‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

‘இது தாண்டா வீரம்’‘இது தாண்டா வீரம்’

உங்கள் புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். உங்களுக்கு குறிப்பிட்ட சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி அதிகம். ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறார்களே அது உங்களைப் பொறுத்தவரை சரிதான்.

-பெயர் குறிப்பிடவில்லை.

ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் மட்டும்தான் நக்கி குடிக்கும்; சிங்கம் என்ன ‘சொம்புல‘ மொண்டா குடிக்கும்? அதுவும் நக்கித்தான் குடிக்கும்.

இதுபோன்ற பழமொழிகள் – தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கவே பயன்படுகிறது. அதிகாரத்திற்கு வந்த யாரோ ஒரு சிலர் செய்கிற தவறுகளை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தின் மீதே சுமத்தி, அவர்களை இழிவாக சுட்டிக் காட்ட ஆதிக்க ஜாதிக்காரர்களால் காழ்ப்புணர்ச்சியோடு பயன்படுத்தப்படுகிறது.

அதே தவறை ஆதிக்க ஜாதிக்காரர்கள் செய்யும்போது, அதை அவர்கள் சார்ந்த ஜாதியோடு தொடர்பு படுத்தி பார்ப்பதில்லை. இது தான்ஆதிக்க ஜாதி மனோபாவம்.

அதுமட்டுமல்லாமல், தனக்கு பயப்படுகிற விலங்குகளை மட்டமாகவும், தான் பயப்படுக்கிற விலங்குகளை வீரமாகவும் மதிப்பிடுகிற மனோபாவமும் இத்துடன் சேர்ந்து கொள்கிறது.

சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றை வீரத்திற்கு அடையாளமாக காட்டுகிறார்கள். ஆனால், அவைகள் வீரமான மிருகங்கள் அல்ல. சிங்கம், புலி, சிறுத்தை தன்னைவிட பலவீனமான ஆடு, மாடு, மான் போன்றவற்றை வேட்டையாடி தின்கிறது. இது எப்படி வீரமாகும்?

அவைகளை ஆதிக்கத்திற்கான குறியீடாக வேண்டுமானால் பயன்படுத்தலாம். எளிய ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள ராணுவத்தையும், அப்பாவி ஈராக் மக்கள் மீது படையெடுத்து அவர்களை கொன்ற அமெரிக்க ராணுவத்தையும் குறிப்பிடுவதற்கு சிங்கம், புலி, சிறுத்தை குறியீட்டை  பயன்படுத்தலாம்.

தன்னைவிட பலமான கழுகோடு சண்டையிட்டு அதை விரட்டியடித்து, தன் குஞ்சுகளை காக்கிறதே கோழி, அதுதான் வீரம். அமெரிக்கா என்கிற ஆதிக்கக் கழுகை விரட்டியடித்து,  வெற்றிக் கண்டு தன் நாட்டை பாதுகாத்த எளிய வியட்நாம் மக்களைப் போல்.

‘என்னங்க இது..? நம்ம கொழம்புல கொதிக்குது கோழி.. அதபோய் வீரம்னு சொல்றீங்க..!’ -என்று அலுத்துக்காதீங்க. நீங்க அலுத்துக்க மாட்டிங்க… நீங்கதான் சைவமாச்சே.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் டிசம்பர் 2010 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பக்திப் படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

13 thoughts on “‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

  1. கருத்து வேறுபாடு இருந்தால் தம்முடைய தரப்பு நியாயத்தை எடுத்து விளக்குவதே இணைப்பை உருவாக்கும்.

    பள்ளி சிறுவர்களை போல திட்டுதல் முதிர்ச்சி இன்மையையே காட்டுவதாகும். கண்ணியமற்ற வார்த்தைகளை உபயோகிப்பது ஏற்புடையதல்ல.

    சக மனிதனை எவ்வளவு தூரம் ஒருவன் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்துகிறானோ அவனே அதிக நாகரீகம் உடையவன் (Gentle man) ஆவான். அடுத்தவரை சிறுமைப் படுத்துவது தன்னை உயர்த்தும் என்று நினைப்பது அறியாமையே.

    எத்தனை காலம் வாழப் போகிறோம், முடிந்தால் அடுத்தவருக்கு உதவி செய்வோம், இல்லையேல் அடுத்தவருக்கு துன்பம் தராமலாவது வாழ்வது நல்லது.

  2. திருச்சிக்காரன் சார், நீங்கள் கொடுத்த definition படி gentle man யாரென்று கேட்ட கேள்வியிலேயே தெரிகிறது, இல்லையா சார்..? ‘நாய்..’ என்றெல்லாம் சக மனிதரை விளிக்க பயன்படுத்துகிறார்களே..! இது தான் ஆதிக்க புத்தியோ என்னவோ..?

  3. Well said..

    Those who can’t stand a equal or stronger opponent gain gratification and feel powerful by beating down the helpless without realizing it’s the ultimate cowardliness..

    Although i agree that using harsh words wouldn’t help convey the message to everyone, sometimes it’s inevitable.

    I do believe saying things arguably in such a way even our stupid opponent would listen to is where our key to success rests. So long as our aim is to educate ignorant people about rights and wrongs, we better compliment to their inability to understand and appreciate the matter by saying the facts the way they would also like…

    Otherwise, I completely agree with facts and w.r.t to this post I don’t find it harsh or anything. The answer is only as hot as the question – in fact, it suits the question well.

  4. அன்புக்குரிய இஸ்மாயில் அவர்களே,

    அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
    இகழ்வாரைப் பொறுத்தல் தலை

    என்றார் வள்ளுவர்.

    மற்றபடி ஆதிக்க புத்தி, அவசர புத்தி , அடாவடி புத்தி…. என்று யாரையுமே பிராண்ட் செய்து கட்டம் கட்ட நாம் விரும்பவில்லை.

    நாம் அனைவருமே அடிப்படையிலே நல்லவர்கள்தான் (gentle man). சூழ்நிலை, நண்பர்கள், சுற்றி நடக்கும் செயல்கள் , படிக்கும் புத்தகம், கேட்கும் பேச்சு …. போன்றவைகளின் தாக்கத்தாலே ஒருவரின் குணாதிசயம் மாறுகிறது என்று கருதுகிறேன்.

    உங்களுடைய வார்த்தைகளிலே சொன்னால் நல்ல புத்திக்காரர் கள் – ஆதிக்க புத்திக்கோ, அவசர புத்திக்கோ, அடாவடி புத்திக்கோ தங்கள் புத்தியை செலுத்தி இருந்தால் –
    அவர்கள் தங்கள் இயல்பான நல்ல புத்திக்கு வரும்படியாக நல்ல கருத்துக்களை அனைவருக்கும் எடுத்து செல்வது நம் பணியாக இருக்கட்டும்.

    மொத்தத்திலே ஒவ்வொரு மனிதரும் பிற மனிதரை நாகரீகத்துடன் அணுகும் வகையில் தன புத்தியை நிதானமாக வைத்திருக்க வேண்டும் என்று நாம் கோருகிறோம்.

  5. //‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?//
    ஹா! ஹா! மரண அடி சார் இது! இவ்ளோ (பெரிய) குறுகிய ஹைக்கூ சவுக்கடி பிறகு நீங்கள் எந்த மாதிரியான விளக்கமும் கொடுத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லைங்க. பாவம், அவரை இதோடு விட்டுடுங்க. வெக்கம் தாளாம அவசரப்பட்டு ஏதாவது தப்பான காரியம் செய்ஞ்சிட போராரு.

  6. சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றை வீரத்திற்கு அடையாளமாக காட்டுகிறார்கள். ஆனால், அவைகள் வீரமான மிருகங்கள் அல்ல. சிங்கம், புலி, சிறுத்தை தன்னைவிட பலவீனமான ஆடு, மாடு, மான் போன்றவற்றை வேட்டையாடி தின்கிறது. இது எப்படி வீரமாகும///

    Palaya visayam aanal Puthiya karuthu.. kandippa avarigal elm veeram iali

  7. ‘என்னங்க இது..? நம்ம கொழம்புல கொதிக்குது கோழி.. அதபோய் வீரம்னு சொல்றீங்க..!’ -என்று அலுத்துக்காதீங்க. நீங்க அலுத்துக்க மாட்டிங்க… நீங்கதான் சைவமாச்சே.///
    ஹிஹிஹிஹி

  8. சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றை வீரத்திற்கு அடையாளமாக காட்டுகிறார்கள். ஆனால், அவைகள் வீரமான மிருகங்கள் அல்ல. சிங்கம், புலி, சிறுத்தை தன்னைவிட பலவீனமான ஆடு, மாடு, மான் போன்றவற்றை வேட்டையாடி தின்கிறது. இது எப்படி வீரமாகும்?

Leave a Reply

%d bloggers like this: