காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

 

 

காதல் ஜாதியை ஒழிக்குமா?

-ஸ்டிபென், திண்டுக்கல்.

ஒழிக்காது.

ஆண் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்து பெண் ஆதிக்கஜாதியாக இருந்தால், மிகப் பெரும்பாலும் அந்தக் காதல் காதலர்களோடு மட்டும் முடிவதில்லை. நகர்புறகமாக இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் கடுமையான புறக்கணிப்பை, எதி்ர்ப்பை சந்திக்க வேண்டிவரும். கிராமப் புறமாக இருந்தால், அந்த ஆண் உயிரோடு கொளுத்தப்படுவான். அவன் குடியிருக்கும் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடுமையான வன்முறைகள் நிகழும்.

ஜாதிக்கு எதிரான, மதத்திற்கு எதிரான அரசியல் காரணங்கள் இல்லாமல், காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் மத வெறியர்களாக, ஜாதி வெறியார்களாக  இருக்கிறார்கள்.

கணவன் என்ன ஜாதியோ அல்லது என்ன மதமோ அவனது அடையாளமே மனைவி மற்றும் குழந்தைகள் மீது வன்முறையாக திணிக்கப்படுகிறது.

குழந்தைகளின் ஜாதி அடையாளமாக கணவனின் ஜாதி அடையாளமும் அவனது குடும்ப பழக்கமுமே கடைப்பிடிக்கப் படவேண்டும் என்று அடாவாடித்தனம் நிகழ்கிறது. இவைகளை ஒத்துக் கொள்ளாதபோது சண்டை, வன்முறை, விவாகரத்து போன்றவை ஏற்படுகிறது.  (கணவனைவிட வசதியான மனைவியாக இருந்தால் மட்டுமே, அவரின் குடும்ப பழக்கம் குழந்தைகளின் பழக்கமாக மாறுகிறது.)

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களின் மத, ஜாதி அடையாளங்களை ஒழித்து, பொது அடையாளத்திற்கு அதாவது ஜாதி, மத எதிர்ப்பாளராக – பகுத்தறிவாளராக இருந்தால்தான் குழந்தைகளையும் சிறப்பாக வளர்க்க முடியும். காதலையும் காப்பாற்ற முடியும்.  காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஜாதிக்கு, மதத்திற்கு எதிரான அரசியல் நிலைதான் காதலை வாழவைக்கும். ஜாதியை ஒழிக்கும்.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற ‘தங்கம்’ 2011ஜனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

***

தொடர்புடையவை:

 பலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

ராக்கி – ஜாதி, மதத்தை கட்டிக் காப்பாற்றும் கயிறு

6 thoughts on “காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

 1. Love is an individual (or a couple’s) act. That will abolish neither caste distinction or religious distinctions. But the best family can do is to accept marriage between castes with grace and love and affection.

 2. ஒரேசாதி(மானுடம்) ஒரேமக்கள் என்று
  நாட்டுப் பற்றோடு ஒன்று!
  இரா எங்கும் ஓதுவோன் வேற்றுமை
  பித்துஓர்நாள் ஓடும் கழன்று!

  காதலை வாழவிடா பேதம்ஓதும் சாதிகளால்
  கல்யாண நிகழ்வுகள் பலகோடி நெடுங்காலம்;
  கற்பழிப்புப் போற்றும் அநாகரிக…
  வன்கொடுமை விழாக்களாக ஆகினவே!

  நரகமோ? மோட்சமோ? இறைவன்
  செயலன்று ஓதுவோன் கடவுள்
  படைப்புக்களின் வேறுபாடு அறியா
  காதலை கெளரவ கொலைஎன்று…
  நரபலியாய் அழித்துடுவது நாகரிகமோ?

  என்னைவிட்டு நிம்மதியேநீ விலகிடும்
  படிஆன வன்கொடுமையால் எப்போதும்
  துடித்திடும் உன்றன் நினைவு என்றன்
  நெஞ்சத்தில் சுவாசிக்க உயிர்வாழ்கின்றேன்.

Leave a Reply

%d bloggers like this: