‘முஸ்லீம் என்றால் தீவிரவாதி’-தமிழ் சினிமாவின் மோசடி

சினிமாவில் தீவிரவாதிகள் என்றாலே இசுலாமிய இன மக்களையே காட்டுகிறார்களே?

– அப்துல் காதர், பாளையங்கோட்டை

இஸ்லாமிய காதபாத்திரங்களே இல்லாத புராண கதைகள் திரைப்படங்களான அந்தக் காலத்திலேயே, அந்த நிலையை தலைகீழாக மாற்றி ஒரு இந்து கதாபாத்திரம்கூட இல்லாமல் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் திரைப்படங்கள் வந்தது, திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்ற பிறகே.

‘அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி, பாக்தாத் திருடன்’ போன்ற படங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழ்நிலையிலேயே வந்த திரைப்படங்கள். ‘ராஜாதேசிங்கு’ திரைப்படம் இந்து மன்னனுக்கும், இஸ்லாமிய தளபதிக்கும் இடையில் இருந்த நட்பை சொல்லியது.

அதற்குப் பின்னர் வந்த பீம்சிங்கின் ‘பாவமன்னிப்பு’ படம் ஒரு படி மேலே போய் நேரடியாக திராவிட இயக்க கருத்தை மையமாக வைத்தே கதாபாத்திரங்கள் அமைந்தன. அந்தப் படத்தில் இஸ்லாமியராக வரும் நாகைய்யா மிகவும் நல்லவர். ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பார். இந்துக் குழந்தையை (சிவாஜி) தன் குழந்தையாக எடுத்து வளர்ப்பார். கிறிஸ்தவராக வரும் சுப்பையா அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவராக இருப்பார். இந்துவாக வரும் எம்.ஆர்.ராதாதான் அந்தப் படத்தின் வில்லன். படம் முழுக்க அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து கொண்டே இருப்பார்.

80களில் வந்த இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் அடுக்குமல்லி (தேங்காய் சீனிவாசன்), இயக்குநர் ராஜசேகரின் படிக்காதவன் (நாகேஷ்) வாழ்க்கை (வி.கே. ராமசாமி) போன்ற திரைப்படங்களில் கூட நல்ல குணம் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரங்கள் இஸ்லாமிய பாத்திரங்களாகவே வந்திருக்கின்றன. அப்படி படம் எடுக்க வேண்டிய  கட்டயாத்தை திராவிட இயக்க அரசியல் சூழல் அல்லது சினிமாவில் இருந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள்.

மணிரத்தினத்தின் ‘ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது. அதுவரை தமிழ் சினிமாவில் அரைகுறை ஆடை அணியும் பெண்களும் பல ஆண்களோடு சகஜமாக பழகும் பெண்களும்,  காபரே நடனம் ஆடும் பெண்களும், (கே. பாலசந்தரின் நூற்றுக்கு நூறு திரைப்படம்) கிறிஸ்தவர்களாகவே காட்டி கொண்டிருந்தார்கள். அதில் பெரிய வேடிக்கை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பெண்கள் யாரும் கிறிஸ்தவர்கள் இல்லை. பெரும்பாலும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.

“பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டுவதற்கு, இஸ்லாமிய குறியீடு பயன்படுத்தப்படுகிறது” என்று காரணம் இப்போது சொல்லப்படுகிறது. ஆனால், அதுவல்ல உண்மை. இஸ்லாமியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சிதான் இதுபோன்ற படங்கள் வருவதற்கு காரணம். இப்போதாவது பாகிஸ்தானோடு எல்லைப் பிரச்சினைதான். ஆனால் பாகிஸ்தானோடு போர் நடந்தபோதேகூட, தமிழில் இஸ்லாமிய எதிர்ப்பு படங்கள் வந்தது கிடையாது; அதற்கு மாறாக இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரின் ‘பாரதவிலாஸ்’ திரைப்படத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் தன் உயிரையே தியாகம் செய்கிற ராணுவ வீரனை ஒரு இஸ்லாமியராகத்தான் காட்டியிருந்தார்.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில். டிசம்பர் 2010.

தொடர்புடையவை:

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

பக்திப் படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

27 thoughts on “‘முஸ்லீம் என்றால் தீவிரவாதி’-தமிழ் சினிமாவின் மோசடி

 1. இந்தியாவில் வாழும் நம்முடைய சகோதரர்களான இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் எல்லோரையும் போல தங்கள் வேலை, குடும்பம் என்று இருப்பவர்கள்தான். ஆனால் உலகெங்கும் நடை பெரும் பல தீவிரவாத செயல்களில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியப் பெயர்கள் அடிபடுவதால் எல்லா இஸ்லாமிய சகோதரர்களுக்கும் கெட்ட பெயர் வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் விமான நிலையத்தில் இஸ்லாமியப் பெயர்களைப் பார்த்தவுடன் அவர்களை அதிகமாக சோதனை செய்கிறார்கள். இது ஒரு முக்கிய விடயம், இதில் இருந்து இஸ்லாமிய சகோதரர்கள் மீண்டு வருவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

  இதற்க்கு சிறந்த வழி மத நல்லிணக்கமே.

  இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு பிற மதங்களை, மதங்களின் வழிபாட்டு முறைகளை வெறுக்க வேண்டியதில்லை என்பதை சொல்லித் தர வேண்டும். மத சகிப்புத் தன்மையை மனதில் வைக்க வேண்டும் என்பதை சொல்லித் தர வேண்டும்.

  மதத்தின் பெயரால் யாரவது வெறுப்புக் கருத்துக்களை பரப்பினால், அவர்களிடம் நாங்கள் பிற மதங்களை வெறுக்க விரும்பவில்லை, பிற மதங்களை வெறுக்காதீர்கள், அதனால் சமூக மோதலும் போர்களும் உருவாகின்றனர். அவரவரக்கு விரும்பிய வகையில் விரும்பிய தெய்வத்தை வணங்கும் சுதந்திரத்தைக் கொடுங்கள், மனிதத்தை சிதைக்க வேண்டாம் என்று அவர்களுக்கு திரும்பி சொல்லுங்கள்.

 2. கற்பனை வறட்சி காரணமாகவே சினிமாகாரர்கள் இப்படி பிதற்றுகிறார்கள்.

  தாங்கள் பணம் பன்னுவதற்கு நாற்றமடிக்கும் இந்து மத கேடு கெட்ட சாதி பிரிவினைகளால பிளவுபட்டிருக்கிற தமிழ் சமுதாயத்தை ஒன்று படுத்த இவர்கள் எடுத்துக்கொண்ட சப்பானி குறிக்கோளே இவைகள். எளிய மனிதர்களின் மனங்களில் குரோத மத விரோத உணர்வுகளை தூண்டிவிட்டு மதிதிய அரசிடம் பதக்கம் பெறவும் இவைகள் அவர்களுக்கும் உதவும். இவை அனைத்தும் ஆபத்தில்தான் போய் முடியும்.

 3. இந்த கூற்று ரொம்பவும் உண்மையானது. அர்ஜுன் படத்திலும் விஜயகாந்த் படத்திலும் கூட கண்டிப்பதாக ஒரு முஸ்லிமை தீவிரவாதியாக காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க இந்து முஸ்லிம், கிறிஸ்தவர் மனதில் பகைமையை உண்டாக்குகிறார்கள்.

 4. எப்படியோ மனிரத்னத்தின் ஆசை நிறைவேறி விட்டது. முஸ்லிம்கள் தொழுகை செய்வதை கூட உருப்படியாக பதிவு செய்தது கிடையாது தற்போதைய தமிழ் சினிமா. அலாவுதீன் என்ற ஒரு படம் – பெயருக்காக போய் பார்த்தேன் – ஒரு கட்டத்தில் நாயகன் பிரபுதேவா தன்னை துரத்தி வரும் வில்லன் கூட்டத்திடமிருந்து தப்பிக்க (என்று நினைக்கிறேன்) பீச்சில் நடக்கும் தொழுகையில் கலந்து கொள்வார். தொழுகையில் முஸ்லிம்கள் தோளோடு தோளாக நின்று ஒற்றுமையாக ஒரே columnல் நின்று வித்தியாசம் பார்க்காமல் இறைவனின் முன்னிலையில் நிற்பார்கள். ஆனால் இந்த படத்தில் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடையே பத்தடிக்கு இடைவெளி விட்டு தான் நிற்பார்கள். இது தான் தமிழ் திரைப்படத்திற்கும் இஸ்லாமிய வாழ்வியலுக்கு உள்ள இடைவெளி போலும். படிக்காதவன் படத்தில் நாகேஷின் கதாபாத்திரம் மறைந்த திரு. ராஜசேகர் அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல. இது அமிதாப் நடித்த ‘குத்தார் (சுயமரியாதை)’ என்ற இந்தி படத்தின் தழுவல். இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் பிரபல் இந்தி நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசகனர்த்தா (சகலகலா வல்லவன்) காதர் கான் என்பவரே ஆவார். (கூலி என்ற அமிதாப் படத்தின் கதாசிரியரும் இவரே). விசு அவர்கள் இயக்கிய டௌரி கல்யாணம் படத்தில் நம்பியாரின் கதாபாத்திரமும் நன்றாக இருக்கும். இமைகள், எழுதாத சட்டங்கள் கூட ஓரளவுக்கு நல்ல படங்கள் தான்.

 5. “மத நல்லிணக்கம்” இந்த பதத்தை திருச்சிக்காரன் போன்ற இந்துக்களின் பதிவில் தான் காண்கிறேன். ஒரு இஸ்லாமிய அன்பர் கூட நல்லிணக்கத்தை பதிவில் கூட தொட்டது கிடையாது. அனைவரும் சேர்ந்து வாழ்வோம், நீங்கள் உங்கள் கோயிலில் தொழுங்கள், நாங்கள் எங்கள் மசூதியில்
  தொழுகிறோம். என்று சொல்லும் ஒரு பதிவு காணவில்லை. உலகத்தினர் அனைவரும் சமாதானமாக இருப்போம். என்ற மனித நேயம் என்று அவர்கள் பதிவில் வருகிறதோ, அது வரை பயங்கரவாதிகளாக காட்டுவதில் பெரிய தவறு இல்லையோ?

 6. என் பின்னூட்டத்தின் மேல் தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும்

 7. பார்ப்பான் எல்லாரையும் நாங்க திட்டுவது இல்லையா ..எப்படி எல்லா பார்ப்பானும் கெட்டவனோ ,,, அதுமாதிரி தான் எல்லா முஸ்லீமும் பயங்கரவாதி..இல்லைனா பயங்கரவாத ஆதரவாளன்…

 8. அன்புக்குரிய திரு. மெட்ரோ பாய் அவர்களே,

  என்னைப் பொறுத்தவரையில் மத நல்லிணக்கத்தின் அடிப்படை, முதல் கட்டம் என்னவென்றால் பிற மதங்களை வெறுக்காமல் இருப்பது, பிற மதத்தினரின் வழிபாட்டு முறைகளை, அவர்கள் தெய்வங்களாக வணங்குபவர்களை வெறுக்காமல் இருப்பது ஆகும்.

  பிற மதங்களை வெறுப்புணர்ச்சி இல்லாமல் நோக்குவது என்பது மனப்பூர்வமாக இருக்க வேண்டும்.

  “இன்னொரு மதத்தை சேர்ந்தவர் இத்தனை பேர் இருக்காங்களே, என்ன செய்வது, சரி, கும்பிட்டுத் தொலைங்க” என்கிற நினைப்பை நாசூக்காக, ‘நீங்கள் உங்கள் வழிபாட்டு தளத்தில் வணங்குங்க, நாங்கள் எங்க வழிபாட்டு தளத்தில் வணங்குகிறோம், உங்கள் மதம் உங்களுக்கு, எங்கள் மதம் எங்களுக்கு’, என்று சொல்லுவதும் உண்டு. எனவே மத நல்லிணக்கத்தைப் பரப்ப விரும்புவருக்கு இவை எல்லாம் ஹனி ட்ரேப் என்பதை நினைவில் கொள்ளவும்.

  பிற மதங்களின் மீதான சகிப்புத் தன்மையை குறைக்கும் வகையில் செய்யப்படும் பிரச்சாரத்தை, தம் மதம் மாத்திரமே இந்த உலகில் எல்லோராலும் பின்பற்றப்பட செய்யப்பட வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுகிற வகையில் செய்யப்படும் பிரச்சாரத்தை ஒத்துக் கொள்கிற, மனதுக்குள் ரசிக்கிற செயல் தங்களை அறியாமலே பயங்கரவாதம் வளர சைலென்ட் அப்ரூவல் தரும் செயலே ஆகும்.

  தன்னுடைய மதத்தை தவிர பிற மதத்தை சேர்ந்தவர் மத ரீதியாக அச்சுறுத்தப் பட்டாலோ, தாக்கப் பட்டாலோ அதை கண்டு கொள்ளாமல் விடுவது, மனதுக்குள் ரசிப்பவது, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயலே ஆகும்.

  தன்னுடைய சாதியை சேராத இன்னொரு சாதியை சேர்ந்தவர் அவமானப் படுத்தப் பட்டால் அதை கண்டு, கேட்டு மகிழ்வது சாதீயக் கொடுமையை நிலைநிறுத்தும் செயலே ஆகும்.

  இஸ்லாமியர்களில் மொகலாய மாமன்னர் அக்பர் மத நல்லிணக்கத்தை கடைப் பிடித்தவர். மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஐயாவும் மத நல்லிணக்கத்தை மனதில் வைத்தவரே.

  உலகில் எத்தனை பேர் மத சகிப்புத் தன்மையும், மத நல்லிணக்கமும் உடையவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு மனிதத்துக்கு, மனிதர்களுக்கு பாதுகாப்பும் அமைதியும் கிடைக்கும். எனவே உலகில் மத சகிப்புத்தன்மையையும் , மத நல்லிணக்கத்தையும் எந்த அளவுக்கு பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு பரப்ப வேண்டும்

  நீங்கள் என்னிடம் கருத்து கேட்டீர்களா என்பது ஐயமே. ஆயினும் என் கருத்தை சொல்லி விட்டேன்.

 9. //பிற மதங்களின் மீதான சகிப்புத் தன்மையை குறைக்கும் வகையில் செய்யப்படும் பிரச்சாரத்தை, தம் மதம் மாத்திரமே இந்த உலகில் எல்லோராலும் பின்பற்றப்பட செய்யப்பட வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுகிற வகையில் செய்யப்படும் பிரச்சாரத்தை ஒத்துக் கொள்கிற, மனதுக்குள் ரசிக்கிற செயல் தங்களை அறியாமலே பயங்கரவாதம் வளர சைலென்ட் அப்ரூவல் தரும் செயலே ஆகும்//

  இதை தான் எல்லா முஸ்லீமும் செய்கிறார்கள்..இதில் இவனுகளுக்கு வக்காலத்து வாங்க…
  நடுநிலைமை கூட்டம்… இந்தியாவை அல்லா தான் காப்பத்தனும்..

 10. புனிதமான பாகிஸ்தான் நாட்டில் ஆசிய பீவி என்ற கிருத்துவ பெண்ணிற்கு முகமது நபியை பற்றி தவறாக பேசியதற்காக மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் Blashphemy சட்டம் எனப்படும் ஒரு சட்டம் இருக்கிறது. அதாவது தங்களின் மதத்தையோ, கடவுளையோ அல்லது தூதரையோ சிறிது கிண்டலடித்தோ தரக்குறைவாகவோ பேசினால் அவர்களுக்கு தண்டனை.

  இந்த விடயத்தில் நடந்ததோ, ஆசியா பீவி குடிக்க தண்ணீர் கேட்டு கிடைக்காமல், இஸ்லாமிய பெண்கள் சிலர் உபயோகிக்கும் குவளையை எடுத்து தண்ணீர் குடித்ததால் வந்த வினை. அவர் அப்படி தண்ணீர் குடித்ததும் அதை கண்டு பொறுக்காமல், எப்படி அசுத்தமான பழக்கவழக்கங்களை (அதாவது இஸ்லாம் இல்லாத உன்னை) கொண்ட நீ நாங்கள் சாப்பிடும் குவளையில் தண்ணீர் குடிக்கலாம் என்று அவர்கள் சண்டைக்கு வர, அதற்க்கு அந்த கிருத்துவ பெண்மணி பதில் சொல்ல, மற்ற இஸ்லாமிய பெண்கள் எல்லாம் சேர்ந்து, ஆசியா பீவி முகமதுவை தப்பாக பேசிவிட்டார் என்று கதை கட்டி விட்டுவிட்டார்கள். போலீசாரும் ஆசியா பீவியை பிடித்து உள்ளே வைத்து விட்டது. இதுதான் இஸ்லாமிய சமத்துவம். அதாவது இஸ்லாமை பின்பற்றாதவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள். குறை பிறவிகள். இது என்னங்க சமத்துவோம்?? இன்னுமும் உத்து பார்த்தா அந்த இஸ்லாமிக்கு உள்ளேயே பல சமத்துவங்கள். ஷியா வெட்டுல உறவு வச்சிக்காதே. அவுங்க சொல்லுற சமாச்சாரத்த கேக்காதே. என்னென்றால் அவர்களும் குறை பிறவிகள்!

  ஒரு ஷியா இஸ்லாமிய நாடு அணு ஆயுதம் பெறப்போகுது என்று மிக பயப்படுவது யாரென்றால் அது கிருத்துவ அமெரிக்காவோ அல்லது யூத இசுரேலோ அல்ல. மிக மிக பயப்படுவது, சுன்னிகளின் மூலமான சவுதி அரேபியாதான். இரானை ஒரு வழி செய்யுங்கள் என்று அமெரிக்காவிற்கு தூது விடுவது யாரென்று பார்த்தால் சமத்துவ அரேபியாதான்!! இரானிய ஷியாக்களின் மேல் அவ்வளவு சமத்துவம். ஆசியா பீவியின் மேல் அவ்வளவு சமத்துவம்.

  ஆக, முதலில் சமத்துவம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டு எழுதவும். ஜாதி பெயரால் மக்களை தாழ்த்துவது சமத்துவமின்மைதான், அதே மாதிரி, மதத்தின் பெயரால் மக்களை தாழ்த்துவதும் சமத்துவமின்மைதான். அதை நன்றாக செய்வது இஸ்லாமிய சமூகம். இங்கே இந்தியாவில் இருந்து கொண்டு இஸ்லாமியரை எடை போட வேண்டாம். அவர்கள் இங்கே மைனாரிட்டி. அவர்கள் மெஜாரிட்டி ஆக இருக்கும் இடத்தில் (அவர்களின் நாட்டில் ஏது மைனாரிட்டி, எல்லோரையும் துரத்தி விட்டார்களே) எந்த விதமான சமத்துவத்தை கையாள்கிறார்கள் என்று பார்த்து பின்னர் உங்கள் அறிவார்ந்த
  எழுத்துகளை எழுதினால் நீங்கள் ஒரு உண்மையான சமத்துவத்தை விரும்புபவர் என்று அறிந்து கொள்ளலாம். இல்லை என்றால் ஒரு போலி மட்டும்.

  (இதை போல இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் விடயங்கள் பல பல பல. எல்லா பத்திரிகைகளிலும் விலாவாரியாக இது வந்திருக்கிறது. முதலில் போயி படிக்கவும், பின்னர் உங்களின் சொம்பு தூக்குதலை செய்யவும்)

  என்னவோ இந்தியாவில்தான் அதுவும் இந்து மதத்தில்தான் கேவலங்கள் இருக்கிறது என்று வசை பாடும் (அதுவும் மத வெறி பிடித்த இஸ்லாமியர் நடத்தும் பத்திரிக்கையில் துட்டு வாங்கி இதையெல்லாம் எழுதும்) மதிமாறன் போன்றவர்கள், ஒரு சில காலம் இந்த நாடுகளில் தங்கி விட்டு பின்பு இந்து மதம் பற்றி பேசவேண்டும்!

  இவர்கள் மற்ற மதமக்களை எள்ளி நகையாடுவதும், கேவலமாக நினைப்பதும், எந்த சமத்துவ வகையில் சாரும் ஐயா?? இங்கே அரேபியாவில் இருக்கும் தலைமை மௌலவிகள் இந்து மதம், கிருத்துவம் யூதமதம் மற்றும் அந்த மத மக்களை பற்றி பேசும் தரக்குறைவான சமாசாரங்கள், அதாவது இஸ்லாமியரை கம்பேர் செய்தால் இந்த வேற்று மதக்காரர்கள் தீண்டத்தகாதவர்களே, நட்புடன் இருக்க லாயக்கற்றவரே என்று சொல்லுவது என்ன சமத்துவம் ஐயா?? மற்ற மதத்தை விட்டுவிடுங்கள், அவர்களுக்கு உள்ளேயே, சுன்னிகள் ஷியாக்களை என் மசூதிக்குள் வராதே என்று போட்டு அடிப்பது, குண்டு வைப்பது, அகமதியாக்களை தீண்டத்தகாதவர்கள் என்று அறிவித்து அவர்கள் நாட்டின் முக்கிய பதவிகளுக்கு வரகூடாது என்று அரசின் ஒரு சட்டமாகவே கொண்டு வந்துள்ள இஸ்லாமிய நாடுகள் என்ன சமத்துவத்தை ஐயா போதிக்கிறது? (இத்தகைய சட்டங்களை இயற்றியவர்கள் முழு இஸ்லாமிய அறிஞர்கள் என்று சொல்லப்படுபவர்களே – இத்தை ஏன் சொல்லுகின்றேன் என்றால் இப்படி செய்பவர்கள் இஸ்லாமியரே
  அல்ல என்று வெள்ளை சாயம் அடிப்பதற்காகவே பலர் ஓடி வருவார்கள் என்பதற்காகதான்)!

  ஆனால் பாருங்கள், நம்ம முற்போக்கு வெறுப்பு சாமிகள் மற்றும் இந்து மதத்தை மட்டும் திட்டியே, அதுவும் கிருத்துவ மற்றும் இஸ்லாமிய அன்பர்களிடம் காசு வாங்கிக்கொண்டு திட்டியே காலம் தள்ளும் போலி பகுத்தறிவுவாதிகள் பேச மாட்டார்கள்! ஏனென்றால், முதல் காரணம், இந்து மதத்தை பற்றி எதை கத்தினால் யாரும் ஒன்றும் செய்யமாட்டார்கள். கண்டுக்க கூட மாட்டார்கள். ஏதோ நம்மாவும் பிழைப்பை ஓட்டலாம் என்ற சரித்த்திரம் கொடுத்த
  தைரியம். இரண்டாவது காரணம், இப்படி செய்வதால் இந்து மதத்தை குறிபார்க்கும் பசையுள்ள பல மத மாற்றும் கும்பல்களின் சில்லறை நமக்கு வரும் என்ற உண்மை. இவர்களின் துட்டுக்காக எதை செய்தால் என்ன. அதுவும் பகுத்தறிவு வேடம் போட்டால், நான் கிருத்துவன் அல்ல, இஸ்லாமியனும் அல்ல, ஆதலால் இந்து மதத்தை திட்டுவது வேற்று மதக்காரர்கள் அல்ல என்று ஒரு முக மூடி அவர்களுக்கு கொடுப்பதால் கண்டிப்பாக அவர்களின் ஆசி நமக்கு உண்டு என்று மற்றொரு உண்மை. கடைசி உண்மை, இஸ்லாமியரை பற்றி எழுதினால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தால், எதை திட்டினால் பிரச்சனை இல்லை என்று பார்த்தோ செய்வது. இது முக்கியமான ஒரு காரணம்.

  இவரு சமத்துவத்தை பற்றி எழுதுகிறாராம். இந்து மதத்தை விமர்சிக்கிறாராம். மெக்காவிற்கு முடிந்தால் போயிட்டு வாங்க அப்பு, அங்கே நீங்க இஸ்லாமியர் இல்லை என்று சொல்லுங்க , முழுசாக திரும்பியும் வந்தால் என்ன நடந்தது என்றும் எழுதுங்க. எழுத முடியாது ஏனென்றால் இதற்க்கு பதில் உங்களுக்கே தெரியும்.

 11. அன்புக்குரிய மும்பைக்காரர் அவர்களே,

  //இந்தியாவை அல்லா தான் காப்பத்தனும்..//

  இதுவே ஒரு வகையான நல்லிணக்கம்தான். நீங்கள் அனேகமாக இஸ்லாமியர் அல்ல என நினைக்கிறேன், ஆனால் இஸ்லாமியர்கள் கடவுளை அழைக்கும் பெயரை தயங்காமல் குறிப்பிட்டு உள்ளீர்கள், பாராட்டுகிறேன்.

  //இதை தான் எல்லா முஸ்லீமும் செய்கிறார்கள்..//

  இஸ்லாமியர் என்று மட்டும் சொல்லுவது சரி அல்ல, நீங்கள் நன்றாகக் கவனித்தால் மற்ற பலரும் அப்படி செய்வதை அறிந்து கொள்ளலாம் (நீங்கள் என்னுடைய தளத்திற்கு வந்து அங்கே இடப் பட்டுள்ள பின்னூட்டங்களைப் படித்துப் பாருங்கள், அறிந்து கொள்வீர்கள்).

  நம்முடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டுமென்றால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த சகோதர சகோதரிகள் மத சகிப்புத் தன்மையை குறைக்கும், அழிக்கும் பிரச்சார வழியில் விழுந்து விடாமல் அவர்களை நல்லிணக்கப் பாதைக்கு கொண்டுவருவது ஆக இருக்க வேண்டும். மாமன்னர் அக்பர், மதிப்புக்குரிய கலாம் ஐயா போன்றோர் நல்லிணக்கப் பாதையில் பீடு நடை போட்ட போது, எல்லா இஸ்லாமியர்களையும் அவ்வாறே நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வர நாம் ஏன் முயலக் கூடாது. இஸ்லாமியர்களை மட்டும் அல்ல, யூத மதத்தினர், கிறிஸ்துவர், இந்துக்கள்….. உள்ளிட்ட அனைவரையும் நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வர வேண்டும். உலகிலே மத நல்லிணக்கத்தை பிரச்சாரம் செய்வதில், நடத்திக் காட்டியதில் இதுவரை முக்கிய பங்கு வகித்தது இந்துக்கள் என்று சொல்ல தயங்க வேண்டியதில்லை. மத நல்லிணக்கப் பாதையிலே முன்னணியில் செல்லக் கூடிய வாய்ப்புகள் இந்துக்களுக்கு இருக்கிறது.

  இஸ்லாமியர்களையோ, கிறிஸ்துவர்களையோ கட்டம் கட்டுவதிலோ, அவங்க இப்படித்தான் என்று சொல்லுவதிலோ பலன் ஒன்றும் இல்லை. அனைவரையும் அரவணைத்து நல்லிணக்கத்திலே இணைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. மனிதத்தின் எதிர்காலம் இதிலே உள்ளது.

 12. அன்பு நிறை தன் அருமைத் தாயாரை இழந்த நண்பர் மதிமாறன் அவர்களின் துயரத்தில் என்னையும் இணைத்து, அவருக்கு என் ஆறுதலைக் கூறிக்கொண்டு…
  நண்பர்களே…! சாக்கடைகளுக்கிடையே என்னையா சமத்துவம் வேண்டியிருக்கிறது? ஏற்றத் தாழ்வுகளுக்கு அடிப்படையான கடவுள் நம்பிக்கை என்ற சாக்கடையை சுமந்து கொண்டு திரியும் மனிதர்களிடம், மத மூடத்தனத்தின் தன்மைக் கேற்ப அதன் நாற்றத்தின் வீச்சு, கூடவோ குறையவோ செய்யும்! அதில் போய்…, எல்லா சாக்கடையையையும் ஏற்றுக் கொண்டு நாற்றத்தைத் தாங்கிக்கொண்டு வாழப் பழகிக் கொண்டால் நிம்மதியாக வாழலாம், என்று வசதியாக ஒன்றை மறந்துவிட்டு மத நல்லிணக்கத்தைப் போதிக்கிறார்கள்! கடவுள் நம்பிக்கை என்ற கொடிய நோய் தாக்கிய நம் மக்களுக்குத் தேவை, கைமருத்துவம் அல்ல! அறுவை மருத்துவம் ஒன்றுதான் நம் மக்களை மத வெறி என்ற நோயிலிருந்து விடுவிக்கும் ஒரே தீர்வு! கடவுள் நம்பிக்கை என்ற புரையோடிப் போன புண்ணை, அறுத்துதான் மருத்துவம் செய்யவேண்டுமே தவிர, மதநல்லிணக்கம் என்ற பூச்சு மருந்தைப் பூசுவது, மதவெறி என்ற நோயைக் குணப்படுத்தாது! மாறாக, மூடிமூடி வைத்து, அடக்கி வைக்கப்படும் ஒன்று, நிச்சயமாக ஒரு நிகழ்வில் பலத்த வீரியத்துடன் வெளிக்கிளம்பவே செய்யும்! மத நல்லிணக்கம் பேசும் திரு.திருச்சிக்காரன் அவர்கள் உண்மையிலேயே மக்களை நேசித்தால்.., முதலில் இவர் எதிர்க்க வேண்டியதும், அழிக்க விரும்புவதும் மட மதங்களை மட்டும்தான்! மத நம்பிக்கைக் குள்ளேயே இருந்து கொண்டு, பார்ப்பன இன ஆதிக்கத்தின் மொத்த அடையாளமான பூணூலையும் ஆதரித்துக் கொண்டு, மத நல்லிணக்கம் பேசுவது.. தான் ஒரு போலி என்று போதிப்பவர் வாயே அவரைக் காட்டிக் கொடுத்துவிடும்! மத நம்பிக்கையிலிருந்து மக்களை விடுவிக்குறதெல்லாம் நடக்குற காரியமா..? என்று கேட்டால், போலியான மதநல்லிணக்கத்துக்குச் செலவு செய்யும் நேரத்தை இதற்கே செலவிடலாமே…! மதநம்பிக்கைதானே சாதி ஆதிக்கத்துக்கும், ஏற்றத்தாழ்வுக்கும், அடக்குமுறைக்கும் ஆணிவேர்! நச்சு மரத்தை அகற்றுவதற்கு கிளைகளையும், இலைகளயும் வெட்டி ஆகப் போவது என்ன? மத நம்பிக்கைதானே முதன்மையான மோதல்களுக்கும், மனிதச் சாவுகளுக்கும் மூலம்! அந்த மதநம்பிக்கை என்ற ஆணிவேரை வெட்டி, இது போன்ற நச்சு மரங்களை அப்புறப் படுத்த முயற்சிக்காமல், திருச்சிக்காரன் போன்றவர்கள் எதேதோ எழுதி பக்கத்தை நிரப்புகிறார்கள் என்றால், மக்களை ஏமாற்றும் பேர்வளிகள் வரிசையில் இன்னுமொருவர் என்று தானே எண்ண முடியும்!
  காசிமேடு மன்னாரு789வேர்டுபிரஸ்.காம்.

 13. ///இதை தான் எல்லா முஸ்லீமும் செய்கிறார்கள்..இதில் இவனுகளுக்கு வக்காலத்து வாங்க…
  நடுநிலைமை கூட்டம்… இந்தியாவை அல்லா தான் காப்பத்தனும்..//

  மே… மே..மே
  மும்பைக்காரன் என்ற பெயரில் கூட்டத்தில் கருப்பு ஆடு/

 14. அன்புக்குரிய சகோதரர் திரு. காசிமேடு மன்னாரு அவர்களே,

  என்னவோ நான் (திருச்சிக்காரன்) கடவுளுக்கு சாட்சி கொடுப்பது போல எழுதுகிறீர்கள்.

  “இறைவன் இருக்கின்றானா?” என்கிற கேள்வியை முன் வைத்து பல பதிவுகளை போட்டு இருக்கிறோம். என்னவோ நான் தான் இவர்களுக்கு கடவுள் நம்பிக்கையை கற்றுக் கொடுத்தது போலவும், நான் தான் கடவுளை நம்ப சொல்வது போலவும் இருக்கிறது நீங்கள் சொல்வது.

  எந்தக் கடவுளுக்கும் யாரும் இது வரை நிரூபிக்கக் கூடிய சான்று (verifiable proof) எதையும் குடுக்கவில்லை.

  கடவுள் இருக்கிறார் என்று அடித்து சொல்லுகிறவர்கள், தங்கள் கடவுள் மட்டுமே உண்மை, மற்ற கடவுள்கள் எல்லாம் பொய்யானவை என்று அடித்து சொல்லுகிறவர்கள், தங்கள் கடவுளிடம் சொல்லி வானில் நிலவு தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் ஒளிரும்படி செய்ய முடியுமா என்பதை இந்த தளம் உட்பட பல இடங்களில் எழுதி இருக்கிறோம். இது எல்லா மதத்தவருக்குமானது தான். அதே நேரம் நான் எந்த ஒரு மதத்தவரின் கடவுளையும் வெறுக்கவோ, இகழவோ செய்யவில்லை.

  அதே நேரம் மனிதர்களில் பெரும்பாலனவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. சுவாமி விவேகானந்தர் சென்னையிலே பேசும்போது குறிப்பிட்டது – ” நான் என்னுடைய நாத்தீக கோட்பாட்டு நண்பர்களுக்கு சொல்வது என்னவென்றால், மனிதர்களின் மனதில் பலவீனம் உள்ளவரை அவர்கள் கடவுளை உருவாக்கிக் கொள்வார்கள்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

  ஏனெனில் சிறு வயதில் பாதுகாப்பு, உணவு…. எல்லாவற்றுக்கும் அன்னையை அணுகும் மனிதன் , வளர்ந்த பின்னும், தனக்கு மேலாக ஒருவர் இருப்பார், அவர் தன்னைக் காப்பாற்றுவார் என்று நம்ப விரும்புகிறான். எனவே பலர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கும் போது, அவர்கள் அமைதியான வழியில் பிற மதங்களை வெறுக்காமல் வாழ வேண்டியது அவசியமாகிறது.

  மத சண்டைகளால இந்த உலகில் இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை- இரண்டு உலகப் போரிலும் இறந்தவர்களில் எண்ணிக்கையை விட – அதிகமானது. இன்றும் அது தொடர்கிறது.

  அதை நிறுத்தி நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்.

  இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த…. மதங்கள் எல்லாவற்றையும் ஆக்க பூர்வமாக அணுகி, அவற்றில் உள்ள மக்களுக்கு உதவக் கூடிய கருத்துக்களைக் காட்டுகிறோம்.

  எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்கள் உள்ளன. எனவே எந்த மதத்தின் கருத்துக்களையும் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. எல்லா மதங்களில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்களையும் ஆராய்ந்து நல்ல கருத்துக்களை விளக்குகிறோம்.

  ஒரு இந்து மசூதிக்கு சென்று இஸ்லாமியருடன்
  தொழுகையில் ஈடுபட்டால், பிறகு மசூதியை பார்த்தால் வெறுக்க மாட்டான். ஒரு முஸ்லீம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டால் பிறகு சர்ச்சைப் பார்த்தால் வெறுக்க மாட்டான்.

  மத நல்லிணக்கத்தால் முழுக்க முழுக்க நன்மையே, எந்த ஒரு தீங்கும் கிடையாது. மத நல்லிணக்கத்துக்கு நான் ஒட்டு மொத்த பட்டாதாரர் அல்ல. நீங்களும் , யார் வேண்டுமானாலும் மத நல்லிணக்கத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம். இந்திய வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இந்திய நாட்டினர் எந்த அளவுக்கு மத சகிப்புத் தன்மையை வளர்த்து உள்ளனர் என்பது தெரியும்.

  மத நல்லிணக்கம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்கு அவ்வளவு எரிச்சல் வருவது ஏன்?

  மற்றபடி பூணூல் அணியும் உரிமை , அனைவருக்கும் உண்டு. யார் வேண்டுமானாலும் பூணூல் அணியலாம். அதை அணியக் கூடாது என்று சொல்லவோ, நாங்கள் மட்டுமே அணிய முடியும் என்று சொல்லவோ யாருக்கும் உரிமை இல்லை.பூணூலை அணிவதால் சிலர் தங்களை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டால், எல்லோரும் பூணூல் அணிந்து, யாரும் தாழ்ந்தவர் இல்லை, எல்லோரும் சமம் என்னும் சமத்துவத்தை நிலை நாட்டுவோம்.

  பூணூல் அணிந்து சம்த்த்வத்தை நிலை நாட்டுவது தொடர்பாக தனிப் பதிவு நமது (திருச்சிக் காரன்) தளத்தில் உள்ளது. அதில் நீங்கள் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிட வரவேற்கிறேன்.

  நான் பக்கங்களாக எழுதுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. நான் பின்னூட்டம் இடுவதை சகோதரர் மதிமாறன் விரும்பவில்லை என்றால் என் பின்னூட்டங்களை அவர் நிறுத்தவோ, நீக்கவோ இயலுமே!

  மறுபடி நான் எந்த வகையில் மக்களை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சாட்டுகிறீர்களோ தெரியவில்லை. நான் பிற மதங்களுடன் மனப் பூர்வமான மத நல்லிணக்கத்தைக் கடைப் பிடிக்கிறேன். நான் இயேசு கிறிஸ்து மீது கொள்கை ரீதியான மரியாதை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்து மத தளங்களில் நான் இயேசு கிறிஸ்துவை டிபண்ட் செய்து எழுதிய போது பலர் என்னைக் கிரிப்டோ கிறிஸ்தவன் என்று திட்டி எழுதி இருக்கின்றனர். . எந்த போலியாவது ரமதான் மாதம் முழவதும் நோன்பு இருப்பனா? “எல்லோரும் கொண்டாடுவோம், அல்லாஹ்வின் பெயரை சொல்லி” என்று கட்டுரை போடுவானா?

  நீங்கள் சொல்லுவது போல உலகில் எல்லோரும் கடவுள் இல்லை என்று எண்ணி விட்டால் அப்போது மத ரீதியான மோதல்கள் இருக்காது.

  ஆனால் கடவுள் நம்பிக்கையை மக்கள் விட தயாராக இல்லாத போது, சரிப்பா, நீ கடவுள் என்று நம்புவதை அமைதியாக வழி பட்டுக் கொள், நீ எந்த அளவுக்கு உன் கடவுள் மேல் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருக்கிறாயோ அதே போலத் தான் அடுத்தவரும் வைத்திருக்கிறான். அதைப் புரிந்து கொள், அவனின் மதத்தை, வழி பாட்டு முறைகளை வெறுக்க வேண்டாம், அவற்றுடன் சகிப்புத் தன்மையோடு வாழக் கற்றுக் கொள் என்கிறோம்.

  மத சகிப்புத் தன்மை இன்மையால் உருவாகும் மத வெறியும், அதனால் விளையும் மோதல்களும் எவ்வளவு கொடூரமானவை என்பதை நீங்கள் உண்மையிலேயே அறிந்து கொண்டால், மத நல்லிணக்கத்தின் அவசியம் உங்களுக்குப் புரியும்.

 15. திருச்சி ரெண்டு குதிரைல நல்லா சவாரி பண்ணுறார். அவரை அவர் போக்குல விடுங்க. பொறுப்பா புண்ணுக்குப் புணுகு பூசுறார்ல. டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா.

 16. நண்பர்களே…
  திரு. திருச்சிக்காரன் அவர்கள் இப்போதும் நம்மை ஏமாற்ற வில்லை, தன் கடமையை செவ்வனே செய்து, அதே பல்லவியை பாடி நம்மையெல்லாம் மகிழ்சிப் படுத்தியிருக்கிறார்! நாமெல்லாம் எதிர்பார்த்தது போல அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும், நுனிப்புல் மேய்ச்சலும் மிகுதியாகவே உள்ளது அவர் பின்னூட்டத்தில்! அவருக்கு எப்படித்தான், இப்படி நமக்கு கிச்சுகிச்சு மூட்டும் விதமாக எழுத நேரம் அமைகிறதோ தெரியவில்லை. நமக்கு ஒரு பின்னூட்டத்தை எழுதி முடிப்பதற்குள் பல கடமைகள் கண்முன் அணிவகுத்து நின்று மிரட்டுகிறது நம்மை!
  திருச்சிக்காரன் அவர்களே.. கடவுள் நம்பிக்கையை நீங்கள் மக்களுக்கு நிலை நிறுத்த வேண்டாம் அய்யா.. அதுக்கு வேறு ஆட்கள் உண்டு, பாதிரி, உல்மாக்கள், சங்கராச்சாரி, நித்தியா போன்று! …மனிதன் பிறந்து தன் அறிவு புலப்படும் ஆரம்ப கட்டத்திலேயே அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்ற கொடிய நச்சு விதை அவன் பெற்றோர்களால் வலிந்து விதைக்கப் படுகிறது அவன் மனதில்!
  கடவுள் என்ற கற்பிதத்தை உண்மையென நம்பும் மனிதனின் எந்த புலனுக்கும் கடவுள் என்ற அதி சூப்பர் ஆற்றல் எட்டவே இல்லை இன்று வரயிலும்! இருந்தும் அவன் அதை உண்மையென நம்பி பூஜையும், தொழுகையும், வேண்டுதலும் செய்து, தான் தின்னாமல் சேர்த்து வைத்த காசைக் கொண்டு கொட்டுகிறானென்றால்.. இந்த ஏமாற்றுத்தனம் எங்கிருந்து ஆரம்பிக்கிற தென்பதை இன்னும் எத்தனைபேர்தான் வந்து சொல்வது மக்களூக்கு? ஒரு சிலரின் சுக ஜீவியத்துக்காக எத்தனை கோடி மக்கள் முட்டாளாக ஆக்கப் பட்டிருக்கிறார்கள்? இந்தக் கேட்டிலிருந்து மக்களை தூக்கி எடுக்கும் முயற்சியான பகுத்தறிவுப் பரப்புரையைச் செய்யாமல், மக்களே..மாறிமாறி அடிச்சிக்காம ஒற்றுமையான முட்டாள்களாக இருந்துகொண்டு, மதத் தலைவர்களையும் நம்பிட்டு, அப்படியே செத்தும் போயிருங்க! என்று வெளிப்படையாக சொல்லாமல் சொல்வது போலில்லையா உங்களின் கருத்துக்கள்?
  மதக் கருத்துக்கள் இகழ்வதற்கோ தூற்றுவதற்கோ தகுதி படைத்ததல்ல! அதற்குரிய தகுதி, அவைகளை ஆழக்குழி வெட்டி புதக்கவேண்டிய தகுதி மட்டுமே அவைகளுக்கு உண்டு!
  மனிதர்களின் மனதில் பல்வீனம் உள்ளவரை அவர்கள் கடவுள்களை உருவாக்கிக் கொள்வார்கள் என்று சொன்ன விவேகானந்தர், அறிவியல் அடிப்படையிலான பகுத்தறிவுத் தெளிவு இல்லாதவரையில் கடவுள்களை உருவாக்கிக் கொள்வார்கள் என்ற வாக்கியத்தையும் சொல்லியிருக்க வேண்டும் விவேகானந்தர்! மன பலவீனத்தை அறிவுத் தெளிவு வெற்றி கொண்டுவிடும்! ஆற்றல் வாய்ந்த ஒருவன்கூட அறிவுத் தெளிவற்ற நிலையில் கடவுள் என்ற சாக்கடைக்குள் விழுந்து விடுவான்!
  எல்லா மதங்களிலும் சொல்லப்பட்ட நல்லகருத்துக்களை எடுத்துச் சொல்கிறீர்களா? ஒன்றை நினைவில் வையுங்கள் திருச்சிக்காரன் அவர்களே! உங்களுக்கு அரிசி வேண்டுமென்றால் போய் கடையில் வாங்குங்கள்! இல்லை.. நான் மலத்தைக் கிழறி அதிலிருந்துதான் பெற்றுக் கொள்வேன் என்று சொல்பவரை எந்த இடத்தில் வைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! மத நூல்களிலுள்ள நல்ல கருத்துக்கள் என்பது தூண்டிலில் மாட்டப்பட்டிருக்கும் இரையைப் போன்றதே! இரைக்கு ஆசைப் பட்டு அதைப் பற்றினால், அது பற்றியவனை எங்கு கொண்டு தள்ளும், என்பதை மத வெறி பிடித்தவனைப் பார்த்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்!
  அடுத்து, இயேசு கிறித்து கொள்கை மீது பற்று வைத்திருக்கிறீர்களா…? நடுநிலையோடு சிந்திப்பவன் இயேசுவை கிறித்து என்று சொல்ல மாட்டான்! இயேசு கிறித்துவும் அல்ல! இசுரவேலரை மீட்க வேண்டி வரப்போகிற மெசியா (இரட்சகர்) வுக்கே கிறித்து என்று பெயர். இயேசுவை கிறித்து என்று அவரை வணங்குபவர்கள் வேண்டுமானால் சொல்லிக் கொண்டு அதில் ஒரு ஆறுதலை அடைந்து கொள்ளலாம்! அவரோடு பழகி அவரை நன்கு அறிந்த இயூத மக்கள் அவரை கிறித்து என்று நம்புவதுமில்லை, அப்படிச் சொல்வதுமில்லை! மாறாக, இயேசு கடவுளின் நியாயப் பிரமாணங்களை எதிர்த்தவர். ஒரு கட்டத்தில் எருசலேம் ஆலையத்தை இடிக்கச் சொன்னவர். இரண்டாயிரம் ஆண்டுகளூக்கு முன்பே இப்படிப்பட்ட கடவுளுக்கு எதிரான கருத்தை முன்வைத்தாரென்றால் இந்த காலகட்டத்தில், அவர் ஒரு முழுமையான கடவுளை ஏற்காத நாத்திகராகவே இருந்திருப்பார். ( ’இயேசு ஒரு நாத்திகர்‘ என்ற நூலைப் படித்தால் விளங்கும்.)
  எந்த ஒரு கருத்திலுமே ஒரு முழுமை இல்லாமல் நுனிப்புல் மேய்வதுபோல் படித்து விட்டு வந்து பக்கம் பக்கமாக பின்னூட்டம் இடுவதில் எந்த பயனும் ஏற்பட்டு விடாது, அப்படி ஏற்பட்டாலும் அது நெடுநாள் நிலைக்காது. ஒரு உண்மையான பகுத்தறிவாளனே மக்களைப் பற்றிக் கவலை கொள்ள முடியும்! அவனே மதநல்லைணக்கத்தைப் பற்றி பேச தகுதியுடையவன்! மடத்தனமான, அசிங்கமான, கேவலமான கடவுள்களை நம்பிக்கொண்டு, மக்களின் நலனைப் பற்றிப் பேசுபவன் நிச்சயமாக இன்னுமொரு எதிர்கால நித்தியானந்தாவே. அல்லது சங்கராச்சாரியே…! காசிமேடு மன்னாரு789வேர்டுபிரஸ்.காம்.

 17. அன்புக்குரிய சகோதரர் திரு. காசி மேடு மன்னார் அவர்களே,

  நாம் மக்களின் மனதில் உண்மையை தேடும் முயற்சியை, பகுத்தறிவு ஆராய்ச்சியை தூண்ட விரும்புகிறோம்.

  நம்முடைய எழுத்துக்கள் அவ்வகையிலே அமைந்து உள்ளன.

  எந்தக் காலத்திலும் நான் காணாத ஒன்றை இருக்கிறது என்று சாட்சி கொடுக்கவோ, நான் அடையாத ஒரு நிலையை அடைந்ததாக சொல்லவோ இல்லை.

  நான் முன்பே சொன்னது போல எந்தக் கடவுளையும் நான் “நம்ப”வில்லை. ஈ.வே. ராமசாமியாரை “பெரியார்” என்று அழைப்பது மரியாதையைக் காட்டும் செயலே. அதைப் போலவே இயேசுவைக் கிறிஸ்து என்றும், விவேகானந்தரை சுவாமி விவேகானந்தர் என்றும் அழைக்கிறோம். நான் மேய்ந்தது நுனிப் புல்லா என்பது எல்லாம் எனக்கு தெரியாது. நான் அனைத்தையும் கற்றவன் என்று சொல்லிக் கொள்ள தயாராக இல்லை.

  இயேசு கிறிஸ்து நியாயப் பிரமாணத்தில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்களை மறுத்துள்ளார் என்பது சரியே. இயேசு கிறிஸ்து கடவுள் இருக்கிறார் என்று சொல்லவில்லை என்று நீங்கள் கருதினால் அதைப் பதிவிட உங்களுக்கு உரிமை உண்டு.

  என்னைப் பொறுத்தவரையில் இயேசு கிறிஸ்து விட்டுக் கொடுக்கும் சமரசக் கருத்துக்களை சொல்லி இருக்கிறார். ஒருவன் ஒரு மைல் தூரம் வரச் சொன்னால் இரண்டு மைல் தூரம் போ என்றார். இதைப் போல எல்லா மதங்களிலும் உள்ள சமரசக் கருத்துக்களை அவர்களுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

  பிற மதங்களை வெறுக்க வேண்டாம், அமைதியாக எல்லோரும் வாழ முடியும் என்று சொல்லுகிறோம். அதற்க்கு அர்த்தம் கடவுள் இருக்கிறார் என்று சாட்சி கொடுப்பதாகவோ, கடவுளை வணங்குங்கள் என்று வூக்குவிப்பதாகவோ இல்லை. எல்லா மத உள்ள விழாக்களிலும் கலந்து கொள்வது மத நல்லிணக்கத்தை வலுப் படுத்தவே. கோடிகளைக் குவிக்கவோ, உல்லாச வாழ்க்கை வாழவோ இல்லை.

  நாம் மக்களின் மனதில் உண்மையை தேடும் முயற்சியை, பகுத்தறிவு ஆராய்ச்சியை தூண்ட விரும்புகிறோம்.

  நம்முடைய எழுத்துக்கள் அவ்வகையிலே அமைந்து உள்ளன. நீங்கள் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு என்னும் வள்ளுவரின் கோட்பாட்டை உணர்ந்து கொண்டால் எந்த ஒரு கோட்பாட்டையும் ஆக்க பூர்வமாக அணுகும் மன நிலையை அடைவீர்கள்.

 18. ஏங்க திருச்சிக்காரர் கிட்ட வாய கிளறுறீங்க.? பாருங்க அவரு ஆரம்பிச்சிட்டாரூ. நாம் சொல்றோம் செய்தோம் என்று,வடிவேலு போல.
  “ஆமா நாங்க நாங்க ன்னு சொல்றியே நீங்க எத்தன பேருடா? ”
  வடிவேலு ” இதுக்கு வேற வெளக்கம் சொல்லனுமா , அதாவது வெளியில தெரியிறது ஒரு ரூபம், உள்ள தூங்கிகிட்டு இருக்குறது பல ரூபங்கள் …..” 🙂

 19. அன்பு நண்பர்களே,

  நாங்கள் பலர்தான்,
  அடிப்படையிலே பெரும்பாலான இந்தியர்கள் மத நல்லிணக்க வாதிகள்தான்.

  ஆராய்வதுதான் பகுத்தறிவு எந்த ஒரு கோட்பாட்டையும் ஆராயாமல் அதை வெறுத்து ஒதுக்குவது பகுத்தறிவு அல்ல.

  மத வெறியன், தான் சொல்லுவதை அப்படியே பிறர் ஒத்துக் கொள்ள வேண்டும், கடைப் பிடிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறான்.

  கடவுள் இல்லை என்ற கோட்பாட்டை இந்த உலகில் எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும், கடைப் பிடிக்க வேண்டும் என்று நினைப்பதும், அது நடக்கவில்லையே என்றவுடன் கோவத்துடன் திட்டுவதும் , ஒரு மத வெறியே, இது நாத்தீக மத வெறி.

  நான் பலமுறை சொன்னது போல எந்தக் கடவுளையும் நான் பார்த்தும் இல்லை, எனவே சாட்சியும் கொடுக்கவில்லை.

  அதே நேரம் ” ஏய் … எல்லாரும் கடவுள் நம்பிக்கையை கை விடுங்க, கடவுள் இல்லைன்னு டிக்ளேர் பண்ணுங்க, அப்படி பண்ணாங்க்காட்டி எப்படியாவது அடிச்சுகிட்டு சாவுங்க” என்று வேடிக்கை பார்ப்பவன் அல்ல.

  மனிதர்களின் மனதில் உள்ள முரட்டுப் பிடிவாதத்தை அதனால் உருவாகும் வெறித்தனத்தை நீக்கி, இன்னும் மேலான நாகரிக நிலைக்கு அவர்களை உயர்த்துவதே நம் வழியாகும்.

  பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் பெயில் ஆனவனை ஒரே நாளில் நூறு மார்க் எடுக்கும் நிலைக்கு கொண்டு வர முடியாது.
  சீர்திருத்தம், பகுத்தறிவுப் பாடம் படிப் படியாகவே நடக்கும்.

  முதலில் மற்றவர் கூறுவதை சிந்திக்கும் மன நிலைக்கு ஒருவன் வர வேண்டும், அதற்க்கு சகிப்புத் தன்மை, அவசியமானது.

  முதலில் மனிதர்களின் மன நிலையை எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளுங்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் ராக்கெட் ஏறி நிலவுக்கு செல்ல முடியுமா?

 20. சினிமாவில் தீவிரவாதிகள் என்றாலே இசுலாமிய இன மக்களையே காட்டுகிறார்களே? \\

  இசுலாமியர்கள் என்பது ஒரு இனமா?இனமா?இனமா?

  நான் கூட ஒரு சமயக்கூட்டம் என்று தானே நினைத்தேன்

Leave a Reply

%d bloggers like this: