ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

rajini-kamal1-500x3882

ராகவேந்திரா கல்யாணமண்டபத்தில் தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, கர்நாடகாவை கடுமையாக விமர்சித்து பேசியது பாராட்டுக்குரியதுதானே?
-விமல்.

தற்கு முன்பு தமிழர்களுக்கு எதிராக வன்முறை செய்த கன்னடர்களை விமர்சிக்காமல் இருந்ததற்குக் காரணம், கர்நாடகாவில் இவர் படம் ஓட வேண்டும் என்பதுதற்காகத்தான். ஒக்கேனக்கல் பிரச்சினையின் போது, நிர்பந்தத்தின் காரணமாக, மேடையில் சத்யராஜ் போன்றவர்களின் மிக நேரடியான குற்றச்சாட்டின் நெருக்கடியின் காரணமாக கன்னடர்களை ரஜினி திட்டிப் பேசினார்.

அதன் விளைவாக ‘குசேலன்’ பட வெளியிட்டின் போது கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கன்னடர்களை திருப்தி படுத்துவதற்காக மன்னிப்பும் கேட்டார். அந்த மன்னிப்பின் மறுபக்கம், தமிழகத்தில் ரஜினி ரசிகர்கள் கணிசமான பிரிவினர் ‘அவனா நீ?’ என்று குசேலன் படத்தை புறக்கணித்தனர். (பி. வாசுவும் படத்தில் தன் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தார்.)

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக போய்விடுமோ என்ற பயத்தில்தான் ரஜினியின் இந்த கன்னட எதிர்ப்பு வீர வசனமும். ஈழத் தமிழர்கள் மீதான சென்டிமென்ட்டும்.

இதே காரணங்களுக்காகத்தான் நமது ‘உலக நாயகன்’ (என்ன கொடுமை சார் இது?) கமல்ஹாசன், தமிழர் பிரச்சினைகளுக்காக எந்த மேடையில் ஏறி பேசினாலும், பட்டும் படாமலும் ரொம்ப உஷாராக, ஒரு அத்துவைதியை போல் பேசுகிறார். (அய்யங்கார இருந்துக் கிட்டு அத்துவைதைத்தை ஆதரிக்கிறாரு, என்ன பெருதன்மை!)

‘தமிழன் என்கிற குறுகிய எண்ணத்தோடு….’ என்று கமல் பேசியதற்கு அர்த்தம், உண்மையிலேயே அவர் தன்னை உலக நாயகன் என்று நினைத்துக் கொண்டு பேசினார் என்று அர்த்தமாகாது.‘அது சும்மா தமாசு’ என்பது அவருக்கே தெரியும். வேறு மொழிகளிலும், பிற மாநிலங்களிலும் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்படுகிறது, நேரடியாக வெளியாகிறது என்பதுதான் அதற்கு அர்த்தம்.

கமலின் முந்தைய சாமார்த்தியமான அந்தப் பேச்சினால்தான் கர்நாடகத்தில், ‘குசேலனுக்கு’ வந்த எதிர்ப்பு ‘தசாவதாரம்’ என்கிற அய்யங்கார் அரசியல் படத்துக்கு வரவில்லை. (அய்யங்கார் மேன்மையை வலியுறுத்தியதால்தான் அந்தப் படத்தின் மீது அய்யர்களுக்குக்கூட கோபம். சில அய்யர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் போன்ற போர்வையில் அந்தப் படத்தை கடுமையாக எதிர்த்தார்கள்.)

ஆக, ரஜினி – கமல் இருவருக்கும் கன்னடர், தமிழர் என்கிற இன உணர்வெல்லாம் கிடையாது. அவர்களிடம் பண உணர்வு’ மட்டும்தான் இருக்கிறது.

rajini_kamal_05

குறிப்பு
கதாபாத்திரத்திற்கு எந்தவகையிலும் பொறுத்தம் இல்லாமல், தேவர் மகன் படத்தில், வாலி என்கிற அய்யங்கார், ‘கமல்ஹாசன்’ என்கிற அய்யங்காரை ‘தமிழச்சி பால் குடிச்சவன்டா’ ‘சங்கத் தமிழன், சிங்கத் தமிழன்’ என்று சொறிந்து விட்டதையும், அந்த சொறியை எடுத்து, இது ‘நியாயமான அரிப்புதான்’ என்கிற பாணியில் சுஜாதா என்கிற அய்யங்கார், ‘குமுதம்’ என்கிற அயங்கார் பார்ட்டனர் பத்திரிகையில் பக்குவமாக ‘தேய்த்து’ விட்டதையும், ‘தமிழன் என்கிற குறுகிற எண்ணத்தோடு…’ என்று கமல் இப்போது பேசியதையும் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ள வேண்டாம். அப்படி புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று அவர்களின் ‘கொள்கைகளை’ வைத்துதான் தலைப்பிட்டேன். மற்றப்படி கே. பாலசந்தரை நான் ‘குட்டை’ என்று சொல்லிவிட்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டால், அதற்கும் நான் பொறுப்பல்ல.

அதேபோல், ‘தமிழன் என்பது குறுகிய எண்ணம், அய்யங்கார் என்பது பரந்த எண்ணமா?’ என்று கேள்வி கேட்காதீர்கள்.

-வே. மதிமாறன்

30 thoughts on “ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

  1. சீமான் போன்றவர்களை கூட கடுமையாக விமர்சிக்கிற ஞாநி போன்றவர்கள் கமலகாசனின் இந்த சந்தர்ப்பவாதத்தை ஏன் கண்டிப்பதில்லை. எனக்கு தெரிந்து கமலகாசனை ஞாநி கண்டித்ததாக நினைவே இல்லை. இது தான் பார்ப்பன பாசமா?

    இது போன்று இருக்கிற ஞாநிக்கு உலகின் மிக மோசமான நபரை விவர்சிக்க கூட யோக்கியதை இல்லை.

    ஞாநி எங்கேனும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டால் இது குறித்து அவரை சமூக அக்கறையுள்ளவர்கள் கேள்வி கேட்டு அம்பலப்படுத்த வேண்டும்.

  2. Our Super Star Rajini will tell always truth.

    DOn;t blame our Rajini.

    He is a real Hero in Tamil Cinema.

    Long Line RAJINI

  3. why you often mention the parpaneesam………….?

    i dont understand the people likes you…………….

    i m clarifing ur important doubt, im not a parpaner……………

    thanks

    subash

  4. சரியான சாட்டையடி! பண உணர்வின் அச்சு அசலான மன உணர்வை உள்ளது உள்ளபடி எடுத்து வைத்திருக்கிறீர்கள்… குமாரிலபட்டரும், தங்களிடம் பாரதி பட்ட பாடும் நினைவுக்கு வருகிறது. 🙂 மிக்க நன்று தோழர்.

  5. Well said !!!

    Their only thinking is Money and thers nothing called humanity and people orientation in their personal dictionary !!!!

  6. No need see all the issues on the basis of “caste”, “creed”, “color”. Whatever they did on fasting day, the did for Tamils at the same time they have taken care of their own self interest and their future. that is it.

    They are not politicians or social workers. they are just actors and that is all we can expect from them.

    No need to expect more from them for the state or county.

    with regards
    Satheesh Kumar

  7. ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததாம். எவ்வளவு தன்னலம் கொண்ட ஓநாய் பாருங்கள். இந்த ஓநாயை நம்பலாமா? என்றாவது ஒரு நாள் அதனுடைய புத்தியைக் காட்டிவிடும்.

    நான் இப்படியெல்லாம் சொல்லுவதால் நீங்கள் யாரும் இரசினியையும் கமலையும் ஓநாய்களைப் போல் கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!!

  8. அருமையான பதிவு,

    திரைப்படத் துறையால் தமிழ் சமூகத்திற்க்கு பல நன்மைகள் நடந்தேரிருக்கின்றன மறுப்பதற்கில்லை, ஆனால் அதே திரைத் துறையின் மூலம் தான் செயலலிதா என்னும் ஈனப் பிறவி தமிழகத்தினுள் நுழைந்து ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது, அடுத்து விசயகாந்த் என்னும் போலித் தமிழனின் தொல்லை தாங்கமுடியவில்லை, இப்போது ரசினிகாந்த் எனும் தமிழனின் உழைப்பைச் சுரண்டித்தின்னும் தன்நல பச்சோந்தியை வேறு ஒரு கூட்டம் அரசியலுக்கு வர அழைப்பு விடுகிறது (இன்னும் தமிழினம் எப்படியெல்லாம் சீரழியப்போகிறதோ தெரியவில்லை) இவர்களுக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துவிட சில பார்பன பத்திரிக்கைக் கூட்டம் வேறு “ரசினி ஸ்டைலாக ஒன்னுக்கு போனார், கக்கூஸ் போனார்” என்றெல்லாம் எழுதி மக்களை மடையர்களாக்கிக் கொண்டு இருக்கிறது,
    முதலில் தமிழன் திரை மோகத்தில் இருந்து வெளியே வரவேண்டும் அப்போது தான் உருப்படுவான்.

    கோகுலகிருட்டிணன்
    மும்பை

  9. நாட்டாம மிக்க நன்றி. சென்ற பதிவில் பார்ப்பனீயம், அய்யர் மற்றும் அய்யங்கார் போன்ற வார்த்தைகள் இல்லாமல் அப்பதிவே களைக்கட்டவில்லை. சென்ற பதிவிற்கும் சேர்த்து இந்த பதிவில் தூக்கி நிறுத்திட்டீங்க நாட்டாம.

    நாட்டாமையின் தீர்ப்பு:

    //ஆக, ரஜினி – கமல் இருவருக்கும் கன்னடர், தமிழர் என்கிற இன உணர்வெல்லாம் கிடையாது. அவர்களிடம் ‘பண உணர்வு’ மட்டும்தான் இருக்கிறது.//

    நம்ம சின்ன கௌண்டர் விசயகாந்த் கூட 8 பட்டிக்குத் தான் தீர்ப்பு சொல்ல இயலும். ஆனா நம்ம நாட்டாம தமிழனத்தின் சார்பாக ஒரு தீர்ப்பை எழுதும் அளவுக்கு தகுதி உடையவர். இவ்வளவு நாளா பார்ப்பனீயத்தை வைத்து வயத்தக் கழுவியாச்சு அடுத்து தமிழ் இன உணர்வ பத்தி தீர்ப்பெழத பேனா கத்தி வீரனாக வீரு கொண்டு எழுந்துள்ளார்.

    விமல் என்பவர் கேள்வி கேட்பது அன்பே சிவத்தில் மாதவன் கேரக்டரை நியாபகப்படுத்தி விட்டது. நான் ஒன்னும் தெரியாத பாப்பா போல கேள்வி கேட்பேனாம் நீங்க பேனா கத்தியால் சதக் சதக் என்று குத்துவீர்களாம்.

    குறிப்பு: நாட்டாமை நான் அன்பே சிவம் நல்லசிவத்துடன் ஒப்பிடுவதாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை!

    குறிப்பு 2: தமிழன உணர்வு என்ற போர்வையில் விடுதலை எலிகளுக்கு ஆதரவை நம்ம நாட்டாமைத் தேடுகிறாரோ என்று நினைத்தால் அதற்கும் நான் பொறுப்பில்லை!

    நாட்டாம நமக்குத் தீர்ப்பை விட போலி முத்திரை மற்றும் போலி சான்றிதழ் தொழில் தான் நல்லா இருக்கு அதையேத் தொடரவும். மேலும் கருத்து தெரிவித்த சதீசு குமாருக்கு என் அனுதாபங்கள்

  10. //கமலின் முந்தைய சாமார்த்தியமான அந்தப் பேச்சினால்தான்
    கர்நாடகத்தில், ‘குசேலனுக்கு’ வந்த எதிர்ப்பு ‘தசாவதாரம்’ என்கிற
    அய்யங்கார் அரசியல்
    படத்துக்கு வரவில்லை//

    கமல் இன்று மட்டுமா இப்படி பேசி வருகிறார்.. எப்போதும் அப்படித்தான் இருக்கிறார்.
    அவருக்கு பண உணர்வு மட்டும் என்று கண்டு பிடித்ததர்க்காக உங்களுக்கு நோபல் பரிசுதான் தரவேண்டும்..
    ஆட்சித் தலைமையில் தற்போது இருப்பவர்களுக்கு இருக்க வேண்டிய ‘உணர்வு’ இல்லை..
    அதைப் போய்க் கேளுங்கள்.. திரைப்படம் என்ற வியாபாரத்தில் இருக்கும் கமலுக்கு ஏன்
    இருக்க வேண்டும் என்று எதிர்ப் பார்க்கிறீர்கள்.. உங்கள் கட்டுரைகள் பலவற்றைப்
    படித்திருக்கிறேன்.. அதிலிருந்து கீழ்க் காணும் முடிவுக்கு வரமுடிகிறது..
    (அதை நீங்கள் வெளிப்படையாக அறிவித்து விடலாம்)
    1) எப்போதும் பிறப்புதான் எதையும் தீர்மானிக்கிறது.. அதாவது ஒருவன் பார்ப்பானாகப்
    பிறந்தாலே போதும், அவன் நேர்மையற்றவன், அவன் ஒழித்துக் கட்டப் படவேண்டியன்.
    2) பார்ப்பனராக பிறக்காதவன் அனைவரும் நேர்மையாளர்கள்.
    என்கிற இரட்டை தத்துவ அடிப்படையில் இயங்கி வருகிறீர்கள் என்பது தெரிகிறது..
    இது முற்றிலும் விஞ்ஞானபூர்வமற்ற கருத்து என்று நான் நினைக்கிறேன்..
    உங்களால் முடிந்தால் நிருபியுங்கள்.

    கந்தசாமி

  11. வணக்கம் தோழர்,

    உஙகளின் அந்த இன உணர்வு ===== பண உணர்வு ஒப்பீடு மிக அருமை

    இப்படிக்கு,
    செ.தமிழ்ச்செல்வன்.

  12. 1) எப்போதும் பிறப்புதான் எதையும் தீர்மானிக்கிறது.. அதாவது ஒருவன் பார்ப்பானாகப்
    பிறந்தாலே போதும், அவன் நேர்மையற்றவன், அவன் ஒழித்துக் கட்டப் படவேண்டியன்.
    2) பார்ப்பனராக பிறக்காதவன் அனைவரும் நேர்மையாளர்கள்.
    என்கிற இரட்டை தத்துவ அடிப்படையில் இயங்கி வருகிறீர்கள் என்பது தெரிகிறது..
    இது முற்றிலும் விஞ்ஞானபூர்வமற்ற கருத்து என்று நான் நினைக்கிறேன்..
    உங்களால் முடிந்தால் நிருபியுங்கள்.//

    உண்மைதான்…..நீங்கள் சொல்வது உண்மைதான்….

    பார்ப்பனரோ , பார்ப்பனரல்லாதவரோ அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்வது சரிதான்…

    ஆனால் நிலைமையென்ன?

    எமக்குத் தெரிந்த பார்ப்பனர்கள் அனைவரும் , இச்சமூகத்தின் வலுவார்ந்த ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் அனைவரும் , பெரும்பான்மையான தமிழ்ச்சமூகத்தின் கருத்துக்கு எதிரான கருத்தையே கொண்டிருக்கிறார்கள்..அதற்கு சமீபத்திய உதாரணங்களாக நிறையச் சொல்லலாம்…

    சேது சமுத்திரத் திட்டத்திற்கான ஜெயலலிதா , சுப்ரமண்யம் சுவாமி , சோ இவர்களின் எதிர்ப்பே எமக்குத் தெரியும்…ஆதரித்த வெகுஜனமறிந்த பார்ப்பனரை கைகாட்டுங்கள் பார்க்கலாம், கையெடுத்து கும்பிடுவோம்…..அவன் பார்ப்பனன் என்பதால் அல்ல , பார்ப்பனக் கருத்துக்களை முன்வைக்காத பார்ப்பனன் என்பதால்!!!!!!

    ஈழத்தின் நிலையிலும் பார்ப்பனர்கள் , ( முற்போக்கு ஞாநி உட்பட ) நாமறிந்த பார்ப்பனர்களின் நிலை தமிழர்களின் ஒட்டுமொத்த கருத்தாக்கத்திற்கு நேர் எதிராகவே இருக்கிறது……

    பார்ப்பன பத்திரிகைகளான தினமலம் ஈழத்தமிழன் கொக்கெயின் விற்றுத்தான் பிழைக்கிறான் என்று குற்றஞ்சாட்டியது…..

    பார்ப்பனர்கள் அந்தக் கருத்தை எதிர்த்து எங்காவது வாதம் செய்தார்களா என்று நிருபிக்க முடியுமா???

    எல்லா பார்ப்பனர்களும் கெட்டவர்கள் என்றுஞ் சொல்லவில்லை……அதே போல் எல்லா பார்ப்பனரல்லாதவர்களும் நல்லவர்கள் என்றுஞ் சொல்ல்வில்லை…

    வெகுஜனமறிந்த பார்ப்பனர்கள் எல்லோரும் தமிழர் விரோதக் கொள்கையுள்ளவர்கள் என்று மட்டுமே நாம் சொல்லவிளைகிறோம் , தகுந்த ஆதாரங்களுடன்!!!!!!!!

  13. kamal anbavar oru nadigar avaridam oru arasiyalvathiyai thaduvathu thangalin ariyamai,avar ulaga nayagan anna makal kuruvathu avarudya nadipirkaga baramanan anbadarkaga,okanakal prichayil makalai amatriyathu tamilaga arasu atthai patri kura thangalaku thairiyam illai,rajini oru marathi ,anbadarkaga avarai kuraikuruvathu muttal thanam,oru nadikanidam nadigani parungal arasiyali parkathinga….
    ida othu kidu , sama urimai kidaitha piragum bhramanargali kurai kuruvathu thangalin iyalamai,ariyamai..poramai…nan bhramanan alla….

  14. உடன்பிறப்பு அவர்களின் கருத்தை வழிமொழிகின்றேன். நிச்சயமான, அப்பட்டமான உண்மை.

    சில தினங்களுக்கு முன் ஒரு திருமணத்திற்காக சென்றபோது, எனது உடன்பிறந்த தம்பி ஒருவர் சற்றும் தயக்கமில்லாமல், பலர் இருந்த இடத்தில் ‘புலிகளிடம் பணம்வாங்கிக் கொண்டு இங்குள்ள தலைவர்கள் குதிக்கிறார்கள்’ என்றார். அதிர்ந்து போனேன்! காரணம் என்ன தெரியுமா? இவர் ‘தின மலத்’தைத் தவிர வேறு எந்த செய்தித் தாளையும் படிக்காதவர். புரிகிறதா? அந்தக் கூட்டத்திலேயே அவரை அறைந்திருப்பேன். நான் உடல் நலமற்று இருந்ததால் அன்று அவர் தப்பினார். அவர் ஒரு கொடிய தன்னலக்காரர் என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றேன். பார்ப்பனக் கும்பலின் பத்திரிகைகளைத்தான், எந்த இயக்கத்தையும், கட்சியையும் சாராத பொது சனம் படிக்கின்றது.

    நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்தின் ஆழம் புரிகிறதா, தோழர்களே!

    3 விழுக்காடு மட்டுமே உள்ள ஒரு சமூகத்தின் இதழ்களை 97 விழுக்காடு சமூகத்தினர் படித்து ‘நாசமாய்’ ப்போகின்றனர்.

    தமிழ் முற்போக்காளர்களால், தமிழரால், கட்சி சாராமல் நடத்தப்படும் பத்திரிகை ஏதாவதுண்டா?

    நாம் என்ன செய்யப் போகின்றோம்?

  15. உடன்பிறப்பு, பாண்டியன் இருவர் கருத்தையும் வழிமொழிகின்றேன்.
    பார்ப்பனர் நமது எதிரி அல்ல.பார்ப்பனியம் தான் எதிரி.

  16. madhi’illa’maran,
    You seem to be the No.1 jadhi veri pidicha mirugam. What do you want these actors to speak? Do you want to speak nonsense and spread violence? It’s very easy for them to sit in the AC room and tell their fans to burn buses, throw stones at shops like what these irresponsible leaders like Dr.Ramadoss is doing. Treating these actors like gods is tamizhan’s ‘sabam’. So, being in that position, they need to act responsibly and not ignite violence in any way, what is what Kamal/Rajini seem to be doing. The best thing for them to do is keep their mouths shut. If Sathyaraj speaks, no body gives a shit. If Kamal/Rajini speaks, then even more innocent tamilians in Karnataka will be effected.
    Without even thinking about all this, you started calling them by their caste. Shame on you.

  17. உணர்வு என்னவோ பணத்திற்காகவாயிருக்கலாம். ஆனால் ஒரு உறவு சுகம் விசாரித்ததாற் போன்ற பாச உணர்வு ஈழத்தமிழர் பலருக்கு குறுகிய நேர ஆறுதலையாவது தந்துள்ளது.

    தமிழக திரைத்துறையினருக்கு நன்றிகள்

  18. WE SHOULD COME TOGETHER AND START A NEW NEWS PAPER AND TV.
    I AM WILLING TO DONATE A LAKH AS MY SHARE FOR THIS NOBLE CAUSE.WILL ANYONE COME FORWARD TO FORM A GROUP?

  19. Bupathi,

    Definetely, I’ll also ready to participate, find a Tamil author to work as a publisher.

  20. உறுதியான இதயங்களுடன் புதிய இந்தியா பிறக்கும்

    வாழ்த்துக்கள் சுப்ரமணிய சுவாமி அவர்களே!!!- இதே போல நடுநிலையுடன் எப்போதும்/ எவ்விடத்தும் செயல் பட்டால் நாட்டுக்கும் நல்லது- உங்களுக்கும் மக்கள் மனதில் இடம் கிடைக்கும்!! உறுதியான இதயங்களுடன் புதிய இந்தியா பிறக்கும் என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.

    ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும் நூல் வேலி உள்ள இடங்கள் எனக்கு அலர்ஜி என்று எப்படி எடுத்துரைப்பேன்??? –

  21. தமிழ் முற்போக்காளர்களால், தமிழரால், கட்சி சாராமல் நடத்தப்படும் பத்திரிகை ஏதாவதுண்டா?
    நாம் என்ன செய்யப் போகின்றோம்?-Dr. V. Pandian .

    யார் அந்த நாம்???

    சரியாக பதில் சொல்ல வெட்கப்படும்/பயப்படும்/கூச்சப்படும்
    நாம் – அந்த யார் என்பதை தெளிவு படுத்தி விட்டால்-அப்பொழுது தான் சரியான ஆரம்பம் ஆரம்பிக்கும்.

  22. தமிழா!!! நாய் செய்த பாக்கியம் நாம் செய்யவில்லையா???

    ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர்!!!

    சினிமா நடிகை த்ரிஷாவுக்கு நாய் வளர்பவரை கல்யாணம் செய்துகொள்ள பிடிக்கும் என்கிற சேதி மறு நாளே நமக்கு தெரிந்து விடுகிறது – ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர் பற்றிய தகவல் ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது தெரியும் இந்நிலை – வரும் காலத்தில் இருக்குமா என்பது சந்தேகமே????-தங்கராஜா/தினமணிக்கு நன்றி.

    Pl c link:
    http://www.dinamani.com/edition/story.aspx?artid=545532

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading