புரட்சிக்கலைஞர் – ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’
விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பார்?
–நா. விசு, சென்னை.
யாரு அவர ‘வெயிட்டா’ கவனிக்குறாங்களோ, அவுங்ககூடதான் கூட்டணி வைப்பாரு. ‘வெயிட்டா’ இருக்கிறவங்கதானே வெயிட்டா கவனிப்பாங்க.
திருவிளையாடல் படத்துல சோமநாத பாகவதரோட தொல்லை தாங்காம, ‘இது என்ன மதுரைக்கு வந்த சோதனை…’ என்று டி.ஆர். மகாலிங்கம் புலம்புவாரு. அதுபோல், விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சி, ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’ என்று நம்மள புலம்ப வைச்சிட்டாரு.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்
‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’
Vijayakanth is lot better than other politicians currently in TN!
ஆமா விசயகாந்த் ரொம்ப நல்லவருதான்! ஈழத்தமிழர்களைக் கொல்வதற்கு இந்திய அரசு மறைமுகமா கொடுக்குற படைக் கருவிகளும் பயிற்சிகளும் போதாதுன்னு பகிரங்கமாகவே போர்க் கருவிகள் (ஆயுதங்கள்) கொடுக்கணும்னு டெல்லியிலேயே நின்னு சொல்லி தமிழன் வயித்துல ஆசிட்ட வார்த்தவரு! மட்டுமா.. குடிகாரப் பய, குடிச்சிகிட்டேதான் சட்டமன்றத்துக்கு வாராருன்னு சொன்னதுக்கு, அமாமா அவுங்கதான் ஊத்திக் குடுத்தாங்க எனக்கு.. அப்படி இலாவணி பாடுனவங்ககூடயே சீட் பேரம் பேசுறாரு இப்ப! அரசியல் இயக்கம் ஆரம்பிச்ச உடனே முதல் அழைப்பிதழ அவுங்க தெலுங்கு நாட்டு கடவுள் பெருமாளத் தேடி திருப்பதிக்குப் போய் நேரடியா பெருமாள் கையில குடுக்காத குறையா குடுத்துட்டு வந்தாரு. எங்க தமிழ்நாட்டு சாமியெல்லாம் சர்வீசு கமிசன் தேர்வுல தோத்து போயிட்டத எப்படித்தான் தெரிஞ்சிகிட்டாரோ! கொஞ்சநாள் முன்னாடி வரையும் மக்களூடனும் கடவுளுடனும் தான் கூட்டணின்னு இருபதாம் நூற்றாண்டிலேந்து பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னோட்டு பொய் நூறு ஆண்டுக்கு முன்னாடி வாழுற, மூட நம்பிக்கை சாக்கடையில புரள்ற எதுவோ ஒன்னுன்னு தான் இந்த ஆளச் சொல்லணும்! இது மட்டுமா இந்த ஆளோட வண்ட வாளத்தப் பத்தி சொல்லணும்னா சொல்லிகிட்டேயிருக்கலாம்! அவ்வளவு மடத்தனமும், நடிப்புகளூம்! பேசாம ஆந்திராவுல போய் இயக்கத்த ஆரம்பிக்க வேண்டியதுதானே? எங்க தமிழ் நாட்டுல வந்து எங்க தாலிய ஏன் அறுக்கணும் இதுக? அடடா… தமிழ் நாட்டுல வந்து பொறக்குறவன் தொல்ல தாங்க முடியல்லப்பா…!
நண்பர் மதிமாறனின் பதில் விசயகாந்த் கொள்கை மேல விழுந்த செருப்படியாதான் தோணுது,
வாழ்த்துகள் மதிமாறன்! காசிமேடு மன்னாரு.789வேர்டுபிரஸ்.காம்.