பாரதியின் நேர்மை!

நீதிக் கட்சித் தலைவர்களை பாரதி கடுமையாக விமர்சித்தது நாட்டு விடுதலைக்கான போரை பின் தள்ளிவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் என்று உங்களை எதிர்கொள்ளும் கருத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கின்றீர்கள்?

நீதிக் கட்சித் தலைவர்களின் பார்ப்பன எதிர்ப்பை சுட்டிக் காட்டிதான் பாரதி அவர்களை கடுமையாக விமர்சிக்கிறார். “பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா? எதற்கும் இந்து மத வீரோதிகள் பேச்சைக் கேட்கலாமா?” என்று எழுதுகிறார்.

இந்துமதத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட, கடவுள் நம்பிக்கையாளர்களான நீதிக்கட்சிக்காரர்களை ‘இந்து மத விரோதிகள்’ என்று குறிப்பிடுகிறார். பார்ப்பனர்களை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது என்ற புரிதல் பாரதிக்கு இருந்திருப்பதற்கான சாட்சிதான் ‘இந்து மத வீரோதிகள்’ என்கிற அந்த வார்த்தை.

1916 ல் தான் நீதிக்கட்சி துவங்கப்பட்டது. அந்த ஆண்டுகளில் பாரதி சுதந்திர போராட்ட நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 1918 டிசம்பர் 10 தேதி கடலூர் சிறையில் இருந்து  சென்னை மாகாண பிரிட்டீஷ் கவர்னருக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில்,

“மேதகு தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கொடுக்கிறேன். நான் எல்லாவிதமான அரசியல் ஈடுபாடுகளைத் துறந்துவிட்டேன். நான் எப்போதும் பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன்.” என்று கடிதம் எழுதிதந்துவிட்டுதான் வெளியே வருகிறார்.

அந்தக் கடித வாக்கியங்களுக்கு உண்மையாகவும், தான் சொன்ன வார்த்தையை தன் மரணம் வரை காப்பாற்றுகிறார்.

ஆக, நீதிக்கட்சி செல்வாக்கு பெற ஆரம்பித்தக் காலங்களில் பாரதியே  பிரட்டிஷ் அரசுக்கு எதிராக இல்லை.

***

தமிழர் தொலைநோக்கு இதழுக்காக எழுதிய பதில்களை 2008 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதத்தில் முழுவதுமாக பிரசுரித்து இருந்தேன். இதில் சொல்லப்பட்ட பதில்கள் கூடுதல் கவனம் பெறவேண்டும் என்ற காரணத்தால், இப்போது அதை ஒவ்வொரு கேள்வி-பதிலாக பிரசுரிக்க இருக்கிறேன்.

தொடர்புடையவைகள்:

`பாரதி சரஸ்வதியிடம் வரம் வாங்கியவர்’ – Via English

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

`பாரதி’ ய ஜனதா பார்ட்டி:  முன்னுரை

‘என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை?` -Intellectual approach

நாகார்ஜுனன் – பாரதி- ஏகலைவன்

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும்

‘டி.எம்.நாயர், வ.உ.சி’ – ‘பாரதி, திரு.வி.க’ – தேசப் பற்றாளர்களும், துரோகிகளும் அல்லது யார் தேச துரோகி?

4 thoughts on “பாரதியின் நேர்மை!

  1. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    http://www.thalaivan.com

  2. பாரதியைச் சாடுவதிலும் அந்த ஒப்பற்ற கவிஞனைச் சிறுமைப்படுத்துவதிலும் நீங்கள் தன்மகிழ்ச்சி காண்கிறீர்கள். அரிசியைப் பார்த்தால் அந்த அரிசிக்குள் இருக்கும் உமியைப் பார்ப்பது போன்றதுதான் உங்களது பார்வை. பாரதி எழுதிய கடிதத்தை ஒரு யுக்தி என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? இன்று கூட எத்தனையோ அரசியல்வாதிகள் சிறையில் இருந்து வெளிவர நல்லொழுக்கக் கடிதங்களை எழுதிக் கொடுத்துவிட்டு வெளியில் வருவது வழக்கமாக இருக்கிறது.

  3. ///பாரதி எழுதிய கடிதத்தை ஒரு யுக்தி என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?///
    நக்கீரன் அவர்களே அந்தக் கடிதத்தை எழுதிதந்துவிட்டு பிறகு பாரதி என்ன மாதிரியான வெள்ளையருக்கு எதிரான புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார்? அப்படியிருந்தால்தானே அது யுக்தியாக கொள்ளமுடியும்.
    அப்படி இருந்தால் சொல்லுங்களேன்?

  4. Intha seithi perumpaanmaiyaana makkalukku theriyavillai,paarathiyin marupakkam ariya ungal kelvi pathil mikavum uthavum.

    vazhtthukkal.

Leave a Reply

%d bloggers like this: