இதுதான் ஆனந்த விகடன்-குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை


தோழர் நாகூர் இஸ்மாயில் தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்ட இந்த உரையாடலை அவர் முன்னுரையோடு அப்படியே வெளியிடுகிறேன்:

திரு வே.மதிமாறன் அவர்களுடன் 2 சூலை 2010 சுமார் 3 லிருந்து 4 வரை தொலைபேசியில் உரையாடிய போது மனதில் பதிவு செய்தது.

27 சூன் சனிக்கிழமை அன்றே சந்தித்து பேசுவதாக இருந்தது தவிர்க்க இயலாத சில காரணிகளால் மேலே குறிப்பிட்ட தேதியில் தான் பேச இயன்றது.

தோழர் அவர்களிடம் நான் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

நாகூர் இஸ்மாயில்:

நீங்கள் உங்கள் வலைப்பதிவில் கேடக்கப்படுகிற எந்த பின்னூட்டத்திற்கும் பதில் எழுதுவதில்லை என்று ஒரு பேச்சு இருக்கிறதே?

வே. மதிமாறன்:

எனக்கு வரும் பெரும்பாலான பின்னூட்டத்தில் கேள்விகளுக்கான பதில் அந்த குறிப்பிட்ட பதில்களிலும், கட்டுரைகளிலுமே இருக்கிறது. நான் பதில் சொல்வதாக இருந்தால் அந்த பதிவில் உள்ளதை தான் திரும்ப எழுத வேண்டியது வரும்.

இரண்டாவது, பின்னூட்டங்கள் முடிவில்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. அதுவும் தவிர, பதிலில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் அறிவு நாணயம் கேள்வி கேட்பவர்களிடத்தில் மிகப் பெரும்பாலும் இல்லை. தனிமனித காழ்ப்புணர்ச்சியோடும் தரக்குறைவாகவும் பின்னூட்டங்கள் இடம்பெறுகிறது.

நாகூர் இஸ்மாயில்:

தொலைகாட்சிக்கு பகுத்தறிவு சம்மந்தமான நிகழ்ச்சிகள் இயக்கி வெளியிடும் யோசனைகள் உங்களிடம் உள்ளதா?

வே. மதிமாறன்:

இருக்கிறது. நல்ல செய்திகளோடு, சுவாரஸ்யமாக, வர்த்தக ரீதியாக வெற்றி பெறுகிற சிறந்த நிகழ்ச்சிகளை செய்து தர முடியும். ஆனால் அதற்கேற்ற நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அமைய வேண்டும்.

நாகூர் இஸ்மாயில்:

நீங்கள் ஏன் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதில்லை?

வே. மதிமாறன்:

வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதுபவர்கள் ஊர் உலகத்தில் நடக்கும் குற்றங்களை எதிர்த்து எழுதினாலும் எந்த பத்திரிக்கையில் எழுதுகிறார்களோ அந்த பத்திரிக்கையின் மோசடிகளை குறித்து வெளியில் விமர்சிப்பதே இல்லை.

உதாரணமாக, நித்தியானந்தா சாமியாரின் அயோக்கியத்தனங்களை பற்றி எழுதுவதாக இருந்தால் குமுதத்தை பற்றி எழுதாமல் இருக்க முடியாது. ஆனால் குமுதத்தில் தொடர்ச்சியாகவோ, எப்போதாவதோ எழுத வேண்டும் என்றால் நித்தியானந்தாவை பற்றி எழுதும் போது குமுதத்தை பற்றி எழுத முடியாது.

வெகுஜனப் பத்திரிக்கை நடத்துபவர்கள் அவர்களது பத்திரிக்கையில் எழுத வேண்டுமானால், எங்கும் எதிலும் அவர்களுக்கு எதிராக எழுதக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனந்த விகடனில் எழுதும் போது அதன் இந்து, பார்ப்பனிய கண்ணோட்டத்தைப் பற்றி அதிலேயே எழுதக்கூடாது என்றால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வேறு எங்கேயும் அதன் அயோக்கியத்தனத்தை எழுதக் கூடாது; அப்படி எழுதுகிறவர்களை அவர்கள் பத்திரிகைகளில் எழுத அனுமதிக்க மாட்டார்கள்.

குறிப்பாக பார்ப்பனியத்தை, பார்ப்பன இலக்கியத்தை, இலக்கியவாதிகளை, இந்து மதத்தை தீவிரமாக அம்பலப்படுத்துபவர்களை பார்ப்பன பத்திரிகைகளும், பார்ப்பன மனோபாவத்தில் இயங்குகிற பார்ப்பனரல்லலாத பத்திரிகைகளும் திட்டமிட்டு புறக்கணிக்கத்தான் செய்கிறார்கள்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் காலத்தில் அவர்களிடமும் இப்படித்தான் நடந்துகொண்டர்கள். இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள்.

பாரதியின் பார்ப்பன முகத்தை அம்பலப்படுத்தி எழுதிய காரணத்தால் என் புத்தகங்களின் அறிமுகத்தையோ, என் வலைப்பக்கத்தின் அறிமுகத்தையோகூட குமுதம், ஆனந்த விகடன் இதழ்கள் வெளியிடுவதில்லை. ஆனால், பெரியாரை கேவலமாக எழுதினால், அப்படி எழுதிகிறவர்களை சிறப்பு விருந்தினராக கவுரவிக்கிறார்கள் பார்ப்பன பத்திரிகைகள். அதற்கு உதாரணம்; ஜெயகாந்தன், ரவிக்குமார், ஜெயமோகன். இதுதான் தமிழ் பத்திரிகைகளின் யோக்கியதை.

