‘பெரியார்-தமிழுக்கு, தலித் மக்களுக்கு, இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை?’- அவதூறு பரப்பும் அடியார்களுக்கு…

ன் புத்தகங்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பான அறிமுகம் விழா நடத்துக்கிற என் அருமை அண்ணன் ராமகிருஷ்ணன் அவர்களே, போர்குரலாய் முழுங்கி முடித்திருக்கிற சீமான் அவர்களே, அண்ணன் ஆறுச்சாமி மற்றும் பெரியர் திராவிடர் கழக தோழர்களே, அனைவருக்கும் வணக்கம்.

பெரியாரோட சிறப்பு அல்லது நுட்பம் என்பது, இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லோரும் கவனிச்சிக்கிட்டிருந்த ஒரு செய்தியை அதுவரையாரும் பார்க்காத கண்ணோட்டத்தில் பார்த்தது.

அதுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், குசேலன் கதையை சொல்லலாம்.
சமீபத்தில் வந்த குசேலன் கதையில்லை. ஒரியஜனல் குசேலன்.
ரஜினியின் குசேலன் படத்தை திரையிட்ட தியேட்டர் அதிபர்களில் இருந்து, திருட்டு வி.சி.டி போட்டவர்கள்வரை எல்லாரையும் குசேலனாக மாத்திடுச்சாம் இந்த குசேலன்.

ஆனால் அந்த குசேலன், 24 குழந்தைகளை பெற்றதால் வறுமையில் வாடுகிறான். அதனால் தன் நண்பன் கண்ணனைப் பார்த்து உதவி கேட்க போகிறான். கண்ணன் அவனுக்கு உதவி செய்கிறான் என்பது கதை.
24 குழந்தைகள் என்பது வறுமையை காட்டுவதற்காக புனையப்பட்ட திரைக்கதை.

பெரியார் கேட்டார், “வருடத்திற்கு ஒரு பிள்ளை என்ற வீதம், பெற்றிருந்தாலும் நான்கு பிள்ளைகள் 20 வயதுக்கு மேல் இருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சை எடுக்கிறான் என்றால் அவன் யோக்கியதை என்ன? அவனுக்கு பிச்சை கொடுக்கிறானே அவனுடைய யோக்கியதை என்ன? பாரப்பனர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உழைத்து சாப்பிட மாட்டர்கள். என்பதற்கு இந்தக் கதையே சாட்சி”

இந்த சிந்தனை முறையை பெரியார்தான் துவக்கி வைக்கிறார். பல தமிழறிஞர்களுக்கும் ஒரு விஷயத்தை எப்படி பார்ப்பது? என்பதை பெரியார்தான் சொல்லித்தருகிறார்.
ஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை….

**

பொதுவாக பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பனரல்லாதவர்கள் மத்தியில் எப்படி இருக்குன்னா?,
ஒரு பார்ப்பனரோடு இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உறவு எப்படி இருக்கோ, அதை பொறுத்துதான் இருக்கு.
பார்ப்பனரால் தனிப்பட்ட முறையில் லாபம் அடைந்தால், நம்பள பார்த்து அவுங்க கேக்கறது;
“பாப்பான் ஒருத்தான் கெட்டவனா? மத்தவங்க எல்லாம் யோக்கியமா?’ அப்படின்னு.

பிறகு பார்ப்பனர்களோட தனிப்பட்ட முறையில் நஷ்டம் ஆயிட்டா உடனே,
“இந்த பாப்பார பசங்களையே நம்பக் கூடாது.”

இதுதான் இன்றைய பார்ப்பன எதிர்ப்பின் அடிப்படையாக இருக்கு.

ஆனால் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு இப்படி தனிப்பட்ட லாப, நஷ்டங்களை உள்ளடக்கியது கிடையாது. தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்கள் பெரியாரிடம் அளவுகடந்த அன்போடுதான் நடந்து கொண்டார்கள். அவர்களால் பெரியாருக்கு மிகப் பெரிய பதவிகளும் கிடைத்திருக்கிறது.

ஈரோடு சேர்மன் பதவியை ராஜினமா செய்து விட்டு காங்கிரசில் தந்தை பெரியார் சேரப் போகும் போது, சர்.பி. ராஜகோபால் ஆச்சாரியார் ‘ ராஜினமா பண்ண வேண்டாம்’ என்று கெஞ்சுகிறார். (ராஜாஜி அல்ல)

இதைப் பற்றி தந்தை பெரியாரே எழுதியிருக்கிறார்.,

“சர்க்கர் நடத்தையைக் கண்டித்து சேர்மன், தாலுகா போர்ட் பிரசிடெண்ட், ஜில்லா போர்ட் மெம்பர், யுத்தக் கமிட்டி கார்யதரிசி, ஹானரரி ரிக்ரூடிங் ஆபிசர் முதலிய பல கவுரவ வேலைகளை ஒரே காகிதத்தில் ராஜினமா கொடுத்தேன். ‘சுதேசமித்திரன்’, ‘ஹிந்து’ இரண்டும் தலையங்கம் எழுதி என்னைப் புகழ்ந்து பிரமாதப்படுத்திவிட்டன.

சர்.பி. ராஜகோபலாச்சாரியார், தன்னை ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வந்து, அடுத்த நாள் காலையில் சந்திக்கும்படி சென்னையிலிருந்து தந்தியனுப்பினார். அப்போது, அவரை ரயிலில் போய் பார்த்தேன். பக்கத்தில் அவரது மலையாள மனைவி இருந்தார். அந்த அம்மையாரிடம் அடிக்கடி என்னைப்பற்றி அவர் பேசுவது வழக்கம். அந்த அம்மையாரும் என்னிடம் அன்பாய் பேசுவார்கள்.
…………………………………………………………………………………………………………………………………………………………………………
அந்த அம்மையார் என்னைக் கண்டதும் அன்பாய் வவேற்று, தனக்குப் பக்கத்தில் உட்காரச் சொன்னார்; நான் உட்கார்ந்தேன். உடனே அவர் கணவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் நின்றுகொண்டார்.
அம்மையார், “நாய்க்கரே, நீங்கள் ராஜினாமா கொடுத்துவிட்டீர்களாம். நிஜமா? என்றார்.

நான் “ஆமாம்” என்றேன்.

“அது சரியல்ல, எங்கள் அய்யர் உங்களுக்கு ராவ்சாகிப் பட்டம் சிபார்சு பண்ணியிருக்கிறார்; அய்யருக்கு அவமானமாய் போய்விடும். அய்யர் ரொம்ப வருத்தப்படுகிறார். உங்களுக்கு மேலும் உத்தியோகம் கொடுக்க வேணும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் கண்டவங்க பேச்சைக் கேட்டு அப்படிச் செய்யாதீர்கள். அதை வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார்.

“செய்து போட்டேன் அம்மா. இனி, வாபஸ் வாங்கினால் எனக்கு அவமானம். ஆபீஸிலும் நான் எல்லோரிடமும் சொல்லிவிட்டேன். ஊரிலும் கலெக்டர் முதல் கேட்டும் ‘மாட்டேன்’ என்று சொல்லிவிட்டேன். இனி, எப்படி வாபஸ் வாங்குவது? மன்னிக்கவேண்டும்.” என்று கெஞ்சினேன்.

அய்யர் இதை ஜாடையாக பார்த்துக் கொண்டிருந்தார். ‘முடியவில்லை’ என்று அறிந்து, வந்து வண்டிக்குள் ஏறினார்.”

பெரியாரே தன்னுடைய சுயசரிதையில் இதை குறிப்பிட்டு இருக்கிறார்.
இது காங்கிரசில் சேருவதற்கு முன் இருந்த நிலை. காங்கிரசிலும் பெரியாருக்கு நிரம்ப முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள், பார்ப்பனர்கள்.

ஆனால் பெரியார், தன் நலம் சார்ந்து அல்ல, பொதுநலம் சார்ந்து பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்காகத்தான் பார்ப்பன எதிர்ப்பு என்கிற நிலைக்கு வருகிறார்.

ஆக பார்ப்பன எதிர்ப்பு என்பது ஒரு தத்துவம். எழுச்சிமிக்க அரசியல்.

**

பெரியார் மீது அல்லது திராவிட இயக்கத்தின் மீது சுமத்தப்படுகிற மிகப் பெரிய குற்றச்சாட்டு ‘இலக்கியத்துக்கு ஒண்ணும் செய்யல’ அப்படிங்கறது.
இது மிகப் பெரிய மோசடியான கேள்வி.

சமூக மாற்றத்திற்கு பாடுபட்ட மிகப் பெரிய தலைவரை ‘இலக்கியவாதியாக ஏன் இல்லை-?’ அப்படின்னு கேள்வி கேட்கறதும்.

வெறும் இலக்கியவாதியாக இருந்த பார்ப்பன பாரதியை ஒரு பெரிய சமூக மாற்றத்திற்கு பாடுபட்ட தலைவராக சித்தரிச்சி பிரச்சாரம் செய்யறதும் பார்பனியத்தின் நவீன வடிவம்.

எந்த பொழிப்புரைகளும் தேவையற்று மக்களிடம் நேரடியாக பேசியவர் தலைவர் பெரியார். அவர் அறிவாளிகளை, இலக்கியவாதிகளை நம்பவில்லை.

தடி தடி புத்தகங்களலோ, அதைப் படிப்பர்களாலோ சமூகத்துக்கு எந்தப் பயனும் இல்லை அப்படிங்கறது பெரியரோட எண்ணம். அதை உண்மை என்று நிரூபித்தார்கள் பெரியார் காலத்தில் வாழ்ந்த கம்பராமாயணம், பெரியபுராணம் போன்றவற்றில் கவிழ்ந்து இலக்கிய தாகம் தீர்த்துக் கொண்டிருந்த தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள்.

