முற்போக்கு பார்ப்பனீயம்

 வே. மதிமாறன்

 ambedkar_periyar1.jpg 

நீங்கள் இலக்கியப் பறையனாக இருக்க விரும்பவில்லையெனில், ஆங்கிலத்தில் எழுதுங்கள்”                 வாஸந்தி   இந்தியன் எக்ஸ்பிரஸ்’ –  25.3.03 

யாரடா சொன்னது & தமிழை நீச மொழியென்று, தீட்டு மொழியென்று.ஆங்கிலம் எனன் ஆண்டவன் பாஷையா? ஆங்கிலத்தில் எழுதுகிறவன் என்ன ஆறு கை அவதாரமா? தமிழில் எழுதுகிறவன் என்ன ஒடிந்த கையனா? 

தமிழ் வாழ்க, ஆங்கிலம் ஒழிகஎன்று மகாகவிபாரதியின் நடிப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தி கண்டிக்க வந்த ஞானக் கொள்ளுப் பேத்திவாசந்திக்கு,  பாரதியின் பரம்பரை புத்தி வேலை காட்டி விட்டது. 

ஈனப்பறையர்களேனும் & அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோஎன்று எழுதினானே மகாகவி’, அதே பாணியில், ‘‘என்னை ஏன் பறைச்சி மாதிரி நடத்துறீங்க. தமிழ்ல எழுதறதுனால என்னை தாழ்ந்த ஜாதிக்காரின்னு நினைச்சிங்களா?’’ என்கிற விஷப் பொருள் பொதிந்த அர்த்தத்தில் எழுதியிருக்கிறார்.  

இப்படி இழிவான பொருள்படும்படி கொள்ளுப் பேத்திதிட்டமிட்டு எழுதவில்லை. அவர்களின் இயல்பான உணர்வது.

சரி, தமிழில் எழுதுகிறவர்களை, ஆங்கில எழுத்தாளர்கள் அளவிற்கு மதிப்பதில்லை என்பது இருக்கட்டும்.

தமிழில் எழுதுகிறவர்களை, தமிழில் எழுதுகிறவர்களே மதிப்பதில்லையே! தலித் வாழ்க்கையைத் தனது அற்புதமான எழுத்தாற்றலால் அள்ளிக் கொட்டிய சிவகாமிக்கு கிடைத்த மரியாதையை விட கிராஸ் வேர்ட்என்ற வெளிநாட்டு விருதைப் பெற்ற பாமாவிற்குக் கிடைத்த மரியாதையைவிட, – எழுத்தாளர்களாகிய இந்துமதி, அனுராதா ரமணன், சிவசங்கரி, வாசந்தி இவர்களுக்கு வெகுஜன தமிழ்ப் பத்திரிகைகளில் கிடைத்த மரியாதை, புகழ், பெயர் கூடுதல்தானே? எப்படி அது?

அதுதான் உயர்ஜாதியில் பிறந்த ஏழைகளுக்கான இட ஒதுக்கீடோ? ‘ஆமாம்என்கிறது பா.ஜ.க. 

‘‘ஏழை பார்ப்பனர்கள், குசேலன் காலத்தில் இருந்தே பொருளாதார ரீதியாக துன்பப்படுகிறார்கள். அந்தக் காலத்தில் குசேலன் என்கிற ஏழை பார்ப்பனருக்கு உதவ கிருஷ்ண பரமாத்மாஇருந்தான். இப்போது யார் இருக்கிறார்கள்’’ என்று அழுது புலம்பியது பார்ப்பன ஜனதா கட்சி (பா.ஜ.க) 

இந்தப் பார்ப்பனிய ஜாதி சங்கத்தில் எந்த ஜாதிக்காரன் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம். தலைமைப் பொறுப்புக்கும் வரலாம். ஆனால், அடியாளாக இயங்க வேன்டும், பார்ப்பனிய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். அப்படி அதீத அக்கறை கொண்டவர்களில் ஒருவர்தான் வெங்கையா (நாயுடு). இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்பவர். 

அண்மையில், ‘‘அய்யோ ஏழை உயர் ஜாதிக் காரர்கள் எல்லாம் கஷ்டப்படுகிறார்களே, சோற்றுக்கு இல்லாமல் சாகிறார்களே, தாழ்ந்த நிலையில் தள்ளப்பட்டிருக்கிற இந்த உயர்ஜாதிக்காரர்களைக் காப்பாற்ற யாருமில்லையா?’’ என்ற ரீதியில் கதறி தன் கடமையை நிறைவேற்றினார். அவர் கடமைக்கும் கதறலுக்கும் உடனே பலன் கிடைத்தது. 

இதோ நான் இருக்கிறேன்என்று கிருஷ்ண பரமாத்மாவாஜ்பாய், மத்திய அரசு என்கிற தன் சக்கரத்தைச் சுழற்றி விட்டிருக்கிறார். அந்தச் சக்கரம் கழுத்தறுக்க கிளம்பியிருக்கிறது. 

ஆம், ‘உயர் ஜாதிகாரர்கள் வாழ வேண்டுமென்றால் தாழ்ந்தஜாதிக்காரர்கள் சாக வேண்டும்தானே. ஆனால், கிருஷ்ண பரமாத்மாசொல்கிறார், ‘யாருக்கும் சேதமில்லாமல் செய்வோம்என்று. அதாவது வலியில்லாமல் கழுத்தறுப்போம் என்று அர்த்தம். 

நினைத்தாலே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்களில் நிறைய பேர் படித்து உயர் அதிகாரிகளாக, அமைச்சர்களாக இருந்தும் அலசி ஆராயும் அறிவாளிகள் இருந்தும், எழுச்சி மிக்க இயக்கங்கள் இருந்தும் & நம்மால் புதியதாக எந்த உரிமைகளையும் பெற முடியவில்லை என்பது மட்டுமல்ல, கிடைத்த உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் திராணியற்றும் இருக்கிறோம். 

சுற்றி எதிரிகள் சூழ்ந்திருக்க, தனி ஒரு ஆளாக எதிரிகளைப் பந்தாடும் ஒரு கதாநாயகனைப் போல, அந்த அல்லாடிகளும், கில்லாடிகளும், கண்ணன்களும், குசேலன்களும் சூழ்ந்திருக்க, அவர்களையெல்லாம் குப்புறத்தள்ளி, பிற்படுத்தப்பட்ட & தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை சட்டமாக்க, டாக்டர் அம்பேத்கரால் மட்டும் எப்படி முடிந்தது? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 

குசேலன் கதை, ரொம்ப பழைய கலத்திலிருந்தே பார்ப்பனர்கள் ஏழைகள்தான் என்பதை விளக்கிச் சொல்ல வந்த குறியீட்டுக் கதை. 27 குழந்தைகளைப் பெற்ற (பரிதாபத்திற்குரிய பெண்) குசேலன் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடுகிறது. தாண்டவத்தை நிறுத்த, தன் பால்ய நண்பன் கண்ணனைப் பார்த்து உதவி பெறுகிறான் என்பது தான் கதை. 

பார்ப்பனத் துயரைத் தாங்கி, ‘சென்டிமென்ட்டச்சோடு அத்தனை நூற்றாண்டுகளாகக் கேள்வி கேட்பாரற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இந்தக் கதையை, போன நூற்றாண்டில் ஒருவர் தனது ஒரே கேள்வியால் தரைமட்டமாக்கி விட்டார். 

கேள்வி இதுதான்: ‘‘27 பிள்ளைகளைப் பெற்ற ஒருவன் பிச்சை எடுக்கிறான். எவ்வளவு பெரிய மோசடி இது. ஆண்டுக்கு ஒரு பிள்ளை என்று பெற்றிருந்தாலும், 7 பிள்ளைகள் 20 வயதிற்குள் மேல் இருந்திருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் பிச்சை எடுக்கிறான் என்றால், அவன் குடும்பத்து யோக்யதை என்ன? உழைக்காமல் உண்பதே பார்ப்பன வாழ்க்கை & தர்மம்’’ என்பது போல் கேட்டிருப்பார் அவர். அப்படிக் கேட்டவர் தந்தை பெரியார். 

மிகப் பெரிய வறுமையை சித்தரிப்பதற்காக 27 குழந்தைகளைப் போட்டு திரைக்கதையை தயார் செய்திருக்கிறார்கள். அந்தத் திரைக் கதையில் உள்ள ஓட்டையை தனது நுட்பமான பகுத்தறிவினால் அம்பலப்படுத்தினார் பெரியார். அவருடைய சிந்தனையின் தைரியம் மாதிரியே அவருடைய லாஜிக்’, அதைச் சொல்லும், அவருடைய எளிமையான வார்த்தை ஒரு பிரமாண்டம். 

தைரியம் என்றவுடன்தான் இந்தச் சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. 25.5.03 அன்று ஜெயா டி.வியில் மெல்லிசை மன்னரின் இசைப்பயணம்என்ற நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனோடு முக்தா சீனிவாசன் உரையாடினார். 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ ‘நிலவே என்னிடம் நெருங்காதேபோன்ற நூற்றுக்கணக்கான சிறந்த பாடல்கலைக் கொடுத்த விஸ்வநாதன், மோசமான பாடல்களைக் கொடுத்தார் என்றால் அது முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வந்த படங்களில்தான்.மிஸடர் மிராண்டா… நேரில் வரான்டா’ ‘நான் பொல்லாதவன்…ஐமுக்கு ஐம்மா ஐம்என்கிற மியூசிக்கோடு. நமக்கு இவைகளோடு இல்லை பிரச்சனை. அதன் பிறகு மிகப்பெரிய பிரகடனம் ஒன்றை செய்தார். 

‘‘உலகத்திலேயே ரொம்ப தைரியமானவர் லெனின். அதற்குப் பிறகு ஜெயலலிதாதான்’’ என்றார். கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி, மிகச் சீரியசான முகபாவனையிலேயே சொல்லிமுடித்தார்.இவர் இயக்குநரானதற்கு பதில் நடிகர் ஆகியிருந்தால், இதுவரை சிறந்த நடிகருக்கான உலக விருதுஇந்தியாவிற்கு இல்லை என்கிற குறையைத் தீர்த்திருப்பார். (ஒரு வேளை ஜெயலலிதாவை வைத்து கடைசியாகப் படம் எடுத்த எடிட்டர் லெனினை குறிப்பிட்டுச் செல்லியிருப்பாரோ!) 

கூச்ச நாச்சமின்றி என்ற சொல்லைப் பயன்படுத்தியவுடன் அந்தச் சொல்லின் உருவகமான சீறி ஜெயேந்திர சரஸ்வதியின் கூச்ச நாச்சமற்ற அறிக்கைகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன.எந்த நேரமும் தலித் மக்களையே குறிவைத்து அக்கறையோடுதாங்குகிற இவர், சமீபத்தில் ஒரு தமிழ்த் தேசியத் தலைவரைப் போல், ‘‘இனி உங்களுக்கு ஆதி திராவிடர் என்ற பெயர் வேண்டாம். ஆதித் தமிழர் என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். 

ஆனாலும் ஜெயேந்திர சரஸ்வதி போன்ற பார்ப்பனர்கள் மட்டுமல்ல, பாரதியார் போன்ற முற்போக்குப் பார்ப்பனர்கள் கூட எதை வேண்டுமானாலும் ஒத்துக் கொள்கிறார்கள்’. ‘திராவிடன்என்ற சொல்லை சொன்னாலே, ஏதோ பச்சை மிளகாயை வைத்து போல பதட்டமாகிறார்கள். 

பார்ப்பனர்களின் இந்த திராவிடஎதிர்ப்புணர்விற்கு அணிசேர்ப்பது போல் அண்மைக்காலங்களில், தலித் அறிஞர்கள் பெரியார் உட்பட்ட ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தையும் தலித் விரோதப் போக்குஎன்று ஆணியடிக்கிறார்கள். தலித் விடுதலைக்கு அறிஞர்கள் சொல்லுகிற தீவிரமான அலோசனைகளில் முக்கியமான ஒன்று, ‘பார்ப்பனர்களா நம் விரோதிகள்என்பது. 

பார்ப்பனர்களோடு சேர்ந்து தலித் விடுதலையை வென்றெடுக்கதலித் அறிஞர்கள் திறந்த மனதோடு ஆவலாக இருக்கலாம். ஆனால் அந்த நட்பை முடிவு செய்ய வேண்டியவர்கள் பார்ப்பனர்களாகத்தன் இருக்கிறார்கள். 

ஆனாலும், அண்மைக் காலங்களில் அதிகார மட்டத்திலும், அரசியலிலும், இலக்கிய வட்டத்திலும், இந்து மதப் பிரச்சார வடிவங்களிலும் பார்ப்பனர்களின் மிகத்தீவிரமான பகிரங்கமான தலித் விரோத போக்கு, பார்ப்பனத் தோழமையை விரும்புகிற தலித் அறிஞர்களைக் கூட, பார்ப்பனர்களுக்கு எதிராக இயங்க வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சும்மாவா சொன்னார் தலைவர் மா சே துங், 

மரம் அமைதியை விரும்பினாலும் காற்று அதை விட்டு வைப்பதில்லைஎன்று.

தலித் முரசுஇதழில் சூன் 2003ல் எழுதியது.

5 thoughts on “முற்போக்கு பார்ப்பனீயம்

  1. திராவிடம் என்பது தமிழா?முதலில் அதற்கு விளக்கம் சொல்லுங்கள். எனக்குத்தெரியாமல்தான் கேட்கிறேன்?

  2. இராசேந்திரசோழன், மண்மொழியிலும், பெ. மணியரசன் தமிழர் கண்ணோட்டத்திலும் எழுதியுள்ள ராமன் ஆதரவு, இந்துத்துவ ஆதரவு கட்டுரைகளைப் படியுங்கள். நாம் படிப்பது பா.ஜ.கவின் ‘விஜயபாரதமா?’ என்று சந்தேகப்படும் வகையில் எழுதியுள்ளார்கள். அவற்றிற்கு உரிய எதிர்வினையை, தங்கள் வலைப்பதிவிலும், சமூக விழிப்புணர்வு இதழிலும் எழுதுங்கள்.

  3. த.தே.பொ.கட்சியில் நிலவிய ஊழலையும், குறைபாடுகளையும் கண்டித்து இராசேந்திரசோழன், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழ் தேச மார்க்சியக் கட்சியை நிறுவினார். ஆனால், தலித்கள் தீண்டாமையைச் சகித்துக் கொண்டு இந்து மதத்திலேயே இருக்க வேண்டுமே தவிர, மதம் மாறக் கூடாது என அறிவுரை கூறுகிறார். இதில் அறிவு நாணயம் உள்ளதா? என்னைப் பொருத்தவரை, பாரதி, ஞாநி – போன்றவர்கள் மணியரசனையும், இராசேந்திரசோழனையும் விட நூறு மடங்கு சிறந்தவர்கள் என்பேன்.

  4. தமிழ் நாட்டில் ஃபார்வார்டு பிளாக் என்று ஒரு தேசிய கட்சி உள்ளது. இக்கட்சி பல பிரிவுகளாய் பிரிந்து விட்டாலும், தேவர் சாதி வெறியிலும், இந்துத்துவா பேசுவதிலும் ஒன்றுபட்டிருக்கும். மதவாதம் பேசும் இடது சாரிக்கட்சியாக ஃபார்வார்டு பிளாக் மட்டுமே இருந்தது. இப்போது, இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிக்க இரு தமிழ் தேசக் கட்சிகள் உள்ளன. இதனை தொகாடியா அறிந்ந்தால், மிகவும் மகிழ்ச்சியடைவார். சங்பரிவாருகு மேலும் இரு கூட்டாளிகள். மராட்டிய இனவெறியும், இந்துவெறியும் கொண்ட கலவைக்கு சிவசேனை இருப்பது போல், தமிழ் தேசியக் கொள்கையும், இந்துத்துவ ஆதரவுப் போக்கும் கொண்ட இரு கம்யூனிஸ்டு கட்சிகள். நல்ல பொருத்தம்.

  5. தங்களது கற்பனைப்படி குசேலருக்கு பிரசவத்திற்கு ஒரு குழந்தை வீதம் இருபத்தியேழு பிரசவங்களில் இருபத்தியேழு குழந்தைகள் பிறக்கவில்லை.பிற்காலத்தில் இப்படி ஒரு கேள்விகேட்க்கும் சூழ்நிலை வருமென்று இதை எழுதியவர் உணர்ந்திருந்தாரோ அல்லது நடந்ததை பதிவுசெய்திருந்தார்களோ குசலேர் மனைவிக்கு மூன்று அல்லது நான்கு பிரசவங்களில் இருபத்தியேழு குழந்தைகளும் பிறந்திருப்பார்கள்.இதைப்பற்றி தேச மங்கையர்க்கரசி அவர்களது சொற்பொழிவில் பேச கேட்டிருக்கிறேன்.அது தற்சமயம் கைவசமில்லையாதலால் விரைவில் தேடி கண்டுபிடித்து இங்கே பதிவுசெய்கிறேன்.தற்சமயம் இந்த விசயத்தைமட்டும் இங்கே பதிவுசெய்கிறேன்.பொதுவாக இந்து மத ரீதியான விசயங்களில் நீங்கள் படிக்கும் ஒரு வரிஉடனோ உங்களுக்கு சாதகமான ஒரு வரி கிடைத்தவுடனோ அவசரப்பட்டு உங்கள் வர்ணத்தை அதன்மீது பூசி காட்சிக்கு கொண்டுவந்துவிடுகிரீர்கள்.முழுமையாக அறிந்துகொண்டு நடுநிலையாக அலசி ஆராய்ந்து பின்னர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.பொதுவாக பெரியாரை பேயோட்டும் மந்திரவாதியாக சித்தரிக்கலாம்.அவர் மனிதரைப்பிடித்திருக்கும் பேயை விரட்ட அவர்களை சாட்டையால் அடிப்பது,சாணியை கரைத்து உற்றுவது போன்றவற்றை செய்கிறார் என்று வைத்துகொள்ளுங்கள்.வெளிப்பார்வைக்கு பெரியார் அம்மனிதரை அடிப்பதுபோல தெரிந்தாலும் அவரது நடவடிக்கைகள் உள்ளிருக்கும் பேய்க்காக அன்றி அம்மனிதருகாக அல்ல.ஆனால் பெரியாரின் பின்வந்த நீங்கள் அவர் பேயோட்டும் புகைப்படங்களைப்பார்த்து பெரியார் மனிதர்களை சாட்டையால் அடித்திருக்கிறார்,மனிதர்கள் மீது சாணியை கரைத்து உற்றி இருக்கிறார்அவரது கொள்கைகளை பின்பற்றும் நாமும் மனிதர்கள் மீது சாணியை கரைத்து உற்றுவோம்,மனிதர்களை சாட்டையால் அடிப்போம் என செய்தால் எப்படி அர்த்தம்கெட்ட தனமாக இருக்குமோ அப்படிதான் உள்ளது உங்களின் சில பதிவுகள்.தயவுசெய்து பெரியாரை முழுமையாக புரிந்துகொண்டு பதிவை தொடருங்கள்.தவறான பெரியாரை உலகிற்கு அறிமுகம் செய்து தவரிளைத்துவிடாதீர்கள்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading