“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

திராவிட ஆட்சியை ஒழித்துவிட்டு, ஆரிய ஆட்சியை கொண்டுவர பார்க்கிறார்கள் என்றும், தினமணி, தினமலர் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகளையும் கலைஞர் கடுமையாக சாடி உள்ளாரே?

-கு. முருகன்

‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில், கவுண்டமணியை பார்த்து செந்தில், “அண்ணே நீங்க எவ்ளோ நல்லவரு…” ன்னு சொன்னவுடனேயே, சுற்றி நிற்பவர்கள் ‘குபீர்’ன்னு சிரிப்பார்கள். அதுபோல் கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு பேச்சை கேட்டால் நமக்கும் ‘குபீர்’ன்னு சிரிப்புத்தான் வருது.

முதலமைச்சருக்கு அடுத்தபடியாக மிக அதிகாரம் மிக்க பதவியான தலைமைச் செயலாளர் பதவியை எல்.கே. திரிபாதி, கே.எஸ்.ஸ்ரீபதி, எஸ்.மாலதி என்று வரிசையாக தொடர்ந்து பார்ப்பனர்களுக்குத்தான் தந்திருக்கிறார். அதன் காரணமாக அல்லது ஸ்ரீபதியின் பரிந்துரையின் பேரில் செம்மொழி மாநாடு உட்பட திராவிட – தமிழ்தன்மை கொண்டதாக சொல்லிக்கொள்ளப்படுகிற அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பார்ப்பனத் தன்மை கொண்ட தொகுப்புரையை சுதா சேஷைய்யர் என்பவர்தான் வழங்கினார்.

கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ், சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்ற திறமையானவர்களுக்கு  தலைமைச் செயலாளர் பதவி தரவில்லை என்பது மட்டுமல்ல; நிதி, உள்துறை, பொதுப்பணி, கல்வி, சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில்கூட அவர்களை நியமிக்கவில்லை.

திலகவதி ஐ.பி.எஸ் போன்றவர்களும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வந்திருக்கிறார்கள்.

பல திறமைசாலிகளை பணிமூப்பு அடைப்படையிலும் புறக்கணித்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, மீனா என்கிற பார்ப்பனரையே நியமித்தார்.

சங்கரராமன் கொலைவழக்கில் இருந்து ஜெயேந்திரனை விடுவிக்கும் முயற்சியில், பிராமண சங்கத்தைவிட அதிகம் ஆர்வம் தமிழக அரசு சார்பில்தான் காட்டப்படுகிறது. அல்லது அந்த வழக்கில் அரசு தரப்பு தோல்வியடைய வேண்டும் என்ற அளவில் சாட்சிகள் சர்க்கஸ் பல்டிகள் அடித்துக் கொண்டு இருக்கிறது.

பார்ப்பன சுப்பிரமணியசாமிக்காக, உயர்நீதிமன்றத்தில் போலீஸ் நுழைந்து வழக்கறிஞர்களை தாக்கியது.

ஆக, ஆரிய ஆட்சி அமலில் இருக்கும்போது, அதை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்பது லாஜிக்காக இல்லை. மாறாக, ‘அண்ணே நீங்க எவ்ளோ நல்லவரு…’ வசனத்தைதான் நினைவூட்டுகிறது.

எல்லாவற்றையும்விட மிக கொடுமையானது, இவருக்கு கலைஞர் என்ற பட்டத்தை தந்த பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர். ராதாவை, பார்ப்பன எஸ்.வி. சேகரோடு  ஒப்பிட்டு கேவலப்படுத்தியது.

‘தினமணி’ என்கிற நாளிதழ், ‘தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்களை இன்னும் ஏன் தூக்கில் போடாமல் இருக்கிறது இந்த அரசு?’ என்று கடந்த மாதம் மிகக் கடுமையாக, மோசமாக மனிதாபிமானம் அற்றவகையில் தலையங்கம் எழுதியபோது, ‘எக்ஸ்பிரஸ் வர்த்தக கட்டிட’த்தை திறந்து வைத்து தினமணியை புகழ்ந்து கொண்டு இருந்தார் கலைஞர்.

(தினமணியோடு டையப் வைத்துக்கொண்டு, திமுகவை எதிர்ப்பது மட்டுமே தங்கள் கொள்கையாக கொண்ட, ‘கருணாநிதி மட்டும்தான் தமிழர்களுக்கு தீங்கு செய்தார்’  என்று எழுதுகிற ‘உண்ர்வாளர்களும்’  தினமணியின் மோசடியை கண்டிக்கவில்லை.)

ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்றகுவித்துக் கொண்டிருந்தபோது, ‘இந்து’, ‘தினமலர்’ போன்ற நாளிதழ்கள் அதை நியாயப்படுத்தி சிங்கள அரசுக்கு ஆதரவாக எழுதியபோதும், அவைகளின் பார்ப்பனத் தன்மை கலைஞருக்கு தெரியாமல் போனது ஏன்?

இப்படி எல்லாம் பார்ப்பன சேவகத்தில் ஈடுபட்டு தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு வேண்டுமானல் முடியுமே தவிர, ஒரே ஒரு பார்ப்பன ஓட்டைக்கூட திமுகவிற்கு ஆதரவாக கலைஞரால் பெற முடியாது. அந்த வகையில் வேண்டுமானல் இதை திராவிட ஆட்சியாக அடையாளப்படுத்தலாமே தவிர, மற்றபடி…..

தொடர்புடையவை:

தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

ஆனந்த விகடனும் – பெரியாரும்

துதான் ஆனந்த விகடன் – குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை

பார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

பிரபாகரன் இருக்கின்றாரா?

பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை

9 thoughts on ““அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

 1. மதிமாறன் அண்ணே,

  நீங்க எவ்வளோ புத்திசாலி.

 2. நீ ரொம்ப ..நல்லவரு கட்டுரை அருமை,
  கலைஞரின் வேடத்தை கலைந்துள்ளீர்கள்,இனி தமிழர்கள் ,கலைஞரை தமிழ் இன காவலனாக எண்ணி ஏமாற மாட்டார்கள்,
  ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகம் காலத்தால் மாற்ற முடியாதது,இந்தி எதிர்ப்பு,பகுத்தறிவாதம், பேசி வளர்ந்த தி,மு,க இன்று இல்லை,இது உண்மையில் திராவிட ஆட்சி இல்லை,ஆரியர்களுக்கான ஆட்சி தான் நடக்கிறது,சோனியாகாந்தியை குளிர்விப்பதிலும்,தன் குடும்பத்திற்கு பதவிகளை பங்கு பிரிப்பதிலும் தான் கலைஞரின் கவனம் உள்ளது,
  தமிழர்களின் ஒரே தலைவன் நம் தேசிய தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் தான,
  அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்
  இப்படிக்கு
  இரா.வெங்கடேஷ்

 3. காசிமேடு மன்னாரு.789 வேர்டுபிரஸ்.காம். says:

  பார்ப்பன தினமலம் பத்திரிகை என்பது இராசபக்சேயின் கணிசமான உதவியோடும் இலங்கைத் தூதரகத்தின் நிதி உதவியோடும் நடத்தப் படுகிறது என்பது அதன் எழுத்துப் பணியாளர்கடங்கிய பத்திரிகையாளர் குழு இலங்கைப் பயணம் மேற்கொண்டு இலங்கா இரத்னா விருதையும் காங்கிரசுக் கட்சியின் தலைவர் இராசபக்சேயைக் கண்டு அவரின் மிகப் பெரும் ஆசியையும் பெற்றுவந்தபோதே தெரிந்து விட்டது. இந்த சேதி உளவுத்துறையை தன் பாக்கட்டில் முடிந்து வைத்திருக்கும் கருணாவுக்குத் தெரியாதா என்ன? பார்ப்பனர்களுக்கு சேவகம் செய்து அவர்களை வாழவைப்பதில், கருணாவை மிஞ்ச யார் உண்டு தமிழகத்தில்? இருந்தும் பார்ப்பன மாமாக்கள் சிலநேரம் தரும் குடைச்சல் அதிகரிக்கும் போது இப்படிப்பட்ட புலம்பலும் கோபமும் கருணாவிடமிருந்து வெளிப்படும். என்றாலும் கருணாவின் இந்த கோபம் மலர்செண்டால் பார்ப்பன மாமாக்களை அடிக்கும் கோபம் தான் என்பது மாமாக்களுக்கும் தெரியும்! இவர் என்னதான் பார்ப்பானின் காலைச் சுற்றினாலும், அவர்களைத் தூக்கி உப்பரிகையில் வைத்தாலும், நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்பது போன்ற நிலைதான்! ஒரு பார்ப்பான் கூட மனமிரங்கிகூட கருணாவுக்கு தன் வாக்கை செலுத்த மாட்டான். காங்கிரசுக் கட்சித்தலைவர் இராசபக்சேவுக்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் தந்த சிறப்பு மரியாதையினால் கொதித்து வேகும் இங்குள்ள கொலைகாரக் காங்கிரசுக் காரனின் மனநிலையோடு இந்த கருணாவும் கைகோர்த்தே உள்ளார்.
  ஊத்த வாயன் காஞ்சி சங்கரனை காப்பாற்ற பார்ப்பனர் சங்கத்தை விடவும் அதிக முயற்சி செய்வது கருணாவின் அரசுதான் என்பதில் பார்ப்பனர்கள் கருணாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள்! ஆனாலும் கருணாவுக்கு, பார்ப்பனர்கள் தன் வாக்குகள் மூலம் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவார்கள் என்று காத்திருக்கும் கருணா கண்டிப்பாக ஏமாந்தே போவார்.
  எந்த சோப்பு போட்டாலும் தன் அழுக்கை பார்ப்பனர்கள் களைய மாட்டார்கள்! மனிதனாகவும் மாறமாட்டார்கள்.
  பார்ப்பனர்களைப் பற்றி சரியான பதிவைத் தந்த நண்பர் மதிமாறனுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
  காசிமேடு மன்னாரு.789 வேர்டுபிரஸ்.காம்.

 4. நான்தமிழன்.திராவிடன்அல்ல.
  தமிழா,
  பள்ளனாய், பறையனாய்,
  நாடானாய், தேவனாய்,
  வன்னியனாய், பரவனாய்,
  பிள்ளையாய், கவுண்டனாய்,
  மள்ளனாய், குயவனாய்……
  வாழ்ந்தது போதும்.
  வா – தமிழா
  தமிழனாய் வாழ்வோம்.
  வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
  “பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
  தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி ”
  ”தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!

 5. நாங்கள் ஏமாற என்ன தி.க.,தி.மு.க.,போன்ற கட்சி தொண்டரா?அல்லது வடுக வந்தேறி பொட்டுகட்டி தொண்டரடி பொடியரா?காமராஜரை என்ன செய்தீர்கள் என்பது தெரியும்!அவர் தமிழர் என்ற காரணத்துக்காகவே அவரை சீனிவாசன்என்ற தெலுங்கனை கொண்டு எல்ல வந்தேறி வடுக கூடமும் தோற்கடித்தது!கர்நாடகத்தில்,ஆந்திராவில் மராடியத்தில்,கேரளத்தில்….எங்குமே தமிழனுக்கு எந்த உரிமையும் கிடையாது!இங்கு மட்டும் என்னடா?எல்லாருக்கும் உரிமை?
  தடாவுக்கு முதலில் வாக்களித்தது யார்?வடுக வந்தேறி வை.கோ.உங்கள் வடு கூத்துகளும்,விளையாடுகளும் முடிந்தபின் அது தமிழ் உணர்வாக தமிழர் தலையில் கட்டபட்டு தமிழர் நலனும் தமிழ் இனமும் அழிக்கபட்டது!அழிக்கப்படுகிறது!!

Leave a Reply

%d bloggers like this: