காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்

ரு முறை நான் டைரக்டர் மகேந்திரன் வீட்டுக்கு போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ கமராஜர் படபப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரகடர் மகேந்திரன் அறிமுகப் படுத்திவைச்சார்.

உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, “பெரியாரா யார் நடிக்கிறாங்க?”
அதுக்கு பாலகிருஷ்ணன், “படத்துல பெரியார் கேரக்டரே இல்ல” என்றார். நான் பதட்டமாயிட்டேன்.

“காமராஜரின் சிறப்பே பெரியாரின் பாதிப்புதான். பெரியாரின் தாக்கம் இல்லேன்னா… கிராமப்புற பள்ளிக்கூடம் வந்திருக்காது. நம்ம கல்வி இன்னும் தள்ளிப் போயிருக்கும்.” என்று சொன்னேன்.

அதுக்கு பாலகிருஷ்ணன்,
“விட்டா நீங்க பெரியாரை காமராஜரை விட பெரிய தலைவர்ன்னு சொல்லுவிங்க போல.” என்றார்.

அதுக்கு மேலே அவருக்கூட விவாதிக்க விருப்பம் இல்லாமல் அமைதியாயிட்டேன். ஆனால் ‘காமராஜர்’ படம் வந்தபோது திரையில் பெரியார் இருந்தார். முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு.

காமராஜர் – ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக கொண்டுவந்த, கிராமப் புற பள்ளிக்கூடம் திட்டத்தை இருட்டடிப்பு செய்து, பார்ப்பனர்கள் திரும்ப, திரும்ப காமராஜரின் சிறப்பாக சொல்வது அவருடைய எளிமையை மட்டும்தான்.

காமராஜரை பார்ப்பனப் பத்திரிகைகள் புகழ்வது அவர் மேல் கொண்ட அன்பினால் அல்ல. காமராஜரை – அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களை மட்டம் தட்டுதற்கான ஒரு குறியீடாக பயன்படுத்துவதற்காகத்தான்.

ஆனால் காமராஜரின் சிறப்பு பெரியாரின் ஆலோசனையோடு, அவர் ராஜாஜியை எதிர்த்து அரசியல் பண்ணியதுதான். அதை பார்ப்பனப் பத்திரிகைகள் ஒரு போதும் சொல்வதில்லை. பெரியாரையும் காமராஜரையும் இணைத்து பார்ப்பனர்கள் எப்போதும் எழுதுவதே கிடையாது.

தன் கடைசிகாலம் வரை தீவிரமாக தேசியத்தை வலியுறுத்திய காமராஜரை ஆதரிக்கிற தமிழ்த் தேசியவாதிகள்கூட, பார்ப்பனர்கள் ஆதரிக்கிற தொனியில்தான் காமராஜரை ஆதரிக்கிறார்கள். அதனால்தான் திராவிட இயக்க எதிர்ப்பு குறியீடாக ஒரு பொதுக்கருத்தைப் போல, “காமராஜர் போல ஒரு முதலமைச்சரை இனி பார்க்க முடியாது” என்று சொல்கிறார்கள்.

காமராஜர் ஆட்சி வரமுடியாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் ஒரு போதும் ராஜாஜி ஆட்சி மட்டும் திரும்ப வந்துடக் கூடாது. போயஸ் தோட்டத்து ‘பொம்பள ராஜாஜி’யையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

எளிமையாகவும் நேர்மையாகவும் ஒருவர் இருந்தால் மட்டும் போதாது. அந்த எளிமையும், நேர்மையும் யார் பொருட்டு இருக்கிறது என்பதுதான் அதன் சிறப்பு. இந்தியாவிலேயே மிக எளிமையான அமைச்சராக இருந்தவர் என்று, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிரூபன் சக்கரவர்த்தியை சொல்லுவார்கள்.

இன்றைக்கும் கூட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் பஸ்ல போறதா சொல்றாங்க. பஸ்ல போறது பெரிய விஷயமல்ல. எங்க போறங்க அப்படிங்கறதுதான் முக்கியம். பஸ் ஏறி ‘போயஸ் தோட்டத்துக்கு’ போறதுனால சமூகத்துக்கு என்ன பயன்?

ஒரு கம்யூனிஸ்ட் எளிமையாக இருப்பது அதிசயம் அல்ல. அவர் அப்படித்தான் இருக்க வேண்டும். அதை ஒரு செய்தியாக சொல்லிக் காட்டுவதுதான் ஆபாசம். ஆனால் ஒரு காங்கிரஸ்காரர் எளிமையாக இருப்பது சாதாரணமல்ல. அப்படிப் பார்த்தால் இந்தியாவிலேயே மிகவும் எளிமையான, நேர்மையான மந்தரி என்றால் அது கக்கன் அவர்களைதான் சொல்லமுடியும்.

ஆனால் அவருடைய எளிமையும், நேர்மையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை.

செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன், ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தான். அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை.

தான் கொண்ட கொள்கைக்காக தன்னையே தியாகம் செய்வது பெரிய விஷயம்தான். ஆனால் அந்த உயிர் ஆதிக்கத்திற்கு ஆதரவாக போகிறதா? இல்லை ஆதிக்கத்திற்கு எதிராக போகிறதா? என்பதின் பொருட்டே அந்தத் தியாகம் மதிக்கப்படுகிறது.

கோட்சேக் கூட தான் கொண்ட கொள்கைக்காக தூக்கில் தொங்கினான்.
ஆனால் பகத்சிங்தான் நமக்கு மாவீரன். அவர் தியாகம்தான் நாம் பின்பற்றுவதற்குரியது.

ஆக, காமராஜர் வெறும் எளிமையாகவும், நேர்மையாகவும் மட்டும் இருந்து, பெரியாரின் தாக்கம் இல்லாமல் இருந்திருந்தால், அவர் சத்தியமூர்த்தி என்கிற பார்ப்பனரின் சீடராக இருந்து மறைந்திருப்பார். நமது நினைவுளிலும் இருந்திருக்க மாட்டார்.

அதேபோல், அண்ணா முதல்வராக இருந்தார் என்பது சிறப்பல்ல. அவர் பெரியாரோடு இருந்தார் என்பதுதான் அவருக்கான சிறப்பு. பெரியாருக்கு எதிராக தீவிரமாக இயங்கிய மிக மோசமான முதலமைச்சரான பக்தவச்சலத்தை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்குக்கூட அவருடை ஞாபகம் கிடையாது.

கடைசியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.
இன்றைய சூழலில் பெரியார்-அம்பேத்கரின் பாதிப்பு இல்லாமல் ஒரு முற்போக்கு இயக்கம் தமிழகத்தில், இந்தியாவில் இருக்க முடியாது. இவர்கள் இருவரையும் தவிர்த்து முற்போக்காளர்களாக தன்னை காட்டிக் கொண்டால், அவர்கள் ஏதோ ஒரு வகையில் பார்ப்பனியத்திற்கு வால் பிடிப்பவர்களாக இருப்பார்கள்.

பார்ப்பனியம் என்பது இந்து மத சடங்குகளை கடைப்பிடிப்பது மட்டுமல்ல. ஜாதிய கண்ணோட்டமும், சுயஜாதி அபிமானமும்கூட பார்ப்பனியம்தான். இந்து மதமே ஜாதியாகத்தான் இருக்கிறது.

ஆக, சுயஜாதி அபிமானத்தோடோ, கிறிஸ்த்தவர், இஸ்லாமியர் என்கிற மத உணர்வோடோ – இந்து மதத்தை பார்ப்பனியத்தை எதிர்கொள்ள முடியாது. இந்த உணர்வுகள் எதிராகவே பதிவானால் கூட, அது பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வளர்க்கவே உதவும்.

பார்ப்பனியத்தை, இந்து மதத்தை வீழ்ந்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி பெரியாரின் பகுத்தறிவு பாதைதான்.

நன்றி, வணக்கம்.

(24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் வே. மதிமாறனின் ஏற்புரை.)

கீற்று இணையதளம் அப்போதே இந்த உரையை முழுமையாக வெளியிட்டு இருந்தது. இதை ஏற்கனவே 1- 10- 2008 ‘காமராஜரின் சிறப்பு எது? பெரியாரா? எளிமையா?’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். தோழர்கள் கேட்டுக் கொண்டதற்காக மீண்டும் வெளியிட்டிருக்கிறென்.

விழா நிழற்படங்கள் நண்பன் ந. வெங்கட்ராமன். (கோவை)

*

தொடர்புடையவை:

அமெரிக்காவின் அப்துல்கலாமே…வெள்ளை மாளிகையின் கறுப்பு புஷ்ஷே… வருக வருக

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்

தமிழ்த்தேசியம்:  ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம் =பெரியார் எதிர்ப்பு
*
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்
*
யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல; ‘தீ’ யை

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2009/02/muthukumar.jpg?w=474

 

முத்துக்குமார் தியாகத்தை ஒட்டி, அதுபோன்றே பல  இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டபோது, 3-2-2009 அன்று எழுதியது. அதே தலைப்புடன் மீண்டும் பிரசுரிக்கிறேன்.

*

ழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள வைக்கிற, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே புள்ளியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்ற அழைக்கிற அளவிற்கு இதுவரை ஒரு கட்டுரையும் எழுதப்பட்டதில்லை.

ஆனால், முத்துக்குமாரின் கட்டுரை வடிவில் அமைந்திருக்கிற அந்த நான்கு பக்கக் கடிதம், அதை செய்திருக்கிறது. அதை நிரூபித்தது போல், அவரின் எழுச்சிமிகு இறுதி ஊர்வலத்தில் பல்வேறு இயக்கங்களும், மக்களும் லட்சக்கணக்கில் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை எழுச்சியோடு பதிவு செய்தனர்.

ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் நடத்திய அந்த எழுச்சிமிகு அணிவகுப்பில்கலந்துக் கொண்டதை, என்னுடைய தகுதியாக, என் அரசியல் நடவடிக்கைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தா ஒன்றாக, மிகப் பெருமையோடு கருதுகிறேன்.

ஏனோதானோ என்றோ, அல்லது தன்னைப் பெரிய அறிவாளியாக, எழுத்தாளனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றோ பல மேற்கோள்களைக் காட்டி, படிப்பவனை மிரட்டி நானூறு பக்கங்களுக்கும் மிகாமல், ‘பெரும் குறிப்பு` வரைகிற எழுத்தாளர்கள் மத்தியில், நான்கே பக்கத்தில், தனது முதல் எழுத்திலேயே, வெறும் துண்டு பிரசுரத்தில் ஓர் இரவுக்குள் தமிழகத்தையே தலைகீழாகப் புரட்டி விட்டார் முத்துக்குமார்.

தான் கொண்ட கொள்கையின் மீது அர்ப்பணிப்பும், உண்மையும், துணிவும், தியாக உள்ளமும் இருந்தால், நானூறு பக்கங்கள் அல்ல, நாலே வார்த்தையில் கூட மக்களை தட்டி எழுப்ப முடியும் என்பதற்கு முத்துக்குமாரின் ‘உயில்’ ஒரு சாட்சி. நமக்கு பாடம்.

***

அரசியல் அலசல் கொண்ட கட்டுரையை, கடிதத்தை மிகச் சிறப்பாக எழுதுவது, முயன்றால் எல்லோருக்கும் முடிகிற காரியம்தான் என்றாலும், மரணத்தை முடிவு செய்துவிட்டு, எழுதச் சொல்லுங்கள், அவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும், அவருக்கு ஒண்ணாவது வாய்பாடைக் கூட ஒழங்காக எழுதவராது.

தாய்நாட்டிற்காக, மரணத்தைக் கண்டு அஞ்சாத அந்தச் சிறப்பு இந்திய வரலாற்றில் மாவீரன் பகத்சிங்கிடம் இருந்தது.

மறுநாள் காலையில் தூக்கு, இரவு லெனின் ‘அரசும் – புரட்சியும்‘ என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறார் பகத். சிறைக்காவலர், “மன்னிப்பு எழுதிக் கொடுத்தால், தூக்கிலிருந்து தப்பலாமே” என்கிறார்.

பகத்சிங் சொல்கிறார், “என் மரணத்தைப் பார்த்து லட்சக் கணக்கான இளைஞர்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக போராட வருவார்கள். என் மரணம் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டு பண்ணும். அதற்காகவே நான் தூக்குகயிறை முத்தமிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தீவிரமாக லெனின் ‘அரசும் – புரட்சியும்’ என்ற நூலைப் படித்திருக்கிறார் பகத். முத்துக்குமாரின் மிகச் சிறப்பும், பகத்சிங்கைப் போன்றே மரணத்தை மயிறளவுக்கூட மதிக்காததன்மைதான்.

தன் மரணத்தை முடிவு செய்துவிட்டு, மிகப் பெரிய அரசில் தீர்வை அலசி ஆராய்ந்து ஒவ்வொரு வார்த்தையிலும் நெருப்பு வைத்து எழுதியிருக்கிறார் தமிழகத்து பகத்சிங் முத்துக்குமார். அவர் வைத்துக் கொண்ட நெருப்பைவிடவும் அவர் வைத்த நெருப்பு, லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் நெஞ்சில், திகுதிகு வென்று பற்றி சூராவளியாய் தமிழகம் முழுக்க சுற்றி அடிக்கிறது.

தோழர்களே, முத்துக்குமாரின் அந்த நான்கு பக்க தீபந்தம், நம் கையில் இருக்கிறது. அந்த மாவீரன், மாமேதை முத்துக்குமார் நமக்கு வழிகாட்டிச் சென்றிருப்பது, நம்மை வருத்திக் கொள்ள, கொளுத்திக்கொள்ள அல்ல. தமிழனப் பகையை வருத்த, கொளுத்த.

ஆம் தோழர்களே, முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ‘ யை.

அந்தத் ‘தீ‘ ஈழத்தமிழர்களுக்கு எதிரான, தமிழனத்திற்கு எதிரான, வஞ்சிக்கப்படும் மக்களுக்கு எதிரான சதியைப் பற்ற வைப்பதற்காக மட்டுமே நமக்கு பயன்பட வேண்டும். அது ஒன்றுதான் முத்துக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான வீர வணக்கம்.

தொடர்புடயவை:

ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது

ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’

தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்திலிருந்து நேரடி பேட்டி

‘எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்’ இதுதாண்டா தமிழ் பத்திரிகை – தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?

பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

அம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி

-யாழன் ஆதி

கவிஞர் யாழன் ஆதி ‘தீராநதி’ இதழில் எழுதியதை இங்கு பிரசுரிக்கிறேன்.

*

டர்ந்த வனத்தில் பசியோடு அலைகின்ற சிங்கத்தைப் போல, சாதிய கோட்பாடுகளால் இறுகக் கட்டப்பட்ட ஒரு சமூகத்தில் சாதியை ஒழித்து மனித மாண்பை வலியுறுத்தும் போராட்டத்தை இடையறாது நடத்தி தன் குடும்பம், படிப்பு,  வாழ்க்கை அனைத்தையும் அர்ப்பணித்த ஒரு மாமனிதர் அம்பேத்கர்.

1928 ல் இந்தியாவின் சட்டவரைவியலுக்காக ஆங்கில அரசு அமைத்த சைமன் குழு காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்ட பிறகு இந்தியாவிலிருக்கும் அனைத்துத் தரப்பினையும் அழைத்துப்பேச இலண்டனில் வட்டமேசை மாநாட்டை 1930ம் ஆண்டு நவம்பர் 12 முதல் 1931 ஜனவரி  19 வரை நடத்தியது இங்கிலாந்து அரசு. அந்த மாநாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் கலந்துகொள்ளவில்லை.  ஆனால் அம்மாநாட்டில் ஆங்கில அரசால் அழைக்கப்பட்ட  இந்து மகாசபையின் தலைவர் டாக்டர் மூஞ்சே, இந்து மிதவாதக் கட்சித்தலைவர்களான ரைட்  ஆனரபில் சீனிவாச சாஸ்த்திரி, சர். தேஜ் பகதூர்  சாப்ரூ,   எம் .ஆர். ஜெயகர் தாழ்த்தப்பட்டோர்களின் பிரதிநிதிகளாக அம்பேத்கர், ரெட்டமலை சீனிவாசன் மற்றும் இசுலாமியர்கள் ,சீக்கியர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அம்மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பி.எச்டி பட்டம் பெற்றவர் அம்பேத்கர் மட்டுமே. அவர் மூன்று கண்டங்களில் படித்தவர். அவருடைய படிப்பும் அறிவும் அவருக்கு மட்டுமே அவர் பயன்படுத்தியிருப்பாரே என்றால் அவர்தான் இந்தியாவின் முதல் செல்வந்தராகக் கூட அவருக்கு வாய்ப்பிருந்திருக்கும்.

ஆனால் யார் ஒருவர் தன்னுடைய திறமையையும் கல்வியையும் நேரத்தையும்  சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பயன் படுத்துகின்றார்களோ அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்னும் கருத்து அவருக்குள் இருந்ததால் அவர் தன்னுடைய அறிவை  தன் மக்களுக்காக பயன் படுத்தினார். அவர் ஒருவரின் போராட்டமும் அறிவுச் சார்ந்த செயல்பாடுகளும்தான் இன்று கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்டவர்களை ஓரளவு தலைநிமிர செய்திருக்கின்றது. இந்தியாவின் அறிவுலகத்திற்கு அம்பேத்கர்  ஓர் அடையாளமாக இருந்தார்.

வழக்கத்தைப் போலவே  இந்தியாவில் அம்பேத்கரும் மிகத்தாமதமாகவே புரிந்துக்கொள்ளப்பட்டு வருகின்றார். காலத்தின் நீண்ட வற்புறுத்தலாலும் தேவையினாலும் அம்பேத்கரின் பணியும் அவரின் எழுத்தும் இன்றைய அறிவாளர்களால் அரசியல் இயக்கங்களால் தேடப்படுக்கின்றன.  இந்தச் சூழலின் பின்புலத்தில்தான் அம்பேத்கர் திரைப்படத்தை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்பது  இந்தியாவில் நிலவும் சாதிகளை ஒழிக்கும் வரலாறு. விசாவுக்காக காத்திருத்தல் என்று அம்பேத்கரால் எழுதப்பட்ட கட்டுரையில் அவர் குழந்தைப்பருவத்தில் அடைந்த சாதிய ஒடுக்குமுறைதான் அவர் படித்து முடித்த பிறகும் தொடர்ந்தது.  தன்  பணியினை  தன் வாழ்விலிருந்தே தருவித்துக் கொண்டவர் அவர்.

காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த கருத்தியல் ரீதியான வேறுபாடு என்பது அனைவரும் அறிந்ததே. காந்தியின் தேசமாகயிருக்கும் இங்கிருந்து அம்பேத்கர் என்னும் ஆளுமையின் வரலாற்றை சரியாக பதிவாக்குவார்களா என்னும் அய்யம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் இயக்குனர்   ஜாபர் பட்டேல்  அந்த அய்யத்தினை த்ன்னுடைய சிறந்த இயக்கத்தால்  போக்கினார் என்பதுதான் உண்மை. ஃப்ரீ பிரஸ் ஜர்னலின் முன்னாள் ஆசிரியர்  அரு சாது, அம்பேத்கரியல் ஆய்வாளர்  ஒய்.டி . பாட்கே ஆகியோர் திரைக்கதை உருவாக்கத்தில் பங்காற்றியதுகூட இந்தப்படத்தின்  கூடுதல் பலமாகக் கருதப்பட்டது.

அம்பேத்கரின் நூற்றாண்டு நினைவாக (1891 – 1956) தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் இத்திரைப்படத்தைத் தயாரித்தது. இப்படத்திற்காக 1991 ம் ஆண்டு மகாராஷ்டிர அரசு 7.75 கோடிகளை வழங்கியது. ஆங்கிலத்தில் நேரிடையாக எடுக்கப்பட்ட இப்படம்  1999ல் ஆங்கிலத்திலும் 2000ல் இந்தியிலும்வெளியிடப்பட்டது, பிற இந்திய மொழிகளிலும் இப்படம்  மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 1999 ல் வெளிவந்த போது அப்படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. அவ்வாண்டின் சிறந்த நடிகராக மம்முட்டி தேர்ந்த்டுக்கப்பட்டார். ஆங்கிலத்தில் வந்த சிறந்த திரைப்படம் என்னும் விருதினைப் பெற்றது. படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றிய நிதின் சந்திரக்காந்த் தேசாய் சிறந்த கலை இயக்குனருக்கான  தேசிய விருதினைப் பெற்றார்.

யாழன் ஆதி

இத்தகையப் படம் தமிழில் வருவதற்குப் பட்டபாடே ஒரு படமாக இருக்கும்போல. 2000த்தில் இந்தியில் வந்த அம்பேத்கர் திரைப்படம் 2010 டிசம்பரில்தான் தமிழில் வருகின்றது. பத்தாண்டுகளுக்குப் பிறகு  பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழில் வெளிவந்திருக்கின்றது. பகுத்தறிவு மேலோங்கிய மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் அம்பேத்கரைப் பற்றிய புரிதல் அவருடைய நூற்றாண்டுக்குப் பிறகுதான் அதிகரிக்கின்றது. அதற்குமுன்பு வரை தலித் இயக்கங்களின் அரசியலாக மட்டுமே அம்பேத்கர் இருந்தார். ஆதிதிராவிட நலத்துறை என்றால் அதற்கு ஒரு ஆதிதிராவிடரையே அமைச்சராகப் போடும் போக்கினை இன்றைக்கும் திராவிட அரசியலில் நாம் காணலாம். அம்பேத்கர் மீதான பார்வையும் அப்படித்தான் இருந்தது. அவர் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்ற நிலையைத் தாண்டாமல் இருந்தது. பெரியார் அம்பேத்கரை தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டதாக அறிவித்துக் கூட அவருக்குப் பின்வந்த திராவிட இயக்கதவர்கள் அதை மறைத்ததால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் புறக்கணிப்புக்கு அம்பேத்கர்  ஆளானார். அதனால் தான் அம்பேத்கர் சிலை இருக்கும் இடம் சேரி என்னும் அடையாளம் கிடைத்திருக்கின்றது. இந்த அரசியல் நிலை கூட அம்பேத்கர் திரைப்படம் தாமதமாக வந்ததற்கான காரணாமாக நாம் கருதலாம்.

எழுத்தாளர் வே. மதிமாறன்  மற்றும் அவருடைய தோழர்கள்  அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வரவில்லையே என யோசித்து 2010 மார்ச்சில் தொடங்கிய வேலைகள் இப்படம் வருவதற்கு ஆதார சுருதியாக இருந்திருக்கின்றன. சென்னையிலுள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக அலுவலகத்தில் அவர்கள் நிகழ்த்திய உரையாடலின் விளைவாக அப்படம் யாரிடத்தில் இருந்தது என்பதை அறிய முடிந்தது.

மம்முட்டி நடித்ததால் அதற்கு ஒரு சந்தை மதிப்பு இருக்கும் என்று நம்பிய விஸ்வாஸ் சுந்தர் என்னும் விநியோகிஸ்தர்   அம்பேத்கர்  திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளார். ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகள் அவரிடம் அந்த உரிமை இருக்கும் அதற்குள் அவர் படத்தினை எத்தனை முறையேனும் திரையிட்டுக் கொள்ளலாம். ஆனால் படத்தை வாங்கிவந்த சுந்தர் அதனை வெளியே சொல்லாமலேயே கமுக்கமாக வைதிருந்திருக்கின்றார். ஒரு படத்தை மொழிமாற்றம் செய்ய அதிக பட்சமாக 5 லட்சங்கள் தேவைபடலாம். இது கூட இல்லாமலா ஒரு விநியோகஸ்தர் இருந்திருப்பார். இல்லையென்றால் நிலைமையை யாருக்கேனும் சொல்லியாவது இருந்திருக்கலாம்.

இத்தகைய செய்திகள் எல்லாம் மதிமாறன் உள்ளிட்டவர்களால் வெளியிடப்பட, பல தலித் இயக்கங்கள் போராட்டத்தில் இறங்கின. டாக்டர் சேதுராமனின் கட்சிக் கூட படத்தை வெளியிட வேண்டி தீர்மானம் நிறைவேற்றியது. இது குறித்து  தமிழக சட்டமன்றத்தில் செல்வப் பெருந்தகை  கேள்வி எழுப்பியபோது படத்தின் மொழி மாற்றத்திற்காய் பத்து லட்சம் தருவதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி 2007 ம் ஆண்டு மே 7ம் நாள் அறிவித்தார். அதற்குப் பிறகும் படம் வெளியாக வில்லை. காரணம் இன்னும் அதிகாமான பணத்தை  அபகரிக்க வேண்டும் என்னும் சுந்தரின் எண்ணம். படத்தை பல்வேறு தலித் தலைவர்களிடமும் விலைபேசியிருக்கின்றார். விலை படியாததால்  அது அப்படியே கிடப்பில் போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2010 செப்டம்பரில் விஸ்வாஸ் சுந்தருக்கான மூன்றாண்டு ஒப்பந்த உரிமம் முடிகின்றது.

அதன்பிறகு சமூகநீதியில் அக்கறைக் கொண்ட வழக்கறிஞர் சு. சத்தியசந்திரன் அவர்கள் பிரிவு 226ன் படி சென்னை உயர்நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கொன்றைத் தொடுத்தார். அதன்படி அம்பேத்கர் திரைப்படத்தை தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம்   ஆங்கிலத்தில் எடுத்தது. அதை இந்தியிலும் மராத்தியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விற்காக உழைத்த ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாற்றை அந்த மக்கள் பார்க்கவேண்டியது அவர்கள் உரிமை.எனவே அப்படத்தை தமிழில்  வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கும்  தேசிய திரைப்பட  வளர்ச்சி நிறுவனத்திற்கும் நீதிமன்றம் ஆணையிடவேண்டும் என்று கேட்டிருந்தார். வழக்கு விசாரணைக்கு வருகையில் தமிழில் வெளியிடும் உரிமையை வழங்கிவிட்டதாக திரைப்பட வளர்ச்சி நிறுவனம்  கூறியது.  நிதிச் சிக்கல்  தீர 10 லட்சம் தமிழக அரசு வழங்கியது. எதிர்தரப்பில் இருந்து வரிவிலக்குக் கேட்டு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப் தர்மராவ். கே.கே. சசிதரன் ஆகியோர்  வரிவிலக்கு அளிப்பது குறித்து உடனே முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு கட்டளையிட்டனர். இறுதியில் கூடிய விரைவில் படத்தைத் திரையிட தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு உத்திரவிட்டது.

படம் வெளியாவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் மிகவும் பாராட்டுதலுக்குரியவை. ஓர் இலக்கிய அமைப்பு இத்தகைய சமூக பங்களிப்பை செய்திருக்கின்றது  என்பது  முக்கியத்துவம் வாய்ந்தது. இயக்குனர் – எடிட்டர் லெனின் அவர்களின்  பங்களிப்பும் அப்படியானதுதான்.  தலித் இயக்கங்கள் செய்ய வேண்டிய ஒப்பற்ற பெரும்பணியை தன் கைக்காசைப் போட்டு அவர் செய்திருக்கின்றார்.

இப்படி  எத்தனையோ   பேரின் போராட்டங்களுக்குப் பிறகு   படம் திரைக்கு  டிசம்பர் 3ம் நாள் வந்தது. ஆனால் திரைப்படக் குப்பைகளை எல்லாம் விளம்பரத்தினால் வெற்றி பெறவைக்கின்றவர்கள் ஆகச்சிறப்பாக எடுக்கப்பட்ட படத்தை எந்த மக்கள் பார்க்கவேண்டுமோ அம்மக்களின் பார்க்க முடியாத  நேரங்களில்தான் திரையரங்குகளில் திரையிட்டனர்.  பெரும்பாலான திரையரங்குகளில் காலைக்காட்சியாகத்தான் படம் போடப்பட்டது. வேலைக்குச் செல்வோரால் படத்தைக் காண முடியவில்லை. எங்கள் ஊரிலும் (ஆம்பூர்) இதே  நிலைதான். படத்தை எடுத்துவிடுவதாக திரையரங்க உரிமையாளர் சொல்ல நாங்கள் டிக்கெட் விற்றுத்தருவதாகச் சொல்லி தோழர்கள் டிக்கெட்டுகளை வாங்கிவந்து வீடுவீடாக விற்று தியேட்டருக்கு  அனுப்பினார்கள். இரண்டு நாட்கள் அதிகமாக படம் ஓடியது.

அம்பேத்கர் படத்தின் தமிழ்பதிப்பு அருமையாக வந்திருந்தது. பத்து வருடத்திற்கு முன்பான படம் என்னும் எண்ணத்தைப் போக்கி படம் புதிதாக இருந்தது. பெரியார் படம் என்பது அவரின் அரசியல் போராட்டங்களை முன்வைக்காமல் அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. ஆனால் அம்பேத்கர் படம் அவரின் அரசியலை, போராட்டத்தினை முன் வைத்தது. காந்திக்கு எதிரான கருத்துக்களை மிகத்தைரியமாக அவர் வாந்த காலத்திலேயே பேசியவர் அம்பேத்கர். அதை அப்படியே படத்தில் வைத்தது ஜாபர் பட்டேலின்  மன உறுதி. எரவாட சிறை உண்ணாவிரதம் தலித்துகளின் வாழ்வுரிமையை அழிக்கக் கூடியது  ஆகையால் காந்தியில் உண்ணாவிரதம் தேவையற்றது என்னும் உணர்வினைப் பார்வையாளனுக்கு காட்சியின் மூலமாக கடத்தியிருக்கின்றது இப்படம். காந்திக்கு எதிரான வசனங்கள்  கூர்மையானவையாக இருந்தன.

காந்திஜி அடிக்கடி உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தைக் கையிலெடுக்காதீர்கள் , காந்தி எரிக்க வேண்டியது அவருக்குள் நிறைய இருக்கின்றது போன்ற வசனங்கள் இந்திய அரசியலின் இரண்டு துருவங்களாக அம்பேத்கரும் காந்தியும் இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

தங்கள் வாழ்வின் வெளிச்சத்திற்கு வேரானவர்கள் யார் என்பது தெரியாமலே  எந்தவிதமான  சமூக அக்கறையும் இல்லாமல் வளர்ந்துகொண்டிருக்கும் தலைமுறைக்கு அம்பேத்கர் திரைப்படம் ஒரு பாடமாக அமைந்திருக்கின்றது. ஆனால் அவர்களைப் போய் அப்படம் சரியாகச் சேரவில்லை என்பதுதான் உண்மை.

தமிழக அரசு  அம்பேத்கர் படத்திற்கு முழு வரி விலக்கு அளித்து அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் அப்படத்தினைப் பார்ப்பதற்கு வழிவகை செய்யவேண்டும்.இல்லை என்றால் லெனின் சொல்வதைப் போல சமூக ஆர்வலர்கள்  இப்படத்து ஊர் ஊராகச் சென்று  மக்களுக்குத் திரையிட்டுக் காட்டவேண்டும்.

-தீராநதி,  சனவரி  2011.

தொடர்புடையவை:

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி

டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

 

 

காதல் ஜாதியை ஒழிக்குமா?

-ஸ்டிபென், திண்டுக்கல்.

ஒழிக்காது.

ஆண் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்து பெண் ஆதிக்கஜாதியாக இருந்தால், மிகப் பெரும்பாலும் அந்தக் காதல் காதலர்களோடு மட்டும் முடிவதில்லை. நகர்புறகமாக இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் கடுமையான புறக்கணிப்பை, எதி்ர்ப்பை சந்திக்க வேண்டிவரும். கிராமப் புறமாக இருந்தால், அந்த ஆண் உயிரோடு கொளுத்தப்படுவான். அவன் குடியிருக்கும் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடுமையான வன்முறைகள் நிகழும்.

ஜாதிக்கு எதிரான, மதத்திற்கு எதிரான அரசியல் காரணங்கள் இல்லாமல், காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் மத வெறியர்களாக, ஜாதி வெறியார்களாக  இருக்கிறார்கள்.

கணவன் என்ன ஜாதியோ அல்லது என்ன மதமோ அவனது அடையாளமே மனைவி மற்றும் குழந்தைகள் மீது வன்முறையாக திணிக்கப்படுகிறது.

குழந்தைகளின் ஜாதி அடையாளமாக கணவனின் ஜாதி அடையாளமும் அவனது குடும்ப பழக்கமுமே கடைப்பிடிக்கப் படவேண்டும் என்று அடாவாடித்தனம் நிகழ்கிறது. இவைகளை ஒத்துக் கொள்ளாதபோது சண்டை, வன்முறை, விவாகரத்து போன்றவை ஏற்படுகிறது.  (கணவனைவிட வசதியான மனைவியாக இருந்தால் மட்டுமே, அவரின் குடும்ப பழக்கம் குழந்தைகளின் பழக்கமாக மாறுகிறது.)

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களின் மத, ஜாதி அடையாளங்களை ஒழித்து, பொது அடையாளத்திற்கு அதாவது ஜாதி, மத எதிர்ப்பாளராக – பகுத்தறிவாளராக இருந்தால்தான் குழந்தைகளையும் சிறப்பாக வளர்க்க முடியும். காதலையும் காப்பாற்ற முடியும்.  காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஜாதிக்கு, மதத்திற்கு எதிரான அரசியல் நிலைதான் காதலை வாழவைக்கும். ஜாதியை ஒழிக்கும்.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற ‘தங்கம்’ 2011ஜனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

***

தொடர்புடையவை:

 பலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

ராக்கி – ஜாதி, மதத்தை கட்டிக் காப்பாற்றும் கயிறு

…ஆனால், உங்க இதயத்தில் மட்டும் இடம் ஒதுக்கிடாதீங்க’

தேர்தல் நெருங்குகிறது, திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் எல்லாம் அப்படியே தொடருமா?

-குமார், சிவகாசி.

தெரியல. தேர்தலில் சீ்ட்டு ஒதுக்குறத பொறுத்து அது அமையும்.

ஆனால், கூட்டணிக்கட்சி தலைவர்கள் எல்லாம் பயந்துக்கிட்டு இருப்பாங்க.

‘தலைவர் கலைஞர் நமக்கு இதயத்தில் இடம் ஒதுக்கிடுவாரோ’ என்று.

அதனால் அவர்கள் கலைஞரிடம், ‘தலைவா, எங்களுக்கு சுடுகாட்டுலகூட இடம் ஒதுக்குங்க… ஆனால், உங்க இதயத்தில் மட்டும் இடம் ஒதுக்கிடாதீங்க’ என்று மன்றாடி கொண்டிருப்பார்கள்.

*

29-10-2010 அன்று எழுதியது.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஜனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

***

தொடர்புடையவை:

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

பெரியாரையும் சேர்த்து திராவிட இயக்கம் தமிழர்களுக்கு தூரோகம் செய்துவிட்டது என்று சொல்கிறார்களே உண்மையா?

-தமிழ்ப்பித்தன், திட்டக்குடி.

புதுசா இப்ப நிறையப் பேர் அப்படி கிளம்பி இருக்காங்க. தமிழகத்தில் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக புரட்சிகரமாக போராடிய திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’ என்று நாம் வாய பொளக்குறதுக்குள்ளேயே திராவிட இயக்கத்தின் கழிசைடையான ஜெயலலிதாவை ஆதரித்து தங்களை யார் என்று அடையாளம் காட்டுகிறார்கள்.

கலைஞரை கடுமையாக விமரிசிக்கிறார்கள்.

கருப்பையா மூப்பனாரை மாபெரும் தியாகி என்கிறார்கள்.

திமுகவை ‘ஜாதியை வளர்க்கும் கட்சி’ என்று சரியாக விமர்சிக்கிறவர்கள்; தமிழக்கதில் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்து ஜாதி ஆதிக்கத்தை நிலைநாட்டிய தீவிர ஜாதிவெறியர், ஊழல் மன்னன் ராஜாஜியின் ஆட்சியை நேர்மையான ஆட்சி என்று பாராட்டுகிறார்கள்.

பல கோல்மால் பேர்வழிகள் இப்படி பெரியார் இயக்கத்தை, திராவிட இயக்கத்தை கடுமையான விமசிக்கிறார்கள்.

உண்மையில் இவர்களுக்கு பெரியாரை அல்ல, விஜயகாந்தை விமர்சிப்பதற்குக்கூட யோக்கியதை இல்லை.

***

29-10-2010 அன்று எழுதியது.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஜனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

காமராஜரின் சிறப்பு எது? எளிமையா? பெரியாரா?

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்
*
பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்

தமிழ்த்தேசியம்:  ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம் =பெரியார் எதிர்ப்பு
*
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

புத்தகக் காட்சியில் எனது நூல்கள்

காதல் ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு முறைதானே வரும்?
எல்.நிவேதிதா, சென்னை.

சின்ன திருத்தம். ஒரு நபரின் மீது ஒரு முறை தான் வரும்.

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரில் உங்களை அதிகம் கவர்ந்தது யார்?
-எம்.டேவிட், திருச்சி.

யார் இவர்கள். இவுங்க எதுக்கு என்னைய கவர்ராங்க?

திருமணம் பெண்களுக்கு எதிரானது என்கிறார்கள். திருமணத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டால் குடும்பம் என்கிற அமைப்பே நிற்கதியாகிவிடாதா?
-காமட்சி சுந்தரம், சென்னை.

குடும்பம் என்ன கதியாகுமோ அது எனக்கு தெரியாது. எப்படி பார்த்தாலும் நிச்சயம் திருமணம் பெண்களுக்கு எதிரானதுதான். செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா அது கல்யாணமா?

வே. மதிமாறன் பதில்கள்

பக்கங்கள் 88. விலை ரூ. 35.

***

வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா உரைகள்

விலை: 35

தமிழேந்தி

விடுதலை ராசேந்திரன்

பெரியார்தாசன்

கௌத்தூர் மணி

மருதையன்

இவர்கள் பேசிய பேச்சுகள் அடங்கிய எம்.பி 3

***

நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாருமில்லை

-வே. மதிமாறன்

விலை ரூ. 60

டாக்டர் அம்பேத்கரின் இந்துமத, பார்ப்பனிய எதிர்ப்பு வீச்சின் விஸ்வரூபம்.

நூலிலிருந்து…..

ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் போராடிய போராளியைப் புரிந்துகொள்ளுங்கள் தலித் அல்லாதவர்களே.

***

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி

-வே.மதிமாறன்

https://i1.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2007/09/book2.jpg?resize=343%2C530

“பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக, ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.”

“காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்கிறார்.

இதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,

‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்

கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’

என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.

சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?

“வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் – ‘ஜகத்குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு’ சொன்னாலும் சொல்வார்கள்-மார்க்சிய பாரதியவாதிகள்.”

***

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி நூலுக்கு எதிராக வந்த நூல்கள்

பாரதி கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய ஒரு மதிப்பீடு

-கி.பார்த்திபராஜா

தம்பி நான் ஏது செய்வேணடா?

பாரதி பற்றி பேராசிரியர் பாரதிபுத்திரன்

இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்

-ந.இரவீந்திரன்

***

பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்

மருதையன் – வே.மதிமாறன்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றிய விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம். புதிய விவாதங்களுடன் மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது.

***

“பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை” என்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக,வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.

“வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்” என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்” என்று நிராகரிக்கவும் செய்தார்.

“பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லை” என்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.

-மருதையன்

மேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.

அப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.

நம் பேராசரியப் பெருமக்கள் ‘பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்’ என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்கள்.

-வே.மதிமாறன்

***

பெரியாரின் பூ மாலையும் போர்வாளும்

விலை ரூ. 15

பெரியார் கொள்கைகளில், எம்.ஆர். ராதா-என்.எஸ்.கே வின் பங்களிப்பு.

எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பாளையும் ஒன்றாக கருதுகிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு கண்டனம்

நூலிலிருந்து…..

பொதுவாக பார்ப்பன ஜாதிவெறி, தமிழர்களுக்கு தீமையையே செய்திருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பார்ப்பனியம் தமிழர்களுக்கு நன்மையை செய்தது.

ஆம். அது தந்தை பெரியார் என்கிற மகத்தான தலைவனை தமிழர்களுக்குத் தந்தது.

***

சென்னை புத்தகக் காட்சியில், கீழைக்காற்று, தாய்மண் வெளியீட்டகம்,  கருப்பு பிரதிகள், அலைகள், மக்கள் கண்காணிப்பகம், எழுத்து புத்தகக் கடைகளில் கிடைக்கும்

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்

எண்.15, எழுத்துக்காரன் தெரு

திருவொற்றியூர்

சென்னை-600 019.

பேச; 9444 337384

பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்

மருதையன் – வே.மதிமாறன்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றிய விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம். புதிய விவாதங்களுடன் மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது.

***

“பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை” என்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக,வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.

“வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்” என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்” என்று நிராகரிக்கவும் செய்தார்.

“பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லை” என்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.

-மருதையன்

மேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.

அப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.

நம் பேராசரியப் பெருமக்கள் ‘பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்’ என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்கள்.

-வே.மதிமாறன்

சென்னை புத்தக காட்சியில், கீழைக்காற்று, தாய்மண் வெளியீட்டகம்,  கருப்பு பிரதிகள், அலைகள், மக்கள் கண்காணிப்பகம், எழுத்து புத்தக கடைகளில் கிடைக்கும்

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையவை:

எனது புத்தகங்கள்

ஜாதி அதனினும் கொடிது

‘ஜாதிக்கு எதிராக பேசாதே, ஜாதிக் கொடுமைகளை கண்டு கொள்ளாதே, ஜாதிரீதியான வன்கொடுமைகளை காதால் கேட்காதே’ –  காந்தியின் ‘தத்து’வத்தின் மூலமாக காந்தியின் குரங்குகளை இப்படித்தான் புரிந்து கொள்ளமுடிகிறது.

காந்தியின் குரங்குகளைப் போல்தான் பல ‘முற்போக்காளர்களும்’ நடந்து கொள்கிறார்கள்.

‘ஜாதி அதனினும் கொடிது’ என்கிற இந்தக் கட்டுரையை தோழர் சாகுல் அமீதை ஆசிரியராக கொண்டு மாதமிருமுறை வெளிவருகிற ‘தமிழ் முழக்கம் வெல்லும்’ இதழுக்காக அதன் பொறுப்பாசிரியர் இனியத் தோழர் அன்புத்தென்னரசு கேட்டுக் கொண்டதற்காக எழுதியது.

***

தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பெயர்களில் இருந்து அவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைகள் வரை எந்த ஒரு மரியாதைக்குரிய அடையாளங்களையும் பயன்படுத்தக்கூடாது; எல்லாவகையிலும் தங்களை இழிவானவர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டும்; என்று இந்து மதமும் அதன் உடன்பிறப்பான ஜாதியும் அவர்களை இப்படி அடக்கி அவமானப்படுத்தி வைத்திருந்தது.

‘அமாவாசை, பாவாடை, மண்ணாங்கட்டி’ இப்படிப்பட்ட பெயர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பெயர்களாகவே பயன்படுத்தப்பட்டது.

பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்கள், ஒருவரை ஒருவர் சந்திந்துக்கொள்ளும்போதும் பரஸ்பரம் மரியாதை செய்து கொள்ளும் முகமாக, ‘நமஸ்காரம்’ என்று அழைத்துக்கொண்டதும்,

தாழ்த்தப்பட்ட மக்கள், ஆதிக்க ஜாதிக்காரர்களை பார்க்கும்போது துண்டை இடுப்பில் கட்டி அல்லது கக்கத்தில் வைத்து பணிந்து அடிமைத் தனத்தை வெளிபடுத்தும் வார்த்தையாக, ‘கும்புடுறேன் சாமி’ என்கிற வார்த்தை பணிவுக்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த மோசமான சூழலில், இடுப்பில் இருந்த துண்டை உதறி தோளில் போட்டு,  ‘கும்புடுறேன் சாமி‘ என்கிற அடிமைத் தமிழையும் ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன ஆதிக்க சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற கலகச் சொல்லை, சுயமரியாதை மிக்கச் சொல்லை அறிமுகப் படுத்தியது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்.

(தாழ்த்தப்பட்ட மக்கள், நாடார்கள், இசைவேளாளர்கள், நாவிதர்கள் தோளில் துண்டுபோட்டு ஆதிக்கஜாதிக்காரர்களுக்கு முன் கம்பீரமாக நிற்கும் போராட்டத்தை பெரியார் இயக்கம்தான் நடத்தியது. தோளில் துண்டுபோடுவதை சுயமரியாதையின் அடையாளமாக, ஆதிக்க ஜாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குறியீடாக பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் அதுவே திராவிட இயக்க அரசியல் தலைவர்களின் பழக்கமாகவும் மாறியது. அதனால்தான் பார்ப்பன பத்திரிகைகளும், பெரியார் இயக்க எதிர்ப்பாளர்களும் ‘தோளில் துண்டுபோடுகிற கலாச்சாரம்’ என்று அதை கேலி செய்கிறார்கள்.)

பெரியாரைவிட மிக சிறந்த மொழி அறிஞர்கள் எல்லாம் தனித்தமிழ் இயக்கம் நடத்தி, சமஸ்கிருத்திற்கு மாற்றாக பொதுப்புழக்கத்திற்கு தனித்தமிழ் சொற்களை கொண்டுவர முயற்சித்தார்கள்; ஆனாலும் அவர்கள் தோல்வியடைந்தார்கள். பெரியார்தான் வெற்றி பெற்றார்.

காரணம், தமிழ் அறிஞர்களின் நோக்கம் தமிழ் வளர்ச்சி. பெரியாரின் நோக்கம் தமிழனி்ன் வளர்ச்சி.

‘ஜாதிகள் ஒழியாத வரை அல்லது ஜாதி இழிவுகளிலிருந்து தமிழன் வெளிவராத வரை அவனுக்கு விடிவில்லை.’ என்ற உண்மையை பெரியார் தெளிவாக உணர்ந்திருந்தார். அதன் காரணத்தால்தான் காங்கிரசில் இருந்து வெளிவந்து தனி இயக்கம் கண்டார். நாட்டு விடுதலைக்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து தீவிரமாக போராடிய பெரியார்; அதைவிட முக்கியம் ஜாதி ஆதி்க்கத்தை, ஜாதியை, அதை பாதுகாக்கும் இந்து மதத்தையும் காங்கிரசையும் எதிர்ப்பது என முடிவு செய்து தன் இறுதி மூச்சுவரை அதற்காகவே உழைத்தார். அதன் பயனை சமூகம் அனுபவிக்கிறது.

***

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதைவிட, இந்திய பெருமுதலாளிகளை எதிர்த்துபோராடுவதைவிட இன்னும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும் ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதைவிட ஜாதியை, தீண்டாமையை எதிர்த்துபோராடுவது முக்கியமானது, தீவிரமானது என்று டாக்டர் அம்பேத்கர் ஏன் முடிவு செய்தார்?

‘அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்; அதனால்தான் அவர் அதை தீவிரமாக செய்தார்’ என்று, மிக மேம்போக்காக, சாதாரணமாக கருத்து சொல்பவர்கள்தான் அதிகம்.

இப்படி சொல்வது இரண்டுவகையில் மிகத் தவறானது. ஆபத்தானது.

1. அம்பேத்கர் வருவதற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்த பிரச்சினை இல்லை. அம்பேத்கர் தான் அதை பெரிதுபடுத்தினார் என்கிற வரலாற்று மோசடியாக அது பதிவாகும்.

2. அம்பேத்கரின் ஆய்வை, நேர்மையை, உலகம் வியக்கும் அவரின் அறிவை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஆகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்து சமூக அமைப்பில் தங்களுக்குள் எந்த ‘கொடுக்கல், வாங்கல்’ என்கிற உறவுகளை செய்து கொள்ளாத தங்களுக்குள் எந்தவகையிலும் ஒற்றுமையாக இல்லாத, தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத எல்லா ஜாதிக்காரர்களிடமும் இருக்கிற ஓரே ஒற்றுமை தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வன்முறையை செலுத்துவதிலும், தீண்டாமையை கடைப்பிடிப்பதிலும்தான்.

மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து, இன்றைய ‘ஜனநாயக’ காலம் வரை ‘மாற்றங்களை’ எல்லாம் ஏமாற்றி ‘கம்பீரமாக’ நடைபோடும் ஒரே மோசடி ஜாதியும் தீண்டாமையும்தான். இந்த விவகாரத்தில் இந்து சமூகம் தனக்குள் செய்து கொண்ட ஒரே மாற்றம், ஜாதி என்னும் சதிக்காக கிறிஸ்த்துவத்தோடு கைகோர்த்துக்கொண்டது அல்லது கிறிஸ்துவம் ஜாதியோடு கைகோர்த்துக் கொண்டது மட்டும்தான்.

ஆக, டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததினால் தீண்டாமையின் கொடுமையை தன் அனுபவத்தில் உணர்ந்திருந்தார் என்பது உண்மைதான். அதனால் மட்டுமே அந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் தந்தார் என்பது உண்மையில்லை. ‘தீண்டமை’ அப்படி ஒரு தீவிர பிரச்சினையாக இருந்தது என்பதினால்தான் அதற்கு எதிராக தீவிரமாக இயங்கினார்.

அவர் தாழ்த்தப்பட்டவராக இல்லாமல் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார். பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்காக  தன் அமைச்சர் பதவியை உதறி தள்ளியவர்தான் அண்ணல் அம்பேத்கர். அதன் அடிப்படையில்தான் தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக இயங்கினார்.

அண்ணல் அம்பேத்கரிடம் இருந்த இந்த நேர்மை, வேறு எந்த ஆய்வார்களிடமும் இல்லை. இந்தியாவில் இருந்த ஆய்வாளர்கள் மற்றும் இந்தியாவை பற்றி ஆராய்ந்த ஆய்வாளர்கள் யாரும் இந்தியாவின் மிகப் பெரிய மோசடியான ‘தீண்டாமையை’ குறித்து ஆய்வே செய்யவில்லை. அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர்:

“தீண்டாமையின் அடிமூலம் என்ன? இத்துறை முற்றிலும் ஆராயப்படவில்லை. சமூகவியல் ஆராய்ச்சியாளர் எவரும் இதில் எத்தகைய கவனம் செலுத்தவில்லை. சமூகவியலாளர்கள் இவ்வாறு என்றால், இந்தியாவையும் அதன மக்களையும் பற்றி எழுதியுள்ள எழுத்தளார்களும் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறித்து அவர்களது கண்ணோட்டத்தின்படி கண்டித்துவிட்டு அத்துடன் நிறுத்திக் கொண்டனர்” என்று அறிவுத்துறையினரின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்.

ஜாதிய கொடுமைகளில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை விடுவிக்க, தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத முற்போக்காளர்கள்தான் தீவிரமாக போராடவேண்டும். அதுபோலவே, தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத ஜாதிகளிடம்தான் தீவிரப்படுத்தவேண்டும்.

ஏனென்றால், தீண்டாமைக் குறித்து தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசுவது மோசடியானது.  தீண்டாமையை பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களிடம் எந்த குற்றமும் இல்லை. அவர்கள் ‘யாரும் எங்களைத் தொடவேண்டாம். எங்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வையுங்கள்’ என்று சொல்லவில்லை. ஆக, எவன் தீண்டாமையை கடைப்பிடிக்கிறானோ அவனிடத்தில்தானே அதற்கு எதிராக பேசமுடியும். ஜாதிக்கு எதிராக இப்படி இயங்கினால்தான் ஜாதியை ஒழிக்க முடியும்.

மாறாக, ‘தாழ்த்தப்பட்டவர் பிரச்சினையை தாழ்த்தப்பட்டவர்தான் பேசவேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் பிரச்சினையை பிற்படுத்தப்பட்டவர்கள்தான் பேசவேண்டும்’ என்றால் தனித்தனி ஜாதி கட்சிகளும், ஜாதி சங்கங்களும், தீவிர ஜாதிய உணர்வும்தான் வளருமே தவிர, இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஜாதியையும், தீண்டாமையையும் ஒழிக்கவே முடியாது.

இப்படி ஜாதிக்கு எதிராக இயங்குவது தனக்கும், தான் சார்ந்த இயக்கத்திற்கும் எதிரானதாக, ஜாதி இந்துக்களின் விரோதத்தை சம்பாதிப்பதாக அமையும். ஆனால், அதுதான் சமூகத்திற்கு நன்மையாக அமையும். அப்படித்தான் தந்தை பெரியார் தனக்கும் தன் இயக்கத்திற்கும் பெருவாரியன மக்களிடம் விரோதம் செய்துகொண்டு, சமூகத்திற்கு நன்மை செய்தார். இதுபோன்ற நெருக்கடியான அரசியல் காலங்களில் அவரை விட்டு விலகிச் சென்றவர்கள் தனக்கு நன்மை செய்து கொண்டு, சமூகத்திற்கு தீமை செய்தார்கள். செய்கிறார்கள்.

***

‘இந்த விவரம் எல்லாம் சரிதான். ஜாதியும் , தீண்டமையும் எப்படி மற்ற ஒடுக்குமுறைகளைவிட மோசமானது?’ என்கிற கேள்வி வரலாம். ‘அது எப்படி?’ என்று அம்பேத்கரிய பார்வையில் புரிந்து கொள்வோம்.

உலகெங்கிலும் கருப்பர்கள் மீது வெள்ளையர்கள் ஆதிக்க செலுத்துவதற்கும் அடிமைகளாக நடத்துவதற்கும் காரணம் நிற வேறுபாடு. அதை கண்களால் உணரமுடிகிறது.

பெண்கள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கும் அடிமைகளாக நடத்துவதற்கும் ஆண்-பெண் என்கிற பாலின வேறுபாட்டையும் உணர முடிகிறது.

அதுபோலவே மொழி அல்லது இனரீதியான அடிமைத்தனங்களையும் ஆதிக்கத்தையும் புரிந்துகொள்வதற்கு புறக்காரணங்கள் உணர்த்துகின்றன.

ஏழைகளுக்கு அல்லது தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கிற முதலாளித்துவத்தையும், வர்க்க வேறுபாட்டையும், பொருளாதார வேறுபாடுகளையும் புறக்காரணங்களால் உணர முடிகிறது.

இந்த ஆதிக்கங்களுக்கான அடிப்படை காரணங்கள் அனைத்தையும் நமது ஐம்புலன்களால் உணர முடிகிறது. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடைப்பிடிக்கிற தீண்டாமைக்கான காரணங்களை கண்களாலோ, காதுகளாலோ நமது ஐம்புலன்களில் ஏதோஒரு உணர்வால்கூட உணர முடியாது. காரணம் அப்படி எதுவும் இல்லை.

ஆனால், இல்லாத ஒன்றுதான் இரண்டாயிரம் ஆண்டுகளாக கோடிக்கணக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தி அடிமையாய் வைத்திருக்கிறது.

1935- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி  இந்தியா முழுக்க 425 தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் உள்ள 6 கோடி மக்கள் இது போன்ற மோசடிகளால் அவமானப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஜாதி இந்துவும் அல்லது தலித் அல்லாதவனும் கோடிக்ககணக்கான தாழ்த்தப்பட்ட மக்களைவிட தன்னை உயர்வானவனாக நினைக்கிறான். நடந்துகொள்கிறான். இப்படி நினைப்பதற்கும் அதன்படி நடந்துகொள்வதற்கும் நீதியாக அல்ல அநீதியாககூட ஒரே ஒரு புறக்காரணத்தை அவனால் சொல்லமுடியாது.

அதனால்தான் ‘ஜாதி பிறக்கும்போதே தீர்மானிக்கப்படுகிறது’ என்கிறது இந்து மதமும் பார்ப்பனியமும். ‘தமிழர் பண்பாடு’ என்று ஒன்றில்லாமல் அவர்அவர் ஜாதிய வழக்கமே தனித்தனி ‘பண்பாடாக’ மாறியிருக்கிறது. ‘தமிழர்’ என்று அணிதிரள்வதற்கும் தடையாக அதுவே முதன்மையான, முழுமையான காரணமாக இருக்கிறது.

புறக்காரணங்களால் உணர முடிகிற வேறுபாட்டின் மூலம் அநீதியாக கடைப்பிடிக்கிற ஆதிக்கமே மோசடியானது. எந்த வகையிலும் நிரூபிக்க முடியாத, ஒப்புக்கு அநீதியான காரணங்கள் கூட சொல்லமுடியாத தீண்டாமையை கடைப்பிடிப்பது மிக மோசடியானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோடிக்கணக்கான மக்களை இன்றைய ‘நவீன’ உலகிலும் அவமானப்படுத்துகிற, துன்புறுத்துகிற தன்மை ‘மிகுந்த மோசடியானது’, என்கிற வழக்கமான சொற்களை சொல்வதுகூட அதன் தீவீரத்தை உணராத தன்மைதான். இதனால்தான் அண்ணல் அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராக தீவரமாக போராடினார்.

‘ஜாதி’ என்கிற தீமை, உடன்பிறந்த வியாதியைப்போல், எல்லோருக்கும் பழகிவிட்ட ஒன்றாகவே இருக்கிறது. ‘அது அப்படித்தான் இருக்கும். அது ஒன்னும் புதுசு இல்லியே’ என்கிற பாணியில் அதுசாதாரணமாக பார்க்கப்படுகிறது.

ஜாதிய சமூக அமைப்பில், தீண்டாமைக்கு எதிராக, ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடாத எந்த அமைப்பும் ‘நம்பிக்கைக்குரிய’ அமைப்பாக இருக்க முடியாது. இந்திய அரசியலில் அண்ணல் அம்பேத்கர்-தந்தை பெரியார் இவர்களின் அரசியல் எழுச்சிக்கு பிறகு இவர்களை புறக்கணித்துவிட்டு எழுந்த எந்த இயக்கமும் வெற்றிபெற்றதில்லை. வெற்றி என்பதை மக்களுக்கான நன்மை என்ற பொருளில் சொல்கிறேன்.

தொடர்புடையவை:

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
*
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
இன்றுமுதல்….
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
‘அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?’
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்

தமிழ் தேசியம்:  ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம் =பெரியார் எதிர்ப்பு
*
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

தங்கம் இதழில் வாசகர்கள் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில்களின் முழு தொகுப்பு

நடிகர் கமலஹாசன் உண்மையில் நாத்திகரா? இல்லை நாத்திகர் போல் நடிக்கீறாரா?

-மதன், சென்னை

ஒரு கம்யூனிஸ்ட் அல்லது ஒரு முற்போக்காளன் நாத்திகனாக இருக்க வேண்டியது கட்டாயம்; ஆனால் நாத்திகனாக இருப்பவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்டாகவோ, முற்போக்காளராகவோதான் இருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது தவறு.

தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கிற பெரிய நிறுவனத்தின் முதலாளி, நாத்திகனாக இருக்கலாம். ஆனால், அவர் முற்போக்காளன் கிடையாது. ‘கடவுள் இல்லை’ என்பது ஒரு அறிவியல். அந்த அறிவியலை புரிந்தவர்கள். புரியாதவர்கள். அவ்வளவுதான்.

‘கமலஹாசன் நாத்திகரா?’ என்று கேட்டு இருக்கிறீர்கள்.

‘கமஹாசன்’ அல்ல; ‘கமல்ஹாசன்’ என்பதுதான் சரியானது. 90களுக்கு முன்புவரைதான் அவர் கமஹாசன் (KAMLAHASAN). அதன் பிறகு அவர் கமல்ஹாசன் (KAMALHASAN). எந்த எண் ஜோதிடனை கேட்டு இந்த ‘நாத்திகர்’ தன் பெயரில் இருந்த A வை நீக்கினாரோ தெரியாது.

‘கமலஹாசன் உண்மையில் நாத்திகரா?’இந்தக் கேள்வியை நீங்கள் கமலிடமே கேட்டிருந்தால், அவர் நாயகன் திரைப்படத்தில்,“தாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா?” என்று கேட்ட பேரனை பார்த்து, “தெரியலையேப்பா…” என்று ‘தெளிவாக’ பதில் சொன்னாரே…அதுபோன்ற வசனத்தைதான் பதிலாக அளிப்பார்.

அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; கண்டிப்பாக இந்து மதத்தின் ஒரு பிரிவான அய்யங்கார்கள் கடைப்பிடிக்கும் வைணவத்தின் மீதும் அதன் சடங்குகள், வழக்கங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது. அதை அவருடைய படங்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார். அவர் விஸ்பரூபமாக எடுத்து நின்ற ‘தசவதாரம்’ அதைத்தான் ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறது.

சரி, இப்ப நீங்களே சொல்லுங்கள், கமல்ஹாசன் நாத்திகரா? ஆத்திகரா?

சினிமாவில் தீவிரவாதிகள் என்றாலே இசுலாமிய இன மக்களையே காட்டுகிறார்களே?

– அப்துல் காதர், பாளையங்கோட்டை

இஸ்லாமிய காதபாத்திரங்களே இல்லாத புராண கதைகள் திரைப்படங்களான அந்தக் காலத்திலேயே, அந்த நிலையை தலைகீழாக மாற்றி ஒரு இந்து கதாபாத்திரம்கூட இல்லாமல் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் திரைப்படங்கள் வந்தது, திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்ற பிறகே.

‘அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி, பாக்தாத் திருடன்’ போன்ற படங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழ்நிலையிலேயே வந்த திரைப்படங்கள். ‘ராஜாதேசிங்கு’ திரைப்படம் இந்து மன்னனுக்கும், இஸ்லாமிய தளபதிக்கும் இடையில் இருந்த நட்பை சொல்லியது.

அதற்குப் பின்னர் வந்த பீம்சிங்கின் ‘பாவமன்னிப்பு’ படம் ஒரு படி மேலே போய் நேரடியாக திராவிட இயக்க கருத்தை மையமாக வைத்தே கதாபாத்திரங்கள் அமைந்தன. அந்தப் படத்தில் இஸ்லாமியராக வரும் நாகைய்யா மிகவும் நல்லவர். ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பார். இந்துக் குழந்தையை (சிவாஜி) தன் குழந்தையாக எடுத்து வளர்ப்பார். கிறிஸ்தவராக வரும் சுப்பையா அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவராக இருப்பார். இந்துவாக வரும் எம்.ஆர்.ராதாதான் அந்தப் படத்தின் வில்லன். படம் முழுக்க அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து கொண்டே இருப்பார்.

80களில் வந்த இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் அடுக்குமல்லி (தேங்காய் சீனிவாசன்), இயக்குநர் ராஜசேகரின் படிக்காதவன் (நாகேஷ்) வாழ்க்கை (வி.கே. ராமசாமி) போன்ற திரைப்படங்களில் கூட நல்ல குணம் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரங்கள் இஸ்லாமிய பாத்திரங்களாகவே வந்திருக்கின்றன. அப்படி படம் எடுக்க வேண்டிய  கட்டயாத்தை திராவிட இயக்க அரசியல் சூழல் அல்லது சினிமாவில் இருந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள்.

மணிரத்தினத்தின் ‘ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது. அதுவரை தமிழ் சினிமாவில் அரைகுறை ஆடை அணியும் பெண்களும் பல ஆண்களோடு சகஜமாக பழகும் பெண்களும்,  காபரே நடனம் ஆடும் பெண்களும், (கே. பாலசந்தரின் நூற்றுக்கு நூறு திரைப்படம்) கிறிஸ்தவர்களாகவே காட்டி கொண்டிருந்தார்கள். அதில் பெரிய வேடிக்கை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பெண்கள் யாரும் கிறிஸ்தவர்கள் இல்லை. பெரும்பாலும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.

“பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டுவதற்கு, இஸ்லாமிய குறியீடு பயன்படுத்தப்படுகிறது” என்று காரணம் இப்போது சொல்லப்படுகிறது. ஆனால், அதுவல்ல உண்மை. இஸ்லாமியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சிதான் இதுபோன்ற படங்கள் வருவதற்கு காரணம். இப்போதாவது பாகிஸ்தானோடு எல்லைப் பிரச்சினைதான். ஆனால் பாகிஸ்தானோடு போர் நடந்தபோதேகூட, தமிழில் இஸ்லாமிய எதிர்ப்பு படங்கள் வந்தது கிடையாது; அதற்கு மாறாக இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரின் ‘பாரதவிலாஸ்’ திரைப்படத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் தன் உயிரையே தியாகம் செய்கிற ராணுவ வீரனை ஒரு இஸ்லாமியராகத்தான் காட்டியிருந்தார்.

அழகி போட்டி நடைபெறுவது ஆரோக்கியமானதா?

-விஜயராகவன், திருச்சி

அழகிபோட்டி நடைபெறுவது ஆரோக்கியமானதுதான்; நமக்கல்ல. வர்த்தக நிறுவனங்களுக்கு.

ஒரு காலத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கொக்கோ கோலா, மீண்டும் இந்தியாவில் வர்த்தகம் நடத்த அனுமதிக்கப்பட்டபோது, இந்தியாவின் முதல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷ்மிதா சென்னின் கையில் கொக்கோ கோலா பாட்டிலை கொடுத்து அனுப்பியது அந்த நிறுவனம். அவர்தான் அதற்கான மாடல்.

கோக்கின் போட்டி நிறுவனமான ‘பெப்சி’ பார்த்தது, ‘ இந்தியாவில உனக்குதான் அழகி கிடைப்பாளா? எனக்கு கிடைக்க மாட்டாளா?’ என்று அது ஒரு அழகி போட்டிய நடத்தி, ஐஸ்வரியாராயை உலக அழகியாக தேர்ந்தேடுத்து, அவர் கையில பெப்சி பாட்டில கொடுத்து அனுப்பியது. அவர்தான் அதற்கான மாடல்.

அதுல இருந்து புடுச்சுது இந்தியாவ ‘அழகிகள் பிசாசு’.

நம் மக்கள் மீது பன்னாட்டு நிறுவனங்கள் என்கிற மந்திரவாதிகள் ஏவி விட்டு இருக்கிற இந்த பிசாசுகளை அடித்து ஓட்டுவதற்கும், மந்திரவாதிகளை ஓட ஓட விரட்டுவதற்கும் தலைவர் லெனினை போல் ஒரு பூசாரி வேண்டும். ஆனால், நமக்கு கிடைச்ச தலைவர்களோ மந்திரவாதிகளுக்கு கூட்டாளிகளான ஜார் மன்னர்கள்தான்.

உங்கள் புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். உங்களுக்கு குறிப்பிட்ட சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி அதிகம். ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறார்களே அது உங்களைப் பொறுத்தவரை சரிதான்.

-பெயர் குறிப்பிடவில்லை.

ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் மட்டும்தான் நக்கி குடிக்கும்; சிங்கம் என்ன ‘சொம்புல‘ மொண்டா குடிக்கும்? அதுவும் நக்கித்தான் குடிக்கும்.

இதுபோன்ற பழமொழிகள் – தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கவே பயன்படுகிறது. ஆதிகாரத்திற்கு வந்த யாரோ ஒரு சிலர் செய்கிற தவறுகளை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தின் மீதே சுமத்தி, அவர்களை இழிவாக சுட்டிக் காட்ட ஆதிக்க ஜாதிக்காரர்களால் காழ்ப்புணர்ச்சியோடு பயன்படுத்தப்படுகிறது. அதே தவறை ஆதிக்க ஜாதிக்காரர்கள் செய்யும்போது, அதை அவர்கள் சார்ந்த ஜாதியோடு தொடர்பு படுத்தி பார்ப்பதில்லை. இது தான்ஆதிக்க ஜாதி மனோபாவம்.

அதுமட்டுமல்லாமல், தனக்கு பயப்படுகிற விலங்குகளை மட்டமாகவும், தான் பயப்படுக்கிற விலங்குகளை வீரமாகவும் மதிப்பிடுகிற மனோபாவமும் இத்துடன் சேர்ந்து கொள்கிறது.

சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றை வீரத்திற்கு அடையாளமாக காட்டுகிறார்கள். ஆனால், அவைகள் வீரமான மிருகங்கள் அல்ல. சிங்கம், புலி, சிறுத்தை தன்னைவிட பலவீனமான ஆடு, மாடு, மான் போன்றவற்றை வேட்டையாடி தின்கிறது. இது எப்படி வீரமாகும்?

அவைகளை ஆதிக்கத்திற்கான குறியீடாக வேண்டுமானால் பயன்படுத்தலாம். எளிய ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள ராணுவத்தையும், அப்பாவி ஈராக் மக்கள் மீது படையெடுத்து அவர்களை கொன்ற அமெரிக்க ராணுவத்தையும் குறிப்பிடுவதற்கு சிங்கம், புலி, சிறுத்தை குறியீட்டை  பயன்படுத்தலாம்.

தன்னைவிட பலமான கழுகோடு சண்டையிட்டு அதை விரட்டியடித்து, தன் குஞ்சுகளை காக்கிறதே கோழி, அதுதான் வீரம். அமெரிக்கா என்கிற ஆதிக்க் கழுகை விரட்டியடித்து,  வெற்றிக் கண்டு தன் நாட்டை பாதுகாத்த எளிய வியட்நாம் மக்களைப் போல்.

‘என்னங்க இது..? நம்ம கொழம்புல கொதிக்குது கோழி.. அதபோய் வீரம்னு சொல்றீங்க..!’ -என்று அலுத்துக்காதீங்க. நீங்க அலுத்துக்க மாட்டிங்க… நீங்கதான் சைவமாச்சே.

கட்சி அரசியல் சார்பற்றவர்களில் தமிழ் திரைப்பட உலகில் செறிவான ஆற்றல் உள்ளவர் என்றால் யாரை குறிப்பிடுவீர்கள்?

-என். சுகுமார், மதுரை.

ஏ.பி. நாகராஜனை. இன்றைய சமூக படங்கள் தீவிரமான இந்து பிரச்சார படமாகவும், இஸ்லாமிய எதிர்ப்பு படமாகவும் இருக்கிறது. ஆனால், ஏ.பி. நாகராஜன் எடுத்த இந்து புராண பக்தி படங்கள் சிறந்த சமூக படங்களாக, பொழுதுபோக்கு படங்களாக இருந்திருக்கிறது. புராணக் கதை அடிப்படையில் அவர் எடுத்த ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் இருந்த சுவாரஸ்யமான திரைக்கதையால், இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் கூட விரும்பி பார்த்தார்கள். அந்தப் படத்தின் வசனங்கள் எல்லா மதக்காரர்களுக்கும் மனப்பாடம்.

கொத்தமங்கலம் சுப்புவின் கதையை சிறந்த திரைக்கதையாக்கி ‘தில்லான மோகனாம்பாள்’ என்று அவர் எடுத்த திரைப்படத்திற்கு இணையாக இதுவரை தமிழில் பொழுது போக்கு படம் வந்ததில்லை.

தில்லான மோகனாம்பாளை தழுவி எடுத்த கரகாட்டக்காரனும் பெரிய வெற்றி பெற்றது. தில்லான மோகனாம்பாளையும்-கரகாட்டக்காரனையும் கலந்து அடித்த, சங்கமமும் பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி எல்லாம் ஏ.பி. நாகராஜனைத்தான் சாரும்.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தங்கம் இதழில் படிக்க கீழ் உள்ள சுட்டியை சொடுக்கவும்

http://ebook.thangamonline.com/dec10/index.php?page=50

***

///மத நல்லிணக்கம் குறித்து தங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.அதில் வெளியாகியுள்ள செய்தியில் ஒரு திருத்தம்
கர்ணன் திரைப்படத்தை இயக்கியவர் B R பந்துலு .ஏ பி நாகராஜன் அல்ல///

என்று திரு. ராமகிருஷ்ணன் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

அர்த்தமற்று ஊதாரித்தனத்துடன் பிரம்மாண்டமாக படம் எடுதக்கும் இயக்குநர்கள் மத்தியில் கதைக்கு தேவையான முறையில் மிக பிரம்மாண்டமான கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை எடுத்த B R பந்துலுதான் கர்ணன் படத்தின் இயக்குநர். தயாரிப்பாளர். அவருக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு.

கர்ணன் படத்தின் வசனத்தை எழுதியவரும் ஏ பி நாகராஜன் அல்ல. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மிக சிறப்பாக வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி தான் கர்ணன் படத்திற்கும் வசனம்.

தவறுககு வருத்தம் தெரிவித்து ஏ.பி. நாகராஜன் பற்றிய பதிலில் உள்ள கர்ணன் படம் பற்றிய தகவலை நீக்கிவிடுகிறேன்.
திரு. ராமகிருஷ்ணனுக்கு நன்றி.

-வே.மதிமாறன்

தொடர்புடையவை:

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்

ஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

ஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது