தேர்தலில்… எம்.ஜி.ஆர், பாணியில் திமுக
‘தேர்தல் புறக்கணிப்பு, எந்தக் கட்சிகளும் யோக்கியம் இல்லை’ என்கிற விமர்சனங்களை தவிர்த்து, இந்த தேர்தல் எப்படி இருக்கும் என்று சொல்லுங்களேன்?
-என். சுகுமார், மதுரை.
‘ஈழத்தமிழர்களின் துயரம், ஸ்பெக்ட்ரம் விவகாரம், அத்தியாவசியமான பொருட்களின் குறிப்பாக உணவு பொருட்களின் விலை உயர்வு, குடும்ப அரசியல் குற்றச்சாட்டு, ஊடகங்களின் எதிர்ப்பு’ இவைகள் எல்லாம் சென்னை போன்ற பெருநகரங்ளிலும் தமிழகத்தின் பிற சிறுநகரங்களிலும் திமுகவிற்கு எதிரான நிலையாக பதிவாகும்.
‘ஒரு ரூபாய் அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச கேஸ் அடுப்பு,’ இவைகள் கிராமப்புறங்களில் திமுகவிற்கு ஆதரவாக பதிவாகும். (எம்.ஜி.ஆர். ஆட்சியின் இலவச பாதிப்புகளைப்போல்)
ஆகையால், இம்முறை திமுகவின் பல முக்கிய தலைகளே, திமுகவின் கோட்டை என்று சொல்லப்படுகிற சென்னையைத் தவிர்த்து, எம்.ஜி.ஆர்., போல் கிராமப்புற வேட்பாளர்களாக நிற்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்
நடக்கும் என்று தெரிந்துதான் சொன்னீர்களோ?
////இம்முறை திமுகவின் பல முக்கிய தலைகளே, திமுகவின் கோட்டை என்று சொல்லப்படுகிற சென்னையைத் தவிர்த்து, எம்.ஜி.ஆர்., போல் கிராமப்புற வேட்பாளர்களாக நிற்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது..////
இப்படித்தான் நடந்து இருக்கிறது.