பார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

‘பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கட்டுரையில் , பார்ப்பனர்களை மட்டும்தான் குற்றம் சொல்கிறேன். பார்ப்பனரல்லாதவர்களி்ல் எவ்வளவோ பேர் ஈழ மக்களுககு எதிராக இருக்கிறார்கள் அவர்கைளப் பற்றி ஏன் எதுவுமே சொல்லவி்ல்லை’ எனறு  பார்ப்பனர்கள் நம்மை கேட்கிறார்கள்.

அப்படி கேட்கும்போதுகூட தங்களின் அந்தச் செயலுக்கு வருத்தமோ அல்லது அதற்குரிய விளக்கமோ தராமல் ‘மத்தவன் மட்டும் யோக்கியமா?’ என்றுதான் மடக்குகிறார்கள்.

பொதுப்புத்தியில் இருந்து கேட்கப்படும் இதுபோன்ற கேள்விககு ஏற்கனவே நான் (12 02 2009) பதில் அளித்திருக்கிறேன். தேவைக்கருதி அந்தப் பதிலை இங்கே மீண்டும் பிரசுரிக்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக பார்ப்பன ஊடகங்கள் சொல்லி வைத்தாற்போல் ஒன்றுபோலவே செயல்படுகின்றனவே?

-கு. தமிழ்ச்செல்வன்

ஒருமுறை தந்தை பெரியார், பார்ப்பனர்களின் சுயநலத்தை விளக்கி சொல்லும்போது:

“நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறதை எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று சொன்னார்.

‘என்னடா இது பைத்தியத்துலக் கூடவா பார்ப்பனப் பைத்தியம், பார்ப்பனரல்லாத பைத்தியம் இது கொஞ்ச ஓவரா தெரியுதே’ என்கிற எண்ணம் அதை படித்தபோது எனக்கு தோன்றியது.

ஆனால், இந்த சுப்பிரமணிய சுவாமி, சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து ராம் போன்றவர்களின் செயல்களைப் பார்க்கும்போது, பெரியார் எவ்வளவு தெளிவா, தீர்க்கமா சிந்திச்சிருக்காருன்னு புரியுது.

‘பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை’ என்று பெரியார் சொன்னார்.

தமிழ்த்தேசியவாதிகள், ‘பெரியார்தான் தமிழர் இல்லை. பார்ப்பனர்கள் பச்சைத் தமிழர்கள்’ என்று திருப்பிப் போட்டனர்.

ஆனால், தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போது, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போதெல்லாம், பார்ப்பனர்கள் தமிழ்தேசியவாதிகளின் கூற்றைப் பொய்யாக்கி, பெரியாரின் வார்த்தையை மெய்யாக்குகிறார்கள்.

‘ஈழத்தமிழர்களை குவியல் குவியலாக கொலை செய்கிறான் சிங்கள ராஜபக்சே. இந்திய அரசே, அதை தடுத்து நிறுத்து’ என்று தமிழகத் தெருக்களில் மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் என மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது, ‘டிசம்பர் மாத கச்சேரி’ என்று சபாக்களில் கர்நாடக சங்கீத ஆலாபனைகளில் தாளம்போட்டு ‘ச்சூ’ கொட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள் பார்ப்பனர்கள்.

அவர்களின் ‘ச்சூ’, ஒலி ரசனையின் அடிப்படையில்தான் எழுகிறதே தவிர, தமிழர்களின் மீதான இரக்கத்தின் அடிப்படையில் ஒருநாளும் எழுவதில்லை.

(வீதியில் இறங்கி போராடுவதை கேவலமாக, பொது மக்களுக்கு இடைஞ்சலாக கருதுகிற இவர்கள்தான், கொலை செய்த ஜெயேந்திரனுக்கு ஆதரவாக, வீதியில் இறங்கி போராடினார்கள்.)

ஈழத்தமிழர்களின் துயரங்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், என்பதுகூட பிரச்சினை இல்லை. அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதுதான் வருந்ததக்கது. அதையும்மீறி, ஒன்றிரண்டு பார்ப்பனர்கள் ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறையோடு பேசுகிறார்கள். ‘பரவாயில்லையே’ என்று நாம் புருவம் உயர்த்தினால், ஈழத்தமிழர்கள் பிரச்சினையில், மாவரைக்கிற கருணாநிதியை திட்டுவதற்கான ஒரு நல்வாய்ப்பாகத்தான் ஈழத்தமிழர்களின் துயரங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், ஞாநியைப் போல.

‘தங்கபாலு, ப. சிதம்பரம், இளங்கோவன், திருநாவுக்கரசு, குமரி அனந்தன், ஓ. பன்னீர்செல்வம், தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்கள் பச்சைத் தமிழர்கள்தான். அவர்கள் என்ன ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவா இருக்கிறார்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம்.

இவர்கள் தங்கள் சொந்தக் கருத்தைவிடவும் தாங்கள் சார்ந்திருக்கிற கட்சியின் நிலைபாட்டை பிரதிபலிக்கிறார்கள். அல்லது இவர்களுக்கு சொந்தக் கருத்து என்பதே கிடையாது. எது அவர்களுக்கு லாபமாக இருக்கிறதோ அதை செய்கிறார்கள். ஆக, இவர்களை தமிழர்கள் என்றோ, இல்லை அவர்கள் சார்ந்திருக்கிற ஜாதிகளின் பிரதிநிதிகள் என்றோகூட முடிவு செய்யமுடியாது.

ஆனால், கட்சி சாராத பார்ப்பனர்கள்கூட பெரும்பாலும், ஈழத்தமிழர்கள் விவகாரங்களில் எதிராக இருக்கிறார்கள். அல்லது  அக்கறையற்று இருக்கிறார்கள். பிராமணர் சங்கம் உட்பட.

பத்திரிகைகளில்கூட, பார்ப்பனரல்லாத பத்திரிகைகளில் வருகிற இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளுக்கு பின்புலமாக,  இலங்கை அரசின் ‘விருந்தாளி’யாக இன்ப சுற்றுலா சென்று வந்த பத்திரிகையாளர்கள், தாங்கள் வாங்கிய காசுக்கு விசுவாசமாக செய்திகள் வெளியிடுகிறார்கள்.

ஆனால், துக்ளக், தினமலர், இந்து நாளிதழ்கள் இன்ப சுற்றுலாவிற்கு முன்பிருந்தே, ஈழத்தமிழர்களுக்கு எதிராகத்தான் இயங்குகிறார்கள்.

“நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறத எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று பெரியார் சொன்னது எவ்வளவு தீர்க்க தரிசனம்.

தேசப்பற்றாளரைப்போல், ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்று தீவிரமாக எழுதிய சுப்பிரமணிய பாரதி, ‘பார்ப்பன எதிர்ப்பு’  அல்லது ‘பார்ப்பனரல்லாதார் உரிமை’ என்று சிலர் முயன்றபோது, அவர்கள் மீது சரமாரியாக கல்லை விட்டெறிந்தைப் போல்,

சுற்றுசூழல் பாதுகாப்பு,  முதலாளித்துவ எதிர்ப்பு, இயற்கை வேளாண்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம், அமெரிக்காவின் அட்டூழியம், பிரபலமான வெட்டிப் பயல்களைப் பற்றியான இலக்கிய சர்ச்சை என்று எழுதினால் ஓடி வந்து  அதற்கு ஆதரவாக ஒரு நக்சலைட்டைப் போல் கருத்து சொல்கிற பார்ப்பனர்களில் பலர்,

பெரியார் – அம்பேத்கர் நிலையில் இருந்து இந்து மத எதிர்ப்பு, இட ஓதுக்கீடு ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, பாரதியின் பார்ப்பனப் பாசம் என்று நாம் எழுதினால், அதில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளாமல், ஒரு வெறிப்பிடித்த தெருநாய் பாய்ந்து வந்து கடிப்பதுபோல், நம்மை கடித்து குதுறுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகளில் பலர்.

ஆக, பெரியார் சொன்னபடி பெரியார் கட்சிக்காரர்கள் நடந்துகொள்கிறார்களோ இல்லையோ, பார்ப்பனர்கள்தான் பெரியார் சொன்னபடி நடந்து கொள்கிறார்கள்.

குறிப்பு:

ஈழத்தமிழர்களின் துயரங்களுக்காக தன் வருத்தத்தைத் தீவிரமாக பதிவு செய்கிற, மிகச் சிறுபான்மையான ஒன்று, இரண்டு பார்ப்பனர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றபடி, எந்த நேரமும் நான் என்ன எழுதுகிறேன் என்பதையே கண்காணித்து, என்னை பாய்ந்து புடுங்குகிற அறிவாளிகளே… ஆரம்பிங்க உங்க வேலையை…

***

பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்’ (ஈழம், பிரபாகரன் பற்றி)என்ற தலைப்பில் 13 – 06 – 2009 அன்று எழுதியதை மீண்டு்ம் பிரசுரித்து இருக்கிறேன். இதன் தொடர்புடைய கட்டுரைகளை மீண்டும் தொடர்ந்து வெளியிட இருக்கிறேன்.

தொடர்புடயவை:

மாவீரன் முத்துகுமாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட திரு.வே.மதிமாறன் அவர்கள் வழங்கிய செவ்வி

கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

பாவம் அவர்கள் எழுத்தாளர்கள்…

‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்

தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது

ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’

பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

‘எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்’ இதுதாண்டா தமிழ் பத்திரிகை – தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

8 thoughts on “பார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

 1. திராவிட இயக்கத்தை திட்டிக்கொண்டு பார்ப்பனர்களுக்கு காவடி தூக்குகிற தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்கிற துரோகிகளையும் பார்ப்பன அடிமைகளையும் தொடர்ந்து அம்பலப்படுத்துங்கள்.

 2. /////சுற்றுசூழல் பாதுகாப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, இயற்கை வேளாண்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம், அமெரிக்காவின் அட்டூழியம், பிரபலமான வெட்டிப் பயல்களைப் பற்றியான இலக்கிய சர்ச்சை என்று எழுதினால் ஓடி வந்து அதற்கு ஆதரவாக ஒரு நக்சலைட்டைப் போல் கருத்து சொல்கிற பார்ப்பனர்களில் பலர்,

  பெரியார் – அம்பேத்கர் நிலையில் இருந்து இந்து மத எதிர்ப்பு, இட ஓதுக்கீடு ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, பாரதியின் பார்ப்பனப் பாசம் என்று நாம் எழுதினால், அதில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளாமல்,////

  இதுவும் பைத்தியக்காரன் என்ற பெயரில் எழுதும் ஒரு பார்ப்பன சாதி வெறியனுக்கு அப்படியே பொருந்தும்.

 3. ஈழப்பிரச்சினையில் பார்ப்பனர்கள் இதுமாதிரி ஒரு ஸ்டாண்ட் எடுக்க என்ன காரணமாக இருக்கும்?

  அதைப்பற்றிக் கொஞ்சம் எழுதுங்கள்.

  http://kgjawarlal.wordpress.com

 4. அருமையான பார்வை .. வாழ்த்துக்கள் ..
  இதை நான் அருகிலிருந்தே உணர்ந்திருக்கிறேன் .. இந்து சமயத்திலும் மிகுந்த சுயநலம் மிக்கவர்கள் பார்ப்பனர்கள் .. இதை எனது பேஸ் புக்கில் இடுகிறேன் .. உங்கள் அனுமதியுடன் .

 5. பார்பனீய எண்ணத்தையும், பார்பன அடையாளங்களையும் துறந்துவிட்ட ஒருவரை பார்பனர் என அழைக்கலாமா தோழர்!?

 6. “நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறதை எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்”

  தமிழகத்துச் சூழலைக் கவனிக்கிறபோது பெரியார் திரும்பவும் வந்தால்தான் மீட்சி என்று எண்ணத் தோன்றுகிறது. அசாத்தியங்களைச் சிந்தித்து என்ன பயன்…:(

 7. போங்கடா நாத்திக எச்சிக்கலைகளா. ஏண்டா டாக்ஸ் பிராமணனா நாடாள்கிறான்? உங்கள் புறம்போக்கு நாத்திகன் கருணாநிதி ஆளும்போது ஏதாவது நடவடிக்கை எடுத்து நீங்கள் பாசத்தால் துடிக்கும் மூன்று தமிழர்களையும் காப்பாற்றியிருக்கவேண்டியதுதானே. கழிசடை கசுமாலங்களா இப்பத்தான் மூன்று தமிழர்கள் மீதும் கரிசனம் பிறந்ததா? குற்றம் சாட்டப்பட்டு இரண்டு சகாப்தங்கள் முடிந்தபிறகுதான் உங்கள் காலி மண்டை வேலை செய்கிறதா? வைகோ பைத்தியக்காரன் ஒரு வக்கீல்தானே இத்தனை நாள் எந்த பிராமணனை நக்கிக்கொண்டிருந்தான்?. காலம் கடந்த பிறகு தனது இருப்பை காட்டிக்கொள்ள மூன்று குற்றவாளிகளின் இரங்கத்தக்க நிலையை பயன்படுத்திக்கொண்டு கூக்குரலிடும் நாதிகெட்ட நாய்கள் உங்களுடன் கூடச்சேர்ந்து கடைசியில் பிச்சைக்காரனைப் போல் ஜெயலலிதாவையும், மத்திய அரசையும் முக்கி முக்கி கெஞ்சுவதற்கு பதிலாக மேற்படி குற்றவாளிகளுக்காக வக்கீலாக ஆஜராகி வாதாடி எது உண்மையோ அதை நிலைநாட்டி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை? ஸ்ரீ பிராமண குலத்தை தூற்றும் நாத்திக நாய்களே பதில் இருக்கிறதா உங்களிடம்? எதற்காக இந்த வெற்று கூச்சல்? யாராவது உங்களை சீந்தப்போகிறார்களா? உங்களோடு சேர்ந்து தமிழினத்தின் ஒட்டுமொத்த மானமும் போகிறது. வெட்கம்! வெட்கம்!. எவளாச்சும் எவங்கூடயாச்சும் ஓடிப்போனாகூட நாத்திக்ஸ் சாக்கடைகள் பிராமணர்களைத்தான் குறைகூறுவார்களோ என்னமோ தெரியவில்லை?

Leave a Reply

%d bloggers like this: