எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல

துதான் ஆனந்த விகடன் – குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை -1

 

 

நாகூர் இஸ்மாயில்:

உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார்?

வே. மதிமாறன்:

எனக்குப் பிடிச்ச தமிழ் எழுத்தளார்கள் யாரும் இல்ல.

சிலநேரங்களில் சிலர் எழுதுகிற எதாவது ஒன்று சரியாக இருக்கும். அதற்காக அவர்களின் ஒட்டுமொத்த எழுத்தும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. பல நேரங்களில் அவை அபத்தமாகத்தான் இருக்கிறது.

எழுத்துக்கள் இரண்டு செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஒன்று தன்னுடைய எழுத்தை கருத்தை முன்னிறுத்தி எழுதுவது. இன்னொன்று தன்னை முன்னிறுத்தி எழுதுவது. இன்றைக்கு எழுத்தாளர்கள் எல்லோரும் தன்னை முன்னிறுத்தி தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்து அரசியல் டிரெண்டு என்னவோ அல்லது தனக்கு எது புகழ் சேர்க்குமோ அல்லது தன்னை எது மிகப் பெரிய அறிவாளியாக அடையாளம் காட்டுமோ அதை எழுதுவது.

என்னைப் பொறுத்தவரை தமிழில் ஒரே ஒரு எழுத்தாளர்தான் தன் கருத்தை, தன் கொள்கையைச் சொல்வதற்கான சாதனமாகத் தன் எழுத்தை மிக எளிமையாக, வலிமையான கருத்துக்களோடு தெளிவான முறையில் கையாண்டார்; அவர் தந்தை பெரியார்.

ஒரு எழுத்தாளன் தான் கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருந்து எழுதினால், அவன் ஒரு சிந்தனையாளனாக உயர்கிறான் என்பதைதான் பெரியாரின் எழுத்துக்கள் நிரூபித்தது. பெரியார் தன்னை ஒரு எழுத்தாளனாக எண்ணயதில்லை. எழுதுவது பேசுவதை ஒரு தகுதியாக அவர் என்றும் கருதியதில்லை. அதனால்தான் அவர் மாபெரும் சிந்தனையாளனாக உயர்ந்து நின்றார்.

தான் எழுதுகிற விசயத்திற்கு உண்மையாக இருக்கிற எழுத்தாளன் சிந்தனையாளனாக வளர்ச்சி அடைகிறான். உண்மையாக இல்லாதவன் எழுத்தாளனாகத் தேக்கமடைகிறான்.

-தொடரும்

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

9 thoughts on “எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல

  1. சிலநேரங்களில் சிலர் எழுதுகிற எதாவது ஒன்று சரியாக இருக்கும். அதற்காக அவர்களின் ஒட்டுமொத்த எழுத்தும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது.//

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading