‘இவர்களை வைத்து சம்பாதிக்கிறார்களே!’ தினத்தந்தியின் ஆதங்கம்

தமிழ்நாடு உட்பட்ட தென் மாநிலங்களில் வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், குழந்தைகளும் குறைந்த கூலிக்கு சுரண்டப்பட்டு துன்புறுத்தப் படுவதை மிகுந்த அக்கறையோடு அனுகியிருக்கிறது தினத்தந்தியின் இந்த தலையங்கம். ஒரு வெகுஜன பத்திரிகையில் இப்படி பொறுப்போடு தலையங்கம் வருவது அரிது. தினத்தந்தி தலையங்கத்தை கவுரவிக்கும் வகையில் அதை இங்கு பிரசுரிக்கிறேன்.

***

டகிழுக்கு மாநிலங்களைச் சேர்ந்த் ஏராளமான இளைஞர்களும், பெண்களும், தென் மாநிலங்களுக்கு அலை அலையாக வந்து, கட்டிட வேலை, ரோடு போடும் வேலை போன்ற கூலி வேலை செய்வதை இப்போது பெருமளவில் பார்க்க முடிகிறது. அந்தப் பகுதிகளில் நிலவும் ஏழ்மையையும், வேலை இல்லாத் திண்டாடத்தையும் பயன்படுத்தி, தரகர்கள் மூலம் குறைந்தக் கூலிக்கு இங்கே வேலைக்கு வருகிறார்கள்.

இதுவே மிகுந்த கவலை அளிப்பதாக இருந்தாலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கிறித்துவ போதகர்கள், பாஸ்டர்கள் மற்றும் அமைப்புகள் நடத்தும் ஆதரவற்றோர் விடுதிகள், ஏழை குழந்தைகளுக்கான விடுதிகளிலும் மணிப்பூர், அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சின்ன சிறு குழந்தைகள் தங்கியிருப்பதை பார்க்கும்போது, ரத்தக்கண்ணீர் வடிக்கத்தான் தோன்றுகிறது.

இதைப் பற்றி உச்சநீதி மன்றத்தில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு, தேசிய கமிஷன் ஒரு திடுக்கிடும் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள கிறித்துவ கோவில்களுக்கு ஏழை குழந்தைகளை பராமரிக்கிறோம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு கருணை காட்டுகிறோம் என்று படம் பிடித்து அனுப்பினால், அங்குள்ளவர்கள் மனம் நெகிழ்ந்து ஏராளமான டாலர்களை நன்கொடையாக அளிக்கிறார்கள். இவ்வாறு வெளிநாட்டுக் கிறிஸ்தவ கோவில்களில் இருந்து, பணம் பெறுவதற்காக இங்குள்ள கிறிஸ்த்துவ அமைப்புகள் சில,  ஏமாற்றி இத்தகைய இழிவான செயல்களில் இறங்குவதை பார்க்கும்போது, நெஞ்சம் பதறுகிறது.

எல்லா அமைப்புகளையும் குறை சொல்ல முடியாது. சில சபைகள் நடத்தும் விடுதிகள் சிறப்பாக செயல்படுகின்றன. தனிப்பட்ட பாஸ்டர்கள், தனிப்பட்ட அமைப்புகள், தனிப்பட்ட நபர்கள் நடத்தும் விடுதிகள்தான் புகாருக்கு இடம் அளிக்கின்றன.

உண்மையிலேயே இவர்களுக்கு ஏழை குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்ற அக்கறை இருக்குமானால், தமிழ்நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளை பராமரிக்கலாம் அல்லது வடகிழக்கு மாநிலங்களிலேயே இத்தகைய விடுதிகளை அமைக்கலாம். ஏழ்மை, பசி, பட்டினி, நல்லக் கல்வி வசதியில்லாமை, பள்ளிகளுக்கு செல்ல சாலை வசதி இல்லாமை போன்ற காரணங்களால், அங்குள்ள பெற்றறோர், நாம்தான் கஷ்டப்படுகிறோம், நாம்தான் படிக்கவில்லை, நம் குழந்தைகளாவது நன்றாக படிக்கட்டுமே, நன்றாக சாப்பிடட்டுமே என்ற பாசத்தால், ஏங்கி தங்கள் குழந்தைகளை இத்தகைய விடுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அவர்கள் எண்ணம் ஒன்று, இங்கு நடப்பது வேறு. தங்கள் சின்ன சிறிய வயதில், தங்கள் தாய் மொழியில் படிக்க முடியாமல், இந்த மாநில மொழிகளில் படித்து, இங்கே எடுபுடி வேலை செய்து, அரை வயிற்கு கஞ்சி குடித்து வாழும், நிலமை மிக, மிக பரிதாபம். இந்த் விடுதிகளில் நடக்கும் சில சொல்லமுடியாத, அக்கிரமங்கள் அந்த சின்ன சிறு மலர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது.

இங்கே படித்து, இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கி இங்கே உள்ள மாநில மொழிகளில் படித்து, அவர்கள் எப்போது தங்கள் சொந்த மாநிலத்தில் போய் வேலை தேடி, தங்கள் பெற்றோரை பாதுகாப்பது? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

சமுதாயத்தில் நிலவும் பரிதாபமான சூழ்நிலைகளை பயன்படுத்தி வெளிநாட்டு கிறிஸ்த்தவர்களின் கருணையை தங்களுக்கு சாதகமான பாத்திரமாக கையில் எடுத்துக் கொண்டு, பணம் பறிக்கும் கருவிகளாக ஏழை குழந்தைகளை பயன்படுத்தும் படுபாதக செயல்களை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு விடுதியையும் நீ இதை நடத்துவதன் நோக்கம என்ன? உனக்கு எங்கே இருந்து பணம் வருகிறது? என்ன கணக்கு வைத்துள்ளாய்? வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை ஒழுங்காக செலவிடுகிறாயா? என்பதை எல்லாம் கண்காணித்து இரும்பு கரம் கொண்டு, அடக்க வேண்டும்.

தினத்தந்தி தலையங்கம் (9-8-2010)

தொடர்புடையவை:

ஆனந்த விகடனும் – பெரியாரும்

இதுதான் ஆனந்த விகடன்-குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை

தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு

ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்

குமுதத்தின் கயமை

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

அதிகமில்லை Gentleman, வெறும் 50 ரூபாதான்!

கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’

முற்போக்கு பார்ப்பனீயம்

`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை