முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல; ‘தீ’ யை
முத்துக்குமார் தியாகத்தை ஒட்டி, அதுபோன்றே பல இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டபோது, 3-2-2009 அன்று எழுதியது. அதே தலைப்புடன் மீண்டும் பிரசுரிக்கிறேன்.
*
ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள வைக்கிற, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே புள்ளியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்ற அழைக்கிற அளவிற்கு இதுவரை ஒரு கட்டுரையும் எழுதப்பட்டதில்லை.
ஆனால், முத்துக்குமாரின் கட்டுரை வடிவில் அமைந்திருக்கிற அந்த நான்கு பக்கக் கடிதம், அதை செய்திருக்கிறது. அதை நிரூபித்தது போல், அவரின் எழுச்சிமிகு இறுதி ஊர்வலத்தில் பல்வேறு இயக்கங்களும், மக்களும் லட்சக்கணக்கில் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை எழுச்சியோடு பதிவு செய்தனர்.
ஈழத்தமிழர்களுக்காக ‘முத்துக்குமார் நடத்திய அந்த எழுச்சிமிகு அணிவகுப்பில்’ கலந்துக் கொண்டதை, என்னுடைய தகுதியாக, என் அரசியல் நடவடிக்கைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தா ஒன்றாக, மிகப் பெருமையோடு கருதுகிறேன்.
ஏனோதானோ என்றோ, அல்லது தன்னைப் பெரிய அறிவாளியாக, எழுத்தாளனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றோ பல மேற்கோள்களைக் காட்டி, படிப்பவனை மிரட்டி நானூறு பக்கங்களுக்கும் மிகாமல், ‘பெரும் குறிப்பு` வரைகிற எழுத்தாளர்கள் மத்தியில், நான்கே பக்கத்தில், தனது முதல் எழுத்திலேயே, வெறும் துண்டு பிரசுரத்தில் ஓர் இரவுக்குள் தமிழகத்தையே தலைகீழாகப் புரட்டி விட்டார் முத்துக்குமார்.
தான் கொண்ட கொள்கையின் மீது அர்ப்பணிப்பும், உண்மையும், துணிவும், தியாக உள்ளமும் இருந்தால், நானூறு பக்கங்கள் அல்ல, நாலே வார்த்தையில் கூட மக்களை தட்டி எழுப்ப முடியும் என்பதற்கு முத்துக்குமாரின் ‘உயில்’ ஒரு சாட்சி. நமக்கு பாடம்.
***
அரசியல் அலசல் கொண்ட கட்டுரையை, கடிதத்தை மிகச் சிறப்பாக எழுதுவது, முயன்றால் எல்லோருக்கும் முடிகிற காரியம்தான் என்றாலும், மரணத்தை முடிவு செய்துவிட்டு, எழுதச் சொல்லுங்கள், அவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும், அவருக்கு ஒண்ணாவது வாய்பாடைக் கூட ஒழங்காக எழுதவராது.
தாய்நாட்டிற்காக, மரணத்தைக் கண்டு அஞ்சாத அந்தச் சிறப்பு இந்திய வரலாற்றில் மாவீரன் பகத்சிங்கிடம் இருந்தது.
மறுநாள் காலையில் தூக்கு, இரவு லெனின் ‘அரசும் – புரட்சியும்‘ என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறார் பகத். சிறைக்காவலர், “மன்னிப்பு எழுதிக் கொடுத்தால், தூக்கிலிருந்து தப்பலாமே” என்கிறார்.
பகத்சிங் சொல்கிறார், “என் மரணத்தைப் பார்த்து லட்சக் கணக்கான இளைஞர்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக போராட வருவார்கள். என் மரணம் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டு பண்ணும். அதற்காகவே நான் தூக்குகயிறை முத்தமிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தீவிரமாக லெனின் ‘அரசும் – புரட்சியும்’ என்ற நூலைப் படித்திருக்கிறார் பகத். முத்துக்குமாரின் மிகச் சிறப்பும், பகத்சிங்கைப் போன்றே மரணத்தை மயிறளவுக்கூட மதிக்காததன்மைதான்.
தன் மரணத்தை முடிவு செய்துவிட்டு, மிகப் பெரிய அரசில் தீர்வை அலசி ஆராய்ந்து ஒவ்வொரு வார்த்தையிலும் நெருப்பு வைத்து எழுதியிருக்கிறார் தமிழகத்து பகத்சிங் முத்துக்குமார். அவர் வைத்துக் கொண்ட நெருப்பைவிடவும் அவர் வைத்த நெருப்பு, லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் நெஞ்சில், ‘திகுதிகு‘ வென்று பற்றி சூராவளியாய் தமிழகம் முழுக்க சுற்றி அடிக்கிறது.
தோழர்களே, முத்துக்குமாரின் அந்த நான்கு பக்க தீபந்தம், நம் கையில் இருக்கிறது. அந்த மாவீரன், மாமேதை முத்துக்குமார் நமக்கு வழிகாட்டிச் சென்றிருப்பது, நம்மை வருத்திக் கொள்ள, கொளுத்திக்கொள்ள அல்ல. தமிழனப் பகையை வருத்த, கொளுத்த.
ஆம் தோழர்களே, முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ‘ யை.
அந்தத் ‘தீ‘ ஈழத்தமிழர்களுக்கு எதிரான, தமிழனத்திற்கு எதிரான, வஞ்சிக்கப்படும் மக்களுக்கு எதிரான சதியைப் பற்ற வைப்பதற்காக மட்டுமே நமக்கு பயன்பட வேண்டும். அது ஒன்றுதான் முத்துக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான வீர வணக்கம்.
தொடர்புடயவை:
‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்
ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது
ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’
தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்திலிருந்து நேரடி பேட்டி
‘எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்’ இதுதாண்டா தமிழ் பத்திரிகை – தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்
தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்
யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?
கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு
//என் மரணத்தைப் பார்த்து லட்சக் கணக்கான இளைஞர்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக போராட வருவார்கள். என் மரணம் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டு பண்ணும். அதற்காகவே நான் தூக்குகயிறை முத்தமிடுகிறேன்//
முத்துகுமார் பகத்சிங்கா ?
அவர் வீரன். இவன் கொலை?
இவன் முடியாமையால் தற்கொலை செய்தான் என்பதை நினைவில் கொள்க.
மாமேதை என்று கூற ஒருவன் ஒரு பிரச்னையை காட்டி தற்கொலை செய்தால் போதுமா?
தமிழர்கள் சாவதை தடுக்க இன்னொரு தமிழன் சாகணுமா ?
செத்து போய் விட்டால் , இப்போது என்ன ஆகிவிட்டது?
அவன் சாகா விட்டாலும் இப்போது இருக்கும் நிலை தான் ?
நீங்கள் இதைப் பற்றி என்ன நினைகிறீர்கள் ???
முத்துகுமார் எப்படி அறிஞரா ஆவார்… அவர் தன் அறிக்கையில் பாரதியை quote பன்றார்… நீங பேசாம இருக்கிஙே…
ஆனா இந்த சினிம்மாக்காரன் பின்புறத்திலிருந்து இந்த தமிழ் இளைஞர்களை இழுக்கவே முடியாமல் இறுக்க பிணைந்திருக்கிறார்களே.. தோழரே.. என்ன செய்வது….? சொல்லுங்கள்..?
//@Winny செத்து போய் விட்டால் , இப்போது என்ன ஆகிவிட்டது?
அவன் சாகா விட்டாலும் இப்போது இருக்கும் நிலை தான் ?//
உங்கள மாதிரி முண்டங்கள் சுரனை இல்லாமல் இருப்பதால் தான் தன் மரணமாவது உங்களுக்கு கொஞ்சம் தன்மானத்தை தூண்டாதா என்று முத்து குமார் நினைத்து இருக்கலாம்.. ஆனால் குஷ்ப்பூக்கு கோவில் கட்டும் உங்களுக்கு எங்கே அதெல்லாம் புரிய போகிறது..
சுதந்திர போராடத்தின் போது நீங்கள் இருந்தால் நேதாஜியை பார்த்தும் இந்த கேள்விதான் கேப்பீர்கள் போல ” உங்கள் சாவு சுதந்திரம் வாங்கி கொடுக்குமா என்று”
@Kumar.T , ஆமாம் சாமி நாங்க முண்டங்கள் தான். நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள் என்று கொஞ்சம் பட்டியல் போட முடியுமா??
நீங்கள் சொல்லும் நேதாஜி கதை இப்போது ஒத்து வராது என்பதை புரிந்து கொள்ள பாருங்கள்.
நேதாஜி காலத்தில் நம்மை ஆண்டவர்கள் சட்டத்தை மதித்தனர். பல இடைஞ்சல்கள் வருவதால் அவர்களின் மேலிடம் விடுதலை கொடுக்கும் கட்டாயத்துக்கு ஆளாக்கப் பட்டது.
ஆனால் இன்றைய நிலைமை சட்டம் என்பது பாமரனுக்கு மட்டும் தானே தவிர அரசியல்வாதிகளுக்கு இல்லை என்ற நிலைக்கு நாம் ஆளாக்கப் பட்டுள்ளோம்.
பாபரன் அரசியல்வாதியை கேள்வி கேட்கலாம் என்று உருவாக்கப் பட்ட சட்டம் தான் : Right to Information.
ஆனால் இந்தியாவில் நடப்பது , rti activist killed. கொஞ்சம் உலாவியில் தேடிப் பாருங்கள்.
சும்மா நுனிநாக்கில் நீயும் பேசலாம் , நானும் பேசலாம், எதிர்த்து போராடி வெற்றி காண வேண்டுமே தவிர தற்கொலை உனக்கு வீரமாக தெரிகிறது.
பகத்சிங் , நேதாஜி – இருவரும் தற்கொலை செய்ய வில்லை என்பதை ஆணித்தரமாக இங்கு கூற நான் கடமைப் பட்டுள்ளேன்.
நேதாஜியின் இழப்பை கூட என்றுக் கொள்ள முடியாமல் அவர் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்ற தமிழனுக்கு முத்து குமாரின் செயல் எழுச்சியை ஏற்படுத்தும் என்பது உங்கள் நம்பிக்கை. அதில் நான் தலையிட வில்லை.
முத்துகுமாரின் இழப்பு இங்கு அரசியலுக்கு தான் சாதகமாக பயன்படுகிறதே தவிர இன்னும் நம் தோழர்கள் இலங்கையில் சாகத்தான் செய்கிறார்கள்.
இந்த சட்டத்தைப் பற்றி ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா :
கருப்பு பணம் வைத்து இருக்கும் பணமுதலை (இப்போதைக்கு கொஞ்ச பேர்மட்டும் ) யார்யார் என்று தெரிந்து காட்டி கொடுக்க யோசிக்கிறாங்க ஏன் என்றால் தங்களை தானே எப்படி காட்டி கொடுக்க முடியும்.
பதில் சொல்லுங்கள் நண்பரே ???