புத்தகக் காட்சியில் எனது நூல்கள்
காதல் ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு முறைதானே வரும்?
எல்.நிவேதிதா, சென்னை.
சின்ன திருத்தம். ஒரு நபரின் மீது ஒரு முறை தான் வரும்.
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரில் உங்களை அதிகம் கவர்ந்தது யார்?
-எம்.டேவிட், திருச்சி.
யார் இவர்கள். இவுங்க எதுக்கு என்னைய கவர்ராங்க?
திருமணம் பெண்களுக்கு எதிரானது என்கிறார்கள். திருமணத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டால் குடும்பம் என்கிற அமைப்பே நிற்கதியாகிவிடாதா?
-காமட்சி சுந்தரம், சென்னை.
குடும்பம் என்ன கதியாகுமோ அது எனக்கு தெரியாது. எப்படி பார்த்தாலும் நிச்சயம் திருமணம் பெண்களுக்கு எதிரானதுதான். செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா அது கல்யாணமா?
வே. மதிமாறன் பதில்கள்
பக்கங்கள் 88. விலை ரூ. 35.
***
வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா உரைகள்
விலை: 35
தமிழேந்தி
விடுதலை ராசேந்திரன்
பெரியார்தாசன்
கௌத்தூர் மணி
மருதையன்
இவர்கள் பேசிய பேச்சுகள் அடங்கிய எம்.பி 3
***
நான் யாருக்கும் அடிமையில்லை
எனக்கடிமை யாருமில்லை
-வே. மதிமாறன்
விலை ரூ. 60
டாக்டர் அம்பேத்கரின் இந்துமத, பார்ப்பனிய எதிர்ப்பு வீச்சின் விஸ்வரூபம்.
நூலிலிருந்து…..
ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் போராடிய போராளியைப் புரிந்துகொள்ளுங்கள் தலித் அல்லாதவர்களே.
***
‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி
-வே.மதிமாறன்
“பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக, ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
ஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.”
“காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்கிறார்.
இதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,
‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்
கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’
என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.
சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?
“வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் – ‘ஜகத்குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு’ சொன்னாலும் சொல்வார்கள்-மார்க்சிய பாரதியவாதிகள்.”
***
‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி நூலுக்கு எதிராக வந்த நூல்கள்
பாரதி கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய ஒரு மதிப்பீடு
-கி.பார்த்திபராஜா
தம்பி நான் ஏது செய்வேணடா?
பாரதி பற்றி பேராசிரியர் பாரதிபுத்திரன்
இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்
-ந.இரவீந்திரன்
***
பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்மருதையன் – வே.மதிமாறன்
‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றிய விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம். புதிய விவாதங்களுடன் மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது.
***
“பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை” என்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக,வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.
“வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்” என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்” என்று நிராகரிக்கவும் செய்தார்.
“பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லை” என்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.
-மருதையன்
மேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.
அப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.
நம் பேராசரியப் பெருமக்கள் ‘பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்’ என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்கள்.
-வே.மதிமாறன்
***
பெரியாரின் பூ மாலையும் போர்வாளும்
விலை ரூ. 15
பெரியார் கொள்கைகளில், எம்.ஆர். ராதா-என்.எஸ்.கே வின் பங்களிப்பு.
எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பாளையும் ஒன்றாக கருதுகிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு கண்டனம்
நூலிலிருந்து…..
பொதுவாக பார்ப்பன ஜாதிவெறி, தமிழர்களுக்கு தீமையையே செய்திருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பார்ப்பனியம் தமிழர்களுக்கு நன்மையை செய்தது.
ஆம். அது தந்தை பெரியார் என்கிற மகத்தான தலைவனை தமிழர்களுக்குத் தந்தது.
***
சென்னை புத்தகக் காட்சியில், கீழைக்காற்று, தாய்மண் வெளியீட்டகம், கருப்பு பிரதிகள், அலைகள், மக்கள் கண்காணிப்பகம், எழுத்து புத்தகக் கடைகளில் கிடைக்கும்
தொடர்புக்கு:
‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச; 9444 337384
உங்கள் நூல் : 1 – பதில்1: அடி தூள்; பதில் 2: எங்க ஊரு பாஷைல சொன்னாக்கா ‘சிரிச்சு மாயிறேன்’; பதில்3: சொல்றது உறைக்கத் தான் செய்யுது. ஆனால் எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இருக்கிறது, அது சரியானபடி அமைந்தால், திருமணம் சம்மந்தமாக இன்னொரு விஷயம் இஸ்லாமிய திருமணத்தில் பெண்கள் தான் வரதட்சனை கேட்க வேண்டும், அதை ஆண்கள் தான் கொடுக்க வேண்டும், அதற்கு வேறொரு பெயர் உண்டு திருமண கொடை. ‘மஹர்’ என்று அழைப்போம். மஹர் தொகையை மணப்பெண் தான் நிர்ணயிக்க வேண்டும் என்பது இஸ்லாமிய திருமண சட்டத்தில் உள்ளது, ஆனால் அது எந்த அளவுக்கு கடைபிடிக்ககப் படுகிறது என்பது கேள்விக்குறிதான். (நூல் 2, 3 பின்னர் தொடரும்..)
ungalin bharathiya janatha parti padithen arumaiyana nermaiyana muraiyil bharathiyai ambala padithi irukinreekal valthukkal