புரட்சிக்கு முந்தைய சோவியத்தில் ‘ஸ்னேனியெ’ என்கிற புகழ்பெற்ற பதிப்பகம் மூடப்பட்டது. மேற்கத்திய இலக்கியம், ருஷ்ய இலக்கியம், பண்பாட்டின் வரலாறு இவை பற்றியெல்லாம் நிறையப் புத்தகங்கள் கொண்டு வந்த பதிப்பகம் அது.
அந்தப் பதிப்பகம் மூடப்பட்டதில் மாக்சீம் கோர்க்கிக்கு மிகுந்த மனவருத்தம். மீண்டும் அதுபோல் ஒரு பதிப்பகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கோர்க்கிக்கு. ஸ்னேனிய பதிப்பகம் மூடப்பட்டது குறித்தும், புது பதிப்பகத்தின் தேவைக் குறித்தும் வலியுறுத்தி, தலைவர் லெனினிடம் மாக்சீம் கோர்க்கி முறையிடுகிறார். அதற்குத் தலைவர் லெனின்:

“இலக்கியத்தில் நல்ல எதார்த்தவாதியாக இருக்கிறீர்கள். மக்களைப் பற்றிய மதிப்பீட்டில் கற்பனாவாதியாக விளங்குகிறீர்கள். பருத்தப் புத்தகங்களை வெளியிட இது சமயம் அல்ல. பருத்தப் புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பவர்கள் அறிவுஜீவிகள்தாம். அவர்களோ சோஷலிசத்திலிருந்து பின்வாங்கி மிதவாதத்தை நோக்கிச் செல்வதைக் காண்கிறோம். அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்ட பாதையிலிருந்து அவர்களை நம்மால் அகற்ற முடியாது. நமக்குத் தேவையானைவை செய்திதாளும், துண்டு பிரசுரங்களும்தான்”
1925 ல் ஆரம்பித்து 1973 வரை பெரியார் – 25 பைசவிற்கு, 50 பைசாவிற்கு, ஒரு ரூபாய்க்கு, இரண்டு ரூபாய்க்கு என்று நிறைய மலிவுப் பதிப்பில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய எளிய மக்களின் உயர்வுக்காக அந்த மக்களின் மொழி நடையினிலேயே புத்தகங்களை வெளியிட்டார். குடியரசு, விடுதலை, உண்மை என்று பத்திரிகைகளை நடத்தினார். பெரியாரின் இயல்பு லெனின் சொன்னதற்கு பொருத்தமாக இருந்தது.

*’கம்பராமாயணத்தில் உள்ள அழகியலை அதிலுள்ள அறிவியல் கருத்துகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பெரியார் அதை கண்மூடித்தனமாக எதிர்த்தார்’ அப்படிங்கறது இன்னொரு இலக்கிய அவதூறு.

சமீபத்தில், என்னுடைய வலைப்பதிவுக்கு இது சம்பந்தமாக ஒரு கேள்வி;
‘மாணவர்களுக்கு கம்பராமாயணத்தில் உள்ள அறிவியல் கருத்துகளை சொல்லிக் கொடுஙகள்’ என்று பெரியார் உடன் இருந்து அரசியலுக்கு வந்த ஆர்.எம். வீரப்பன் சொல்லியிருக்கிறாரே? இதுதான் பெரியார் சீடர்களின் யோக்கியதையா?

பெரியார் உடன் நாய், பூனை எல்லாம்தான் இருந்தது. அதெல்லாம் பகுத்தறிவோடு இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதுதான் பகுத்தறிவா?
`அறிவியல் கருத்துகள் வேண்டும் என்றால் அறிவியல் நூலை படியுங்கள். மத நூல்களில் அறிவியலை தேடுவது, மலத்தில் அரிசி பொறுக்குவது போன்றது’ என்று பெரியாரே இதுபோன்ற மோசடி அறிஞர்களின் கருத்துகளை கண்டித்திருக்கிறார்.
ஆர்.எம். வீரப்பன் என்ற ‘விஞ்ஞானியின்’ ஆலோசனையை கேட்டு நீங்கள் மலத்தில் அரிசி பொறுக்குவது என்றால் போய் பொறுக்குங்கள். அதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.`என்று எழுதியருந்தேன்.

பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களான பிள்ளைமார், சைவ முதலியார், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் ஜாதிவெறியையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியையும் நியாப்படுத்திய சைவ சமயத்தையும் கந்தலாக்கியது பெரியார் இயக்கம். அதில் கோபமுற்று பெரியாரை எதிர்த்து எழுதினார்கள், சைவ சமயத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள்.

ஒருமுறை மறைமலையடிகள் – நந்தனாரை குறித்து எழுதும்போது தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி மிக மோசமான விளக்கத்தைக் கொடுக்கிறார்;

“பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போல்வதன்று. மிகவுந் தூயதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப் பெற்றதென்று சிவதருமோத்தரத்திற் பாராட்டப்பட்டதாய்ச் சிவபெருமானுக்குப் பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் ஐந்தினை கொடுப்பதாய் உள்ள ஆவினை (பசு மாட்டை) அச்சாதியர் கொன்று அவற்றின் இறைச்சியை உண்ணும் புலைத்தொழிலிற் பழகியவராவர்.
இங்ஙனம் மிகக் கொடியதான புலையொழுக்கத்திற் பயின்றது பற்றியே பறைச்சாதி ஏனை எல்லாச் சாதிகளிலும் இழிவடையலாயிற்று.”
என்று எழுதியிருந்தார்.

இதைக் கடுமையாக கண்டித்தது பெரியார் இயக்கம். பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த தமிழறிஞரான சுயமரியாதைச் சுடர் ‘கருவூர் ஈழத்து அடிகள்’ மறைமலையடிகளை கண்டித்து இப்படி எழுதியிருந்தார்:
“இதில் பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போலல்லாமல், தேவர்கள் எல்லாரும் ஒருங்கே குடியிருக்கும் இடம் பசுவின் உடம்பு என்பதை, ……….. எண்ணிப் பாராது அதனைக் கொன்று தின்னுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை அடிகளார் பறையர் மீது ஏற்றுகின்றார்.
தேவர் எனப்படுவார் யாவர் என்று அடிகளார் எடுத்துக் காட்டவில்லையாயினும், ஆரியர் வேதங்களிற் பேசப்படும் முப்பத்து முக்கோடி தேவர்களையே அடிகளார் குறிப்பிடுவதாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனென்னறால், தமிழ்நாட்டில் தேவர்கள் என்ற ஒரு பிரிவினர் இருப்பதாகக் கொள்வதற்குக் கருவியாதுமில்லை.

தமிழ்நாட்டிலுள்ள கள்ளர்-மறவர்-அகம்படியார் என்ற பிரிவிருட் சிலர் தங்களை ‘தேவர்’ என்று சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள எவரும் பசு மாட்டைத் தங்கள் குடியிருக்கும் வீடாகப் பயன்படுத்தாமல், மற்றை மக்களைப் போலவே அவர்களும் நிலத்தின மீது வீடுகள் அமைத்து அவற்றிலேயே குடியிருக்கிறார்கள். ஆதலால், அடிகளார் கூறும் தேவர்கள் ஆரியர் நூல்களிற் காணப்படும் தேவர்களையே என்பது பெறப்படும்.
முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாரும் ஒரு பசுவின் உடம்பில் இடம்பெற்றுள்ளனரா? அல்லது பகுதி பகுதியாகப் பிரிந்து ஆசியா-அய்ரோப்பா-அமெரிக்கா முதல் இந்நிலவுலகிலுள்ள பசுக்கள் எல்லாவற்றிலும் இடம் பெற்றுள்ளனாரா?

அன்றித் தனித்தனி ஒவ்வொரு பசுவிலும் இத்தனை இத்தனை தேவர் விழுக்காடு இடம்பெற்றுள்ளனர், என்று கணக்ககிடப்பட்டுள்ளதா? இங்ஙனம் பசுவின் உடம்பில் குடியிருக்குந் தேவர்கள், எந்த முறையில் அதன் கண் வாழ்கின்றனர்? அவர்களுக்கு உணவு எப்படி கிடைக்கிறது? அவர்களின் படுக்கையறை முதலியன எந்த முறையில் பசுக்களின் உடம்பில் அமைந்துள்ளன? என்பன போன்ற அய்யப்பாடுகள் எம்மால் தெளிந்து அறியுமாறில்லை.
இவற்றை அக்கதையை நம்பும் அடிகளார் போன்றோர் விளக்குதல் நலம்.
“பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் அய்ந்துஞ் சிவனுக்குப் பயன்டுவதாக ஆராய்ச்சி அறிவு நிரம்பிய அடிகளாரே ஒப்புக் கொள்கிறார் என்றால், அதைக் கண்டு நாம் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. கோயில்களிற் காணப்படும் சிவ வடிவம், கல் செம்பு முதலியவற்றால் அமைக்கப்பெற்ற வடிவங்களேயாதலால், அவை, அவற்றை சாப்பிடுகின்றன எனறு சொல்லுதற்கில்லை.

ஒரு வேளை சிவனை வழிபடும் அடியவர்களின் அன்பு வலையிற் சிக்கிப் பால் முதலான பொருட்களைச் சாப்பிடும் வடிவத்தை உடையவராகி, அவற்றைச் சாப்பிட்டு அடியவர்களை மகிழ்விக்கிறார் சிவன் என்று வைத்துக் கொண்டாலும்,
பால், தயிர், நெய் என்னும் மூன்றையுஞ் சாப்படுவரேயன்றி சிறிநீரையுஞ் சாணியையும், அடியவர்கள் எவ்வளவு அன்பு காட்டிக் கொடுத்தாலும் அவற்றைச் சாப்பிடுவாரா? சாப்பிடத்தான் முடியுமா?”

“தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டுச் சேரிப்புறங்களிலும் மலைப்புறங்களிலும் வாழ்ந்துவரும் ஏழைத் தமிழ்மக்கள் எல்லாரும், இந்து மதக் கோட்பாட்டுக்கு மாறாகக் கல்வி கற்க முயன்றவர்களும்-வேதங்களைப் படிக்கவும் கேட்கவும் முயன்றவர்களும்-பார்ப்பனர்களை மதியாது நடந்தவர்களும்- இந்துமதக் கடவுளரை வழிபட மறுத்தவர்களும ஆன வீரத் தமிழ்ப் பெருமக்களே”

என்று பதில் எழுதினார் கரூவூர் ஈழத்து அடிகள்.

சைவசமயத்தை நோக்கி பெரியாரும், பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்று வெறும் அவதூறுகளையும் சவடால்களையுமே அள்ளி வீசினார்கள் சைவப் பழங்கள்.
‘தாங்கள் உயர்ஜாதிக்காரர்கள்’ என்று அவர்கள் எவ்வளவு முக்கினாலும், ‘பார்ப்பனர்களுக்கு இவர்கள் சூத்திரர்கள்தான்’ என்கிற உண்மையை அவர்களுக்கு உணர்த்தியவர் பெரியார்.

வயித்து வலி தாங்காமல் மதம் மாறுன, வயதுல மூத்த திருநாவுக்கரசரை விட சின்னப் பையன் ஞானசம்பந்தனை, ‘பெரிய கில்லாடி’ என்று அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளதே, அவர்களின் சூத்திர மனோபாவத்துக்கு சாட்சி, என்று நிறுவயது பெரியார் இயக்கம்.

காதலாகிக் கசிந்து கண்ணீர்
மல்கி ஓதுவார் தமை
நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்
பொருளாவது நாதன்
நாமம் நமச்சிவாய வே.

என்று ரொம்ப நல்லவன் மாதிரி தேவாரம் பாடியிருக்கானே பார்ப்பனப் பிஞ்சு ஞானசம்பந்தன், அவன் நாத்திகர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக பாடியிருக்கிறான் தெரியுமா?
இதோ தந்தை பெரியார் சொல்கிறார்:
“சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் – பக்தனாம் அந்த அயோக்கியப் பயல்! அவன் சொல்லி இருக்கிறான், ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டே யெல்லாம் நான் படுக்கணும்’ என்று; கடவுளைக் கேட்கிறான்: ‘இசைத்துவை’ என்று”
இப்படி பெரியார் காறிதுப்புகிற, இந்த ஞானசம்பந்தனைத்தான் சைவக் கூட்டம் ‘குழந்தை’ என்கிறது.
நாத்திகர்களின் ஜென்ம விரோதிகள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்தான். சைவ சமயத்தை பற்றி தந்தை பெரியார் தன்னுடைய இறுதி சொற்பொழிவில்,
“சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சிவன் சொத்து குலநாசம் என்பது மக்கள் நம்பிக்கை. ஆனால் சிவன் சொத்து தன் சொத்து என்பது தீட்சிதர்கள், ஆதினங்களின் வாழ்க்கை. அதனால்தான், சிதம்பரம் கோயிலில் பெரியவர் ஆறுமுகசாமி தேவாரம் பாட போன போது, அவருக்கு ஆதரவு தராமல் அமைதிகாத்தார்கள் தேவாரம், திருவாசக்தை தன் உயிர் மூச்சாகக் கொண்ட ஆதினங்கள்.

ஆதினங்களின் இந்த பேரமைதிக்கு பின் இருக்கிறது, பேரிரைச்சல் கொண்ட ஒரு அரசியல். பகிரங்கமாக தெரிகிற அந்த ரகசிய அரசியல் இதுதான், ஆதினங்களாக வரவேண்டும் என்றால், சைவப் பிள்ளையாகவோ, அல்லது சைவ முதலியாராகவோ இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரர்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் நம் சிவனடியார் ஆறுமுகசாமியோ, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இன்று அவரை வைத்து சிற்றம்பல மேடையில் பாடச் சொல்வார்கள். பிறகு கருவரைக்குள் நுழைந்து தமிழ் பாட வைப்பார்கள். அதன்பிறகு,
“அண்ணாச்சி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி ஒக்காருங்க. நம்ம ஆளு கொஞ்சம் அதுல ஒக்காரட்டும்” என்று ஆதினங்கள் பதிவிக்கும் பங்கு கேட்பார்கள், என்கிற முன்எச்சரிக்கை உணர்வுதான், ஆதினங்களின் மவுனத்திற்கு காரணம்.

‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.

பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த, தமிழறிஞரான ‘கருவூர் ஈழத்து அடிகள்’ 1941 ல் ‘பெரிய புராண ஆராய்ச்சி’ என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

‘தேவாரம், திருவாசகம் பாடிய நால்வர் காலத்தில் ஒழிக்கப்பட்ட சமண சமயம், அநபாய சோழன் காலத்தில் மீண்டும் தலைதூக்கியது.
சமண சமயத்தின் தாக்கத்தால் கவரப்பட்ட அநபாய சோழன், ‘சீவக சிந்தாமணி’ என்ற சமண மத நூலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கண்டு அஞ்சிய பார்ப்பனர்கள், சேக்கிழர் முதலியாரை தங்கள் கைகூலியாக பயன்படுத்தி, பெரியபுராணத்தை எழுத வைத்து பார்ப்பனியத்தையும் சைவசமயத்தையும் மீட்டுக் கொண்டார்கள் என்று நிறுவி இருக்கிறார், அந்த நூலில் கருவூர் ஈழத்து அடிகள்.

