பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?
கடலூரில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு
*
‘பாரதியார் சிறு தெய்வ வழிபாட்டு முறையை, குறிப்பாக பலியிடுதலை கண்டித்திருக்கிறார்’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள்; அப்படி என்றால் பெரியார் ஈவேராவும் பலியிடுதலை, கிராம வழிபாட்டு முறையை கண்டித்திருக்கிறாரே, அவருக்கு ஒரு நியாயம்?, பாரதிக்கு ஒரு நியாயமா?
-தமிழன்
ஒரு பகுத்தறிவாளர் ‘எந்த மதங்களும் வேண்டாம்’ என்ற நிலையில்தான், இஸ்லாத்தையும் புறக்கணிக்கிறார். ஆனால், ஆர்.எஸ், எஸ் இந்து மதவெறிக் கும்பல் இஸ்லாமை எதிர்த்து, மசூதியை இடித்தார்கள்.
‘ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு மதத்திற்கு எதிரானது’ என்று மசூதி இடிப்பை ஒரு பகுத்தறிவாளன் ஆதரிக்க முடியுமா?
அதுபோல் பாரதி, கிராம தெய்வங்களின் வழிபாட்டு முறையை கண்டித்துவிட்டு, பார்ப்பன தெய்வங்களையும் அதன் வழிபாட்டு முறையையும் பரிந்துரைக்கிறார்; பெரியார், பகுத்தறிவாளர் என்கிற முறையில் சிறு தெய்வங்களும், அவைகளை வழிபாடும் முறையும் காட்டுமிராண்டித்தனமானவை’ என்று கண்டிக்கிறார். அதை விட கூடுதலாக பார்ப்பன தெய்வங்களையும் கடுமையாக எதிர்க்கிறார்.
கேவலத்திற்கு மாற்றாக கழிசடையை பரிந்துரைக்கும் பாரதியும்; பகுத்தறிவாளராக, மக்களின் வாழ்க்கைக்கு தீங்கு செய்கிற பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக இயங்கிய பெரியாரும் ஒன்றா?
தொடர்புடையவை:
சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
=====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <===
.
Well Said
பெரியார் கண்டிப்பா பெரிய ஆள்தான். பின்ன இந்து மதத்தின் அறுவெறுக்கும் சாதிய கீழ்மையை போக்க இஸ்லாத்துக்கு மதமாறலாம் என்று பறிந்துரைத்தவராயிற்றே!
i love it
யாரும் 100 சதவீதம் குறையற்ற மனிதர்கள் இல்லை. அவர்களின் சிறு சிறு குறைகளை பூதகண்ணாடி போட்டு நாம் பார்த்தோமானால்.. நமக்கு எதோ மனநோய் உள்ளது என்று அர்த்தம். மன சாட்சி இருந்தால் உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள் நீங்கள் 100 க்கு 100 சரியான மனிதரா என்று… நீங்கள் தூக்கி கொண்டாடும் பெரியார் கூட…. பெண் அடிமைதனத்திற்க்கு எதிராக குரல் கொடுத்துவிட்டு.. பெண் அடிமை தனத்தை.. அடிப்படையாக கொண்ட இஸ்ஸாம் மதத்திற்க்கு மாறினால்.. ஒரே நாளில் ஜாதி ஒழிந்து விடும் என்று சொன்னவர் ஆயிற்றே.. ஒரு பக்கம் இந்து மத எதிர்ப்பு மறுபக்கம் இஸ்ஸாம் ஆதரவு… முரண் பாடாக தெரிவில்லையா….
பொது இடங்களில் செருப்புகள் அணிந்து சென்றால் தண்டம் விதித்து, தொட்டால் தீட்டு, மார்பை மறைக்க எதிர்ப்பு, இன்னும் இன்னும் … இருந்த அந்த காலத்தில் அய்யர் இனத்தில் பிறந்து.. தனது ஜாதிக்கு எதிராகவே குரல் கொடுத்தவர், அவரும் 10தோடு 11ஆக அமைதியாக இருந்திருந்தால் உன்போன்றவர்களின் இழிசொல்லுக்கு பழியாகமல் இருந்திருப்பார்…