இந்தக் காரணத்தால்தான் இலக்கிய, முற்போக்கான எழுத்தாளர்கள் பலர் வெளியில் எழுதும்போதுகூட ‘பார்ப்பான்’ என்கிற வார்த்தையை எழுதாமல் பார்ப்பன பத்திரிகைகளுக்கு ஏற்றார்போல் தன்னை தயார் படுத்திக்கொள்கிறார்கள்.

-தொடரும்

தொடர்புடையவைகள்:

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

ஆனந்த விகடனும் – பெரியாரும்

தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு

ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்

குமுதத்தின் கயமை

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

அதிகமில்லை Gentleman, வெறும் 50 ரூபாதான்!

கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’

முற்போக்கு பார்ப்பனீயம்

`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை

சட்டக் கல்லூரி சண்டையும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வன்முறையும்

‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி

கலைஞன் பரப்பிய வெளி- சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

பார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

பிரபாகரன் இருக்கின்றாரா?

பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது

பாவம் அவர்கள் எழுத்தாளர்கள்…

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

14 thoughts on “இதுதான் ஆனந்த விகடன்-குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை

 1. அன்புடையீர்,
  தங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனந்த விகடனில் வெளிவரும் தமிழ் வலைப்பூக்களை பற்றிய அறிமுகத்தில் தமிழ் 10 தளத்தின் 40 முதல் 50 ரேங்குக்குள் இருக்கும் எனது கவிதை07 பற்றி வந்ததில்லை. வராது. காரணம் நான் அவர்களின் மோசடியையும், பார்ப்பனீயத்தையும் எதிர்த்து எழுதிவருவதே

 2. விகடன், குமுதத்துல
  நீங்க எழுதறேன்னு சொன்னாலும், அவர்கள் உங்கள கூப்பிடமாட்டாங்க. ஏன்னா உங்க யோக்கியதை அவர்களுக்கு தெரியும்.

 3. Makkal viduthalaikku samarasam illaamal poraadupavarkalai, makkalal maaperum poraaliyaga potrapaduvaarkal .Naam durokikalaippatri thodarnthu ambalapadutthuvoam.

 4. அவாளை பற்றிதான் தெரியுமே. ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை.

 5. பெரியாரை மட்டுமல்ல திராவிட இயக்கத்தை விமர்சித்து எவன் எழுதினாலும் அவனை பெரிய எழுத்தாளனாக மாற்றிவிடுகிறார்கள் பார்ப்பன பத்திரிகைகள். அதில் புதியதாக உருவாக்கப்பட்டு இருப்பவர் தமிழுருவி மணியன்.

 6. திரு மதிமாறன் அவர்களே,

  ///தனிமனித காழ்ப்புணர்ச்சியோடும் தரக்குறைவாகவும் பின்னூட்டங்கள் இடம்பெறுகிறது.///

  மிகச் சரியான வரிகள்.பாராட்டுக்கள்.

 7. போலி வைத்தியன் மாதிரி போலி பத்திரிக்கைகள் இந்த விகடனும் குமுதமும். விகடன்ல ஸ்பாட் லைட்டுன்னு ஒரு பக்கத்துக்கு 50 ஆயிரம் வாங்கிகிட்டு போலி டாக்டர்களை பத்தி இவனுங்களே பெருமையா எழுதுறாமுங்க. கண்ணுக்கு தெரியாத அளவு சின்ன எழுத்துல விளம்பரதாரர் பக்கம்ன்னு போடுறானுங்க. ஒரு பக்கத்துக்கு 50 ஆயிரம் கொடுக்குற இந்த வைத்தியனுங்க மக்கள் கிட்ட எவ்வளவு புடுங்கினா இவ்வளவு கொடுக்க முடியும். அப்புறம் விகனுக்கு போன் பண்ணி கேட்டா அந்த வைத்தியனுங்க பத்தி ஃபுல் டீடெயில் கொடுப்பானுங்க.

 8. பாரதியின் பார்ப்பன முகத்தை அம்பலப்படுத்தி – I dont know aboth the other face of Bharathi. can u explain or give me the link pls.

 9. innumma parpanar pallavi paduringa ? ippo nadaiperum jathi verupadugaluku yaar karanam ? Parpanargalai FC yendru muthirai kuthi ananaithu kalvi, velai vaipugalilum NO solliyache. micham irrupathu pvt company & obroad vaipugalthan.

 10. மிகவும் நல்ல கருத்து ஆனால் இதை யோசிக்கும் நிலையில் நாம் இல்லை நாம் நமது பொது எதிரி சீனா வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நேரம் எனவே சீனா தயாரிப்பு களை வான்கதிர்கள் சீனாதயாரிப்பு களை விர்கதிர்கள் என்று பிரகடம் பன்னும் நாள் இது

 11. ஏன்டா உருப்படாத கூதிகளா. மூடுங்களடா உங்கள் முடை நாற்றமெடுக்கும் கூப்பாடுகளை. ங்கோத்தா.
  tamilkuthian@yahoo.co.in
  122.252.227.142

Leave a Reply

%d bloggers like this: