும் மச்சானுமான சிவனும் – திருமாலும் செய்யாத ஓரினச் சேர்க்கையா நீங்க செஞ்சிடப் போறீங்க? அவுங்க ‘ஓமோ செக்ஸ்’ல ஈடுபட்டு ‘அய்யப்பன்’னு ஒரு சக்தி மிக்க புள்ளையையே பெத்தவங்க.

சிவனும் – பார்வதியும் ஆண் – பெண் குறிகளாக மாறி இன்னும் சிவலிங்கமாக இருந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறாங்க. எந்த மதத்திலாவது ஆண்-பெண் குறிகளை கும்புடுற, போற்றுகிற, கொண்டாடுகிற, மனம் உருகி வழிபடுகிற பழக்கம் உண்டா? குறிகளுக்கு முக்கியத்துவம் தந்த ஒரே மதம் இந்து மதம்தான்.

பெரிய புராணத்தில் வர எங்க இயற்பகை நாயனாரை, ஊரே கூடி உதைக்க வந்த போதும் அஞ்சாமல், தன் பொண்டாட்டிய சிவனடியாருக்கு கூட்டிக் கொடுத்தாரு. பொண்டாட்டிய கூட்டிக் கொடுக்கறதயும் மாமா வேலை பார்ப்பதையும் நியாயப்படுத்தி  விளிம்புநிலையில் இருக்கிற மாமக்களுக்கும் சமூகத்தில் மரியாதை தந்த ஒரே மதம் இந்து மதம்தான்.

கொழந்தையிலேயே கொய்யாப் பழமான திருஞான சம்பந்தரு, ‘கடவுள் இல்லைன்னு சொல்றவன் பொண்டாட்டிக் கூட நான் படுக்கனும்னு’ அற்புதமான தமிழால், ரொம்ப நாகரீகமாக பாட்டெழுதினாறு.

இன்னும் கோயில் சிற்பங்களில் உடல் உறவுக் காட்சிகளை தத்ரூபமாக சித்தரிச்சி, எங்க புனிதத்தை நாங்களை உடைச்சிருக்கோம். உலகத்தில வேறு எந்த மதக் கோயிலாவது இதை பார்க்க முடியுமா?

நீங்கள் என்ன பெரிய மஞ்சள் கலர் எழுத்தாளர்? எங்க ஆண்டாளு, ‘என் உடல் முழுதும் திருமாலுக்கே’ என பச்சைக் ‘கலர்ல’ பாட்டெழுதி இருக்காங்க.

இப்பவும் நவீனத்துவத்தோடு இருக்கிற மிகப் பழமை வாய்ந்த கலை, இலக்கியத்துக்கு வாரிசா இருக்கிற  எங்கள இருட்டடிப்புப் பண்ணிட்டு, எங்கோ இருக்கிற வெள்ளை கிறிஸ்தவனுங்களோட பேரை எல்லாம் சொல்லி, ரொம்ப புதுசு மாதிரி பிந்தைய நவீனத்துவம்னு பொய் சொல்லி இந்து மதப் பெருமைகளை இருட்டடிப்பு செய்றீங்களே, நியாயமா இது?’’ என்ற உரிமையோடு கோபப்படுகிறது இந்து மதம்.

ஆம். வேதத்தின், பார்ப்பனியத்தின் இந்த ஆபாசக் குவியலையும், ஒழுக்கக் கேட்டையும் கண்டித்து, புத்தர் ஒழுக்கத்தையும், நன்னடத்தையும் உயர்த்திப் பிடித்தார். அவர் வழி வந்த டாக்டர் அம்பேத்கரும் தலித் மக்களுக்கு கட்டளைகளாக ஒழுக்கத்தையும் – தூய்மையையும் வலியுறுத்தினார்.

கிராமங்களில் ஜாதி இந்துக்களின் முன்னால் வெள்ளையும் சொள்ளையுமாக தலித் மக்கள் போவதே, ஜாதி இந்துக்களின் ஜாதி திமிர்த்தனத்தை உடைப்பதாக இருக்கிறது. தேநீர்க் கடையில்தான் இரட்டை டம்ளர் முறை இருக்கிறது. சாராயக் கடையில் சகஜ நிலைதான். கல்யாணத்திற்குதான் ஜாதி பார்க்கிறார்கள். கள்ளக் காதலுக்கு ஜாதி பார்ப்பதில்லை.

சமூகம் எதையெல்லாம் கவுரவம் என்று கருதுகிறதோ, அங்கெல்லாம் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சமூகம் எதையெல்லாம் அகவுரவம் என்று கருதுகிறதோ அங்கெல்லாம் தலித் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது.

சாக்கடையை சுத்தப்படுத்துதல் போன்ற ‘அரச உத்தியோகத்திற்கு’ தலித் மக்களைத் தவிர வேறு யாரும் விண்ணப்பிப்பது கூட இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இந்த சமூகக் கட்டுகளை உடைத்துக் கொண்டு, தலித் மக்கள் உரிமைகளோடு எழும்போதே – ‘தன் கை மீறிப் போகிறார்கள்’ என்கிற பொறாமையே, வெறுப்பே, இயலாமையாக மாறி கோபமாக ஜாதி இந்துக்களிடம் வெளிப்படுகிறது.

இவற்றோடு, டாக்டர் அம்பேத்கர் சொன்ன ‘தூய்மை’ என்கிற சொல்லப் பொருத்திப் பார்த்தால், அது எவ்வளவு அர்த்தமுள்ள வலுவான சொல்லென்று விளங்கும்.

‘தூய்மை’ என்பதையே பாசிசம் என்கிறார்கள் கட்டுடைப்பவர்கள். ‘தூய்மை’ என்பது பாசிசம் அல்ல. ‘புனிதம்’ என்பதுதான் பாசிசம். ஒரு தலித் எவ்வளவு தூய்மையானவராக இருந்தாலும், புனிதராக (சங்கராச்சாரியாக) முடியாது. ஒரு பார்ப்பனர் எவ்வளவு அசுத்தமானவராக இருந்தாலும் அவரின் புனித்தத் தன்மை கெட்டுப்போகாது. அவர் மீது தீண்டாமையை திணிக்க முடியாது. இதுதான் இந்து பார்ப்பன மதம்.

தந்தை பெரியாரும், பக்திக்கு எதிரான நிலையில் ஒழுக்கத்தை நிறுத்தி, ‘ஒரு மனிதனுக்கு பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா? என்பதோடு பக்தி, தனிமனித, சமூக ஒழுக்கத்திற்கு எதிரானது என்று நிறுவினார்.

முற்போக்கு போர்வையில், சில நேரங்களில் மார்க்சியத்தின் பேரிலும் நடக்கிற இந்த ஆபாசக் கூத்தை, தலைவர் லெனின் கடுமையாகக் கண்டிக்கிறார், கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில்:

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2008/07/ih156245.jpg?w=1170

‘‘ஆண் – பெண் உறவுகள் பற்றி வியன்னாவிலுள்ள ஒரு கம்யூனிஸ்ட் நூலாசிரியை எழுதியுள்ள புத்தகம், இங்கு மிகவும் பிரபலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் புத்தகம் எத்தகைய குப்பைக் கூளம்!

இந்த நூலில், ப்ராய்டின் சித்தாந்தம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது அறிவியல் மணம் இருப்பதைக் காட்டி ஏமாற்றவேயாகும், இந்த நூல் ஒரு கேவலமான குப்பையாகவே இருக்கிறது. ப்ராய்டின் சித்தாந்தம், இப்பொழுது ஒரு புது மோகம் போல இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் சாணிக்குவியலிலிருந்து இத்தனை செழிப்பாக முளைத்தெழுந்துள்ள – இங்கே குறிப்பிட்ட நூலிலும், இதைப் போன்ற நூல்கள், கட்டுரைகள், அறிவியல் பத்திரிகைகள் இவற்றில் வெளியிடப்பட்டுள்ள ஆண் – பெண் உறவு பற்றிய கொள்கைகள் பற்றியும் எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்தியப் பக்கிரி ஒருவன் தனது தொப்புளைப் பற்றியே தன் சுயநலத்தை நினைத்து கொண்டிருப்பது போல, எப்பொழுது பார்த்தாலும் ஆண் – பெண் உறவு பற்றிய பிரச்சினைகளில் இடைவிடாமல் மூழ்கிக் கிடப்பவர்களையும் நான் நம்பவில்லை. இவ்வாறு ஆண் – பெண் உறவிலேயே அளவுக்கு மீறி அபரிதமாகக் காணும் சித்தாந்தங்கள், பெரும்பாலும் உத்தேசங்கள் மட்டுமே. பெரும்பாலும் எதேச்சதிகாரமான போக்குகளே. இவை எல்லாம் சொந்தத் தேவையிலிருந்து எழுபவையேயாகும். முதலாளித்துவ ஒழுக்க முறையின் முன்னால், தனது அசாதாரணமான அளவு மீறிய ஆண் – பெண் உறவு வாழ்க்கையை நியாயப்படுத்துவதற்கும், தன்னோடு பிறர் சகிப்புத் தன்மை காட்ட வேண்டும் என்று கோரியுமே இவற்றை எழுப்புகின்றனர்.

ஆண் – பெண் உறவுகள் பற்றிய பிரச்சனைகளில் ஆழ முழுகிக்கிடப்பது எத்தனை வெறுக்கத்தக்கதாக இருக்கிறதோ, அதே போல முதலாளித்துவ ஒழுக்க முறைக்குத் திரைகட்டி மதிப்புக் கொடுக்க முயல்வதும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.

‘இந்த முயற்சி கலகமயமானது; புரட்சிகரமானது’ என்று வெளித்தோற்றத்தில் மிகையாகக் காணப்பட்டாலும், இறுதியாக இது முற்றிலும் முதலாளித்துவப் போக்கில் செல்வதாகவே அமையும். இந்தப் பொழுது போக்கு வேலையை சிறப்பாக அறிவு ஜீவிகளும் அவர்களது வர்க்கத்தோடு ஒட்டிய உறவுகள் வட்டத்தில் உள்ளவர்களுமே மிகவும் விரும்புகிறார்கள்.

பிரதானமான சமூகப் பிரச்சினையில் ஒரு பகுதியான ஆண் – பெண் உறவு, விவாகம் முதலிய பிரச்சினைகள் என்று மீண்டும் எடுத்துக் கொள்ள முடியாத ஒரு நிலைமையில்தான் இது கொண்டு போய்விடும். இதற்கு மாறாக, மிகப் பெரிய சமூகப் பிரச்சினை ஆண் – பெண் உறவுப் பிரச்சினையின் ஒரு பகுதியாகி அதன் அனுபந்தமாகக் கருதப்படும் நிலை ஏற்பட ஏதுவாகும். பிரதானமான பிரச்சனை பின்னணிக்குத் தள்ளப்பட்டு, இரண்டாந்தரப் பிரச்சினையாகிறது. இதனால் இந்தப் பிரச்சினையில் தெளிவு ஏற்படாமல் தவிப்பது மட்டுமல்ல, பொதுவாக சிந்தனையையே மூட்டமிட்டு மறைப்பதுடன் தொழிலாளி மற்றும் பெண்களின் வர்க்க பேதத்தையும் ஒளித்து மறைக்கும் நிலை நேருகிறது.

மேலும், ஒரு கருத்தை இங்கே குறிப்பிடுவது மிகையாக இருக்காது. ஒவ்வொன்றுக்கும் உரிய காலமுண்டு என்று அறிவாளியான சாலமன் நமக்குக் கூறியிருக்கிறார். தொழிலாளி மாதக் கணக்கில் ஒரேடியாக காதல் செய்வது எப்படி? காதலிக்கப்படுவது எப்படி? மணக்கக் கேட்பது எப்படி? என்ற விஷயங்களில் மும்முரமாக இறங்கச் செய்வதற்கு இதுதான் நேரமா?

முதலாளித்துவ சாயம் பூசிய முட்டைகளிலிருந்து வெளிவரும் மஞ்சள் மூக்கு குஞ்சுகள் மெத்தக் கெட்டிக்காரர்கள்தான். நமது வழிகளைத் திருத்திக் கொள்ளாமல் இந்த நிலைமையை ஏற்க வேண்டியது அவசியமே. ஆண் – பெண் உறவு பற்றிய நவீன விளக்கத்தின் விளைவாகவும், அதில் அளவு மீறிய அக்கறை காட்டியதாலும் இளைஞரியக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் துறவியின் புலனடக்கம் பற்றியும், குப்பைத் தனமான முதலாளித்துவ ஒழுக்க முறையின் புனிதத் தன்மையைப் பற்றியும் போதனை செய்வதை விடப் பொய்யான வேலை வேறு எதுவும் இல்லை. என்றாலும், இந்த நாட்களில் ஆண் – பெண் உறவுப் பிரச்சினைகள் இயற்கையான காரணங்களால் வலுக்கட்டாயமாக முன்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது இளைஞர் மனநிலையின் நடு அம்சமாக ஆகி வருகின்றன. இது நல்லதுதான் என்று ஒருவர் கூறுவது அரிது. இதன் விளைவுகள் சில நேரங்களில் படுநாசகரமானவையாக முடியும்.

ஆண் – பெண் வாழ்க்கை உறவு பற்றிய பிரச்சினைகளில் இளைஞர்களின் மாறுபட்ட போக்குகள், கொள்கையின் பேரிலுள்ள கோட்பாடு விஷயத்தை அடிப்படையாக்கியே எழுந்துள்ளன. பலர் தாம் எடுத்துக் கொண்டுள்ள நிலைமை ‘புரட்சிகரமானவை’ கம்யூனிஸ் நிலைமை’ என்று கூறுகிறார்கள். இது அப்படித்தான் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள்.

நான் ஒரு கிழவன். இதை என் மனது ஏற்கவில்லை. நான் எக்காரணம் கொண்டும் ஒரு துக்கம் நிறைந்த துறவியாக இல்லை. என்றாலும், இளைஞர்களின் இந்தப் ‘புதிய ஆண் – பெண் வாழ்க்கை’ என்று அடிக்கடி அழைக்கப்படும் இந்த விஷயத்தை, வயது வந்தோரும் அடிக்கடி சுட்டிக்காட்டுவது முற்றிலுமாக முதலாளித்துவப் போக்குள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் புரிந்து கொண்டுள்ள வகையில் சுதந்திரமான காதலின் சிறு சுவடு கூட இதில் இல்லை. கம்யூனிஸ்ட் சமூகத்தில் ஒருவர் தமது ஆண் – பெண் உறவு இன்பத்தை அனுபவிப்பதும், காதலுக்காக ஏங்குவதும், எல்லாம் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது போல சாதாரணமானது. சில்லறை வேலை என்று பெயர் போன கொள்கை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நமது இளைஞர்கள் இந்த ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கை பற்றியப் பித்தேறி – முழு பித்தேறி அலைகிறார்கள்.

இது, பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அழிவைத் தந்திருக்கிறது. இதனை வலியுறுத்துகிறவர்கள், இதுவும் மார்க்சிய சித்தாந்தம் என்று கூறுகின்றனர். சமூகத்திலுள்ள சித்தாந்த ரீதியான சகல போக்குகளையும் மாறுதல்களையும் நேரடியாக தவறவிடாமல், ஒரே ஒரு அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் இருப்பதாகக் கூறும் அத்தகைய மார்க்சியத்திற்கு நல்லது நடக்கட்டும். இது அத்தனை எளிதான விஷயமல்ல. இந்த உண்மையை, வரலாற்று இயல் பொருள் முதல் வாதம் தொடர்பான உண்மையை, நீண்ட நாட்களுக்கு முன்னால் பிரடரிக் ஏங்கெல்ஸ் நிரூபித்திருக்கிறார்.

பெயர்போனதான ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கையை நான் மார்க்சிஸ்ட் கொள்கை என்று கருதவில்லை. மாறாக, அது சமூக விரோதமானது என்று நினைக்கிறேன்.

ஆண் – பெண் வாழ்க்கையில் முக்கியமானது, இயற்கை உதவியுள்ள விஷயங்கள் மட்டுமல்ல, மேல் மட்டத்திலாயினும் சரி கீழ் மட்டத்திலாயினும் சரி, கலாச்சாரத்திலிருந்து வந்த கலவைப் பண்புகளும் முக்கியமானதாகின்றன. ஏங்கெல்ஸ் தனது ‘குடும்பத்தின் தொடக்கம்’ என்ற நூலில், சாதாரணமான ஆண் – பெண் காதலாக வளர்ச்சியடைந்து, உயர்ந்த தரத்தை எய்தியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆண் – பெண் இரு சாராரிடையே உள்ள உறவுகள், வெறும் சமூகப் பொருளாதாரத்திற்கும் உடலின் தேவைக்கும் இடையே உள்ள விளையாட்டு மட்டுமல்ல. இந்த உறவுகளில் ஏற்படும் மாறுதல்களை, தத்துவத்துடன் உள்ள தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தி சமூகத்தின் பொருளாதார அடிப்படையுடன் மட்டும் பொருத்துவது மார்க்சியமாகாது. அது பகுத்தறிவு வாதமாகும். தாகத்தை தணிக்க வேண்டியதுதான். ஆனால், எளிய மனிதன் சாதாரணமாக உள்ள நிலையில் சாக்கடைக்குள் படுத்து – ஒரு சேற்றுமடைத் தண்ணீரைக் குடிப்பானா? பல எச்சிற்படுத்திக் குடித்த கிளாசிலிருந்து குடிக்க விரும்புவானா?

சமூக அம்சம்தான் இதில் மிக மிக முக்கியமானது. தண்ணீர் குடிப்பது என்பது தனி ஒருவரின் விஷயம். ஆனால், காதல் செய்வதில் இரண்டு பேர் பங்கு கொள்கின்றனர். மூன்றாவது புது உயிர் பிறக்கிறது. இங்குதான் சமூக நல உரிமை கூட்டான அமைப்போடு உள்ள கடமை இவை எல்லாம் எழுகின்றன.

‘விடுதலை பெற்ற காதல்’ என்ற ஆழமான முத்திரையுடன் காணப்பட்ட பொழுதும் ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கையை ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் நான் விரும்பவில்லை. மேலும் இது புதிதுமல்ல, கம்யூனிசம் அடிப்படையானதுமல்ல.’’

***

கிளாராஜெட்கினின் ‘லெனின் நினைவுக்குறிப்புகள்’ என்ற நூலிலிருந்து.

தலித் முரசு பிப்ரவரி 2003 ல் எழுதியது, 1990 ஆம் ஆண்டு நான் நடத்திய ‘அக்கினிக்குஞ்சொன்று.. தாகம்’ என்ற இதழில், தலைவர் லெனின் இந்தப் பேச்சை, ‘ரஜினிஷ், ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற கழிசடைகள் பற்றி லெனின்’ என்று தலைப்பிட்டு பிரசுரித்திருந்தேன்.

தொடர்புடைய கேள்வி:

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு
*
ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்

13 thoughts on “பலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

 1. //‘எங்க பாஞ்சாலி அய்ந்து கணவர்களோட ஒரே வீட்டில் வாழ்ந்தாள்; எங்க பிரம்மா மானோட உறவு கொண்டார், மகளோடு உறவு கொண்டார்; மாமனும் மச்சானுமான சிவனும் – திருமாலும் செய்யாத ஓரினச் சேர்க்கையா நீங்க செஞ்சிடப் போறீங்க? அவுங்க ‘ஓமோ செக்ஸ்’ல ஈடுபட்டு ‘அய்யப்பன்’னு ஒரு சக்தி மிக்க புள்ளையையே பெத்தவங்க.

  சிவனும் – பார்வதியும் ஆண் – பெண் குறிகளாக மாறி இன்னும் சிவலிங்கமாக இருந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறாங்க. எந்த மதத்திலாவது ஆண்-பெண் குறிகளை கும்புடுற, போற்றுகிற, கொண்டாடுகிற, மனம் உருகி வழிபடுகிற பழக்கம் உண்டா? குறிகளுக்கு முக்கியத்துவம் தந்த ஒரே மதம் இந்து மதம்தான்.

  பெரிய புராணத்தில் வர எங்க இயற்பகை நாயனாரை, ஊரே கூடி உதைக்க வந்த போதும் அஞ்சாமல், தன் பொண்டாட்டிய சிவனடியாருக்கு கூட்டிக் கொடுத்தாரு. பொண்டாட்டிய கூட்டிக் கொடுக்கறதயும் மாமா வேலை பார்ப்பதையும் நியாயப்படுத்தி விளிம்புநிலையில் இருக்கிற மாமக்களுக்கும் சமூகத்தில் மரியாதை தந்த ஒரே மதம் இந்து மதம்தான்.

  கொழந்தையிலேயே கொய்யாப் பழமான திருஞான சம்பந்தரு, ‘கடவுள் இல்லைன்னு சொல்றவன் பொண்டாட்டிக் கூட நான் படுக்கனும்னு’ அற்புதமான தமிழால், ரொம்ப நாகரீகமாக பாட்டெழுதினாறு.//

  எனது பதிவுகளில் இதை பயன்படுத்தி அனுமதி கிடைக்குமா!?

 2. ///அ. மார்க்ஸ் போன்றவர்கள் சில பெண்களுககு ஆதரவாக ஒரு கோஷ்டியாகவும், சூரியதீபன் போன்றவர்கள் அதுபோலவே சில பெண்களுக்கு ஆதரவாக இன்னொரு கோஷ்டியாகவும் பிரிந்து மார்க்சியத்தின் பேரில் ஆதரிப்பது மகா மாக மோசடியானது. ஆபத்தானது.///

  அ.மார்க்ஸ் லீனா மணிமேகலை கோஷ்டி. சூரியதீபன் குட்டிரேவதி, சுகிர்தராணி கோஷ்டி. இதை நீங்கள் நேரடியாகவே குறிப்பிட்டு இருக்கலாமே?

 3. இந்தக் கட்டுரையை முதல்முறை பிரசுரித்தபோது வந்த பின்னூட்டங்கள்:

  ஏகலைவன் (04:34:04) :

  மிகவும் தேவையானதொரு தருனத்தில் இடப்பட்ட பதிவு இது. தோழருக்கு பாராட்டுக்கள்!

  மார்க்சிய அறிஞர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சில அற்ப பெண்ணீயவாதிகள் தொடர்ந்து எழுதுவதற்கு முறையான செய்திகள் கிடைக்காத வேளைகளில் எழுதப்புகுவது இதுபோன்ற உடலியல் விசயங்களைத்தான் போலும்!

  தமிழக பெண்ணீய அறிஞர்கள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் வ.கீதா போன்றவர்கள் அ.மங்கை போன்றவர்கள் பெரும் களப்பணியாளர்கள்!!! இப்போது தமது களப்பணியை நாலு சுவற்றுக்குள் நடக்கும் அந்தரங்க அறைப்பணியாகச் சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள் போலும்!

  எழுதுவதற்கு விசயங்கள் எதுவும் மிச்சமில்லாத அளவுக்கு எழுதிக்குவித்துவிட்ட காரணத்தினால், இப்போது ‘லெஸ்பியன்’ என்ற ஓரினச் சேர்க்கை குறித்தான முக்கியத்துவத்தை உணர்ந்தோ அல்லது அடுத்தவருக்கு உணர்த்தவோ அரும்பாடுபட்டு எழுதிவருகிறார்கள். வாழ்க அவர்களின் பெண்ணீய தொண்டு!!!

  இப்படிப்பட்ட கேவலமான இழிநிலை அற்பர்களின் முகத்திலரைகிறார் தோழர் லெனின். எனக்கென்னவே இது கிளாரா ஜெட்கினுக்கான தோழர் லெனினின் பதிலாகத் தெரியவில்லை. இங்குள்ள இதுபோன்ற பெண்ணியவாதிகளுக்கான தோழரின் நேரடித்தாக்குதலாகவே தெரிகிறது.

  சிறிது பணி நெருக்கடியில் இருக்கிறேன். தொடர்ந்து விவாதிப்போம்.

  தோழமையுள்ள,

  ஏகலைவன்.

  30 07 2008
  கதிர் (12:06:24) :

  அற்புதமான கட்டுரை, ஆழ்ந்த விளக்கம், சீரழிவின் உச்சத்தில் போய்க்கொண்டிருக்கும் இளையதலைமுறைக்கும் ம‌ட்டுமில்லாது புதிய சிந்தனையின்பால் உந்தப்பட்டவர்களும் கொண்டுள்ள சில தவறான நிலைப்பாட்டினை சம்மட்டியால் அறைந்து சுயவிமர்சனம் செய்ய உரைக்கிறது.

  31 07 2008
  நாதாரி (02:55:29) :

  கட்டுரை முடிந்தபின்னும் தொடர்கிறது எழுதப்படாத பொருள்மறைவாக புதைந்து கிடக்கிற புதிய பக்கங்கள்

  31 07 2008
  periyar critic (14:20:25) :

  கிளாரா ஜெட்கின் அன்று எழுப்பிய கேள்விகளை இன்றும் உள்வாங்க மறுப்போரை காலமுரண்கள் என்பதுதான் சரியாக
  இருக்கும்.

  31 07 2008
  periyar critic (14:24:39) :

  தமிழக பெண்ணீய அறிஞர்கள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் வ.கீதா போன்றவர்கள் அ.மங்கை போன்றவர்கள் பெரும் களப்பணியாளர்கள்!!! இப்போது தமது களப்பணியை நாலு சுவற்றுக்குள் நடக்கும் அந்தரங்க அறைப்பணியாகச் சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள் போலும்!

  எழுதுவதற்கு விசயங்கள் எதுவும் மிச்சமில்லாத அளவுக்கு எழுதிக்குவித்துவிட்ட காரணத்தினால், இப்போது ‘லெஸ்பியன்’ என்ற ஓரினச் சேர்க்கை குறித்தான முக்கியத்துவத்தை உணர்ந்தோ அல்லது அடுத்தவருக்கு உணர்த்தவோ அரும்பாடுபட்டு எழுதிவருகிறார்கள். வாழ்க அவர்களின் பெண்ணீய தொண்டு!!!’

  இதை எழுதியுள்ள மாபெரும் அறிஞர் வ.கீதா எழுதியுள்ள
  நூல்களை படித்திருக்கிறாரா.அண்மையில் வெளியான
  patriarchy1 குறித்த ஆங்கில நூலைப் படித்திருக்கிறாரா.
  பெரியார் குறித்து அவரும்,ராஜதுரையும் செய்ததில்
  10% கூட திராவிட இயக்கங்கள் செய்யவில்லையே.
  மருதையனோ அல்லது பிற ம.க.இ.க அறிவுஜீவிகளோ
  வ.கீதா எழுதியுள்ளது போல் மார்க்ஸியம்,பெரியாரியம்,
  பெண்ணியம் குறித்து எத்தனை நூல்களை எழுதியிருக்கிறார்கள்.
  அவரையும்,மங்கையையும் கொச்சைப் படுத்தி எழுதுவதுதான்
  ஏகலைவன்களால் முடியும் போலும்.

  2 08 2008
  ஏகலைவன் (06:56:57) :

  அம்பி முரளி என்கிற கிருட்டிக்கு!

  உன்னைப்போன்ற பச்சையான பார்ப்பனீய இந்துவெறியனால் மெச்சிப் புகழப்படுவது ஒன்று போதும் மேற்கண்ட அறிஞர்கள் இதுவரை கிழித்ததை உறுதிப்படுத்த.

  சமூகத்தில் இருக்கிற எண்ணற்ற பிரச்சினைகளைவிட இவர்களுக்கு பிரதானமாகத் தோன்றுவது ‘லெஸ்பியன்’தான் என்றால் இதைவிடக் கேவலம் எதுவும் இருக்கிறதா? அதை உன்னைப் போன்ற இழிபிறவிதான் ஆதரித்து எழுதுவான்.

  எதுக்கும் ஒங்குடுமிய கொஞ்சம் கவனமா மறைச்சி வச்சிக்க, அடிக்கடி வெளியே தலைகாட்டி உன்னை அம்பலப்படுத்துது.

  ஏகலைவன்.

  2 08 2008
  Jeyendran alias Sankaran (13:29:49) :
  டேய் அம்பி முரலி,

  உனக்கு எவ்வளுவாட்டி சொன்னாலும் புரியாது
  போய் நன்ன படிச்சுன்டு வா…

  பெரிய அறிவாளி….
  சோல்ல வந்துட்டாரு…

  போடா டேய்

  Jeyendran

 4. Vannakkam Thozhar,

  Miga virivaana & sariyaana katturai.thakka samayatthil ezhithiyamaikku mikka nantri.thodarnthu ezhuthungal.

  Vazhtthukkal & Paraattukkal

 5. தங்கள் மீது தோழர்களின் சுண்டு விரல் கூட படாத போதே கண்டனக் கூட்டம் போடும் இந்த கலகக்கார சொறிநாய்களை அடித்து துவைத்திருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து. இதை நான் எம‌து அமைப்பிலும் (ம.க.இ.க) வலியுறுத்தி வருகிறேன். அடுத்த முறை சிறப்பாக கவனித்து விடலாம் என்பது தான் தோழர்கள் கூறியுள்ள தற்ப்போதைய ஆறுதல்.

  தோழர் மதிமாறன் தொடர்ந்து எழுதுங்கள் இது போல பல விசயங்களை பற்றியும் எழுதுங்கள், அப்ப தானே கொஞ்சம் கலகலப்பா இருக்கும்.

 6. தங்களுடைய கருத்திலிருந்து முறன்படுகிறேன், வே.மதிமாறன்.

  ஒரு மனிதன் முதலில் தன்னுடைய சுய பிரட்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் சமூக ரீதியான பிரட்சனைகளை கையாள முடியும்.

  அவனுடைய இடுப்பிற்கு கீழ் இருக்கும் பிரட்சனையை சரிசெய்து கொள்ள இயலாதவன். எப்படி சமூக பிரட்சனைகளை தீர்க்க முடியும்.

  அன்புடன்,
  ஜெகதீஸ்வரன்

 7. நல்ல பகிர்வு.. வாழ்த்துகள் தோழர்

 8. போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!

  நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

  இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.

  நிகழ்ச்சி நிரல்:

  தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு

  கண்டன உரை:

  தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

  திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.

  திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.

  திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.

  ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!

  அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

 9. தோழர்கள் ஏற்கனவே சுட்டிகாட்டியுள்ளது போல் சனாதன மார்க்ஸியர்கள், இந்துத்துவவாதிகளுடன் கலாசார விஷயத்தில் ஒத்துப்போவதை இது போன்ற பதிவுகள் மூலம் அறிய முடிகிறது.

Leave a Reply

%d bloggers like this: