ஓமோ செக்ஸ்… சூப்பர்டா மச்சான்…
‘பழைய ஏற்பாடு’ காலத்திலேயே இருந்த இந்த பழக்கத்தை ரொம்ப நவீனமானதுன்னு… புதுசா வந்து கட்டுடைக்கிறாங்களாம்.
‘அ. மார்க்ஸ் போன்றவர்கள் சில பெண்களுககு ஆதரவாக ஒரு கோஷ்டியாகவும், சூரியதீபன் போன்றவர்கள் அதுபோலவே சில பெண்களுக்கு ஆதரவாக இன்னொரு கோஷ்டியாகவும் பிரிந்து மார்க்சியத்தின் பேரில் ஆதரிப்பது மகா மகா மோசடியானது. ஆபத்தானது’ என்று இலக்கியத்தையும் கோட்பாட்டுக்குள் அடக்கி, அடுத்தவர்களின் சுதந்திரத்தில் தலையிடுகிற உங்களைப் போன்ற பாசிஸ்டுகள்தான் ஆபத்தானவர்கள்.
–ஜெகதீஸ்.
முதலில் ‘பாசிசம்’ என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு, அந்த வார்த்தையை பயன்படுத்துங்கள். அரசியல் காரணமே இன்றி உங்களுக்குப் பிடிக்காத, உங்களால் பதில் சொல்லமுடியாத அளவிற்கு கேள்வி கேட்கிற, உங்களை கடுமையாக விமர்சிக்கிற நபர்களை திட்டுவதற்காக, உங்களின் இயலாமையில் இருந்து வழக்கமாக கிளம்பி வருகிற ‘வெத்து’ வார்த்தையாக ‘பாசிசம்’ என்கிற சொல்லை பயன்படுத்தாதீர்கள்.
இப்படி சாதாரண விசயத்திற்கெல்லாம் ‘பாசிசம்’ என்ற சொல்லை பயன்படுத்துவது, இட்லர்-முசோலினி போன்ற பாசிஸ்டுகள் மனிதகுலத்திற்கு செய்த மாபெரும் தீமையை, கொடுமையை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமாகும்.
பாரதியின் பார்ப்பன இந்து உள்ளத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி, நான் எழுதிய , ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ என்ற புத்தகத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓர் கண்டன கூட்டம் நடத்தியது.
அதில் பேசிய பேராசிரியர் தொ. பரமசிவம், ‘மதிமாறன் பாரதியை முற்றிலுமாக புறக்கணிக்கிறார். ஒரு விசயத்தை முற்றிலுமாக புறக்கணிப்பது பாசிசம். மதிமாறன் ஒரு பாசிஸ்ட்’ என்று பாசிசத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தார்.
கம்யூனிஸ்ட் மட்டும் அல்ல, ஒரு முதலாளித்துவ ஜனநாயகவதிகூட பாசிசத்தை ஒரு துளி அளவிற்கு கூட ஒத்துகொள்ள முடியாது. பாசிசத்தை முற்றிலுமாக புறக்கணிப்பது மட்டுமல்ல, எதிர்ப்பதுதான் ஒரு முற்போக்காளனுக்கு அழகு.
‘ஒரு விசயத்தை முற்றிலுமாக புறக்கணிப்பது, பாசிசம்’ என்கிற பேராசிரியர் தொ. பரமசிவனின் அளவுகோலோடு பார்த்தால், பாசிசத்தை முற்றிலுமாக புறக்கணிப்பவர்களையும் பாசிஸ்டுகள் என்று சொல்லிவேண்டிய கோமாளித்தனமான, ஆபத்தான முடிவுக்குத்தான் போக முடியும்.
ஆக, ‘பாசிசம்’ என்கிற சொல்லை மிகச் சாதாரணமாக பயன்படுத்துகிற அறியாமையை அல்லது தவறை திருத்திக் கொள்ளுங்கள்.
இலக்கியத்தை கோட்பாட்டுக்குள் அடக்குவதாக ஒரு குற்றம் சாட்டி என்னை பாசிஸ்ட் என்கிறீர்கள். ஆனால், பலான எழுத்தாளர்கள் கோட்டுபாடுகளையே குறிகளாக பார்க்கிறார்கள். அவர்களை என்னவென்று சொல்வீர்கள்?
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, பலருடன் பாலியல் லீலைகளில் ஈடுபடுவது இவைகள் எல்லாம் சமூகத்தில் புதிய பழக்கங்கள் அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தில் இருக்கிற பழக்கம்தான். இன்னும் சொல்லப் போனால், புனிதர்களாக கருதப்படுகிற துறவு வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட மதவாதிகள் ‘இதெல்லாம் சாமியார் வாழ்க்கையில் சாதாரணமப்பா..’ என்று இதுபோன்ற லீலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களைப் போல், நீங்கள் ஓமோ செக்ஸில் ஈடுபடுங்கள். வரைமுறையற்று பலருடன் பாலியல் லீலைகளில் ஈடுபடுங்கள். அதில் கிடைக்கிற அனுபவத்தை உங்கள் கருத்தை ஒட்டிய நண்பர்களோடு ‘சூப்பர்டா… மச்சான்’ என்று கூட பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆனால், அவைகளை எழுத்துக்களாக்கி ‘கலக அரசியல்’ என்று முற்போக்கான சாயம் பூசி பொது புழக்கத்தில் விடும்போது, அவைகளுக்கும் ‘சூப்பர்டா மச்சான்’ என்கிற வகையிலேயே எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
அதுகுறித்தான முறையான விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டும் என்பதுதானே அறிவு நாணயம். எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல விரும்பாத அல்லது முடியாத உங்களை, அந்தக் கேள்விகளோடோ சகித்துக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கிற தன்மையில்தான் இருக்கிறது பாசிசத்தின் கூறுகள்.
உங்களுக்கு கொசுறாக ஒரு தகவல் சொல்கிறேன். ‘வரலாற்றில் மக்கள் விரோதிகளாக மிக மோசமான பாத்திரம் வகித்தவர்களில் பலர், தங்களை ஓரினச் சேர்க்கையாளர்களாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு பாசிஸ்ட் முசோலினி ஓர் ஓரினச் சேர்க்கையாளன்.
*
ஏப்ரல்26, 2010 அன்று எழுதியது.
தொடர்புடையவை:
///உங்களின் இயலாமையில் இருந்து வழக்கமாக கிளம்பி வருகிற ‘வெத்து’ வார்த்தையாக ‘பாசிசம்’ என்கிற சொல்லை பயன்படுத்தாதீர்கள்.
பாசிசத்தை முற்றிலுமாக புறக்கணிப்பது மட்டுமல்ல, எதிர்ப்பதுதான் ஒரு முற்போக்காளனுக்கு அழகு////
மதி,
இப்போதெல்லாம் பாசிசம் என்ற வார்த்தையை ஏதோ சர்வ சாதாரணமாகத்தானே பாவிக்கிறார்கள். அதன் உட்பொருளை உணர்ந்தா சொல்கிறார்கள். என்னையும் பாசிஸ்ட் என்று இணையத்தில் தொடராய் எல்லாம் எழுதப்பட்டிருக்கிறது என்பதால் என் எண்ணத்தை பகிர்ந்துகொண்டேன். அவ்வளவுதான். பாசிசம் என்ற பதத்தின் பொருள், உபயோகம் பற்றிய உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
Arivial,Nerimurai,Samooga Kalachara,panpaadu,Nezhvazh aakiyavatrukku migavum aapatthanathu.Evai meendum nagarikam illatha kattumirandi ulagatthirkkey azhaitthu sellum.Manithan sintthiddu intha pazhgatthai vittu vittan.avatrai meendum pesuvathu sinthikka mudiyaatha muttal seiyyum kaariyam evatrai mannika mudiyaathu.
Homo sexuality is not a sin. It is followed by some of our people since long time (as you quoted). Radicals should accept the reality in this matter. Like me and you, the Lesbians and Homo Sexuals has thier own taste and needs, solutions. We dont have the right to decide with whom they should do sex with.
In your last para, Musolini like minded people were declared that they were the homos. What a poor example it is? Can you tell me that opposite sex lovers are purists…?
Enna anna ithu? Oru visayathai pinpatrubavan athai patri eluthuvatharkum urimai padaithavanthane? Eluthattume.. enna thappu? ‘Homo sexil Eeedupadungal, varaimurai atru paliyalil Eedupadungal’ endru irandayum ondraga soli irukkireergal. Homo sexuality ulla manithargalum olukkamanavargalthan. avargal ellam veethiyil ninru kondu sexil eedupadavillai. avargalukkum mathippeedugal undu endru activist gal solgirargal. nam avaragal pesuvathai ketpom. pesuvom. vivathipom. athuthan niyayamaga irukka mudiyum. Kannai moodikondu ethayum yetru kolvathum, yerka maruppathum than thavaru. Ini homos, lesbians patri pothumayana karuthukkalai sollatheergal. Athu nadu nilamayaga illai.
‘இந்தியா’ என்ற வார்த்தையை ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் பாரதி உபயோகபடுத்தியிருக்கிறான் என்ற அரைவேக்காட்டுத்தனத்திற்கு பெயர் “இந்து உள்ளத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி”….
சூப்பரப்பு….
முழு வேக்காடு பாலா, உன்னை போன்ற பார்ப்பன சாதி உணர்வாளர்கள் தீவிரமாக ஆதரிப்பது ஒன்றே போதாதா பாரதி ஒரு பார்ப்பன சாதி வெறிய்ன் என்பதற்கு.
ஒரினச் சேர்க்கையை முதன் முதலில் அங்கிகரித்த நாடு லெனின் தலைமையேற்றிருந்த ரஷியா தான். ஓரின சேர்க்கை என்பது இயற்கையில் சில கோளாறு அதனால் அவர்களை சமுகம் ஒதுக்கிவிட கூடாடு என்பதும் , அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஆரம்பத்தில் வைக்கபட்ட கோரிக்கை. பின்பு அதை பற்றி , விஞ்ஞான அறிவிருந்திருவர்கள் பேச அவர்கள் ஒரு வகையில் முற்போக்கான கருத்துடையவர்களாக ஏற்றுக்கொள்ளபட்டனர். பின்பு, தன்னை முற்போக்காக காட்டிகொள்ள சில ஜந்துக்களா அதை பயன்படுவது கண்டிக்கதக்கதே…
ஆனால் ஒரு விஷ கிருமி பேசியது என்பதற்காக இய்ற்கையில் குறைபாடு உள்ளவர்களை சிறுமை படுத்தி நீங்கள் வெளியிடும் கருத்துக்களும் கட்டுரைகளும் கண்டிக்க தக்கது..
யார் மீது உள்ள கோபத்திற்க்கு யாரை திட்டுகிறீர்கள்? யோசியுங்கள் …
செக்ஸ் என்பது விரைவில் கோப்பையில் இருந்து தண்ணிரை குடிப்பது போன்ற சாதரண விடயம் ஆகிவிடும் என்று தோழர் லெனினே குறிபிட்டுள்ளார்..
http://www.marxists.org/archive/zetkin/1920/lenin/zetkin1.ஹ்ட்ம்
இப்பொழுது என்ன, உங்களுடன் ஒப்பிடும் போது, லெனின் உண்மையான கம்யுனிஸ்டே இல்லை என சொல்லபோகிறீர்களா?
Sorry the comment was typed without reading your previous article.. still the way your writting exposes on Homo sexuals is very harsh and awkward..
////அக்னி பார்வை (15:31:28) :
ஒரினச் சேர்க்கையை முதன் முதலில் அங்கிகரித்த நாடு லெனின் தலைமையேற்றிருந்த ரஷியா தான். ///
இதுபோன்ற தவறான தகவல்களை கொடுக்காதீர்கள் அக்னி பார்வை.
அஜிதா.. கமாடீ கிமிடி பண்ணாதீர்கள் ..