ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்

‘மலையாளப் படத்தில் நடிப்பது கஷ்டம். தமிழ் படத்தில் சுமாராக நடித்தால் போதும்’ என்று நடிகர் ஆர்யா பேசியதை கண்டித்த வி.சி. குகநாதனை தமிழர், நடிகர் சரத்குமார் கண்டித்திருக்கிறாரே?

-ஜமால்

அரபு நாட்டில் நடந்த மலையாள நடிகர்களுக்கான விருது வழங்கும் விழாவில், வேறு மொழியில் நடிக்கும் மலையாளிக்கான கவுரவிருது நடிகர் ஆர்யாவிற்கு வழங்கப்பட்டது. அது ‘ஏசியாநெட்’ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானபோது நானும் பார்த்தேன்.

“நான் ஒரு மலையாளி’ என்று மலையாளத்தில் பேச ஆரம்பித்த ஆர்யா, தான் மலையாளத்தில் நடிக்காததிற்கான காரணமாக ‘திறமை’ யுடன் அதைச் சொன்னார்.

உண்மை அதுவல்ல. தமிழில் நடித்தால், துட்டு அதிகம் கிடைக்கும். மலையாளத்தில் நடித்தால் சோத்தப் போட்டு ஏதோ கொஞ்சம் கொடுப்பாங்க போல… அதானால்தான் ஆர்யா, மலையாளிகள் தன்னை மலையாளப் படத்தில் நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப் போறங்க.. என்று பயந்து, இப்படி உளறிக் கொட்டியிருக்கிறார்.

இது மலையாள பாசம் இல்ல;  பணப் பாசம். இன உணர்வல்ல; பண உணர்வு.

கேரளாவில் நேரடியாக வெளியாகிற மிக மோசமான தமிழ் சினிமாக்களோடு வர்த்தக ரீதியாக போட்டி போட முடியாமல் மலையாள சினிமாக்கள் நலிவுற்றுக் கிடக்கிறது. மம்முட்டி, மோகன்லால் போன்ற நட்சத்திர நடிகர்களின்  படங்களையே திரையிடுவதற்கு முடியாமல், தமிழ் படங்களின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது அங்கே மலையாளிகளி்ன் தியேட்டர்கள்.

பாவம் மலையாளிகள், டப்பிங்கூட செய்யாமல் நேரடியாக தமிழ் படத்தை மிகத் தீவிரமாக பார்த்துக் கொண்டும், தமிழ் படங்களின் மிக மோசமான குத்தாட்டாப் பாடல்களுக்கு ஆடிக் கொண்டும் இருக்கிறார்கள் . இதை விட பெரிய தண்டனையை மலையாளிகளுக்கு தமிழர்கள் தந்துவிட முடியுமா?

ஒப்பிட்டளவில், தமிழ் சினிமாக்களை விடவும் மலையாள சினிமாக்கள் சிறப்பாக இருந்தது…. அது ஒருகாலம். ஆனால், இப்போது தமிழ் சினிமாக்களின் தாக்கத்தால், தமிழ் சினிமாக்களையே நல்ல சினிமாக்களாக காட்டுகிற அளவிற்கு மிக மோசமான சினிமாக்களை தந்து கொண்டிருக்கிறார்கள் மலையாளிகள்.

இது குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மலையாள நடிகர் திலகன்:

“மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி  சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள்.

கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள். கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.” என்று கொதித்திருக்கிறார்.

எப்போதுமே, தமிழ் சினிமாவில் வாய்ப்பிழந்த நடிகர், நடிகைகளின் கடைசி புகலிடம் அல்லது டி.வி. சிரியலுக்கு முந்தைய காலம் மலையாளப் பட உலகம்தான். நடிகை ஷோபாவை காப்பி அடித்து நடித்த சுகாசினி,  நடிக்கவே தெரியாத ரம்பா, தேவயானி  இன்னும் பல நடிகர் நடிகைகள் தமிழர்களை சித்திரவதை செய்துவிட்டு அடுத்ததாக அவர்களின் தாக்குதலை மலையாளிகள் மீதுதான் நடத்தியிருக்கிறார்கள்.

தமிழன் என்கிற உணர்வால், ஆர்யாவை கண்டிப்பதாக சொல்லுகிற வி.சி. குகநாதன், தமிழ் படங்கள் மீதுள்ள வர்த்தக போட்டியை, தமிழர்களுக்கு எதிரான கருத்தாக மாற்றி தமிழர்களை சுத்தமற்றவர்களாக, பொறுக்கிகளாக தொடர்ந்து தனது படங்களில் சித்தரித்து, மலையாளிகளை தமிழர்களுக்கு எதிராக கொம்பு சிவீ விடுகிற  மோகன்லால், ஜெயராம் போன்ற நடிகர்களை எதிர்த்து என்ன செய்திருக்கிறார்?

தமிழ் நடிகர்களை திட்டினால்தான் வரும், தமிழர்களை திட்டினால் வராதோ? அதாங்க…குகநாதனுக்கு கோவம்.

மலையாள படஉலகில் மோகன்லால், மம்முட்டிகூட ரெண்டாவது கதாநாயகனாக நடிச்சிகிட்டு இருக்கிற நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்; குகநாதனை கண்டிச்சி தன் விசுவாசத்தை காட்டியிருக்கார். பாக்கலாம் ஏதாவது பெரிய மலையாளப் படத்தல முக்கியமான ரோல் கிடைக்குதான்னு.

மலையாள பட உலகில் மம்முட்டி, மோகன்லால் இவர்களை விட பெரிய நடிகரா சரத்குமார் வந்தார்ன்னா…. தமிழனுக்குதானேங்க பெருமை.

‘எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தமிழர்களை ஆட்டி வைத்த மலையாளிகளே உங்களை ஆட்டி வைக்க இதோ வந்திருக்கிறார் ஒரு தமிழன் அதுவும் பச்சைத் தமிழன்’ என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா?

அப்படியே கேரளாவின் முதலமைச்சரா ஆயிட்டாருன்னா… பழிக்கு பழி.

தொடர்புடையவை:

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்

ஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

9 thoughts on “ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்

 1. மரியாதைக்குறிய வே.மதிமாறன் சார், நலமா? – வழக்கம் போல் பொளந்து கட்டியிருக்கிறீர்கள். இப்போதெல்லாம் படங்களில் கதை இல்லை, குத்தாட்டம் இருக்கிறது – நடிகர்களிடம் நடிப்பு இல்லை, பணம், அரசியல் என்ற ஆசை மட்டும் இருக்கிறது.

 2. //
  இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.
  //
  என்ன பண்றது, இப்போ மாபியா கும்பலின் ஆதிக்கத்தில் மேலும் பல குப்பைகள் கொட்டப்படும்.

 3. அட உலகத்தையே தங்கள் வசப்படுத்தி இருக்கும் மலையாளிகளை நம்ம தமிழ் சினிமா அடிச்சி காலி பண்ணுதா… ந்ல்லதுதானே. கொஞ்சநாளைக்கு இருக்கட்டும் தலைவா.

  இருந்தாலும் சிறப்பான பதிவுதான்

 4. வணக்கம் தோழர். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் எழுதியமை குறித்து மிக்க மகிழ்ச்சி. மலையாள திரையுலகம் மட்டுமல்ல எழுத்துலகும் கெட்டு சீரழிந்து பல காலமாகிவிட்டது. சாருநிவேதிதாவை எல்லாம் கொண்டாடுகிறார்களே…

 5. விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!!

  தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். இவரது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்.

  விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துகிறார்கள் அங்கும்.

  இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில்.

  இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம்.

  சமீபத்தில் ஒத்தப்பாலம் அருகே தனது காவலன் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் இந்த சிலையை ஒரு தேரில் வைத்து இழுத்து வந்து காட்டினார்களாம் ரசிகர்கள். இதைப் பார்த்து நெகிழ்ந்த விஜய், அந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  ஷோரனூரில் இப்போது அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஒரு தமிழ் நடிகருக்கு சிலை வைக்கப்படுவது இதுவே முதல்முறை என்கிறார் விஜய்யின் மேனேஜரும் பிஆர்ஓவுமான பிடி செல்வகுமார்.

Leave a Reply

%d bloggers like this: