டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி

எந்த அமைப்பும் வெளியிட முயற்சிகூட செய்யாத, அம்பேத்கர் திரைப்படத்தை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வெளியிடுகிறதே?

-ந. செந்தில்

ஆமாம் செந்தில், கொஞ்ச நாளா வானம் மேக மூட்டமா இருக்கு. சில நேரத்துல நல்லா மழையும் பெய்யுது.

பாரதியின் பிடியில் இருந்து மெல்ல விலகி, பெரியாருக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் தமுஎச முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வெளிவராமல் இருக்க நடந்த சதிகளை  நண்பர்களோடு இணைந்து அம்பலப்படுத்தினோம். தமுசஎசவின் இந்த முயற்சிக்கு ஏதோ ஒருவகையில் நாங்களும் காரணமாக இருப்போம் என்று நம்புகிறோம்.

டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளிகொண்டுவர வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் சத்தியசந்திரனுக்கும், தமிழகம் முழுவதும் 100 தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிற தமுஎசவிற்கும், அதை வெளியிடுவதற்காக ஆகும் செலவு தொகையில் ரூ. 6 லட்சத்தை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்ட மரியாதைக்குரிய எடிட்டர் லெனினுக்கும் – அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிடுவதற்காக முயற்சி செய்த எங்கள் குழு சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் சினிமாவில்  இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் இருக்கிற பல ‘முற்போக்காளர்கள்’ அம்பேத்கர் திரைப்படத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தங்களை ஜாதி இந்துக்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எடிட்டர் லெனின் அம்பேத்கர் பட வெளியீட்டில் தன் பங்களிப்பின் மூலமாக அவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார்.

எடிட்டர் லெனின்

அதுபோலவே அண்ணல் அம்பேத்கருக்கு முக்கியத்துவம் தரும் இந்த மாற்றத்திற்காக தமுஎசவிற்கும் அதன் பொதுச் செயலாளர் தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுபோலவே, ‘டாக்டர் அம்பேத்கரை ஜாதிகளுக்கு எதிரான குறியீடாக அடையாளப்படுத்தவேண்டும். குறிப்பாக அவரை தலித் அல்லதாவர்கள் தங்கள் தலைவராக கருதவேண்டும்’ என்று யாருமே அணியாத அம்பேத்கர் டி சர்ட்டை நாங்கள் கொண்டு வந்தோம். அதை ஓரளவிற்கு தலித் அல்லாத இளைஞர்களை அணியவும் வைத்தோம்.

தமுஎச போன்ற அமைப்புகள் முயற்சி செய்தால் அம்பேத்கர் டி சர்ட் அணிவதை இன்னும் பரவலாக்க முடியும். அம்பேத்கர் டி சர்ட்டை தமுஎச சார்பாகவே கொண்டு வந்து, தனது சங்கத் தோழர்கள் அதை அணிவதை கட்டயாப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மற்றப்படி, அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.

தொடர்புடையவை:

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்

‘மலையாளப் படத்தில் நடிப்பது கஷ்டம். தமிழ் படத்தில் சுமாராக நடித்தால் போதும்’ என்று நடிகர் ஆர்யா பேசியதை கண்டித்த வி.சி. குகநாதனை தமிழர், நடிகர் சரத்குமார் கண்டித்திருக்கிறாரே?

-ஜமால்

அரபு நாட்டில் நடந்த மலையாள நடிகர்களுக்கான விருது வழங்கும் விழாவில், வேறு மொழியில் நடிக்கும் மலையாளிக்கான கவுரவிருது நடிகர் ஆர்யாவிற்கு வழங்கப்பட்டது. அது ‘ஏசியாநெட்’ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானபோது நானும் பார்த்தேன்.

“நான் ஒரு மலையாளி’ என்று மலையாளத்தில் பேச ஆரம்பித்த ஆர்யா, தான் மலையாளத்தில் நடிக்காததிற்கான காரணமாக ‘திறமை’ யுடன் அதைச் சொன்னார்.

உண்மை அதுவல்ல. தமிழில் நடித்தால், துட்டு அதிகம் கிடைக்கும். மலையாளத்தில் நடித்தால் சோத்தப் போட்டு ஏதோ கொஞ்சம் கொடுப்பாங்க போல… அதானால்தான் ஆர்யா, மலையாளிகள் தன்னை மலையாளப் படத்தில் நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப் போறங்க.. என்று பயந்து, இப்படி உளறிக் கொட்டியிருக்கிறார்.

இது மலையாள பாசம் இல்ல;  பணப் பாசம். இன உணர்வல்ல; பண உணர்வு.

கேரளாவில் நேரடியாக வெளியாகிற மிக மோசமான தமிழ் சினிமாக்களோடு வர்த்தக ரீதியாக போட்டி போட முடியாமல் மலையாள சினிமாக்கள் நலிவுற்றுக் கிடக்கிறது. மம்முட்டி, மோகன்லால் போன்ற நட்சத்திர நடிகர்களின்  படங்களையே திரையிடுவதற்கு முடியாமல், தமிழ் படங்களின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது அங்கே மலையாளிகளி்ன் தியேட்டர்கள்.

பாவம் மலையாளிகள், டப்பிங்கூட செய்யாமல் நேரடியாக தமிழ் படத்தை மிகத் தீவிரமாக பார்த்துக் கொண்டும், தமிழ் படங்களின் மிக மோசமான குத்தாட்டாப் பாடல்களுக்கு ஆடிக் கொண்டும் இருக்கிறார்கள் . இதை விட பெரிய தண்டனையை மலையாளிகளுக்கு தமிழர்கள் தந்துவிட முடியுமா?

ஒப்பிட்டளவில், தமிழ் சினிமாக்களை விடவும் மலையாள சினிமாக்கள் சிறப்பாக இருந்தது…. அது ஒருகாலம். ஆனால், இப்போது தமிழ் சினிமாக்களின் தாக்கத்தால், தமிழ் சினிமாக்களையே நல்ல சினிமாக்களாக காட்டுகிற அளவிற்கு மிக மோசமான சினிமாக்களை தந்து கொண்டிருக்கிறார்கள் மலையாளிகள்.

இது குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மலையாள நடிகர் திலகன்:

“மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி  சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள்.

கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள். கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.” என்று கொதித்திருக்கிறார்.

எப்போதுமே, தமிழ் சினிமாவில் வாய்ப்பிழந்த நடிகர், நடிகைகளின் கடைசி புகலிடம் அல்லது டி.வி. சிரியலுக்கு முந்தைய காலம் மலையாளப் பட உலகம்தான். நடிகை ஷோபாவை காப்பி அடித்து நடித்த சுகாசினி,  நடிக்கவே தெரியாத ரம்பா, தேவயானி  இன்னும் பல நடிகர் நடிகைகள் தமிழர்களை சித்திரவதை செய்துவிட்டு அடுத்ததாக அவர்களின் தாக்குதலை மலையாளிகள் மீதுதான் நடத்தியிருக்கிறார்கள்.

தமிழன் என்கிற உணர்வால், ஆர்யாவை கண்டிப்பதாக சொல்லுகிற வி.சி. குகநாதன், தமிழ் படங்கள் மீதுள்ள வர்த்தக போட்டியை, தமிழர்களுக்கு எதிரான கருத்தாக மாற்றி தமிழர்களை சுத்தமற்றவர்களாக, பொறுக்கிகளாக தொடர்ந்து தனது படங்களில் சித்தரித்து, மலையாளிகளை தமிழர்களுக்கு எதிராக கொம்பு சிவீ விடுகிற  மோகன்லால், ஜெயராம் போன்ற நடிகர்களை எதிர்த்து என்ன செய்திருக்கிறார்?

தமிழ் நடிகர்களை திட்டினால்தான் வரும், தமிழர்களை திட்டினால் வராதோ? அதாங்க…குகநாதனுக்கு கோவம்.

மலையாள படஉலகில் மோகன்லால், மம்முட்டிகூட ரெண்டாவது கதாநாயகனாக நடிச்சிகிட்டு இருக்கிற நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்; குகநாதனை கண்டிச்சி தன் விசுவாசத்தை காட்டியிருக்கார். பாக்கலாம் ஏதாவது பெரிய மலையாளப் படத்தல முக்கியமான ரோல் கிடைக்குதான்னு.

மலையாள பட உலகில் மம்முட்டி, மோகன்லால் இவர்களை விட பெரிய நடிகரா சரத்குமார் வந்தார்ன்னா…. தமிழனுக்குதானேங்க பெருமை.

‘எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தமிழர்களை ஆட்டி வைத்த மலையாளிகளே உங்களை ஆட்டி வைக்க இதோ வந்திருக்கிறார் ஒரு தமிழன் அதுவும் பச்சைத் தமிழன்’ என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா?

அப்படியே கேரளாவின் முதலமைச்சரா ஆயிட்டாருன்னா… பழிக்கு பழி.

தொடர்புடையவை:

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்

ஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

அமெரிக்காவின் அப்துல்கலாமே…வெள்ளை மாளிகையின் கறுப்பு புஷ்ஷே… வருக வருக

https://i1.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2008/11/barack-obama-in-bowling-shoes.jpg?w=474

ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது,   7-11-2008 அன்று விமலின் கேள்விக்கு எழுதிய பதில்; ஒபாமாவின் இந்திய வருகையொட்டி மீண்டும் பிரசுரிக்கிறேன்.

கறுப்பர் இனத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே?

விமல்

தற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நா சபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான்.

அவர் காலத்தில்தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்துமீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது.

அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார்.

அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறையையும் ,  அமெரிக்க அதிபரின் பிரிதிநிதியாகவும், அவரின் குரலாகவே பேசுகிற கண்டலிசா ரைஸ் ஓர் கறுப்பர்தான், அதுவும் பெண். அவர் என்ன சோமாலியா மாதிரி சோத்துக்கே சாகிற கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேத்திட்டாரா?

எந்த நாட்டை போய் சுரண்டலாம்? இன்னும் எந்த எந்ந நாட்டில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்கள் இருக்கிறார்கள், அந்த மாதிரி ஆட்களைப் புடிச்சி அணு ஒப்பந்தம் மாதிரி ஒண்றை போட்டு எப்படி அந்த நாட்டு மக்களின் தலையை தடவுலாம்ன்னு அய்டியா கொடுக்கிறதுதான் அந்தம்மா வேலை.

ஆக, ஒட்டு மொத்த சமூக மாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவ ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக‘ முன்னேறலாம்.

‘எங்க சமூகத்தை எவன் எவனோ ஏமாத்துன்னான். நான் ஏமாத்தக் கூடாதா?’ என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.

ரஷ்யாவில் ஜார் மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடி சூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், ஜார் மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் லெனின் இருந்திருப்பார்.

ஆனால், தலைவர் லெனின் தலைமையிலான உழைக்கும் மக்கள், மன்னராட்சியை தூக்கியெறிந்து, அதுவரை இருந்த அடிமை ரஷ்யாவை தலைகீழாகப் புரட்டி, புதிய சோசலிசக் குடியரசை உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார்கள். மாற்றம் அல்லது புரட்சி என்பது அதுதான்.

***

மெரிக்கா என்பது ஒரு அரசல்ல. அது மிகப் பெரிய முதலாளிகள், பெட்ரோலிய எண்ணெய் அதிபர்களின் பாதுகாவலன். அந்த முதலாளிகள் உலகம் முழுவதும் சென்று வர்த்தகத்தின் பேரில் சுரண்டுவதற்கு, வழி செய்து கொடுப்பதுதான் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வேலை. அந்த வேலைக்கு சமீபகாலமாக மிகப் பெரிய வில்லங்கம் வந்திருக்கிறது.

புஷ்ஷின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் அமெரிக்கா, உலகம் முழுக்க குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மத்தியிலும், ஆப்பரிக்க மற்றும் அரபு நாடுகளின் மக்கள் மத்தியிலும் மிக மோசமான பெயரை சம்பாதித்திருக்கிறது. அமெரிக்க மக்களிடமும் அதே நிலைதான். இந்த அவப் பெயர் வர்த்தக சூதாட்டத்திற்கு பெரியத் தடை.

வர்த்தகத்தின் அடிப்படை, முதலில் நற்பெயர். நற்பெயர் எடுத்தால்தான் எந்த பொருளையும் விற்கவே முடியும். அதன் பிறகுதான் சூதாட்டம். லாபம். கொள்ளை லாபம்.

உலகம் முழுக்க அப்பொடியொரு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அமெரிக்கப் பெறும் முதலாளிகளின் ஆதரவுப் பெற்ற கறுப்பர் ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதனால்தான் அவரின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

அப்புறம் என்ன லாபாம், கொள்ளை லாபம்தான்.

இந்தத் தந்திரத்தை இன்னும் எளிதாக புரிந்து கொள்வதற்கு இந்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன்.

பாஜக ஆட்சியில் இருக்கும் போது, ‘அது இந்து மதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி‘ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர் வேண்டும்’ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டும்‘ என்று ஒரு பொதுக்கருத்தை உருவாக்கியது.

அந்த தந்திரத்தை எதிர்கொள்ள முடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.

ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.

-வே. மதிமாறன்

7-11-2008

அடியாளையும் கூலிப்படைத் தலைவனையும் பழித் தீர்க்க உறுதி ஏற்போம்


 

தீபாவளி அன்று கருப்பு உடை தரித்து நரகாசுரனுக்கு (திராவிடர் தலைவனுக்கு) வாழ்த்துக் கூறி வலம் வருவதுடன், ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காக துக்கப்பட வேண்டியதை விளக்கி துக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தந்தை பெரியார்.

பார்ப்பன ஜாதி ஆதிக்கத்தை தூக்கி நிறுத்தி, பிற்படுத்தப்படட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  பெரும் தீங்கிழைத்து  – பேரரசன் ராவண அசுரனை வஞ்சகமாக கொன்ற அடியாள் ராமனை பழித்தீர்க்க,

தேவர்களுக்காக (பார்ப்பனர்களுக்காக) அசுர குல தலைவன் நரகா அசுரனை கொன்று, அநீதியை நிலைநாட்டிய தீயவன், உலகின் முதல் கூலிப்படைத் தலைவன் கண்ணனை பழிதீர்க்க, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து போராடுவோம் என்று மாவீரன் நரகா அசுரன் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

தொடர்புடையவை:

பிண ‘வாசத்தை’ மீறும் பூ நாற்றம்

‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வற்ரான் சொம்பெடுத்து உள்ள வை

கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

விநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே