காதலர் தின வர்த்தகம்-விஜயகாந்த்-கமல்ஹாசன்-கிரிக்கெட்-தமிழ்சினிமாவின் ஆதிக்கஜாதி உணர்வு

 தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர்கள் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில்களின் முழு தொகுப்பு

விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பார்?

நா. விசுசென்னை.

யாரு அவர ‘வெயிட்டா’ கவனிக்குறாங்களோ, அவுங்ககூடதான் கூட்டணி வைப்பாரு. ‘வெயிட்டா’ இருக்கிறவங்கதானே வெயிட்டா கவனிப்பாங்க.

திருவிளையாடல் படத்துல  சோமநாத பாகவதரோட தொல்லை தாங்காம, ‘இது என்ன மதுரைக்கு வந்த சோதனை…’ என்று டி.ஆர். மகாலிங்கம் புலம்புவாரு. அதுபோல்,  விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சி, ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’ என்று நம்மள புலம்ப வைச்சிட்டாரு.

காதலர் தினம் பற்றி?

கல்பனா, பாளையங்கோட்டை.

காதலர்களுக்கு என்று ஒரே ஒரு நாளுதானா? உண்மையான காதலர்களுக்கு ஒவ்வொருநாளும் காதலர் தினம்தான்.

இது வர்த்தக தினம்.

வர்த்தகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, பல பன்னாட்டுக் கம்பெனிகள், தங்கள் பொருட்களை விற்பதற்கு, வருடத்தில் பலநாட்களுக்கு, ‘அம்மா தினம், அப்பா தினம், நண்பர்கள் தினம்’ என்று பெயர் வைத்து, அந்த நாட்களில் பரிசுகள் வாங்கித் தருகிற பழக்கங்களை ஏற்படுத்தி, அமோகமாக வியாபாரம் செய்கிறர்கள்.

2008 ஆம் ஆண்டு காதலர் தினத்திற்கு மட்டும் 1.47 பில்லியன் டாலர்கள் வர்த்தகமாகியிருக்கிறது என்கிறது NRF Report. ஏறக்குறைய 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் காதலர்களிடம் களவாடி இருக்கிறது கம்பெனிகள்.

மொதப் பொண்டாட்டிய கழுத்த நெறிச்சு கொன்னுடடு ரெண்டாவதா ஒரு பொண்ணைக் கூட்டியாந்து வைச்சிக்கிட்டவன், அடுத்தவன் பொண்டாட்டிய கைய புடிச்சி இழுத்தவன், பெண்களை வெறும் பாலியல் பொருட்களாக நினைத்து தன் விருப்பம்போல் பல திருணமங்கள் செய்து கொள்கிறவன், ‘வயதானவன்’ என்கிற அட்வாட்வான்டேஜ எடுத்துக்கிட்டு இளம் பெண்களை தகாத முறையில் தடவுகிறவன் ; இவுனங்க எல்லாம் கூட ‘காதலர் தினம் ஒழுக்கக் கேடானதுன்னு பேசுறாய்ங்க…’ அததான் நம்பளால தாங்க முடியல.

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் துவக்க விழா மிக பிரம்மாண்டமாக பங்களாதேசில் நடைபெற்றது 

‘பாதிநாள் பட்டினி, மீதி நாள் ஒருவேளை’ என்று வாழுகிற பரிதாபத்திற்குரிய நாடு பங்களாதேஷ். இந்தியாவையே பணக்கார நாடாக பார்க்கும் பங்களாதேசுக்கு இது தேவையா?

இந்த வெட்டி வேலைக்காக தலைநகர் டாக்காவை சுத்தப்படுத்த 100 மில்லியன் டாலர் பணத்தைச் செலவிட்டிருக்கிறது பங்களாதேஷ் அரசு. சுத்தப்படுத்துவது என்பது நகரை பெருக்குவது மட்டுமல்ல; நகரத்திலிருந்தே, மனிதர்களையும் பெருக்கித் தள்ளுவது.

பல்வேறு நாடுகளில் இருந்து வந்து குவியும் கிரிக்கெட் சூதாடிகளுக்காகவும், ஊதாரிகளுக்காகவும் சொந்தநாட்டு மக்களையே குப்பைகளைப் போல் பெருக்கி தள்ளியிருக்கிறது பங்களாதேஷ் அரசு.

சாலையோரத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளர்களை, நகரத்திலிருந்து விரட்டியடித்திருக்கிறது. பிச்சைக்காரர்கள் பணம் கொடுத்து வீதிகளில் இருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். நடைபாதை வியாபாரிகளும் நகரத்தில் இருந்து அப்புறப்படுதப்பட்டிருக்கிறார்கள்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா:

“கிரிக்கெட் போட்டியானது நாட்டின் 14 கோடியே 60 இலட்சம் மக்களுக்கு கவுரவத்தை பெற்றுத்தரும்” என்று பெருமை பொங்க பேசியிருக்கிறார்.

கரகாட்டக்காரன் படத்தில், ‘தன்னை புகழ்ந்துபேசும்படி’ ஒருவருக்கு பணம் கொடுத்த செந்திலைப் பார்த்து கவுண்டமணி,“நீ வாங்குற அஞ்சுக்கும், பத்துக்கும் இதெல்லாம் உனக்கு தேவையா?” என்பார். ஹசீனாவின் பேச்சு அதை நினைவூட்டுகிறது.

பெற்றோர்களை தனியாக தவிக்கவிடடு முறையான மருத்துவ உதவி செய்யாமல், அவர்கள் இறந்த பிறகு ‘பெருமைக்காக’ காரியத்தை விசேசமா நடத்துற ஊதாரி மகன்களைப்போல், பங்களாதேஷ் அரசு நடந்துகொண்டிருக்கிறது.

இஸ்லாமிய நாடோ, கிறிஸ்துவ நாடோ, இந்து நாடோ எந்த நாடாக இருந்தாலும் சொந்த நாட்டு எளிய மக்களை சுரண்டுவதில் ஒரே சிந்தனை உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

கும்பகோணத்திலிருந்து சித்தார்த் என்பவர், தங்கம் இதழில்,

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா கோப்பையை வெல்லுமா? என்று கேட்டிருந்தார்; அதற்கு நான் இப்படி பதில் எழுதினேன்,

பேரம் பேசிக்கிட்டு இருக்கிறாங்க, விலை படிஞ்சா வாங்கிட வேண்டியதுதான்.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடத்தை தேவிஸ்ரீ பிரசாத் நிரப்புவார் என்று கமல்ஹாசன் பேசியுள்ளாரே?

டி. பிட்டர், பொன்னேரி.

அது கமல்ஹாசனின் விரும்பமாக இருக்கலாம். ஆனால் அதை தேவிஸ்ரீ பிரசாத்தே நம்ப மாட்டார். எல்லோரும் கமலை ‘உலக நாயகன்’னு சொல்றதுபோல ‘இது சும்மா தமாசு’ என்று என்று நினைத்திருப்பார் தேவிஸ்ரீ.

சமீபத்தில் வெளியான கமலுடைய ‘மன்மதன் அம்பு’ படத்துல பிரபலமானது தேவிஸ்ரீ பிரசாத்தோட பாட்டு மட்டும்தான். அந்த நன்றிக்காக கமல் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.

மற்றப்படி என்ன ‘தகிட..த்தத்தோம்..’ போட்டாலும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடத்தை நிரம்புறது நடக்கிற காரியமா? ஆனாலும், இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் தேவிஸ்ரீ பிரசாத்தின் ‘சந்தம்’ எளிமையாக, கேட்பவரை உடனடியாக கவரும் வண்ணம் இருக்கிறது.

தேவர் மகன், சின்னக் கவுண்டர் போன்று சாதி பெயர்களிலும் ஆதிக்க சாதிகளை ஆதரித்தும் படம் வந்திருக்கிறதே?

கு. அர்சுனன், விழுப்புரம்.

அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிக்கிற அவமானப்படுத்துகிற சினிமாக்களாகவும் அவைகள் இருக்கின்றன.

இதுபோன்ற மோசடிகளை அந்த குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, முற்போக்காளர்களாக அறியப்படுகிற இயக்குநர்களும் செய்திருக்கிறார்கள்.

பகுத்தறிவு மற்றும் இஸ்லாமியர்களை முன்னிலைப்படுத்திய திராவிட இயக்க சினிமா, தாழ்த்தப்பட்டவர்களை முன்னிலைப் படுத்தவில்லை.

அண்ணா, கலைஞர் போன்றவர்களின் சினிமாக்களில் வந்த கதாநாயகன், பகுத்தறிவாளனாக, முற்போக்காளனாக இருந்தாலும் அவன் பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரனாகத்தான் இருந்தான். அதிலும் குறிப்பாக பிள்ளை, முதலி போன்ற ஜாதிகளில் இருந்தே.

இதில் ஒரே ஆறுதல், அந்த ஜாதிகளைப் பிரதிநிதித்துவபடுத்தாததும், அந்த ஜாதிக்குள் இருந்தே வில்லனை காட்டியதும்தான்.

‘மதுரைவீரன்’ தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு பிரிவான அருந்ததியர்கள் வழிபடும் கடவுள்.

மதுரைவீரனின் கதை சினிமாவாக மாறியபோது, அதில் ‘மதுரைவீரன் பிறப்பால் அருந்ததியர் இல்லை, அவரை அருந்ததியர்கள் (சினிமாவில் என்.எஸ். கிருஷ்ணன்-மதுரம்) எடுத்து வளர்த்தார்கள்’ என்று உல்டா செய்தார்கள்.

அந்தப் படத்தில் திராவிட இயக்கத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர்., மதுரைவீரனாகவும், அப்போது திராவிட இயக்கத்தில் இருந்த, கண்ணதாசன் வசன கர்த்தாவாகவும் பங்காற்றி இருந்தார்கள்.

இதுபோன்றே, சமீபகாலத்தில் சினிமாவில் முற்போக்காளர்களாக அறியப்படும் இயக்குனர் மணிவண்ணன், சத்தியராஜ் இணைந்து உருவாக்கிய ‘ஆண்டான் – அடிமை’ படத்திலும் செருப்பு தைக்கும் அருந்ததியர் குடும்பத்தில் வளரும் கதாநாயகன் சத்தியராஜ், பிறப்பால் ஒரு பார்ப்பனர் அவரை அருந்ததியர்கள் எடுத்து வளர்த்தார்கள் என்றுதான் வந்தது.

பாலாவின் பிதாமகனில் ‘ஒரு பெண் சுடுகாட்டில் குழந்தையை விட்டுவிட்டு போகிறாள், அதனால்தான் விக்ரம் பிணம் எரிக்கும் வேலை பார்த்தார். மற்றபடி அவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் இல்லை’ என்று காட்டப்பட்டது.

மிக நல்லவன், மிகத் திறமையானவன், நன்றாக ஆடுவான், பாடுவான், அறிவாளி, அழகன், அநீதியை தட்டிக் கேட்பவன் இதெல்லாம் கதாநாயகனுக்கான சிறப்புகளாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சிறப்புகளைப் போலவே கதாநாயகன் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவன் என்பதும் அவனுக்கான ‘சிறப்பாகவே’ காட்டப்படுகிறது.

ஜாதி ரீதியாக சக்கிலியராகவோ, பறையறாகவோ, பள்ளராகவோ கதாநாயகன் இருந்தால் ‘காதநாயக அந்தஸ்துக்கு இழுக்கு’ என்று ‘படைப்பாளர்கள்’ கருதுவதுதான் காரணம்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இயக்குநராக வந்தால் அவரும் இதுபோன்ற முறையில்தான் படம் எடுக்கவேண்டும் என்று ஒரு ‘நியதி’ நிறுவப்பட்டிருக்கிறது. ஏனென்றால், படம் பார்க்கிற மிகப் பெருபான்மையான ‘ஜாதி இந்துக்கள்’ அல்லது தலித் அல்லாதவர்கள் அந்தப் படத்தை புறக்கணித்துவிடுவார்கள் என்பதும் அதற்குக் காரணமாக கருதப்படுகிறது.

இதில் வேடிக்கை, இன்று முன்னணியில் இருக்கிற மிகப் பெரிய கதாநாயகர்கள் பலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனால், படத்தில் அவர்கள் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்களாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

மாறாக, அவர்கள் தங்களை தலித்தாக அடையாளம் காட்டிக் கொண்டால், தங்களின் கதாநாயக அந்தஸ்து தகர்ந்துவிடும் என்று அவர்கள் கருதுவதால்தான், தான் தலித் என்பதையும் மறைக்க முயற்சிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே தன்னுடைய கிறிஸ்துவ மத அடையாளத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள்.

எனக்கு தெரிந்து, தமிழ் சினிமாவில், கதாநாயகன் தாழ்தத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக காட்டியது கே. பாக்கியராஜின் இது நம்ம ஆளு, சேரனின் பாரதி கண்ணமா இந்த இரண்டு படகள்தான். இவைகள் இரண்டும் மிகப் பெரிய வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இரண்டுபேரும் ‘ஜாதி மறுப்பு, பெரியார், அம்பேத்கர், தமிழ்த் தேசியம்’ என்று பேசுகிற முற்போக்காளர்கள் இல்லை.

இந்த இரண்டு படங்களில் பாக்கியராஜின் இது நமம ஆளு படத்தை தான் சிறந்த படமாக கருதுகிறேன். சேரனின் பாரதி கண்ணமாவில் தேவர் வீட்டுப் பெண் தாழ்த்தப்பட்டவரை காதலிப்பதாக காட்டுகிற துணிச்சல் இருந்தாலும்,(இதற்காக அந்தப் படத்திற்கு எதிர்ப்பு வந்தது)

அதற்கு பரிகாரம் செய்வதைப்போல், தேவர் ஜாதிக்கார்கள் இந்த மண்ணின் மைந்தர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களை நம்பி வேறு எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வந்வர்களாகவும் மிக மோசமான கருத்து பதிவு செய்யப்பட்டது.

ஆனால், பாக்கியராஜின் ‘இது நமம ஆளு’ படத்தில் தாழ்த்தப்பட்டர்களுக்கு சவரம் செய்கிற நாவிதர்தான் கதாநாயகன

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/feb11

தொடர்புடையவை:

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

உலகத் தமிழ் மக்கள் அரங்கம் நடத்தும் கருத்தரங்கம்

ஆர்குட்டில் உலகதமிழ் மக்கள் அரங்கம் என்ற பெயரில் நண்பர்கள் இணைந்து நடத்தும் கருத்தரங்கத்திற்கு அதன் தலைவர் சசிகுமார் அழைப்பு விடுத்துள்ளார். ஆர்குட்டில் அவர் வெளிட்டதை இங்கு வெளியீடுகிறேன்.

*

உலகத் தமிழ் மக்கள் அரங்க தோழர்களுக்கு வணக்கம்!

நம் அரங்கம் வெறும் வெற்று பேச்சுக்களிலும் வெற்று விவாதங்களிலும் பங்கேற்கும் அரங்கமாக இல்லாமல், நடைமுறையில் சமூக அநீதிகளுக்கெதிராக முற்போக்கு கருத்துக்களுடன் களப்பணியாற்றும் அரங்கம் என்பதை அனைவரும் அறிவோம்.

இது நாள் வரையில் நம் தோழர்கள் மட்டும் தனியாகவே நம் அரங்கத்தின் சமூக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளனர். ஆனால் இதன் அடுத்த கட்டமாக நம் தோழர்கள் தங்கள் குடும்பத்தாரிடமும் முற்போக்கான கருத்துக்களை கொண்டு செல்கின்றனர் என்பதின் தொடக்கமாக நம் அரங்கத் தோழர்கள் குடும்பத்துடன் தோழர் இராஜ சிங்கம் அவர்களின் இல்லத்தில் நாளை மதியம் கலந்துக்கொள்கிறோம்.

தோழர் ராஜசிங்கம் அவர்களின் ‘திருமண நாள்’ விருந்திற்காக மதிய உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் இது வெறும் உணவு விருந்து நிகழ்ச்சி மட்டும் அல்ல! குடும்பத்துடன் பங்கேற்கும் ஒரு கருத்தரங்க நிகழ்வாக நடக்கவிருக்கின்றது.

பொதுவாக ஆண்களுக்கு பரவலாக வெளி இடங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பல அரசியல் கருத்தரங்குகளிலும் அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் பெண்களுக்கு அவ்வாறு இல்லை. எனவே தோழர்கள் தங்கள் குடும்பத்துடன் வருவதால் இந்நிகழ்ச்சியில் கருத்தரங்கமும் நடைபெறுகின்றது.

கருத்தரங்கம் என்பது அறிவுக்கும் நல்ல விருந்தை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. கருத்தரங்கம் என்னும் அறிவுக்கான விருந்தை தோழர் இராஜசிங்கம் இல்லத்தில் நமக்கு தருகிறார் எழுத்தாளர் மதிமாறன் அவர்கள்.

எனவே தோழர்கள் அனைவரும் மதிய விருந்துடன் நடக்கும் கருத்தரங்கத்திற்கு வருமாறு அன்போடு அழைக்கின்றோம்.

நாள்:26-02-2011 (நாளை – சனிக்கிழமை)

நேரம்: மதியம் 1.30

முகவரி : கோல்டன் பிளாட்ஸ்,முகப்பேர் கிழக்கு,சென்னை

தொடர்புக்கு :9500103378

-உலகத்தமிழ் மக்கள் அரங்கம்.

தொடர்புடையவை:

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கருத்தரங்கம்

இன்றைய சூழலில் அண்ணல் அம்பேத்கரின் அதிமுக்கியத் தேவை – பெரியாரியல் பார்வை..

டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்?

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?

தேவர் மகன், சின்னக் கவுண்டர் போன்று சாதி பெயர்களிலும் ஆதிக்க சாதிகளை ஆதரித்தும் படம் வந்திருக்கிறதே?

கு. அர்சுனன், விழுப்புரம்.

அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிக்கிற அவமானப்படுத்துகிற சினிமாக்களாகவும் அவைகள் இருக்கின்றன.

இதுபோன்ற மோசடிகளை அந்த குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, முற்போக்காளர்களாக அறியப்படுகிற இயக்குநர்களும் செய்திருக்கிறார்கள்.

பகுத்தறிவு மற்றும் இஸ்லாமியர்களை முன்னிலைப்படுத்திய திராவிட இயக்க சினிமா, தாழ்த்தப்பட்டவர்களை முன்னிலைப் படுத்தவில்லை.

அண்ணா, கலைஞர் போன்றவர்களின் சினிமாக்களில் வந்த கதாநாயகன், பகுத்தறிவாளனாக, முற்போக்காளனாக  இருந்தாலும் அவன் பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரனாகத்தான் இருந்தான். அதிலும் குறிப்பாக பிள்ளை, முதலி போன்ற ஜாதிகளில் இருந்தே.

இதில் ஒரே ஆறுதல், அந்த ஜாதிகளைப் பிரதிநிதித்துவபடுத்தாததும், அந்த ஜாதிக்குள் இருந்தே வில்லனை காட்டியதும்தான்.

‘மதுரைவீரன்’ தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு பிரிவான அருந்ததியர்கள் வழிபடும் கடவுள்.

மதுரைவீரனின் கதை சினிமாவாக மாறியபோது, அதில் ‘மதுரைவீரன் பிறப்பால் அருந்ததியர் இல்லை, அவரை அருந்ததியர்கள் (சினிமாவில் என்.எஸ். கிருஷ்ணன்-மதுரம்) எடுத்து வளர்த்தார்கள்’ என்று உல்டா செய்தார்கள்.

அந்தப் படத்தில் திராவிட இயக்கத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர்., மதுரைவீரனாகவும், அப்போது திராவிட இயக்கத்தில் இருந்த, கண்ணதாசன் வசன கர்த்தாவாகவும் பங்காற்றி இருந்தார்கள்.

இதுபோன்றே, சமீபகாலத்தில் சினிமாவில் முற்போக்காளர்களாக அறியப்படும் இயக்குனர் மணிவண்ணன், சத்தியராஜ் இணைந்து உருவாக்கிய ‘ஆண்டான் – அடிமை’ படத்திலும் செருப்பு தைக்கும் அருந்ததியர் குடும்பத்தில் வளரும் கதாநாயகன் சத்தியராஜ், பிறப்பால் ஒரு பார்ப்பனர் அவரை அருந்ததியர்கள் எடுத்து வளர்த்தார்கள் என்றுதான் வந்தது.

பாலாவின் பிதாமகனில் ‘ஒரு பெண் சுடுகாட்டில் குழந்தையை விட்டுவிட்டு போகிறாள், அதனால்தான் விக்ரம் பிணம் எரிக்கும் வேலை பார்த்தார். மற்றபடி அவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் இல்லை’ என்று காட்டப்பட்டது.

மிக நல்லவன், மிகத் திறமையானவன், நன்றாக ஆடுவான், பாடுவான், அறிவாளி, அழகன், அநீதியை தட்டிக் கேட்பவன் இதெல்லாம் கதாநாயகனுக்கான சிறப்புகளாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சிறப்புகளைப் போலவே கதாநாயகன் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவன் என்பதும் அவனுக்கான ‘சிறப்பாகவே’ காட்டப்படுகிறது.

ஜாதி ரீதியாக சக்கிலியராகவோ, பறையறாகவோ, பள்ளராகவோ கதாநாயகன் இருந்தால் ‘காதநாயக அந்தஸ்துக்கு இழுக்கு’ என்று ‘படைப்பாளர்கள்’ கருதுவதுதான் காரணம்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இயக்குநராக வந்தால் அவரும் இதுபோன்ற முறையில்தான் படம் எடுக்கவேண்டும் என்று ஒரு ‘நியதி’ நிறுவப்பட்டிருக்கிறது. ஏனென்றால், படம் பார்க்கிற மிகப் பெருபான்மையான ‘ஜாதி இந்துக்கள்’ அல்லது தலித் அல்லாதவர்கள் அந்தப் படத்தை புறக்கணித்துவிடுவார்கள் என்பதும் அதற்குக் காரணமாக கருதப்படுகிறது.

இதில் வேடிக்கை, இன்று முன்னணியில் இருக்கிற மிகப் பெரிய கதாநாயகர்கள் பலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனால், படத்தில் அவர்கள் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்களாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

மாறாக, அவர்கள் தங்களை தலித்தாக அடையாளம் காட்டிக் கொண்டால், தங்களின் கதாநாயக அந்தஸ்து தகர்ந்துவிடும் என்று அவர்கள் கருதுவதால்தான், தான் தலித் என்பதையும் மறைக்க முயற்சிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே தன்னுடைய கிறிஸ்துவ மத அடையாளத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள்.

எனக்கு தெரிந்து, தமிழ் சினிமாவில், கதாநாயகன் தாழ்தத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக காட்டியது  கே. பாக்கியராஜின் இது நம்ம ஆளு, சேரனின் பாரதி கண்ணமா இந்த இரண்டு படகள்தான். இவைகள் இரண்டும் மிகப் பெரிய வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இரண்டுபேரும் ‘ஜாதி மறுப்பு, பெரியார், அம்பேத்கர், தமிழ்த் தேசியம்’ என்று பேசுகிற முற்போக்காளர்கள் இல்லை.

இந்த இரண்டு படங்களில் பாக்கியராஜின் இது நமம ஆளு படத்தை தான் சிறந்த படமாக கருதுகிறேன். சேரனின் பாரதி கண்ணமாவில் தேவர் வீட்டுப் பெண் தாழ்த்தப்பட்டவரை காதலிப்பதாக காட்டுகிற துணிச்சல் இருந்தாலும்,(இதற்காக அந்தப் படத்திற்கு எதிர்ப்பு வந்தது)

அதற்கு பரிகாரம் செய்வதைப்போல், தேவர் ஜாதிக்கார்கள் இந்த மண்ணின் மைந்தர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களை நம்பி வேறு எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வந்வர்களாகவும் மிக மோசமான கருத்து பதிவு செய்யப்பட்டது.

ஆனால், பாக்கியராஜின் ‘இது நமம ஆளு’ படத்தில் தாழ்த்தப்பட்டர்களுக்கு சவரம் செய்கிற நாவிதர்தான் கதாநாயகன்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/feb11/

தொடர்புடையவை:

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

நம்ம சினிமாவுல கூட இப்படி வராது சண்டைக்காட்சி; பங்களாதேஷ்லேயோ இது அன்றாடம் காட்சி.

லகக்கோப்பை கிரிக்கெட்டின் துவக்க விழா மிக பிரம்மாண்டமாக பங்களாதேசில் நடைபெற்றது.

‘பாதிநாள் பட்டினி, மீதி நாள் ஒருவேளை’ என்று வாழுகிற பரிதாபத்திற்குரிய நாடு பங்களாதேஷ். இந்தியாவையே பணக்கார நாடாக பார்க்கும் பங்களாதேசுக்கு இது தேவையா?

இந்த வெட்டி வேலைக்காக தலைநகர் டாக்காவை சுத்தப்படுத்த 100 மில்லியன் டாலர் பணத்தைச் செலவிட்டிருக்கிறது பங்களாதேஷ் அரசு. சுத்தப்படுத்துவது என்பது நகரை பெருக்குவது மட்டுமல்ல; நகரத்திலிருந்தே, மனிதர்களையும் பெருக்கித் தள்ளுவது.

பல்வேறு நாடுகளில் இருந்து வந்து குவியும் கிரிக்கெட் சூதாடிகளுக்காகவும், ஊதாரிகளுக்காகவும் சொந்தநாட்டு மக்களையே குப்பைகளைப் போல் பெருக்கி தள்ளியிருக்கிறது பங்களாதேஷ் அரசு.

சாலையோரத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளர்களை, நகரத்திலிருந்து விரட்டியடித்திருக்கிறது. பிச்சைக்காரர்கள் பணம் கொடுத்து வீதிகளில் இருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். நடைபாதை வியாபாரிகளும் நகரத்தில் இருந்து அப்புறப்படுதப்பட்டிருக்கிறார்கள்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா:

“கிரிக்கெட் போட்டியானது நாட்டின் 14 கோடியே 60 இலட்சம் மக்களுக்கு கவுரவத்தை பெற்றுத்தரும்” என்று பெருமை பொங்க பேசியிருக்கிறார்.

கரகாட்டக்காரன் படத்தில், ‘தன்னை புகழ்ந்துபேசும்படி’ ஒருவருக்கு பணம் கொடுத்த செந்திலைப் பார்த்து கவுண்டமணி,“நீ வாங்குற அஞ்சுக்கும், பத்துக்கும் இதெல்லாம் உனக்கு தேவையா?” என்பார். ஹசீனாவின் பேச்சு அதை நினைவூட்டுகிறது.

பெற்றோர்களை தனியாக தவிக்கவிடடு முறையான மருத்துவ உதவி செய்யாமல், அவர்கள் இறந்த பிறகு ‘பெருமைக்காக’ காரியத்தை விசேசமா நடத்துற ஊதாரி மகன்களைப்போல், பங்களாதேஷ் அரசு நடந்துகொண்டிருக்கிறது.

இஸ்லாமிய நாடோ, கிறிஸ்துவ நாடோ, இந்து நாடோ எந்த நாடாக இருந்தாலும் சொந்த நாட்டு எளிய மக்களை சுரண்டுவதில் ஒரே சிந்தனை உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

கும்பகோணத்திலிருந்து சித்தார்த் என்பவர், தங்கம் இதழில்,

‘உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா கோப்பையை வெல்லுமா? என்று கேட்டிருந்தார்; அதற்கு நான் இப்படி பதில் எழுதினேன்,

பேரம் பேசிக்கிட்டு இருக்கிறாங்க, விலை படிஞ்சா வாங்கிட வேண்டியதுதான்.’

தொடர்புடையவை:

சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை-`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடத்தை தேவிஸ்ரீ பிரசாத் நிரப்புவார் என்று கமல்ஹாசன் பேசியுள்ளாரே?

டி. பிட்டர், பொன்னேரி.

அது கமல்ஹாசனின் விரும்பமாக இருக்கலாம். ஆனால் அதை தேவிஸ்ரீ பிரசாத்தே நம்ப மாட்டார். எல்லோரும்  கமலை ‘உலக நாயகன்’னு சொல்றதுபோல ‘இது சும்மா தமாசு’ என்று என்று நினைத்திருப்பார் தேவிஸ்ரீ.

சமீபத்தில் வெளியான கமலுடைய  ‘மன்மதன் அம்பு’ படத்துல பிரபலமானது தேவிஸ்ரீ பிரசாத்தோட பாட்டு மட்டும்தான். அந்த நன்றிக்காக கமல் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.

மற்றப்படி என்ன ‘தகிட..த்தத்தோம்..’ போட்டாலும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடத்தை நிரம்புறது நடக்கிற காரியமா? ஆனாலும், இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் தேவிஸ்ரீ பிரசாத்தின் ‘சந்தம்’ எளிமையாக, கேட்பவரை உடனடியாக கவரும் வண்ணம் இருக்கிறது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

பார்ப்பன எதிர்ப்பா?இளையராஜா மீதான வெறுப்பா?

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`

புரட்சிக்கலைஞர் – ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’

விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பார்?

நா. விசு, சென்னை.

யாரு அவர ‘வெயிட்டா’ கவனிக்குறாங்களோ, அவுங்ககூடதான் கூட்டணி வைப்பாரு. ‘வெயிட்டா’ இருக்கிறவங்கதானே வெயிட்டா கவனிப்பாங்க.

திருவிளையாடல் படத்துல  சோமநாத பாகவதரோட தொல்லை தாங்காம, ‘இது என்ன மதுரைக்கு வந்த சோதனை…’ என்று டி.ஆர். மகாலிங்கம் புலம்புவாரு. அதுபோல்,  விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சி, ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’ என்று நம்மள புலம்ப வைச்சிட்டாரு.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

இளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்

காதலர் தினம் பற்றி?

கல்பனா, பாளையங்கோட்டை.

காதலர்களுக்கு என்று ஒரே ஒரு நாளுதானா? உண்மையான காதலர்களுக்கு ஒவ்வொருநாளும் காதலர் தினம்தான்.

இது வர்த்தக தினம்.

வர்த்தகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, பல பன்னாட்டுக் கம்பெனிகள், தங்கள் பொருட்களை விற்பதற்கு, வருடத்தில் பலநாட்களுக்கு, ‘அம்மா தினம், அப்பா தினம், நண்பர்கள் தினம்’  என்று பெயர் வைத்து, அந்த நாட்களில் பரிசுகள் வாங்கித் தருகிற பழக்கங்களை ஏற்படுத்தி, அமோகமாக வியாபாரம் செய்கிறர்கள்.

2008 ஆம் ஆண்டு காதலர் தினத்திற்கு மட்டும் 1.47 பில்லியன் டாலர்கள் வர்த்தகமாகியிருக்கிறது என்கிறது NRF Report. ஏறக்குறைய 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் காதலர்களிடம் களவாடி இருக்கிறது கம்பெனிகள்.

மொதப் பொண்டாட்டிய கழுத்த நெறிச்சு கொன்னுடடு ரெண்டாவதா ஒரு பொண்ணைக் கூட்டியாந்து வைச்சிக்கிட்டவன், அடுத்தவன் பொண்டாட்டிய கைய புடிச்சி இழுத்தவன், பெண்களை வெறும் பாலியல் பொருட்களாக நினைத்து தன் விருப்பம்போல் பல திருணமங்கள் செய்து கொள்கிறவன், ‘வயதானவன்’ என்கிற அட்வாட்வான்டேஜ எடுத்துக்கிட்டு இளம் பெண்களை தகாத முறையில் தடவுகிறவன் ; இவுனங்க எல்லாம் கூட ‘காதலர் தினம் ஒழுக்கக் கேடானதுன்னு பேசுறாய்ங்க…’ அததான் நம்பளால தாங்க முடியல.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

ஆயிரம் கோடிகளில் ஊழலும்; வடிவேலு காமெடியும்

இப்போதெல்லாம் ஆயிரம் கோடிகள், லட்சம் கோடிகளில் ஊழல் செய்ததாக சொல்கிறார்களே, அது சாத்தியமா?

சிவகுமார் தாசன், மேலூர்.

ஒரு படத்துல வடிவேலு, தன் சகாக்களுடன் அரிசி கடையில இருக்கிற தராசு, எடக்கல்லு எல்லாத்தையும் திருடிகொண்டுபோய் வித்துடுவாரு.  அததெரிஞ்சிகிட்ட, அரிசி கடக்காரரு, ‘அய்யா, அய்யாயிரம் ரூபா பெருமானமுள்ள என் தராச கொடுத்துடுங்கய்யா…’ என்று வடிவேலிடம் கெஞ்சுவாரு.

அதுக்கு வடிவேலு, ஆவேசத்துடன் தன் சகாக்களிடம்  ‘அடப்பாவிகளா… அய்யாயிரம் ரூவா பெருமானமுள்ளத வாங்கிக்கிட்டு, நமக்கு அய்நூறு ரூவா குடுத்து ஏமாத்திடாய்யா…. அந்த சேட்டு….’ என்று குமுறுவாரு…

அதுபோல், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட கட்சிகள், ‘அடப்பாவிகளா, ஆயிரம் கோடிகள், லட்சம் கோடிகள் பெருமானமுள்ளத வாங்கிட்டு,  நம்மக்கு வெறும் 50 கோடி குடுத்து ஏமாத்திட்டானுங்களே… இந்த முதலாளிகள் இதுல இவ்வளவு பணம் இருக்கா?’ என்று பொறுமிக் கொண்டு இருப்பார்கள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை-`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?

கடலூரில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு

*

‘பாரதியார் சிறு தெய்வ வழிபாட்டு முறையை, குறிப்பாக பலியிடுதலை கண்டித்திருக்கிறார்’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள்; அப்படி என்றால் பெரியார் ஈவேராவும் பலியிடுதலை, கிராம வழிபாட்டு முறையை கண்டித்திருக்கிறாரே, அவருக்கு ஒரு நியாயம்?, பாரதிக்கு ஒரு நியாயமா?

-தமிழன்

ஒரு பகுத்தறிவாளர் ‘எந்த மதங்களும் வேண்டாம்’ என்ற நிலையில்தான், இஸ்லாத்தையும் புறக்கணிக்கிறார். ஆனால், ஆர்.எஸ், எஸ் இந்து மதவெறிக் கும்பல் இஸ்லாமை எதிர்த்து, மசூதியை இடித்தார்கள்.

‘ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு மதத்திற்கு எதிரானது’ என்று மசூதி இடிப்பை ஒரு பகுத்தறிவாளன் ஆதரிக்க முடியுமா?

அதுபோல் பாரதி, கிராம தெய்வங்களின் வழிபாட்டு முறையை கண்டித்துவிட்டு, பார்ப்பன தெய்வங்களையும் அதன்  வழிபாட்டு முறையையும் பரிந்துரைக்கிறார்; பெரியார், பகுத்தறிவாளர் என்கிற முறையில் சிறு தெய்வங்களும், அவைகளை வழிபாடும் முறையும் காட்டுமிராண்டித்தனமானவை’ என்று கண்டிக்கிறார். அதை விட கூடுதலாக பார்ப்பன தெய்வங்களையும் கடுமையாக எதிர்க்கிறார்.

கேவலத்திற்கு மாற்றாக கழிசடையை பரிந்துரைக்கும் பாரதியும்; பகுத்தறிவாளராக,  மக்களின் வாழ்க்கைக்கு தீங்கு செய்கிற பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக இயங்கிய பெரியாரும் ஒன்றா?

தொடர்புடையவை:

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்

‘பெரியார்-தமிழுக்கு, தலித் மக்களுக்கு, இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை?’- அவதூறு பரப்பும் அடியார்களுக்கு…

மன்றல் அழைப்பிதழ்

டாக்டர் அம்பேத்கர் டி சர்ட்  கொண்டு வந்ததிலும், டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளி கொண்டுவருவதற்கான முயற்சிகளிலும் மிக முக்கிய பங்காற்றியவர் தோழர் லெமூரியன்.

ஜாதி எதிர்ப்பு, தமிழ்த்தேசிய அரசியலில் மிகத் தீவிர ஈடுபாடுகொண்ட தோழர் லெமூரியன் தோழர் அமலிப்பிரியாவை தன் வாழ்க்கை இணையாக ஏற்கிறார்.

இருவருக்கும்  வாழ்த்துகள்.