பெரியபுராணம் எப்படி பொய்யும், பார்ப்பனத் தன்மையுமாய் நிரம்பி இருக்கிறது என்பதை அதன் முரண்டுபாடுகளில் இருந்தே அம்பலப்படுத்தி இருக்கிறார்.
அவரின் கேள்விகளுக்கு இன்றுவரை எந்த சமய தமிழறிஞனும் பதில் சொல்லவில்லை.

சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்த தமிழறிஞர்களை ஒருபுறமும்,
தமிழை அதன் வராலாற்று போக்கில் புரிந்து கொண்ட பெரியார் இயக்த்தைச் சேர்ந்த, தமிழறிஞர் கருவூர் ஈழத்து அடிகளை மறுபுறமும் நிறுத்தினால், அவரின் கால்தூசுக்குக் கூட பெறமாட்டார்கள் சமய சார்பு கொண்ட தமிழறிஞர்கள். பெரியாரின் இந்த மேடையில் இருந்து சைவ சமயத்தைச் சார்ந்த தமிழறிஞர்களை பார்த்து சவாலாகக் கேட்கிறேன், குறிப்பாக தன்னைத் தானே தமிழ்க்கடல் என்று சொல்லிக் கொள்கிற நெல்லை கண்ணனை பார்த்துக் கேட்கிறேன்,

பெரியபுராணம் குறித்த ஈழத்துக் அடிகளின் கேள்விகளுக்கு எதாவது ஒரு கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு, அதன் பிறகு உன் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்.

மதவாதிகள்,வெறுமனே இலக்கியவாதிகள், முதலாளித்துவ கலைஞர்கள் – முற்போக்காளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்கள் போய் ஒளிந்து கொள்கிற இடம் – கலை வடிவம், அழகியல்.
இந்த அழகியல் மதவாதிகளின் அல்லது முதலாளிகளின் கலைவடிவத்தை விட முற்போக்காளர்களின் கலைவடிவத்தில்தான் அதிகம் இருக்கு.

உலகளவில், சோவியத் இயக்குனர் ஐஸன்ஸைடனிடம் இருந்து களவாடியதுதான் ஹாலிவுட் படங்களுக்கான இன்றைய நவீன வடிவம். 80 ஆண்டுகளுக்கு முன்னால் புரட்சியை விளக்கி அவர் எடுத்த, ‘பொட்டம்கின், அக்டோபர்‘ போன்ற படங்கள் போட்ட பிச்சைதான் இன்று வரை ஹாலிவுட் படங்களுக்கான வடிவம்.

முற்போக்காளர்கள் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவத்தை தீர்மானிக்கிறர்கள். பிற்போக்காளர்கள் மிக மட்டமான விஷயத்தைக் கூட நேர்த்தியான வடிவத்தில் தருகிறார்கள்.
தங்கத் தட்டில் வைத்து தரப்படுகிறது என்பதற்காக மலத்தை தின்ன முடியுமா?
‘தின்ன முடியும்’ என்கிறார்கள், கம்பராமாயண அபிமானிகள்.
பெரியார் கம்பராமாயணத்தை எதிர்த்தற்குக் காரணம், ‘மலத்தை தின்னாதீர்கள்’ என்பதற்காகத்தான்.

**

ஒரு முறை நான் டைரக்டர் மகேந்திரன் வீட்டுக்கு போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ கமராஜர் படபப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரகடர் மகேந்திரன் அறிமுகப் படுத்திவைத்தார்.

உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, “பெரியாரா யார் நடிக்கிறாங்க?”
அதுக்கு பாலகிருஷ்ணன், “படத்துல பெரியார் கேரக்டரே இல்ல” என்றார். நான் பதட்டமாயிட்டேன்.

“காமராஜரின் சிறப்பே பெரியாரின் பாதிப்புதான். பெரியாரின் தாக்கம் இல்லேன்னா… கிராமப்புற பள்ளிக்கூடம் வந்திருக்காது. நம்ம கல்வி இன்னும் தள்ளிப் போயிருக்கும்.” என்று சொன்னேன்.

அதுக்கு பாலகிருஷ்ணன்,
“விட்டா நீங்க பெரியாரை காமராஜரை விட பெரிய தலைவர்ன்னு சொல்லுவிங்க போல.” என்றார்.

அதுக்கு மேலே அவருக்கூட விவாதிக்க விருப்பம் இல்லாமல் அமைதியாயிட்டேன். ஆனால் ‘காமராஜர்’ படம் வந்தபோது திரையில் பெரியார் இருந்தார். முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு.

காமராஜர் – ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக கொண்டுவந்த, கிராமப் புற பள்ளிக்கூடம் திட்டத்தை இருட்டடிப்பு செய்து, பார்ப்பனர்கள் திரும்ப, திரும்ப காமராஜரின் சிறப்பாக சொல்வது அவருடைய எளிமையை மட்டும்தான்.

காமராஜரை பார்ப்பனப் பத்திரிகைகள் புகழ்வது அவர் மேல் கொண்டு அன்பினால் அல்ல. காமராஜரை – அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களை மட்டம் தட்டுதற்கான ஒரு குறியீடாக பயன்படுத்துவதற்காகத்தான்.

