காதலர் தின வர்த்தகம்-விஜயகாந்த்-கமல்ஹாசன்-கிரிக்கெட்-தமிழ்சினிமாவின் ஆதிக்கஜாதி உணர்வு
தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர்கள் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில்களின் முழு தொகுப்பு
விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பார்?
–நா. விசு, சென்னை.
யாரு அவர ‘வெயிட்டா’ கவனிக்குறாங்களோ, அவுங்ககூடதான் கூட்டணி வைப்பாரு. ‘வெயிட்டா’ இருக்கிறவங்கதானே வெயிட்டா கவனிப்பாங்க.
திருவிளையாடல் படத்துல சோமநாத பாகவதரோட தொல்லை தாங்காம, ‘இது என்ன மதுரைக்கு வந்த சோதனை…’ என்று டி.ஆர். மகாலிங்கம் புலம்புவாரு. அதுபோல், விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சி, ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’ என்று நம்மள புலம்ப வைச்சிட்டாரு.
காதலர் தினம் பற்றி?
–கல்பனா, பாளையங்கோட்டை.
காதலர்களுக்கு என்று ஒரே ஒரு நாளுதானா? உண்மையான காதலர்களுக்கு ஒவ்வொருநாளும் காதலர் தினம்தான்.
இது வர்த்தக தினம்.
வர்த்தகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, பல பன்னாட்டுக் கம்பெனிகள், தங்கள் பொருட்களை விற்பதற்கு, வருடத்தில் பலநாட்களுக்கு, ‘அம்மா தினம், அப்பா தினம், நண்பர்கள் தினம்’ என்று பெயர் வைத்து, அந்த நாட்களில் பரிசுகள் வாங்கித் தருகிற பழக்கங்களை ஏற்படுத்தி, அமோகமாக வியாபாரம் செய்கிறர்கள்.
2008 ஆம் ஆண்டு காதலர் தினத்திற்கு மட்டும் 1.47 பில்லியன் டாலர்கள் வர்த்தகமாகியிருக்கிறது என்கிறது NRF Report. ஏறக்குறைய 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் காதலர்களிடம் களவாடி இருக்கிறது கம்பெனிகள்.
மொதப் பொண்டாட்டிய கழுத்த நெறிச்சு கொன்னுடடு ரெண்டாவதா ஒரு பொண்ணைக் கூட்டியாந்து வைச்சிக்கிட்டவன், அடுத்தவன் பொண்டாட்டிய கைய புடிச்சி இழுத்தவன், பெண்களை வெறும் பாலியல் பொருட்களாக நினைத்து தன் விருப்பம்போல் பல திருணமங்கள் செய்து கொள்கிறவன், ‘வயதானவன்’ என்கிற அட்வாட்வான்டேஜ எடுத்துக்கிட்டு இளம் பெண்களை தகாத முறையில் தடவுகிறவன் ; இவுனங்க எல்லாம் கூட ‘காதலர் தினம் ஒழுக்கக் கேடானதுன்னு பேசுறாய்ங்க…’ அததான் நம்பளால தாங்க முடியல.
உலகக்கோப்பை கிரிக்கெட்டின் துவக்க விழா மிக பிரம்மாண்டமாக பங்களாதேசில் நடைபெற்றது
‘பாதிநாள் பட்டினி, மீதி நாள் ஒருவேளை’ என்று வாழுகிற பரிதாபத்திற்குரிய நாடு பங்களாதேஷ். இந்தியாவையே பணக்கார நாடாக பார்க்கும் பங்களாதேசுக்கு இது தேவையா?
இந்த வெட்டி வேலைக்காக தலைநகர் டாக்காவை சுத்தப்படுத்த 100 மில்லியன் டாலர் பணத்தைச் செலவிட்டிருக்கிறது பங்களாதேஷ் அரசு. சுத்தப்படுத்துவது என்பது நகரை பெருக்குவது மட்டுமல்ல; நகரத்திலிருந்தே, மனிதர்களையும் பெருக்கித் தள்ளுவது.
பல்வேறு நாடுகளில் இருந்து வந்து குவியும் கிரிக்கெட் சூதாடிகளுக்காகவும், ஊதாரிகளுக்காகவும் சொந்தநாட்டு மக்களையே குப்பைகளைப் போல் பெருக்கி தள்ளியிருக்கிறது பங்களாதேஷ் அரசு.
சாலையோரத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளர்களை, நகரத்திலிருந்து விரட்டியடித்திருக்கிறது. பிச்சைக்காரர்கள் பணம் கொடுத்து வீதிகளில் இருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். நடைபாதை வியாபாரிகளும் நகரத்தில் இருந்து அப்புறப்படுதப்பட்டிருக்கிறார்கள்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா:
“கிரிக்கெட் போட்டியானது நாட்டின் 14 கோடியே 60 இலட்சம் மக்களுக்கு கவுரவத்தை பெற்றுத்தரும்” என்று பெருமை பொங்க பேசியிருக்கிறார்.
கரகாட்டக்காரன் படத்தில், ‘தன்னை புகழ்ந்துபேசும்படி’ ஒருவருக்கு பணம் கொடுத்த செந்திலைப் பார்த்து கவுண்டமணி,“நீ வாங்குற அஞ்சுக்கும், பத்துக்கும் இதெல்லாம் உனக்கு தேவையா?” என்பார். ஹசீனாவின் பேச்சு அதை நினைவூட்டுகிறது.
பெற்றோர்களை தனியாக தவிக்கவிடடு முறையான மருத்துவ உதவி செய்யாமல், அவர்கள் இறந்த பிறகு ‘பெருமைக்காக’ காரியத்தை விசேசமா நடத்துற ஊதாரி மகன்களைப்போல், பங்களாதேஷ் அரசு நடந்துகொண்டிருக்கிறது.
இஸ்லாமிய நாடோ, கிறிஸ்துவ நாடோ, இந்து நாடோ எந்த நாடாக இருந்தாலும் சொந்த நாட்டு எளிய மக்களை சுரண்டுவதில் ஒரே சிந்தனை உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
கும்பகோணத்திலிருந்து சித்தார்த் என்பவர், தங்கம் இதழில்,
‘உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா கோப்பையை வெல்லுமா? என்று கேட்டிருந்தார்; அதற்கு நான் இப்படி பதில் எழுதினேன்,
‘பேரம் பேசிக்கிட்டு இருக்கிறாங்க, விலை படிஞ்சா வாங்கிட வேண்டியதுதான்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடத்தை தேவிஸ்ரீ பிரசாத் நிரப்புவார் என்று கமல்ஹாசன் பேசியுள்ளாரே?
–டி. பிட்டர், பொன்னேரி.
அது கமல்ஹாசனின் விரும்பமாக இருக்கலாம். ஆனால் அதை தேவிஸ்ரீ பிரசாத்தே நம்ப மாட்டார். எல்லோரும் கமலை ‘உலக நாயகன்’னு சொல்றதுபோல ‘இது சும்மா தமாசு’ என்று என்று நினைத்திருப்பார் தேவிஸ்ரீ.
சமீபத்தில் வெளியான கமலுடைய ‘மன்மதன் அம்பு’ படத்துல பிரபலமானது தேவிஸ்ரீ பிரசாத்தோட பாட்டு மட்டும்தான். அந்த நன்றிக்காக கமல் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.
மற்றப்படி என்ன ‘தகிட..த்தத்தோம்..’ போட்டாலும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடத்தை நிரம்புறது நடக்கிற காரியமா? ஆனாலும், இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் தேவிஸ்ரீ பிரசாத்தின் ‘சந்தம்’ எளிமையாக, கேட்பவரை உடனடியாக கவரும் வண்ணம் இருக்கிறது.
தேவர் மகன், சின்னக் கவுண்டர் போன்று சாதி பெயர்களிலும் ஆதிக்க சாதிகளை ஆதரித்தும் படம் வந்திருக்கிறதே?
–கு. அர்சுனன், விழுப்புரம்.
அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிக்கிற அவமானப்படுத்துகிற சினிமாக்களாகவும் அவைகள் இருக்கின்றன.
இதுபோன்ற மோசடிகளை அந்த குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, முற்போக்காளர்களாக அறியப்படுகிற இயக்குநர்களும் செய்திருக்கிறார்கள்.
பகுத்தறிவு மற்றும் இஸ்லாமியர்களை முன்னிலைப்படுத்திய திராவிட இயக்க சினிமா, தாழ்த்தப்பட்டவர்களை முன்னிலைப் படுத்தவில்லை.
அண்ணா, கலைஞர் போன்றவர்களின் சினிமாக்களில் வந்த கதாநாயகன், பகுத்தறிவாளனாக, முற்போக்காளனாக இருந்தாலும் அவன் பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரனாகத்தான் இருந்தான். அதிலும் குறிப்பாக பிள்ளை, முதலி போன்ற ஜாதிகளில் இருந்தே.
இதில் ஒரே ஆறுதல், அந்த ஜாதிகளைப் பிரதிநிதித்துவபடுத்தாததும், அந்த ஜாதிக்குள் இருந்தே வில்லனை காட்டியதும்தான்.
‘மதுரைவீரன்’ தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு பிரிவான அருந்ததியர்கள் வழிபடும் கடவுள்.
மதுரைவீரனின் கதை சினிமாவாக மாறியபோது, அதில் ‘மதுரைவீரன் பிறப்பால் அருந்ததியர் இல்லை, அவரை அருந்ததியர்கள் (சினிமாவில் என்.எஸ். கிருஷ்ணன்-மதுரம்) எடுத்து வளர்த்தார்கள்’ என்று உல்டா செய்தார்கள்.
அந்தப் படத்தில் திராவிட இயக்கத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர்., மதுரைவீரனாகவும், அப்போது திராவிட இயக்கத்தில் இருந்த, கண்ணதாசன் வசன கர்த்தாவாகவும் பங்காற்றி இருந்தார்கள்.
இதுபோன்றே, சமீபகாலத்தில் சினிமாவில் முற்போக்காளர்களாக அறியப்படும் இயக்குனர் மணிவண்ணன், சத்தியராஜ் இணைந்து உருவாக்கிய ‘ஆண்டான் – அடிமை’ படத்திலும் செருப்பு தைக்கும் அருந்ததியர் குடும்பத்தில் வளரும் கதாநாயகன் சத்தியராஜ், பிறப்பால் ஒரு பார்ப்பனர் அவரை அருந்ததியர்கள் எடுத்து வளர்த்தார்கள் என்றுதான் வந்தது.
பாலாவின் பிதாமகனில் ‘ஒரு பெண் சுடுகாட்டில் குழந்தையை விட்டுவிட்டு போகிறாள், அதனால்தான் விக்ரம் பிணம் எரிக்கும் வேலை பார்த்தார். மற்றபடி அவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் இல்லை’ என்று காட்டப்பட்டது.
மிக நல்லவன், மிகத் திறமையானவன், நன்றாக ஆடுவான், பாடுவான், அறிவாளி, அழகன், அநீதியை தட்டிக் கேட்பவன் இதெல்லாம் கதாநாயகனுக்கான சிறப்புகளாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சிறப்புகளைப் போலவே கதாநாயகன் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவன் என்பதும் அவனுக்கான ‘சிறப்பாகவே’ காட்டப்படுகிறது.
ஜாதி ரீதியாக சக்கிலியராகவோ, பறையறாகவோ, பள்ளராகவோ கதாநாயகன் இருந்தால் ‘காதநாயக அந்தஸ்துக்கு இழுக்கு’ என்று ‘படைப்பாளர்கள்’ கருதுவதுதான் காரணம்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இயக்குநராக வந்தால் அவரும் இதுபோன்ற முறையில்தான் படம் எடுக்கவேண்டும் என்று ஒரு ‘நியதி’ நிறுவப்பட்டிருக்கிறது. ஏனென்றால், படம் பார்க்கிற மிகப் பெருபான்மையான ‘ஜாதி இந்துக்கள்’ அல்லது தலித் அல்லாதவர்கள் அந்தப் படத்தை புறக்கணித்துவிடுவார்கள் என்பதும் அதற்குக் காரணமாக கருதப்படுகிறது.
இதில் வேடிக்கை, இன்று முன்னணியில் இருக்கிற மிகப் பெரிய கதாநாயகர்கள் பலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனால், படத்தில் அவர்கள் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்களாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
மாறாக, அவர்கள் தங்களை தலித்தாக அடையாளம் காட்டிக் கொண்டால், தங்களின் கதாநாயக அந்தஸ்து தகர்ந்துவிடும் என்று அவர்கள் கருதுவதால்தான், தான் தலித் என்பதையும் மறைக்க முயற்சிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே தன்னுடைய கிறிஸ்துவ மத அடையாளத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள்.
எனக்கு தெரிந்து, தமிழ் சினிமாவில், கதாநாயகன் தாழ்தத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக காட்டியது கே. பாக்கியராஜின் இது நம்ம ஆளு, சேரனின் பாரதி கண்ணமா இந்த இரண்டு படகள்தான். இவைகள் இரண்டும் மிகப் பெரிய வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இரண்டுபேரும் ‘ஜாதி மறுப்பு, பெரியார், அம்பேத்கர், தமிழ்த் தேசியம்’ என்று பேசுகிற முற்போக்காளர்கள் இல்லை.
இந்த இரண்டு படங்களில் பாக்கியராஜின் இது நமம ஆளு படத்தை தான் சிறந்த படமாக கருதுகிறேன். சேரனின் பாரதி கண்ணமாவில் தேவர் வீட்டுப் பெண் தாழ்த்தப்பட்டவரை காதலிப்பதாக காட்டுகிற துணிச்சல் இருந்தாலும்,(இதற்காக அந்தப் படத்திற்கு எதிர்ப்பு வந்தது)
அதற்கு பரிகாரம் செய்வதைப்போல், தேவர் ஜாதிக்கார்கள் இந்த மண்ணின் மைந்தர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களை நம்பி வேறு எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வந்வர்களாகவும் மிக மோசமான கருத்து பதிவு செய்யப்பட்டது.
ஆனால், பாக்கியராஜின் ‘இது நமம ஆளு’ படத்தில் தாழ்த்தப்பட்டர்களுக்கு சவரம் செய்கிற நாவிதர்தான் கதாநாயகன
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தங்கம் இதழை ஆன்லைன் வழியாக பார்க்க:
http://ebook.thangamonline.com/feb11
தொடர்புடையவை:
நீர் சொல்றத பாத்தா பார்ப்பனர்கள் (அந்தக் குலத்தில் பிறந்தால்) அயோக்கியர் என்பது புரிகிறது.. அட இது எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது.. அதாங்க.. நம்ம மனுதர்மத்த எளுதிய மனு அய்யர் இதஇதத்தான் வேற வார்த்தையில சொன்னார்.. நீர் அதே தோசைய திருப்பிப் போட்ட மாதிரி அப்படியில்ல இப்படின்னு சொல்றிங்க.. ஆக இரண்டு பேரும் சொன்னது ஒரே விசயத்தைதான்.. வேற வேற வழியில்.. சரிதான்…
அருமை அண்ணண் அவர்களே
நன்றாக இருந்தது.
நன்றி.