ஆனால் காமராஜரின் சிறப்பு பெரியாரின் ஆலோசனையோடு, அவர் ராஜாஜியை எதிர்த்து அரசியல் பண்ணியதுதான். அதை பார்ப்பனப் பத்திரிகைகள் ஒரு போதும் சொல்வதில்லை. பெரியாரையும் காமராஜரையும் இணைத்து பார்ப்பனர்கள் எப்போதும் எழுதுவதே கிடையாது.

தன் கடைசிகாலம் வரை தீவிரமாக தேசியத்தை வலியுறுத்திய காமராஜரை ஆதரிக்கிற தமிழ் தேசியவாதிகள்கூட, பார்ப்பனர்கள் ஆதரிக்கிற தொனியில்தான் காமராஜரை ஆதரிக்கிறார்கள். அதனால்தான் திராவிட இயக்க எதிர்ப்பு குறியீடாக ஒரு பொதுக்கருத்தைப் போல, “காமராஜர் போல ஒரு முதலமைச்சரை இனி பார்க்க முடியாது” என்று சொல்கிறார்கள்.

காமராஜர் ஆட்சி வரமுடியாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் ஒரு போதும் ராஜாஜி ஆட்சி மட்டும் திரும்ப வந்துடக் கூடாது. போயஸ் தோட்டத்து ‘பொம்பள ராஜாஜி’யையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

எளிமையாகவும் நேர்மையாகவும் ஒருவர் இருந்தால் மட்டும் போதாது. அந்த எளிமையும், நேர்மையும் யார் பொருட்டு இருக்கிறது என்பதுதான் அதன் சிறப்பு. இந்தியாவிலேயே மிக எளிமையான அமைச்சராக இருந்தவர் என்று, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிரூபன் சக்கரவர்த்தியை சொல்லுவார்கள்.

இன்றைக்கும் கூட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் பஸ்ல போறதா சொல்றாங்க. பஸ்ல போறது பெரிய விஷயமல்ல. எங்க போறங்க அப்படிங்கறதுதான் முக்கியம். பஸ் ஏறி ‘போயஸ் தோட்டத்துக்கு’ போறதுனால சமூகத்துக்கு என்ன பயன்?

ஒரு கம்யூனிஸ்ட் எளிமையாக இருப்பது அதிசயம் அல்ல. அவர் அப்படித்தான் இருக்க வேண்டும். அதை ஒரு செய்தியாக சொல்லிக் காட்டுவதுதான் ஆபாசம். ஆனால் ஒரு காங்கிரஸ்காரர் எளிமையாக இருப்பது சாதாரணமல்ல. அப்படிப் பார்த்தால் இந்தியாவிலேயே மிகவும் எளிமையான, நேர்மையான மந்தரி என்றால் அது கக்கன் அவர்களைதான் சொல்லமுடியும்.

ஆனால் அவருடைய எளிமையும், நேர்மையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை.

செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன், ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தான். அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை.

தான் கொண்ட கொள்கைக்காக தன்னையே தியாகம் செய்வது பெரிய விஷயம்தான். ஆனால் அந்த உயிர் ஆதிக்கத்திற்கு ஆதரவாக போகிறதா? இல்லை ஆதிக்கத்திற்கு எதிராக போகிறதா? என்பதின் பொருட்டே அந்தத் தியாகம் மதிக்கப்படுகிறது.

கோட்சேக் கூட தான் கொண்ட கொள்கைக்காக தூக்கில் தொங்கினான்.
ஆனால் பகத்சிங்தான் நமக்கு மாவீரன். அவர் தியாகம்தான் நாம் பின்பற்றுவதற்குரியது.

ஆக, காமராஜர் வெறும் எளிமையாகவும், நேர்மையாகவும் மட்டும் இருந்து, பெரியாரின் தாக்கம் இல்லாமல் இருந்திருந்தால், அவர் சத்தியமூர்த்தி என்கிற பார்ப்பனரின் சீடராக இருந்து மறைந்திருப்பார். நமது நினைவுளிலும் இருந்திருக்க மாட்டார்.

அதேபோல், அண்ணா முதல்வராக இருந்தார் என்பது சிறப்பல்ல. அவர் பெரியாரோடு இருந்தார் என்பதுதான் அவருக்கான சிறப்பு. பெரியாருக்கு எதிராக தீவிரமாக இயங்கிய மிக மோசமான முதலமைச்சரான பக்தவச்சலத்தை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்குக்கூட அவருடை ஞாபகம் கிடையாது.

கடைசியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.
இன்றைய சூழலில் பெரியார்-அம்பேத்கரின் பாதிப்பு இல்லாமல் ஒரு முற்போக்கு இயக்கம் தமிழகத்தில், இந்தியாவில் இருக்க முடியாது. இவர்கள் இருவரையும் தவிர்த்து முற்போக்காளர்களாக தன்னை காட்டிக் கொண்டால், அவர்கள் ஏதோ ஒரு வகையில் பார்ப்பனியத்திற்கு வால் பிடிப்பவர்களாக இருப்பார்கள்.

பார்ப்பனியம் என்பது இந்து மத சடங்குகளை கடைப்பிடிப்பது மட்டுமல்ல. ஜாதிய கண்ணோட்டமும், சுயஜாதி அபிமானமும்கூட பார்ப்பனியம்தான். இந்து மதமே ஜாதியாகத்தான் இருக்கிறது.

ஆக, சுயஜாதி அபிமானத்தோடோ, கிறிஸ்த்தவர், இஸ்லாமியர் என்கிற மத உணர்வோடோ – இந்து மதத்தை பார்ப்பனியத்தை எதிர்கொள்ள முடியாது. இந்த உணர்வுகள் எதிராகவே பதிவானால் கூட, அது பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வளர்க்கவே உதவும்.

பார்ப்பனியத்தை, இந்து மதத்தை வீழ்ந்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி பெரியாரின் பகுத்தறிவு பாதைதான்.

நன்றி, வணக்கம்.

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2008/10/collage.jpg?w=1170

(24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் நான் பேசியதின் முழுப் பகுதி.)

விழா நிழற்படங்கள் நண்பன் ந. வெங்கட்ராமன். (கோவை)

தொடர்புடையவை:

பெரியாரின் ஊழல்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்

ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்

இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக்கூடாது…

சிதம்பர ரகசியம் அம்பலமானது

5 thoughts on “‘பெரியார்-தமிழுக்கு, தலித் மக்களுக்கு, இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை?’- அவதூறு பரப்பும் அடியார்களுக்கு…

  1. //ஒருமுறை மறைமலையடிகள் – நந்தனாரை குறித்து எழுதும்போது தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி மிக மோசமான விளக்கத்தைக் கொடுக்கிறார்;

    “பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போல்வதன்று. மிகவுந் தூயதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப் பெற்றதென்று சிவதருமோத்தரத்திற் பாராட்டப்பட்டதாய்ச் சிவபெருமானுக்குப் பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் ஐந்தினை கொடுப்பதாய் உள்ள ஆவினை (பசு மாட்டை) அச்சாதியர் கொன்று அவற்றின் இறைச்சியை உண்ணும் புலைத்தொழிலிற் பழகியவராவர்.

    இங்ஙனம் மிகக் கொடியதான புலையொழுக்கத்திற் பயின்றது பற்றியே பறைச்சாதி ஏனை எல்லாச் சாதிகளிலும் இழிவடையலாயிற்று.” என்று எழுதியிருந்தார்//

    ஓ! இப்படியெல்லாம் கூட இந்த நாயி விளக்கம் கொடுத்திருந்தானா?

    மண்ணின் மைந்தர்களான பறையர்கள் காலாகாலமாக தங்கள் குலத்தொழிலுக்காக மாட்டுதோலை பயன்படுத்தி வந்தார்கள். இதில், நேற்று வந்த நாடோடி ஆக்கிரமிப்பு பாப்பார பன்னாடைகள் அவர்களை ஒதுக்கியும் வஞ்சித்தும் பகல் கொலை செய்ததை இதுபோன்ற மறைமலை மடையன் சரிகட்டி பேசியது சுத்த கேவலம்.

    //செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன், ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தான். அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை.//

    “செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன்” என்ற இந்த பதத்தைவிட “செத்து ஒழிஞ்சி போன சங்கராச்சாரி சந்திரசேகரன்” என்ற இதை பயன்படுத்தி இருந்தால் இன்னும் மேல்.

    இந்து மதமும் அதன் சாக்கடை நாத்தமும் சகிக்கல. தருதலைங்க எப்பதான் ஒழியுவானுங்களோ?

    பாப்பார பன்னாடைகளின் பகல்கொலைகளுக்கு துணை நின்ற ஏனைய ஒசத்தி சாதி தமிழ் கம்மனாட்டிகளை சாடிப்பேச மறந்துடாதிங்க மதிமாறன். இவனுங்க ஒத்துழைப்பு இல்லைன்னா, பன்னாடைகளால் தமிழ்நாட்டுல எதுவுமே சாதித்திருக்கவும் முடியாது, சாகடித்து இருக்கவும் முடியாது. காலம் மாறிய இன்றைய நாட்களில் பசுத்தோல் போர்த்திய புலி போல் இவனுங்க வாழ்ந்து வர்ரானுங்க.

    ஆனாலும் ஒன்னு மட்டும் சொல்லிடுவேன், பெரியார் இல்லைன்னா இன்றைய தமிழ்நாடே இல்லை, தமிழரும் இல்ல, தமிழும் இல்லை.

    பெரியார்தான் உண்மையான ‘கிங் மேக்கர்’.

    பெரியாருக்கு அப்புறம் தமிழ்நாட்டுல மட்டும் இல்ல முழு இந்தியாவிலேயும் எவனுக்கு ‘அது’ கெளம்புனதே இல்ல. இந்தியாவுல பொறந்த ஒரே உண்மையான ஆம்புள அந்த கெழவருதான். மத்தவனுங்க எல்லாரும் சும்மா ஆம்புள மாதிரி வேசம் கட்டி மக்கள ஏமாத்தரவனுங்க.

    தமிழர் சமுதாயத்திற்கு தேவையான கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading